குறுந்தொகை 251-300

  
# இடைக்காடன்# இடைக்காடன்
# 251 முல்லை# 251 முல்லை
மடவ வாழி மஞ்ஞை மா இனம்அறிவில்லாமற்போய்விட்டன! வாழ்க! மயிலின் பெரிய கூட்டம்
கால மாரி பெய்து என அதன்_எதிர்கார்ப்பருவத்து மழை பெய்தது என்று எண்ணி
ஆலலும் ஆலின பிடவும் பூத்தனஆடவும் செய்கின்றன; பிச்சியும் பூத்தன;
கார் அன்று இகுளை தீர்க நின் படரேஇது கார்ப்பருவம் அல்ல, தோழி! தீர்க உன் துன்பம்;
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்சென்ற மழைக்காலத்தில் மிஞ்சிப்போன பழைய நீரை,
புது நீர் கொளீஇய உகுத்தரும்புதிய நீரைக் கொள்ளும்பொருட்டு, உகுத்துவிட்டுப்போகும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டேநம்மீது பற்று இல்லாத வானத்தின் முழங்குகின்ற குரலைக் கேட்டு – 
  
# கிடங்கில் குலபதி நக்கண்ணன்# கிடங்கில் குலபதி நக்கண்ணன்
# 252 குறிஞ்சி# 252 குறிஞ்சி
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்தநீண்ட திரண்ட தோள்களில் உள்ள வளைகளை நெகிழும்படி செய்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்கொடுமையைச் செய்தவனாகிய குன்றுகள் சேர்ந்திருக்கும் நாட்டினன்,
வருவதோர் காலை இன்முகம் திரியாதுவரும்பொழுது இனிய முகம் வேறுபடாமல்
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணிதெய்வத்தன்மையுடைய கற்பினால் அவனுக்கு எதிர்சென்று உபசரித்து
மடவை மன்ற நீ என கடவுபுஅறிவில்லாமற் போய்விட்டாய், நிச்சயமாக, நீ என்று உனக்குள் கேட்டுக்கொண்டு
துனியல் வாழி தோழி சான்றோர்வருந்தவேண்டாம், வாழ்க, தோழியே! சான்றோர்
புகழும் முன்னர் நாணுபபுகழும் முன்னர் நாணுவர்
பழி யாங்கு ஒல்பவோ காணும்_காலேபழிச்சொல்லை எப்படி பொறுத்துக்கொள்வர், யோசித்துப்பார்த்தால் – 
  
# பூங்கண்ணன்# பூங்கண்ணன்
# 253 பாலை# 253 பாலை
கேளார் ஆகுவர் தோழி கேட்பின்யாரும் சொல்லக் கேட்டிருக்கமாட்டார்; தோழி! கேட்டிருந்தால்
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல்சிறந்த பொருள் இல்லாமற்போனாலும், நெகிழ்ந்த நூலால் கட்டிய
பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின்மலர் மாலைகள் சேர்ந்த படுக்கையில், சிறந்த அழகு நீங்கிய உனது
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோஇந்நாளின் துயர் தீரும்படி இன்னும் நீட்டித்துக்கொண்டிராமல் திரும்ப வருவார்;
ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல்ஒலிக்கின்ற மூங்கில்கள் நிமிர்ந்து நிற்கும் உயர்ந்த மலைப் பக்கத்தில்
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளைபுலி தன் உணவைச் செறித்துவைத்த புலால் நாறும் கல் குகையில்
ஆறு செல் மாக்கள் சேக்கும்வழிச் செல்லும் மனிதர்கள் தங்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரேசிகரங்கள் உயர்ந்த பாறைக் குன்றுகளைக் கடந்து சென்றோர் –
  
# பார்காப்பான்# பார்காப்பான்
# 254 பாலை# 254 பாலை
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்பஇலை இல்லாத அழகிய கிளையில் கூட்டமாய் வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்க,
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்முலையின் அழகைப் போன்ற மெல்லிய மொட்டுகள் மலர்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன வாரா தோழிமுதற் பூக்களும் வந்தன! வரவில்லையே, தோழி! – 
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்துயில்வதற்கு இனிய இரவில் என்னோடு கொண்ட துயிலை அவர் மறந்துவிட்டவராய்,
பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்தாம் பழகிய மணமுள்ள கூந்தலில் படுத்திருந்ததையும் நினைத்துப்பார்க்காதவராய்,
செய்_பொருள் தரல் நசைஇ சென்றோர்ஈட்டுவதற்குரிய பொருளைக் கொண்டுவரும்படி விரும்பிச் சென்றோர் 
எய்தினரால் என வரூஉம் தூதேநம் ஊரை வந்தடைந்தார் என்று வருகின்ற தூது-
  
# கடுகு பெரும் தேவன்# கடுகு பெரும் தேவன்
# 255 பாலை# 255 பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்துபொந்துகள் இல்லாத வயிரம்பாய்ந்த, பாலைவழியில் உள்ள யாமரத்தின்
பொரி அரை முழு_முதல் உருவ குத்திபொரிந்த அடிமரத்தை முற்றவும் உருவிச் செல்லக் குத்தி
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடைவலிமையுள்ள தன் அகன்ற கையினால் வளைத்து, வருத்தமிக்க நடையையும்,
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்சிறுத்த கண்களையும் கொண்ட பெருங் கூட்டத்தின் மிகுந்த பசியைத் தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழிஅகன்ற கொம்புகளைக் கொண்ட யானையைக் கண்டனர் தோழி!
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும்தன்னுடைய கடமையை நிறைவேற்ற எண்ணி இடங்கள்தோறும்
காமர் பொருள்_பிணி போகியதாம் விரும்பும் பொருளைத் தேடுவதற்குப் போன
நாம் வெம் காதலர் சென்ற ஆறேநாம் விரும்பும் தலைவர் சென்ற வழியில் –
  
# 256 பாலை# 256 பாலை
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகைநீல மணியின் கதிர்களை வரிசையாய் வைத்தாற்போன்ற கரிய கொடிகள் படர்ந்த அறுகம்புல்
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்திசெறிவாகப் பின்னிக்கிடந்ததை, மெல்லிய கொம்புகள் உள்ள தன் பெண்மானோடு உண்டு
மான் ஏறு உகளும் கானம் பிற்படஆண்மான் துள்ளிவிளையாடும் காடு பின்னே செல்ல,
வினை நலம் படீஇ வருதும் அ வரைநாம் மேற்கொண்ட தொழிலின் பயனைப் பெற்றுக்கொண்டு வருவோம்; அந்நாள் வரை
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் எனபொறுத்திருக்க முடியுமா, பொலிவுள்ள குழையை அணிந்தவளே? என்று
சொல்லா முன்னர் நில்லா ஆகிசொல்லி முடிக்கும் முன்னர், நிற்காமல்
நீர் விலங்கு அழுதல் ஆனாநீரைத் துடைக்கத் துடைக்க வரும் அழுகையைக் கொண்டு
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணேதேரைத் தடுத்துநிறுத்தின என் தலைவியின் கண்கள். 
  
# உறையூர் சிறுகந்தன்# உறையூர் சிறுகந்தன்
# 257 குறிஞ்சி# 257 குறிஞ்சி
வேரும் முதலும் கோடும் ஓராங்குவேரிலும், அடிமரத்திலும், கிளையிலும் ஒன்றுபோல்
தொடுத்த போல தூங்குபு தொடரிதொடுத்து வைத்தைதைப் போன்று தொங்கித் தொடர்ந்து
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின்கீழே தாழ்ந்தாற்போன்ற தணிந்த குலைகளைக் கொண்ட பலாமரங்களையுடைய
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம்நிறைந்த செழிப்பையுடைய மலைநாட்டன் இங்கே வருந்தோறும் வருகின்றது,
அகலினும் அகலாது ஆகிபின்னர் அவன் அகன்றாலும் அகலாதது ஆகி
இகலும் தோழி நம் காமத்து பகையேநம்மோடே போட்டிபோடுகின்றது நம் காமம் என்னும் பகை.
  
# பரணர்# பரணர்
# 258 மருதம்# 258 மருதம்
வாரல் எம் சேரி தாரல் நின் தாரேவரவேண்டாம் எமது சேரிக்கு; தரவேண்டாம் உனது மாலையை;
அலர் ஆகின்றால் பெரும காவிரிபழிச்சொல்லை ஏற்படுத்துகின்றது; பெருமானே! காவிரியின்
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்தபலர் நீராடும் பெரிய நீர்த்துறையில் மருதமரத்தோடு கட்டிய
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தைஏந்திய கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட சேந்தனின் தந்தை
அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டைகள்ளாகிய உணவையும், அழகிய விலங்குக் கூட்டங்களை வேட்டையாடுதலையும்,
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்வரிசைப் பட்ட ஒளிவிடும் வாளைக் கொண்ட இளைஞர்களையும் கொண்ட பெருமகனான
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்அழிசி என்பானின் ஆர்க்காடு போன்ற இவளின்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டேகுற்றம் தீர்ந்த சிறந்த பெண்மைநலம் தொலைவதைக் கண்டபின்னர் – 
  
# பரணர்# பரணர்
# 259 குறிஞ்சி# 259 குறிஞ்சி
மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்துமேகங்கள் சேர்ந்து எழுகின்ற மழையையுடைய குன்றினில்
அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள்அருவியைப் பொருந்திய குளிர்ந்த மணமுள்ள காந்தள்
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல்மொட்டு அவிழ்ந்தும் அமையாத அளவு மணங்கமழும் நறிய நெற்றியையும்,
பல் இதழ் மழை கண் மாஅயோயேபல இதழ்களைக்கொண்ட தாமரை மலர்போன்ற குளிர்ந்த கண்களையும் உடைய மாநிறத்தவளே!
ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும்என் செயலைப் பொறுத்தாலும் சரி, பொறுக்காமல் என்னைக் கொன்றுபோட்டாலும் சரி,
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல்நீ அளந்து அறிவாய் உன் உயர்வினை; உண்மையைப் போல்
பொய்ம்மொழி கூறல் அஃது எவனோபொய்யான சொற்களைக் கூறுவதால் என்ன பயன்?
நெஞ்சம் நன்றே நின்_வயினானேஎன் நெஞ்சம் நல்லதையே எண்ணியது உனக்காக – 
  
# கல்லாடனார்# கல்லாடனார்
# 260 பாலை# 260 பாலை
குருகும் இரு விசும்பு இவரும் புதலும்நாரைகள் கரிய வானத்தில் உயர்ந்து செல்லும்; புதர்களிலுள்ள மொட்டுகளும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவேவரிகளையுடைய வண்டுகள் சுற்றிப் பறப்பதால் இதழ்கள் விரிந்திருக்கும்;
சுரி வளை பொலிந்த தோளும் செற்றும்சுழித்த சங்கு வளையல்கள் பொலிந்த தோள்களும் செறிவுற்றிருக்கின்றன;
வருவர்-கொல் வாழி தோழி பொருவார்வந்துவிடுவார், வாழ்க தோழியே! போரிடுபவரின்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானைமண்ணைக்கொண்டு பயன்பெறுபவரும், தலைமைப் பண்புடைய யானையையும்
வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்துநிறைந்த தேர்களையும் உடையவரும் ஆகிய தொண்டைமான்களின் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கும் மலைப்பக்கத்தில்
கன்று இல் ஓர் ஆ விலங்கியகன்றினை இல்லாத ஒற்றைப் பசுவைத் தடுத்து நிறுத்திய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரேபுல்லிய அடியைக் கொண்ட ஓமைமரத்தைக் கொண்ட பாலைநிலத்தைக் கடந்து சென்றவர் –
  
# கழார் கீரன் எயிற்றி# கழார் கீரன் எயிற்றி
# 261 குறிஞ்சி# 261 குறிஞ்சி
பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகியபழைய மழை பொழிந்ததாக, பதம் கெட்டு விழுந்த
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள்உள்ளீடற்ற காயையுடைய எள் பயிருக்கான சிறிதளவு மழைபெய்யும் கார்காலத்து இறுதிநாட்களில்
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
நள்ளென் யாமத்து ஐயென கரையும்நள்ளென்கிற நடுச் சாமத்தில் ‘ஐ’யென்று கத்தும்
அஞ்சுவரு பொழுதினானும் என் கண்அச்சந்தரும் பொழுதிலும் என்னுடைய கண்கள்
துஞ்சா வாழி தோழி காவலர்துயில்கொள்ளவில்ல, வாழ்க, தோழியே! இரவுக் காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்நாழிகைக் கணக்கை ஆராய்வதைப் போல் நேரத்தை எண்ணிக்கொண்டு வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானேநெஞ்சம் புண்பட்ட காரணத்தினால் –
  
# பாலை பாடிய பெருங்கடுங்கோ# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 262 பாலை# 262 பாலை
ஊஉர் அலர் எழ சேரி கல்லெனஊரில் பழிமொழி உண்டாக, தெருவே கூடிப்பேச,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னைநிற்காமல் வருத்துகின்ற அறமற்ற அன்னை
தானே இருக்க தன் மனை யானேதானே இருக்கட்டும், தன் வீட்டில்; நானோ
நெல்லி தின்ற முள் எயிறு தயங்கநெல்லிக்காயைத் தின்ற முள்போன்ற பற்கள் ஒளிர
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டுநீ குடிப்பதாக எண்ணிப்பார்த்தேன்; தலைவனோடு தொலைநாட்டு
விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன்விண்ணைத் தொடும்படி உயர்ந்த குறுக்கிட்டுக்கிடக்கும் மலையின் உச்சிச் சரிவில்
கரும்பு நடு பாத்தி அன்னகரும்பை நட்டிருக்கும் பாத்தியைப் போன்ற
பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரேபெரிய களிற்றின் பாதச் சுவட்டில் தங்கிய நீரினை –
  
# பெருஞ்சாத்தன்# பெருஞ்சாத்தன்
# 263 குறிஞ்சி# 263 குறிஞ்சி
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇஆட்டின் கழுத்தை அறுத்தும், தினையின் பலியரிசியைப் படைத்தும்,
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்கமக்கள் செல்லும் பாதையின் கவர்த்த வழிகளில் பல் வித இசைக்கருவிகள் முழங்க
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகாதாம் வெளிப்படுதல் அன்றி நமது நோய்க்கு வேறு மருந்தாக ஆகாத
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்திவேறான பெரிய தெய்வங்கள் பவற்றைச் சேர வாழ்த்தி,
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல்பேய் பிடித்துவிட்டது இவளுக்கு என்று ஊரார் சொல்லுவது
நோ_தக்கன்றே தோழி மால் வரைவருந்துவதற்கு உரியதாகும் தோழி!, பெரிதான மலையில்
மழை விளையாடும் நாடனைமேகங்கள் விளையாடுகின்ற நாட்டுக்குரியவனிடம்
பிழையேம் ஆகிய நாம் இதன் படவேதவறில்லாதவராகிய நாம் இந்த வெறியாட்டலுக்கு உட்படுதல் – 
  
# கபிலர்# கபிலர்
# 264 குறிஞ்சி# 264 குறிஞ்சி
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரைஆரவாரமிக்க மழை செறிந்த காட்டாற்றின் தாழ்கின்ற கரையில்
ஒலி நெடும் பீலி துயல்வர இயலிதழைத்த நெடிதான தோகை அசையுமாறு வேகமாக நடந்து
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடுஆடுகின்ற மயில்கள் அகவும் நாட்டினன், நம்மோடு
நயந்தனன் கொண்ட கேண்மைவிருப்பமுடையவனாய்க் கொண்ட நட்பு
பயந்த_காலும் பயப்பு ஒல்லாதேநமக்குப் பசலையைத் தந்தபோதும், நெஞ்சம் அந்தப் பசலையோடு பொருந்தி இராது.
  
# கருவூர் கதப்பிள்ளை# கருவூர் கதப்பிள்ளை
# 265 குறிஞ்சி# 265 குறிஞ்சி
காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாதுகாந்தளின் அழகிய கொழுவிய மொட்டை, தானாக மலரட்டும் என்று காத்திருக்காமல்
வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டும்வண்டு அதன் வாயைத் திறக்கும் போது, முன்பும்
தாம் அறி செம்மை சான்றோர் கண்டதாம் அறிந்த செம்மையுள்ளம் கொண்ட சான்றோரைக் கண்ட
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டுகடமைகளை அறிந்த மக்கள் போல, (காந்தள்) இடம் கொடுத்து,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்இதழ்களைக் கட்டவிழ்க்கும் உயர்ந்த மலைகளையுடைய தலைவன்
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின் நிலைநல்ல மனம் படைத்தவன்; தோழி! உனது நிலையை
யான் தனக்கு உரைத்தனென் ஆகநான் அவனுக்குச் சொன்னேனாக
தான் நாணினன் இஃது ஆகா ஆறேஅவன் நாணினான், இந்தக் களவொழுக்கம் இன்னும் நீட்டித்து நிகழாதபடி.
  
# நக்கீரர்# நக்கீரர்
# 266 பாலை# 266 பாலை
நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்றுநமக்காக ஏதேனும் ஒரு வார்த்தை சொல்லாவிடினும், தமக்கு ஒன்றான
இன்னா இரவின் இன் துணை ஆகியஇன்னாத இரவில் இனிய துணையாக இருந்த
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோகொல்லைப்புறத்து வேங்கை மரத்துக்கு ஒரு சொல் சொல்ல மறந்துவிட்டாரே!
மறப்பு அரும் பணை தோள் மரீஇமறக்கமுடியாத பருத்த தோளைத் தழுவி
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதேநம்மைத் துறந்து செல்லும் ஆற்றலுள்ளோர் பறவைகள் மூலம் விடும் தூதின் வழியாக –
  
# காலெறி கடிகையார்# காலெறி கடிகையார்
# 267 பாலை# 267 பாலை
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம்பெரிய இடத்தையுடைய உலகில் தொகுத்த பயன் மிக்க பெரு வளம்
ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின்அனைத்தும் ஒன்றுசேர்ந்து வாய்த்தாலும், கரும்பின்
கால் எறி கடிகை கண் அயின்று அன்னஅடிப்பகுதியில் வெட்டிய துண்டினை உண்டது போன்ற
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்வெள்ளிய பற்களில் ஊறிய குற்றமற்ற இனிய நீரையும்
கோல் அமை குறும் தொடி குறு_மகள் ஒழியதிரட்சி அமைந்த குறிய வளையலையும் கொண்ட இளையவள் நீங்கியிருப்ப
ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும்பொருளீட்டும் முயற்சியின் பொருட்டுப் பிரியார்; ஒவ்வொருநாளும்
உறல் முறை மரபின் கூற்றத்துநிகழ்த்தும் முறைமைகொண்ட வழக்கத்தையுடைய கூற்றுவனின்
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரேஅறமற்ற உயிர்வாங்கும் தொழிலை நன்கு அறிந்தவர்கள்.
  
# கருவூர் சேரமான் சாத்தன்# கருவூர் சேரமான் சாத்தன்
# 268 நெய்தல்# 268 நெய்தல்
சேறிரோ என செப்பலும் ஆற்றாம்செல்கின்றீரோ என்று சொல்வதற்கும் வலிமையற்றோம்
வருவிரோ என வினவலும் வினவாம்வருவீரோ என்று கேள்விகேட்டலையும் செய்யோம்
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின்எவ்வாறு செய்வோம்? தோழி! பாம்பின்
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடுபடத்தையுடைய பெரிய தலையைத் துண்டிக்கும் இடியோடு கூடிய
நடுநாள் என்னார் வந்துநள்ளிரவு என்று எண்ணாமல் வந்து
நெடு மென் பணை தோள் அடைந்திசினோரேஎன் நீண்ட மென்மையான பருத்த தோள்களை அடைந்தவரை –
  
# கல்லாடனார்# கல்லாடனார்
# 269 நெய்தல்# 269 நெய்தல்
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாதுநெடுந்தூரமாகிய வழியைக் கடந்து, விரைவான நடையினால் வருந்தாமல்
உசாவுநர் பெறினே நன்று-மன் தில்லவருவீரா என்று கேட்பாரைப் பெற்றால் மிகவும் நல்லது;
வய சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்வலிமையுடைய சுறா தாக்கியதால் உண்டான புண் ஆறி, என் தந்தையும்
நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும்நீல நிறத்தையுடைய பெரிய கடலுள் புகுந்தார்; என் தாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇயஉப்புக்கு மாற்றாக வெண்ணெல் வாங்கி வருவதற்காக
உப்பு விளை கழனி சென்றனள் அதனால்உப்பு விளையும் உப்பளத்திற்குச் சென்றாள்; அதனால்
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்குகுளிர்ந்த பெரிய கடற்கரைப் பரப்பையுடைய தலைவனுக்கு
இனி வரின் எளியள் என்னும் தூதேஇப்பொழுது வந்தால் என்னை எளிதில் காணலாம் என்னும் தூதினைச் சொல்ல – 
  
# பாண்டியன் பன்னாடு தந்தான்# பாண்டியன் பன்னாடு தந்தான்
# 270 முல்லை# 270 முல்லை
தாழ் இருள் துமிய மின்னி தண்ணெனதாழ்ந்திருக்கும் இருள் துண்டுபடுமாறு மின்னி, குளிர்ச்சியாக
வீழ் உறை இனிய சிதறி ஊழின்விழுகின்ற துளிகளை இனிதாகச் சிதறி, மாறிமாறிக்
கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்துகுறுந்தடியால் அடிக்கப்படும் முரசினைப் போல் முழங்கி பலமுறை இடித்து
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமேபெய்க இனி வாழ்க! பெரிய மேகமே! நாமோ,
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடுசெய்யும் தொழிலை முடித்த மனநிறைவான உள்ளத்தோடு
இவளின் மேவினம் ஆகி குவளைஇத்தலைவியோடு பொருந்தியவனாகி, குவளையின்
குறும் தாள் நாள்_மலர் நாறும்குட்டையான தண்டின் உள்ள அன்றைய மலர் மணக்கும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமேநறிய மென்மையான கூந்தல் என்னும் மென்மையான படுக்கையில் இருக்கிறோம்.
  
# அழிசி நாச்சாத்தனார்# அழிசி நாச்சாத்தனார்
# 271 மருதம்# 271 மருதம்
அருவி அன்ன பரு உறை சிதறிஅருவியைப் போன்ற பெரிய துளிகளைச் சிதறி
யாறு நிறை பகரும் நாடனை தேறிஆறுகள் நிறைந்த வெள்ளத்தைத் தரும் நாட்டினனைத் தெளிந்து
உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அதுஅவனோடு இருந்த காலம் ஒரு நாள்மட்டுமே, ஆனால் அது
தவ பல் நாள் தோள் மயங்கிமிகப் பல நாட்கள் தோளோடு கலந்து
வௌவும் பண்பின் நோய் ஆகின்றேஅழகை வாரிச் செல்லும் நோயாக ஆகின்றது.
  
# ஒருசிறைப்பெரியன்# ஒருசிறைப்பெரியன்
# 272 குறிஞ்சி# 272 குறிஞ்சி
தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்டதொடுவதற்கும் வாய்க்குமோ? சிறந்த
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்தவில்லை உடைய சீழ்க்கை ஒலியை எழுப்புவோர், கற்களை வீசி விலங்குகளை விரட்டிவிடும்
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்தபரந்த பரப்பையுடைய காட்டில், தன் இனத்தைவிட்டுப் பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்துன்பத்தைக் கொண்ட இளையமான் நேரே இருக்க, தன் தமையன்மார்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்திமுழக்கமிடும், மிகுந்த வேகத்தையுடைய ஆண்மானின் மேல் அழுந்துமாறு எய்த,
குருதியொடு பறித்த செம் கோல் வாளிகுருதியோடு பிடுங்கிய சிவந்த கோலையுடைய அம்பானது
மாறு கொண்டு அன்ன உண்கண்தன் முந்தைய நிலையிலிருந்து மாறுபட்டதைப் போல மாறுபட்ட மையுண்ட கண்களையும்
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளேமணக்கின்ற கரிய கூந்தலையும் கொண்ட தலைவியின் தோள்களை –
  
# சிறைக்குடி ஆந்தையார்# சிறைக்குடி ஆந்தையார்
# 273 பாலை# 273 பாலை
அல்கு_உறு பொழுதில் தாது முகை தயங்கஇரவில், தாதையுடைய மொட்டு ஒளிர
பெரும் காடு உளரும் அசை வளி போலபெரிய காட்டைத் தடவிக்கொடுத்து வருகின்ற அசைகின்ற காற்றைப் போல
தண்ணிய கமழும் ஒண் நுதலோயேகுளிர்ந்தனவாய் மணங்கமழும் ஒள்ளிய நெற்றியையுடையவளே!
நொந்தன ஆயின் கண்டது மொழிவல்(தலைவன் பிரிவானோ என்று)வருந்தினையாயின் நான் அறிந்ததைச் சொல்வேன்;
பெரும் தேன் கண்படு வரையில் முது மால்புபெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின்மேல்
அறியாது ஏறிய மடவோன் போலஅறியாமல் ஏறிய அறிவிலியைப் போல
ஏமாந்தன்று இ உலகம்ஏமாந்தது இந்த உலகம்;
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமேநாம் உயிரோடு இருக்குமளவும் தலைவன் உன்னைப் பிரியமாட்டான், தெளிவாயாக!
  
# உருத்திரன்# உருத்திரன்
# 274 பாலை# 274 பாலை
புறவு புறத்து அன்ன புன் கால் உகாஅத்துபுறாவின் முதுகைப் போன்ற புல்லிய அடியையுடைய உகாய் மரத்தின்,
இறவு சினை அன்ன நளி கனி உதிரஇறால்மீனின் முட்டைகளைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படியாக,
விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்புவிடுவதற்கான அம்பினை வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்வழியில் வருவோரைப் பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்நீரை விரும்பும் வேட்கையினால் மரப்பட்டையை மென்று தாகத்தைத் தணித்துக்கொள்ளும்
இன்னா கானமும் இனிய பொன்னொடுஇன்னாமையுள்ள கானமும் இனிய ஆகிவிடுமே! பொன்னோடு
மணி மிடை அல்குல் மடந்தைமணிகள் இடையிட்ட அல்குலை உடைய தலைவியின்
அணி முலை ஆகம் உள்கினம் செலினேஅழகிய முலையை உடைய மார்பை நினைத்துக்கொண்டே சென்றால் –
  
# ஒக்கூர் மாசாத்தியார்# ஒக்கூர் மாசாத்தியார்
# 275 முல்லை# 275 முல்லை
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிமுலை படர்ந்த கல்லின் மேலாக ஏறி நின்று
கண்டனம் வருகம் சென்மோ தோழிகண்டு வருவோம், செல்வோம் தோழி!
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்துமாலையில் ஊர்வந்து சேரும் காளையையுடைய பசுவினங்களின்
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோபுல்லை உண்ட நல்ல பசுக்கள் பூண்டிருக்கும் மணியோசையோ?
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடுசெய்யக் கருதிய கருமத்தை முடித்த மனநிறைவான உள்ளத்தோடு
வல் வில் இளையர் பக்கம் போற்றவலிய வில்லையுடைய இளைஞர்கள் தன் இருபக்கமும் பாதுகாக்க,
ஈர் மணல் காட்டாறு வரூஉம்ஈரமான மணலையுடைய காட்டாற்றுப்பக்கம் வரும்
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவேதேரின் மணியோசையோ? அங்கு ஒலிப்பனவாக உள்ளவற்றை – 
  
# கூழி கொற்றன்# கூழி கொற்றன்
# 276 குறிஞ்சி# 276 குறிஞ்சி
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும்மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய இளையவளுக்காகப் பாவையைப் பண்ணியதையும்
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள்அதற்குப் பஞ்சாய்க் கோரை இருக்கும் பள்ளத்தைச் சுற்றிவந்ததையும், மேலும் இவளின்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதியசினந்து எழும் அழகிய முலைகள் ஒளிபெற வரைந்த
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்தொய்யிலையும், அவளைக் காத்துநிற்போர் அறியவும் அறியார்,
முறை உடை அரசன் செங்கோல் அவையத்துநீதியையுடைய மன்னனின் செங்கோன்மையுடைய அரசவைக்குச் சென்று
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்நான் அத் தலைவியைக் கேட்குங்கால் என்னவாகும்?
பெரிதும் பேதை மன்றபெரிதும் பேதைமையுடையதாய் இருக்கிறது,
அளிதோ தானே இ அழுங்கல் ஊரேஇரங்கத்தக்கது, ஆரவாரத்தையுடைய இந்த ஊர்.
  
# ஓரில் பிச்சையார்# ஓரில் பிச்சையார்
# 277 பாலை# 277 பாலை
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடைகுற்றமற்ற தெருவில் நாய் இல்லாத அகன்ற வாயிலில்
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுதுசெந்நெல் சோற்றின் மிகுதியையையும், மிக வெள்ளையான வெண்ணெய்யையும்
ஓர் இல் பிச்சை ஆர மாந்திஒரு வீட்டிலேயே பிச்சையுணவாகப் பெற்று வயிரார உண்டு,
அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர்முன்பனிக்காலத்துக்காக விரும்பத்தக்க வெப்பத்தையுடைய நீரைச்
சேம_செப்பில் பெறீஇயரோ நீயேசேமித்துவைக்கும் செப்பில் பெறுவீராக! நீவிர்!
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடைமின்னிடையாளான தலைவி நடுங்கக்கூடிய இறுதி மழைக்குப் பின்னர் வரும் வாடை
எ_கால் வருவது என்றிஎப்போது வரும் என்று கூறுவீராக!
அ-கால் வருவர் எம் காதலோரேஅப்போது வருவார் என்னுடைய தலைவர் –
  
# பேரிசாத்தன்# பேரிசாத்தன்
# 278 பாலை# 278 பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்துமிகுந்த காற்று தடவிச் சென்ற அழகிய இளம் இலைகளையுடைய மாமரத்தின்
முறி கண்டு அன்ன மெல்லென் சீறடிதுளிரைப் பார்த்தது போன்ற மெத்தென்ற சிறிய அடியை உடைய
சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார்சிறிய பசிய பாவையையும் எம்மையும் நினையார்,
கொடியர் வாழி தோழி கடுவன்கொடியவர் அவர், வாழ்க! தோழியே! ஆண் குரங்கு
ஊழ்_உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்துபழுத்த இனிய பழங்களை உதிர்க்க, கீழே இருந்து
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்பிடித்துப் பிடித்து உண்ணும்
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரேகுட்டிகளையுடைய பெண்குரங்குகள் உள்ள மலையைக் கடந்து சென்றோர் –
  
# மதுரை மருதன் இளநாகனார்# மதுரை மருதன் இளநாகனார்
# 279 முல்லை# 279 முல்லை
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன்முறுக்கிய கொம்பையும் இருளின் நிறத்தையும் உடைய எருமை
வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணிவளரும் கழுத்தில் கட்டப்பட்ட பிளந்த வாயையும் தெளிந்த ஓசையும் உடைய மணி 
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும்தனிமைத்துயர் உள்ள நடுயாமத்தில் அசையுந்தோறும் ஒலிக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோஇது வருவதற்குரிய நாளாக இருக்கவும் அவர் வரவில்லை!
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல்மழை கழுவுதலை மறந்த கரிய பெரிய குத்துப்பாறை
துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும்தூசி படிந்த யானைப் போல பொலிவுற்றுத் தீன்றும்
இரும் பல் குன்றம் போகிபெரிய பல மலைகலைக் கடந்துபோய்
திருந்து இறை பணை தோள் உள்ளாதோரேதிருத்தமாக இறங்கும் பருத்த தோள்களை நினைத்துப்பார்க்காதவர் –
  
# நக்கீரர்# நக்கீரர்
# 280 குறிஞ்சி# 280 குறிஞ்சி
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என்நண்பர்களே! வாழ்க! நண்பர்களே! ஒவ்வொரு நாளும் என்
நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதிநெஞ்சத்தைத் தன்பாற் பிணித்துக்கொண்ட அழகிய சிலவான கூந்தலையும்
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம்பெரிய தோள்களையும் உள்ள இளையவளின் சிறிய மெல்லிய மார்பினை
ஒரு நாள் புணர புணரின்ஒருநாள் கூடக் கூடுமாயின்
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே(அதன் பின்) அரைநாள் வாழ்க்கையையும் வேண்டேன் நான்.
  
# குடவாயில் கீரத்தன்# குடவாயில் கீரத்தன்
# 281 பாலை# 281 பாலை
வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின்வெள்ளிய மணற்பரப்பில் தழைத்த பசிய அடியையும், கருக்கினையும் உடைய
கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டுதிரண்ட பனையின் உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையோடு சேர்த்து வைத்த
அத்த வேம்பின் அமலை வான் பூபாலைநிலத்து வேம்பின் நெருங்கிய வெள்ளிய பூவினை
சுரி ஆர் உளை தலை பொலிய சூடிசுருள் நிறைந்து ஆடும் மயிருள்ள தலையில் பொலிவுபெறச் சூடி
குன்று தலைமணந்த கானம்மலைகள் பொருந்திய காட்டினில்
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரேசென்றுவிட்டாரோ? சிவந்த அணிகலன்கள் அணிந்தவளே! நம்தலைவர்.
  
# நாகம்போத்தன்# நாகம்போத்தன்
# 282 பாலை# 282 பாலை
செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்தபருவத்தே வளர்ந்த வரகின் சிவந்த மேட்டுநிலத்தில் தழைத்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலைஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும்நவ்வி மானின் குட்டி கவ்வி அன்றைய காலையுணவை முடிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின் கை வளைகார்ப்பருவத்தை எதிர்கொண்ட குளிர்ந்த புனத்தைக் காணும்போது, கை வளையல்கள்,
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்தநீர் விளங்கும் மலைச் சாரலில் மொத்தமாக மலர்ந்த
வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்வெண்கூதாளத்தின் அழகிய உள் துளையுடைய புதிய மலர்கள்
ஆர் கழல்பு உகுவ போலதம் காம்பிலிருந்து கழன்று உதிர்தலைப் போன்று
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரேகழன்று வீழ்வன அல்ல என்பாரோ நம் தலைவர்?
  
# பாலை பாடிய பெருங்கடுங்கோ# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 283 பாலை# 283 பாலை
உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்இருக்கின்ற பொருளைச் செலவழிப்போர் செல்வமுடையோர் எனப்படார்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு எனபொருள் இல்லாதவர் வாழ்க்கை இரந்து வாழ்வதனினும் இழிவானதாகும் என்று
சொல்லிய வன்மை தெளிய காட்டிசான்றோர் சொல்லிய ஆண்மைச் சால்பினை புரியும்படி எடுத்துக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி என்றும்சென்றுவிட்டார், வாழ்க, தோழியே! எக்காலத்திலும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்தவழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால்
படு முடை பருந்து பார்த்து இருக்கும்உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறேநீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில் –
  
# மிளைவேள் தித்தன்# மிளைவேள் தித்தன்
# 284 குறிஞ்சி# 284 குறிஞ்சி
பொருத யானை புகர் முகம் கடுப்பபோரிட்ட யானையின் புள்ளியையுடைய முகத்தைப் போல
மன்ற துறுகல் மீமிசை பல உடன்மன்றத்தில் உள்ள குத்துக்கல் மீது, பலவாகச் சேர்ந்து
ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன்ஒள்ளிய செங்காந்தள் மலரும் நாட்டினன்
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்அறவோன் ஆயினும், அப்படி அல்லன் ஆயினும்
நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோநம்மைப் பழிப்பாரோ? தம்மிடத்தில் ஒரு பழிச்சொல்லும் அற்றவரோ?
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவிமலையிலிருந்து விழும் தூய வெள்ளிய அருவி
கொன் நிலை குரம்பையின் இழிதரும்அச்சந்தரும் நிலையிலுள்ள குடிலின் அருகில் இறங்கி ஓடும்
இன்னாது இருந்த இ சிறுகுடியோரேநமக்கு இன்னாததாக இருக்கும் இந்த சிறுகுடியிலுள்ளோர் –
  
# பூத தேவன்# பூத தேவன்
# 285 பாலை# 285 பாலை
வைகல் வைகல் வைகவும் வாரார்ஒவ்வொருநாள் விடியும்போதும் வாரார்;
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் தோன்றார்;
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர்எங்கு இருக்கிறாரோ? தோழி! இங்கு இவர்
சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ்சொல்லிச்சென்ற பருவமோ இதுவே! பலமுறை
புன் புற பெடையொடு பயிரி இன் புறவுபுல்லிய முதுகையுடைய பெடையை அழைத்து, இனிய ஆண்புறா
இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலைஇமைப்பொழுதில் எத்தகைய இன்பத்தை அடைகின்றது! ஞெமை மரத்தின் உச்சியில்
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும்ஊனை விரும்பி பருந்து அமர்திருந்து உயரே எழும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரேவானளவும் உயர்ந்த ஒளிவிடும் மலையைக் கடந்து சென்றோர் – 
  
# எயிற்றியனார்# எயிற்றியனார்
# 286 குறிஞ்சி# 286 குறிஞ்சி
உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்றுநினைத்துப் பார்க்கத்தான் முடியும் போலிருக்கிறது, முள் போன்ற கூர்மையான பற்களையுடைய
அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில்அமிழ்தம் சுரக்கின்ற சிவந்த வாயையும், கமழ்கின்ற அகிலும்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்சந்தனமும் மணக்கும் கருமணல் போன்ற கூந்தலையும்,
பேர் அமர் மழை கண் கொடிச்சிபெரிய அமர்த்த குளிர்ச்சியான கண்களையும் உடைய தலைவியின்
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கேஇளநகையோடு கூடிய செருக்கிய பார்வையை –
  
# கச்சிப்பேட்டு நன்னாகையார்# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 287 முல்லை# 287 முல்லை
அம்ம வாழி தோழி காதலர்வாழ்க தோழியே! காதலர்
இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோஇங்கேயே கண்டபின்னரும் பிரிந்துசெல்வாரோ?
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇபன்னிரண்டு திங்கள் நிரம்பிய கருவினைத் தாங்கித் தளர்வெய்தி
ஒதுங்கல் செல்லா பசும் புளி வேட்கைநடக்கவியலாத பச்சைப் புளியின்மீது கொண்ட வேட்கையையுடைய
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டுமுதிர்ந்த சூல் கொண்ட மகளிர் போல, நீரினைச் சுமந்துகொண்டு
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரிவானத்தில் ஏறமாட்டாது அந்தச் சூலினைத் தாங்கி ஒன்றோடு ஒன்று சேர்ந்து
செழும் பல் குன்றம் நோக்கிசெழிப்பான பல மலைகளை நோக்கி
பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதேபெருத்த ஆரவாரமுடைய மேகங்கள் எழுகின்ற இந்தக் கார்ப்பருவத்தை –
  
# கபிலர்# கபிலர்
# 288 குறிஞ்சி# 288 குறிஞ்சி
கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்துமிளகுக் கொடி வளர்கின்ற மலைச் சரிவில் தளிரைத் தின்கின்ற
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன்குரங்குகள் பலவும் ஒன்றுசேர்ந்து இருக்கும் பெரிய மலைநாட்டினன்
இனியன் ஆகலின் இனத்தின் இயன்றஇனியவன் ஆதலின் நமக்கு வேண்டியவர்களால் செய்யப்படும்
இன்னாமையினும் இனிதோஇன்னாத செயல்களிலும் இனியதோ,
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடேஇனிது எனப்படும் தேவருலகம்?
  
# பெரும் கண்ணனார்# பெரும் கண்ணனார்
# 289 முல்லை# 289 முல்லை
வளர்பிறை போல வழிவழி பெருகிவளர்பிறையைப் போல மென்மேலும் வளர்ந்து
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடுஇறங்குகின்ற தோளின் வளையல்களை நெகிழச்செய்த துன்பமாகிய காமநோயோடே
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய்தளிரைப் பிசைந்தாற்போன்ற நிலையையுடையவளாகி, மெலிந்து,
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்பக்கத்திலிருப்போர் இல்லாததால் துயருழப்பதல்லாமலும்
மழையும் தோழி மான்று பட்டன்றேதோழி! மழையும் மிகுந்து பெய்கின்றது;
பட்ட மாரி படாஅ_கண்ணும்இந்த மழை வருவதற்கு முன்னர்
அவர் திறத்து இரங்கும் நம்மினும்தலைவருக்காக மனம்வருந்தும் நம்மைவிட,
நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரேநமக்காக மனம்வருந்துகிறது இந்த ஆரவாரமிக்க ஊர்.
  
# கல்பொருசிறுநுரையார்# கல்பொருசிறுநுரையார்
# 290 நெய்தல்# 290 நெய்தல்
காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃதுகாம நோயைப் பொறுத்துக்கொள்க என்போர், தாம் அதனைப் பற்றி
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல்அறியமாட்டாரோ? அல்லது, அதனைத் தாங்கும் சக்தி படைத்தவரோ?
யாம் எம் காதலர் காணேம் ஆயின்நாம் எமது தலைவரைக் காணமுடியாமல் இருந்தால்
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர்செறிந்த துன்பம் பெருகிய நெஞ்சத்துடன், மிகுந்த நீர்
கல் பொரு சிறு நுரை போலபாறையில் மோதும்போது எழும் சிறிய நுரை போல
மெல்ல_மெல்ல இல் ஆகுதுமேகொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து இல்லாமற்போகின்றோம்.
  
# கபிலர்# கபிலர்
# 291 குறிஞ்சி# 291 குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனல்மரங்களை வெட்டிச் சுட்டெரித்துச் சீர்ப்படுத்திய புனத்தில் தழைத்த தினையில்
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரேவந்து வீழும் கிளிகளை ஓட்டும் தலைவியின் கையிலுள்ள குளிர் என்னும் கருவி
இசையின் இசையா இன் பாணித்தேஇசை பாடும்போது இசைக்கும் இனிய தாளத்தை உடையது,
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவேஎனவே கிளிகள் தம்மை அவள் அழைப்பதாக எண்ணி தாம் வந்து விழுவதை நிறுத்தவில்லை;
அது புலந்து அழுத கண்ணே சாரல்அதற்காகக் கோபித்துக்கொண்டு அழுத தலைவியின் கண்கள், மலைச்சாரலில்
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளைஆழமான நீரையுடைய பசிய சுனையில் பூத்த குவளையின்
வண்டு பயில் பல் இதழ் கலைஇவண்டுகள் அடிக்கடி மொய்க்கும் பல இதழ்கள் கலைந்து
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வேகுளிர்ந்த மழைத்துளியை ஏற்றுக்கொண்ட மலர்களைப் போலிருப்பன.
  
# பரணர்# பரணர்
# 292 குறிஞ்சி# 292 குறிஞ்சி
மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவைநீராடச் சென்ற ஒளிரும் நெற்றியையுடைய பெண்ணொருத்தி
புனல் தரு பசும் காய் தின்றதன் தப்பற்குஆற்றுநீர் அடித்துக்கொண்டுவந்த பச்சைக் காயைத் தின்ற குற்றத்தினின்றும் தப்ப,
ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறைஎண்பத்தொரு ஆண்யானைகளைகளோடு, அவளின் எடைக்குச் சமமான
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்பொன்னால் செய்யப்பட்ட பாவையையும் கொடுப்பவுமே ஏற்றுக்கொள்ளானாய்
பெண் கொலை புரிந்த நன்னன் போலபெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்து செலீஇயரோ அன்னைஎல்லையற்ற நரகத்துள் செல்லட்டும் அன்னை!
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து எனஒரே ஒருநாள் சிரித்த முகமுள்ள விருந்தினனாய் வந்ததற்காக
பகை முக ஊரின் துஞ்சலோ இலளேபகைமுகங்காட்டும் ஊரினரைப் போலத் தூக்கத்தை விட்டாள்-
  
# கள்ளில் ஆத்திரையன்# கள்ளில் ஆத்திரையன்
# 293 மருதம்# 293 மருதம்
கள்ளின் கேளிர் ஆத்திரை உள்ளூர்கள்குடிக்கும் விருப்பத்தையுடையவரின் பயணம், உள்ளூரில்
பாளை தந்த பஞ்சி அம் குறும் காய்பாளை ஈன்ற நாரினைக் கொண்ட அழகிய சிறிய காயையுடைய
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்உயர்ந்த கரிய பனையின் நுங்கினை உண்டு திரும்பும்
ஆதி அருமன் மூதூர் அன்னஆதி அருமன் என்பானின் மூதூர் போல,
அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழைநீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்பதேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க
வருமே சே_இழை அந்தில்வருகிறாள் சிவந்த இழைகளை அணிந்த பரத்தை, அவ்விடத்தில்
கொழுநன் காணிய அளியேன் யானேதலைவனைக் காணும்பொருட்டு; இரங்கத்தக்கவள் நான்.
  
# அஞ்சில் ஆந்தையார்# அஞ்சில் ஆந்தையார்
# 294 நெய்தல்# 294 நெய்தல்
கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும்கடலில் சேர்ந்து விளையாடியும், கடற்கரைச் சோலையில் தங்கியும்
தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும்மாலையையுடைய மகளிர் கூட்டத்தோடு தழுவிக்கொண்ட ஆட்டம் ஆடியும் இருக்கும்போது
நொதுமலர் போல கதுமென வந்துஅயலாரைப் போல விரைவாக வந்து
முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னேதலைவன் தழுவிச் சென்றதனால் பழிச்சொல் பரவிற்று;
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல்புள்ளிகளையுடைய பாம்பின் படத்தைப் போன்ற அகன்ற அல்குலில்
திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழைதிருத்தமான அணிகலன்கள் அசையும் பக்கத்தில் கட்டிய பசிய தளிராகிய
தழையினும் உழையின் போகான்தழையுடையைக் காட்டிலும் அருகிலிருந்து அகலமாட்டான்
தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லேஅவனால் உண்டானது இந்த அன்னையின் இற்செறிப்பு.
  
# தூங்கலோரி# தூங்கலோரி
# 295 நெய்தல்# 295 மருதம்
உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்உடுத்துக்கொண்டும், தொடுத்துக்கொண்டும், அணிந்துகொண்டும் செருகிக்கொண்டும்
தழை அணி பொலிந்த ஆயமொடு துவன்றிதழையாற் செய்த அலங்காரத்தால் பொலிவுபெற்ற பரத்தையரோடு நெருங்கிச் சேர்ந்து
விழவொடு வருதி நீயே இஃதோநீர்விழாவுக்குரிய அடையாளங்களோடு வருகின்றாய்! நீயே, இதனை,
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கைஒரு பசுவினால் வரும் வருமானத்தைக் கொண்டு வாழும் சிறப்பில்லாத வாழ்க்கை
பெரு நல குறு_மகள் வந்து எனமிக்க அழகையுடைய தலைவியான இளையவள் வந்தபின்னர்
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரேஇப்பொழுது விழாக்கோலம் பூண்டது என்று சொல்லும் இவ்வூர்.
  
# பெரும்பாக்கன்# பெரும்பாக்கன்
# 296 நெய்தல்# 296 நெய்தல்
அம்ம வாழி தோழி புன்னைதோழி! கேட்பாயாக! புன்னை மரத்தின்
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரைஆடுகின்ற கிளையில் இருந்த அழகிய சிறகுகளைக் கொண்ட நாரை,
உறு கழி சிறு மீன் முனையின் செறுவில்நிறைந்த கழியில் இருந்த குறைந்த அளவு மீனை விரும்பாவிட்டால், வயலில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்கள் மணக்கும் நெய்தல் மலரையும் நெற்கதிர்களையும் விரும்பும்
தண்ணம் துறைவன் காணின் முன் நின்றுகுளிர்ந்த துறைக்கு உரியவனைக் கண்டால், அவன் முன்னே சென்று நின்று
கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள்கடுமையான சொற்களைக் கூறுவதைத் தவிர்ப்பாயாக! வளையணிந்தவள்
இன்னள் ஆக துறத்தல்இவ்வாறு ஆகும்படிக்கு அவளைப் பிரிந்து செல்லுதல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தேஉமக்குத் தகுதியுடையதாகுமோ என்று துணிந்து – 
  
# காவிரிப்பூம் பட்டினத்து காரி கண்ணன்# காவிரிப்பூம் பட்டினத்து காரி கண்ணன்
# 297 குறிஞ்சி# 297 குறிஞ்சி
அம் விளிம்பு உரீஇய கொடும் சிலை மறவர்மேல் விளிம்பை உருவிக்கொடுக்கும் கொடிய வில்லையுடைய மறவர்கள்
வை வார் வாளி விறல் பகை பேணார்கூர்மையான நீண்ட அம்பின் வெற்றியையுடைய பகையை மதிக்காது
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர்எதிர்த்து நின்று போரிட்டு இறந்த வழிச்செல்வோர் மீது
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்தழைகளை இட்டு மூடிய குவியல்கள் ஊரைப் போலத் தோன்றும்
கல் உயர் நனம் தலை நல்ல கூறிமலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற இடத்தில் நல்ல சொற்களைக் கூறி
புணர்ந்து உடன் போதல் பொருள் எனசேர்ந்து போதல் செய்யத்தக்கது என்று
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கேநான் உணர்ந்தேன், அவர் உணர்வதற்கு முன்னர் –
  
# பரணர்# பரணர்
# 298 குறிஞ்சி# 298 குறிஞ்சி
சேரி சேர மெல்ல வந்து_வந்துநமது தெருவினை அடைய மெல்ல வந்து வந்து
அரிது வாய்விட்டு இனிய கூறிஅரிதாக வாயைத்திறந்து இனிய சொற்களைக் கூறி
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன்ஒவ்வொருநாளும் தன் மேனியின் நிறம் வேறுபட்டுத் தங்கும் தலைவனின்
பைதல் நோக்கம் நினையாய் தோழிவருத்தம் தேங்கிய பார்வையினை நினைத்துப்பார் தோழி!
இன் கடும் கள்ளின் அகுதை தந்தைஇனிமையும் கடுமையும் கொண்ட கள்ளையுடைய அகுதை தந்தையின் பின் நின்ற
வெண் கடை சிறு கோல் அகவன்_மகளிர்வெள்ளிய முனையையுடைய சிறிய கோலையுடைய பாடல் மகளிர் பெற்ற
மட பிடி பரிசில் மானஇளம் பெண்யானைகளாகிய பரிசிலைப் போல
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையேவேறொன்றைக் குறித்தது அவன் பின்னிட்டு நிற்கின்ற நிலை.
  
# வெண்மணி பூதி# வெண்மணி பூதி
# 299 நெய்தல்# 299 நெய்தல்
இது மற்று எவனோ தோழி முதுநீர்இது எப்படி ஆயிற்று தோழி! முதுமையான நீரையுடைய
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்அலைகள் வந்து தவழும் பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச் சோலையிலுள்ள
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்கொத்துக்கள் மலர்ந்த புன்னை வளர்ந்த மேட்டிலுள்ள நிழலில்
புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன்சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற பொழுது, தலைவனைப்
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல்பார்த்தன என் கண்கள்; அவன் சொல்லைக்
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன்கேட்டன என் செவிகள்; ஆனால் அவன்
மணப்பின் மாண் நலம் எய்திதழுவினால் சிறந்த அழகைப் பெற்றுப்
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளேபிரிந்தால் மெலிகின்றன என் அகன்ற மெத்தென்ற தோள்கள்.
  
# சிறைக்குடி ஆந்தையார்# சிறைக்குடி ஆந்தையார்
# 300 குறிஞ்சி# 300 குறிஞ்சி
குவளை நாறும் குவை இரும் கூந்தல்குவளை மலரின் மணம் கமழும் கொத்தான இருண்ட கூந்தல்;
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்ஆம்பல் மலரின் மணம் கமழும் தேனைப் பொதிந்துவைத்த சிவந்த வாய்;
குண்டு நீர் தாமரை கொங்கின் அன்னஆழமான நீரில் உள்ள தாமரைமலரின் பூந்தாது போன்ற
நுண் பல் தித்தி மாஅயோயேநுண்ணிய பல தேமல் – இவற்றையுடைய மாநிறத்தவளே!
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையேநீ, அஞ்சாதே என்ற என் சொல்லைக் கேட்டு அச்சம்கொள்ளாதே!
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும்நான், குட்டையான கால்களையுடைய அன்னம் குவிந்துகிடக்கும் மணலில் தங்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்கடல் சூழ்ந்த நிலத்தைப் பெற்றாலும்
விடல் சூழலன் யான் நின் உடை நட்பேவிட்டுப் பிரிவதை எண்ணிப்பார்க்கமாட்டேன் – உனது நட்பினை
  

Related posts