மோ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோக்கலும் 1
மோக்கின்றான் 1
மோக்கும் 2
மோக 3
மோகத்தால் 1
மோகத்தின் 1
மோகத்துக்கு 1
மோகத்தை 1
மோகம் 3
மோகனை 1
மோகூர் 4
மோசி 1
மோசை 1
மோட்ட 1
மோட்டின் 1
மோட்டு 14
மோடி 1
மோடு 1
மோத 5
மோதகம் 1
மோதரன் 3
மோதல் 1
மோதி 4
மோதிரம் 8
மோதினன் 1
மோதினார் 1
மோதினாள் 2
மோதினான் 2
மோது 2
மோதுகின்றில 1
மோதும் 4
மோதுற்று 1
மோந்தவன் 1
மோந்தனன் 1
மோந்தாள் 1
மோந்திட 1
மோந்து 5
மோய் 3
மோயினள் 1
மோயினன் 1
மோயினை 1
மோயை 2
மோர் 4
மோரியர் 4
மோரோடமொடு 1
மோரோடமோடு 1
மோரோடு 1
மோலி 14
மோலியான் 2
மோலியின் 1
மோவாய் 3
மோழை 1
மோழைமை 1
மோனம் 1
மோனமும் 1
மோனரும் 1
மோனியாய் 1

மோக்கலும் (1)

விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/8

மேல்


மோக்கின்றான் (1)

மூக்கினால் உச்சி முறைமுறையே மோக்கின்றான் – கம்.ஆரண்:13 102/4

மேல்


மோக்கும் (2)

மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர் – கம்.சுந்:4 67/1
முறிக்கும் மூர்ச்சிக்கும் மோக்கும் முயங்குமால் – கம்.யுத்3:29 32/2

மேல்


மோக (3)

மோக வெம் துயர் சிறிது ஆறி முன்னியே – கம்.ஆரண்:13 52/2
மோக வென்றி-மேல் முயல்வின் வைகிட – கம்.கிட்:3 53/3
மோக மா படை ஒன்று உளது அயன் முதல் வகுத்தது – கம்.யுத்4:32 23/1

மேல்


மோகத்தால் (1)

இறக்கையும் சிலர் ஏகலும் மோகத்தால்
பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை – கம்.யுத்4:41 76/1,2

மேல்


மோகத்தின் (1)

மோகத்தின் பட முடித்தவர் மாயையின் முதல்வர் – கம்.யுத்3:30 10/3

மேல்


மோகத்துக்கு (1)

மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம்-கொலோ – கம்.ஆரண்:6 77/4

மேல்


மோகத்தை (1)

மூடு வெம் சின மோகத்தை நீக்கலும் முனிந்தான் – கம்.யுத்4:32 25/2

மேல்


மோகம் (3)

மோகம் படைத்தான் உளைவு எய்த முகத்து எறிந்தான் – கம்.ஆரண்:13 34/4
மோகம் உற்றனர் ஆம் என முறைமுறை முனிந்தார் – கம்.சுந்:7 46/2
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – கம்.யுத்2:19 84/2

மேல்


மோகனை (1)

மோகனை என்பது முந்தி முயன்றாள் – கம்.ஆரண்:14 58/1

மேல்


மோகூர் (4)

பழையன் மோகூர் அவை_அகம் விளங்க – மது 508
மோகூர் மன்னன் முரசம் கொண்டு – பதி 44/14
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/8,9
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமையின் பகை தலைவந்த – அகம் 251/10,11

மேல்


மோசி (1)

மோசி பாடிய ஆயும் ஆர்வம்-உற்று – புறம் 158/13

மேல்


மோசை (1)

மெல் விரல் மோசை போல காந்தள் – நற் 188/4

மேல்


மோட்ட (1)

பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – கலி 131/38

மேல்


மோட்டின் (1)

புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை அம்மா – கம்.ஆரண்:15 44/4

மேல்


மோட்டு (14)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 50,51
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு – பெரும் 458,459
மோட்டு எருமை முழு_குழவி – பட் 14
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் – நற் 124/5
நிலவு குவித்து அன்ன மோட்டு மணல் இடி_கரை – நற் 159/3
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் – பரி 20/30
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப – அகம் 5/10
மோட்டு மணல் அடைகரை கோட்டு_மீன் கெண்டி – அகம் 10/11
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை – அகம் 130/4
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் – அகம் 196/2
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை – அகம் 246/1
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி – அகம் 374/12
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை – புறம் 399/5
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி – கம்.பால:9 11/3

மேல்


மோடி (1)

மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – கம்.யுத்2:19 220/3

மேல்


மோடு (1)

மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி – கம்.கிட்:7 74/1

மேல்


மோத (5)

ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத – கம்.ஆரண்:13 2/4
மோத இளைத்தே தாள் உலைவு உற்றேன் விறல் மொய்ம்பீர் – கம்.கிட்:17 5/4
மோதினன் மோத முனிந்தார் – கம்.சுந்:13 49/3
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும் – கம்.யுத்2:19 197/1,2
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத
வெய்யவன் தன் கை தண்டால் விலக்கினான் விலக்கலோடும் – கம்.யுத்3:22 134/2,3

மேல்


மோதகம் (1)

கவவொடு பிடித்த வகை அமை மோதகம்
தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க – மது 626,627

மேல்


மோதரன் (3)

மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – கம்.யுத்2:17 2/2
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – கம்.யுத்4:35 1/2
மோதரன் முடிந்த வண்ணம் மூ-வகை உலகத்தோடும் – கம்.யுத்4:37 16/1

மேல்


மோதல் (1)

மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால் – கம்.யுத்1:6 43/1

மேல்


மோதி (4)

மத்திகை மாலையா மோதி அவையத்து – பரி 20/61
மோதி வெண் திரை வர முட வெண் தாழை மேல் – கம்.யுத்1:4 28/2
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான் – கம்.யுத்2:18 240/4
மூ-வகை உலகமும் கண்கள் மோதி நின்று – கம்.யுத்4:40 81/2

மேல்


மோதிரம் (8)

மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/21
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் – கலி 84/23
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கம்.கிட்:13 73/2
ஆண்தகை-தன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் – கம்.சுந்:4 68/3
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள் – கம்.சுந்:14 41/3
நன்று எனா அவன் மோதிரம் கை கொடு நடந்தான் – கம்.யுத்4:41 43/4
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும் – கம்.யுத்4:41 87/1
மோதிரம் வாங்கி தன் முகத்தின்-மேல் அணைத்து – கம்.யுத்4:41 89/1

மேல்


மோதினன் (1)

மோதினன் மோத முனிந்தார் – கம்.சுந்:13 49/3

மேல்


மோதினார் (1)

மோதினார் கணத்தின் முன்னே முழுவதும் முருக்கி முற்ற – கம்.யுத்3:27 86/2

மேல்


மோதினாள் (2)

கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமல கால்கள் – கம்.யுத்2:17 32/1
சினத்தின் அலைப்பாள் என கண்ணை சிதைய கையால் மோதினாள் – கம்.யுத்3:23 7/4

மேல்


மோதினான் (2)

கையின் மோதினான் காலனே ஆனான் – கம்.கிட்:15 6/4
முடித்தும் என்று ஒரு கைக்கொடு மோதினான்
குடித்து உமிழ்ந்து என கக்க குருதியே – கம்.யுத்2:15 76/3,4

மேல்


மோது (2)

மோது மத்திகை மென் முலை மேல் பட – கம்.பால:10 78/2
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான் – கம்.அயோ:14 137/2

மேல்


மோதுகின்றில (1)

மோதுகின்றில பேரி முழா விழா – கம்.அயோ:11 22/3

மேல்


மோதும் (4)

மோதும் கடலிற்கிடை முந்து பிறந்த போதே – கம்.ஆரண்:10 135/2
தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்றி – கம்.யுத்2:16 174/4
உற்று மோதும் உதைக்கும் உறுக்குமால் – கம்.யுத்2:19 140/3
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட – கம்.யுத்3:30 32/4

மேல்


மோதுற்று (1)

மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான் – கம்.யுத்1:3 103/1

மேல்


மோந்தவன் (1)

பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – கம்.யுத்1:5 41/4

மேல்


மோந்தனன் (1)

விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்
நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு – கலி 54/8,9

மேல்


மோந்தாள் (1)

கைக்கொண்டு மோந்தாள் உயிர்ப்பு உண்டு கரிந்தது அன்றே – கம்.பால:17 20/4

மேல்


மோந்திட (1)

மோந்திட நறு மலர் ஆன மொய்ம்பினில் – கம்.கிட்:6 8/1

மேல்


மோந்து (5)

திறந்து மோந்து அன்ன சிறந்து கமழ் நாற்றத்து – மது 567
ஒருவனை தழுவிநின்று உச்சி மோந்து தன் – கம்.பால:24 43/3
புல்லி மோந்து பொழிந்த கண்ணீரினன் – கம்.ஆரண்:4 35/2
ஒற்றும் மோந்து உள் உருகும் உழைக்குமால் – கம்.யுத்3:29 29/3
கழுவினன் உச்சி மோந்து கன்று காண் கறவை அன்னான் – கம்.யுத்4:41 117/4

மேல்


மோய் (3)

ஆரண மறையோன் எந்தை அருந்ததி கற்பின் எம் மோய்
தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல் – கம்.ஆரண்:6 43/1,2
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – கம்.சுந்:14 28/4
என உரைத்து திரிசடையாள் எம் மோய்
மனவினில் சுடர் மா முக மாட்சியாள் – கம்.யுத்4:40 18/1,2

மேல்


மோயினள் (1)

மோயினள் உயிர்த்த-காலை மா மலர் – அகம் 5/24

மேல்


மோயினன் (1)

முடியை மோயினன் நின்றுழி முளரி அம் கண்ணன் – கம்.யுத்4:41 37/2

மேல்


மோயினை (1)

மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா – கம்.யுத்4:40 98/2

மேல்


மோயை (2)

தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பால் செல்ல – கம்.யுத்1:3 163/4
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – கம்.யுத்4:38 10/2

மேல்


மோர் (4)

நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 160
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து – பெரும் 306
இன் புளி கலந்து மா மோர் ஆக – மலை 179
நீர் உலையாக ஏற்றி மோர் இன்று – புறம் 159/11

மேல்


மோரியர் (4)

விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதர குறைத்த – அகம் 69/10,11
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த – அகம் 251/12,13
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு – அகம் 281/8,9
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்
திண் கதிர் திகிரி திரிதர குறைத்த – புறம் 175/6,7

மேல்


மோரோடமொடு (1)

நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய – நற் 337/5

மேல்


மோரோடமோடு (1)

பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா – ஐங் 93/2

மேல்


மோரோடு (1)

மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும் – கலி 109/7

மேல்


மோலி (14)

எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – கம்.பால:5 33/3,4
இந்து_மோலி அன்னானும் இரங்கினான் – கம்.அயோ:14 1/3
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய – கம்.சுந்:2 205/1,2
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற தான் பெற்ற – கம்.யுத்1:4 133/3
சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை – கம்.யுத்1:4 133/4
இளையவன் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான் – கம்.யுத்1:4 142/4
தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக்கொண்டான் – கம்.யுத்1:4 144/4
விண்ணினை இடறும் மோலி விசும்பினை நிறைக்கும் மேனி – கம்.யுத்2:16 53/1
எல்லை குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அ – கம்.யுத்2:19 246/3
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி – கம்.யுத்3:27 11/3
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி
செவ்விதின் துளக்கி மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி – கம்.யுத்3:27 171/1,2
மின்னும் மோலி இயற்கைய வீடணன் – கம்.யுத்4:40 25/2
துள்ளின களிப்ப மோலி சூடினான் கடலின் வந்த – கம்.யுத்4:42 17/3
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி – கம்.யுத்4:42 18/4

மேல்


மோலியான் (2)

சுழி படு கங்கை அம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ வேறுதான் உண்டோ – கம்.பால:7 19/1,2
தோட்டு அலர் இன மலர் தொங்கல் மோலியான்
வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை – கம்.சுந்:7 60/2,3

மேல்


மோலியின் (1)

மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட – கம்.யுத்3:30 32/4

மேல்


மோவாய் (3)

முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை – நற் 211/5
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை – அகம் 133/2
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு – புறம் 257/3,4

மேல்


மோழை (1)

மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட – கம்.சுந்:6 60/1

மேல்


மோழைமை (1)

கூழை உளர்ந்து மோழைமை கூறவும் – அகம் 207/15

மேல்


மோனம் (1)

மோனம் ஆகி இருந்தனன் முற்றினான் – கம்.யுத்1:9 49/2

மேல்


மோனமும் (1)

மோனமும் பாழ்பட முடிவு இலா முரண் – கம்.யுத்3:27 61/2

மேல்


மோனரும் (1)

முண்டரும் மோனரும் முதலினோர்கள் அ – கம்.ஆரண்:3 3/2

மேல்


மோனியாய் (1)

வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன் மோனியாய்
போர் தொழில் குமரனும் தொழுது போந்த பின் – கம்.பால:8 32/1,2

மேல்