ஓ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 5
ஓகோ 2
ஓங்க 2
ஓங்காநிற்ப 1
ஓங்காரமாம் 1
ஓங்கி 3
ஓங்கு 2
ஓங்கும் 8
ஓட்டினை 1
ஓட்டுதல் 1
ஓட 2
ஓடவிட்ட 1
ஓடவும் 1
ஓடி 3
ஓடினும் 1
ஓடுகின்ற 1
ஓடும் 8
ஓத 1
ஓதிமங்காள் 1
ஓதிய 1
ஓது 3
ஓதும் 1
ஓய் 1
ஓய்கின்றேன் 1
ஓய்ந்த 2
ஓய்ந்திட்ட 1
ஓய்ந்து 1
ஓய 2
ஓயா 1
ஓயாது 1
ஓயாதோ 1
ஓயாமல் 1
ஓயும் 1
ஓயுமோ 2
ஓர் 59
ஓர்கிலை 1
ஓர்ந்தவர் 1
ஓர்ந்திட்டு 1
ஓர்ந்து 1
ஓர்ந்தேன் 1
ஓர்படித்தாய் 1
ஓராதே 1
ஓராமல் 4
ஓராமலே 1
ஓராயோ 2
ஓரில் 1
ஓரிலேன் 1
ஓரின் 1
ஓரும் 2
ஓலக்க 1
ஓலமிடும் 2
ஓலிட 1
ஓலை 1
ஓலையை 1
ஓவியம் 2

ஓ (5)

பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
ஓர் ஆயிரம் புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓ கெடுவாய் – தாயு:27 450/3
ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
ஒன்றே பலவே உருவே அருவே ஓ
என்றே அழைப்பது உன்னை என்றோ பராபரமே – தாயு:43 753/1,2
என்று விடியும் இறைவா ஓ என்றுஎன்று – தாயு:44 1034/1
மேல்


ஓகோ (2)

உம்பர்-பால் ஏவல் செய் என்று உணர்த்தினை ஓகோ வானோர் – தாயு:21 292/2
ஓகோ உனை பிரிந்தார் உள்ளம் கனலில் வைத்த – தாயு:43 665/1
மேல்


ஓங்க (2)

முறைமையின் ஓங்க நாதம் முரசு என கறங்க எங்கும் – தாயு:15 169/2
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே – தாயு:43 689/1,2
மேல்


ஓங்காநிற்ப (1)

யோகம் உறும் ஆனந்த மயம்-அது ஆகி உயிர்க்கு உயிராய் எந்நாளும் ஓங்காநிற்ப
மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/2,3
மேல்


ஓங்காரமாம் (1)

ஓங்காரமாம் ஐந்து_எழுத்தால் புவனத்தை உண்டுபண்ணி – தாயு:27 409/3
மேல்


ஓங்கி (3)

ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
உரை இறந்த அன்பர் உளத்து ஓங்கு ஒளியாய் ஓங்கி
கரையிறந்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 641/1,2
ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ – தாயு:54 1441/2
மேல்


ஓங்கு (2)

செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
உரை இறந்த அன்பர் உளத்து ஓங்கு ஒளியாய் ஓங்கி – தாயு:43 641/1
மேல்


ஓங்கும் (8)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
மன கிலேசங்கள் தீர்ந்த மா தவர்க்கு இரண்டு அற்று ஓங்கும்
தனக்கு நேர்_இல்லா ஒன்றே சச்சிதானந்த வாழ்வே – தாயு:21 296/3,4
வானமே எனக்கு வந்துவந்து ஓங்கும் மார்க்கமே மருளர் தாம் அறியா – தாயு:22 307/2
பிறியாது உயிர்க்குயிராய் பின்னம்_அற ஓங்கும்
செறிவே அறிவே சிவமே பராபரமே – தாயு:43 974/1,2
ஒத்து விடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1149/2
உற்று அறியா வண்ணம் அறிந்து ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1287/2
ஓங்கும் யோக உணர்வு உற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1309/2
ஏழு பிறவியில் தாழாது ஓங்கும்
அனந்த யோனியில் இனம் பெற மல்க – தாயு:55 1451/10,11
மேல்


ஓட்டினை (1)

ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
மேல்


ஓட்டுதல் (1)

ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
மேல்


ஓட (2)

காடு கரையும் மன_குரங்கு கால்விட்டு ஓட அதன் பிறகே – தாயு:30 553/1
வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓட
சுத்தபரபோகத்தை துய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1152/1,2
மேல்


ஓடவிட்ட (1)

மெய்த்த குலம் கல்வி புனை வேடம் எலாம் ஓடவிட்ட
சித்தர் ஒன்றும் சேரா செயல் அறிவது எந்நாளோ – தாயு:45 1250/1,2
மேல்


ஓடவும் (1)

மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
மேல்


ஓடி (3)

திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
மேல்


ஓடினும் (1)

நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறு ஒரு நாட்டம் இன்றி – தாயு:27 412/1
மேல்


ஓடுகின்ற (1)

கல் கண்டால் ஓடுகின்ற காக்கை போல் பொய் மாய – தாயு:45 1249/1
மேல்


ஓடும் (8)

காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
பொய்யும் அவாவும் அழுக்காறும் புடைபட்டு ஓடும் நல் நெறியாம் – தாயு:23 317/2
ஓடும் தொழிலால் பயன் உளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்கு உயிராய் – தாயு:30 553/2
ஓடும் இரு_நிதியும் ஒன்றாக கண்டவர்கள் – தாயு:43 651/1
ஒன்றை நினைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ – தாயு:43 722/1
ஓலக்க மண்டபத்துள் ஓடும் நாள் எந்நாளோ – தாயு:45 1186/2
சொல் கண்டால் ஓடும் அன்பர் தோய்வு அறிவது எந்நாளோ – தாயு:45 1249/2
ஓடும் கருத்து ஒடுங்க உள்ளுணர்வு தோன்ற நினை – தாயு:46 1339/1
மேல்


ஓத (1)

ஓத வந்திடும் உரை உரைப்படி தொழில் உளவாம் – தாயு:24 349/2
மேல்


ஓதிமங்காள் (1)

வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் – தாயு:14 159/3
மேல்


ஓதிய (1)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
மேல்


ஓது (3)

ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/4
ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே – தாயு:14 163/1
மேல்


ஓதும் (1)

மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
மேல்


ஓய் (1)

ஆடி ஓய் பம்பரம் போல் ஆசையுடன் எங்கும் உனை – தாயு:43 840/1
மேல்


ஓய்கின்றேன் (1)

தேடி ஓய்கின்றேன் என் செய்வேன் பராபரமே – தாயு:43 840/2
மேல்


ஓய்ந்த (2)

கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த
தொண்டர்களிடத்திலோ நீ வீற்றிருப்பது தொழும்பனேற்கு உளவு புகலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 86/3,4
ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல் – தாயு:24 342/2
மேல்


ஓய்ந்திட்ட (1)

ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
மேல்


ஓய்ந்து (1)

உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
மேல்


ஓய (2)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
உலக நெறி போல் சடலம் ஓய உயிர் முத்தி – தாயு:43 993/1
மேல்


ஓயா (1)

ஓயா உள் அன்பாய் உருகி வாய்விட்டு அரற்றி – தாயு:47 1365/1
மேல்


ஓயாது (1)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
மேல்


ஓயாதோ (1)

ஓயாதோ என் கவலை உள்ளே ஆனந்த_வெள்ளம் – தாயு:43 664/1
மேல்


ஓயாமல் (1)

ஓயாமல் உன்னி உருகும் நெஞ்சே அ நிலைக்கே – தாயு:29 548/3
மேல்


ஓயும் (1)

ஓயும் சன்மம் இனி அஞ்சல்அஞ்சல் என்று உலகம் கண்டு தொழ ஓர் உருவிலே – தாயு:31 557/3
மேல்


ஓயுமோ (2)

ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
உண்டவர்க்கு அன்றி உள் பசி ஓயுமோ
கண்டவர்க்கு அன்றி காதல் அடங்குமோ – தாயு:18 263/1,2
மேல்


ஓர் (59)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர்
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/3,4
உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சக மாயை நானா ஆகி – தாயு:14 146/1
கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4
நீராளமாய் உருகி கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் – தாயு:14 155/4
வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே – தாயு:16 176/4
வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் – தாயு:16 178/1
சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல் – தாயு:16 184/2
தையல் ஓர் புறம் வாழ் சக_நாதனே – தாயு:18 252/4
அண்டனே உனக்கு ஓர் பதினாயிரம் – தாயு:18 257/3
அருள் எலாம் திரண்டு ஓர் வடிவு ஆகிய – தாயு:18 261/1
படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/3
வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காம – தாயு:22 306/1
அண்டமுமாய் பிண்டமுமாய் அளவு_இலாத ஆர் உயிர்க்கு ஓர் உயிராய் அமர்ந்தாயானால் – தாயு:24 333/1
புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் – தாயு:24 351/2
பயக்க வல்லது ஓர் தெளிவு_உடையவர்க்கு எய்தல் பண்போ – தாயு:24 356/4
உன்னிலோ திரு_அருளுக்கு ஒப்பு ஆவாய் என் உயிர்க்கு ஓர் உறவும் ஆவாய் – தாயு:26 397/4
எனக்கு ஓர் சுதந்திரம் இல்லை அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் – தாயு:27 416/1
நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை – தாயு:27 448/3
ஓர் ஆயிரம் புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓ கெடுவாய் – தாயு:27 450/3
ஒளியும் கருணையும் மாறாத இன்பமும் ஓர் உருவாய் – தாயு:27 454/3
எனக்கு ஓர் நாமம் இட்டதே – தாயு:28 463/4
நீதியையே ஓர் மனமே நீ – தாயு:28 468/4
கல்லாய் நீ-தான் ஓர் கவி – தாயு:28 472/4
மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார் வையகத்தோர் – தாயு:28 485/2
கல்_ஆலின் கீழ் இருந்து கற்பித்தான் ஓர் வசனம் – தாயு:28 504/3
பழி பழியாம் நல் அருளால் பார்த்து ஓர் மொழி உனக்கே – தாயு:28 515/2
உனக்கு இசைந்தவாறு ஒன்றே ஓர் – தாயு:28 516/4
கெட அன்றோ ஓர் பாத்திரத்துக்கு ஆடல் அல்லால் – தாயு:28 521/3
தந்தான் ஓர் சொல் கொண்டு-தான் – தாயு:28 528/4
ஆசான் மவுனி அளித்தான் நெஞ்சே உனை ஓர்
காசா மதியேன் நான் காண் – தாயு:28 531/3,4
அருளே ஓர் ஆலயமா ஆனந்தமாய் இருந்த – தாயு:29 551/1
ஓயும் சன்மம் இனி அஞ்சல்அஞ்சல் என்று உலகம் கண்டு தொழ ஓர் உருவிலே – தாயு:31 557/3
கற்பு உறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறு ஓர்
இல்_புறத்தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும் – தாயு:36 571/1,2
தன் பொறியாக நல்கும் தலைவ நின் அலது ஓர் தெய்வம் – தாயு:36 571/3
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
பேயேற்கும் தனக்கென ஓர் அன்பும் உண்டோ பெம்மானே இன்னம் அன்பு பெருக பாராய் – தாயு:41 597/2
என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் – தாயு:42 632/1
மாயா சகம் இலையேல் மற்று எனக்கு ஓர் பற்றும் இலை – தாயு:43 742/1
தந்தேனே ஓர் வசனம் தந்தபடிக்கு இன்பமுமாய் – தாயு:43 773/1
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் தொடங்கினர்க்கு ஓர்
வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே – தாயு:43 791/1,2
சாதனை எல்லாம் அவிழ தற்போதம் காட்டாது ஓர்
போதனை நீ நல்குவது எப்போதோ பராபரமே – தாயு:43 934/1,2
ஓர் உரையால் வாய்க்கும் உண்மைக்கு ஓர் அனந்த நூல் கோடி – தாயு:43 939/1
ஓர் உரையால் வாய்க்கும் உண்மைக்கு ஓர் அனந்த நூல் கோடி – தாயு:43 939/1
பொய் அகல மெய்யான போத நிலை கண்டோர்க்கு ஓர்
ஐயம் இலை ஐயம் இலை ஐயா பராபரமே – தாயு:43 950/1,2
மந்திரத்தை உன்னி மயங்காது எனக்கு இனி ஓர்
தந்திரத்தை வைக்க தகாதோ பராபரமே – தாயு:43 951/1,2
சுத்த வித்தையே முதலா தோன்றும் ஓர் ஐந்து வகை – தாயு:45 1153/1
வாய்க்கும்படி இனி ஓர் மந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1376/2
புல்லும்படி எனக்கு ஓர் போதனை-தான் இல்லையோ – தாயு:48 1378/2
சமர்கொண்டு அழிவது அன்று ஓர் இயல்பினது ஆகும் – தாயு:56 1452/11
மேல்


ஓர்கிலை (1)

ஓர் ஆயிரம் புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓ கெடுவாய் – தாயு:27 450/3
மேல்


ஓர்ந்தவர் (1)

முற்றும் ஓர்ந்தவர் மூதுரை அர்த்தமே – தாயு:18 244/4
மேல்


ஓர்ந்திட்டு (1)

ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு
ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/2,3
மேல்


ஓர்ந்து (1)

உன்னை போன்ற நல் பரம் பொருள் இல்லை என்று ஓர்ந்து
பொன்னை போன்ற நின் போதம் கொண்டு உன் பணி பொருந்தா – தாயு:24 340/2,3
மேல்


ஓர்ந்தேன் (1)

ஒப்பு_இல் தியானம் என ஓர்ந்தேன் பராபரமே – தாயு:43 754/2
மேல்


ஓர்படித்தாய் (1)

நெறியில் புகுதாது ஓர்படித்தாய் நின்ற நிலையும் தெரியாது – தாயு:20 283/2
மேல்


ஓராதே (1)

ஓராதே ஒன்றையும் நீ முன்னிலை வையாதே உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே – தாயு:17 189/4
மேல்


ஓராமல் (4)

ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
ஓராமல் எல்லாம் ஒழிந்தேற்கு உன் தெய்வ அருள் – தாயு:43 979/1
உன்னாமல் ஒன்று இரண்டு என்று ஓராமல் வீட்டு நெறி – தாயு:44 1031/1
ஓராமல் மந்திரமும் உன்னாமல் நம் பரனை – தாயு:45 1295/1
மேல்


ஓராமலே (1)

ஓராமலே ஒருகால் உன்னாமல் உள் ஒளியை – தாயு:28 517/1
மேல்


ஓராயோ (2)

ஓராயோ உள்ளுள்ளே உற்று உணர்ந்து அ உண்மையினை – தாயு:28 470/3
ஓராயோ நெஞ்சே உருகாயோ உற்றிருந்து – தாயு:29 547/3
மேல்


ஓரில் (1)

ஓரில் கண்டிடும் ஊமன் கனவு என – தாயு:18 223/3
மேல்


ஓரிலேன் (1)

ஓரிலேன் எனை ஆண்ட ஒருவனே – தாயு:18 211/4
மேல்


ஓரின் (1)

உன் புலத்தை ஓரின் அருட்கு ஒப்பு ஆவாய் நெஞ்சே நீ – தாயு:29 550/3
மேல்


ஓரும் (2)

உள்ள ஒன்றை உள்ளபடி ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1203/2
உறுதி சொன்ன உண்மையினை ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1270/2
மேல்


ஓலக்க (1)

ஓலக்க மண்டபத்துள் ஓடும் நாள் எந்நாளோ – தாயு:45 1186/2
மேல்


ஓலமிடும் (2)

ஆர் அறிவார் என்ன அனந்த மறை ஓலமிடும்
பேர்_அறிவே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 640/1,2
சூதானம் என்று சுருதி எல்லாம் ஓலமிடும்
மீதானமான வெற்பை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1181/1,2
மேல்


ஓலிட (1)

தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
மேல்


ஓலை (1)

ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ – தாயு:54 1442/2
மேல்


ஓலையை (1)

காதில் ஓலையை வரைந்து மேல் குமிழையும் கறுவி வேள் கருநீல – தாயு:24 332/1
மேல்


ஓவியம் (2)

ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/4
ஓவியம் போல் நிற்கின் எனை உள்குவரோ பைங்கிளியே – தாயு:44 1052/2

மேல்