கே – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேட்க 1
கேட்கவே 1
கேட்கினும் 1
கேட்கும் 2
கேட்ட 2
கேட்டதா 1
கேட்டது 1
கேட்டதும் 6
கேட்டதையே 1
கேட்டல் 3
கேட்டலுடன் 1
கேட்டவர் 1
கேட்டாலும் 1
கேட்டிடவும் 1
கேட்டிலையோ 1
கேட்டு 6
கேட்டும் 2
கேட்டை 1
கேட்பதும் 1
கேட்பினும் 1
கேடர் 1
கேடு 4
கேடு_இல் 1
கேடு_இலா 3
கேணி 1
கேணியிடை 1
கேணியை 1
கேவல 2
கேவலத்தில் 2
கேவலமாம் 1
கேவலமாய் 1
கேள் 7
கேள்வி 2
கேள்விகள் 1
கேள்வியாம் 1
கேள்வியால் 1
கேள்வியில் 1
கேள்வியிலே 1
கேள்வியின் 1
கேள்வியும் 2
கேள்வியே 1
கேள்வியோ 1
கேளா 1
கேளாத 2
கேளாமல் 1
கேளாய் 1
கேளே 1

கேட்க (1)

ஒன்று ஒருவரை நான் கேட்க உணர்வு இல்லை குருவும் இல்லை – தாயு:15 172/4
மேல்


கேட்கவே (1)

பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
மேல்


கேட்கினும் (1)

எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
மேல்


கேட்கும் (2)

சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/4
மூவர் சொலும் தமிழ் கேட்கும் திரு_செவிக்கே மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோ-தான் – தாயு:42 619/2
மேல்


கேட்ட (2)

அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
மேல்


கேட்டதா (1)

அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
மேல்


கேட்டது (1)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
மேல்


கேட்டதும் (6)

பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும் கற்பதும் கேட்பதும் அமையும் காணா நீத – தாயு:16 181/2
கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னை கண்டிடும் பொருட்டு அன்றோ காணே – தாயு:22 309/4
மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான – தாயு:24 322/2
கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
மேல்


கேட்டதையே (1)

கேட்டதையே சொல்லும் கிளி போல நின் அருளின் – தாயு:43 824/1
மேல்


கேட்டல் (3)

சித்தி நெறி கேட்டல் செக மயக்கம் சன்மம்_அற – தாயு:43 902/1
முத்தி நெறி கேட்டல் முறை காண் பராபரமே – தாயு:43 902/2
கேட்டல் முதல் நான்காலே கேடு_இலா நால் பதமும் – தாயு:45 1303/1
மேல்


கேட்டலுடன் (1)

கேட்டலுடன் சிந்தித்தல் கேடு_இலா மெய் தெளிவால் – தாயு:28 467/1
மேல்


கேட்டவர் (1)

கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னை காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ – தாயு:24 333/2
மேல்


கேட்டாலும் (1)

கற்றாலும் கேட்டாலும் காயம் அழியாத சித்தி – தாயு:43 920/1
மேல்


கேட்டிடவும் (1)

வாங்கினையே வேறும் உண்மை வைத்திடவும் கேட்டிடவும்
ஈங்கு ஒருவர் உண்டோ இனி – தாயு:28 536/3,4
மேல்


கேட்டிலையோ (1)

என் அரசே கேட்டிலையோ என் செயலோ ஏதும் இலை – தாயு:51 1389/1
மேல்


கேட்டு (6)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான் – தாயு:24 323/1
மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர – தாயு:24 323/3
கண்டு அறியேன் கேட்டு அறியேன் காட்டும் நினையே இதயம் – தாயு:33 568/1
பொய்யன் இவன் என்று மெள்ள போதிப்பார் சொல் கேட்டு
கைவிடவும் வேண்டாம் என் கண்ணே பராபரமே – தாயு:43 694/1,2
மேல்


கேட்டும் (2)

அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும் அறிவு இன்றியே – தாயு:27 436/2
கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கு எனவே – தாயு:27 457/1
மேல்


கேட்டை (1)

கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
மேல்


கேட்பதும் (1)

கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும் கற்பதும் கேட்பதும் அமையும் காணா நீத – தாயு:16 181/2
மேல்


கேட்பினும் (1)

கலந்த முத்தி கருதினும் கேட்பினும்
நிலங்கள் ஆதியும் நின்று எமை போலவே – தாயு:18 246/1,2
மேல்


கேடர் (1)

அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
மேல்


கேடு (4)

கேட்டலுடன் சிந்தித்தல் கேடு_இலா மெய் தெளிவால் – தாயு:28 467/1
கேடு_இல் பசு பாசம் எல்லாம் கீழ்ப்படவும் தானே மேல் – தாயு:45 1196/1
கெடுத்தே பசுத்துவத்தை கேடு_இலா ஆனந்தம் – தாயு:45 1248/1
கேட்டல் முதல் நான்காலே கேடு_இலா நால் பதமும் – தாயு:45 1303/1
மேல்


கேடு_இல் (1)

கேடு_இல் பசு பாசம் எல்லாம் கீழ்ப்படவும் தானே மேல் – தாயு:45 1196/1
மேல்


கேடு_இலா (3)

கேட்டலுடன் சிந்தித்தல் கேடு_இலா மெய் தெளிவால் – தாயு:28 467/1
கெடுத்தே பசுத்துவத்தை கேடு_இலா ஆனந்தம் – தாயு:45 1248/1
கேட்டல் முதல் நான்காலே கேடு_இலா நால் பதமும் – தாயு:45 1303/1
மேல்


கேணி (1)

உரு இருப்ப உள்ளே-தான் ஊறும் மல கேணி
அருவருப்பு வாழ்க்கையை கண்டு அஞ்சும் நாள் எந்நாளோ – தாயு:45 1126/1,2
மேல்


கேணியிடை (1)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
மேல்


கேணியை (1)

மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/2
மேல்


கேவல (2)

சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
கேவல சகலம் இன்றி கீழொடு மேலாய் எங்கும் – தாயு:24 336/1
மேல்


கேவலத்தில் (2)

கேவலத்தில் நான் கிடந்து கீழ்ப்படாது இன்ப அருள் – தாயு:46 1316/1
பற்றினதை பற்றும் எந்தாய் பற்று விட்டால் கேவலத்தில்
உற்றுவிடும் நெஞ்சம் உனை ஒன்றி நிற்பது எப்படியோ – தாயு:51 1406/1,2
மேல்


கேவலமாம் (1)

நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம்
சத்துருவை வெல்லும் சமர்த்து அறிவது எந்நாளோ – தாயு:45 1166/1,2
மேல்


கேவலமாய் (1)

மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
மேல்


கேள் (7)

நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/3
பேர்_ஆனந்த சித்தன் எனும் பெரியோய் ஆவிக்கு_உரியோய் கேள்
கார் ஆர் கிரக_வலையினிடை கட்டுண்டு இருந்த களைகள் எலாம் – தாயு:23 320/2,3
என்றும் தெரிந்த இவை அவை கேள் இரவும் பகலும் – தாயு:27 432/2
வான் ஆதி மாயை வழங்காதோ ஞானா கேள்
உன் உள்ளே தோன்றா உறவு ஆகி நின்றது என – தாயு:28 518/2,3
இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே – தாயு:29 549/3
இ உடம்பு நீங்கும் முனே எந்தாய் கேள் இன் அருளாம் – தாயு:46 1341/1
எத்தனையோ நின் விளையாட்டு எந்தாய் கேள் இவ்வளவு என்று – தாயு:51 1404/1
மேல்


கேள்வி (2)

கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னை கண்டிடும் பொருட்டு அன்றோ காணே – தாயு:22 309/4
படிப்பு அற்று கேள்வி அற்று பற்று அற்று சிந்தை – தாயு:43 878/1
மேல்


கேள்விகள் (1)

கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கு எனவே – தாயு:27 457/1
மேல்


கேள்வியாம் (1)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
மேல்


கேள்வியால் (1)

கற்று அரும்பிய கேள்வியால் மதித்திட கதி சீர் – தாயு:24 355/3
மேல்


கேள்வியில் (1)

தக்க கேள்வியில் சார்ந்த நல் பூமியின் – தாயு:18 219/1
மேல்


கேள்வியிலே (1)

கிடக்கினும் செவ்விது இருக்கினும் நல் அருள் கேள்வியிலே
தொடக்கும் என் நெஞ்சம் மனம் அற்ற பூரண தொட்டிக்குளே – தாயு:27 412/2,3
மேல்


கேள்வியின் (1)

கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
மேல்


கேள்வியும் (2)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
கன்று மனத்துடன் ஆடு தழை தின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகி கலக்குற்றேனே – தாயு:16 180/4
மேல்


கேள்வியே (1)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
மேல்


கேள்வியோ (1)

தக்க நின் அருள் கேள்வியோ சிறிது இன்றி தமியேன் – தாயு:25 387/1
மேல்


கேளா (1)

கிட்டிக்கொண்டு அன்பர் உண்மை கேளா பல அடி கொள் – தாயு:44 1043/1
மேல்


கேளாத (2)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
மேல்


கேளாமல் (1)

காலை உயிர் என்னும் கலதிகள் சொல் கேளாமல்
சீலமுடன் எம்மை தெளிந்துகொள்வது எந்நாளோ – தாயு:45 1175/1,2
மேல்


கேளாய் (1)

புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய்
மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர – தாயு:24 323/2,3
மேல்


கேளே (1)

இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4

மேல்