ய – முதல் சொற்கள்- சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் கூட்டுத் தொடரடைவு

a

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யமன் 1
யவனர் 8
யவனர்க்கு 1

யமன் (1)

இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை – பரி 11/8,9

மேல்


யவனர் (8)

வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட – பெரும் 316,317
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல் – முல் 61,62
யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101
யவனர் தந்த வினை மாண் நன் கலம் – அகம் 149/9
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் – புறம் 56/18
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் – சிலப்.புகார் 5/10
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு – சிலப்.வஞ்சி 28/141
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – சிலப்.வஞ்சி 29/172

மேல்


யவனர்க்கு (1)

அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு – சிலப்.மது 14/67

மேல்