கொ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொங்கை 5
கொஞ்சம் 1
கொட்டம்-அது 1
கொட்டி 1
கொடாமல் 1
கொடிதாம் 1
கொடிதே 1
கொடிய 4
கொடியர் 1
கொடியனே 1
கொடியேனை 1
கொடு 6
கொடுக்க 3
கொடுக்கின்றோர்கள்-பால் 1
கொடுத்த 4
கொடுத்தது 1
கொடுத்தவுடன் 1
கொடுத்தாய் 1
கொடுத்தால் 3
கொடுத்தான் 1
கொடுத்தானை 1
கொடுத்திட்டு 1
கொடுத்து 10
கொடுத்தே 1
கொடுத்தேனே 2
கொடுப்பது 1
கொடுப்பாய் 2
கொடும் 2
கொடுமை 3
கொடேன் 1
கொண்ட 8
கொண்டது 2
கொண்டதே 1
கொண்டருளே 1
கொண்டவர்க்கு 1
கொண்டவர்க்கே 1
கொண்டவரே 1
கொண்டாடினார் 1
கொண்டாய் 1
கொண்டார் 1
கொண்டார்க்கோ 1
கொண்டால் 1
கொண்டிருப்பது 1
கொண்டு 17
கொண்டு-தான் 1
கொண்டே 2
கொண்டேன் 1
கொண்டோ 1
கொணடவரும் 1
கொத்தடிமை 1
கொத்தடிமையான 1
கொதிக்கும் 1
கொதிப்பு 1
கொந்து 1
கொம்பில் 1
கொம்பே 1
கொம்பை 1
கொய்சகத்தில் 1
கொய்யும் 1
கொல்லா 3
கொல்லாமை 1
கொல்லின் 1
கொல்லுவேன் 1
கொலு 2
கொலுவிருக்கும் 1
கொலை 3
கொலைகள் 1
கொலையினேன் 1
கொழிக்கும் 1
கொழித்த 1
கொழுந்தில் 1
கொழுந்து 3
கொழுந்தே 3
கொழும் 3
கொள் 5
கொள்கை 1
கொள்கையினார் 1
கொள்கையை 1
கொள்வது 4
கொள்வாம் 1
கொள்ள 2
கொள்ளல் 1
கொள்ளலாம் 1
கொள்ளவும் 1
கொள்ளவேண்டாவோ 1
கொள்ளாத 1
கொள்ளாது 1
கொள்ளாய் 1
கொள்ளாயோ 1
கொள்ளி 1
கொள்ளுகினும் 1
கொள்ளும் 2
கொள்ளும்படிக்கு 1
கொள்ளை 2
கொள்ளைகொண்ட 2
கொள 1
கொளவோ 1
கொளுமோ 1
கொற்றங்குடி 2
கொறித்தும் 1
கொன்றதற்கோ 1
கொன்று 1
கொன்றை 2
கொன்றையும் 1

கொங்கை (5)

இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
கச்சு இருக்கும் கொங்கை கரும்பு இருக்கும் இன் மாற்றம் – தாயு:45 1133/1
பச்சென்ற கொங்கை பசப்பியர் பாழான மயல் – தாயு:45 1134/1
மேல்


கொஞ்சம் (1)

கொஞ்சம் உற்றாய் உன்னை குறைசொல்ல வாயும் உண்டோ – தாயு:29 546/2
மேல்


கொட்டம்-அது (1)

ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
மேல்


கொட்டி (1)

கொள்ளி தேள் கொட்டி குதிக்கின்ற பேய் குரங்காய் – தாயு:43 807/1
மேல்


கொடாமல் (1)

உடலை பழித்து இங்கு உணவும் கொடாமல்
விடவிடவே நாடுவரோ மெய்யை படபடென – தாயு:28 493/1,2
மேல்


கொடிதாம் (1)

குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம்
புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் – தாயு:24 351/1,2
மேல்


கொடிதே (1)

வாதியாநின்றது அன்றியும் புலன் சேர் வாயிலோ தீயினும் கொடிதே – தாயு:22 305/4
மேல்


கொடிய (4)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
கொடிய வெம் வினை கூற்றை துரந்திடும் – தாயு:18 255/1
மேல்


கொடியர் (1)

கூடும்படிக்கு தவம் முயலாத கொடியர் எமன் – தாயு:27 456/3
மேல்


கொடியனே (1)

கோலம் நாடுதல் என்று கொடியனே – தாயு:18 254/4
மேல்


கொடியேனை (1)

கோனே என்னை புரக்கும் நெறி குறித்தாய்_இலையே கொடியேனை
தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னை படைத்தாய் உன் கருத்தை – தாயு:20 289/2,3
மேல்


கொடு (6)

அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
சுகமான நீ போய் சுகம் கொடு வா பைங்கிளியே – தாயு:44 1026/2
அது என்பதுவும் அன்றி எழில் கொடு உலாவும் – தாயு:56 1452/13
மேல்


கொடுக்க (3)

நின்னை பெறுமாறு எனக்கு அருளாம் நிலையை கொடுக்க நினையாயோ – தாயு:23 312/4
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
வைத்த பொருள் உடல் ஆவி மூன்றும் நின் கைவசம் எனவே யான் கொடுக்க வாங்கிக்கொண்டு – தாயு:41 601/1
மேல்


கொடுக்கின்றோர்கள்-பால் (1)

கொடுக்கின்றோர்கள்-பால் குறைவையாது யான் எனும் குதர்க்கம் – தாயு:24 327/1
மேல்


கொடுத்த (4)

இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
சும்மா இருத்தி சுகம் கொடுத்த மோன நின்-பால் – தாயு:28 539/3
கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை – தாயு:31 556/2
சொல் இறப்ப சற்குருவாய் தோன்றி சுகம் கொடுத்த
நல்லவர்க்கே கொத்தடிமை நான் காண் பராபரமே – தாயு:43 1019/1,2
மேல்


கொடுத்தது (1)

கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை – தாயு:31 556/2
மேல்


கொடுத்தவுடன் (1)

கொடுத்தேனே என்னை கொடுத்தவுடன் இன்பம் – தாயு:28 500/1
மேல்


கொடுத்தாய் (1)

நின்னையே சிந்திக்க நீ கொடுத்தாய் மோனா நான் – தாயு:28 498/3
மேல்


கொடுத்தால் (3)

உய்யும்படிக்கு உன் திரு_கருணை ஒன்றை கொடுத்தால் உடையாய் பாழ்ம் – தாயு:23 317/1
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
கூவி அழைத்து இன்பம் கொடுத்தால் குறைவு ஆமோ – தாயு:51 1403/2
மேல்


கொடுத்தான் (1)

இந்த மயக்கை அறுக்க எனக்கு எந்தை மெய்ஞ்ஞான எழில் வாள் கொடுத்தான் – தாயு:54 1446/2
மேல்


கொடுத்தானை (1)

காட்டி கொடுத்தானை காண்பேனோ பைங்கிளியே – தாயு:44 1074/2
மேல்


கொடுத்திட்டு (1)

தம்மை கொடுத்திட்டு எம்மை ஆள் என – தாயு:55 1451/35
மேல்


கொடுத்து (10)

கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/3
சங்கர சுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்க நெறி இலா துன்மார்க்கனேனையும் தண் அருள் கொடுத்து ஆள்வையோ – தாயு:4 26/2
கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
கொடுத்து நின்னையும் கூடவும் காண்பனோ – தாயு:18 259/2
வான் பொருள் ஆகி எங்கு நீ இருப்ப வந்து எனை கொடுத்து நீ ஆகாது – தாயு:24 359/1
கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளை – தாயு:43 666/1
என்னை உன்றன் கைக்கு அளித்தார் யாவர் என்னை யான் கொடுத்து
பின்னை உன்னால் பெற்ற நலம் பேசேன் பராபரமே – தாயு:43 760/1,2
ஒன்று இரண்டு என்று உன்னா உணர்வு கொடுத்து உள்ளபடி – தாயு:43 925/1
சிந்தை திறை கொடுத்து சேவிப்பது எந்நாளோ – தாயு:45 1232/2
மேல்


கொடுத்தே (1)

நினைக்க அரிதான இன்ப நிட்டை-தனை கொடுத்தே
ஆசான் மவுனி அளித்தான் நெஞ்சே உனை ஓர் – தாயு:28 531/2,3
மேல்


கொடுத்தேனே (2)

என்னை முழுதும் கொடுத்தேனே – தாயு:28 498/4
கொடுத்தேனே என்னை கொடுத்தவுடன் இன்பம் – தாயு:28 500/1
மேல்


கொடுப்பது (1)

இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ – தாயு:16 183/4
மேல்


கொடுப்பாய் (2)

கொண்டார்க்கோ இன்பம் கொடுப்பாய் பராபரமே – தாயு:43 745/2
கொண்டவர்க்கே முத்தி கொடுப்பாய் பராபரமே – தாயு:43 1009/2
மேல்


கொடும் (2)

வருவரே கொடும் காலர்கள் வந்து எதிர் – தாயு:18 266/3
கள்ளம் பொருந்தும் மட நெஞ்சமே கொடும் காலர் வந்தால் – தாயு:27 441/1
மேல்


கொடுமை (3)

ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ – தாயு:24 322/3
மேல்


கொடேன் (1)

சேவியேன் கள சிந்தை திறை கொடேன்
பாவியேன் உள பான்மையை கண்டு நீ – தாயு:18 196/2,3
மேல்


கொண்ட (8)

கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
நாறும் நல் சாந்த நீறு நஞ்சமே அமுதா கொண்ட
கூறு அரும் குணத்தோய உன்றன் குரை கழல் குறுகின் அல்லால் – தாயு:21 298/2,3
குருலிங்க சங்கமமா கொண்ட திரு_மேனி – தாயு:28 482/1
வானம் எல்லாம் கொண்ட மெளன மணி பெட்டகத்துக்கான – தாயு:43 650/1
கொண்ட நின்னை யார் அறிந்துகொள்வார் பராபரமே – தாயு:43 749/2
குரு லிங்க சங்கமமா கொண்ட திரு_மேனி – தாயு:45 1314/1
மேல்


கொண்டது (2)

கொண்டது பரமானந்த கோது_இலா முத்தி அத்தால் – தாயு:15 167/2
கொண்டது என பேர்_இன்பம் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1218/2
மேல்


கொண்டதே (1)

தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
மேல்


கொண்டருளே (1)

தென்புலத்தாரோடு இருந்து செய் பூசை கொண்டருளே – தாயு:29 550/4
மேல்


கொண்டவர்க்கு (1)

கொண்டவர்க்கு இங்கு என்ன கிடைக்கும் – தாயு:28 482/4
மேல்


கொண்டவர்க்கே (1)

கொண்டவர்க்கே முத்தி கொடுப்பாய் பராபரமே – தாயு:43 1009/2
மேல்


கொண்டவரே (1)

கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் மற்று – தாயு:43 827/1
மேல்


கொண்டாடினார் (1)

கொண்டாடினார் முனம் கூத்தாடும் மத்தன்-தன் கோலம் எல்லாம் – தாயு:27 405/3
மேல்


கொண்டாய் (1)

முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
மேல்


கொண்டார் (1)

கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
மேல்


கொண்டார்க்கோ (1)

கொண்டார்க்கோ இன்பம் கொடுப்பாய் பராபரமே – தாயு:43 745/2
மேல்


கொண்டால் (1)

திண்ணிய வினையை கொன்று சிறியனை உய்ய கொண்டால்
புண்ணியம் நினக்கே அன்றோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 575/3,4
மேல்


கொண்டிருப்பது (1)

நெஞ்சர் நேய நெஞ்சில் கொண்டிருப்பது எந்நாளோ – தாயு:45 1254/2
மேல்


கொண்டு (17)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/4
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
ஏய்க்கும் சொல் கொண்டு இரா பகல் அற்றிடா – தாயு:18 235/2
பொன்னை போன்ற நின் போதம் கொண்டு உன் பணி பொருந்தா – தாயு:24 340/3
சொல் ஏற பாழ்த்த துளை செவி கொண்டு அல் ஏறு – தாயு:28 474/2
கொண்டு அறியேன் முத்தி குறிக்கும் தரமும் உண்டோ – தாயு:33 568/2
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
என்னை கொண்டு என்ன பலன் எந்தாய் பராபரமே – தாயு:43 762/2
பொய் கூடு கொண்டு புலம்புவனோ எம் இறைவர் – தாயு:44 1066/1
கொண்டு விடு மானார் பொய் கூத்து ஒழிவது எந்நாளோ – தாயு:45 1129/2
கொண்டு அறிவேன் எந்தை நினை கூடும் குறிப்பினையே – தாயு:51 1391/2
அண்டர் அண்டம் யாவும் நீ கொண்டு நின்ற கோலமே – தாயு:53 1419/1
அளி புண்-தனை வளைந்து விரல் கொண்டு உற அளைந்து – தாயு:56 1452/45
மேல்


கொண்டு-தான் (1)

தந்தான் ஓர் சொல் கொண்டு-தான் – தாயு:28 528/4
மேல்


கொண்டே (2)

மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
பாராய் உனை கொல்லுவேன் வெல்லுவேன் அருள் பாங்கு கொண்டே – தாயு:27 450/4
மேல்


கொண்டேன் (1)

ஏதுக்கு உடல் சுமை கொண்டேன் இருந்தேன் ஐயனே – தாயு:28 495/1
மேல்


கொண்டோ (1)

கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ அருள் கோலத்தை மெய் என்று கொள்ளவேண்டாவோ – தாயு:54 1443/2
மேல்


கொணடவரும் (1)

கொணடவரும் அன்னவரே கூறு அரிய முத்தி நெறி – தாயு:28 479/3
மேல்


கொத்தடிமை (1)

நல்லவர்க்கே கொத்தடிமை நான் காண் பராபரமே – தாயு:43 1019/2
மேல்


கொத்தடிமையான (1)

கொத்தடிமையான குடி நான் பராபரமே – தாயு:43 783/2
மேல்


கொதிக்கும் (1)

குற்றம் என்று என் நெஞ்சே கொதிக்கும் பராபரமே – தாயு:43 672/2
மேல்


கொதிப்பு (1)

உள்ள கொதிப்பு அகல உள் உள்ளே ஆனந்த – தாயு:43 1003/1
மேல்


கொந்து (1)

கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மேல்


கொம்பில் (1)

ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
மேல்


கொம்பே (1)

கான் முயல்_கொம்பே என்கோ கானல் அம் புனலே என்கோ – தாயு:15 165/3
மேல்


கொம்பை (1)

படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/3
மேல்


கொய்சகத்தில் (1)

தட்டுவைத்த சேலை கொய்சகத்தில் சிந்தை எல்லாம் – தாயு:45 1136/1
மேல்


கொய்யும் (1)

கொய்யும் புது மலர் இட்டு மெய் அன்பர் குழாத்துடனே – தாயு:27 403/2
மேல்


கொல்லா (3)

கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குரு மணியே – தாயு:27 422/4
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க – தாயு:43 689/1
கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் மற்று – தாயு:43 827/1
மேல்


கொல்லாமை (1)

கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
மேல்


கொல்லின் (1)

வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின்
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/1,2
மேல்


கொல்லுவேன் (1)

பாராய் உனை கொல்லுவேன் வெல்லுவேன் அருள் பாங்கு கொண்டே – தாயு:27 450/4
மேல்


கொலு (2)

குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 131/4
மேல்


கொலுவிருக்கும் (1)

விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
மேல்


கொலை (3)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
தீய கொலை சமயத்தும் செல்ல சிந்தை தெளிந்திடவும் சமாதானம் செய்வேன் வாழ்வான் – தாயு:14 156/2
கொலை களவு கள் காமம் கோபம் விட்டால் அன்றோ – தாயு:43 923/1
மேல்


கொலைகள் (1)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
மேல்


கொலையினேன் (1)

பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
மேல்


கொழிக்கும் (1)

திரு_அருள் ஞானம் சிறந்து அருள் கொழிக்கும்
குரு வடிவான குறைவு_இலா நிறைவே – தாயு:55 1451/1,2
மேல்


கொழித்த (1)

பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
மேல்


கொழுந்தில் (1)

கொழுந்தில் வயிரம் என கோது_அற உள் அன்பில் – தாயு:43 723/1
மேல்


கொழுந்து (3)

குன்றாத மூ_உருவாய் அருவாய் ஞான கொழுந்து ஆகி அறு_சமய கூத்தும் ஆடி – தாயு:16 182/1
கொழுந்து திகழ் வெண் பிறை சடில கோவே மன்றில் கூத்து ஆடற்கு – தாயு:20 286/1
பற்றும் பயிர்க்கு படர் கொழுந்து போல் பருவம் – தாயு:43 724/1
மேல்


கொழுந்தே (3)

சொல்லற்கு அரிய பரம் பொருளே சுக_வாரிதியே சுடர் கொழுந்தே
வெல்லற்கு அரிய மயலில் எனை விட்டு எங்கு ஒளித்தாய் ஆ கெட்டேன் – தாயு:20 282/1,2
துன்ப_கடல் விட்டு அகல்வேனோ சொரூபானந்த சுடர் கொழுந்தே – தாயு:20 285/4
துளி ஆட மன்றுள் நடமாடும் முக்கண் சுடர் கொழுந்தே – தாயு:27 406/4
மேல்


கொழும் (3)

குன்றிடாத கொழும் சுடரே மணி – தாயு:18 260/1
கொழும் தாது உறை மலர் கோதையர் மோக குரை கடலில் – தாயு:27 407/1
குழு காண நின்று நடம் ஆடும் தில்லை கொழும் சுடரே – தாயு:27 434/4
மேல்


கொள் (5)

குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
நவம் கொள் தத்துவ திரை எறி கடல் எனும் நலத்தோய் – தாயு:25 388/4
கிட்டிக்கொண்டு அன்பர் உண்மை கேளா பல அடி கொள்
பட்டிக்கும் இன்பம் உண்டோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1043/1,2
கொள் செம் கையர் தாள் வாரம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1108/2
எது மங்கள சுபம் கொள் சுக வடிவு ஆகும் – தாயு:56 1452/27
மேல்


கொள்கை (1)

கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4
மேல்


கொள்கையினார் (1)

கூறும் குணமும் இல்லா கொள்கையினார் என் கவலை – தாயு:44 1045/1
மேல்


கொள்கையை (1)

குரு உரு ஆகி மெளனியாய் மெளன கொள்கையை உணர்த்தினை அதனால் – தாயு:19 280/1
மேல்


கொள்வது (4)

குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
தொண்டாய் பணிவார் அவர் பணி நீ சூட்டி கொள்வது எவ்வாறே – தாயு:20 290/4
அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ – தாயு:45 1174/2
உனக்குள் நான் என்ற உறுதி கொள்வது எந்நாளோ – தாயு:45 1269/2
மேல்


கொள்வாம் (1)

தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
மேல்


கொள்ள (2)

வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே – தாயு:43 786/2
மேல்


கொள்ளல் (1)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
மேல்


கொள்ளலாம் (1)

கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
மேல்


கொள்ளவும் (1)

கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
மேல்


கொள்ளவேண்டாவோ (1)

கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ அருள் கோலத்தை மெய் என்று கொள்ளவேண்டாவோ – தாயு:54 1443/2
மேல்


கொள்ளாத (1)

கொள்ளாத தோஷம் அன்றோ கூறாய் பராபரமே – தாயு:43 943/2
மேல்


கொள்ளாது (1)

கோனே எனும் சொல் நினது செவி கொள்ளாது என்னோ கூறாயே – தாயு:20 287/4
மேல்


கொள்ளாய் (1)

அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே – தாயு:43 1013/2
மேல்


கொள்ளாயோ (1)

உரைத்த மொழி கொள்ளாயோ தோன்றி – தாயு:28 524/2
மேல்


கொள்ளி (1)

கொள்ளி தேள் கொட்டி குதிக்கின்ற பேய் குரங்காய் – தாயு:43 807/1
மேல்


கொள்ளுகினும் (1)

கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மேல்


கொள்ளும் (2)

இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
மேல்


கொள்ளும்படிக்கு (1)

கொள்ளும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1322/2
மேல்


கொள்ளை (2)

கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளை – தாயு:43 666/1
கொள்ளை வெள்ள தண் அருள் மேற்கொண்டு சுழித்து ஆர்த்து இழுத்தால் – தாயு:43 847/1
மேல்


கொள்ளைகொண்ட (2)

கொள்ளைகொண்ட கண்ணீரும் கம்பலையும் ஆகி கும்பிட்டு சகம் பொய் என தம்பட்டமடியே – தாயு:17 190/4
கொள்ளைகொண்ட நீ என் குறை தீர் பராபரமே – தாயு:43 871/2
மேல்


கொள (1)

ஒலி நன்று என மகிழ்ந்து செவி கொள நாசி – தாயு:56 1452/39
மேல்


கொளவோ (1)

எல்லையற்ற மயல் கொளவோ எழில் – தாயு:18 240/3
மேல்


கொளுமோ (1)

நிறைகுடம்-தான் நீர் கொளுமோ நிச்சயம் ஆம் மோன – தாயு:28 506/1
மேல்


கொற்றங்குடி (2)

கொற்றங்குடி முதலை கூறும் நாள் எந்நாளோ – தாயு:45 1099/2
குறைவு_இல் அருள் ஞானம் முதல் கொற்றங்குடி அடிகள் – தாயு:45 1100/1
மேல்


கொறித்தும் (1)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
மேல்


கொன்றதற்கோ (1)

கொன்றதற்கோ பேசா குறி – தாயு:28 538/4
மேல்


கொன்று (1)

திண்ணிய வினையை கொன்று சிறியனை உய்ய கொண்டால் – தாயு:36 575/3
மேல்


கொன்றை (2)

அளி ஆரும் கொன்றை சடை ஆட அம்புலி ஆட கங்கை – தாயு:27 406/3
கள் அவிழும் பூம் கொன்றை கண்ணியான் உள்ளபடி – தாயு:28 504/2
மேல்


கொன்றையும் (1)

மதியும் கங்கையும் கொன்றையும் மத்தமும் – தாயு:18 264/1

மேல்