குறுந்தொகை 201-250

  
# 201 குறிஞ்சி# 201 குறிஞ்சி
அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டிஅமிழ்தம் உண்பாளாக, நமக்கு அடுத்தவீட்டுக்காரி;
பால் கலப்பு அன்ன தே கொக்கு அருந்துபுபாலைக் கலந்தது போன்ற தேமாங்கனியை உண்டு
நீல மென் சிறை வள் உகிர் பறவைநீலநிறமுள்ள மெல்லிய சிறகையும், வளைந்த நகங்களையும் கொண்ட வௌவால்
நெல்லி அம் புளி மாந்தி அயலதுநெல்லியின் புளித்த காய்களை உண்டு, அருகிலிருக்கும்
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்முள் இல்லாத அழகிய பருத்த மூங்கிலில் தொங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலைமூங்கிழ் கழைகள் உயர்ந்து நிற்கும் சோலையுள்ள
மலை கெழு நாடனை வரும் என்றோளேமலையைச் சேர்ந்த நாட்டுக்காரன் (மணமுடிக்க)வருவான் என்று சொன்னதற்காக-
  
# அள்ளூர் நன்முல்லை# அள்ளூர் நன்முல்லை
# 202 மருதம்# 202 மருதம்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சேநோகும் என் நெஞ்சம்; நோகும் என் நெஞ்சம்;
புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிபுஞ்சை நிலத்தில் அடர்ந்து படர்ந்த சிறிய இலையைக் கொண்ட நெருஞ்சியின்
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்குகண்ணுக்கு இனிய புதுமலர் பின்னர் முள்ளினைத் தருவதைப் போல்
இனிய செய்த நம் காதலர்இனியவற்றைச் செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சேஇப்பொழுது இன்னதனவற்றையும் செய்வதால், நோகும் என் நெஞ்சம்.
  
# நெடும்பல்லியத்தன்# நெடும்பல்லியத்தன்
# 203 மருதம்# 203 மருதம்
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்மலைகள் இடையிட்டுக்கிடக்கும் தொலைவிலுள்ள நாட்டினர் அல்லர்;
மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர்மரங்களின் உச்சி காணப்படாத ஊர்க்காரரும் அல்லர்;
கண்ணின் காண நண்ணு_வழி இருந்தும்கண்ணில் காணும்படியான அருகிலுள்ள இடத்தில் இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போலகடவுளைச் சேர்ந்த துறவிகள் போல
ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்குஒதுங்கியவனாய் வாழும் என் தலைவனுக்கு
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலேஇரங்கும் தன்மையுடையவளாய் இருந்தேன் முன்பு ஒரு காலத்தில் –
  
# மிளை பெரும் கந்தன்# மிளை பெரும் கந்தன்
# 204 குறிஞ்சி# 204 குறிஞ்சி
காமம் காமம் என்ப காமம்காமம், காமம் என்று கூறுகிறார்கள், காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்தீண்டிவருத்தும் தெய்வமோ, தீராத நோயோ அல்ல; எண்ணிப்பார்த்தால்
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல்பழைய மேட்டு நிலத்தில் செழித்துவளர்ந்த முற்றாத இளம் புல்லைப்
மூதா தைவந்த ஆங்குபல்லில்லாத கிழட்டுப்பசு நாவினால் நக்கிப்பார்ப்பதைப் போன்று
விருந்தே காமம் பெரும் தோளோயேபுதுமையுடையதே காமம், பெரிய தோளையுடைய தலைவனே!# மிளை பெரும் கந்தன்
  
# உலோச்சன்# உலோச்சன்
# 205 நெய்தல்# 205 நெய்தல்
மின்னு செய் கருவிய பெயல் மழை தூங்கமின்னுதலைச் செய்யும் கூட்டமான மழைபெய்யக்கூடிய மேகங்கள் தொங்கிநிற்க,
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்குவானத்தில் திரியும் அன்னப்பறவை சிறகுகளை உயர்த்தி எழுவதைப்போல்
பொலம் படை பொலிந்த வெண் தேர் ஏறிபொன் தகட்டால் பொலிந்த வெள்ளைத் தேரில் ஏறி
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்பகலங்கிய கடலின் நீர்த்துளிகள் சக்கரங்களை நனைக்க,
இனி சென்றனனே இடு மணல் சேர்ப்பன்இப்பொழுதுதான் பிரிந்து சென்றான், குவித்த மணலையுடை கடற்கரைத் தலைவன்;
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என்(இவ்வளவு விரைவாக) எப்படி அறிந்துகொண்டதோ? தோழி! என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பேதேன்மணம் கமழும் அழகிய நெற்றியில் படர்ந்தது (பிரிவினாலாகிய) பசலை – 
  
# ஐயூர் முடவன்# ஐயூர் முடவன்
# 206 குறிஞ்சி# 206 குறிஞ்சி
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவிஅமிழ்தத்தைப் போன்றன அழகிய இனிய சொற்கள்;
அன்ன இனியோள் குணனும் இன்னஅப்படிப்பட்டன அந்த இனியவளின் குணமும்; இத்தகைய
இன்னா அரும் படர் செய்யும் ஆயின்இன்னாதனவாகிய பொறுத்தற்கரிய துன்பத்தைச் செய்யுமாயின்,
உடன் உறைவு அரிதே காமம்சேர்ந்து வாழ்வதற்கு அரியது இந்தக் காமம்;
குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரேகாமப்படுவதைத் தவிருங்கள், அறிவுடையோரே!
  
# உறையன்# உறையன்
# 207 பாலை# 207 பாலை
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்றுசொல்லிவிட்டுச் சென்றால் செல்வது முடியாததாகும் என்று கூறி,
அத்த ஓமை அம் கவட்டு இருந்தபாலைநிலத்திலுள்ள ஓமை மரத்தின் அழகிய கிளையில் இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளிதன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிந்த அழைப்பொலி
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும்அவ்வழியில் செல்லும் மக்களுக்கு வழித்துணையாகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறிபாறைகளின் அருகே உள்ளது நீண்ட நாட்களாய் புழக்கத்திலிருக்கும் சிறிய வழியில்
நல் அடி பொறிப்ப தாஅய்தம் நல்ல கால்தடம் படுமாறு விரைந்து
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரேசென்றார் என்று கேட்ட நமக்கு வேண்டியவர் பலரே!
  
# கபிலர்# கபிலர்
# 208 குறிஞ்சி# 208 குறிஞ்சி
ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்து(தலைவனோடு) ஒத்துப்போகமாட்டேன் அல்லேன்; ஒத்துப்போவேன்; குன்றினில்
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கைசண்டையிடும் ஆண்யானைகள் மிதித்து நெரிந்துபோன அடிமரத்தையுடைய வேங்கைமரம்
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார்குறவரின் மகளிர் தம் கூந்தலில் வைத்துக்கொள்வதற்காக,
நின்று கொய மலரும் நாடனொடுநின்றுகொண்டே கொய்யும்படி மலரும் நாட்டைச் சேர்ந்தவனோடு
ஒன்றேன் தோழி ஒன்றினானேஒத்துப்போகமாட்டேன், தோழி! (வேறு மணம் என்ற) அந்த ஒன்றனுக்குமட்டும்.
  
# பாலை பாடிய பெருங்கடுங்கோ# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 209 பாலை# 209 பாலை
சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய்பாலைநிலைத்து வழியில் உள்ள நெல்லியின் அழகிய பசிய காய்கள்
மற புலி குருளை கோள் இடம் கரக்கும்வீரமிக்க புலிக்குட்டி இரைகொள்ளுமிடத்தை மறைக்கும்
இறப்பு அரும் குன்றம் இறந்த யாமேகடப்பதற்கு அரிய குன்றத்தைக் கடந்த நாம்
குறு நடை புள் உள்ளலமே நெறி முதல்சிறுநடையாளே! பறவையின் நிமித்தத்தை எண்ணிப்பார்க்கவில்லை; வழியின் தொடக்கத்திலிருக்கும்
கடற்றில் கலித்த முட சினை வெட்சிகாட்டில் தழைத்த வளைந்த கிளைகளையுடைய வெட்சியின்
தளை அவிழ் பல் போது கமழும்முறுக்கவிழும் பல அரும்புகள் மணங்கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பேகரிய, தழைத்த கூந்தலையுடைய தலைவியின் காதலையே (எண்ணியிருந்தோம்)-
  
# காக்கை பாடினியார் நச்செள்ளையார்# காக்கை பாடினியார் நச்செள்ளையார்
# 210 முல்லை# 210 முல்லை
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்திண்ணிய தேரையுடைய நள்ளியின் புஞ்செய்க்காட்டிலுள்ள இடையர்களின்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டிகூட்டமான பசுக்கள் கொடுத்த நெய்யோடு, தொண்டி
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறுமுழுவதும் ஒருசேர விளைந்த வெண்ணெல்லால் ஆக்கிய சூடான      சோற்றை
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழிஏழு பாத்திரங்களில் வைத்து ஏந்திக் கொடுத்தாலும், அது சிறிதாகும் என் தோழியே!
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்குஉனது பெரிய தோள்களை நெகிழ்த்த துன்பம் தீர
விருந்து வர கரைந்த காக்கையது பலியேவிருந்தினர் வரும்படி கரைந்த காக்கைக்கு இடும் பலி – 
  
# காவன் முல்லை பூதனார்# காவன் முல்லை பூதனார்
# 211 பாலை# 211 பாலை
அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழஅழகிய, சிலவான முடிந்துவிட்ட கூந்தலையுடைய உனது ஆய்ந்தணிந்த வளைகள் நெகிழும்படி
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்வருந்தியும் நமக்கு அருளைச் செய்யாமல் பிரிந்துசென்றவரின் பொருட்டாக அஞ்சுதலைத்
எஞ்சினம் வாழி தோழி எஞ்சாதுதவிர்ந்தோம், வாழ்க தோழியே!, மீதமின்றி முற்றிலுமாகத்
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினைதீய்ந்துபோன மராமரத்தின் ஓங்கிய வெம்பிப்போன கிளையில்
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதிவேனிற்காலத்து ஒற்றைப் பூங்கொத்தினைத் தேனுடன் ஊதி
ஆராது பெயரும் தும்பிவயிறு நிரம்பாமல் திரும்பிச்செல்லும் தும்பியுடன்,
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரேநீர் இல்லாத இடங்களையுமுடைய பாலைநிலத்துவழியில் சென்றோர் –
  
# நெய்தல் கார்க்கியன்# நெய்தல் கார்க்கியன்
# 212 நெய்தல்# 212 நெய்தல்
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடும் தேர்தலைவன் வந்த கொடுஞ்சியையுடைய நீண்ட தேர்
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்பதெளிந்த நீரையுடைய கடலின் அடைந்தகரையில் தெளிந்த ஓசையுள்ள மணிகள் ஒலிக்க,
காண வந்து நாண பெயரும்எம்மைக் காண வந்து, நாம் நாணியதால் (காணாமலேயே) திரும்பிச்செல்லும்,
அளிதோ தானே காமம்இரங்கத்தக்கது (அவன் கொண்ட) காமம்; 
விளிவது மன்ற நோகோ யானேஅழியக்கடவது நிச்சயமாக; வருந்துகிறேன் நான்.
  
# கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்# கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்
# 213 பாலை# 213 பாலை
நசை நன்கு உடையர் தோழி ஞெரேரென(உன்பால்) விருப்பம் மிக உடையவர் தோழி! விரைவாக
கவை தலை முது கலை காலின் ஒற்றிகிளைத்த கொம்பையுடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான் காலால் உதைத்து
பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல்பசிநோயைத் தீர்த்துக்கொள்ள வளைத்த பருத்த பெரிய மரப்பட்டையைத்
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின்தன் குட்டி உண்டபின் ஒழிந்ததை உண்டு குற்றமற்ற நெஞ்சத்தோடு
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகிதுள்ளி நடக்கும் இயல்பையுடைய தன் குட்டிக்கு நிழல் ஆகி
நின்று வெயில் கழிக்கும் என்ப நம்நின்று வெயிலைக் கழிக்கும் என்பர் நம்மோடு (கொள்ளும்)
இன் துயில் முனிநர் சென்ற ஆறேஇனிய துயிலையும் வெறுத்துச் சென்ற அவர் போன வழி – 
  
# கூடலுலுர் கிழார்# கூடலுலுர் கிழார்
# 214 குறிஞ்சி# 214 குறிஞ்சி
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்தியமரங்களை வெட்டிய குறவன், அந்த நிலத்தை உழுது விதைத்த
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ்ஒளிரும் கதிரையுடைய தினையைக் காக்கின்ற, முதுகில் விழும்
அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சிஅழகிய சிலவான கூந்தலையும் மெலிந்த சாயலையும் கொண்ட கொடிச்சியின்
திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவிதிருத்தமான அணிகலனையுடைய அல்குலுக்குப் பெரிய தழையுடையை அளித்து,
செயலை முழு_முதல் ஒழிய அயலதுஅசோகின் பெருத்த அடிமரம் இலையற்று இருக்க, அதற்கு அடுத்து(ள்ள கடம்பமரத்துக்கு)
அரலை மாலை சூட்டிகழலை மாலை சூட்டி (முருகனுக்கு வெறியெடுத்து)
ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரேமயக்கமுற்றது இந்த ஆரவாரத்தையுடைய ஊர்.
  
# மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்# மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
# 215 பாலை# 215 பாலை
படரும் பைபய பெயரும் சுடரும்உன் துன்பமும் உன்னைவிட்டு மெல்லமெல்ல நீங்கும், ஒளிவிடும்
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர்ஞாயிறும் பெரிய மலையில் சென்று மறையும்; இன்று அவர்
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல்வருவார் அல்லவா தோழி? நீர் இல்லாத
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானைவறிய குளத்தைத் துழாவிய ஒளிரும் கொம்புள்ள யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇசிறிய மலையின் பக்கத்தில் தான் விரும்பிய துணையைத் தழுவி
கொடு வரி இரும் புலி காக்கும்வளைந்த வரிகளையுஇடைய பெரிய புலியினின்றும் காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரேநெடிய மலையின் பக்கத்தேயுள்ள பாலைநிலத்தைக் கடந்து சென்றவர்-
  
# கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்# கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்
# 216 பாலை# 216 பாலை
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலைதலைவர், கேடில்லாத சிறந்த பொருளைக் கொணருவதற்காக, பசிய இலைகளையுடைய
வாடா வள்ளி அம் காடு இறந்தோரேவாடாத வள்ளிக்கொடி படர்ந்த அழகிய காட்டைக் கடந்துசென்றார்;
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும்நானோ, தொகுதியான ஒளியையுடைய வளையல்கள் நெகிழ்ந்துவீழ, ஒவ்வொருநாளும்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினேபடுத்தலுக்குரிய கட்டிலில் வருத்தமுற்று இருக்கிறேன்;
அன்னள் அளியள் என்னாது மா மழைஅப்படிப்பட்டவள் இரங்கத்தக்கவள் என்று எண்ணாமல், பெரிய மழை
இன்னும் பெய்யும் முழங்கிஇன்னும் பெய்கிறது, இடிகளை முழக்கி
மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தேமின்னவும் செய்கிறது தோழி, என் இனிய உயிரைக் கொள்வதற்காக-
  
# தங்கால் முடக்கொல்லனார்# தங்கால் முடக்கொல்லனார்
# 217 குறிஞ்சி# 217 குறிஞ்சி
தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும்தினைக்காக வரும் கிளிகளை ஓட்டவேண்டியிருப்பின் பகலும் சரியாக அமையும்;
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்இரவில் நீ வந்தால் வழியிலேற்படும் துன்பங்களுக்காக அஞ்சுகிறேன்;இ
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு எனஎன்ன செய்யலாம் என் துன்பந்தரும் காமநோய்க்கு என்று
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்துஅங்கு நான் கூறிய அதற்கு, வேறொன்றை நினைத்து
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்றஉயர்ந்த மலைநாட்டுத் தலைவன் பெருமூச்சுவிட்டான்;
ஐதே காமம் யானேமிகவும் நுட்பமானது காமநோய், நான்
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே(அச்செயல்)மிக்க அறிவுடைமையும், பழியும் ஆவது என்று கூறினேன்.
  
# கொற்றன்# கொற்றன்
# 218 பாலை# 218 பாலை
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குபிளவுகளையும், குகைகளையும் உள்ள மலையின் சரிவிலுள்ள வலிமை பொருந்திய சூலையுடையவளுக்கு
கடனும் பூணாம் கை நூல் யாவாம்பலிக்கடன் நேர்தலையும் செய்யோம்; காப்புநூலும் கட்டிக்கொள்ளோம்;
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்பறவை நிமித்தமும் பாரோம்; விரிச்சிகேட்கவும் நிற்கமாட்டோம்;
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழிஇவற்றை நினைத்துப்பார்க்கவும்மாட்டோம்; தோழி!
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்றுஉயிர்க்கு உயிர் போன்றவர் ஆதலால், தம்மை இன்றி
இமைப்பு வரை அமையா நம்_வயின்இமைப்பொழுதும் பிரிந்திருக்காத நம்மை
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டேமறந்து அங்கு இருப்பதற்கு ஆற்றலுள்ளோருக்காக – 
  
# வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்# வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்
# 219 நெய்தல்# 219 நெய்தல்
பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்பசலைநோய் என் மேனியில் இருக்கிறது; விருப்பமோ
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவேதலைவருடைய அன்பில்லாத நெஞ்சமெனும் அடையமுடியாத இடத்தில் உள்ளது.
செறிவும் சேண் இகந்தன்றே அறிவேஎன் பெண்மை அடக்கமோ என்னைவிட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டது; என் அறிவும்
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கேதலைவர் இருக்குமிடம் செல்வோம், எழுக என்று, இங்கு
வல்லா கூறி இருக்கும் அள் இலைநடக்காததைச் சொல்லிக்கொண்டு என்னுடன் இருக்கும்; முள்ளையுடைய இலை பொருந்திய
தடவு நிலை தாழை சேர்ப்பற்குமுடங்கிய நிலையையுடைய தாழைகளையுடைய நெய்தல் தலைவருக்கு
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினேஇதுதான் நேரம், தோழி! எப்படி இருக்கிறீர் என்று கேட்க-
  
# ஒக்கூர் மாசாத்தியார்# ஒக்கூர் மாசாத்தியார்
# 220 முல்லை# 220 முல்லை
பழ மழை கலித்த புது புன வரகின்முன்பு பெய்த மழையால் தழைத்த புதிய நிலத்து வரகின்
இரலை மேய்ந்த குறை தலை பாவைஆண்மான் மேய்ந்ததால் குறைந்த தலையையுடைய பாவையாகிய
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லைகதிர் அரிந்த தாள் சேர்ந்த பக்கத்தில் பூத்த முல்லைக்கொடியின்
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணிகாட்டுப்பூனை சிரித்ததைப் போன்ற பசிய பூவின் மெல்லிய பிணிப்பையுடைய
குறு முகை அவிழ்ந்த நறு மலர் புறவின்குறிய அரும்புகள் மலர்ந்து நின்ற மணமுள்ள மலர்களையுடைய முல்லைநிலத்தில்
வண்டு சூழ் மாலையும் வாரார்வண்டுகள் சுற்றித்திரியும் மாலையிலும் வாரார்;
கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரேகண்டாயா தோழி! பொருள்தேட நம்மைப் பிரிந்துசென்றோர் –
  
# உறையூர் முதுகொற்றன்# உறையூர் முதுகொற்றன்
# 221 முல்லை# 221 முல்லை
அவரோ வாரார் முல்லையும் பூத்தனதலைவரோ வரவில்லை; முல்லையும் பூத்தன;
பறி உடை கையர் மறி இனத்து ஒழியபறியோலையைக் கையிலுடைய இடையர்கள் குட்டிகளையுடைய மந்தையிடத்துத் தங்கி,
பாலொடு வந்து கூழொடு பெயரும்பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உணவோடு திரும்பிச்செல்லும்
ஆடு உடை இடை_மகன் சென்னிஆடுகளையுடைய இடையனது தலையுச்சியில்
சூடிய எல்லாம் சிறு பசு முகையேசூடியிருப்பன எல்லாம் சிறிய பசிய மொட்டுக்களே!
  
# சிறைக்குடி ஆந்தையார்# சிறைக்குடி ஆந்தையார்
# 222 குறிஞ்சி# 222 குறிஞ்சி
தலை புணை கொளினே தலை புணை கொள்ளும்(தோழியானவள்)தெப்பத்தின் தலைப்பைப் பிடித்தால், தானும் அத் தலைப்பைப் பிடிப்பாள்;
கடை புணை கொளினே கடை புணை கொள்ளும்தெப்பத்தின் கடைப்பகுதியைப் பிடித்தால் தானும் அக் கடைப்பகுதியைப் பிடிப்பாள்;
புணை கைவிட்டு புனலோடு ஒழுகின்தெப்பதைக் கைவிட்டு நீரோடு சென்றால்,
ஆண்டும் வருகுவள் போலும் மாண்டஅங்கும் செல்வாள் போலவே இருந்தாள்; சிறப்புவாய்ந்த
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகைமழைக்காலத்துப் பிச்சியின் நீரொழுகும் கொழுத்த அரும்பின்
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்சிவந்த முதுகைப் போன்ற செழித்த கடையையும் குளிர்ச்சியையும் உடைய கண்களைக் கொண்ட
துளி தலை தலைஇய தளிர் அன்னோளேமழைத்துளி தன்னிடத்தே பெய்யப்பெற்ற மாந்தளிரைப் போன்றவள் –
  
# மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகன்# மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகன்
# 223 குறிஞ்சி# 223 குறிஞ்சி
பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில்நமது பெரிய ஊரினர் கொண்ட ஆரவாரம் மிக்க திருவிழாவுக்குப்
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண்போவோம், போவோம் என்கிறாய்; முன்பு இங்கே
நல்லோர் நல்ல பலவால் தில்லநல்லோர்கள் கூறிய பல நல்லசொற்கள் இருந்தன;
தழலும் தட்டையும் முறியும் தந்து இவைகிளிகளை விரட்டும் தழலும், தட்டையும் ஆகிவற்றோடே தழையும் தந்து இவை
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறிஉனக்குப் பொருந்துவன என்று பொய்யானவற்றைக் கூறி
அன்னை ஓம்பிய ஆய் நலம்அன்னை பாதுகாத்த ஆய்வதற்குரிய பெண்மை நலத்தை
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியேதலைவன் கவர்ந்துகொண்டான், நாம் இப்படியானோம் இப்பொழுது.
  
# கூவன் மைந்தன்# கூவன் மைந்தன்
# 224 பாலை# 224 பாலை
கவலை யாத்த அவல நீள் இடைபிரிந்துசெல்லும் வழிகளில் யாமரங்களைக் கொண்ட அவலத்தைக் கொண்ட நீண்ட வெளியில்
சென்றோர் கொடுமை எற்றி துஞ்சாசென்ற தலைவனின் கொடுமையை எண்ணித் தூங்காத
நோயினும் நோய் ஆகின்றே கூவல்வருத்தத்தினும், மிகுந்த வருத்தமாகிறது; கிணற்றில் விழுந்த
குரால் ஆன் படு துயர் இராவில் கண்டகபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட
உயர்திணை ஊமன் போலஊமை மகனைப் போல
துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கேதுயரத்தைப் பொறுக்கமுடியவில்லை, தோழியின் வருத்தத்தைக் கண்டு –
  
# கபிலர்# கபிலர்
# 225 குறிஞ்சி# 225 குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த முன்றில்கன்றானது, பாலுள்ள தன் மடியைக் குடிக்க, முற்றத்தில்
தினை பிடி உண்ணும் பெரும் கல் நாடகாயவைத்த தினையைப் பெண்யானை உண்ணும் பெரும் பாறைகளைக் கொண்ட நாட்டினனே!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்தனக்குக் கேடுவந்தபோது தான் பெற்ற உதவியை, அரசுக்கட்டிலின்
வீறு பெற்று மறந்த மன்னன் போலசிறப்பைப் பெற்றபின் மறந்துபோன மன்னனைப் போல
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர்யாம் செய்த நன்றியை மறந்து பிரியாமலிருந்தால், மெல்லிய சிறப்பையுடைய
கலி மயில் கலாவத்து அன்ன இவள்ஆரவாரிக்கும் மயிலின் தோகையைப் போன்ற இவளின்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கேதழைத்த மென்மையான கூந்தல் உரியவாகும் உனக்கு – 
  
# மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்# மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்
# 226 நெய்தல்# 226 நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும் வேய் எனபூவினை ஒத்திருந்தன கண்கள்; மூங்கிலோ என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை எனஈடில்லா அழகை எய்தியிருந்தன தோள்கள்; இளம்பிறை என்னும்படி
மதி மயக்கு_உறூஉம் நுதலும் நன்றும்அறிவினை மயக்கியது நெற்றி; மிகவும்
நல்ல-மன் வாழி தோழி அல்கலும்நல்லவையாக இருந்தன – வாழ்க தோழியே!, நாள்தோறும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூமோதிச்செல்லும் அலைகள் தாக்கிய தாழையின் வெண்மையான பூ
குருகு என மலரும் பெரும் துறைகொக்கினைப் போல் மலரும் பெரிய நீர்த்துறையையுடைய
விரிநீர் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கேஅகன்ற நீர்ப்பரப்பின் தலைவனோடு நாம் நகைத்து மகிழாததற்கு முன்பு – 
  
# ஓத ஞானி# ஓத ஞானி
# 227 நெய்தல்# 227 நெய்தல்
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமிபுதிய பூணைப் பதித்ததைப் போன்ற பொன் விளிம்பினையுடைய சக்கரங்களின்
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்தவாளைப் போன்ற முகம் துண்டாக்கியதால் கொழுத்த இதழ்கள் குறைப்பட்டு
கூழை நெய்தலும் உடைத்து இவண்மூளியாகிப்போன நெய்தலை உடையது, இங்கே
தேரோன் போகிய கானலானேதேரில்வந்தவன் சென்ற கடற்கரையில் – 
  
# செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்# செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்
# 228 நெய்தல்# 228 நெய்தல்
வீழ் தாழ் தாழை ஊழ்_உறு கொழு முகைவிழுதுகள் தொங்கும் தாழையின் மலரும்நிலையிலுள்ள செழுமையான மொட்டு
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்கொக்குகள் தம் சிறகைக் கோதும்போது விரியும் இறகுகள் போன்று மடல் அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்கடற்கரையை ஒட்டிய சிறுகுடியின் முற்றத்தில்
திரை வந்து பெயரும் என்ப நம் துறந்துஅலைகள் வந்து மோதிச் செல்லும் என்பார்கள்; நம்மைப் பிரிந்து
நெடும் சேண் நாட்டார் ஆயினும்மிகவும் தொலைவிலுள்ள நாட்டில் இருந்தாலும்
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டேநம் நெஞ்சிற்கு மிகவும் அருகில் உள்ளவரின் குளிர்ந்த கடலையுடைய இந்த இடத்தில் –
  
# மோதாசனார்# மோதாசனார்
# 229 பாலை# 229 பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன்இவன் இவளின் பின்னிய கூந்தலைப் பற்றி இழுக்கவும், இவள் இவனது
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்சீவப்படாத தலையின் மயிரைப் பற்றி வளைத்துவிட்டு ஓடவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராதுஅன்புமிக்க செவிலித்தாயர் விலக்கிவிடவும் விலகாது
ஏது இல் சிறு செரு உறுப-மன்னோகாரணமின்றி சிறிய சண்டையினைச் செய்வர்;
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல்நல்லது செய்திருக்கின்றாய் ஊழ்வினையே! மென்மையான இயல்புகொண்ட
துணை மலர் பிணையல் அன்ன இவர்இரட்டை மலர்மாலைகள் போன்று, இவர்களின்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயேமணம்புரிந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையைக் காட்டியதால் – 
  
# அறிவுடை நம்பி# அறிவுடை நம்பி
# 230 நெய்தல்# 230 நெய்தல்
அம்ம வாழி தோழி கொண்கன்கேட்பாயாக தோழியே! வாழ்க! நம் தலைவன்
தான் அது துணிகுவன் அல்லன் யான் என்தானே அப்படிச் செய்யத் துணிபவன் அல்லன்: நான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமிஅறிவின்மையால் அந்தப் பெருந்தகையைப் பொருந்தி
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோஅவன் வருந்தும்படி ஒன்று செய்துவிட்டேன் என நினைக்கிறேன்;
வய சுறா வழங்கு நீர் அத்தம்வலிமையுள்ள சுறாமீன்கள் திரிகின்ற நீரையுடைய வழியாக
தவ சில் நாளினன் வரவு அறியானேமிகச் சில நாட்களாக வருவதை அறியாமற்போய்விட்டான்.
  
# பாலை பாடிய பெருங்கடுங்கோ# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 231 மருதம்# 231 மருதம்
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்ஒரே ஊரில் இருந்தாலும் நம் தெருப்பக்கம் வாரார்;
சேரி வரினும் ஆர முயங்கார்அப்படியே நம் தெருப்பக்கம் வந்தாலும் நம்மை ஆரத்தழுவுவாரில்லை;
ஏதிலாளர் சுடலை போலயாரோ ஒருவருடைய சுடுகாட்டைக் கண்டு செல்வார் போல
காணா கழிப-மன்னே நாண் அட்டுகண்டும் காணாததுபோலச் செல்கிறார். எனது நாணத்தைக் கொன்று 
நல் அறிவு இழந்த காமம்நல்லறிவை இழந்த என் காமம்,
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவேவில்லினின்றும் வெளிப்பட்ட அம்பினைப்போல் சென்று நெடுந்தொலைவு விழுந்தது.
  
# ஊண்பித்தை# ஊண்பித்தை
# 232 பாலை# 232 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும்நம்மை நினைத்தாரோ? தோழி! நினைத்தும்
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோவாய்த்தல் கூடிவராததால் வராமலிருக்கிறாரோ?
மரல் புகா அருந்திய மா எருத்து இரலைமரல்கொடியை உணவாக அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான்
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சியஉரலைப் போன்ற காலைக் கொண்ட யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும்யாமரத்தின் வரிவரியான நிழலில் துயிலும்
மா இரும் சோலை மலை இறந்தோரேபெரிய இருண்ட சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்றவர் –
  
# பேயன்# பேயன்
# 233 முல்லை# 233 முல்லை
கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழிகவலைக் கிழங்கைத் தோண்டிய அகன்ற வாயையுள்ள சிறிய குழி,
கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர்கொன்றையின் ஒளிரும் பூக்கள் பரவியதால், செல்வரின்
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்னபொன்னை இட்டுவைக்கும்  பேழையின் மூடியைத் திறந்துவைத்ததைப் போன்று
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்குகார்காலத்தை எதிர்கொள்ளும் முல்லைநிலத்தில் உள்ளது – பெரியவர்களுக்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்நீருடன் சொரிந்து மிஞ்சிய பொருளையும், எல்லாருக்கும்
வரை கோள் அறியா சொன்றிவரையறுத்துக்கொள்ளுதலை அறியாத சோற்றினையும் உடைய
நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரேவரிசைப்பட்ட திரண்ட குறிய வளையலையுடையவளின் தந்தையின் ஊர் – 
  
# மிளைப்பெரும் கந்தன்# மிளைப்பெரும் கந்தன்
# 234 முல்லை# 234 முல்லை
சுடர் செல் வானம் சேப்ப படர் கூர்ந்துஞாயிறு சென்றுமறைந்த வானம் சிவந்து கிடக்கத் துன்பமுற்று
எல் அறு பொழுதின் முல்லை மலரும்பகற்பொழுது அற்றுப்போகும் பொழுதினை முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கியோரேமாலைப்பொழுது என்று சொல்வர் அறிமயங்கியோர்;
குடுமி கோழி நெடு நகர் இயம்பும்கொண்டையையுடைய சேவல் நெடிய நகரில் கூவிஅறிவிக்கும்
பெரும் புலர் விடியலும் மாலைபெரியதாகப் புலரும் விடியற்காலமும் மாலைநேரமே;
பகலும் மாலை துணை இலோர்க்கேபகலெல்லாம் மாலைநேரமே, துணை இல்லாதவர்களுக்கு –
  
# மாயேண்டன்# மாயேண்டன்
# 235 பாலை# 235 பாலை
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின்தலைவியை வருத்தாமல் காப்பாயாக! வாழ்க நீ வாடையே! பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிதொங்குகின்ற சட்டையைப் போன்றிருக்கும் தூய வெள்ளிய அருவி ஓடும்
கல் உயர் நண்ணியதுவே நெல்லிமலையின் உச்சிக்கு அருகிலுள்ளது  – நெல்லிக்காயை
மரை_இனம் ஆரும் முன்றில்மரைக் கூட்டங்கள் உண்ணும் முற்றத்தையுடைய
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரேபுல் வேய்ந்த குடிசைகளையுடைய நல்லவளின் ஊர் –  
  
# நரிவெரூஉத்தலையார்# நரிவெரூஉத்தலையார்
# 236 நெய்தல்# 236 நெய்தல்
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீஎம்மை விட்டுவிட்டுப் பிரியும் நாள் வருக! அதனை நீ
நேர்ந்தனை ஆயின் தந்தனை சென்மோமிகவும் வேண்டிப் பெற்றிருந்தால், தந்துவிட்டுச் செல் –
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரைமலையைப் போல குவித்திருக்கும் அடைத்தகரைமீது
நின்ற புன்னை நிலம் தோய் படு சினைநின்றிருக்கும் புன்னையின் நிலத்தைத்தோய்ந்த தாழ்ந்த கிளையில்
வம்ப நாரை சேக்கும்புதிய நாரை தங்கும்
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனேகுளிர்ந்த கடற்பகுதியையுடைய தலைவனே!  நீ நுகர்ந்த எனது பெண்மைநலனை –
  
# அள்ளூர் நன்முல்லை# அள்ளூர் நன்முல்லை
# 237 பாலை# 237 பாலை
அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇயஅச்சம் என்பதை அறியாது, தான் விரும்பும் தலைவியைத் தழுவுவதற்காக,
நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சியநெஞ்சு நம்மைவிட்டுப் பிரிந்துசென்றது; ஆனாலும், எஞ்சி நின்ற
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும்கைகளால் கட்டிக்கொள்ளுதல் நெகிழ்ந்தால் அதனால் என்ன பயன்? மிகவும்
சேய அம்ம இருவாம் இடையேதொலைவானது இருவருக்குக்கும் இடையேயுள்ள தூரம்,
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்புபெரிய கடல் அலையைப் போன்று முழங்கி, வலப்பக்கமாய் எழுந்து,
கோள் புலி வழங்கும் சோலைகொலைசெய்யும் புலி திரியும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவேஎத்தனை என்று எண்ணுவேன், தலைவியை முயங்குவதற்கு இடையிலே உள்ள அந்தத் தடைகள்-
  
# குன்றியன்# குன்றியன்
# 238 மருதம்# 238 மருதம்
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கைபச்சை அவலை இடித்த கரிய வைரம்பாய்ந்த உலக்கைகளை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றிஆராய்கின்ற கழனியின் வரப்பில் சாய்த்துக் கிடத்தி
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்ஒளிரும் வளையலை அணிந்த மகளிர் மணலில் விளையாடும்
தொண்டி அன்ன என் நலம் தந்துதொண்டியைப் போன்ற என் பெண்மைநலத்தைத் தந்துவிட்டு
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளேஎடுத்துக்கொண்டு செல்க, தலைவனே! உனது சூளுரையை – 
  
# ஆசிரியன் பெருங்கண்ணன்# ஆசிரியன் பெருங்கண்ணன்
# 239 குறிஞ்சி# 239 குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவேவளையல்கள் கழன்றி வீழ்ந்தன, தோள்கள் மெலிந்துபோய்விட்டன,
விடும் நாண் உண்டோ தோழி விடர் முகைஇனி விட்டுவிடுவதற்கான நாணமும் என்னிடம் உண்டோ? தோழி! பிளவுகளையும் குகைகளையும் கொண்ட
சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள்மலை முழுதும் மணக்கும் அசைகின்ற குலைகளையுடைய காந்தளின்கண்
நறும் தாது ஊதும் குறும் சிறை தும்பிமணமுள்ள பூந்தாதினை ஊதும் குறிய சிறகுகளைக் கொண்ட தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்பாம்பு உமிழ்ந்த மணியைப் போன்று தோன்றும்,
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கேமூங்கில் வேலியை உடைய மலைகளையுடைய நம் தலைவனுக்காக –
  
# கொல்லின் அழிசி# கொல்லின் அழிசி
# 240 முல்லை# 240 முல்லை
பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரைகுளிர்ந்த புதரில் படர்ந்த பச்சைக் கொடியையுடைய அவரையின்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர்கிளி வாயைப் போன்று ஒளிவிடும் பலவாகிய மலர்கள்
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலிகாட்டுப்பூனையின் பல் போன்ற தோற்றமுடைய முல்லைப்பூவுடன் கலக்கும்படியாக
வாடை வந்ததன் தலையும் நோய் பொரவாடைக்காற்று வந்ததன் மேலும், காமநோய் என்னை வருத்தும்படி
கண்டிசின் வாழி தோழி தெண் திரைகாண்பாயாக! வாழ்க தோழியே! தெளிந்த அலைகளையுடைய
கடல் ஆழ் கலத்தின் தோன்றிகடலில் மூழ்குகின்ற மரக்கலம் போலக் காணப்பட்டு
மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றேமாலைப் பொழுதில் மறையும், அவரின் மணிகளையுடைய நெடும் குன்றம் –
  
# கபிலர்# கபிலர்
# 241 குறிஞ்சி# 241 குறிஞ்சி
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம்நாம் நமக்குற்ற காமநோயைத் தாங்கிக்கொண்டிருக்கவும், தாம் தமது
கெழுதகைமையின் அழுதன தோழிநட்புரிமையினால் அழுதன தோழி!
கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர்கன்றுகளை நடத்திச் செல்லும் புல்லிய தலையையுடைய சிறுவர்கள்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கிஊர்மன்றத்திலுள்ள வேங்கைமரத்தின் மலர்ந்த நிலை நோக்கி
ஏறாது இட்ட ஏம பூசல்மரத்தில் ஏறாமல் எழுப்பிய இன்ப ஆரவாரம்
விண் தோய் விடர்_அகத்து இயம்பும்விண்ணைத் தோய்ந்திருக்கும் மலையின் பிளவுகளில் ஒலிக்கும்
குன்ற நாடன் கண்ட எம் கண்ணேகுன்றுகளையுடைய நாட்டினனைக் கண்ட எமது கண்களே-
  
# குழற்றத்தன்# குழற்றத்தன்
# 242 முல்லை# 242 முல்லை
கான கோழி கவர் குரல் சேவல்காட்டுக்கோழியின் கவர்த்த குரலையுடைய சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பஒளிரும் தன் பிடரியில் குளிர்ந்த நீர்த்துளிகள் விழும்படி
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்புதரில் நீர் ஒழுகும் பூக்கள் மணக்கும் முல்லைநிலத்துச்
சீறூரோளே மடந்தை வேறு ஊர்சிறிய ஊரிலுள்ளாள் தலைவி; வேறு ஊருக்கு
வேந்து விடு தொழிலொடு செலினும்வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை முன்னிட்டு ச் சென்றாலும்
சேந்து வரல் அறியாது செம்மல் தேரேஅங்குத் தங்கிவருவதை அறியாது தலைவனின் தேர்.
  
# நம்பி குட்டுவன்# நம்பி குட்டுவன்
# 243 நெய்தல்# 243 நெய்தல்
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்மானின் அடியைப் போன்ற பிளவுபட்ட இலைகளையுடைய அடப்பங்கொடியின்
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதிமாலையில் உள்ள மணியைப் போன்ற ஒளிரும் பூவைப் பறித்துக் கிழித்து,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்ஒளிரும் வளையணிந்த மகளிர் மணலில் விளையாடும்
புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனைபறவைகள் ஒலிக்கும் பெரிய கடலின் கரைக்குத் தலைவனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணேஇனி நினைக்கமாட்டேன் தோழி! படுத்துத் தூங்கட்டும் என் கண்கள்.
  
# கண்ணனார்# கண்ணனார்
# 244 குறிஞ்சி# 244 குறிஞ்சி
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்துபலரும் தூங்கும் நள்ளென்னும் நடு இரவில்
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல்வலிமையுடைய ஆண்யானை போல வந்து இரவில் கதவைத் திறக்க முயன்றதை
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெருமநான் கேட்காமல் இல்லை, கேட்டேன், தலைவனே!
ஓரி முருங்க பீலி சாயதலைக்கொண்டை சிதையும்படியும், தோகை மெலியும்படியும்,
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம்நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல், நாம்
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயேவருந்திப் புரளும்தோறும் தழுவிக்கொள்கிறாள் அறப்பண்பு இல்லாத எம் அன்னை.
  
# மாலை மாறன்# மாலை மாறன்
# 245 நெய்தல்# 245 நெய்தல்
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்கடல் பக்கத்திலுள்ள அழகிய சோலையில் தோழியர் ஆராய்ந்து பாராட்டிய என்
நலம் இழந்ததனினும் நனி இன்னாதேபெண்மை நலத்தை இழந்ததைக் காட்டிலும் மிகவும் துன்பம் தருவது,
வாள் போல் வாய கொழு மடல் தாழைவாள் போன்ற விளிம்பையுடைய கொழுத்த மடலையுடைய தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்வளைவாக வேலை நட்டத்தைப் போல் வேலியாக அமையும்
மெல்லம்புலம்பன் கொடுமைநெய்தல் நிலத்துத் தலைவனின் கொடுஞ்செயல்
பல்லோர் அறிய பரந்து வெளிப்படினேபலரும் அறியும்படி பரவி வெளிப்படுமாயின் – 
  
# கபிலர்# கபிலர்
# 246 நெய்தல்# 246 நெய்தல்
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ளன சிறிய வெண்ணிற நீர்க்காகங்கள்,
களிற்று செவி அன்ன பாசடை மயக்கியானையின் காதைப் போன்ற பச்சை இலைகளைக் கலக்கி,
பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர்குளிர்ந்த கழிநீரைத் துழாவி மீன்தேடும் நள்ளிரவில், தனியே ஒரு
தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டுதேர் வந்து சென்றது என்று யாரோ சொல்ல, அதுமுதல்
ஓரும் அலைக்கும் அன்னை பிறரும்என்னையே கூர்ந்து கவனிக்கிறாள் அன்னை, அலைக்கழிக்கவும் செய்கிறாள்,  வேறு பல
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்பின்னலிட்ட கூந்தலையும், மின்னுகின்ற அணிகலன்களையும் உடைய மகளிர்
இளையரும் மடவரும் உளரேஇளையவர்களும், மடப்பமுடையோரும் இருக்கின்றனரே!
அலையா தாயரொடு நற்பாலோரேஇப்படி அலைக்கழிக்காத அன்னையரோடு! அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்!
  
# சேந்தம்பூதன்# சேந்தம்பூதன்
# 247 குறிஞ்சி# 247 குறிஞ்சி
எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம்அழகு மிக உடையது; இங்கு நமக்கு அண்மையதாகும்;
திறவோர் செய்_வினை அறவது ஆகும்திறமையுடையோர் செய்யும் காரியம் அறத்தொடு பொருந்தியது ஆகும்;
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ எனசுற்றத்தையுடைய மக்களுக்குப் பற்றுக்கோடும் இது என
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கைஅப்படி நான் அறிந்துள்ளேன்; வேங்கை மரத்தின்
வீயா மென் சினை வீ உக யானைகெடாத மெல்லிய கிளையிலுள்ள மலர்கள் உதிரும்படி, யானை
ஆர் துயில் இயம்பும் நாடன்அரிய தன் தூக்கத்தில் மூச்சுவிடும் நாட்டைச் சேர்ந்தவன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பேமார்பை நமக்கு உரித்தாகப் பெற்ற குற்றமற்ற நட்பு –
  
# உலோச்சன்# உலோச்சன்
# 248 நெய்தல்# 248 நெய்தல்
அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்புதிருமணத்துக்குரிய நாள் வராமற்போவது அரிது; அவனது மார்பினைப்
உறுக என்ற நாளே குறுகிபெறுக என்ற நாளே அண்மையில் இருக்கிறது;
ஈங்கு ஆகின்றே தோழி கானல்இங்கு இவ்வாறு நிகழ்கின்றது, தோழியே! கடற்கரைச் சோலையின்
ஆடு அரை புதைய கோடை இட்டஅசைகின்ற அடிப்பக்கம் புதைந்துபோகும்படி மேல்காற்று கொண்டுவந்து இட்ட
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனைஅடப்பங்கொடி படர்ந்த மணற் குவியல்கள் பரவ, உயர்ந்த பனைமரம்
குறிய ஆகும் துறைவனைகுட்டையாகிப் போகும் கடல் துறையையுடைய தலைவனைப்
பெரிய கூறி யாய் அறிந்தனளேபுகழ்ந்துகூறி அன்னை அவனைப் புரிந்துகொண்டாள் – 
  
# கபிலர்# கபிலர்
# 249 குறிஞ்சி# 249 குறிஞ்சி
இன மயில் அகவும் மரம் பயில் கானத்துதிரளான மயில்கள் கூவித்திரியும் மரங்கள் நெருங்கிய காட்டில்
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்பவெள்ளிய முகத்தையுடைய கருங்குரங்குகள் குட்டிகளோடு குளிரால் நடுங்க,
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுஒலிக்கின்ற மழை பொழிந்த மலைச்சரிவையுடைய அவரின் நாட்டுக்
குன்றம் நோக்கினென் தோழிகுன்றத்தை நோக்கினேன், தோழி!
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே(பசப்பூர்ந்த என் நெற்றி) முன்பு இருந்ததைப் போல் ஆனதோ, உற்றுப்பார் என் நெற்றியை.
  
# நாமலார் மகன் இளங்கண்ணன்# நாமலார் மகன் இளங்கண்ணன்
# 250 பாலை# 250 பாலை
பரல் அவல் படு நீர் மாந்தி துணையோடுபருக்கைக் கற்களையுடைய பள்ளத்தில் இருக்கும் நீரைக் குடித்து, தன் பெண்மானுடன்
இரலை நன் மான் நெறி முதல் உகளும்இரலையாகிய நல்ல மான் வழியின் தொடக்கத்தில் துள்ளிவிளையாடும்
மாலை வாரா அளவை கால் இயல்மாலைக் காலம் வருவதற்கு முன்னரேயே காற்றின் இயல்பைக் கொண்ட
கடு மா கடவு-மதி பாக நெடு நீர்விரையும் குதிரைகளை ஓட்டுவாயாக, பாகனே! நீண்ட தன்மையுள்ள,
பொரு கயல் முரணிய உண்கண்ஒன்றற்கொன்று எதிர்த்துநிற்கும் கயல்களைப் போன்றிருக்கும் மையுண்ட கண்களையும்
தெரி தீம் கிளவி தெருமரல் உயவேதெரிந்தெடுத்த இனிய சொற்களையுமுடைய தலைவி வருந்துவதனின்றும் தப்பிக்க – 
  

Related posts