பி – முதல் சொற்கள்- சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சை 2
பிசாசு 1
பிசிர் 17
பிசிர 3
பிசிரொடு 1
பிசிரோன் 1
பிசைந்த 3
பிசைந்தனையேம் 1
பிசைந்து 4
பிசைவார் 1
பிஞ்ஞை 2
பிஞ்ஞையும் 1
பிஞ்ஞையோடு 1
பிட்டன் 4
பிட்டை 1
பிடகை 2
பிடர் 6
பிடர்த்தலை 4
பிடவம் 4
பிடவமும் 5
பிடவமொடு 2
பிடவின் 6
பிடவு 8
பிடவும் 2
பிடவூர் 1
பிடி 131
பிடிக்கு 1
பிடித்த 8
பிடித்தனன் 1
பிடித்து 6
பிடித்தோள் 1
பிடிப்பாள் 1
பிடிய 1
பிடியொடு 7
பிண்ட 3
பிண்டம் 9
பிண்டமும் 1
பிண்டன் 1
பிண்டி 11
பிண்டியில் 1
பிண்டியும் 1
பிண 8
பிணக்குவார் 1
பிணங்கியவை 1
பிணங்கு 12
பிணத்து 2
பிணம் 18
பிணர் 27
பிணர 1
பிணவல் 2
பிணவிற்கு 1
பிணவின் 8
பிணவு 10
பிணவும் 1
பிணவொடு 5
பிணன் 4
பிணா 1
பிணி 123
பிணி-மார் 1
பிணி_அகத்து 1
பிணிக்கு 1
பிணிக்கும் 13
பிணிக்கும்_காலை 1
பிணிக்கொண்ட 2
பிணிக்கொண்டவன் 1
பிணிக்கொண்டோள் 1
பிணிக்கொண்டோள்_வயின் 1
பிணித்த 10
பிணித்தல் 3
பிணித்தன்று 1
பிணித்து 14
பிணித்தோர் 1
பிணித்தோன் 1
பிணிப்ப 3
பிணிப்பு 1
பிணிபு 1
பிணிமுக 2
பிணிமுகம் 5
பிணிய 1
பிணியாள் 1
பிணியும் 3
பிணை 52
பிணை_வயின் 1
பிணைக்கு 1
பிணைத்து 4
பிணைந்து 3
பிணையல் 22
பிணையலளே 1
பிணையலின் 1
பிணையலும் 2
பிணையிலி 1
பிணையின் 6
பிணையினிர் 1
பிணையும் 2
பிணையூஉ 1
பிணையை 1
பிணையொடு 4
பிணையோடு 1
பிணைஇ 1
பித்திகத்து 8
பித்திகம் 1
பித்திகை 2
பித்தை 10
பித்தையர் 2
பித்தையன் 1
பித்தையும் 1
பிதிர் 4
பிதிர்ந்த 1
பிதிர்ந்து 1
பிதிர்பு 1
பிதிர்வின் 3
பிதிர்வை 1
பிதிர 1
பிதிரின் 2
பிரச 1
பிரசம் 11
பிரசமொடு 2
பிரண்டை 1
பிரப்பு 4
பிரம்பின் 7
பிரம்பு 1
பிரம்பொடு 1
பிரமம் 1
பிரி 8
பிரிக்கும் 1
பிரிக 1
பிரிகிற்பவரே 2
பிரிகுவர் 1
பிரிகோ 1
பிரித்து 5
பிரிதல் 16
பிரிதலும் 2
பிரிதி 1
பிரிதும் 2
பிரிந்த 18
பிரிந்த_கால் 1
பிரிந்த_காலை 1
பிரிந்ததற்கே 1
பிரிந்தவர் 2
பிரிந்தவர்க்கு 1
பிரிந்தன்று 1
பிரிந்தனர் 2
பிரிந்தனன் 2
பிரிந்தனிர் 1
பிரிந்தார் 1
பிரிந்தார்-கொல்லோ 1
பிரிந்தாரை 1
பிரிந்திசினோர் 1
பிரிந்திசினோர்க்கு 1
பிரிந்திசினோரே 4
பிரிந்திசினோளே 1
பிரிந்தீர் 1
பிரிந்து 41
பிரிந்தும் 1
பிரிந்தே 3
பிரிந்தோர் 19
பிரிந்தோரே 5
பிரிந்தோள் 1
பிரிந்தோன் 1
பிரிபு 3
பிரிமே 1
பிரிய 5
பிரியல் 1
பிரியலம் 4
பிரியலர் 1
பிரியலன் 3
பிரியலன்-மன்னே 1
பிரியலென் 1
பிரியவும் 1
பிரியற்க 1
பிரியன்-மின் 1
பிரியன்-மினோ 1
பிரியா 9
பிரியாது 5
பிரியாமல் 1
பிரியாமை 4
பிரியாய் 2
பிரியார் 1
பிரியின் 8
பிரியினும் 4
பிரியுநன் 2
பிரியும் 6
பிரியும்_கால் 1
பிரியுமோ 1
பிரிவது 1
பிரிவல் 1
பிரிவார் 1
பிரிவித்து 1
பிரிவின் 1
பிரிவு 19
பிரிவும் 1
பிரிவோய் 1
பிரிவோர் 3
பிருங்கலாதன் 1
பிலத்தின் 1
பிலம் 3
பிலிற்ற 2
பிழாவில் 1
பிழாவும் 1
பிழி 17
பிழிந்த 1
பிழிந்து 1
பிழியும் 1
பிழியூஉ 1
பிழிவது 1
பிழிவனம் 1
பிழை 10
பிழைக்குவது 1
பிழைத்த 8
பிழைத்தது 3
பிழைத்தமை 1
பிழைத்தலின் 1
பிழைத்தவோ 1
பிழைத்தனென் 1
பிழைத்தாய் 1
பிழைத்தான் 1
பிழைத்து 2
பிழைத்தேன் 3
பிழைத்தோர் 1
பிழைத்தோர்க்கு 2
பிழைத்தோன் 1
பிழைப்ப 2
பிழைப்பார் 1
பிழைப்பின் 1
பிழைப்பு 9
பிழையல 1
பிழையலள் 1
பிழையா 16
பிழையாத 1
பிழையாது 8
பிழையாது-மன்னே 1
பிழையார் 2
பிழையினை 1
பிழையேம் 1
பிள்ளை 27
பிள்ளையும் 1
பிள்ளையொடு 4
பிளக்கும் 1
பிளந்திட்ட 2
பிளந்து 12
பிளவை 1
பிளிற்றி 1
பிளிற்றும் 1
பிளிற 1
பிளிறி 1
பிளிறு 1
பிளிறும் 2
பிற்பகல் 1
பிற்பட 9
பிற்படார் 1
பிற்படு 1
பிற்பாடு 2
பிற்றை 3
பிற 18
பிற_பிறவும் 1
பிறக்க 1
பிறக்கி 1
பிறக்கிட்டு 1
பிறக்கிட 1
பிறக்கிடுவது 1
பிறக்கு 13
பிறக்கும் 1
பிறக்கே 2
பிறங்க 2
பிறங்கடை 1
பிறங்கடையே 1
பிறங்கல் 20
பிறங்கி 1
பிறங்கிய 8
பிறங்கு 34
பிறங்கும் 1
பிறசார் 1
பிறத்தல் 2
பிறத்தல்லே 1
பிறத்தலும் 1
பிறந்த 37
பிறந்ததன் 1
பிறந்தவர் 1
பிறந்தன்று 1
பிறந்தனென் 1
பிறந்து 6
பிறந்தேன் 1
பிறந்தோய் 1
பிறந்தோயே 1
பிறந்தோர்க்கு 4
பிறந்தோன் 1
பிறந்தோனும் 1
பிறப்ப 6
பிறப்பர் 1
பிறப்பாளனை 1
பிறப்பித்தோர் 1
பிறப்பில் 7
பிறப்பின் 3
பிறப்பினர் 1
பிறப்பினும் 4
பிறப்பினுள் 1
பிறப்பு 14
பிறர் 88
பிறர்_பிறர் 2
பிறர்_பிறர்க்கு 1
பிறர்க்கு 20
பிறர்க்கும் 6
பிறரும் 21
பிறரே 2
பிறரை 1
பிறவலர் 1
பிறவா 6
பிறவார் 1
பிறவி 1
பிறவியர் 1
பிறவியை 1
பிறவும் 37
பிறவும்-மார் 1
பிறவொடும் 1
பிறவோ 1
பிறவோர் 1
பிறழ் 5
பிறழ்தரும் 1
பிறழ்ந்து 1
பிறழ்நவும் 1
பிறழ்வது-மன்னோ 1
பிறழ 8
பிறழவும் 1
பிறழா 5
பிறழிய 2
பிறழினும் 3
பிறழும் 9
பிறள் 4
பிறள்_வயினானே 1
பிறன் 9
பிறிது 52
பிறிதும் 4
பிறை 40
பிறையின் 2
பிறையுடன் 1
பிறையும் 2
பிறையுள் 1
பிறையே 1
பிறையை 1
பின் 105
பின்_நாள் 1
பின்_பின் 1
பின்_அகம் 1
பின்பகல் 2
பின்பட 1
பின்பனி 2
பின்பு 1
பின்வந்து 1
பின்றா 1
பின்றை 39
பின்றையும் 1
பின்றையை 1
பின்னது 1
பின்னர் 20
பின்னரும் 1
பின்னரே 1
பின்னல் 1
பின்னவும் 1
பின்னள் 1
பின்னி 1
பின்னிய 3
பின்னிலை 6
பின்னின் 1
பின்னின்_கண் 1
பின்னின்று 1
பின்னு 9
பின்னும் 14
பின்னுவிட 1
பின்னே 5
பின்னை 4
பின்னை-தான் 1
பின்னையும் 2
பின்னையொடும் 1
பின்னொடு 2
பின்னோர் 1
பின்னோர்க்கு 2
பினறீ 1

பிச்சை (2)

பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் – நற் 300/11
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – குறு 277/3

மேல்


பிசாசு (1)

ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் – கலி 65/17

மேல்


பிசிர் (17)

தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர்
முழவு இசை புணரி எழுதரும் – நற் 67/10,11
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் – நற் 299/8
வான் பிசிர் கருவியின் பிடவு முகை தகைய – ஐங் 461/1
கான் பிசிர் கற்ப கார் தொடங்கின்றே – ஐங் 461/2
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய – பதி 11/1
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி – பதி 17/4
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/7
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை – பதி 41/25
வெண் தலை குரூஉ பிசிர் உடைய – பதி 42/22
பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி – பதி 60/10
வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல் – பதி 62/5
பொங்கு பிசிர் நுடக்கிய செம் சுடர் நிகழ்வின் – பதி 72/14
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் – பரி 6/83
விசும்பு அணி வில்லின் போகி பசும் பிசிர்
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – அகம் 210/4,5
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை – அகம் 250/1,2
ஊட்டு_உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன – அகம் 283/14
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின் – புறம் 67/11,12

மேல்


பிசிர (3)

கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பொர – பதி 15/6
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் – பதி 40/28,29
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/8,9

மேல்


பிசிரொடு (1)

கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம் 225/3

மேல்


பிசிரோன் (1)

பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே – புறம் 215/7

மேல்


பிசைந்த (3)

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் – குறு 167/1
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி – அகம் 39/6
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி – அகம் 65/10

மேல்


பிசைந்தனையேம் (1)

குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய் – குறு 289/3

மேல்


பிசைந்து (4)

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன – நற் 178/1
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி – கலி 106/23
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய – அகம் 387/6
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து – புறம் 159/8

மேல்


பிசைவார் (1)

எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் – பரி 10/91,92

மேல்


பிஞ்ஞை (2)

கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்து உளாள் – சிலப்.மது 17/63
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/107

மேல்


பிஞ்ஞையும் (1)

மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும் – சிலப்.மது 17/61

மேல்


பிஞ்ஞையோடு (1)

வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய – சிலப்.மது 17/30

மேல்


பிட்டன் (4)

ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த – அகம் 77/16,17
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் – அகம் 143/12,13
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன்
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே – புறம் 170/8,9
வன்_புல நாடன் வய_மான் பிட்டன்
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை – புறம் 172/8,9

மேல்


பிட்டை (1)

பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப – புறம் 373/6

மேல்


பிடகை (2)

பிடகை பெய்த கமழ் நறும் பூவினர் – மது 397
மடவரல் மகளிர் பிடகை பெய்த – நெடு 39

மேல்


பிடர் (6)

பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11
கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல் – புறம் 333/3
அந்தி போதகத்து அரும் பிடர் தோன்றிய – சிலப்.புகார் 8/58
பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – சிலப்.மது 20/47
கட களி யானை பிடர் தலை ஏறினன் – சிலப்.வஞ்சி 26/60
முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி – சிலப்.வஞ்சி 26/242

மேல்


பிடர்த்தலை (4)

இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு – சிலப்.புகார் 5/97,98
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – சிலப்.புகார் 5/142
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா – சிலப்.மது 15/52
பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – சிலப்.வஞ்சி 30/55

மேல்


பிடவம் (4)

குல்லை பிடவம் சிறுமாரோடம் – குறி 78
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி மால் அதர் நண்ணிய – நற் 238/3,4
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப – நற் 242/1
பிடவம் மலர தளவம் நனைய – ஐங் 499/1

மேல்


பிடவமும் (5)

பிடவமும் கொன்றையும் கோடலும் – நற் 99/9
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே – ஐங் 435/3
முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று – கலி 101/2,3
தண் நறும் பிடவமும் தவழ் கொடி தளவமும் – கலி 102/2
பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த – சிலப்.மது 13/158

மேல்


பிடவமொடு (2)

சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 25
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ – அகம் 23/4

மேல்


பிடவின் (6)

செம் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ் – நற் 25/2,3
கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும் – பதி 66/17
சிறு கரும் பிடவின் வெண் தலை குறும் புதல் – அகம் 34/1
குறும் புதல் பிடவின் நெடும் கால் அலரி – அகம் 154/4
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி – அகம் 183/11
தொகு முகை விரிந்த முட கால் பிடவின்
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர் – அகம் 344/3,4

மேல்


பிடவு (8)

பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ – நற் 246/8
களவுடன் கமழ பிடவு தளை அவிழ – நற் 256/6
போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினி – ஐங் 412/2
வான் பிசிர் கருவியின் பிடவு முகை தகைய – ஐங் 461/1
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் – அகம் 139/11
ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த – அகம் 147/1
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் – அகம் 184/7
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ – அகம் 304/11

மேல்


பிடவும் (2)

ஆலலும் ஆலின பிடவும் பூத்தன – குறு 251/3
புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் – கலி 103/2

மேல்


பிடவூர் (1)

நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர்
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும – புறம் 395/20,21

மேல்


பிடி (131)

இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று – திரு 304
இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் – பொரு 40
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என – பொரு 126
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின் – சிறு 19
பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை – சிறு 124
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – சிறு 191
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் – பெரும் 53
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில் – பெரும் 186
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் – பெரும் 199
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும் – பெரும் 358
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46
பிடி கணம் மறந்த வேழம் வேழத்து – முல் 69
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு – மது 634
பிடி புணர் பெரும் களிறு முழங்க முழு வலி – மது 676
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு – பட் 224
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் – பட் 251
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் – மலை 105
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும் – மலை 127
கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – மலை 307,308
பிடி கை அன்ன செம் கண் வராஅல் – மலை 457
துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல் – நற் 14/9
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி – நற் 36/2
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது – நற் 47/1,2
புன் தலை மட பிடி கன்றோடு ஆர – நற் 92/7
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டு – நற் 107/2
மையல் மட பிடி இனைய – நற் 114/11
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/5
கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர் – நற் 137/6
பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு – நற் 144/1,2
துஞ்சு பிடி வருடும் அத்தம் – நற் 162/11
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/3
கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் – நற் 194/3
மட பிடி தழீஇய தட கை வேழம் – நற் 202/4
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது – நற் 222/8
முய பிடி செவியின் அன்ன பாசடை – நற் 230/1
பசி பிடி உதைத்த ஓமை செம் வரை – நற் 279/7
புன் தலை மட பிடி புலம்பிய குரலே – நற் 318/9
இரும் பிடி தட கையின் தடைஇய பெரும் புனம் – நற் 344/3
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க – நற் 393/2
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும் – நற் 399/6,7
பிடி பசி களைஇய பெரும் கை வேழம் – குறு 37/2
கூடை இரும் பிடி கை கரந்து அன்ன – குறு 111/4
மட பிடி தட கை அன்ன பால் வார்பு – குறு 198/3
தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட – குறு 225/2
மட பிடி பரிசில் மான – குறு 298/7
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது – குறு 307/5
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர – குறு 308/4
மட பிடி தழீஇ தட கை யானை – குறு 332/4
நாகு பிடி நயந்த முளை கோட்டு இளம் களிறு – குறு 346/1
பிடி கை அன்ன பெரும் குரல் ஏனல் – குறு 360/5
செல்லாதீமோ சிறு பிடி துணையே – குறு 390/2
முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி – குறு 394/1
நெடும் புதல் கானத்து மட பிடி ஈன்ற – ஐங் 216/2
இரும் பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின் – ஐங் 239/2
களிறு பிடி தழீஇ பிற புலம் படராது – ஐங் 305/1
மட பிடி தழீஇய மாவே – ஐங் 416/4
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ – பதி 43/5
பாடு விறலியர் பல் பிடி பெறுக – பதி 43/22
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல – பதி 82/6
நீர் அணி அணியின் நிரை நிரை பிடி செல – பரி 6/26
மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர் – பரி 10/29
மட பிடி கண்டு வய கரி மால்_உற்று – பரி 10/42
நலத்த நடவாது நிற்ப மட பிடி
அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல் – பரி 10/43,44
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற – பரி 10/47
வாங்கி முயங்கி வய பிடி கால்கோத்து – பரி 10/51
பிடி மேல் அன்ன பெரும் படை அனையோர் – பரி 12/27
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள் – பரி 12/47,48
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – கலி 11/9
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி
தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர் – கலி 50/2,3
விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா – கலி 53/2
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும் – கலி 54/13
தாரின் வாய் கொண்டு முயங்கி பிடி மாண்டு – கலி 95/15
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி
நேர் மணி நேர் முக்காழ் பற்பல கண்டிகை – கலி 96/13,14
பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின் – கலி 108/40
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி – கலி 140/6
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/11
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி – அகம் 9/22
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – அகம் 43/3,4
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை – அகம் 59/7
புன் தலை மட பிடி பூசல் பல உடன் – அகம் 68/18
பிடி கை அமைந்த கனல் வாய் கொள்ளி – அகம் 73/15
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல் – அகம் 78/6
கறை அடி மட பிடி கானத்து அலற – அகம் 83/3
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி
கன்று பசி களைஇய பைம் கண் யானை – அகம் 85/6,7
பிடி மிடை களிற்றின் தோன்றும் – அகம் 99/13
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் – அகம் 113/3
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய் – அகம் 118/7
கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி – அகம் 121/5
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ – அகம் 137/2
கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என – அகம் 165/1
ஈன்று அணி இரும் பிடி தழீஇ களிறு தன் – அகம் 168/9
இரும் பிடி தட கை மான நெய் அருந்து – அகம் 177/4
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு – அகம் 178/6
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி – அகம் 183/8
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு – அகம் 189/4
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு – அகம் 197/13
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப – அகம் 202/2
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய – அகம் 211/10
இரும் பிடி இரியும் சோலை – அகம் 221/13
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் – அகம் 227/17
இரும் பிடி இரியும் சோலை – அகம் 228/12
கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் – அகம் 229/4,5
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின் – அகம் 269/6
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல – அகம் 276/10
இரும் பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது – அகம் 298/8
இரும் பிடி பரிசிலர் போல கடை நின்று – அகம் 311/1
கன்று உடை மட பிடி களிறொடு தடவரும் – அகம் 321/9
அடக்குவம்-மன்னோ தோழி மட பிடி
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று – அகம் 328/11,12
யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து – அகம் 332/8
இரும் பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ – அகம் 334/6
விண் பொர கழித்த திண் பிடி ஒள் வாள் – அகம் 338/17
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு – அகம் 347/13,14
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை – அகம் 359/10
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி – அகம் 368/11
பிடி இடு பூசலின் அடி பட குழிந்த – அகம் 379/25
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை – அகம் 392/2
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை – அகம் 398/23
ஒரு பிடி படியும் சீறிடம் – புறம் 40/10
இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியா – புறம் 44/1
தோள் கழியொடு பிடி செறிப்பவும் – புறம் 98/11
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ – புறம் 130/2
புன் தலை மட பிடி பரிசில் ஆக – புறம் 151/4
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும் – புறம் 181/3
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி – புறம் 234/2
கயம் தலை மட பிடி புலம்ப – புறம் 303/8
புன் தலை மட பிடி நாண – புறம் 308/10
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் – புறம் 345/8
துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த – புறம் 369/26
புன் தலை மட பிடி இனைய கன்று தந்து – புறம் 389/9
மற வெம் களிறும் மட பிடி நிரைகளும் – சிலப்.மது 22/117

மேல்


பிடிக்கு (1)

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற – கலி 40/26

மேல்


பிடித்த (8)

கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் – பெரும் 377,378
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து – குறு 156/3
கொடுமரம் பிடித்த கோடா வன்கண் – அகம் 215/9
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் – அகம் 239/4
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி – அகம் 392/24
பிரியா தருப்பை பிடித்த கையினன் – சிலப்.மது 22/32
என இவை பிடித்த கையினன் ஆகி – சிலப்.மது 22/55

மேல்


பிடித்தனன் (1)

பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம் – சிலப்.புகார் 9/46

மேல்


பிடித்து (6)

பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு – மது 463
காழ் எஃகம் பிடித்து எறிந்து – பதி 90/37
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது – அகம் 145/19
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி – புறம் 369/13

மேல்


பிடித்தோள் (1)

வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள்
வல கால் புனை கழல் கட்டினும் இட கால் – சிலப்.மது 23/8,9

மேல்


பிடிப்பாள் (1)

மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின் – சிலப்.மது 17/80

மேல்


பிடிய (1)

கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி – பதி 12/13

மேல்


பிடியொடு (7)

மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு
பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 178,179
நீடு இரும் சிலம்பின் பிடியொடு புணர்ந்த – நற் 317/1
கை உடை நன் மா பிடியொடு பொருந்தி – குறு 319/3
பிடியொடு மேயும் புன்செய் யானை – கலி 41/7
ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க – அகம் 91/6
பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும் – அகம் 295/7
செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன – அகம் 301/16

மேல்


பிண்ட (3)

பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய – நற் 26/4
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் – அகம் 6/5
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் – அகம் 46/14

மேல்


பிண்டம் (9)

வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று – நற் 116/3
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க – பதி 30/35,36
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி – அகம் 178/5
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே – புறம் 18/20,21
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் – புறம் 184/9
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/4
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம்
வெள் என் சாந்தொடு புளி பெய்து அட்ட – புறம் 246/6,7
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/9
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின் – சிலப்.வஞ்சி 26/43

மேல்


பிண்டமும் (1)

சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும் – புறம் 28/1,2

மேல்


பிண்டன் (1)

உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடைய கடந்த வென் வேல் – அகம் 152/9,10

மேல்


பிண்டி (11)

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில் – மது 701
பகன்றை பலாசம் பல் பூ பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்துவாரம் – குறி 88,89
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ – குறி 119
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள் – பரி 11/95
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ – பரி 12/88
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி – பரி 23/8
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும் – சிலப்.புகார் 3/22
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 10/21
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – சிலப்.மது 11/3
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – சிலப்.மது 15/152

மேல்


பிண்டியில் (1)

ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் – சிலப்.புகார் 3/23

மேல்


பிண்டியும் (1)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – சிலப்.புகார் 3/18

மேல்


பிண (8)

பிண கோட்ட களிற்று குழும்பின் – மது 24
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி – நற் 383/3
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ – அகம் 215/13
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/2
பைம் நிணம் கவரும் படு பிண கவலை – அகம் 327/16
இடு திரை மணலினும் பலரே சுடு பிண
காடு பதி ஆக போகி தத்தம் – புறம் 363/4,5
படு பிண பல் போர்பு அழிய வாங்கி – புறம் 370/15

மேல்


பிணக்குவார் (1)

தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் – பரி 9/45

மேல்


பிணங்கியவை (1)

கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல் – கலி 92/52

மேல்


பிணங்கு (12)

பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379
பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை – நற் 37/1
எறிந்து செறித்து அன்ன பிணங்கு அரில் விடர் முகை – நற் 322/4
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/2
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – கலி 131/38
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் – அகம் 73/12
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில – அகம் 256/1
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு – புறம் 177/12
இறைஞ்சியோனே குருசில் பிணங்கு கதிர் – புறம் 285/14
பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று – புறம் 338/10
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – சிலப்.புகார் 7/73
பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த – சிலப்.மது 13/158

மேல்


பிணத்து (2)

மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின் – பதி 77/5
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக – புறம் 284/6

மேல்


பிணம் (18)

வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப – பெரும் 414
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 260
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர் – பதி 36/7
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி – பதி 45/12
படு பிணம் பிறங்க பாழ் பல செய்து – பதி 49/13
எறி பிணம் இடறிய செம் மறு குளம்பின் – பதி 65/1
கொன்று புறம்பெற்ற பிணம் பயில் அழுவத்து – பதி 66/6
படு பிணம் பிறங்க நூறி பகைவர் – பதி 69/9
படு பிணம் கவரும் பாழ் படு நனம் தலை – அகம் 319/5
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா – புறம் 278/6
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா – புறம் 342/13
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல – புறம் 359/3
பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி – புறம் 359/4
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு – புறம் 369/15
படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – சிலப்.புகார் 9/19
இடு பிணம் தின்னும் இடாகினி பேய் வாங்கி – சிலப்.புகார் 9/21
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம் – சிலப்.வஞ்சி 26/207
பிணம் சுமந்து ஒழுகிய நிணம் படு குருதியில் – சிலப்.வஞ்சி 26/209

மேல்


பிணர் (27)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 50
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி – குறி 163
பிணர் பெண்ணை பிழி மாந்தியும் – பட் 89
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின் – மலை 246
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் – நற் 19/1
பாண்டிலொடு பொருத பல் பிணர் தட கை – நற் 141/8
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு – நற் 186/2
உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல் – நற் 235/1
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து – நற் 330/1
பிணர் சுவல் பன்றி தோல் முலை பிணவொடு – நற் 336/1
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல் – குறு 13/2
இரும் பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின் – ஐங் 239/2
எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர்
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும் – ஐங் 352/2,3
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் – பரி 11/57
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி 83/8
போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு – கலி 103/34
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் – கலி 105/14
இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொர – அகம் 57/7
இரும் பிணர் தட கையின் ஏமுற தழுவ – அகம் 78/5
பேஎய் தலைய பிணர் அரை தாழை – அகம் 130/5
பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல் – அகம் 207/10
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை – அகம் 246/1
தழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டிய – அகம் 253/14
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி – அகம் 400/6
பணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கை – புறம் 371/19
ஏந்து கோட்டு இரும் பிணர் தட கை – புறம் 387/10
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் – புறம் 387/29

மேல்


பிணர (1)

சுற்றிய பிணர சூழ் கழி இறவின் – நற் 101/2

மேல்


பிணவல் (2)

இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ – அகம் 21/19
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/4

மேல்


பிணவிற்கு (1)

வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் – ஐங் 323/1,2

மேல்


பிணவின் (8)

கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து – நற் 148/7,8
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் – நற் 322/5
ஈர் உயிர் பிணவின் வயவு பசி களைஇய – அகம் 72/12
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது – அகம் 277/6
ஊன் நசை பிணவின் உறு பசி களைஇயர் – அகம் 285/4
உண்ணா பிணவின் உயக்கம் சொலிய – அகம் 336/3
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய – அகம் 357/3
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் – அகம் 367/9

மேல்


பிணவு (10)

ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் – பெரும் 90
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 177
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/3
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் – நற் 103/8
பிணவு புலி வழங்கும் அணங்கு அரும் கவலை – நற் 144/6
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி – நற் 332/6
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை – ஐங் 354/1
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண் – அகம் 21/17
துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என – அகம் 147/5
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை – அகம் 362/5,6

மேல்


பிணவும் (1)

மிக வரினும் மீது இனிய வேழ பிணவும்
அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா – பரி 10/15,16

மேல்


பிணவொடு (5)

பல் மயிர் பிணவொடு பாயம் போகாது – பெரும் 342
பன் மயிர் பிணவொடு கேழல் உகள – மது 174
பிணர் சுவல் பன்றி தோல் முலை பிணவொடு
கணை கால் ஏனல் கைம்மிக கவர்தலின் – நற் 336/1,2
வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில் – அகம் 53/6,7
தோல் முலை பிணவொடு திளைக்கும் – அகம் 201/18

மேல்


பிணன் (4)

பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் – சிறு 199
கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது – நற் 329/2,3
பிணன் அழுங்க களன் உழக்கி – புறம் 98/5
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து – புறம் 371/14

மேல்


பிணா (1)

குற_பிணா_கொடியை கூடியோய் வாழ்த்து – பரி 19/95

மேல்


பிணி (123)

கண்கூடு இருக்கை திண் பிணி திவவின் – பொரு 15
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிறு 255
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் – பெரும் 283
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ – மது 376
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து – மது 382
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் – மது 531
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை – மது 654
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் – குறி 177
பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 222
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய – பட் 293
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி – மலை 381,382
கை பிணி விடாஅது பைபய கழி-மின் – மலை 383
பழம் பிணி வைகிய தோள் இணை – நற் 20/10
மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே – நற் 46/11
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது – நற் 47/2
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை – நற் 62/1
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற் 62/2
மன்னா பொருள்_பிணி முன்னி இன்னதை – நற் 71/1
அரும் செயல் பொருள்_பிணி முன்னி யாமே – நற் 113/5
பிணி பிறிது ஆக கூறுவர் – நற் 117/10
நில்லா பொருள்_பிணி சேறி – நற் 126/11
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது – நற் 136/2
காமர் பொருள்_பிணி போகிய – நற் 186/9
அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக – நற் 193/7
பெரிதும் சான்றோர் மன்ற விசி பிணி
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண் – நற் 220/5,6
நில்லா பொருள்_பிணி பிரிந்திசினோரே – நற் 241/12
பிணி முதல் அரைய பெரும் கல் வாழை – நற் 251/2
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் – நற் 262/4
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ – நற் 299/2
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ – நற் 377/5
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி
குறு முகை அவிழ்ந்த நறு மலர் புறவின் – குறு 220/4,5
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும் – குறு 237/3
காமர் பொருள்_பிணி போகிய – குறு 255/7
அரும் பெறல் பொருள்_பிணி போகி – குறு 344/7
நிலையா பொருள்_பிணி பிரிந்திசினோரே – குறு 350/8
பைம் கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்த – குறு 366/4
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக – ஐங் 5/2
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே – ஐங் 40/5
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர – ஐங் 98/2
நின்றது இல் பொருள்_பிணி முற்றிய – ஐங் 336/3
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என – ஐங் 355/2
பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே – ஐங் 447/1
திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப – பதி 19/4
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய – பதி 22/10
பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து – பதி 22/12
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் – பதி 50/18
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து – பதி 50/20
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ – பதி 50/21
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் – பதி 51/17
எழூஉ புறந்தரீஇ பொன் பிணி பலகை – பதி 53/15
தோள் பிணி மீகையர் புகல் சிறந்து நாளும் – பதி 81/11
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி – பதி 84/3
நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் – பரி 3/55
பிருங்கலாதன் பல_பல பிணி பட – பரி 4/12
வேர் பிணி பல் மலர் வேயுமோரும் – பரி 12/16
பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர – பரி 21/58
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி – பரி 23/8
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க – பரி 23/66
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் – பரி 24/73
ஒழிக இனி பெரும நின் பொருள்_பிணி செலவே – கலி 4/25
பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் – கலி 20/4
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/24
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள – கலி 32/5
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக – கலி 33/4
நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட – கலி 33/28
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடை தாமரை – கலி 59/1
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 73/5
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ – கலி 93/23
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று – கலி 104/45
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/46
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் – கலி 128/5
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி – கலி 144/69
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ – அகம் 4/2
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ – அகம் 23/4
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகம் 24/3
கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு – அகம் 24/14
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார் – அகம் 27/4
ஏதில் பொருள்_பிணி போகி தம் – அகம் 43/14
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணி – அகம் 51/8
அரும் செயல் பொருள்_பிணி முன்னி நம் – அகம் 59/17
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி – அகம் 64/4
கழி பிணி கறைத்தோல் நிரை கண்டு அன்ன – அகம் 67/13
கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார் – அகம் 77/7
நில்லா பொருள்_பிணி பிரிந்த நீயே – அகம் 79/17
விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப – அகம் 91/13
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை – அகம் 99/5
நம் நீத்து உறையும் பொருள்_பிணி – அகம் 115/17
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் – அகம் 122/5
தாது உறு குவளை போது பிணி அவிழ – அகம் 125/6
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ – அகம் 154/7
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து – அகம் 178/9
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே – அகம் 234/18
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ – அகம் 235/8
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த – அகம் 238/17
நிலை அரும் பொருள்_பிணி நினைந்தனிர் எனினே – அகம் 271/10
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது – அகம் 289/7
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் – அகம் 298/13
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி – அகம் 319/2
பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப – அகம் 346/13,14
கம்புள் இயவன் ஆக விசி பிணி
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் – அகம் 356/3,4
நரை மூதாளர் கை பிணி விடுத்து – அகம் 366/10
பெண்டிரும் பிணி உடையீரும் பேணி – புறம் 9/2
விசி பிணி கொண்ட மண் கனை முழவின் – புறம் 15/23
பிணி உறு முரசம் கொண்ட_காலை – புறம் 25/7
திண் பிணி முரசம் இழுமென முழங்க – புறம் 93/1
பிணி கதிர் நெல்லின் செம்மல் மூதூர் – புறம் 97/18
இடை புரை பற்றி பிணி விடாஅ – புறம் 136/3
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி
கூடு கொள் இன் இயம் கறங்க – புறம் 153/10,11
பசி_பிணி_மருத்துவன் இல்லம் – புறம் 173/11
விசி பிணி முரசமொடு மண் பல தந்த – புறம் 179/4
கூம்பு விடு மெய் பிணி அவிழ்ந்த ஆம்பல் – புறம் 209/3
திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும் – புறம் 229/19
திண் பிணி முரசம் இடை புலத்து இரங்க – புறம் 288/4
கழி பிணி பலகையர் கதுவாய் வாளர் – புறம் 345/15
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை – புறம் 369/19,20
விசி பிணி தடாரி விம்மென ஒற்றி – புறம் 372/1
சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி
சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ – புறம் 376/3,4
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் – புறம் 383/7
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை – புறம் 388/14
கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல் – சிலப்.புகார் 5/81
பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – சிலப்.மது 11/182

மேல்


பிணி-மார் (1)

உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணி-மார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 326,327

மேல்


பிணி_அகத்து (1)

பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 222

மேல்


பிணிக்கு (1)

பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல் – குறு 213/3

மேல்


பிணிக்கும் (13)

பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை கலி யாணர் – பட் 31,32
இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு – மலை 73
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார் – நற் 269/7
முழவு முதல் பிணிக்கும் துறைவ நன்றும் – நற் 315/8
அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும்
மணம் கமழ் மார்ப நின் தாள் நிழலோரே – பதி 68/19,20
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி – அகம் 83/8,9
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை – புறம் 68/7
பிணிக்கும்_காலை இரங்குவிர் மாதோ – புறம் 195/5
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு – புறம் 229/25
இல் வழங்கு மட மயில் பிணிக்கும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே – புறம் 252/4,5
குன்றக நல் ஊர் மன்றத்து பிணிக்கும்
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் – புறம் 389/10,11
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர் – புறம் 400/21
அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும்
கலவை கூட்டம் காண்வர தோன்றி – சிலப்.மது 13/128,129

மேல்


பிணிக்கும்_காலை (1)

பிணிக்கும்_காலை இரங்குவிர் மாதோ – புறம் 195/5

மேல்


பிணிக்கொண்ட (2)

நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதி – குறு 280/2
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில் – புறம் 3/10

மேல்


பிணிக்கொண்டவன் (1)

நெஞ்சம் பிணிக்கொண்டவன்
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் – கலி 42/27,28

மேல்


பிணிக்கொண்டோள் (1)

உள்ளம் பிணிக்கொண்டோள்_வயின் நெஞ்சம் – நற் 284/3

மேல்


பிணிக்கொண்டோள்_வயின் (1)

உள்ளம் பிணிக்கொண்டோள்_வயின் நெஞ்சம் – நற் 284/3

மேல்


பிணித்த (10)

விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே – நற் 95/10
வடு கொள பிணித்த விடு புரி முரற்சி – நற் 222/2
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை – குறு 258/3,4
யானை பிணித்த பொன் புனை கயிற்றின் – ஐங் 356/2
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் – கலி 110/10
கொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகை – அகம் 329/6
வீங்கு விசை பிணித்த விரை பரி நெடும் தேர் – அகம் 339/1
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய – அகம் 349/2
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் – புறம் 109/11
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில் – புறம் 162/5,6

மேல்


பிணித்தல் (3)

அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா – நற் 270/5
நெஞ்சம் பிணித்தல் தொழிலா திரிதரும் – கலி 85/24
நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை – அகம் 267/15

மேல்


பிணித்தன்று (1)

நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்றே – புறம் 96/5

மேல்


பிணித்து (14)

விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் உடை மூக்கின் – பெரும் 56,57
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் – நற் 261/7
புது கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே – குறு 129/6
மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410/5
தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த – கலி 111/2
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் – கலி 131/8
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/9
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் – அகம் 177/5
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/3
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன் – அகம் 276/11
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் – புறம் 357/1
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என – சிலப்.மது 11/29

மேல்


பிணித்தோர் (1)

பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும் – அகம் 313/3

மேல்


பிணித்தோன் (1)

வெம் சின வேந்தரை பிணித்தோன்
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே – அகம் 396/18,19

மேல்


பிணிப்ப (3)

இன் சொல் பிணிப்ப நம்பி நம்_கண் – அகம் 153/6
வினை நவில் யானை பிணிப்ப
வேர் துளங்கின நம் ஊருள் மரனே – புறம் 347/10,11
செம் நுதல் யானை பிணிப்ப
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே – புறம் 348/9,10

மேல்


பிணிப்பு (1)

பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும் – சிலப்.மது 15/100

மேல்


பிணிபு (1)

பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என – கலி 3/14

மேல்


பிணிமுக (2)

பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என – புறம் 56/8
பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – சிலப்.வஞ்சி 30/55

மேல்


பிணிமுகம் (5)

ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி – திரு 247
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி – பரி 5/2
பிணிமுகம் உளப்பட பிறவும் ஏந்தி – பரி 8/101
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ – பரி 17/49
பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – சிலப்.வஞ்சி 24/54

மேல்


பிணிய (1)

பரூஉ பிணிய தொடி கழிந்தனவே – புறம் 97/10

மேல்


பிணியாள் (1)

சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க – பரி 20/68

மேல்


பிணியும் (3)

அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி – குறு 136/2
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் – குறு 204/2
பசியும் பிணியும் பகையும் நீங்கி – சிலப்.புகார் 5/72

மேல்


பிணை (52)

மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 216
பிணை யூபம் எழுந்து ஆட – மது 27
பெண் மகிழ்வு_உற்ற பிணை நோக்கு மகளிர் – மது 555
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப – குறி 154
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் – பட் 245
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி – மலை 404
மா எருத்து இரலை மட பிணை தழுவ – நற் 69/4
கவை கதிர் கறித்த காமர் மட பிணை
அரலை அம் காட்டு இரலையொடு வதியும் – நற் 121/3,4
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு – நற் 204/9
மட பிணை தழீஇய மா எருத்து இரலை – நற் 256/8
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் – நற் 274/3
பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு – நற் 363/5
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து – குறு 319/1
மட மான் அம் பிணை மறியொடு திரங்க – ஐங் 326/2
மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும் – ஐங் 354/2
மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும் – ஐங் 373/3
பெரு மட மான் பிணை அலைத்த – ஐங் 394/4
மறி இடைப்படுத்த மான் பிணை போல – ஐங் 401/1
மறி உடை மாண் பிணை உகள – ஐங் 434/2
மாதர் மான் பிணை மறியொடு மறுக – ஐங் 493/2
பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள் – பரி 7/57
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் – கலி 27/3
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/2
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ – கலி 93/8
வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ – கலி 104/22
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் – கலி 131/12
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும் – கலி 146/32
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ – அகம் 14/5
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ – அகம் 23/8
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/6
கரும் கோட்டு இரலை காமர் மட பிணை
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/9,10
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் – அகம் 129/5
வரி மரல் கறிக்கும் மட பிணை
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே – அகம் 133/17,18
கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை – அகம் 134/12
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட – அகம் 173/11
மான் பிணை நோக்கின் மட நல்லாளை – அகம் 195/6
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள – அகம் 234/10,11
காடு தேர் மட பிணை அலற கலையின் – அகம் 285/5
கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க – அகம் 287/10
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி – அகம் 291/18
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு – அகம் 304/8,9
மறி உடை மட பிணை தழீஇ புறவின் – அகம் 314/5
கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு – அகம் 321/4
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி – அகம் 353/11
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே – அகம் 363/19
மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல் – அகம் 395/11
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் – புறம் 2/21,22
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை – புறம் 23/19,20
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை – புறம் 157/11
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர் – புறம் 320/4
பிணை_வயின் தீர்தலும் அஞ்சி யாவதும் – புறம் 320/8
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே – புறம் 354/10

மேல்


பிணை_வயின் (1)

பிணை_வயின் தீர்தலும் அஞ்சி யாவதும் – புறம் 320/8

மேல்


பிணைக்கு (1)

இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே – கலி 11/16,17

மேல்


பிணைத்து (4)

மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/9
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 301/3
மா தாள் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 62/4
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 361/2

மேல்


பிணைந்து (3)

ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/5
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் – கலி 106/32
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து
தழுவு_வழி தழீஇ தூங்கு_வழி தூங்கி – புறம் 243/3,4

மேல்


பிணையல் (22)

இணைப்பு_உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர் – மலை 349
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் – நற் 90/6,7
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – நற் 160/9
பிணையல் அம் தழை தைஇ துணையிலள் – நற் 170/3
துணை மலர் பிணையல் அன்ன இவர் – குறு 229/6
வயலை செம் கொடி பிணையல் தைஇ – ஐங் 52/1
கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல்
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த – பரி 2/53,54
பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப – கலி 139/9
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த_காலை மா மலர் – அகம் 5/23,24
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி – அகம் 44/14
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – அகம் 149/18
வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் – அகம் 189/8
கரும் கால் வேங்கை செம் பூ பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் – அகம் 345/8,9
பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை – அகம் 385/12
கழுநீர் பிணையல் முழுநெறி பிறழ – சிலப்.புகார் 2/34
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – சிலப்.மது 12/113
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல்
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – சிலப்.மது 13/21,22
தண் செங்கழுநீர் தாது விரி பிணையல்
கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு – சிலப்.மது 14/79,80
செம் கொடுவேரி செழும் பூ பிணையல்
சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில் – சிலப்.மது 14/91,92
கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் – சிலப்.மது 20/22
துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் – சிலப்.மது 22/123

மேல்


பிணையலளே (1)

பழன வெதிரின் கொடி பிணையலளே – ஐங் 91/4

மேல்


பிணையலின் (1)

பயில் பூ கோதை பிணையலின் பொலிந்து – சிலப்.புகார் 5/193

மேல்


பிணையலும் (2)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – சிலப்.புகார் 3/18
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும்
பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார் – சிலப்.வஞ்சி 28/59,60

மேல்


பிணையிலி (1)

பெண்மை பொதுமை பிணையிலி ஐம் புலத்தை – பரி 20/50

மேல்


பிணையின் (6)

கலை ஒழி பிணையின் கலங்கி மாறி – நற் 37/6
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக – நற் 61/3
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ – நற் 250/9
சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு – குறு 183/3
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் – அகம் 7/11
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற – அகம் 32/13

மேல்


பிணையினிர் (1)

பெருநாள் அமையத்து பிணையினிர் கழி-மின் – பெரும் 296

மேல்


பிணையும் (2)

இதையும் களிறும் பிணையும் இரிய – பரி 10/53
பிணையும் காணிரோ பிரியுமோ அவையே – கலி 20/23

மேல்


பிணையூஉ (1)

சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும் – மது 614,615

மேல்


பிணையை (1)

பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14

மேல்


பிணையொடு (4)

மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 276
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/2
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் – அகம் 184/12
தகர தண் நிழல் பிணையொடு வதியும் – புறம் 132/6

மேல்


பிணையோடு (1)

அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ – குறு 338/2

மேல்


பிணைஇ (1)

அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி – கலி 102/25,26

மேல்


பித்திகத்து (8)

செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 40,41
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி – குறி 117
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி – நற் 314/3
பெரும் தண் மாரி பேதை பித்திகத்து
அரும்பே முன்னும் மிக சிவந்தனவே – குறு 94/1,2
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 168/1
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 222/5
மலி பெயல் கலித்த மாரி பித்திகத்து
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகை – அகம் 42/1,2
மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும் – அகம் 295/19

மேல்


பித்திகம் (1)

வஞ்சி பித்திகம் சிந்துவாரம் – குறி 89

மேல்


பித்திகை (2)

பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என – நற் 97/7
பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு – சிலப்.புகார் 8/55

மேல்


பித்தை (10)

சுரி இரும் பித்தை பொலிய சூட்டி – பொரு 160
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி – பெரும் 482
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் – அகம் 101/5
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி – அகம் 127/14
வடியா பித்தை வன்கண் ஆடவர் – அகம் 161/2
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி – அகம் 213/5
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை
ஆட்டன்அத்தியை காணீரோ என – அகம் 236/15,16
சுரி இரும் பித்தை பொலிய சூடி – புறம் 100/6
மை இரும் பித்தை பொலிய சூட்டி – புறம் 269/3
தயங்கு இரும் பித்தை பொலிய சூடி – புறம் 371/4

மேல்


பித்தையர் (2)

நெய் அணி கூந்தலர் பித்தையர்
மெய் அணி யானை மிசையராய் ஒய்யென – பரி 24/13,14
சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர்
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம் – கலி 4/2,3

மேல்


பித்தையன் (1)

காட்டிய பூவின் கலந்த பித்தையன்
கம்மியர் செய்வினை கலப்பை ஏந்தி – சிலப்.மது 22/94,95

மேல்


பித்தையும் (1)

கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால் – பரி 24/85

மேல்


பிதிர் (4)

திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி – நற் 89/2
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ – குறு 55/2
புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க – கலி 72/5
சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை – அகம் 270/5

மேல்


பிதிர்ந்த (1)

ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் – கலி 111/16

மேல்


பிதிர்ந்து (1)

களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி – சிறு 24,25

மேல்


பிதிர்பு (1)

பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி – அகம் 153/10

மேல்


பிதிர்வின் (3)

விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும் – மலை 109
உடை திரை பிதிர்வின் பொங்கி முன் – அகம் 1/18
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி – அகம் 202/6

மேல்


பிதிர்வை (1)

பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என – அகம் 275/5

மேல்


பிதிர (1)

கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து – புறம் 243/8,9

மேல்


பிதிரின் (2)

எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் – நற் 13/6
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி – அகம் 72/4

மேல்


பிரச (1)

பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென – அகம் 228/1

மேல்


பிரசம் (11)

வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப – மது 717
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 239
பிரசம் தூங்க பெரும் பழம் துணர – நற் 93/1
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால் – நற் 110/1
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு – நற் 268/5
இரும் களி பிரசம் ஊத அவர் – நற் 311/10
பிரசம் தூங்கு மலை கிழவோற்கே – குறு 392/8
தாது ஆர் பிரசம் ஊதும் – ஐங் 406/3
தாது ஆர் பிரசம் மொய்ப்ப – ஐங் 417/3
பிரசம் தூங்கும் சேண் சிமை – அகம் 242/21
வரை இழி அருவி பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும் – அகம் 318/5,6

மேல்


பிரசமொடு (2)

புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் – குறி 189
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி – அகம் 172/2

மேல்


பிரண்டை (1)

ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப – அகம் 119/5,6

மேல்


பிரப்பு (4)

சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 234
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ – குறு 263/1
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ – அகம் 98/9
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ – அகம் 242/9

மேல்


பிரம்பின் (7)

நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 288
திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 435
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி – குறு 91/1
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய் – குறு 364/1
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/19
பழன பொய்கை அடைகரை பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி – அகம் 96/3,4
தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து – அகம் 196/6

மேல்


பிரம்பு (1)

நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன – அகம் 356/19

மேல்


பிரம்பொடு (1)

பரந்த பொய்கை பிரம்பொடு நீடிய – அகம் 306/2

மேல்


பிரமம் (1)

தெய்வ பிரமம் செய்குவோரும் – பரி 19/40

மேல்


பிரி (8)

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – மலை 297
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – மலை 472
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு – நற் 204/9
இணை பிரி அணி துணி பணி எரி புரைய – பரி 1/14
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/38
வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர் – பரி 16/7
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் – கலி 21/2
நாம் பிரி புலம்பின் நலம் செல சாஅய் – அகம் 41/10

மேல்


பிரிக்கும் (1)

தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே – குறு 157/3,4

மேல்


பிரிக (1)

பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து – புறம் 71/6,7

மேல்


பிரிகிற்பவரே (2)

யாரோ பிரிகிற்பவரே குவளை – நற் 391/8
யாரோ பிரிகிற்பவரே சாரல் – குறு 22/2

மேல்


பிரிகுவர் (1)

பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ – கலி 13/24

மேல்


பிரிகோ (1)

யாதனின் பிரிகோ மடந்தை – நற் 166/9

மேல்


பிரித்து (5)

உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் – குறு 305/5
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து
செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து – பரி 5/57,58
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து
திகழ் பொறி பீலி அணி மயில் கொடுத்தோன் – பரி 5/59,60
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த – அகம் 293/11
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி – புறம் 170/1

மேல்


பிரிதல் (16)

அரிதே காதலர் பிரிதல் இன்று செல – நற் 5/7
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர் – நற் 71/6
பிரிதல் சூழான்-மன்னே இனியே – நற் 72/7
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ – நற் 79/6
நன் மலை நாடன் பிரிதல்
என் பயக்கும்மோ நம் விட்டு துறந்தே – ஐங் 268/4,5
பிரிதல் தேற்றா பேர் அன்பினவே – ஐங் 284/4
வீங்கு வளை நெகிழ பிரிதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே – ஐங் 285/4,5
பிரிதல் வல்லுவை ஆயின் – ஐங் 310/3
கொடிதே காதலி பிரிதல்
செல்லல் ஐய என்னாது அவ்வே – ஐங் 332/4,5
பிரிவு அரும் காலையும் பிரிதல்
அரிது வல்லுநர் நம் காதலோரே – ஐங் 338/4,5
பொருள்_வயின் பிரிதல் வேண்டும் என்னும் – கலி 21/4
பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும் – அகம் 10/6
செய்_வினை பிரிதல் எண்ணி கைம்மிக – அகம் 143/1
வினை வயின் பிரிதல் யாவது வணர் சுரி – அகம் 161/1
பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர் – அகம் 223/1
பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் – சிலப்.மது 14/35

மேல்


பிரிதலும் (2)

பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் – கலி 92/8
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும் – அகம் 353/1

மேல்


பிரிதி (1)

பெரும் கல் நாட பிரிதி ஆயின் – அகம் 238/10

மேல்


பிரிதும் (2)

மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே – நற் 46/11
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28

மேல்


பிரிந்த (18)

பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள் – நற் 208/9
வினை_வயின் பிரிந்த வேறுபடு கொள்கை – நற் 214/3
காதலர் பிரிந்த என் குறித்து வருமே – குறு 197/5
பல் நாள் பிரிந்த அறன் இலாளன் – ஐங் 229/2
பெரும் கல் அதர் இடை பிரிந்த_காலை – ஐங் 359/2
நின்_வயின் பிரிந்த நல் இசை கனவினும் – பதி 79/4
பிரிந்த_கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – கலி 25/24
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தக – அகம் 71/10
நில்லா பொருள்_பிணி பிரிந்த நீயே – அகம் 79/17
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல – அகம் 255/7
காதலர் பிரிந்த கையறு மகளிர் – அகம் 294/4
எல்லையும் இரவும் வினை_வயின் பிரிந்த
முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய – அகம் 299/1,2
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் – அகம் 318/14
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே – அகம் 343/19
பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும் – அகம் 378/11
காதலர் பிரிந்த மாதர் நோதக – சிலப்.புகார் 4/58
அரும்_திறல் பிரிந்த அயோத்தி போல – சிலப்.மது 13/65
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும் – சிலப்.வஞ்சி 30/158

மேல்


பிரிந்த_கால் (1)

பிரிந்த_கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – கலி 25/24

மேல்


பிரிந்த_காலை (1)

பெரும் கல் அதர் இடை பிரிந்த_காலை
தவ நனி நெடிய ஆயின இனியே – ஐங் 359/2,3

மேல்


பிரிந்ததற்கே (1)

ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே
அழல் அவிர் மணி பூண் நனைய – ஐங் 232/2,3

மேல்


பிரிந்தவர் (2)

பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர் – கலி 31/4
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம் – கலி 150/8,9

மேல்


பிரிந்தவர்க்கு (1)

பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி – கலி 148/18

மேல்


பிரிந்தன்று (1)

நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய – குறு 237/2

மேல்


பிரிந்தனர் (2)

அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக – நற் 193/7
பனி படு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பல ஆகுபவே – குறு 104/4,5

மேல்


பிரிந்தனன் (2)

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே – ஐங் 18/4
பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே – ஐங் 39/4

மேல்


பிரிந்தனிர் (1)

பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள் – அகம் 319/11

மேல்


பிரிந்தார் (1)

பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல் – சிலப்.புகார் 7/230

மேல்


பிரிந்தார்-கொல்லோ (1)

காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர் – கலி 36/18

மேல்


பிரிந்தாரை (1)

இன் துணை பிரிந்தாரை உடையையோ நீ – கலி 129/15

மேல்


பிரிந்திசினோர் (1)

வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே – அகம் 183/15

மேல்


பிரிந்திசினோர்க்கு (1)

தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே – குறு 35/5

மேல்


பிரிந்திசினோரே (4)

நில்லா பொருள்_பிணி பிரிந்திசினோரே – நற் 241/12
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே
அருவி மா மலை தத்த – குறு 94/5,6
நிலையா பொருள்_பிணி பிரிந்திசினோரே – குறு 350/8
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே – அகம் 197/18

மேல்


பிரிந்திசினோளே (1)

வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே – குறு 336/6

மேல்


பிரிந்தீர் (1)

பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல – கலி 92/62

மேல்


பிரிந்து (41)

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் – திரு 63
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே – நற் 52/7
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே – நற் 337/10
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே – நற் 343/10
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே – நற் 358/12
மெல்லம்புலம்பன் பிரிந்து என – குறு 5/4
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே – குறு 154/8
பிரிந்து உறை காதலர் வர காண்போரே – குறு 344/8
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன் – ஐங் 40/2
மெல்லம்புலம்பன் பிரிந்து என – ஐங் 133/2
துறை கெழு கொண்கன் பிரிந்து என – ஐங் 140/2
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின் – ஐங் 183/3
துறைவன் பிரிந்து என நெகிழ்ந்தன – ஐங் 192/3
நன் மலை நாடன் பிரிந்து என – ஐங் 219/3
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீ – ஐங் 227/4
பாவை அன்ன நின் துணை பிரிந்து வருமே – ஐங் 307/4
முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமே – ஐங் 308/4
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ஐங் 333/5
பிரிந்து உறல் அறியா விருந்து கவவி – ஐங் 419/2
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என – ஐங் 441/2
பாணர் பெரு_மகன் பிரிந்து என – ஐங் 458/3
பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர் – ஐங் 496/3
ஏமம் ஆர்த்த நின் பிரிந்து
மேவல் சான்றன எல்லாம் – பரி 4/34,35
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் – கலி 10/16
பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ – கலி 18/2
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/9
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர் – கலி 28/23
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/24
மெய் பிரிந்து அன்னவர் மாட்டு – கலி 87/4
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே – கலி 121/16
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் – அகம் 13/14
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் – அகம் 55/15
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – அகம் 59/18
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப – அகம் 62/7
அரும் பொருள் நசைஇ பிரிந்து உறை வல்லி – அகம் 191/11
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே – அகம் 271/17
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் – அகம் 337/4
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற – அகம் 389/18
காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா – சிலப்.புகார் 5/189
பிரிந்து உறை காலத்து பரிந்தனள் ஆகி – சிலப்.புகார் 8/102
கூடாது பிரிந்து குலக்கொடி-தன்னுடன் – சிலப்.வஞ்சி 27/60

மேல்


பிரிந்தும் (1)

பிரிந்தும் வாழ்துமோ நாமே – ஐங் 111/4

மேல்


பிரிந்தே (3)

இனிதோ பெரும இன் துணை பிரிந்தே – குறு 363/6
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தே – ஐங் 38/4
மெல்லம்புலம்ப இவள் அழ பிரிந்தே – ஐங் 302/4

மேல்


பிரிந்தோர் (19)

காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து – நெடு 71
பிரிந்தோர் வந்து நம் புணர புணர்ந்தோர் – நற் 79/5
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட – நற் 93/5
தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்றே – நற் 148/3
இன் துணை பிரிந்தோர் நாடி – நற் 208/11
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் – நற் 296/6
பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ – குறு 146/2
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின் – குறு 156/6
தடவின் ஓங்கு சினை கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்து – குறு 160/3,4
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ள – குறு 191/3
வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலை – குறு 391/5,6
காதலர் பிரிந்தோர் கையற நலியும் – ஐங் 223/3
கார் செய் காலையொடு கையற பிரிந்தோர்
தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது – ஐங் 451/1,2
எம் வெம் காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான் பேர் அன்பினனே – ஐங் 475/4,5
இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே – ஐங் 487/1
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி – அகம் 147/13
படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல் – அகம் 301/2
ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர்
புலம் கந்து ஆக இரவலர் செலினே – அகம் 303/7,8
புணர்ந்தோர் பூ அணி அணிய பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப – புறம் 194/3,4

மேல்


பிரிந்தோரே (5)

எள்ளார் அம்ம துணை பிரிந்தோரே – குறு 147/5
கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே – குறு 220/7
அத்த நீள் இடை அழ பிரிந்தோரே – குறு 307/9
பல் இதழ் உண்கண் அழ பிரிந்தோரே – ஐங் 334/5
அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே – அகம் 211/17

மேல்


பிரிந்தோள் (1)

பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21

மேல்


பிரிந்தோன் (1)

காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி – சிலப்.மது 14/52

மேல்


பிரிபு (3)

பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து – மது 740
என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/2
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த – அகம் 41/11

மேல்


பிரிமே (1)

முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமே – ஐங் 308/4

மேல்


பிரிய (5)

பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று – நற் 137/3
இவள் நலம் புலம்ப பிரிய
அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே – ஐங் 57/3,4
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
பிரிய சூழ்தலும் உண்டோ – அகம் 75/22
கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய – சிலப்.மது 13/48

மேல்


பிரியல் (1)

பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/10

மேல்


பிரியலம் (4)

பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/7
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ – ஐங் 235/4
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் – அகம் 1/6
தையல் நின்_வயின் பிரியலம் யாம் என – அகம் 205/3

மேல்


பிரியலர் (1)

பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங் 336/2

மேல்


பிரியலன் (3)

நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் – கலி 21/7
குடி நன் உடையன் கூடுநர் பிரியலன்
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ – அகம் 352/8,9

மேல்


பிரியலன்-மன்னே (1)

பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே – ஐங் 39/4

மேல்


பிரியலென் (1)

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே – ஐங் 18/4

மேல்


பிரியவும் (1)

ஒய்யென பிரியவும் விடாஅன் கவைஇ – குறி 185

மேல்


பிரியற்க (1)

எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே – பரி 23/88

மேல்


பிரியன்-மின் (1)

கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி – கலி 92/61

மேல்


பிரியன்-மினோ (1)

எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/14

மேல்


பிரியா (9)

பிரியா நண்பினர் இருவரும் என்னும் – குறு 302/5
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும் – குறு 330/3
கனவினும் பிரியா உறையுளொடு தண்ணென – பதி 89/15
பிரியா கவி கை புலையன் தன் யாழின் – கலி 95/10
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் – கலி 96/8
பிரியா காதலொடு உழையர் ஆகிய – அகம் 241/4
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே – சிலப்.மது 14/59
பிரியா தருப்பை பிடித்த கையினன் – சிலப்.மது 22/32
காவல் வஞ்சி கடைமுகம் பிரியா
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே – சிலப்.வஞ்சி 25/174,175

மேல்


பிரியாது (5)

பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து – நற் 174/6
அமர் துணை பிரியாது பாத்து உண்டு மாக்கள் – பதி 22/9
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே – பரி 18/56
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது
ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ் – அகம் 51/10,11
கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது
கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம் – சிலப்.வஞ்சி 25/159,160

மேல்


பிரியாமல் (1)

காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல் – சிலப்.புகார் 1/63

மேல்


பிரியாமை (4)

முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/14
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/18
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/22
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் – கலி 133/7,8

மேல்


பிரியாய் (2)

பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர் – ஐங் 308/2
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 33/17

மேல்


பிரியார் (1)

ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும் – குறு 267/6

மேல்


பிரியின் (8)

பிரியின் புணராது புணர்வே ஆயிடை – நற் 16/2
மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென – நற் 38/5
புணரின் புணரும்-மார் எழிலே பிரியின்
மணி மிடை பொன்னின் மாமை சாய என் – நற் 304/5,6
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே – குறு 168/7
உழையின் பிரியின் பிரியும் – கலி 50/23
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது – அகம் 51/10
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே – அகம் 217/20
நொதுமலர் போல பிரியின் கதுமென – அகம் 300/11

மேல்


பிரியினும் (4)

ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/8
பிரியினும் பிரிவது அன்றே – ஐங் 297/3
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என – அகம் 50/12
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும்
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும் – அகம் 353/1,2

மேல்


பிரியுநன் (2)

பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று – அகம் 392/19
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின் – அகம் 392/20

மேல்


பிரியும் (6)

பிரியும் நாளும் பல ஆகுபவே – குறு 104/5
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4
பிரியும்_கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/13
உழையின் பிரியின் பிரியும்
இழை அணி அல்குல் என் தோழியது கவினே – கலி 50/23,24
இன் துணை பிரியும் மடமையோரே – அகம் 43/15
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் – புறம் 175/4

மேல்


பிரியும்_கால் (1)

பிரியும்_கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/13

மேல்


பிரியுமோ (1)

பிணையும் காணிரோ பிரியுமோ அவையே – கலி 20/23

மேல்


பிரிவது (1)

பிரியினும் பிரிவது அன்றே – ஐங் 297/3

மேல்


பிரிவல் (1)

பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் – நற் 262/9

மேல்


பிரிவார் (1)

பொருள்_வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து – குறு 174/5

மேல்


பிரிவித்து (1)

திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/61,62

மேல்


பிரிவின் (1)

குன்ற நாடன் பிரிவின் சென்று – நற் 288/4

மேல்


பிரிவு (19)

பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் – நற் 97/3
பழகிய பகையும் பிரிவு இன்னாதே – நற் 108/6
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் – நற் 237/3
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே – குறு 32/6
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு – குறு 57/3
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல – குறு 134/2
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர – குறு 144/3
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி – குறு 177/6
பசலை பாய பிரிவு தெய்யோ – ஐங் 231/4
பிரிவு அரும் காலையும் பிரிதல் – ஐங் 338/4
குருகு_இனம் நரலும் பிரிவு அரும் காலை – ஐங் 457/2
பிரிவு எண்ணி பொருள்_வயின் சென்ற நம் காதலர் – கலி 11/4
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/9
பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி – கலி 106/16
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால் – கலி 124/18
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 12/4
கனவினும் பிரிவு அறியலனே அதன்_தலை – அகம் 178/20
சாதல் அன்ன பிரிவு அரியோளே – அகம் 339/14
அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி – புறம் 381/7

மேல்


பிரிவும் (1)

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன் பகல் அமையமும் இரவும் போல – அகம் 327/1,2

மேல்


பிரிவோய் (1)

அன்ன பொருள்_வயின் பிரிவோய் நின் இன்று – கலி 21/12

மேல்


பிரிவோர் (3)

வட புல வாடைக்கு பிரிவோர்
மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/11,12
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின் – குறு 20/2
புதல் மலர் மாலையும் பிரிவோர்
இதனினும் கொடிய செய்குவர் அன்னாய் – ஐங் 215/5,6

மேல்


பிருங்கலாதன் (1)

பிருங்கலாதன் பல_பல பிணி பட – பரி 4/12

மேல்


பிலத்தின் (1)

காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – சிலப்.மது 11/140

மேல்


பிலம் (3)

பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு – சிலப்.மது 11/92
ஆங்கு பிலம் புக வேண்டுதிர் ஆயின் – சிலப்.மது 11/104
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – சிலப்.மது 11/153

மேல்


பிலிற்ற (2)

திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே – நற் 380/3,4
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 14/10,11

மேல்


பிழாவில் (1)

மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 276

மேல்


பிழாவும் (1)

ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – சிலப்.புகார் 10/111

மேல்


பிழி (17)

வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 281,282
தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – குறி 155
பிணர் பெண்ணை பிழி மாந்தியும் – பட் 89
இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும் – நற் 38/3
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது – நற் 328/8
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த – பதி 19/23
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும் – பதி 30/12
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி – பதி 81/21
தேம் பிழி நறவின் குறவர் முன்றில் – அகம் 78/7
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என – அகம் 102/2
தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து – அகம் 105/14
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர் – அகம் 122/1
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து – அகம் 172/12
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் – அகம் 295/16
நார் பிழி கொண்ட வெம் கள் தேறல் – புறம் 170/12
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் – புறம் 246/6
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது – புறம் 269/7

மேல்


பிழிந்த (1)

விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு – அகம் 237/12

மேல்


பிழிந்து (1)

நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் – புறம் 114/4

மேல்


பிழியும் (1)

கல்லா வன் பறழ் கை நிறை பிழியும்
மா மலை நாட மருட்கை உடைத்தே – நற் 57/6,7

மேல்


பிழியூஉ (1)

சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ
நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம் – அகம் 8/16,17

மேல்


பிழிவது (1)

பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப – புறம் 373/6

மேல்


பிழிவனம் (1)

பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 60

மேல்


பிழை (10)

பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் – பரி 6/74,75
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/100
கனவின் தொட்டது கை பிழை ஆகாது – பரி 8/103
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான் – பரி 12/60
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின் – பரி 12/61
தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின் – சிலப்.மது 11/177
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என – சிலப்.மது 14/56
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/90
பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/101
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – சிலப்.வஞ்சி 30/195

மேல்


பிழைக்குவது (1)

கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த – அகம் 215/7

மேல்


பிழைத்த (8)

களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி – ஐங் 218/3
புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/2
நின் நகா பிழைத்த தவறோ பெரும – அகம் 156/12
மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள் – சிலப்.மது 21/50
கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – சிலப்.மது 22/103
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – சிலப்.மது 23/132
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு – சிலப்.மது 23/198
தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த
மா பெரும் தானை மன்ன_குமரர் – சிலப்.வஞ்சி 27/179,180

மேல்


பிழைத்தது (3)

நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் – புறம் 43/16
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – சிலப்.மது 20/89
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – சிலப்.மது 23/117

மேல்


பிழைத்தமை (1)

நீ தன் பிழைத்தமை அறிந்து – அகம் 366/15

மேல்


பிழைத்தலின் (1)

களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை – அகம் 221/11

மேல்


பிழைத்தவோ (1)

குடையும் கோலும் பிழைத்தவோ என – சிலப்.வஞ்சி 27/77

மேல்


பிழைத்தனென் (1)

யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள் – புறம் 43/21

மேல்


பிழைத்தாய் (1)

நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – புறம் 43/17

மேல்


பிழைத்தான் (1)

கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான்
அடைக்கலம் இழந்தேன் இடை குல மாக்காள் – சிலப்.வஞ்சி 27/75,76

மேல்


பிழைத்து (2)

பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய – அகம் 118/8
பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – சிலப்.வஞ்சி 30/194

மேல்


பிழைத்தேன் (3)

கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி – கலி 95/28
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/7
இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன்
சிறு முதுகுறைவிக்கு சிறுமையும் செய்தேன் – சிலப்.மது 16/67,68

மேல்


பிழைத்தோர் (1)

தம்மை பிழைத்தோர் பொறுக்கும் செம்மல் – புறம் 43/18

மேல்


பிழைத்தோர்க்கு (2)

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் – சிலப்.புகார் 0/55
செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்தி காலம் உரையீரோ என – சிலப்.புகார் 10/239,240

மேல்


பிழைத்தோன் (1)

இறை முறை பிழைத்தோன் வாயிலோயே – சிலப்.மது 20/38

மேல்


பிழைப்ப (2)

மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் – நற் 11/2,3
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் – நற் 110/4

மேல்


பிழைப்பார் (1)

ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – சிலப்.மது 21/52

மேல்


பிழைப்பின் (1)

புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை – புறம் 237/16,17

மேல்


பிழைப்பு (9)

வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி – மலை 578
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ – நற் 400/6
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி – பதி 15/30
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து – பதி 21/30
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே – கலி 128/20
நசை பிழைப்பு அறியா கழல் தொடி அதிகன் – அகம் 162/18
பெயல் பிழைப்பு அறியா புன்_புலத்ததுவே – புறம் 117/7
இரவிடை கழிதற்கு என் பிழைப்பு அறியாது – சிலப்.மது 13/90
வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது – சிலப்.மது 15/145

மேல்


பிழையல (1)

பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே – அகம் 326/13

மேல்


பிழையலள் (1)

பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28

மேல்


பிழையா (16)

அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் – மது 472
மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507
நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி – மது 646
பிழையா நன் மொழி தேறிய இவட்கே – நற் 10/9
பிழையா வஞ்சினம் செய்த – குறு 318/7
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து – பதி 32/14
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை – அகம் 93/19
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் – அகம் 175/2
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட – அகம் 182/5
அறன் நெறி பிழையா திறன் அறி மன்னர் – அகம் 188/4
பாணி பிழையா மாண் வினை கலி_மா – அகம் 360/11
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற – அகம் 392/25
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர் – புறம் 3/20
பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – சிலப்.புகார் 8/31
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப – சிலப்.மது 11/28
விதி முறை பிழையா விளங்கிய சாதியும் – சிலப்.மது 14/187

மேல்


பிழையாத (1)

பெற்றாரும் பெற்றான் பிழையாத பெண்டிரும் – பரி 24/25

மேல்


பிழையாது (8)

அரசியல் பிழையாது அற நெறி காட்டி – மது 191
பெரியோர் சென்ற அடி வழி பிழையாது
குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 192,193
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 500
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி – பதி 89/12
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து – கலி 99/3,4
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த – கலி 99/6
யாண்டு பல கழிய வேண்டு_வயின் பிழையாது
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி – அகம் 78/19,20
விழவின்று ஆயினும் படு பதம் பிழையாது
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர் – புறம் 96/6,7

மேல்


பிழையாது-மன்னே (1)

பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/9

மேல்


பிழையார் (2)

தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும் – கலி 39/18
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் – கலி 39/19

மேல்


பிழையினை (1)

பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான் – பரி 12/60

மேல்


பிழையேம் (1)

பிழையேம் ஆகிய நாம் இதன் படவே – குறு 263/8

மேல்


பிள்ளை (27)

வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால் – பெரும் 204
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/7
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து – நற் 367/2
பிள்ளை உள்வாய் செரீஇய – குறு 92/4
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி – குறு 107/4
பைதல் பிள்ளை கிளை பயிர்ந்து ஆஅங்கு – குறு 139/4
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர் – ஐங் 24/2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 151/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 152/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 153/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 154/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 155/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 156/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 157/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 158/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 159/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 160/1
அரும் கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட – அகம் 193/8
பிள்ளை எண்கின் மலை வயினானே – அகம் 257/21
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென – அகம் 290/6
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் – அகம் 297/14,15
வளரா பிள்ளை தூவி அன்ன – அகம் 324/4
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய – புறம் 117/8
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின் – புறம் 342/7,8
சிலத்தார் பிள்ளை அம் சிறாஅர் – புறம் 380/12
எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் – புறம் 389/5
பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக – சிலப்.மது 15/54

மேல்


பிள்ளையும் (1)

பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – சிலப்.வஞ்சி 25/53,54

மேல்


பிள்ளையொடு (4)

சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் – நற் 181/5
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால் – நற் 385/5
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் – குறு 46/5
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் – புறம் 342/10

மேல்


பிளக்கும் (1)

முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின் – குறு 388/5

மேல்


பிளந்திட்ட (2)

பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டு – நற் 107/2
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் – அகம் 129/9

மேல்


பிளந்து (12)

தாது அவிழ் அலரி தா சினை பிளந்து
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி – குறி 149,150
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/2,3
பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன் – பதி 41/9
ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு – பரி 2/46
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் – கலி 2/7
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன் – கலி 101/19
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு – அகம் 24/11,12
கரும் கால் மராஅத்து கொழும் கொம்பு பிளந்து
பெரும் பொளி வெண் நார் அழுந்துபட பூட்டி – அகம் 83/5,6
முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட – அகம் 335/7
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற – சிலப்.மது 12/27
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – சிலப்.மது 23/188
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – சிலப்.வஞ்சி 24/58,59

மேல்


பிளவை (1)

முளவு_மா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 176,177

மேல்


பிளிற்றி (1)

செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை – அகம் 40/15

மேல்


பிளிற்றும் (1)

கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்
தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் – ஐங் 55/1,2

மேல்


பிளிற (1)

முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று – பதி 32/3,4

மேல்


பிளிறி (1)

கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162

மேல்


பிளிறு (1)

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236

மேல்


பிளிறும் (2)

பெரும் களிறு பிளிறும் சோலை அவர் – நற் 222/9
வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும்
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் – பதி 41/13,14

மேல்


பிற்பகல் (1)

பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் – சிலப்.மது 21/4

மேல்


பிற்பட (9)

உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் – மலை 357,358
மான் ஏறு உகளும் கானம் பிற்பட
வினை நலம் படீஇ வருதும் அ வரை – குறு 256/3,4
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள – அகம் 118/5,6
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட
வேட்டம் போகிய குறவன் காட்ட – அகம் 182/5,6
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் – அகம் 184/6,7
கடல் போல் கானம் பிற்பட பிறர் போல் – அகம் 199/13
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட
பழு மரம் உள்ளிய பறவை போல – புறம் 370/10,11
விண் தோய் தலைய குன்றம் பிற்பட
வந்தனென் யானே – புறம் 379/13,14
நீடு நிலை மலயம் பிற்பட சென்று ஆங்கு – சிலப்.மது 23/66

மேல்


பிற்படார் (1)

ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் – பரி 12/42,43

மேல்


பிற்படு (1)

பிற்படு பூசலின் வழிவழி ஓடி – அகம் 7/15

மேல்


பிற்பாடு (2)

பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி – சிலப்.மது 13/1,2
எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு
விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின் – சிலப்.மது 15/182,183

மேல்


பிற்றை (3)

முற்றையும் உடையமோ மற்றே பிற்றை
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல் – நற் 374/5,6
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி – நற் 376/9,10
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே – புறம் 183/2

மேல்


பிற (18)

பிற_பிறவும் நனி விரைஇ – பட் 181
பெரும் துடி கறங்க பிற புலம் புக்கு அவர் – நற் 77/2
பிற புல துணையோடு உறை புலத்து அல்கி – நற் 181/2
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி – நற் 183/2
துறைவன் சொல்லோ பிற ஆயினவே – குறு 316/8
துறைவன் சொல்லோ பிற ஆயினவே – ஐங் 162/4
களிறு பிடி தழீஇ பிற புலம் படராது – ஐங் 305/1
அரி மான் வழங்கும் சாரல் பிற மான் – பதி 12/5
பிற தொழின பின்_பின் தொடர – பரி 22/20
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என – கலி 69/14
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என – கலி 69/18
நன்று தீது என்று பிற
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் – கலி 142/50,51
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை – புறம் 126/16
அரிசி வேண்டினெம் ஆக தான் பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி – புறம் 140/5,6
பிற பால் என மடுத்தலின் – புறம் 346/1
பல பிற வாழ்த்த இருந்தோர்_தம் கோன் – புறம் 387/16
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் – புறம் 393/5
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு – சிலப்.புகார் 10/266

மேல்


பிற_பிறவும் (1)

பிற_பிறவும் நனி விரைஇ – பட் 181

மேல்


பிறக்க (1)

யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப – பரி 21/35,36

மேல்


பிறக்கி (1)

சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும் – பொரு 243

மேல்


பிறக்கிட்டு (1)

பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – சிலப்.மது 11/182

மேல்


பிறக்கிட (1)

பெருநாள் அமயம் பிறக்கிட கொடுத்து – சிலப்.வஞ்சி 27/44

மேல்


பிறக்கிடுவது (1)

நிலம் பிறக்கிடுவது போல குளம்பு குடையூஉ – புறம் 303/1

மேல்


பிறக்கு (13)

துறை பிறக்கு ஒழிய போகி கறை அடி – பெரும் 351
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய – முல் 101
நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கு இட்டு – மது 562
கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய – நற் 121/10
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – நற் 306/2
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய – ஐங் 385/2
பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள் – பதி 80/8
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை – அகம் 104/13
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய – அகம் 331/8
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/15
கை கொண்டு பிறக்கு நோக்காது – புறம் 363/13
அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய – சிலப்.புகார் 5/95
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி – சிலப்.வஞ்சி 30/215

மேல்


பிறக்கும் (1)

தாய் சா பிறக்கும் புள்ளி களவனொடு – ஐங் 24/1

மேல்


பிறக்கே (2)

மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன் – நற் 98/6
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே – புறம் 71/19

மேல்


பிறங்க (2)

படு பிணம் பிறங்க பாழ் பல செய்து – பதி 49/13
படு பிணம் பிறங்க நூறி பகைவர் – பதி 69/9

மேல்


பிறங்கடை (1)

முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர் – பெரும் 30

மேல்


பிறங்கடையே (1)

கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே – புறம் 392/21

மேல்


பிறங்கல் (20)

கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே – நற் 28/9
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/8
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/8
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/5
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – ஐங் 387/6
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான் – பரி 19/59
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய – பரி 21/46
எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது – அகம் 8/13
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல்
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து – அகம் 17/15,16
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமை கண் இடை புரைஇ – அகம் 152/22,23
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 185/13
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 247/13
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 249/19
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/17
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/17
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அகம் 393/1
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய – அகம் 399/16,17
விண்டு அனைய விண் தோய் பிறங்கல்
முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர – புறம் 391/2,3

மேல்


பிறங்கி (1)

சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து – கலி 146/16

மேல்


பிறங்கிய (8)

மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல் – மது 429
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் – நற் 209/4
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூ கமழ் கூந்தல் கொடிச்சி – ஐங் 290/2,3
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி – பதி 64/3,4
தேம் கமழ் நெடு வரை பிறங்கிய
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 141/28,29
மரம் பிறங்கிய நளி சிலம்பின் – புறம் 136/12
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை – புறம் 314/3
பிறங்கிய முத்தரை முப்பத்து_இரு காழ் – சிலப்.புகார் 6/87

மேல்


பிறங்கு (34)

பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் – சிறு 90
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை – குறி 208
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி – பட் 285
மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – மலை 111
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே – நற் 62/10
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – நற் 96/5
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய – குறு 66/2
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ் – குறு 214/2
பிறங்கு மலை அரும் சுரம் இறந்தவர் படர்ந்து – குறு 329/4
இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலை – ஐங் 316/3
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே – ஐங் 395/6
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி – பதி 45/12
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் – பதி 53/4
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆரிடை – கலி 20/21
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து – கலி 30/15
பிறங்கு இரும் சோலை நன் மலை நாடன் – கலி 42/4
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக – கலி 144/46
பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம் – கலி 150/9
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 67/10
கல் பிறங்கு அத்தம் போகி – அகம் 79/16
கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன் – அகம் 118/1
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – அகம் 126/20
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 131/11
கல் பிறங்கு ஆரிடை விலங்கிய – அகம் 205/23
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி – அகம் 243/6
பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே – புறம் 49/6
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே – புறம் 69/12
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின் – புறம் 148/1
பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசை – புறம் 158/4
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய – புறம் 232/5
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் – புறம் 321/6
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா – புறம் 342/13
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு – புறம் 369/15
புறஞ்சிறை பொழிலும் பிறங்கு நீர் பண்ணையும் – சிலப்.மது 14/1

மேல்


பிறங்கும் (1)

தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/9

மேல்


பிறசார் (1)

களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் – பரி 23/27,28

மேல்


பிறத்தல் (2)

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் – புறம் 27/12
மன்பதை காக்கும் நன் குடி பிறத்தல்
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – சிலப்.வஞ்சி 25/103,104

மேல்


பிறத்தல்லே (1)

தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே – குறு 45/5

மேல்


பிறத்தலும் (1)

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 30/139,140

மேல்


பிறந்த (37)

வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த
புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 137,138
வட_மலை பிறந்த மணியும் பொன்னும் – பட் 187
குட மலை பிறந்த ஆரமும் அகிலும் – பட் 188
குட மலை பிறந்த தண் பெரும் காவிரி – மலை 527
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/12
முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி – ஐங் 395/1
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி – பரி 14/15
பிறந்த ஞான்றே நின்னை உட்கி – பரி 14/25
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை – பரி 19/58
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப – பரி 30/7,8
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/18
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய் – கலி 137/12
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி 150/2
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும் – அகம் 13/1
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி – அகம் 143/6
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் – புறம் 2/9
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து – புறம் 53/9
தன் மலை பிறந்த தா இல் நன் பொன் – புறம் 152/28
வசை இல் விழு திணை பிறந்த
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே – புறம் 159/27,28
ஒரு குடி பிறந்த பல்லோருள்ளும் – புறம் 183/5
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என – புறம் 222/3
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே – புறம் 349/7
சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி – புறம் 376/3
வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து – சிலப்.புகார் 4/37
தென் மலை பிறந்த சந்தனம் மறுக – சிலப்.புகார் 4/38
குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு – சிலப்.புகார் 10/106
பிறந்த பிறப்பில் காணாயோ நீ – சிலப்.மது 11/157
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/89
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த
வில் தொழில் வேடர் குலனே குலனும் – சிலப்.மது 12/89,90
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/93
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த
எய் வில் எயினர் குலனே குலனும் – சிலப்.மது 12/93,94
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/97
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த
வேய் வில் எயினர் குலனே குலனும் – சிலப்.மது 12/97,98
மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன் – சிலப்.மது 21/35
வீயா திருவின் விழு குடி பிறந்த
தாய வேந்தர்-தம்முள் பகையுற – சிலப்.மது 23/143,144
முது குடி பிறந்த முதிரா செல்வியை – சிலப்.வஞ்சி 25/133
பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று – சிலப்.வஞ்சி 27/94

மேல்


பிறந்ததன் (1)

பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான் – அகம் 219/8

மேல்


பிறந்தவர் (1)

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் – சிலப்.வஞ்சி 30/139

மேல்


பிறந்தன்று (1)

இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ – குறு 307/3

மேல்


பிறந்தனென் (1)

அழித்து பிறந்தனென் ஆகி அ வழி – புறம் 383/16

மேல்


பிறந்து (6)

பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன் – பொரு 137
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை – பெரும் 11
நின் மலை பிறந்து நின் கடல் மண்டும் – பதி 48/13
வேற்றுமை இல்லா விழு திணை பிறந்து
வீற்றிருந்தோரை எண்ணும்_காலை – புறம் 27/3,4
நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த – புறம் 38/10
வட பேர் இமய மலையில் பிறந்து
கடு வரல் கங்கை புனல் ஆடி போந்த – சிலப்.வஞ்சி 29/68,69

மேல்


பிறந்தேன் (1)

மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன்
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் – சிலப்.மது 21/35,36

மேல்


பிறந்தோய் (1)

மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7

மேல்


பிறந்தோயே (1)

இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே – புறம் 164/13

மேல்


பிறந்தோர்க்கு (4)

இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என – புறம் 43/19
ஒழுக்கொடு புணர்ந்த இ விழு குடி பிறந்தோர்க்கு
இழுக்கம் தாராது இதுவும் கேட்டி – சிலப்.மது 23/40,41
இறை குடி பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை – சிலப்.மது 23/53
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று – சிலப்.வஞ்சி 25/124,125

மேல்


பிறந்தோன் (1)

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த – பரி 30/7

மேல்


பிறந்தோனும் (1)

தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும் – பரி 3/13

மேல்


பிறப்ப (6)

கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து – அகம் 79/2
எயிறு தீ பிறப்ப திருகி – அகம் 217/19
கனை எரி பிறப்ப ஊதும் – அகம் 305/15
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப
இ நிலை வாரார் ஆயின் தம் நிலை – அகம் 314/12,13
விசும்பு தீ பிறப்ப திருகி பசும் கொடி – புறம் 37/3
காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – சிலப்.மது 14/122

மேல்


பிறப்பர் (1)

போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – சிலப்.புகார் 9/62

மேல்


பிறப்பாளனை (1)

ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – சிலப்.மது 15/48,49

மேல்


பிறப்பித்தோர் (1)

பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே – பரி 3/72

மேல்


பிறப்பில் (7)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – சிலப்.புகார் 0/46
பிறப்பில் குன்றா பெரும் தோள் மடந்தை – சிலப்.புகார் 3/6
பொய்த்தாய் பழம் பிறப்பில் போய் கெடுக உய்த்து – சிலப்.புகார் 9/56
பிறந்த பிறப்பில் காணாயோ நீ – சிலப்.மது 11/157
பண்டை பிறப்பில் குரங்கின் சிறு கை – சிலப்.மது 15/186
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – சிலப்.மது 23/152
போய பிறப்பில் பொருந்திய காதலின் – சிலப்.வஞ்சி 30/133

மேல்


பிறப்பின் (3)

நூல் அமை பிறப்பின் நீல உத்தி – அகம் 400/5
மாறி பிறப்பின் இன்மையும் கூடும் – புறம் 214/10
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் – சிலப்.மது 11/156

மேல்


பிறப்பினர் (1)

ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய் – சிலப்.வஞ்சி 30/68

மேல்


பிறப்பினும் (4)

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/13
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/16
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/19
குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார் – புறம் 74/1,2

மேல்


பிறப்பினுள் (1)

பிறப்பினுள் இழிபு ஆகலும் – பரி 5/20

மேல்


பிறப்பு (14)

பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால் – நற் 328/4
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின் – நற் 397/8
பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே – பரி 3/72
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து – பரி 14/27
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி – கலி 60/28
இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கே – கலி 94/28
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும் – புறம் 183/3
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் – சிலப்.புகார் 2/40
அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் – சிலப்.புகார் 10/241
பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர் – சிலப்.மது 11/101
குரவர் பணி அன்றியும் குல_பிறப்பு_ஆட்டியோடு – சிலப்.மது 13/89
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 25/56
பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று – சிலப்.வஞ்சி 27/94
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் – சிலப்.வஞ்சி 30/97

மேல்


பிறர் (88)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 174
அம் செவி நிறைய ஆலின வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு – முல் 89,90
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் – குறி 10
பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 222
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும் – நற் 27/6
கொடிச்சி கையகத்ததுவே பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே – நற் 95/9,10
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – நற் 216/11
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11
பிறர் பிறர் அறிதல் யாவது – நற் 331/11
பிறர் பிறர் அறிதல் யாவது – நற் 331/11
பிறர் பிறர் அறிய கூறல் – குறு 175/6
பிறர் பிறர் அறிய கூறல் – குறு 175/6
வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றி – குறு 182/3
துன்னலம் பெரும பிறர் தோய்ந்த மார்பே – ஐங் 63/4
பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது – பதி 22/7
பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது – பதி 22/7
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் – பதி 24/6
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே – பதி 25/13
களைநர் யார் இனி பிறர் என பேணி – பதி 40/7
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/3
பிறர் நசை அறியா வயங்கு செம் நாவின் – பதி 79/5
பிறர் உடம்படுவாரா – பரி 2/66
பிரியும்_கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/13
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ – கலி 15/18
மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம் – கலி 43/18
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி – கலி 44/10
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி – கலி 44/16
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/28
பொய்தல மகளையாய் பிறர் மனை பாடி நீ – கலி 59/16
நோக்கும்_கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார் – கலி 63/1
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/11
பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின் – கலி 77/11
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல் – கலி 78/17
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/10
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது – கலி 111/17,18
யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் – கலி 116/10
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை – கலி 132/19
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலி 133/12
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/2
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/19
பிறர் தந்து நிறுக்குவள் ஆயின் – அகம் 28/13
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே – அகம் 33/20
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் என – அகம் 61/2
கடல் போல் கானம் பிற்பட பிறர் போல் – அகம் 199/13
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து – அகம் 303/1
நனி பிறர் அறிய சாஅய நாளும் – அகம் 359/2
பிறர் உறு விழுமம் பிறரும் நோப – அகம் 382/1
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே – புறம் 7/13
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே – புறம் 10/2
இன்னா ஆக பிறர் மண் கொண்டு – புறம் 12/4
பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு – புறம் 20/13
பின் பிறர் இசை நுவலாமை – புறம் 22/32
நீயே பிறர் ஓம்பு_உறு மற மன் எயில் – புறம் 40/1
பிறர் என குணம் கொல்லாது – புறம் 55/14
நீயே பிறர் நாடு கொள்ளும்_காலை அவர் நாட்டு – புறம் 57/5
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே – புறம் 58/32
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர்
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே – புறம் 71/18,19
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் – புறம் 112/2
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே – புறம் 141/15
படை மடம்படான் பிறர் படை மயக்கு_உறினே – புறம் 142/6
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே – புறம் 150/24
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே – புறம் 150/24
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும் – புறம் 156/1
பிறர் கையறவு தான் நாணுதலும் – புறம் 157/2
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி – புறம் 182/4
தீதும் நன்றும் பிறர் தர வாரா – புறம் 192/2
வாடிய பசியர் ஆகி பிறர்
நாடு படு செலவினர் ஆயினர் இனியே – புறம் 240/13,14
இடம் பிறர் கொள்ளா சிறு வழி – புறம் 260/27
பிறர் மனை புகுவள்-கொல்லோ – புறம் 293/5
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து – புறம் 294/4
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர் – புறம் 332/1
நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரே – புறம் 363/6
நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/8
பிறர் கூறிய மொழி தெரியா – புறம் 366/9
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின் – புறம் 373/33
தனக்கு உவமம் பிறர் இல் என – புறம் 377/11
பிறர் பாடி பெறல் வேண்டேம் – புறம் 382/6
வென்ற தேர் பிறர் வேத்தவையானே – புறம் 382/22
பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே – புறம் 383/17
அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே – புறம் 395/32
செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன் – புறம் 399/14
சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு – சிலப்.புகார் 5/38
அறைபோகு அமைச்சர் பிறர் மனை நயப்போர் – சிலப்.புகார் 5/130
பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – சிலப்.புகார் 7/98
பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – சிலப்.மது 12/165
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – சிலப்.வஞ்சி 30/195

மேல்


பிறர்_பிறர் (2)

பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது – பதி 22/7
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே – புறம் 150/24

மேல்


பிறர்_பிறர்க்கு (1)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 174

மேல்


பிறர்க்கு (20)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 174
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு – நற் 186/8
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு – பதி 73/2
பிரிந்த_கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – கலி 25/24
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா – கலி 62/7
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு – கலி 68/1
நீ எவன் செய்தி பிறர்க்கு
யாம் எவன் செய்தும் நினக்கு – கலி 108/50,51
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – அகம் 54/13
பிறர்க்கு தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட – புறம் 47/7
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/8
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் – புறம் 136/20
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என – புறம் 136/21
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே – புறம் 182/9
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று – புறம் 235/19
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே – புறம் 342/6
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி – புறம் 363/2
பிறர்க்கு உவமம் தான் அல்லது – புறம் 377/10
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் – சிலப்.புகார் 1/33

மேல்


பிறர்க்கும் (6)

பிறர்க்கும் அனையையால் வாழி நீயே – ஐங் 58/4
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும் – பதி 20/21
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/11
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின் – புறம் 161/8
பிறர்க்கும் அன்ன அற தகையன்னே – புறம் 171/11
எமக்கும் பிறர்க்கும்
யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனே – புறம் 317/6,7

மேல்


பிறரும் (21)

கண்ணுள்_வினைஞரும் பிறரும் கூடி – மது 518
கொழும் குடி செல்வரும் பிறரும் மேஎய – மது 577
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என – மது 746,747
அவரும் பிறரும் துவன்றி – மது 777
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து – குறு 86/3
ஓரும் அலைக்கும் அன்னை பிறரும்
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் – குறு 246/5,6
எம்மும் பிறரும் அறியான் – ஐங் 26/3
யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும்
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என – பதி 73/17,18
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து – பதி 75/4
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த – பரி 5/63
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் – பரி 8/8
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் – கலி 84/33
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியா தொன் முறை மரபின் – அகம் 0/12,13
பிறரும் ஒருத்தியை நம் மனை தந்து – அகம் 46/9
தாமும் பிறரும் உளர் போல் சேறல் – அகம் 336/15
பிறர் உறு விழுமம் பிறரும் நோப – அகம் 382/1
வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும்
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த – புறம் 71/14,15
பிறரும் சான்றோர் சென்ற நெறி என – புறம் 134/3
பாடி வருநரும் பிறரும் கூடி – புறம் 158/18
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர் – புறம் 229/13
யாமும் பிறரும் வாழ்த்த நாளும் – புறம் 396/29

மேல்


பிறரே (2)

பலரே மன்ற இ உலகத்து பிறரே – குறு 44/4
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரே – புறம் 294/9

மேல்


பிறரை (1)

பிறரை தான் இரப்பு அறியலன் – புறம் 239/8

மேல்


பிறவலர் (1)

எம்மனோர் இவண் பிறவலர் மாதோ – புறம் 210/4

மேல்


பிறவா (6)

பிறவா வெண்ணெய் உருப்பிடத்து அன்ன – நற் 84/7
பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே – பரி 3/72
மலையிடை பிறவா மணியே என்கோ – சிலப்.புகார் 2/77
அலையிடை பிறவா அமிழ்தே என்கோ – சிலப்.புகார் 2/78
யாழ்-இடை பிறவா இசையே என்கோ – சிலப்.புகார் 2/79
பிறவா யாக்கை பெரியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/169

மேல்


பிறவார் (1)

மாறி பிறவார் ஆயினும் இமயத்து – புறம் 214/11

மேல்


பிறவி (1)

போதார் பிறவி பொதி_அறையோர் என – சிலப்.புகார் 10/191

மேல்


பிறவியர் (1)

பண்டை பிறவியர் ஆகுவர் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/60

மேல்


பிறவியை (1)

ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியை
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் – பரி 5/12,13

மேல்


பிறவும் (37)

திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும்
தீம் பல் தாரம் முனையின் சேம்பின் – பெரும் 360,361
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும்
விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில் – பெரும் 475,476
இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும்
பல் வேறு தாரமொடு கல்_அகத்து ஈண்டி – மது 289,290
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு – மது 504,505
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன் சோறு தருநர் பல் வயின் நுகர – மது 534,535
அம் மென் குரும்பை காய் படுபு பிறவும்
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப – மது 683,684
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளி கடி மரபின ஊழ்_ஊழ் வாங்கி – குறி 43,44
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன் – குறி 95,96
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர் – குறி 259,260
பிற_பிறவும் நனி விரைஇ – பட் 181
தமவும் பிறவும் ஒப்ப நாடி – பட் 209
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப – மலை 11,12
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு – பதி 15/16,17
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து – பதி 22/3
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும்
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து – பதி 30/29,30
பண் அமை முழவும் பதலையும் பிறவும்
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி – பதி 41/3,4
கல் மிசையவ்வும் கடலவும் பிறவும்
அருப்பம் அமைஇய அமர் கடந்து உருத்த – பதி 50/12,13
சால்பும் செம்மையும் உளப்பட பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறைபோகிய – பதி 74/19,20
அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும் – பரி 2/58
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏமம் ஆர்த்த நின் பிரிந்து – பரி 4/33,34
கால் வழக்கு அறு நிலை குன்றமும் பிறவும்
அவ்வவை மேவிய வேறு_வேறு பெயரோய் – பரி 4/68,69
பிணிமுகம் உளப்பட பிறவும் ஏந்தி – பரி 8/101
இனைய பிறவும் இவை போல்வனவும் – பரி 23/57
அன்ன பிறவும் பெருமான் அவள் வயின் – கலி 82/31
சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு – கலி 85/12
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் – கலி 85/17
தேறின் பிறவும் தவறு இலேன் யான் – கலி 90/20
மணி புரை உருவின காயாவும் பிறவும்
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன் – கலி 101/5,6
அன்னவை பிறவும் பன் மலர் துதைய – கலி 102/4
பொரு வரும் பண்பினவ்வையும் பிறவும்
உருவ பல் கொண்மூ குழீஇயவை போல – கலி 104/15,16
கால முன்பின் பிறவும் சால – கலி 105/19
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி – அகம் 225/2,3
வெம் கதிர் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவர_தகுந புள்ளு குரல் இயம்பவும் – புறம் 41/6,7
நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை – புறம் 46/1,2
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே – புறம் 189/6
கோலும் குந்தமும் வேலும் பிறவும்
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – சிலப்.மது 15/216,217
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்
ஆரிய மன்னர் அழகுற அமைத்த – சிலப்.வஞ்சி 27/21,22

மேல்


பிறவும்-மார் (1)

இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/10

மேல்


பிறவொடும் (1)

நெய் குடை தயிரின் நுரையொடும் பிறவொடும்
எ வயினானும் மீது_மீது அழியும் – பரி 16/3,4

மேல்


பிறவோ (1)

ஆயனை அல்லை பிறவோ அமரருள் – கலி 108/12

மேல்


பிறவோர் (1)

பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – சிலப்.வஞ்சி 30/194

மேல்


பிறழ் (5)

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 47
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி – பெரும் 215
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் – அகம் 207/6
தொடி பிறழ் முன்கை இளையோள் – புறம் 350/10
பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல் – புறம் 356/2

மேல்


பிறழ்தரும் (1)

பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என – கலி 3/14

மேல்


பிறழ்ந்து (1)

பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான் – பரி 19/59

மேல்


பிறழ்நவும் (1)

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்
ஏறு பொருத செறு உழாது வித்துநவும் – பதி 13/1,2

மேல்


பிறழ்வது-மன்னோ (1)

பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/9

மேல்


பிறழ (8)

வாளை வாளின் பிறழ நாளும் – நற் 390/1
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர – பதி 50/8
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/10
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ
பயில் இதழ் மலர் உண்கண் – கலி 103/59,60
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி – அகம் 84/11
கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ
எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர் – புறம் 249/2,3
கழுநீர் பிணையல் முழுநெறி பிறழ
தாரும் மாலையும் மயங்கி கையற்று – சிலப்.புகார் 2/34,35
குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/165

மேல்


பிறழவும் (1)

வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
விலைஞர் குரம்பை மா ஈண்டவும் – பட் 197,198

மேல்


பிறழா (5)

பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் – சிலப்.புகார் 10/47
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை – சிலப்.புகார் 10/162
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை – சிலப்.மது 14/130
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா
கட களிறு அடக்கிய கருணை மறவ – சிலப்.மது 15/52,53
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் – சிலப்.வஞ்சி 26/87

மேல்


பிறழிய (2)

திரை பிறழிய இரும் பௌவத்து – பொரு 178
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை – புறம் 287/8

மேல்


பிறழினும் (3)

வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக – மது 108,109
நிலம் புடைபெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்கு திரை பெரும் கடற்கு எல்லை தோன்றினும் – குறு 373/1,2
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம் புனை ஓடை அண்ணல் யானை – புறம் 287/4,5

மேல்


பிறழும் (9)

செ வரி கயலொடு பச்சிறா பிறழும்
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 270,271
வாளை பிறழும் ஊரற்கு நாளை – நற் 310/4
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என் – நற் 340/8,9
இரும் சுவல் வாளை பிறழும் ஊர – நற் 400/4
அலவன் தாக்க துறை இறா பிறழும்
இன் ஒலி தொண்டி அற்றே – ஐங் 179/2,3
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக – கலி 98/15
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் – அகம் 356/4
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண் – புறம் 322/8
கரும் கயல் பிறழும் காமர் செவ்வியின் – சிலப்.வஞ்சி 28/23

மேல்


பிறள் (4)

என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் – கலி 9/6
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து_அணிந்து – அகம் 35/11
இன்னும் பிறள்_வயினானே மனையோள் – அகம் 186/13
சென்று பிறள் ஆகிய அளவை என்றும் – அகம் 189/10

மேல்


பிறள்_வயினானே (1)

இன்னும் பிறள்_வயினானே மனையோள் – அகம் 186/13

மேல்


பிறன் (9)

ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர் – கலி 84/17
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும் – அகம் 155/2
மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே – அகம் 396/10
பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே – புறம் 68/19
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு – புறம் 217/3
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை – புறம் 385/3
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – சிலப்.புகார் 0/26
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு – சிலப்.மது 21/3

மேல்


பிறிது (52)

மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/9
பிணி பிறிது ஆக கூறுவர் – நற் 117/10
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே – நற் 117/11
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே – நற் 130/12
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/11
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/9
பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர் – நற் 318/6
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை – நற் 322/2
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/11
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி – நற் 368/8
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – நற் 397/4
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின் – நற் 397/8
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே – குறு 68/4
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே – குறு 152/3
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே – குறு 195/7
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/4
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே – குறு 298/8
குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று – குறு 318/4
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று – குறு 334/5
பிறிது ஒன்றாக கூறும் – ஐங் 110/4
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய் – ஐங் 216/6
போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் – ஐங் 325/2
வாடிய நுதலள் ஆகி பிறிது நினைந்து – ஐங் 478/2
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/14
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத – பரி 9/48
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு – பரி 23/64,65
மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய் – கலி 60/21
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என – கலி 69/10
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும் – கலி 77/1
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை – கலி 105/62
கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று – கலி 142/24
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்_வயின் – அகம் 32/14
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது என – அகம் 98/28
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி – அகம் 110/3
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி – அகம் 135/5
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் – அகம் 138/4
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/14
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு – அகம் 151/4,5
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே – அகம் 170/3
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால் – அகம் 300/12
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என – அகம் 313/1
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் – புறம் 14/15
பிறிது சென்று மலர் தாயத்து – புறம் 17/22
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே – புறம் 20/9
தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என் – புறம் 150/3
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என – புறம் 150/19
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் – புறம் 165/13
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என – புறம் 307/12
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர் – புறம் 320/4
ஆழும்_காலை புணை பிறிது இல்லை – புறம் 367/11
பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல் – சிலப்.புகார் 2/64
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் – சிலப்.புகார் 4/50

மேல்


பிறிதும் (4)

பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே – குறு 17/4
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/92
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு – கலி 78/6
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர் – புறம் 394/14

மேல்


பிறை (40)

அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் – பொரு 25
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை – பெரும் 11
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய் – பெரும் 412
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் – நற் 120/7
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே – நற் 167/11
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் – நற் 250/7
பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின் – நற் 263/1
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி – குறு 189/3
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என – குறு 226/2
இளம் பிறை அன்ன கோட்ட கேழல் – ஐங் 264/1
பிறை நுதல் குறு_மகள் போகிய சுரனே – ஐங் 371/5
இலங்கு நிலவின் இளம் பிறை போல – ஐங் 443/2
பிறை வளர் நிறை மதி உண்டி – பரி 3/52
பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் – பரி 24/30
பிறை புரை நுதல் அவர் பேணி நம் – கலி 45/23
பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவா_கால் – கலி 53/15
பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம் – கலி 67/19
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை – கலி 99/10
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறை கண் – கலி 103/25
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் – கலி 104/11
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக – கலி 120/7
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா_கால் – கலி 124/8
பிறை ஏர் சுடர் நுதல் பசலை – கலி 125/23
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று – அகம் 0/9
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை – அகம் 115/13
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் – அகம் 136/21
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ – அகம் 207/13
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் – அகம் 239/9
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி – அகம் 322/10
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை – புறம் 1/9
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை
பதினெண்_கணனும் ஏத்தவும் படுமே – புறம் 1/9,10
பிறை நுதலான் செறல் நோக்கின – புறம் 22/3
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல – புறம் 55/5
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி – புறம் 91/5
புது பிறை அன்ன சுதை செய் மாடத்து – புறம் 378/6
அந்தி வானத்து வெண் பிறை தோன்றி – சிலப்.புகார் 4/23
பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய – சிலப்.மது 11/72
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர் – சிலப்.மது 22/87
அந்தி செக்கர் வெண் பிறை தோன்ற – சிலப்.வஞ்சி 27/146
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க – சிலப்.வஞ்சி 27/147

மேல்


பிறையின் (2)

குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 193,194
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு – குறு 178/5

மேல்


பிறையுடன் (1)

செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் – சிலப்.மது 12/155

மேல்


பிறையும் (2)

ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று – கலி 55/9
சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி – சிலப்.மது 23/1

மேல்


பிறையுள் (1)

பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன் – கலி 81/3

மேல்


பிறையே (1)

இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ – குறு 307/3

மேல்


பிறையை (1)

கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று – கலி 142/24

மேல்


பின் (105)

காலின் ஏழ் அடி பின் சென்று கோலின் – பொரு 166
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின்
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு – சிறு 248,249
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை – பெரும் 11
கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர – முல் 15
அடி ஒதுங்கி பின் பெயரா – மது 37
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 408
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 137
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 60
பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து – நற் 113/8
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ – நற் 227/4
எல்லை சென்ற பின் மலரும் கூம்பின – நற் 385/1
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ – குறு 253/4
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப – குறு 374/2,3
முன்_நாள் இனியது ஆகி பின் நாள் – குறு 394/4
பின் நினைந்து இரங்கி பெயர்தந்தேனே – ஐங் 118/4
இனிய செய்த நின்று பின்
முனிவு செய்த இவள் தட மென் தோளே – ஐங் 143/2,3
பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே – ஐங் 173/4
பின் இரும் கூந்தல் நன் நுதல் குற_மகள் – ஐங் 285/1
பின் இரும் கூந்தல் மலர் அணிந்தோரே – ஐங் 294/5
பேதை நெஞ்சம் பின் செல சென்றோர் – ஐங் 334/3
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி – ஐங் 351/3
பின் இரும் கூந்தல் நன் நலம் புனைய – ஐங் 495/3
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து – பதி 68/11
ஞாயிறு காயா நளி மாரி பின் குளத்து – பரி 11/76
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ – பரி 11/111
நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறை – பரி 12/53
பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் – பரி 19/89
உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/26
பிற தொழின பின்_பின் தொடர – பரி 22/20
பிற தொழின பின்_பின் தொடர – பரி 22/20
கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்
புல்லென்ற களம் போல புலம்பு கொண்டு அமைவாளோ – கலி 5/10,11
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – கலி 11/9
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/24
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின்
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற – கலி 34/2,3
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/5
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின்
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன் – கலி 53/8,9
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்_கண் – கலி 64/2
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 94/29
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும் – கலி 105/7
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி – கலி 105/37
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/9
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே – கலி 126/13
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே – கலி 126/17
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா – கலி 129/4,5
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின்
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று – கலி 143/1,2
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே – கலி 143/17
பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய் – அகம் 3/13
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து – அகம் 9/14
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி – அகம் 9/22
எம்மொடு இறத்தலும் செல்லாய் பின் நின்று – அகம் 19/6
இன் நகை இருக்கை பின் யான் வினவலின் – அகம் 86/26
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என – அகம் 129/1
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே – அகம் 178/22
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் – அகம் 181/2
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
செய்து பின் இரங்கா வினையொடு – அகம் 268/13
பின் ஆகும்மே முன்னியது முடித்தல் – அகம் 286/12
உட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது – அகம் 325/5
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப – அகம் 351/2
பின் பிறர் இசை நுவலாமை – புறம் 22/32
வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே – புறம் 80/4
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர – புறம் 109/16
முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே – புறம் 132/1
மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய – புறம் 138/2
குன்றும் மலையும் பல பின் ஒழிய – புறம் 208/1
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என – புறம் 222/3
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று – புறம் 262/4
உண்டு இனிது இருந்த பின்
தருகுவன் மாதோ – புறம் 328/12,13
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின்
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை – புறம் 342/8,9
குரல் குரலாக தற்கிழமை திரிந்த பின்
முன்னதன் வகையே முறைமையின் திரிந்து-ஆங்கு – சிலப்.புகார் 3/85,86
பின் வழி நின்றது முழவே முழவொடு – சிலப்.புகார் 3/141
ஏவலன் பின் பாணி யாது என – சிலப்.புகார் 7/17
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – சிலப்.புகார் 7/39
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின்
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/116,117
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – சிலப்.புகார் 9/29
பன்னிரு மதியம் படர் நோய் உழந்த பின்
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என – சிலப்.புகார் 10/243,244
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை – சிலப்.மது 11/137
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர – சிலப்.மது 12/39
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல – சிலப்.மது 15/55
செய் வினை தவிசில் செல்வன் இருந்த பின்
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் – சிலப்.மது 16/37,38
நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – சிலப்.மது 16/106
தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின்
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – சிலப்.மது 16/126,127
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – சிலப்.மது 21/12
யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – சிலப்.மது 23/19
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/163,164
கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது – சிலப்.மது 23/179
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/193,194
வாடா வஞ்சி மா நகர் புக்க பின்
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 25/180,181
அறை பறை எழுந்த பின் அரிமான் ஏந்திய – சிலப்.வஞ்சி 26/1
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 26/166
பின் தேர் குரவை பேய் ஆடு பறந்தலை – சிலப்.வஞ்சி 26/241
கடவுள் பத்தினி கல் கால்கொண்ட பின்
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 27/2,3
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/114
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின்
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது – சிலப்.வஞ்சி 28/82,83
ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/96
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் – சிலப்.வஞ்சி 28/199
வஞ்சினம் வாய்த்த பின் அல்லதை யாவதும் – சிலப்.வஞ்சி 28/214
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – சிலப்.வஞ்சி 29/36
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த – சிலப்.வஞ்சி 29/79
கடவுள் கோலம் கட்புலம் புக்க பின்
தேவந்திகையை செவ்விதின் நோக்கி – சிலப்.வஞ்சி 30/2,3
தலைக்கோல் ஆசான் பின் உளன் ஆக – சிலப்.வஞ்சி 30/20
அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்த பின்
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – சிலப்.வஞ்சி 30/37,38
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – சிலப்.வஞ்சி 30/38
வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின்
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து – சிலப்.வஞ்சி 30/170,171

மேல்


பின்_நாள் (1)

கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள்
கண்ணகி-தன் கோட்டத்து – சிலப்.வஞ்சி 29/36,37

மேல்


பின்_பின் (1)

பிற தொழின பின்_பின் தொடர – பரி 22/20

மேல்


பின்_அகம் (1)

பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி – அகம் 9/22

மேல்


பின்பகல் (2)

பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/11
பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன் – சிலப்.மது 22/29

மேல்


பின்பட (1)

இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை – புறம் 31/3

மேல்


பின்பனி (2)

பின்பனி அமையம் வரும் என முன்பனி – நற் 224/2
பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம் – குறு 338/5

மேல்


பின்பு (1)

படப்பு ஒடுங்கும்மே பின்பு
ஊரே மனையோள் – புறம் 334/4,5

மேல்


பின்வந்து (1)

வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய – பதி 88/13

மேல்


பின்றா (1)

பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/144

மேல்


பின்றை (39)

காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 52,53
அதன் முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்து – பொரு 102
முரண் தலை கழிந்த பின்றை மறிய – பெரும் 147
வன்_புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 206
பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப – பெரும் 238
நாடு பல கழிந்த பின்றை நீடு குலை – பெரும் 371
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை
பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் – மது 404,405
முந்தை யாமம் சென்ற பின்றை
பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து – மது 620,621
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை
விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழி – மலை 538,539
நின் குறை முடித்த பின்றை என் குறை – நற் 102/3
இளமை கழிந்த பின்றை வளமை – நற் 126/9
ஆடிய இள மழை பின்றை
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே – நற் 229/10,11
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரை முதிர் தேனின் போகியோனே – குறு 176/3,4
குன்று கெழு நன் நாட்டு சென்ற பின்றை
நேர் இறை பணை தோள் ஞெகிழ – ஐங் 239/3,4
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ – பதி 12/20,21
வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய – அகம் 37/14
வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும் – அகம் 40/13
கொன்றை அம் குழலர் பின்றை தூங்க – அகம் 54/11
வதுவை கூடிய பின்றை புதுவது – அகம் 70/8
வதுவை நன் மணம் கழிந்த பின்றை
கல்லென் சும்மையர் ஞெரேரென புகுதந்து – அகம் 86/17,18
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த – அகம் 155/13,14
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல் – அகம் 225/7
வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு – அகம் 236/4,5
துள்ளு பெயல் கழிந்த பின்றை புகை உற – அகம் 294/2
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு – அகம் 318/12,13
அள்ளனை பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு – அகம் 325/8,9
உறை கழிந்து உலந்த பின்றை பொறைய – அகம் 345/14
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்பட தழீஇ – அகம் 352/5,6
இளையர் அருந்த பின்றை நீயும் – அகம் 394/7
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர் – புறம் 29/6
நீ அவன் கண்ட பின்றை பூவின் – புறம் 69/19
எழுவர் மாய்ந்த பின்றை அழிவர – புறம் 158/17
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே – புறம் 242/5,6
ஒன்றிரு முறை இருந்து உண்ட பின்றை
உவலை கண்ணி துடியன் வந்து என – புறம் 269/5,6
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு – புறம் 360/17
சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி – புறம் 376/3
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை
சேயை ஆயினும் இவணை ஆயினும் – புறம் 381/18,19
வந்த வாரம் வழி மயங்கிய பின்றை
ஆறும் நாலும் அ முறை போக்கி – சிலப்.புகார் 3/153,154
பின்னையும் அ முறை பேரிய பின்றை
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – சிலப்.புகார் 3/156,157

மேல்


பின்றையும் (1)

பின்றையும் அ வழி பெயர்ந்து செல் வழிநாள் – சிலப்.மது 11/165

மேல்


பின்றையை (1)

பின்றையை பாட்டு எடுப்பாள் – சிலப்.மது 17/81

மேல்


பின்னது (1)

குண கடல் பின்னது ஆக குட கடல் – புறம் 31/13

மேல்


பின்னர் (20)

தொன் முது கடவுள் பின்னர் மேய – மது 41
முன்னோன் முறை_முறை காட்ட பின்னர்
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 177,178
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள் – குறி 174
தட்டை தண்ணுமை பின்னர் இயவர் – ஐங் 215/3
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்
பிணையும் காணிரோ பிரியுமோ அவையே – கலி 20/22,23
மண்ணிய பின்னர் மாலை அணிந்து – சிலப்.புகார் 3/122
அந்தர கொட்டுடன் அடங்கிய பின்னர்
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து – சிலப்.புகார் 3/147,148
காவிரி நாடும் காட்டி பின்னர்
பூ விரி படப்பை புகார் மருங்கு எய்தி – சிலப்.புகார் 6/31,32
வான் ஊர் மதியமும் பாடி பின்னர்
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 6/37,38
ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர்
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – சிலப்.புகார் 7/250,251
துறை போய் அவர் முடிந்த பின்னர் இறையோனும் – சிலப்.புகார் 9/30
மறை முது முதல்வன் பின்னர் மேய – சிலப்.மது 12/164
பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர்
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி – சிலப்.மது 13/29,30
வாலாமை நாள் நீங்கிய பின்னர்
மா முது கணிகையர் மாதவி மகட்கு – சிலப்.மது 15/24,25
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர்
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப – சிலப்.வஞ்சி 26/91,92
ஆங்கு அவர் வாழ்த்தி போந்ததன் பின்னர்
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/104,105
ஆங்கு அவர் ஏகிய பின்னர் மன்னிய – சிலப்.வஞ்சி 26/172
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு – சிலப்.வஞ்சி 27/159,160
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர்
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 28/79,80
நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர்
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/85,86

மேல்


பின்னரும் (1)

ஆங்கனம் பாடிய ஆய்_இழை பின்னரும்
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – சிலப்.புகார் 7/221,222

மேல்


பின்னரே (1)

பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய – சிலப்.புகார் 9/64

மேல்


பின்னல் (1)

குட வாய் கொடி பின்னல் வாங்கி தளரும் – கலி 83/9

மேல்


பின்னவும் (1)

முன்னவும் பின்னவும் முறை_முறை தர_தர – அகம் 86/10

மேல்


பின்னள் (1)

வளை கை விறலி என் பின்னள் ஆக – புறம் 135/4

மேல்


பின்னி (1)

பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379

மேல்


பின்னிய (3)

பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ – கலி 15/18
இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை – கலி 32/15,16
காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய
தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து – சிலப்.புகார் 6/89,90

மேல்


பின்னிலை (6)

பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம் – நற் 140/9
பின்னிலை முனியா நம்_வயின் – நற் 349/9
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது – அகம் 44/5
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே – அகம் 126/22
பின்னிலை முனியான் ஆகி நன்றும் – அகம் 392/5
முன்னிலை ஈயாள் பின்னிலை தோன்றி – சிலப்.மது 23/16

மேல்


பின்னின் (1)

மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்_கண் – கலி 64/2

மேல்


பின்னின்_கண் (1)

மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்_கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி – கலி 64/2,3

மேல்


பின்னின்று (1)

பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா – அகம் 77/3

மேல்


பின்னு (9)

பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – சிறு 191
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே – நற் 51/7
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் – குறு 246/6
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ – குறு 353/6
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால – கலி 59/8
பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என – அகம் 150/1
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள் – அகம் 158/4
பின்னு புறம் தாழ கொன்னே சூட்டி – அகம் 180/7
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே – அகம் 234/18

மேல்


பின்னும் (14)

உள்ளம் பின்னும் தன் உழையதுவே – குறு 142/5
பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும்
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி – பதி 18/7,8
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய – பதி 53/12
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் – பரி 6/83
பின்னும் மலர் கண் புனல் – பரி 10/99
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும்
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின் – பரி 11/131,132
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் – அகம் 68/8
ஆடிய பின்னும் வாடிய மேனி – அகம் 98/23
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி – புறம் 171/2,3
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவு ஆனாவே கலி கொள் புள்_இனம் – புறம் 199/2,3
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும்
ஒழித்த தாயும் அவர்க்கு உரித்தன்றே – புறம் 213/10,11
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/17,18
அழல் வாய் புக்க பின்னும்
பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே – புறம் 360/20,21
ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும்
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/130,131

மேல்


பின்னுவிட (1)

வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிட
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல் – அகம் 117/13,14

மேல்


பின்னே (5)

தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே – குறு 306/6
இளமையும் தருவதோ இறந்த பின்னே – கலி 15/26
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே – அகம் 19/19
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே – அகம் 327/19
தனித்தலை பெரும் காடு முன்னிய பின்னே – புறம் 250/9

மேல்


பின்னை (4)

பின்னை மறத்தோடு அரிய கல் செத்து – புறம் 379/4
பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார் – சிலப்.மது 17/59
தொழுனை துறைவனோடு ஆடிய பின்னை
அணி நிறம் பாடுகேம் யாம் – சிலப்.மது 17/91,92
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/111

மேல்


பின்னை-தான் (1)

பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – சிலப்.மது 17/69

மேல்


பின்னையும் (2)

பின்னையும் அ முறை பேரிய பின்றை – சிலப்.புகார் 3/156
பின்னையும் அல்_இடை பெயர்ந்தனர் – சிலப்.மது 13/136

மேல்


பின்னையொடும் (1)

மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும்
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – சிலப்.மது 17/113,114

மேல்


பின்னொடு (2)

பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் – கலி 125/17
பின்னொடு முடித்த மண்ணா முச்சி – அகம் 73/1

மேல்


பின்னோர் (1)

அரைசர் பின்னோர் அக_நகர் மருங்கின் நின் – சிலப்.மது 15/109

மேல்


பின்னோர்க்கு (2)

தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் – சிலப்.மது 14/21,22
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் – சிலப்.மது 16/44

மேல்


பினறீ (1)

கான மலைத்தரை கொன்று மணல பினறீ
வான மலைத்த – பரி 22/13,14

மேல்