புறநானூறு 151 – 175

  
# 151 பெருந்தலை சாத்தனார்#151 பெருந்தலை சாத்தனார்
பண்டும்_பண்டும் பாடுநர் உவப்பமுன்பெல்லாம், பாடும் புலவர்கள் மகிழ்ச்சிகொள்ள,
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன்வானளாவிய உச்சியையுடைய சிறந்த மலைப்பக்கத்து வழியாகத்
கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்துதன் தலைவன் நெடுந்தொலைவுக்குச் சென்றால், நகைகளை அணிந்துகொண்டு
புன் தலை மட பிடி பரிசில் ஆகபுன்மையான தலையையுடைய மென்மையான பெண்யானையைப் பரிசிலாகப்
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்                5பெண்களும் தம் தரத்தில் கொடுக்கும் வளமான புகழ் பொருந்திய
கண்டீரக்கோன் ஆகலின் நன்றும்கண்டீரக்கோன் என்பதனால் பெரிதும்
முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர்தழுவிக்கொள்ளுதலை மேற்கொண்டேன் நான், பொன்னால்செய்யப்பட்ட தேரையுடைய
நன்னன் மருகன் அன்றியும் நீயும்நன்னனின் மரபில் வந்தவனாதலால் நீயும்
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழிதழுவிக்கொள்ளுவதற்குப் பொருத்தமானவனே! தெளிவான சொற்களையுடைய
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை               10பாடுவார்க்குக் கதவை அடைத்த காரணமாக, தவழ்கின்ற மேகங்கள்
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும்தெய்வங்கள் இருக்கும் பக்க மலையில் மழையைப் பொழியும் உம்முடைய
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரேமணங்கமழும் உயர்ந்த மலையைப் பாடுதலை விலக்கினார் எம் போன்ற புலவர்கள்.
  
# 152 வன்பரணர்#152 வன்பரணர்
வேழம் வீழ்த்த விழு தொடை பகழியானையைக் கொன்று வீழ்த்திய சிறப்பாகத் தொடுக்கப்பட்ட அம்பு
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇபிளந்த வாயையுடைய புலியை இறக்கச் செய்து
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலைதுளையையுடைய கொம்பைக் கொண்ட புள்ளிமானை உருளச்செய்து, உரல் போன்ற தலையையுடைய
கேழல் பன்றி வீழ அயலதுகேழலாகிய பன்றியை வீழ்த்தி, அருகிலிருக்கும்
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்               5ஆழமான புற்றில் இருக்கும் உடும்பில் தைத்து நிற்கும்
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்வலிய வில்லின் வேட்டையை வெற்றிகரமாக முடித்தவன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும்புகழ் பொருந்திய சிறப்பினையுடைய அம்புத்தொழிலில் முழு நிறைவு பெற்ற
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன்கொலையாளி யாரோ? கொலையாளியாக இருப்பினும் இவன்
விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன்விலைக்காகக் கொன்றவன் போல் தெரியவில்லை, செல்வம் மிக உடையவன்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்                10முத்துமாலை தாழ்ந்து கிடக்கும் அழகிய பரந்த மார்பினையுடையவன்,
சாரல் அருவி பய மலை கிழவன்மலைச் சாரலில் அருவியையுடைய பயன் மிகத் தரும் மலைக்கு உரிமையாளன்,
ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோஓரியாய் இருப்பானோ? இல்லை, அவன் அல்லவோ?
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்பாடுவேன் விறலியே ஒரு பாட்டு, நீங்களும்
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின்முழா இனிது ஒலிக்க அதன் முகப்பில் சாந்து பூசுங்கள், யாழில் பண்ணை நிறுவுங்கள்
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின்       15கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றுத் துதிக்கை போன்ற பெருவங்கியத்தை ஊதுங்கள்,
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின்எல்லரி என்ற சல்லியைத் தட்டுங்கள், ஆகுளி என்ற சிறுபறையை அறையுங்கள்,
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்பதலையின் ஒரு பக்கத்தை மெல்லெனத் தட்டுங்கள்,
மதலை மா கோல் கைவலம் தமின் என்றுஇசைப் புலமைக்குச் சான்றாக அமையும் கோலை என் கையில் தாருங்கள் என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகிதலைவனாதலால் இவ்வாறு சொல்லிக்கொண்டு அணுகி
மூவேழ் துறையும் முறையுளி கழிப்பி                20இருபத்தொரு பாடல் துறையும் முறையால் பாடி முடித்து
கோ என பெயரிய_காலை ஆங்கு அதுவேந்தனே என்று அவனது பெயரைச் சொன்னபோது, அங்கே அது
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம்தன் பெயராதலால் நாணமடைந்து, பின்னர் நாங்கள்
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்நாடுநாடாகச் சென்று வருகிறோம், இங்கு ஒரு
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் எனவேட்டுவரும் இல்லை உன்னைப் போன்றவர்கள் என்று
வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்   25நாங்கள் விரும்பியதைக் கூறவும், அதனைக் கூறவிடாமல், வேட்டையில்
தான் உயிர் செகுத்த மான் நிண புழுக்கோடுதான் எய்து கொன்ற மானின் வேகவைத்த நிணத்தையுடைய தசையுடன்
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கிபசுவின் நெய்யை உருக்கினாற் போன்ற மதுவைத் தந்து
தன் மலை பிறந்த தா இல் நன் பொன்தன்னுடைய மலையில் கிடைத்த மாசில்லாத நல்ல பொன்னைப்
பல் மணி குவையொடும் விரைஇ கொண்ம் எனபல மணிக் குவியல்களுடன் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று
சுரத்து இடை நல்கியோனே விடர் சிமை                30காட்டு வழியில் எமக்குத் தந்தான் குகைகளையும் சிகரங்களையும் கொண்ட
ஓங்கு இரும் கொல்லி பொருநன்உயர்ந்த பெரிய கொல்லிமலைக்குத் தலைவன்
ஓம்பா ஈகை விறல் வெய்யோனேதனக்கென வைத்துக்கொள்ளாத ஈகைக்குணமுடைய, வெற்றியையே எப்போதும் விரும்புபவன்
  
# 153 வன்பரணர்# 153 வன்பரணர்
மழை அணி குன்றத்து கிழவன் நாளும்மேகங்கள் சுழ்ந்த மலைக்குத் தலைவன், நாள்தோறும்
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்அணிகலன்களை அணிந்த யானைகளை இரப்போர்க்குக் கொடுக்கும்
சுடர்விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன்கைஒளி விடுகின்ற பசும்பொன்னால் செய்த பூண்களையும், கடகம் அணிந்த முன்கையினையும் உடைய
அடு போர் ஆனா ஆதன் ஓரிகொல்லும் போரைச் செய்து அமையாத ஆதன் ஓரியின்
மாரி வண் கொடை காணிய நன்றும்             5மழை போன்ற வளப்பமான கொடையைக் காண எண்ணி, மிகுதியாகச்
சென்றது-மன் எம் கண்ணுள் அம் கடும்பேசென்றது எமது கூத்தர்களைக் கொண்ட சுற்றம்;
பனி நீர் பூவா மணி மிடை குவளைகுளிர்ந்த நீரில் பூக்காத மணிகள் கலந்த (பொன்னால் செய்த) குவளையையும்
வால் நார் தொடுத்த கண்ணியும் கலனும்வெள்ளிக்கம்பியால் தொடுக்கப்பட்ட பொன்னரி மாலையையும், பிற அணிகலன்களையும்
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கியானைக் கூட்டத்துடன் பெற்றவர்களாய் அந்த இடத்தை விட்டு நீங்கி
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி                10பசிக்காதவராய் ஆகிவிட்டதனாலோ என்னவோ, வாரால் இழுத்துக்கட்டப்பட்ட
கூடு கொள் இன் இயம் கறங்கபல கருவிகள் கூடிய இனிய வாத்தியங்கள் முழங்க
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தேஆடவும் இயலாதவர் ஆயினார், தம் பாடலையும் மறந்து
  
# 154 மோசிகீரனார்# 154 மோசிகீரனார்
திரை பொரு முந்நீர் கரை நணி செலினும்அலைகள் வந்து மோதும் கடலின் கரையை ஒட்டிச் சென்றாலும்
அறியுநர் காணின் வேட்கை நீக்கும்தெரிந்தவரைக் கண்டால் தாகத்தை நீக்கும்
சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல்சிறிதளவு நீர் கேட்பர் மாந்தர், அது போல்
அரசர் உழையர் ஆகவும் புரை தபுஅரசர் பலர் அருகிலே இருந்தாலும், குற்றமற்ற
வள்ளியோர் படர்குவர் புலவர் அதனால்               5வள்ளல்களையே எண்ணிச் செல்வார்கள் புலவர், அதனால்
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன்நானும் பெற்ற ஊதியத்தைப் பார்த்து, இதனால் என்ன பயன் என்று இகழமாட்டேன்,
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனேவறுமையுற்றதால் உன்னை நினைத்து வந்தேன்,
ஈ என இரத்தலோ அரிதே நீ அதுஎனக்குக் கொடுப்பாய் என்று இரந்துவேண்டுவது எனக்குக் கடினமான செயல், நீ அந்தப் பரிசிலைக்
நல்கினும் நல்காய் ஆயினும் வெல் போர்கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் வெல்லுகின்ற போரில்
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை             10வீசப்படும் ஆயுதத்துக்குத் தப்பி ஓடாத ஆண்மையையும், வெள்ளைத் துணியின்
தூ விரி கடுப்ப துவன்றி மீமிசைதூய விரிப்பைப் போன்று நிறைவாக, உச்சியிலிருந்து
தண் பல இழிதரும் அருவி நின்பலவாய்க் கொட்டும் குளிர்ந்த அருவியையுடைய உனது
கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதேகொண்பெருங்கானத்தையும் பாடுவது எனக்கு எளிது.
  
# 155 மோசி கீரனார்# 155 மோசி கீரனார்
வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇவளைந்த தண்டையுடைய சிறிய யாழை, வாடிப்போன இடுப்பில் தழுவிக்கொண்டு
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க எனஅறிந்தவர் யார் என் பசித்துன்பத்தைப் போக்க என்று
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின்நயமாகக் கேட்கும் பாணனே! இப்போது கேள்!
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூபாழடைந்த ஊரில் முளைத்த நெருஞ்சியின் பொன்னிறப்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு               5எழுகின்ற கதிரவனை எதிர்கண்டது போல 
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்வறுமையுற்ற புலவரின் கவிழ்த்துப்போட்ட உண்கலங்கள், புகழ் விளங்கும்
கொண்பெரும்கானத்து கிழவன்கொண்பெரும் கானத்துத் தலைவனின்
தண் தார் அகலம் நோக்கின மலர்ந்தேகுளிர்ந்த மாலையணிந்த மார்பினை மலர்ந்து நோக்கின.
  
# 156 மோசிகீரனார்# 156 மோசிகீரனார்
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும்வள்ளன்மை, வலிமை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றனைக் கொண்டிருக்கும் பிறர் மலைகள், எந்நாளும்
இரண்டு நன்கு உடைத்தே கொண்பெரும்கானம்இரண்டையும் நன்றாகப் பெற்றிருக்கும் கொண்பெருங்கானம்,
நச்சி சென்ற இரவலர் சுட்டிவிரும்பிச் சென்ற இரவலர் வேண்டும் என குறித்துக் கூறி
தொடுத்து உண கிடப்பினும் கிடக்கும் அஃதான்றுவளைத்து உண்ணுமாறு கிடந்தாலும் கிடக்கும், அது அல்லாமல்
நிறை அரும் தானை வேந்தரை                 5நிறுத்தற்கரிய படையையுடைய வேந்தரிடம்
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தேகப்பத்தை வாங்கிக்கொண்டு அவர்களை வழியனுப்பும் பெருமிதமும் உடையது.
  
# 157 குறமகள் இளவெயினி# 157 குறமகள் இளவெயினி
தமர் தன் தப்பின் அது நோன்றல்லும்தன்னுடைய உறவினர் தனக்குப் பிழைசெய்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளுதலும்,
பிறர் கையறவு தான் நாணுதலும்பிறர் கொண்ட வறுமைக்குத் தான் நாணுதலும்,
படை பழி தாரா மைந்தினன் ஆகலும்படையிடத்துப் பிறர் பழிக்காத வலிமையுடையவன் ஆதலும்
வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும்வேந்தனைக் கொண்ட அவையில் நிமிர்ந்து நடத்தலும்
நும்மோர்க்கு தகுவன அல்ல எம்மோன்         5உமது தலைவர்களுக்குத் தகுவன அல்ல, எம்முடைய தலைவன்
சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல்வில்லை முழுதுமாக இழுப்பதால் அகன்ற மார்பினையும், கொல்லும் வேலினையும்,
கோடல் கண்ணி குறவர் பெருமகன்காந்தள் தலைமாலையையும் உடைய குறவர் பெருமகன்
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசைதவழ்கின்ற மேகங்களைத் தன் உயரத்தால் தடுக்கும் பயன் பொருந்திய மலையின் உச்சியில்
எல் படு பொழுதின் இனம் தலைமயங்கிஞாயிறு மறைகின்ற பொழுதில் கூட்டத்திலிருந்து பிரிந்து
கட்சி காணா கடமான் நல் ஏறு                       10தான் தங்கும் இடத்தைக் காணாத காட்டு விலங்காகிய நல்ல கலைமான்
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழைமடப்பத்தையுடைய மானாகிய இளம் பெண்மானைக் குரலால் அழைத்தால், பிளவுண்ட குகையில் இருக்கும்
இரும் புலி புகர் போத்து ஓர்க்கும்பெரிய புலியின் புகர் நிறத்தையுடைய ஆண் கூர்ந்து கேட்கும்
பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமேபெரிய மலையையுடைய நாட்டிற்குரியவனாகிய எம்முடைய ஏறைக்கோனுக்குத் தகும்.
  
# 158 பெருஞ்சித்திரனார்# 158 பெருஞ்சித்திரனார்
முரசு கடிப்பு இகுப்பவும் வால் வளை துவைப்பவும்குறுந்தடியைக் கொண்டு முரசை அடித்து, வெண் சங்கை ஊதி
அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரைஅரசர்களுடன் போரிட்ட, சிறந்த நெடிய மலையில்
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்ஒலிக்கும் வெள்ளிய அருவி கல்லை உருட்டிக்கொண்டு ஓடும்
பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசைபறம்பு மலையின் வேந்தன் பாரியும், உயர்ந்த உச்சியையுடைய
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்            5கொல்லிமலையை ஆண்ட வலிய வில்லினையுடைய ஓரியும்,
காரி ஊர்ந்து பேர் அமர் கடந்தகாரி என்னும் குதிரையின் மீதேறிப் பெரும் போரினை வென்ற
மாரி ஈகை மற போர் மலையனும்மழையைப் போன்ற கொடையுள்ளத்தையும், வீரம் மிகுந்த போரினையும் உடைய மலையனும்,
ஊராது ஏந்திய குதிரை கூர் வேல்யாராலும் ஏறப்படாத குதிரை என்னும் உயர்ந்த மலையையும், கூரிய வேலையும்
கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும்கூவிளம்பூ தலைமாலையையும் வளைந்த பூண்களையும் உடைய எழினி அதியமானும்,
ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை     10மிகக் குளிர்ந்த மலையின் இருள் செறிந்த குகையினையும்
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமைஅரிய ஆற்றலையுடைய தெய்வம் காக்கும் உயர்ந்த சிகரங்களையும் உடைய
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழிபெரிய மலைநாட்டினனான பேகனும், திருத்தமான சொற்களையுடைய
மோசி பாடிய ஆயும் ஆர்வம்_உற்றுமோசி என்னும் புலவர் பாடிய ஆயும், ஆசைப்பட்டுத்
உள்ளி வருநர் உலைவு நனி தீரதன்னை நினைத்து வருவாருடைய வறுமை முற்றிலும் நீங்க
தள்ளாது ஈயும் தகை சால் வண்மை            15தவறாமல் கொடுக்கும் மேம்பாடு பொருந்திய வள்ளன்மையுடைய,
கொள்ளார் ஓட்டிய நள்ளையும் என ஆங்குபகைவரைத் துரத்திய நள்ளியும் என்று சொல்லப்பட்ட
எழுவர் மாய்ந்த பின்றை அழிவரஎழுவரும் இறந்துபோன பின்னர், பார்த்தவருக்கு இரக்கம் வர
பாடி வருநரும் பிறரும் கூடிபாடி வருபவரும், மற்றவரும் சேர்ந்து
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண்வேண்டி வருபவரின் துன்பத்தைத் தீர்ப்பேன் நான் என்று நீ இருப்பதால், வேகமாக இந்த இடத்துக்கு
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற         20உன்னை நினைந்து வந்தேன் நான், வானத்தைத் தோயும்படி
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடிமூங்கில்கள் வளரும் மலையில் சுரபுன்னையோடு உயர்ந்து
ஆசினி கவினிய பலவின் ஆர்வு_உற்றுஆசினி மரங்கள் அழகுபெற்ற பலாவின்மேல் ஆசைகொண்டு
முள் புற முது கனி பெற்ற கடுவன்முள்போன்ற வெளிப்பக்கத்தையுடைய பழுத்த கனியினைப் பெற்ற ஆண்குரங்கு
துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும்பஞ்சு போன்ற தலையையுடைய பெண்குரங்கை கையால் குறிகாட்டி அழைக்கும்
அதிரா யாணர் முதிரத்து கிழவ                      25குறைவில்லாத புதுவருவாயினையுடைய முதிரமலைக்கு உரியவனே!
இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமணஇந்த உலகம் முழுதும் விளங்கும் சிறப்பினையும், நன்கு செய்யப்பட்ட தேரினையும் உடைய குமணனே!
இசை மேந்தோன்றிய வண்மையொடுபுகழ் உயர்ந்து விளங்கும் கொடையுடன்
பகை மேம்படுக நீ ஏந்திய வேலேபகையிடத்து உயர்க நீ தூக்கிய வேல்.
  
# 159 பெருஞ்சித்திரனார்# 159 பெருஞ்சித்திரனார்
வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின்இப்போது வாழுகின்ற நாட்களுடன், தனக்குச் சென்ற ஆண்டுகள் பல ஆதலின்
தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து‘என் உயிர் இன்னும் போகாமல் இருக்கிறதே’ என்று பலவாறாக வெறுத்து
கோல் கால் ஆக குறும் பல ஒதுங்கிஊன்றுகோலையே காலாகக் கொண்டு, குறுகிய பல அடியிட்டு நடந்து,
நூல் விரித்து அன்ன கதுப்பினள் கண் துயின்றுநூலைத் தொங்கவிட்டது போன்ற மயிரை உடையவளாய், கண்பார்வை மறைந்து
முன்றில் போகா முதுர்வினள் யாயும்                5முற்றத்துக்கும் போகாத முதுமையையுடையவளான தாயும்,
பசந்த மேனியொடு படர் அட வருந்திவெளிறிப்போன உடம்புடன், நினைவு வருத்த வருந்தி
மருங்கில் கொண்ட பல் குறு_மாக்கள்இடுப்பில் கொண்ட சிறு குழந்தைகள்
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்துபிசைந்து உண்ணத் தளர்ந்த மார்பை உடையவளாய், பெருந்துயர் அடைந்து
குப்பை கீரை கொய் கண் அகைத்தகுப்பைக் கீரையின் ஏற்கனவே கொய்த இடங்களில் கிளைத்த
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று      10முற்றாத இளம் தளிர்களைக் கொய்துகொண்டு, உப்பு இல்லாமல்
நீர் உலையாக ஏற்றி மோர் இன்றுநீரையே உலையாக வைத்து மோர் இல்லாமல்
அவிழ் பதம் மறந்து பாசடகு மிசைந்துவெந்த சோறை மறந்து, பச்சை இலைகளைத் தின்று
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியாஅழுக்கேறிய, கிழித்ததால் குறைந்துபோன உடையினளாய், அறக்கடவுளைப் பழித்து,
துவ்வாள் ஆகிய என் வெய்யோளும்உண்ணாதவளாகிய என்னை விரும்பும் என் மனைவியும்
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர்       15ஆகிய இருவர் நெஞ்சமும் மகிழ, வேடர்களால்
கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லைசுடப்பட்டுக் கரிந்துபோன புனத்தை மண் கீழும் மேலுமாக உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லையில்
ஐவனம் வித்தி மை உற கவினிமலைநெல்லை விதைத்து அது பசுமை மிக அழகு பெற்று
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனகோடை மிகுதியால் கதிர்விடாத பயிருக்கு, திடுமென
கருவி வானம் தலைஇ ஆங்கும்மின்னலும் இடியும் சேர்ந்த மேகங்கள் மழையைச் சொரிந்தாற் போல,
ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என்                 20கொடுத்த உனது புகழை வாழ்த்தி, கூட்டமான என்
பசி தின திரங்கிய ஒக்கலும் உவப்பபசி வாட்டுதலால் வருத்தமுற்ற சுற்றமும் மகிழ,
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும்உயர்ந்து ஏந்தலான கொம்புகளையுடைய கொல்லுகின்ற களிற்றினைப் பெற்றாலும்
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீமுகம் மாறித் தரும் பரிசிலை நான் ஏற்கமாட்டேன், மகிழ்ந்து நீ
இன்புற விடுதி ஆயின் சிறிதுஇன்புற வழியனுப்பினால், சிறியதாகக்
குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண               25குன்றிமணி அளவே கொடுத்தாலும் பெற்றுக்கொள்வேன், கூரிய வேலைக்கொண்ட குமணனே!
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ்எனவே அவ்வாறு இன்பம் அடைய அருள்செய்ய வேண்டுகிறேன், வெற்றியையும் புகழையுமுடைய
வசை இல் விழு திணை பிறந்தபழி இல்லாத நல்ல குடியில் பிறந்த
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானேமேலும் புகழால் உயர்ந்த தலைவனே! உன்னைப் பாடிய நான்.
  
# 160 பெருஞ்சித்திரனார்# 160 பெருஞ்சித்திரனார்
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்தஅச்சந்தரும் ஞாயிற்றின் ஒளிமிகும் சுடர்கள் தின்றதால்
முளி புல் கானம் குழைப்ப கல்லெனகாய்ந்துபோன புல்லையுடைய கானம் தழைக்க, ’சோ’வென்று
அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்குஅதிரவைக்கும் ஓசையையுடைய இடியுடன் மழை பெய்ததைப் போல
பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கைபசி தின்றதால் காய்ந்துபோன, வியர்வையையுடைய உடம்பு
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய               5சோறு உண்பதை அறியாமற்போனதால் வாட்டமுற்று
நெறி கொள் வரி குடர் குனிப்ப தண்ணெனஒடுங்கிப்போன வரிசைகளையுடைய குடல் நிரம்புமாறு, குளிர்ந்த,
குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில்தாளிப்பு செய்யப்பட்ட கொழுத்த துவையலோடு நெய் உள்ள சோற்றை,
மதி சேர் நாள்_மீன் போல நவின்றதிங்களைச் சேர்ந்த அன்றைய விண்மீன் போல, புழக்கத்திலுள்ள
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇபொன்னாலான சிறிய நல்ல கலன்களில் சுற்றி வைத்து
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என                10’குறைவு இன்று இருப்பதாக பாடுவோரின் சுற்றம்’ என்று
அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசிபெறுவதற்கு அரிய பொன் அணிகலன்களை எளிதாக வழங்கி,
நட்டோர் நட்ட நல் இசை குமணன்தன் நண்பரிடத்துக் காட்டிலும் எம்மிடம் அதிக நட்புக் கொள்ளும் நல்ல புகழையுடைய குமணன்
மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனேமது நிறைந்த தெருவினையுடைய முதிரம் என்னும் மலையில் இருப்பவன்,
செல்குவை ஆயின் நல்குவை பெரிது எனநீ அவனிடம் சென்றால் உனக்கு மிகுதியும் தருவான் என்று
பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து             15உனது பல்வேறு புகழையும் கூறுவார் கூற, மிக வேகமாக,
உள்ளம் துரப்ப வந்தனென் எள்_உற்றுஎன் மனம் என்னைத் தூண்ட வந்தேன், மனத்தில் இகழ்ச்சிக்குறிப்பு உண்டாக,
இல் உணா துரத்தலின் இல் மறந்து உறையும்எனது வீட்டில் உணவு இல்லாததால், அந்த வீட்டை மறந்து இருக்கும்
புல் உளை குடுமி புதல்வன் பன் மாண்குதிரையின் அற்பமான பிடரிமயிரைப் போன்ற குடுமியை உடைய புதல்வன், பல முறை
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்(என் மனைவியின்)பால் இல்லாத வறண்ட மார்பகத்தைச் சுவைத்தும் பால் பெறாதவனாய்
கூழும் சோறும் கடைஇ ஊழின்                        20கூழையும் சோற்றையும் விரும்பி, ஒவ்வொன்றாக
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டுஉள்ளே ஒன்றும் இல்லாத வெற்றுப் பாத்திரங்களைத் திறந்து பார்த்து அழுவதைக் கண்டு,
மற புலி உரைத்தும் மதியம் காட்டியும்“புலி வந்து கொல்லும்” என்று சொல்லியும், “நிலாவைப் பார்” என்று திங்களைக் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிநொந்துபோய், “உன் அப்பாவை நினைத்து
பொடிந்த நின் செவ்வி காட்டு என பலவும்கோபப்படும் உன் முகத்தைக் காட்டு” என்று பலமுறையும்
வினவல் ஆனாள் ஆகி நனவின்                 25கேட்டு அமையாதவளாய் நாள் முழுதும்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பதுன்பப்படுவோளின் வளம் செழிக்குமாறு
செல்லா செல்வம் மிகுத்தனை வல்லேகுறையாத செல்வத்தை மிகுதியாகக் கொடுத்தாய், விரைவில்
விடுதல் வேண்டுவல் அத்தை படு திரைவழியனுப்பவேண்டுகிறேன், ஒலிக்கும் அலைகளைக் கொண்ட
நீர் சூழ் நிலவரை உயர நின்நீர் சூழ்ந்த இந்நிலவுலகில் ஓங்கி இருக்கும்படி
சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பலவே              30உனது சிறப்புப் பொருந்திய பெரும் புகழை வாழ்த்துவேன் பலமுறை.
  
  
  
  
  
  
# 161 பெருஞ்சித்திரனார்# 161 பெருஞ்சித்திரனார்
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டுபெரிதாய் ஒலிக்கின்ற பரந்த கடல் குறைவுபட நீரை முகந்துகொண்டு
ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇவிரைவாகச் செல்லும் மேகங்கள் தாம் விரும்பிய இடத்தில் திரண்டு
பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்புபெரிய மலையைப் போன்ற தோற்றத்தையுடையனவாய், கருக்கொண்டு கறுத்து
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்துஇடி முழக்கத்துடன் மின்னலும் சேர்ந்த தொகுதியுடன் மழையை முறையாகப் பெய்து
வள மலை மாறிய என்றூழ் காலை               5வளத்தைத்தரும் மழை நீங்கிய கோடைக்காலத்தில்,
மன்பதை எல்லாம் சென்று உண கங்கைஉலகத்து உயிர்கள் எல்லாம் சென்று நீர் பருக கங்கையின்
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்குகரையை மோதும் பெரு வெள்ளம் நிறைந்து தோன்றுவது போல
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின்எங்களுக்கும் மற்றவர்க்கும் நீதான் தலைவனாக இருப்பதினால்
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவரஅன்பு இல்லாத கள்வர்கள் கொன்று வழியில் பறித்துக்கொள்வதால்
சென்று தலைவருந அல்ல அன்பு இன்று         10போய்வரக் கூடியவை அல்ல காட்டுவழிகள், தம் உயிர் மீது அன்பு இல்லாமல், 
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்குவலிய கலைமான் அசைபோட்டுக்கிடக்கும் செல்வதற்கரிய அவ்வழியில் சென்றவர்க்கு
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர எனஇன்றுடன் வாழ்நாள் முடிந்தது என்று சொல்லி
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்துகண்பார்வை மறையும்படி நீர் கசிந்து, மனதிடம் அழிந்து
அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின்பொறுக்கமுடியாத துன்பத்தில் வருந்திக்கிடக்கும் பெரும் வறுமையில் ஆழ்ந்துள்ள என் மனைவி, உன்
தாள் படு செல்வம் காண்-தொறும் மருள               15முயற்சியால் உண்டான செல்வத்தைப் பார்க்கப்பார்க்க வியந்துபோகும்படி,
பனை மருள் தட கையொடு முத்து படு முற்றியபனைமரம் போன்ற துதிக்கையோடு, முத்து விளையும்படி முதிர்ந்து
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடுஉயர்ந்த கொம்பினை ஏந்திய மலை போன்ற வலிய களிற்றின்
ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கின்ஒளி விளங்கும் நெற்றிப்பட்டம் பொலிய, பக்கங்களில்
படு மணி இரட்ட ஏறி செம்மாந்துஒலிக்கின்ற மணிகள் மாறிமாறி ஒலிக்க, அதன் மீது ஏறிப் பெருமிதம் தோன்ற அமர்ந்து
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில் 20செல்வதை விரும்பினேன், வெற்றி மிக்க வேந்தனே!
இன்மை துரப்ப இசைதர வந்து நின்எனது வறுமை என்னைப் பின்னே நின்று துரத்த, உன் புகழ் என்னை முன்னே இழுக்க, உனது
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதிகொடைத்திறம் பற்றி நான் பாடுவதை என்மீது அன்புகொண்டு கேட்பாயாக!
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லேஅவ்வாறு பாட வல்லவன் என்றாலும், வல்லமையற்றவன் என்றாலும் விரைந்து
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்தஎன் கல்வியறிவின் அளவை அறிந்து நோக்காமல் சிறந்த
நின் அளந்து அறி-மதி பெரும என்றும்               25உன் அளவை அறிவாயாக பெருமானே! எந்நாளும்
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்திஅரசர் நாணும்படி நான் திரும்புவேன், சாந்து பூசி,
பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம்பல நல்ல இலக்கணங்களைக் கொண்ட மேம்பட்ட அழகினையுடைய மார்பை
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகலசிறந்த அணிகலன்களையுடைய மகளிர் தழுவும்போதெல்லாம் விரும்ப,
நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின்நாள்காலையில் முரசு முழங்கும் இடங்களையுடைய எல்லையில், உனது
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப             30அடி நிழலில் வாழ்வார் நல்ல அணிகலன்களை மிகுதியாகப் பெற 
வாள் அமர் உழந்த நின் தானையும்வாட்போரில் சிறப்படைந்த உன் படையையும்
சீர் மிகு செல்வமும் ஏந்துகம் பலவேஉன் சிறப்பு மிக்க செல்வத்தையும் புகழ்வோம் பலமுறை.
  
# 162 பெருஞ்சித்திரனார்# 162 பெருஞ்சித்திரனார்
இரவலர் புரவலை நீயும் அல்லைஇரப்போரின் பாதுகாவலன் நீயும் இல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்இரப்போருக்குப் பாதுகாவலர்கள் இல்லாமலும் போய்விடவில்லை;
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்குஇனியும் இரப்போர் இருப்பதையும் காண்பாய், அந்த இரவலர்க்குக்
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர்கொடுப்போர் இருப்பதையும் இனிக் காண்பாய், உன் ஊரிலுள்ள
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த              5காவல் மரம் வருந்தும்படியாக, நான் கொண்டுவந்து கட்டிய
நெடு நல் யானை எம் பரிசில்உயர்ந்த நல்ல இலக்கணமுள்ள யானை எமது பரிசில்,
கடு மான் தோன்றல் செல்வல் யானேவிரைந்து ஓடும் குதிரையையுடைய தலைவனே! இனி நான் போகிறேன்.
  
# 163 பெருஞ்சித்திரனார்# 163 பெருஞ்சித்திரனார்
நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்உன் மீது அன்புகொண்டு வாழ்பவர்க்கும், நீ அன்புசெலுத்தி வாழ்பவர்க்கும்,
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்பல குணங்களும் சிறந்த கற்பினையுடைய உனது சுற்றத்து மூத்தவர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்நமது சுற்றத்தின் மிக்க பசி நீங்க உனக்கு
நெடும் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்நெடுநாள் கடன் தந்து உதவியோர்க்கும், 
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது            5இன்னாருக்கு என்றுதான் இல்லாமல், என்னையும் கலந்துகொள்ளாமல்,
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்நமக்கே வைத்துக்கொண்டு வளமுடன் நெடுங்காலம் வாழ்வோம் என்னாமல், நீதான்
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயேஎல்லார்க்கும் கொடுப்பாயாக, இல்லக்கிழத்தியே!
பழம் தூங்கு முதிரத்து கிழவன்பழங்கள் பழுத்துத் தொங்கும் முதிரமலைக்கு உரியவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனேதிருத்தமான வேலையுடைய குமணன் கொடுத்த செல்வம் இது.
  
# 164 பெருந்தலை சாத்தனார்# 164 பெருந்தலை சாத்தனார்
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்சமைப்பதை முற்றிலும் மறந்த, குமிழ்கள் தேயாமல் உயர்ந்து விளங்கும் அடுப்பில்
ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவாகாளான் முளைத்திருக்க, உடம்பை மெலிவிக்கும் பசியால் வாடி,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கிபால் இல்லாததால் தோலுடன் சுருங்கி
இல்லி தூர்த்த பொல்லா வறு முலைதுளை தூர்ந்துபோன பொல்லாத வெறுமையான முலையைச்
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி      5சுவைத்துச் சுவைத்து அழும் தன் குழந்தையின் முகத்தை நோக்கிக்
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என்கண்ணீரால் நிறைந்த ஈரமான இமைகளையுடைய குளிர்ந்த கண்களையுடைய என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇமனையாளின் வருத்தத்தைப் பார்த்து, உன்னை நினைத்து
நின் படர்ந்திசினே நல் போர் குமணஉன்னிடம் வந்திருக்கிறேன், நல்ல போரையுடைய குமணனே!
என் நிலை அறிந்தனை ஆயின் இ நிலைஎனது வறிய நிலையை அறிந்தாயாயின், இந்நிலையில்
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய   10உன்னை வளைத்தும் பரிசு கொள்ளாமல் விடமாட்டேன், பலவாக அடுக்கப்பட்டு
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்மீட்டும் நிலையிலுள்ள நரம்பினைக் கொண்ட, தோலால் போர்த்தப்பட்ட நல்ல யாழையும்
மண் அமை முழவின் வயிரியர்மார்ச்சனை பூசப்பட்ட முழவினையும் கொண்ட கூத்தர்களின்
இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயேவறுமையைப் போக்கும் குடியில் பிறந்தவனே! 
  
# 165 பெருந்தலை சாத்தனார்# 165 பெருந்தலை சாத்தனார்
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்எதுவுமே நிலையில்லாத இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்து வாழவேண்டும் என்று எண்ணியவர்கள்
தம் புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனரேதமது புகழை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தித் தாம் மாண்டுபோயினர்,
துன் அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்யாராலும் அடையமுடியாத சிறப்பினையுடைய உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்வறுமையால் இரப்போர்க்குக் கொடுக்காததால்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே                5முந்தைய கொடையுள்ளம் உள்ள மக்களைப்போல் உலகில் தொடர்ந்து இருப்பதை அறியாமற் போனார்,
தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல்கால்வரை தாழ்ந்த ஒலிக்கின்ற மணிகள் மாறிமாறி ஒலிக்கும் புள்ளிகளையுடைய நெற்றியையுடைய
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாவெற்றியுடன் நடந்துவரும் யானையைப் பாடுபவர்க்கு மிகுதியாகக் கொடுக்கும்
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலைஅழிவு இல்லாத நல்ல புகழையுடைய, வலிமையுள்ள குதிரையை உடைய தலைவனை
பாடி நின்றெனன் ஆக கொன்னேநான் பாடி நிற்கையில், பயனில்லாமல்
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என  10பெருமைபெற்ற பரிசிலன் வாடியவனாகத் திரும்புவது, என்
நாடு இழந்ததனினும் நனி இன்னாது எனநாட்டை இழந்ததைக் காட்டிலும் மிகவும் கொடியது என்று
வாள் தந்தனனே தலை எனக்கு ஈயவாளைத் தந்தான், தன்னுடைய தலையை எனக்குக் கொடுக்க
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்தன்னைவிடச் சிறந்த பொருள் வேறு ஒன்றும் இல்லாததால்;
ஆடு மலி உவகையோடு வருவல்வெற்றி மிக்க உவகையோடு வந்திருக்கிறேன்
ஓடா பூட்கை நின் கிழமையோன் கண்டே         15போரில் புறங்கொடாத கொள்கையைப் பூண்ட உன் தமையனைப் பார்த்துவிட்டு
  
# 166 ஆவூர் மூலம் கிழார்# 166 ஆவூர் மூலம் கிழார்
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடைநன்கு ஆராயப்பட்ட மிக நீண்ட சடையினையுடைய
முது முதல்வன் வாய் போகாதுமுதிய இறைவனது வார்த்தைகளைவிட்டு விலகாமல்
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின்அறம் ஒன்றையே சார்ந்து, நான்கு பகுதி உடையதாகி
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்ஆறு அங்கங்களாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு
இகல் கண்டோர் மிகல் சாய்-மார்                    5மாறுபட்டவைகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி
மெய் அன்ன பொய் உணர்ந்துஅவரது உண்மை போன்ற பொய்யை உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇஅப்பொய்யை உண்மை என்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகியஇருபத்தொரு வேள்வித்துறைகளையும் குறையில்லாமல் செய்து முடித்த
உரை சால் சிறப்பின் உரவோர் மருகபுகழ் நிறைந்த சிறப்பையுடைய அறிவுடையோர் மரபில் வந்தவனே!
வினைக்கு வேண்டி நீ பூண்ட                        10வேள்வித் தொழிலுக்காக நீ போர்த்த
புல புல்வாய் கலை பச்சைகாட்டில் வாழும் கலைமானின் தோல்
சுவல் பூண் ஞான் மிசை பொலியநீ தோளின் மேல் அணிந்திருக்கும் பூணூலின் மேல் பொலிவுற்று விளங்க,
மறம் கடிந்த அரும் கற்பின்அறமற்றவைகளைக் கடிந்து நீக்கிய பெறுவதற்கரிய கற்பினையும்
அறம் புகழ்ந்த வலை சூடிஅறநூல்கள் புகழ்கின்ற, யாகபத்தினிகள் நெற்றியில் அணியும் அணியான சாலகத்தைச் சூடி
சிறு நுதல் பேர் அகல் அல்குல்                    15சிறிய நெற்றியினையும், பெரிய அகன்ற அல்குலையும்
சில சொல்லின் பல கூந்தல் நின்சிறிதளவான பேச்சையும், நிறைந்த கூந்தலினையும் உடைய உன்
நிலைக்கு ஒத்த நின் துணை துணைவியர்நிலைக்கு மனமொத்த உன் துணையாகிய மனைவிமார்
தமக்கு அமைந்த தொழில் கேட்பதத்தமக்கு அமைந்த ஏவல் தொழிலைக் கேட்டுச் செய்ய,
காடு என்றா நாடு என்று ஆங்குகாடோ, நாடோ அந்த அந்த இடத்தில்
ஈர்_ஏழின் இடம் முட்டாது                 20காடென்றால் காட்டுப்பசு ஏழுடனும், நாடென்றால் நாட்டுப்பசு ஏழுடனும் குறையே இல்லாமல்
நீர் நாண நெய் வழங்கியும்தண்ணீரைப்போல நெய்யை வழங்கியும்,
எண் நாண பல வேட்டும்எண்ணிறந்த பல வேள்விகளைச் செய்தும்
மண் நாண புகழ் பரப்பியும்மண் தாங்காத புகழ் பரப்பியும்
அரும் கடி பெரும் காலைபெறுதற்கரிய விளக்கமுற்ற வேள்வி முடிந்த காலத்தில்
விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை          25விருந்தினர்க்கு விருந்து செய்த உன் திருத்தமான மேம்பட்ட நிலையை
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅதுயாம் இன்றுபோல் எந்நாளும் காண்போமாக, மேற்கில்
பொன் படு நெடு வரை புயல்_ஏறு சிலைப்பின்பொன் விளையும் உயர்ந்த குடகு மலையில் மேகங்களின் இடி முழங்கினால்
பூ விரி புது நீர் காவிரி புரக்கும்பூக்கள் பரந்த புது நீரையுடைய காவிரி காக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்குளிர்ந்த நீருடைய விளைநிலம் கொண்ட எங்கள் ஊரில் 
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்               30உண்பன உண்டும், தின்பன தின்றும், ஏறுவனவற்றில் ஏறியும் கொண்டாடுவதற்காகச்
செல்வல் அத்தை யானே செல்லாதுசெல்கிறேன் நான், நீ இறவாதிருந்து
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைமேகங்கள் அண்ணாந்துபார்க்கும் உயர்ந்த நீண்ட மலையான
கழை வளர் இமயம் போலமூங்கில் வளரும் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானேநீ நிலைபெற்று வாழ்வாயாக, இந்த நிலத்தின் மேல்
  
# 167 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்# 167 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்
நீயே அமர் காணின் அமர் கடந்து அவர்நீதான், போரைக் கண்டால், அந்தப் போரை வென்று, அந்தப் பகைவரின்
படை விலக்கி எதிர் நிற்றலின்படையைத் தடுத்து எதிரே நிற்பதால்,
வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடுஎதிரியின் வாள் பட்டதால் வடுக்கள் அழுந்தின உடம்புடனே
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயேஇச் செய்தியைக் கேட்ட செவிக்கு இனியவனாய் இருக்கிறாய், ஆனால் கண்ணுக்கு இனியவன் இல்லை
அவரே நின் காணின் புறங்கொடுத்தலின்               5உன் பகைவரோ, உன்னைக் கண்டவுடன் புறங்கொடுத்து ஓடிவிடுதலால்
ஊறு அறியா மெய் யாக்கையொடுகாயப்படாத உடம்பாகிய வடிவுடன் 
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரேகண்ணுக்கு இனியவராக இருக்கின்றனர், ஆனால் அச் செய்தியைக் கேட்ட செவிக்கு இனியவர் இல்லை,
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர்அதனால் நீயும் ஒன்றில் இனியவன், அவரும் ஒன்றில் இனியவர்,
ஒவ்வா யா உள மற்றே வெல் போர்இதில் ஒத்துப்போகாதது என்ன இருக்கிறது? வெற்றிபெரும் போரினைச் செய்யும்
கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி          10வீரக்கழல் அணிந்த திருத்தமான அடிகளையும், விரையும் குதிரையையும் உடைய கிள்ளியே!
நின்னை வியக்கும் இ உலகம் அஃதுஉன்னை வியந்து போற்றுகிறது இந்த உலகம், அது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கேஎப்படியோ, பெருமானே! எமக்குச் சொல்வாயாக.
  
# 168 கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்# 168 கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்
அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலைஅருவி ஆரவாரிக்கும் மூங்கில்கள் நெருக்கமாக வளர்ந்த அகன்ற இடமாகிய
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்மிளகுக் கொடி வளரும் மலைச்சாரலில் மலர்ந்த காந்தள் செடியின்
கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடுகொழுத்த கிழங்கு வெளிப்படக் கிண்டியெடுத்து, தன் கூட்டத்துடன்
கடுங்கண் கேழல் உழுத பூழிகடுமை நிறைந்த காட்டுப்பன்றி உழுதுபோட்ட புழுதிபட்ட நிலத்தில்
நன்_நாள் வரு பதம் நோக்கி குறவர்         5ஒரு நல்ல நாள் வருவதை எதிர்நோக்கிக் காத்திருந்து, குறவர்கள்
உழாஅது வித்திய பரூஉ குரல் சிறுதினைஉழாமலேயே விதைத்த பெரிய கதிர்களையுடைய சிறுதினையின்
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார்முதலில் விளைந்த புதுவரவை அதே நாள் காலையில் புதிதாக உண்ணுவதற்காக
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்காட்டுப்பசுவில் கறந்த நுரையுடன் கூடிய இனிய பாலை
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசிமானின் தசையை வேகவைத்த புலால் நாறும் பானையின் (கொழுப்புத்தோய்ந்த)
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி               10வெள்ளிய நிறமுடைய பெரிய வெளிப்புறத்தைக் கழுவாமல் (பாலை) உலைநீராக ஊற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்சந்தன விறகால் வேகவைக்கப்பட்ட சோற்றை
கூதளம் கவினிய குளவி முன்றில்கூதாளி அழகாகப் பூத்துக்கிடக்கும் முல்லைப்பூ மணக்கும் முற்றத்தில்
செழும் கோள் வாழை அகல் இலை பகுக்கும்செழுமையான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் பலருடன் பகுத்து உண்ணும்
ஊரா குதிரை கிழவ கூர் வேல்யாரும் ஏறாத குதிரையாகிய குதிரைமலைக்குத் தலைவனே! கூரிய வேலையும்
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி               15நறைக்கொடி நாரால் தொடுத்த வேங்கை மலர்களைக் கொண்ட அழகிய தலைமாலையையும் உடைய,
வடி நவில் அம்பின் வில்லோர் பெருமதீட்டப்பட்ட அம்பையுடைய வில்லோர்களுக்குத் தலைவனே!
கைவள் ஈகை கடு மான் கொற்றகையால் அளவின்றிக் கொடுக்கும் ஈகையினையும், விரைந்தோடும் குதிரையையும் கொண்ட வேந்தனே!
வையக வரைப்பில் தமிழகம் கேட்பஉலக எல்லைக்குள் தமிழகம் கேட்கும்படி
பொய்யா செம் நா நெளிய ஏத்திபொய்யில்லாத நேர்மையான நாக்கு வலிக்கும்படி வாழ்த்தி
பாடுப என்ப பரிசிலர் நாளும்                      20நாள்தோறும் பாடுவார்கள் பரிசிலர் என்று சொல்வர் –
ஈயா மன்னர் நாணஈகைக் குணம் இல்லாத மன்னர் வெட்கப்படும்படியாக
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழேஅழியாது பரந்த உனது பழி இல்லாத சிறந்த புகழை – (வாழ்த்தி நாள்தோறும் பாடுவார்கள் பரிசிலர்)
  
# 169 காவிரிபூம் பட்டினத்து காரிக்கண்ணனார்# 169 காவிரிபூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நும் படை செல்லும்_காலை அவர் படைநீ படையெடுத்துச் செல்லும்போது பகைவரின் படையில்
எறித்து எறி தானை முன்னரை எனாஅவேலை எடுத்து எறியும் படைக்கு முன்னர் நிற்பாய் என்பதாலும்,
அவர் படை வரூஉம்_காலை நும் படைபகைவர் படையெடுத்து வரும்போது உம் படையின்
கூழை தாங்கிய அகல் யாற்றுபின் அணியைத் தாங்கவேண்டி அகன்ற ஆற்றினைக்
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅகுன்று குறுக்கே தடுப்பதைப் போல் நிற்பாய் என்பதாலும்
அரிதால் பெரும நின் செவ்வி என்றும்அரிது, பெருமானே! என்றும் உன்னைக் காணும் நேரம் கிடைப்பது 
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பைபெரிதோ பெரிது என் சுற்றத்தின் துயரம்,
இன்னே விடு-மதி பரிசில் வென் வேல்இப்பொழுதே பரிசில் கொடுத்து எங்களைப் போகச்செய்வாயாக, வெற்றியுடைய வேலைக்கொண்ட
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்இளம் கோசர் பலர் ஒளிவிளங்கும் படைக்கலம் பயிற்சிசெய்வதற்காக
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்உக்கிரமாக வேல் போன்றவற்றை எறிந்த அகன்ற இலையையுடைய முள்முருங்கையின்
பெரு மர கம்பம் போலபெரிய மரக் கம்பம் போல,
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவேபோரிடுபவர்க்குப் பிற்படாத உன் வெற்றி வாழ்வதாக.
  
# 170 உறையூர் மருத்துவன் தாமோதரனார்# 170 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
மரை பிரித்து உண்ட நெல்லி வேலிகாட்டுப்பசுக்கள் காயைத்தின்று விதையைத் துப்பிய நெல்லி மரங்களை வேலியாகக் கொண்ட
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர்விதைகள் பரலாகச் சிதறிக்கிடக்கும் முற்றத்தையுடைய அழகிய வீடுகளைக் கொண்ட சிறிய ஊரில்
எல் அடிப்படுத்த கல்லா காட்சிபகல் முழுதும் வேட்டையாடித் திரிந்த படிக்காத தோற்றத்தையுடைய
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லெனவில்லே ஏராகக் கொண்டு வேட்டையே உழவாகக் கொண்டவர்களின் நடுவே, ’துடும்துடும்’என்று
இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப                   5புலையன் தன் காய்த்துப்போன உள்ளங்கை சிவக்கும்படி
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடும் துடிவலிமையுடன் அடித்து உரக்க ஒலியெழுப்பும் வலிய கண்ணையுடைய அச்சமுண்டாக்கும் உடுக்கு
புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும்புலி படுத்துக்கிடக்கும் உயர்ந்த மலையில் வாழும் பேராந்தையுடன் மாறிமாறி ஒலிக்கும்
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன்மலையை உடைய நாட்டிற்கு உரிமையாளன் கூரிய வேலைக் கொண்ட பிட்டனை
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனேநெருங்குவதைத் தவிருங்கள், பகைவர்களே! அவன்தான்
சிறு கண் யானை வெண் கோடு பயந்த           10சிறிய கண்ணையுடைய யானையின் வெள்ளிய கொம்பு தந்த
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்துஒளி திகழும் முத்தினை விறலியருக்கு வழங்கி,
நார் பிழி கொண்ட வெம் கள் தேறல்பிழிந்து நாரால் வடிகட்டின விரும்பத்தக்க கள்ளாகிய தேறலை
பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்திபண் அமைத்த நல்ல யாழைக்கொண்ட பாணனின் சுற்றத்தைப் பருகச்செய்து
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்குதன்னிடம் பரிசில் கேட்டு வந்தவர்க்கு மென்மையானவனாக இருப்பானே அல்லாது பகைவர்க்கு
இரும்பு பயன் படுக்கும் கரும் கை கொல்லன்         15இரும்பைப் பயன்படுத்தும் வலிய கையையுடைய கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொருஉம்ஓங்கி அடிக்கும் சம்மட்டியோடு எதிர்த்துநிற்கும்
உலை_கல் அன்ன வல்லாளன்னேஉலைக்கல் போன்ற வலிமையும் ஆண்மையும் உடையவன்.
  
  
  
  
  
  
# 171 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்# 171 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
இன்று செலினும் தருமே சிறு வரைஇன்று சென்றாலும் தருவான், சிறிதுநாள்
நின்று செலினும் தருமே பின்னும்கழித்துச் சென்றாலும் தருவான், அடுத்துச் சென்றாலும்
முன்னே தந்தனென் என்னாது துன்னிமுன்பே தந்தேனே என்று சொல்லாமல் அவனை அணுகி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகிநாள்தோறும் சென்றாலும் பொய்க்காமல்
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன்     5நாங்கள் வேண்டியபடியே எம்முடைய வெறும் கலத்தை நிரப்புவான்,
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்பதான் விரும்பியபடியே தன்னுடைய அரசன் மகிழும்படி
அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன்செய்வதற்கரிய போர்த்தொழிலை முடிப்பானாக, திருத்தமான வேலையுடைய கொற்றன்,
இன மலி கத சே களனொடு வேண்டினும்இனமான மிகுந்த துடிப்புள்ள காளைகளைத் தொழுவத்துடன் கேட்டாலும்,
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்களம் நிறைந்த நெல்லின் குவியல்களைக் கேட்டாலும்
அரும் கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை       10அரிய அணிகலன்களை யானைகளோடு கேட்டாலும் பெருந்தகையாளனாகிய அவன்
பிறர்க்கும் அன்ன அற தகையன்னேஎமக்கு மட்டுமல்ல, பிறர்க்கும் அத்தகைய அறத்தைச் செய்பவன்,
அன்னன் ஆகலின் எந்தை உள் அடிஅவன் அப்படிப்பட்டவன் என்பதால் எம் இறைவனது பாதம்
முள்ளும் நோவ உறாற்க தில்லமுள்ளாலும்கூட வருந்தாமலிருக்கட்டும், 
ஈவோர் அரிய இ உலகத்துகொடுப்பவர்கள் அரிதாகிப்போன இந்த உலகத்தில்
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே          15உயிர்வாழ்வோர் வாழ அவனது அடி வாழ்வதாக.
  
# 172 வடமண்ணக்கன் தாமோதரனார்# 172 வடமண்ணக்கன் தாமோதரனார்
ஏற்றுக உலையே ஆக்குக சோறேஅடுப்பில் உலையை ஏற்றுங்கள், சோற்றை ஆக்குங்கள்
கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழைகள்ளும் குறைவுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள், ஒளிரும் அணிகலன்களையுடைய
பாடு வல் விறலியர் கோதையும் புனைகபாடுவதில் வல்ல விறலியர் மாலையும் சூடுங்கள்,
அன்னவை பலவும் செய்க என்னதூஉம்இப்படிப்பட்ட பல செயல்களை செய்யுங்கள், கொஞ்சங்கூட
பரியல் வேண்டா வரு பதம் நாடி                     5வருந்தவேண்டாம், மேலும் தேவைப்படும் உணவுப்பொருளை எண்ணி,
ஐவனம் காவல் பெய் தீ நந்தின்ஐவனநெல்லுக்காகக் காவல்காப்போர் காவலுக்காக மூட்டிய தீ குறைந்தபோது
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும்ஒளி வீசும் திருந்தின மாணிக்கம் செறிந்திருக்கும் இருளை அகற்றும்
வன்_புல நாடன் வய_மான் பிட்டன்மலைநாட்டை உடையவன் வலிய குதிரையையுடைய பிட்டன்,
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறைஅரிய போரை வெல்லும் வேலும், அவனுடைய தலைவனாகிய
மா வள் ஈகை கோதையும்                     10மிகப் பெரிய கொடையையுடைய கோதையும்
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதேஅவனைப் பகைத்த மன்னரும் வாழ்வார்களாக நீண்ட காலம்.
  
# 173 சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்# 173 சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
யான் வாழும் நாளும் பண்ணன் வாழியநான் உயிர்வாழும் நாளையும் சேர்த்துப் பண்ணன் வாழ்வானாக,
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பைபாணர்களே! பாருங்கள்! இந்த இரவலனது சுற்றத்தின் வறுமையை
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்னபுதிதாகப் பழுத்திருக்கும் மரத்தில் பறவைகள் ஒலிப்பது போல
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்உணவு பரிமாறுவதாலும் உண்பதாலும் உண்டான மிகுந்த ஆரவாரம் கேட்கிறது;
பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி         5காலம் தப்பாத மழை பெய்யும் காலம் பார்த்துத்
முட்டை கொண்டு வன்_புலம் சேரும்தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு மேட்டுநிலத்துக்குச் செல்லும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பமிகச் சிறிய எறும்பின் ஒற்றை வரிசையைப் போல
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும்சோற்றை உடைய கையினராய், வெவ்வேறாகப் போகின்ற
இரும் கிளை சிறாஅர் காண்டும் கண்டும்பெரும் சுற்றத்தாரோடும் கூடிய சிறுவர்களைக் கண்டோம், கண்டும்
மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென               10மீண்டும் மீண்டும் வினவுகிறோம், தெளிவாக
பசி_பிணி_மருத்துவன் இல்லம்பசியென்னும் நோயைப் போக்கும் மருத்துவன் வாழும் வீடு
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கேஅருகில் இருக்கிறதா? தொலைவில் இருக்கிறதா? எங்களுக்குச் சொல்லுங்கள்.
  
# 174 மாறோக்கத்து நப்பசலையார்# 174 மாறோக்கத்து நப்பசலையார்
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து எனபிறரை அச்சுறுத்தி வருத்தும் அசுரர் கூட்டம் கொண்டுபோய் மறைத்ததினால்
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாதுதொலைவிலிருந்து ஒளிவிடும் சிறப்பு மிக்க சூரியனைக் காணாமையால்
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்துஇருளானது உலகத்தார் கண்ணை மறைத்த வட்டமான உலகத்தில்
இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல்மன உளைச்சலொடு சேர்ந்த துன்பம் நீங்கும் வண்ணம், மிக்க வலிமையுடைய
அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு               5கருநிறக் கண்ணன் அந்தச் சூரியனைக் கொண்டுவந்து நிறுத்தியதைப் போல்,
அரசு இழந்திருந்த அல்லல் காலைபோரில் தோற்றதால் தம் அரசனை இழந்து துயரத்துடன் இருக்கும் நேரத்தில்
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு கரை பொருதுமுரசு கிளர்ந்து ஒலிக்கும் அரண்மனை முற்றத்தோடு, கரையை மோதி
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரிமுழங்கும் நீர் உடைந்து பெருக்கெடுத்த அகண்ட காவிரி பாயும்
மல்லல் நன் நாட்டு அல்லல் தீரவளமான நல்ல நாட்டின் அல்லல் தீர,
பொய்யா நாவின் கபிலன் பாடிய                      10பொய்யா நாவின் கபிலன் பாடிய
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யெனமேகங்கள் சூழ்ந்த பெரிய மலையில், விரைந்து
செரு புகல் மறவர் செல் புறம் கண்டபோரை விரும்பும் மறவர் புறங்காட்டி ஓடுவதைக் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசைஇகழ்ச்சியற்ற சிறப்பையுடைய முள்ளூரின் மலையுச்சியில்
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்அரிய இடத்தில் இருந்த பெரிய வெற்றியையுடைய சோழனது
மதி மருள் வெண்குடை காட்டி அ குடை                15திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையைத் தோன்றச்செய்து, அந்தக் குடையைப்
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுநபுதுமையுண்டாக நிலைநிறுத்திய புகழால் மேம்பட்டவனே!
விடர் புலி பொறித்த கோட்டை சுடர் பூண்குகையில் வாழும் புலியின் சின்னத்தைப் பொறித்த கோட்டையையும், ஒளிவிடும் அணிகலன்களையும்
சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன்வண்டு ஒலிக்கும் மாலையையும் பெரும் புகழையும் உடைய உன் முன்னோனாகிய தந்தை
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர்இங்கே செய்த நல்ல அறத்தின் பலனை அங்கே சென்று அனுபவிக்குமாறு
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின்           20தேவருலகத்துக்குப் போய்விட்டான், எனவே
ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும்நல்ல நெறியைக் கொன்றவர் பக்கத்திலிருக்க, திசையெங்கும் தேடியலையும்
கவலை நெஞ்சத்து அவலம் தீரகவலையுற்ற மனத்தின் வருத்தம் தீர
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்நீ வந்து தோன்றினாய், இணைந்த மாலையையுடைய தலைவனே!
கல் கண் பொடிய கானம் வெம்பமலையிடம் பொடிபட, கானம் வெம்பிப்போக
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க              25மிக்க நீர் உள்ள எல்லைகளில் உள்ள பல குளங்கள் வற்றிப்போக,
கோடை நீடிய பைது அறு காலைகோடைக்காலம் நீண்டு செல்லும் பசுமை இல்லாத காலத்தில்
இரு நிலம் நெளிய ஈண்டிஇந்தப் பெரிய உலகம் நெளியுமாறு திரண்டு
உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கேஇடி முழங்கும் மின்னல் தொகுதியோடு மழை பொழிந்ததைப் போல – (நீ வந்து தோன்றினாய்)