சீ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

சீ (1)

தேக்கு விருந்தாம் உடலை சீ என்பது எந்நாளோ – தாயு:45 1118/2
மேல்


சீகாழி (1)

துன்று மன கவலை கெட புலை நாயேனை தொழும்புகொள சீகாழி_துரையே தூது – தாயு:14 161/3
மேல்


சீகாழி_துரையே (1)

துன்று மன கவலை கெட புலை நாயேனை தொழும்புகொள சீகாழி_துரையே தூது – தாயு:14 161/3
மேல்


சீர் (17)

சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
வேண்டும் சீர் அருள் மெய்_அன்பர்க்கே அன்பு – தாயு:18 208/1
கனத்த சீர் அருள் காட்சி அலால் ஒன்றை – தாயு:18 209/3
அருமை சீர் அன்பர்க்கு அன்னை ஒப்பாகவே – தாயு:18 230/3
வந்த சீர் அருள் வாழ்க என்று உன்னுவேன் – தாயு:18 248/2
கற்று அரும்பிய கேள்வியால் மதித்திட கதி சீர்
முற்று அரும்பிய மெளனியாய் பரத்திடை முளைப்பான் – தாயு:24 355/3,4
திருந்து சீர் அடி தாமரைக்கு அன்பு-தான் செய்ய – தாயு:25 375/1
சீர் ஆக நிற்கும் திறம் கண்டாய் நேராக – தாயு:28 461/2
கூடிய நின் சீர் அடியார் கூட்டம் என்றோ வாய்க்கும் என – தாயு:33 565/1
தேடிய நின் சீர் அருளை திக்கு அனைத்தும் கை குவித்து – தாயு:33 565/3
சித்தி நெறிக்கு என் கடவேன் சீர் அடியார்க்கு ஏவல்செயும் – தாயு:33 567/3
சீர் ஆரும் தெய்வ திரு_அருளாம் பூமி முதல் – தாயு:43 636/1
சீர் இருந்தால் உய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 755/2
செப்புவதும் உன் நிலையின் சீர் காண் பராபரமே – தாயு:43 917/2
சீர் மலி தெய்வ திரு_அருள் அதனால் – தாயு:55 1451/7
மேல்


சீராய் (1)

சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
மேல்


சீரிதான (1)

சீரிதான நின் சின்மயத்தே என்றால் – தாயு:18 211/2
மேல்


சீரை (1)

சீரை பார்த்தால் கருணை செய்வாரோ பைங்கிளியே – தாயு:44 1033/2
மேல்


சீலம் (2)

சீலம் இன்றி சிறியன் பிழைப்பனோ – தாயு:18 197/2
சீலம் மிகு ஞானியர்-தம் செய்கை பராபரமே – தாயு:43 778/2
மேல்


சீலமுடன் (1)

சீலமுடன் எம்மை தெளிந்துகொள்வது எந்நாளோ – தாயு:45 1175/2
மேல்


சீலமே (1)

சீலமே நின் திரு_அருளால் இந்த்ரசாலம் – தாயு:18 254/2
மேல்


சீலமொடு (1)

சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
மேல்


சீவ (1)

சேய்-அதாம் இந்த சீவ திரள் அன்றோ – தாயு:18 236/3
மேல்


சீவன் (5)

யாரேனும் அறிவு அரிய சீவன் முத்தி உண்டாகும் ஐய ஐயோ – தாயு:26 400/2
துளக்கம்_அற சீவன் என்று சொல்வார் பராபரமே – தாயு:43 738/2
தோல்_பாவை நாலு ஆள் சுமை ஆகும் சீவன் ஒன்று இங்கு – தாயு:43 818/1
தேகம் யாதேனும் ஒரு சித்தி பெற சீவன் முத்தி – தாயு:43 992/1
முக்குணத்தை சீவன் என்னும் மூடத்தை விட்டு அருளால் – தாயு:45 1174/1
மேல்


சீவனுக்கு (1)

சீவனுக்கு ஆர் போதம் தெரித்தார் பராபரமே – தாயு:43 986/2
மேல்


சீவனும் (1)

ஆராயும் சீவனும் நீ ஆம் காண் பராபரமே – தாயு:43 739/2
மேல்


சீறி (1)

சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
மேல்


சீறு (1)

சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
மேல்


சீனி (2)

இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார் – தாயு:17 192/3
மேல்


சீனியுமாய் (1)

கன்னலுடன் முக்கனியும் கற்கண்டும் சீனியுமாய்
மன்னும் இன்ப ஆர் அமுதை வாய்மடுப்பது எந்நாளோ – தாயு:45 1223/1,2
மேல்


சீனியே (1)

தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/3

மேல்