புறநானூறு 101 -125

  
# 101 ஔவையார்# 101 ஔவையார்
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்ஒரு நாள் சென்றாலும் சரி, இரு நாள் சென்றாலும் சரி,
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்பல நாட்கள், மீண்டும் மீண்டும், பலரோடு சென்றாலும் சரி,
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோமுதல் நாளில் இருந்ததைப் போன்ற அதே விருப்பத்தை உடையவன்;
இழை அணி யானை இயல் தேர் அஞ்சிஅணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட யானையையும், இலக்கணம் அமைந்த தேரினையும் உடைய அஞ்சியாகிய
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்          5அதியமான் நமக்குப் பரிசில் தரும் காலத்தை
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்நீட்டினாலும், நீட்டாவிட்டாலும், யானையின்
கோட்டு இடை வைத்த கவளம் போலகொம்புகளுக்கு இடையே வைத்த கவளத்தைப் போல
கையகத்தது அது பொய் ஆகாதேநமது கைக்குக் கிடைத்தது, அது என்றும் பொய்க்காது,
அருந்த ஏமாந்த நெஞ்சம்உண்ண ஆசைப்பட்ட நெஞ்சமே!
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே           10வருந்த வேண்டாம், வாழ்க அவன் தாள்.
  
# 102 ஔவையார்# 102 ஔவையார்
எருதே இளைய நுகம் உணராவேகாளைகள் இளமையானவை, நுகத்தடியை அறியமாட்டா,
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றேவண்டியிலோ நிறையப் பண்டங்கள் ஏற்றப்பட்டுள்ளன,
அவல் இழியினும் மிசை ஏறினும்இறக்கத்தில் இறங்கினாலும், மேட்டில் ஏறினாலும்,
அவணது அறியுநர் யார் என உமணர்அங்கே என்ன நடக்கும் என்று அறிவார் யார் என்று, உமணர்கள்
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன                5வண்டியின் கீழ்ப்பக்கமாகக் கட்டியிருக்கும் உபரி அச்சுப் போல
இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள்புகழ் விளங்கிய கொடுப்பதற்காகக் கவிழ்ந்த கையினையுடைய உயர்ந்தவனே! திங்களாகிய
நாள் நிறை மதியத்து அனையை இருள்நாள் நிறைந்த முழுமதியைப் போன்று இருக்கிறாய், இருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கேஎங்கே இருக்கிறது, உன்னுடைய குடைநிழலில் வாழ்பவர்க்கு?
  
# 103 ஔவையார்# 103 ஔவையார்
ஒரு தலை பதலை தூங்க ஒரு தலைதோளின் ஒரு பக்கத்தில் பதலை என்ற தோல் இசைக்கருவி தொங்க, இன்னொரு பக்கம்
தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கிஉள்ளே துளையை உடைய சிறிய முழவு தொங்க, இவற்றைச் சுமந்தவாறே
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனஎமக்கு உணவிட்டு, கவிழ்த்துக்கிடக்கும் உண்கலத்தைத் திருப்பிப்போட வைப்பவர் யார் என்று
சுரன் முதல் இருந்த சில் வளை விறலிநீண்ட வழியின் தொடக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் சில வளையல்களே அணிந்திருக்கும் விறலியே!
செல்வை ஆயின் சேணோன் அல்லன்              5அவனிடம் செல்ல எண்ணினால், அவன் ஒன்றும் நெடுந்தொலைவில் இல்லை,
முனை சுட எழுந்த மங்குல் மா புகைபகைப்புலத்தை எரியூட்டியதால் எழுந்த கரிய புகைமூட்டம்
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும்மலையைச் சூழும் முகில் போல, இளங்களிற்றைச் சூழும்
பகை புலத்தோனே பல் வேல் அஞ்சிபகை நாட்டில் இருக்கின்றான் பல வேல்களையுடைய அஞ்சி என்பான்,
பொழுது இடைப்படாஅ புலரா மண்டைஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும் செய்தலால் காய்ந்துபோகாத உண்கலத்தில்
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப  10மெழுகால் செய்யப்பட்ட மெல்லிய அடை போல கொழுத்த நிணம் மிகுந்திருக்க,
அலத்தல் காலை ஆயினும்உலகமே வறுமையுற்றுப் போனாலும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளேஉன்னைப் பாதுகாக்கும் வல்லமையாளன், அவன் பாதங்கள் வாழ்வதாக.
  
# 104 ஔவையார்# 104 ஔவையார்
போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மைவீரர்களே! உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள், உமக்கு ஒன்று அறிவிப்பேன்,
ஊர் குறு_மாக்கள் ஆட கலங்கும்ஊரிலுள்ள சிறுவர்கள் விளையாடக் கலங்கிப்போகும்
தாள் படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்முழங்கால் அளவேயான சிறிது நீரில் யானையைக் கொன்று வீழ்த்தும்
ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐஇழுக்கும் ஆற்றலையுடைய முதலையைப் போன்று, என் தலைவனின்
நுண் பல் கருமம் நினையாது                        5நுண்ணிய ஆற்றலுள்ள பல்வேறு அரிய செயல்களை எண்ணிப்பாராமல்,
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடேஅவனை ‘இளையவன்’ என்று இகழ்ந்தால் நீங்கள் வெற்றிபெறுதல் அரிது.
  
# 105 கபிலர்# 105 கபிலர்
சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலிசிவந்த அணிகலன்களைப் பெறுவாய், ஒளிமிகும் நெற்றியையுடைய விறலியே!
தடவு வாய் கலித்த மா இதழ் குவளைஅகன்ற இடத்தையுடைய சுனையில் தழைத்துவளர்ந்த கரிய இதழ்களையுடைய குவளையின்
வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவவண்டுகள் மொய்க்கும் புதிய மலரில் குளிர்ந்த துளி விழுமாறு
பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவிமழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும், அருவிநீர்
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக              5கொள்ளுக்காக உழுத பரந்த நிலத்தின் பக்கத்தில் வாய்க்காலாகச் செல்ல
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும்கண் ஏணியையுடைய உயர்ந்த மலையின் சிகரந்தோறும் வழிந்து கீழே ஒழுகும்
நீரினும் இனிய சாயல்நீரைவிட இனிய இயல்பையுடைய
பாரி வேள்_பால் பாடினை செலினேபாரிவேளிடம் பாடியவளாய்ச் சென்றால் – (சிவந்த அணிகலன்களைப் பெறுவாய்)
  
# 106 கபிலர்# 106 கபிலர்
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்நல்லவை என்றும் தீயவை என்றும் சொல்லமுடியாத குவிந்த பூங்கொத்துக்களையும்
புல் இலை எருக்கம் ஆயினும் உடையவைபுல்லிய இலைகளையும் உடைய எருக்கம்பூ என்றாலும், ஒருவன் தனக்குடையதைக் கொடுத்தால்
கடவுள் பேணேம் என்னா ஆங்குதெய்வங்கள் விரும்பவில்லை என்று சொல்லமாட்டா, அதைப் போல
மடவர் மெல்லியர் செல்லினும்அறிவில்லாதவரும், அற்பகுணங்களையுடையவரும் சென்றாலும்
கடவன் பாரி கைவண்மையே                    5கொடையளிப்பதைக் கடமையாகக்கொண்டவன் பாரி.
  
# 107 கபிலர்# 107 கபிலர்
பாரி பாரி என்று பல ஏத்திபாரி பாரி என்று சொல்லி, அவனது பல புகழையும் வாழ்த்தி
ஒருவன் புகழ்வர் செம் நா புலவர்அந்த ஒருவனையே புகழ்கின்றனர் செம்மையான நாவையுடைய அறிவுடையோர்,
பாரி ஒருவனும் அல்லன்பாரி ஒருவன் மட்டும் இல்லை
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவேமாரியும் உண்டு இங்கு உலகத்தைக் காப்பது.
  
# 108 கபிலர்# 108 கபிலர்
குறத்தி மாட்டிய வறல் கடை கொள்ளிகுறமகள் அடுப்பில் எரித்த காய்ந்த கடைசி வரை எரிந்த கொள்ளிக்கட்டை
ஆரம் ஆதலின் அம் புகை அயலதுசந்தனம் என்பதால், அதனுடைய நறுமணப்புகை, பக்கத்திலிருக்கும்
சாரல் வேங்கை பூ சினை தவழும்மலைச்சரிவில் இருக்கும் வேங்கைமரத்தின் பூவையுடைய கிளைகளில் தவழும்
பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டுபறம்புமலை அவனைப் பாடியவர்க்கு உரிமையாகிவிட்டது. அறத்தை மேற்கொண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்                      5பாரியும் பரிசிலர் இரந்து வேண்டினால்
வாரேன் என்னான் அவர் வரையன்னேவரமாட்டேன் என்று கூறாமல் அவர் எல்லையில் போய் நிற்பான்.
  
# 109 கபிலர்# 109 கபிலர்
அளிதோ தானே பாரியது பறம்பேவியக்கத்தக்கது பாரியின் பறம்பு மலை!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்பெருமை கொண்ட முரசுகளையுடைய மூன்று வேந்தர்களும் ஒன்று கூடி முற்றுகையிட்டாலும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தேஉழவர் உழாமல் கிடைக்கும் பயன்கள் நான்கினை அது உடையது,
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மேஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல்விளையும்,
இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே        5இரண்டு, இனிய சுளைகளையுடைய பலாவின் பழம் பழுத்துக்கிடக்கும்,
மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மேமூன்று, செழிப்பான கொடியை உடைய வள்ளி, கீழே கிழங்கு வைத்திருக்கும்,
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்துநான்கு, அழகிய நிறத்தையுடைய நீலநிறம் பாய்ந்து தேன் முதிர்தலால் தேனடை அழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மேஇறுகிய நெடிய குன்றத்தில் தேன் சொரியும்,
வான் கண் அற்று அவன் மலையே வானத்துஅகல, நீள, உயரத்தால் வானிடத்தைப் போன்றது அவன் மலை, வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு                10மீன்களைப் போன்றவை அங்குள்ள சுனைகள், அவ்விடத்தில்
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்மரங்கள்தோறும் கட்டிய களிறுகளைக் கொண்டவர்கள் என்றாலும்
புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்இடெமெல்லாம் பரப்பிய தேரினைக் கொண்டவர்கள் என்றாலும்
தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்உங்கள் முயற்சியால் கொள்ளமுடியாது, உமது வாள் வலிமைக்குப் பயந்து அவன் தரவும்மாட்டான்
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறேஎனக்குத்தெரியும் அதனைப் பெற்றுக்கொள்ளும் வழி,
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி             15வடித்து முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழை வாசித்து
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வரநறுமணமிக்க தழைத்த கூந்தலையுடைய உமது விறலியர் உமது பின்னே வர,
ஆடினிர் பாடினிர் செலினேஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்வீர்களேயானால்
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மேநாட்டையும் மலையையும் சேர்த்தே தருவான்.
  
# 110 கபிலர்# 110 கபிலர்
கடந்து அடு தானை மூவிரும் கூடிநேர் நின்று வெல்ல வல்ல படையைக் கொண்டுள்ள வேந்தராகிய நீங்கள் மூவரும் கூடிநின்று
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதேபோரிட்டாலும் பறம்பு நாட்டை வெற்றிகொள்ள இயலாது,
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடுமுந்நூறு ஊர்களைக் கொண்டது குளிர்ந்த நல்ல பறம்பு நாடு,
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்அந்த முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றுக்கொண்டனர்,
யாமும் பாரியும் உளமே                    5நானும் பாரியும் மட்டும் இருக்கிறோம்,
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினேமலையும் உள்ளது, நீங்கள் பாடிக்கொண்டு வந்தால்.
  
  
  
  
  
  
# 111 கபிலர்# 111 கபிலர்
அளிதோ தானே பேர் இரும் குன்றேவியப்பிற்குரியது இந்தப் பெரிய கரிய குன்றம்,
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதேஅதனை வேலால் வெல்லுதல் வேந்தர்களுக்கு அரியது ஆகும்,
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்நீலத்தினது இணையான மலர்களைப் போன்ற மையுண்ட கண்களைக் கொண்ட
கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினேகிணைமகளுக்கு அது எளிது, அவள் பாடிக்கொண்டு வந்தால்.
  
# 112 பாரி மகளிர்# 112 பாரி மகளிர்
அற்றை திங்கள் அ வெண் நிலவில்போன மாதம், அந்த முழுமதி நாளில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்எம் தந்தை எங்களிடம் இருந்தார், எமது குன்றையும் பிறர் கொள்ளவில்லை,
இற்றை திங்கள் இ வெண் நிலவில்இந்த மாதம் இந்த முழுமதி நாளில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்வென்று முழக்குகின்ற முரசினையுடைய வேந்தர்கள் எமது
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே           5குன்றையும் கைப்பற்றினர், நாங்கள் எம் தந்தையையும் இழந்தோம்.
  
# 113 கபிலர்# 113 கபிலர்
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்மது இருந்த சாடியை வாய் திறக்கவும், ஆட்டுக்கிடாயை வெட்டவும்
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும்சமைத்து அமைந்து முடியாத நிறைந்த துவையலையும், ஊன் சோற்றையும்
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனிவிரும்பியபடியெல்லாம் கொடுக்கும் மிக்க செல்வம் நிறைந்து
நட்டனை-மன்னோ முன்னே இனியேஎம்மோடு நட்புடன் இருந்தாய் முன்னர்; இப்போதோ
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று         5பாரி இறந்துபோய்விட, நாங்கள் கலங்கிச் செயலிழந்து
நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சிநீரொழுகும் கண்ணுடையவராய் வணங்கி உன்னை வாழ்த்திச்
சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பேசெல்கின்றோம், வாழ்க, பெரும் புகழையுடைய பறம்புமலையே!
கோல் திரள் முன்கை குறும் தொடி மகளிர்சித்திரக்கோலால் தீட்டப்பட்ட திரண்ட முன்கையிலுள்ள குறிய வளையல்களை அணிந்த மகளிரின்
நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தேமணக்கின்ற கரிய கூந்தலைத் தீண்டுவதற்கு உரியவரை நினைத்து.
  
#114 கபிலர்# 114 கபிலர்
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரைஇங்கே நிற்பவருக்குத் தெரியும் சிறிது எல்லை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்றசென்று நிற்பவர்க்கும் தெரியும் நிச்சயமாக,
களிறு மென்று இட்ட கவளம் போலயானை மென்று துப்பிய கவளத்தின் சக்கை போல
நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல்மதுவைப் பிழிந்து போட்ட சக்கையையுடைய சிதறல்களிலிருந்து
வார் அசும்பு ஒழுகும் முன்றில்                   5நீண்டதாய் மதுச்சேறு ஒழுகும் முற்றத்தையுடைய
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றேதேர்களை வாரிவழங்கும் நாளோலக்கத்தையுடைய உயர்ந்தவனின் குன்றம்.
  
# 115 கபிலர்# 115 கபிலர்
ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார்ஒரு பக்கம் அருவி ஆரவாரிக்கும், ஒரு பக்கம்
பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார்பாணருடைய உண்கலங்கள் நிரம்ப ஊற்றுவதற்காக
வாக்க உக்க தே கள் தேறல்வடித்துவிட்டுச் சிந்திய இனிமையான கள்ளாகிய மது
கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல்கற்களை உருட்டிக்கொண்டு ஒழுகும்; பலவேல்களையும்
அண்ணல் யானை வேந்தர்க்கு                 5தலைமை பொருந்திய யானையையும் உடைய வேந்தர்களுக்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றேஇன்னான் ஆகிய இனியவனின் குன்றினில் – (ஒரு பக்கம் அருவி ஆரவாரிக்கும், ஒரு பக்கம் … … )
  
# 116 கபிலர்# 116 கபிலர்
தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளைஇனிய நீரையுடைய பெரிய ஆழமான சுனையில் பூத்த குவளையின்
கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல்மொட்டு அவிழ்ந்து புறவிதழ் ஒடிக்கப்பட்ட முழுப் பூ புரளுகின்ற அல்குலையும்
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர்மிக்க அழகையுடைய குளிர்ந்த கண்களையும் இனிய முறுவலையும் உடைய மகளிர்
புன் மூசு கவலைய முள் மிடை வேலிபுல் முளைத்து மூடிக்கிடக்கும் பலவாய்ப் பிரிந்து செல்லும் வழிகளையுடைய முள் செறிந்த வேலியினையும்,
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்                  5பஞ்சு பரந்த முற்றத்தினையுமுடைய சிறிய வீட்டில்
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்பீர்க்கங்கொடி முளைத்த சுரைக்கொடி படர்ந்த இடத்தில்
ஈத்து இலை குப்பை ஏறி உமணர்ஈச்ச மர இலைகளின் குப்பை மீது ஏறி நின்று உமணர்கள்
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோஉப்புமூடைகளை ஏற்றிக்கொண்டு வரிசையாகச் செல்லும் வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றனர்,
நோகோ யானே தேய்கமா காலைஇதைக்கண்டு வருந்துகிறேன், கெடுவதாக என் வாழ்நாள்;
பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும்              10மலர்கள் நிறைந்த சோலையில் மயில்கள் எழுந்து ஆடவும்,
பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும்தமக்குப் பழக்கமான உயர்ந்த மலைச்சரிவுகளில் குரங்குகள் தாவியோடித்திரியவும்
கலையும் கொள்ளா ஆக பலவும்குரங்குகளும் உண்டு வெறுத்துப்போய் உண்ணாத பலாப்பழங்கள்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்பயன்தரும் காலமாக இல்லாதிருந்தும் மரங்கள் விளைந்து கொடுக்கும்
யாணர் அறாஅ வியல் மலை அற்றேபுதுவருவாய் அற்றுப்போகாத அகன்ற மலையைப் போன்ற
அண்ணல் நெடு வரை ஏறி தந்தை               15தலைமையுடன் விளங்கும் நெடிய மலையில் ஏறி, தமது தந்தையாகிய
பெரிய நறவின் கூர் வேல் பாரியதுமிகுந்த கள்ளினையும், கூரிய வேலினையும் உடைய பாரியின்
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்தஅருமையை அறியாதவர்கள் போரினை ஏற்று வந்த
வலம் படு தானை வேந்தர்வெற்றியையுடைய சேனையையுடைய வேந்தரின்
பொலம் படை கலி_மா எண்ணுவோரேபொன்னால் செய்யப்பட்ட அணிகலன் அணிந்த மனம் செருக்கிய குதிரைகளை எண்ணுவோர்.
  
# 117 கபிலர்# 117 கபிலர்
மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும்கரியவன் என்னப்படும் சனிக்கோள் புகைந்தாலும், தூமகேது என்னப்படும் எரிகற்கள் தோன்றினாலும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்வெள்ளிக்கோள் தெற்குப்பக்கம் நகர்ந்தாலும்
வயல்_அகம் நிறைய புதல் பூ மலரவயலிடங்களில் நீர் நிறைய, புதர்களில் பூக்கள் மலர
மனை தலை மகவை ஈன்ற அமர் கண்வீட்டிடத்தில் கன்றினை ஈன்ற விருப்பததைச் செய்யும் கண்களைக் கொண்ட
ஆமா நெடு வரை நன் புல் ஆர                        5பசுக்களின் நீண்ட கூட்டம் நல்ல புல்லினை மேய
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிஆட்சி செம்மையாக இருந்ததால் ஆன்றோர் பெருகி,
பெயல் பிழைப்பு அறியா புன்_புலத்ததுவேதவறாமல் மழை பெய்கின்ற புன்செய்க் காடுகளைக் கொண்டது,
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையபூனைக்குட்டியின் முள் போன்ற பற்களைப் போல
பாசிலை முல்லை முகைக்கும்பசிய இலைகளைக் கொண்ட முல்லை மொட்டுவிடும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே            10நுட்பமான தொழில்திறம் உள்ள வளையல்களை அணிந்த மகளிரின் தந்தையின் நாடு.
  
# 118 கபிலர்# 118 கபிலர்
அறையும் பொறையும் மணந்த தலையகுளத்தங்கரையின் உச்சி படுத்துக்கிடக்கும் பாறைகளும் எழுந்து நிற்கும் கற்பாறைகளும் கலந்தது,
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரைகரையோ, எட்டாம் நாள் பாதி மூடிய திங்கள் போன்று, உச்சியைத் தொட்டுக்கொண்டிருக்கும் நீரை உடையது;
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோதெளிந்த நீரைக்கொண்ட அந்தக் குளம் பாதுகாப்பார் இல்லாமல் உடையும் நிலையில் உள்ளது.
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்இவ்வாறாகிப்போனது, கூர்மையான வேலையும், திரண்ட வலிமையும்,
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே           5தேரைக் கொடுக்கும் கொடைத்தன்மையையும் உடைய பாரியின் பறம்பு நாடு.
  
# 119 கபிலர்# 119 கபிலர்
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலைகார்கால மழை பெய்து ஓய்ந்த காண்பதற்கு இனிய வேளையில்
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்பயானை முகத்தின் புள்ளிகளைப் போன்று தெறுழின் பூக்கள் மலர,
செம் புற்று ஈயலின் இன் அளை புளித்துசிவந்த புற்றில் பிடித்த ஈசலை இனிய மோரில் இட்டுச்சமைத்த புளிக்கூட்டை உடையது,
மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோமெல்லிய தினையாகிய புதுவருவாயை உடையது, இனி அது கெட்டுப்போய்விடுமோ?
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல         5நிழலே இல்லாத நீண்ட வழியில் நிற்கும் தனிமரம் போல
பணை கெழு வேந்தரை இறந்தும்முரசுடைய வேந்தர்களைக் காட்டிலும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடேஇரவலர்களுக்குக் கொடுக்கும் வள்ளல் பாரியின் நாடு.
  
# 120 கபிலர்# 120 கபிலர்
வெப்புள் விளைந்த வேங்கை செம் சுவல்வெம்மை முதிர்ந்த வேங்கை மரத்தையுடைய சிவந்த மேட்டு நிலத்தில்
கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்துகார்காலத்து மழையால் மிகுந்த பெரிய அளவில் பக்குவமடைந்த ஈரத்தில்
பூழி மயங்க பல உழுது வித்திபுழுதி கலக்க பலமுறை உழுது விதைத்து
பல்லி ஆடிய பல் கிளை செவ்விபல்கள் உள்ள கலப்பையால் இலேசாக உழுது நெருங்கிய பயிர்களை விலக்கி, பல கிளைகளையுடைய நிலையில்
களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி               5களைகளை அடியோடு பறித்தலால் இலை தழைத்துப் பெருகி
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடிமென்மையான மயிலின் அண்மையில் ஈன்ற பேடையைப் போல ஓங்கி
கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்துகரிய தண்டு நீண்டு எல்லாமே ஒன்றாய்ப் பாளை விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்துகதிரின் அடியும் தலையும் குறைவில்லாமல் நிறையக் காய்த்து
வாலிதின் விளைந்த புது வரகு அரியநன்றாக விளைந்த புதிய வரகினை அறுக்கவும்,
தினை கொய்ய கவ்வை கறுப்ப அவரை            10தினையைக் கொய்யவும், எள்ளின் இளங்காய் முற்றவும், அவரையின்
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆகசெழுமையான கொடியில் வெண்மையான காய் பறிக்கும் பக்குவத்தில் இருக்கவும்
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல்நிலத்தில் புதைக்கப்பட்ட முற்றிய மதுவாகிய தேறலை
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்துபுல் வேய்ந்த குடிசைகளில் மக்கள் குடியுள்ள இடங்கள்தோறும் பருகக்கொடுக்கவும்,
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டுமணமிக்க நெய்யில் கடலை துள்ளுமாறு வறுத்துச் சேர்த்து, சோற்றை ஆக்கி உண்டு
பெரும் தோள் தாலம் பூசல் மேவர            15பெரிய தோள்களையுடைய மகளிர் உண்கலன்களைக் கழுவவும்,
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோஇவ்வாறாக வருத்தமில்லாத புதுவருவாயையுடையது இனிமேல் அழிந்துவிடும் போலும்;
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தைகரிய பலவாகிய கூந்தலையுடைய மடந்தையர்களின் தந்தையாகிய,
ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர்அசைகின்ற மூங்கில்கள் ஒலிக்கும் உயர்ந்த உச்சியையுடையனும், புலவர்கள்
பாடி ஆனா பண்பின் பகைவர்பாடி ஓயாத தன்மையையுடையவனும், பகைவர்கள்
ஓடு கழல் கம்பலை கண்ட                    20புறமுதுகிட்டு ஒடும்போது அவரின் கழல்கள் ஆரவாரிக்கும் காட்சியைக் கண்ட
செரு வெம் சேஎய் பெரு விறல் நாடேபோரை விரும்பிய முருகனைப் போன்ற பெரிய வெற்றியையும் உடையவனது நாடு.
  
  
  
  
  
  
# 121 கபிலர்# 121 கபிலர்
ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசைஒரு திசையிலிருக்கும் ஒரு வள்ளலை நினைத்து, நான்கு திசைகளிலிருந்தும்
பலரும் வருவர் பரிசில்_மாக்கள்பரிசில் பெற மக்கள் பலரும் வருவார்கள்,
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்அவர்களின் தகுதியை அறிவது மிகவும் கடினம், நிறைய
ஈதல் எளிதே மா வண் தோன்றல்அள்ளிக்கொடுப்பது மிகவும் எளிது, பெரிய வள்ளன்மை உடைய தலைவனே!
அது நற்கு அறிந்தனை ஆயின்                        5அதனை நன்கு அறிந்திருப்பாயென்றால்
பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டேபுலவர்களின் தகுதியைப் பார்க்காமல் எல்லாரையும் ஒன்றாகக் கருதுவதைத் தவிர்ப்பாயாக,
  
# 122 கபிலர்# 122 கபிலர்
கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார்கடலால் கொள்ளப்பட முடியாதது, பகைவர் கைப்பற்ற முயலமாட்டார்,
கழல் புனை திருந்து அடி காரி நின் நாடேவீரக்கழல் அணிந்த திருத்தமான அடிகளைக் கொண்ட மலையமான் திருகுடிக் காரியே! உனது நாடு
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவேவேள்வித்தீயைக் காக்கும் அந்தணர்களுடையது
வீயா திருவின் விறல் கெழு தானைகுறையாத செல்வத்தையும், வெற்றி பொருந்திய படையையும் உடைய 
மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என         5மூவேந்தருள் ஒருவன் ‘எனக்கு வலிமை சேர்க்கும் துணையாக இரு’ என்று
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடிஉன்னைப் புகழ்ந்து தருகின்ற பொருள், உனது குடியை
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவேவாழ்த்திக்கொண்டு வரும் இரவலருக்குச் சொந்தமாகும்,
வட_மீன் புரையும் கற்பின் மட மொழிவடமீனாகிய அருந்ததி விண்மீனைப் போன்ற கற்பினையும், மென்மையான மொழியினையும் உடைய
அரிவை தோள் அளவு அல்லதைஉன் மனைவியின் தோள் மட்டுமே உனக்கு உரிமையானது என்பதைத்தவிர
நினது என இலை நீ பெருமிதத்தையே           10உனக்கு என்று வேறு ஒன்றும் இல்லையெனினும் நீ பெருமிதம்கொண்டு விளங்குகிறாய். 
  
# 123 கபிலர்# 123 கபிலர்
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின்ஒரு நாளின் காலையிலே மதுவை உண்டு, நாளோலக்கத்து மகிழ்ச்சியை அனுபவிக்கும்போது
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லேதேர்களை வழங்குதல் யார்க்கும் எளியது,
தொலையா நல் இசை விளங்கு மலயன்அழியாத நல்ல புகழோடு விளங்கும் மலையமான் திருமுடிக்காரி
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர்மது அருந்திய நிலையில் இல்லாமல் வழங்கிய அணிகலன்களால் அணியப்பட்ட உயர்ந்த தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசை                       5நல்ல பயனைத் தரும் முள்ளூரின் மேல்
பட்ட மாரி உறையினும் பலவேபெய்த மழைத்துளிகளிலும் பலவாகும்.
  
# 124 கபிலர்# 124 கபிலர்
நாள் அன்று போகி புள் இடை தட்பபோன நாளோ நல்ல நாள் இல்ல, போகின்றபோதே பறவைகள் தீயசகுனம் காட்டுகின்றன,
பதன் அன்று புக்கு திறன் அன்று மொழியினும்புகுந்த நேரமோ நல்ல நேரம் இல்லை, சொன்ன மொழிகளோ திறம்பட்டதாக இல்லை,
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளஇருப்பினும் வெறுங்கையாய்த் திரும்பியதில்லை, ஒழுங்குபட
பாடு ஆன்று இரங்கும் அருவிஓசை நிறைந்து ஒலிக்கும் அருவியையுடைய
பீடு கெழு மலையன் பாடியோரே                       5பெருமை பொருந்திய மலையனைப் பாடிச் சென்றவர்கள் – (வெறுங்கையாய்த் திரும்பியதில்லை)
  
# 125 வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்# 125 வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்
பருத்தி_பெண்டின் பனுவல் அன்னபருத்தி நூற்கும் பெண்ணின் சிக்கெடுத்த பஞ்சினைப் போல
நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறைநெருப்பால் சுட்டதன் சூடு தணிந்த நிணம் படர்ந்த கொழுத்த இறைச்சித்துண்டினை
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயரநிறைய கள் ஊற்றிய உண்கலத்தோடு மாற்றி மாற்றி
உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினேஉண்போமாக, எம்முடைய தலைவனே! உன்னைக் காண்பதற்காக வந்திருக்கிறேன் –
நள்ளாதார் மிடல் சாய்ந்த                 5பகைவரின் வலிமையை அழித்த
வல்லாள நின் மகிழ் இருக்கையேவல்லவனே! நீ மகிழ்வுடன் இருக்கும் அரசவை இருக்கையின்போது;
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்குஉழுதுவிட்டு வந்த வலிமை மிக்க பகடு, வைக்கோலைத் தின்றாற்போல
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவேநல்ல அமிழ்தம் ஆவதாக, நீ மிக விரும்பி உண்ணும் கள்;
குன்றத்து அன்ன களிறு பெயரமலையைப் போன்ற யானை இறந்துபட
கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே           10எதிர்நின்று கொன்று வென்றவனும் உன்னையே புகழ்ந்து கூறுவான்
வெலீஇயோன் இவன் என‘நம்மை வெற்றிபெறச் செய்தவன் இவன்தான்’ என்று;
கழல் அணி பொலிந்த சேவடி நிலம் கவர்புவீரக்கழலாகிய அணிகலனால் சிறந்த சிவந்த அடியால் போர்க்களத்தைக் கைக்கொள்வதற்காக
விரைந்து வந்து சமம் தாங்கியவிரைந்து வந்து போரைத் தடுத்த
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்வலிய வேலினையுடைய மலையன்மட்டும் இல்லாமற்போயிருந்தால்
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என            15நல்ல போரினை வெல்லுதல் நமக்கு எளிதாயிருந்திருக்கும் என்று
தோற்றோன் தானும் நின் கூறும்மேதோற்றுப்போனவனும் உன்னையே புகழ்ந்து கூறுவான்,
தொலைஇயோன் இவன் எனநம்மைத் தோல்வியுறச்செய்தவன் இவன் என்று;
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்குஆதலால் நீ ஒருவனே ஒப்பற்றவன், பெருமானே! பெரும் மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைஇருப்பிடமாக அமைந்த உயர்ந்த மலையையுடைய
திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே            20சிறப்புக்குத் தகுதியான செவ்வேளைப் போன்றவனே! உன்னை நட்பாகவும் பகையாகவும் பெற்றவர்க்கு