ஐங்குறுநூறு 301-350

  
பாலை       ஓதலாந்தையார்பாலை       ஓதலாந்தையார்
  
# 31 செலவு அழுங்குவித்த பத்து# 31 செலவு அழுங்குவித்த பத்து
# 301# 301
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்பெரிதான வேள்ளோத்திர மரத்தின் கறைபடியாத வெண்மையான பூங்கொத்துகள்
அரும் சுரம் செல்வோர் சென்னி கூட்டும்கடத்தற்கரிய பாலை வழியில் செல்வோர் தம் தலையுச்சியில் அணிந்துகொள்ளுகின்ற
அ வரை இறக்குவை ஆயின்அத்தகைய மலையைக் கடந்துசெல்வாயாயின்
மை வரை நாட வருந்துவள் பெரிதேகரிய மலைகளையுடைய நாட்டினனே! இவள் வருந்துவாள் பெரிதும்.
# 302# 302
அரும் பொருள் செய்_வினை தப்பற்கும் உரித்தேஅருமையான பொருளை ஈட்டுதற்குரிய செயல் தவறிப்போனாலும் போகலாம்;
பெரும் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்பெரிய தோள்களைக் கொண்ட இந்தப் பெண் உன் செயலைத் தடுக்கவும் செய்யலாம்;
செல்லாய் ஆயினோ நன்றேஎனவே, நீ பயணத்தை மேற்கொள்ளாதிருந்தாலோ, அது நல்லது;
மெல்லம்புலம்ப இவள் அழ பிரிந்தேமென்மையான நிலத்திற்கு உரியவனே! இவள் அழுமாறு, இவளைவிட்டுப் பிரிந்து.
  
# 303# 303
புது கலத்து அன்ன கனிய ஆலம்புதிய மண்பாண்டத்தைப் போன்ற நிறத்தையுடைய கனிகளைக் கொண்ட ஆலமரம்,
போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம்பறவைகள் தன்னைவிட்டுப் போவதைத் தடுத்து நிறுத்தும் தன்மையுடைய கடினமான பாலை வழி
தண்ணிய இனிய ஆககுளிர்ச்சிபொருந்தியதாகவும், இனிமையானதாகவும் ஆகும்படி
எம்மொடும் சென்மோ விடலை நீயேஎன்னையும் அழைத்துக்கொண்டு செல்வாயாக, இளங்காளையாகிய நீ!
# 304# 304
கல்லா கோவலர் கோலின் தோண்டியகல்வியறிவில்லாத இடையர்கள் தம் கையிலுள்ள கோலினால் தோண்டிய
ஆன் நீர் பத்தல் யானை வௌவும்பசுக்களுக்கான நீரையுடைய பள்ளத்தில் உள்ள நீரை யானை கவர்ந்து குடிக்கும்
கல் அதர் கவலை செல்லின் மெல் இயல்பாறைகள் நிரம்பிய பலவகையாய்ப் பிரிந்து செல்லும் பாதையின் வழியே சென்றால், மென்மையான இயல்பினையுடைய
புயல்_நெடும்_கூந்தல் புலம்பும்மேகத்தைப் போன்ற கரிய நீண்ட கூந்தலையுடைய இவள் தனிமையில் வாடுவாள்,
வய_மான் தோன்றல் வல்லாதீமேவலிமையான குதிரையையுடைய தலைவனே! பிரிந்துசெல்லத் துணியவேண்டாம்!
  
# 305# 305
களிறு பிடி தழீஇ பிற புலம் படராதுஆண்யானையானது, தன்னுடைய பெண்யானையைத் தழுவிக்கொண்டு வேறு நிலப்பகுதிக்கும் செல்ல நினைக்காமல்
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்துபசி தம்மை மேற்கொள்ள வருந்தியவாறு இருக்கும் பசுமையென்பதே இல்லாமற்போன குன்றினில்,
சுடர் தொடி குறு_மகள் இனையஒளிவிடும் தோள்வளையைக் கொண்ட இளையமகள் வாடும்படியாக,
எனை பயம் செய்யுமோ விடலை நின் செலவேஎன்ன பயனைத் தருமோ, இளங்காளையே! உனது பயணம்?
# 306# 306
வெல் போர் குருசில் நீ வியன் சுரம் இறப்பின்போரில் வெற்றியையுடைய தலைவனே! நீ அகன்ற பாலைநிலத்துவழியே சென்றால்
பல் காழ் அல்குல் அம் வரி வாடபல காசுமாலைகள் கோத்த வடத்தையுடைய அல்குலின் அழகிய வரிகள் வாட்டமடைய,
குழலினும் இனைகுவள் பெரிதேஅழுகைக் குரலில் இசைக்கும் ஆம்பல் குழலைக் காட்டிலும் அழுதுவருந்துவாள், மிகவும்,
விழவு ஒலி கூந்தல் மாஅயோளேஇந்த விழாக்காலத்துப் பொலிவு பெற்ற கூந்தலையுடைய மாநிறத்தவள்.
  
# 307# 307
ஞெலி கழை முழங்கு அழல் வய_மா வெரூஉம்ஒன்றையொன்று உரசிக்கொண்ட காய்ந்துபோன மூங்லிலில் பிடித்துக்கொண்ட நெருப்பைக் கண்டு வலிய புலி வெருளும்
குன்று உடை அரும் சுரம் செலவு அயர்ந்தனையேகுன்றுகளையுடைய கடத்தற்கரிய பாலைவழியில் பயணம் மேற்கொண்டாய்!
நன்று இல கொண்க நின் பொருளேநன்மையானதல்ல, தலைவனே! நீ ஈட்டிவரும் செல்வம்,
பாவை அன்ன நின் துணை பிரிந்து வருமேகொல்லிப்பாவையைப் போன்ற அழகிய உன் துணையான இவளைப் பிரிந்து நீ கொணர்வதால் –
# 308# 308
பல் இரும் கூந்தல் மெல் இயலோள்-வயின்நிறைவான, கரிய கூந்தலையுடைய, இந்த மென்மையான இயல்பினையுடையவளை விட்டுப்
பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர்பிரியாமல் இருந்தாலும் நல்லதே! மலர்ந்த பூங்கொத்துகளைக் கொண்ட,
கால் எறுழ் ஒள் வீ தாஅயகாம்புகளையுடைய எறுழ மரத்தின் ஒளிவீசும் பூக்கள் பரவிக்கிடக்கும்
முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமேமுருகன் தான் விரும்பித் தங்கும் பெரிய மலையைப் பிரிந்துசெல்லும்போது நீயும் பிரிந்துசெல்வாயாக!
  
# 309# 309
வேனில் திங்கள் வெம் சுரம் இறந்துவேனில் காலத்து மாதத்தில், வெப்பமுள்ள பாலைவழியைக் கடக்கும்
செலவு அயர்ந்தனையால் நீயே நன்றும்பயணத்தை மேற்கொண்டுள்ளாய் நீ! பெரிதும்
நின் நயந்து உறைவி கடும் சூல் சிறுவன்உன்னையே விரும்பி வாழுகின்றவளின் முதிர்ந்த சூலில் வயிற்றுக்குள்ளிருக்கும் உன் மகனின்
முறுவல் காண்டலின் இனிதோஇனிய நகையைப் பார்ப்பதைக் காட்டிலும் இனியதோ,
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளேசெங்குத்தான பள்ளங்களைக் கொண்ட மலைநாட்டினனே! நீ பிரிந்துபோய் சம்பாதிக்கும் பொருள்?
# 310# 310
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்பொன்னாற் செய்த புதிய வட்டவடிவக் காசுக்களை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குலையும்,
இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழஒளிவிடும் வளைகளையும், மென்மையான தோளையும் கொண்ட இவளின் அணிகலன்கள் தத்தம் நிலையிலிருந்து கழன்றுபோகும்படியாக,
பிரிதல் வல்லுவை ஆயின்பிரிந்துசெல்லத் துணிவாய் என்றால்
அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினேமிகவும் அரியதாகிப்போய்விடும், இவளின் அழகிய நெற்றியின் அழகு.
  
# 32 செலவு பத்து# 32 செலவு பத்து
# 311# 311
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்வேங்கை மரத்தில் பூப் பறிப்போர் பஞ்சுரப்பண் இசையில் ஒருவரையிருவர் அழைத்துக்கொள்வதக் கேட்டாலும்
ஆரிடை செல்வோர் ஆறு நனி வெரூஉம்அரிய வழித்தடத்தில் செல்வோர் அந்த வழியில் மேலும் செல்வதற்கு அச்சங்கொள்ளும்
காடு இறந்தனரே காதலர்பாலைக்காட்டு வழியே சென்றார் நம் காதலர்;
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சேஅங்கே இருப்பதை நீட்டித்துக்கொண்டே செல்வாரோ என்று நினைக்கிறது என் நெஞ்சு.
# 312# 312
அறம் சாலியரோ அறம் சாலியரோஅறத்தால் நிரம்புவதாக! அறத்தால் நிரம்புவதாக!
வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோவறட்சி உண்டானபோதிலும் அறத்தால் நிரம்புவதாக!
வாள் வனப்பு உற்ற அருவிஒளிபொருந்திய அழகைக் கொண்ட அருவியையுடைய,
கோள் வல் என் ஐயை மறைத்த குன்றேபகைவரைக் கொள்வதில் வல்ல என் தலைவனை என் வீட்டார் பார்க்காதவாறு மறைத்துக்கொண்ட குன்று –
  
# 313# 313
தெறுவது அம்ம நும் மகள் விருப்பேசுட்டுப்பொசுக்குகிறது உம் மகளின் காதல்விருப்பம்,
உறு துயர் அவலமொடு உயிர் செல சாஅய்மிக்க துன்பத்தைத் தரும் வருத்தத்தோடு உயிர்போகும் நிலையில் வாடிப்போய்
பாழ்படு நெஞ்சம் படர் அட கலங்கபாழாய்ப்போன நம் நெஞ்சங்கள் துன்ப நினைவுகள் வாட்டிவதைப்பதால் கலங்கிப்போகுமாறு,
நாடு இடை விலங்கிய வைப்பின்நம் இடத்துக்கும், அவள் விரும்பிச் சென்ற இடத்துக்கும் இடைப்பட்டுக் குறுக்கிட்டுக்கிடக்கும் நிலப்பகுதியிலுள்ள
காடு இறந்தனள் நம் காதலோளேபாலைக் காட்டைச் கடந்து சென்றாள் நம் காதல் மகள்.
# 314# 314
அவிர் தொடி கொட்ப கழுது புகவு அயரஒளிவிடும் தோள்வளைகள் சுழலுமாறு, பேய்கள் தம் பிணமாகிய உணவை விரும்பியுண்ண,
கரும் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவகரிய கண்களையுடைய காக்கையோடு கழுகும் வானத்தில் ஒலியெழுப்ப,
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும்சிறிய கண்களைக் கொண்ட யானை ஆட்களைக் கொன்று திரிந்துகொண்டிருக்கும்
நீள் இடை அரும் சுரம் என்ப நம்நீண்ட இடைவெளியைக் கொண்ட கடத்தற்கரிய பாலைவழி என்று சொல்வார்கள், நம்முடைய
தோள் இடை முனிநர் சென்ற ஆறேதோளிடத்தில் வெறுப்புக்கொண்டவராய் நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர் சென்ற வழியானது –
  
# 315# 315
பாயல் கொண்ட பனி மலர் நெடும் கண்படுக்கையே கதியாகக் கொண்ட, குளிர்ந்த மலர் போன்ற நெடிய கண்களையுடையவளின்
பூசல் கேளார் சேயர் என்பஅழுகுரலைக் கேட்கமாட்டார், தொலைதூரத்தில் இருக்கிறார் என்பார்கள் –
இழை நெகிழ் செல்லல் உறீஇஅணிகலன்கள் கழன்றோடுமாறு செய்துவிட்டு,
கழை முதிர் சோலை காடு இறந்தோரேமூங்கில்கள் முதிர்ந்து வளர்ந்திருக்கும் சோலையுள்ள காட்டைக் கடந்து சென்றவர் –
# 316# 316
பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்தபொன்னாற் செய்த வட்டக் காசுகளைக் கோத்த பொன்னணிகள் பொலிவிழக்கத்
தேர் அகல் அல்குல் அம் வரி வாடதேர் போன்ற அகலமுடைய அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாடிப்போகச்
இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலைசென்றுவிட்டார் தாமே! ஒளிவிடும் மலையில்
புல் அரை ஓமை நீடியபுன்மையான அடிமரத்தைக் கொண்ட ஓமை மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்த,
புலி வழங்கு அதர கானத்தானேபுலிகள் நடமாடித் திரியும் வழிகளைக் கொண்ட காட்டுப்பக்கம் –
  
# 317# 317
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுஆராய்ந்து பார்ப்போம் வா, தோழியே! பாழடைந்து,
பைது அற வெந்த பாலை வெம் காட்டுபசுமையே அற்று வெந்துபோய்க் கிடக்கும் பாலையாகிய வெப்பமான காட்டினில்
அரும் சுரம் இறந்தோர் தேஎத்துகடத்தற்கரிய பாலைவழியைக் கடந்து சென்றோர் இருக்கும் நாட்டுக்குச்
சென்ற நெஞ்சம் நீடிய பொருளேசென்ற என் நெஞ்சம் அங்கேயே நீண்டநாள் இருப்பதன் பொருளினை –
# 318# 318
ஆய் நலம் பசப்ப அரும் படர் நலியநம் அழகிய நலமெல்லாம் கெட்டுப் பசப்பினை எய்தவும், பொறுக்கமுடியாத துயரம் வருத்தவும்,
வேய் மருள் பணை தோள் வில் இழை நெகிழமூங்கிலைப் போன்ற பருத்த தோள்களின் ஒளிரும் அணிகலன்கள் கழன்றுபோகவும்,
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்துநம் விருப்பத்தை முற்றிலும் கொன்றுவிட்டவர், உறுதியாக, வேகமாக உயர்ந்து
ஓடு எரி நடந்த வைப்பின்பலவிடங்களிலும் பரந்து செல்லும் நெருப்பு எரித்தழித்த இடங்களிலுள்ள
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரேமுகடு உயர்ந்த வெயிலில் பளபளக்கும் மலையினைக் கடந்து சென்றவர் –
  
# 319# 319
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்கண்கள் கூசும்படி ஒளிவிடும் கதிர்கள் நெருப்பாய்ச்சுடும் இடைத்தினையுடையதாய்,
மண் புரை பெருகிய மரம் முளி கானம்நிலத்தில் பொந்துகள் பெருகியுள்ள, மரங்கள் கருகிப்போன காட்டினைக்
இறந்தனரோ நம் காதலர்கடந்து சென்றாரோ நம் காதலர்,
மறந்தனரோ தில் மறவா நம்மேமறந்து சென்றாரோ, அவரை மறவாத நம்மை?
# 320# 320
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூமுட்களுள்ள அடிமரத்தையுடைய இலவமரத்தின் ஒளிரும் பூங்கொத்திலுள்ள பெரிய பூக்கள்,
முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்துமுழங்கும் காட்டுத்தீயை அலைத்துக் காற்று மேலெழுவதால், வானத்து
உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும்இடியினால் பிறக்கும் நெருப்புப் போன்று பெரிய நிலத்தில் உதிர்ந்துவிழுகின்ற
கவலை அரும் சுரம் போயினர்பிரிவுபட்ட வழிகளைக் கொண்ட அரிய பாலை வழியில் சென்றார் –
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரேகொஞ்சமும் குறையாத பொறுக்கமுடியாத பிரிவுத் துயரத்தைத் தந்தவர்.
  
# 33 இடைச்சுர பத்து# 33 இடைச்சுர பத்து
# 321# 321
உலறு தலை பருந்தின் உளி வாய் பேடைகாய்ந்துபோன தலையையுடைய பருந்தின், உளியைப் போன்ற வாயைக் கொண்ட பேடை,
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிஉச்சியில் பரந்த தலையைக் கொண்ட ஓமை மரத்தின் அழகிய பிரிந்திருக்கும் கிளையில் சென்று
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்துதனிமைத் துயருடன் அழைப்பொலி விடுக்கும், நிலம் காய்ந்துகிடக்கும், காட்டைக் கொண்ட,
மொழிபெயர் பல் மலை இறப்பினும்வேற்று மொழி பேசுவோரிருக்கும் பல மலைகளைக் கடந்துசென்றாலும்
ஒழிதல் செல்லாது ஒண்_தொடி குணனேநினைவை விட்டு அகலாது ஒளிரும் தோள்வளை அணிந்தவளின் குணநலன்கள்.
# 322# 322
நெடும் கழை முளிய வேனில் நீடிஉயர்ந்த மூங்கில்கள் கருகிப்போகுமாறு வேனல் நீண்டு,
கடும் கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின்கடுமையான கதிர்களைக் கொண்ட ஞாயிறு பாறைகளும் வெடிக்குமாறு சுட்டுப்பொசுக்குதலால்,
வெய்ய ஆயின முன்னே இனியேவெப்பமாக இருந்தன, முன்னர் – இப்பொழுதோ
ஒண் நுதல் அரிவையை உள்ளு-தொறும்ஒளிவிடும் நெற்றியையுடைய காதலியை நினைக்க நினைக்க,
தண்ணிய ஆயின சுரத்து இடை யாறேகுளிர்ச்சி பொருந்தியவாய் ஆகிவிட்டன, பாலை நிலத்திடை இருக்கும் வழிகள் –
  
# 323# 323
வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்குகூர்மையான பற்களைக் கொண்ட செந்நாயானது, தன் சூல்கால விருப்பம் கொண்டிருக்கும் பெட்டைக்காகக்
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும்கள்ளிகள் நிறைந்த அழகிய காட்டு வழியிடையே காட்டுப்பன்றியை எதிர்பார்த்திருக்கும்
வெம் சுர கவலை நீந்திவெப்பமான பாலை வழியில் பிரிந்து செல்லும் பாதைகளைக் கடந்து
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பேவந்துகொண்டிருக்கின்றன நெஞ்சமே! நீ விரும்பியவளின் பண்புநலன்கள்.
# 324# 324
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைகாட்டுத்தீ எரித்துவிட்டுச் சென்ற, வெப்பமுள்ள நீண்ட இடைவழியில்
சிறிது கண்படுப்பினும் காண்குவென் மன்றசிறிது நேரம் கண்ணயர்ந்தாலும், காண்கிறேன், உறுதியாக,
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர்நள்ளென்னும் நடுயாமத்து இரவில், பரந்த மனையில் உள்ள நீண்ட இல்லத்தில்
வேங்கை வென்ற சுணங்கின்வேங்கைப் பூக்களையும் வென்றுவிடும் அழகுத்தேமலைக்கொண்ட,
தேம் பாய் கூந்தல் மாஅயோளேதேனொழுகும் கூந்தலையுடையவளாகிய அந்த மாநிறத்தாளை –
  
# 325# 325
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇவேனில் காலத்து அரசமரத்தின் இலைகள் எழுப்பும் ஒலியினைக் கேட்டு வெருண்டு
போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும்பறவைகள் தம் உணவினை உண்ணாமல், வேறிடத்துக்குப் பறந்து செல்லும்,
வெம்பு அலை அரும் சுரம் நலியாதுமிகுதியாகச் சூடாகி வருத்தும் கடத்தற்கரிய பாலை வழி வருத்தாது –
எம் வெம் காதலி பண்பு துணை பெற்றேஎனது விருப்பத்துக்குரிய காதலியின் பண்புகளைத் துணையாகப் பெற்றதனால் –
# 326# 326
அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாதுதீக்கொழுந்தாய் ஒளிவிடும் அகன்ற பரப்பில் நிழலுள்ள இடம் எதுவும் பெறாமல்,
மட மான் அம் பிணை மறியொடு திரங்கஇளைய மானின் அழகிய பெண்ணானது தன் குட்டியோடும் நலிவுற்று வாட,
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின்மழைநீர் பக்கங்களை அறுத்துச் சென்றதால் தேய்ந்துபோன சிறிய வழியினைக் கொண்டு
இன்னா மன்ற சுரமேஇன்னாதது, உறுதியாக, இந்தப்பாலை வழி;
இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பேஇனியது, நிச்சயமாக, நான் விட்டுவிட்டு வந்தவளின் பண்புநலன்.
  
# 327# 327
பொறி வரி தட கை வேதல் அஞ்சிபுள்ளிகளையும், வரிகளையும் உடைய நீண்ட கையானது சுடுமே என்று பயந்து
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லாசிறிய கண்களைக் கொண்ட யானை, நிலத்தைத் தொடாமல் செல்லும்,
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனேவெயிலால் காய்ந்துபோன மரக்கூட்டத்தையுடையது மூங்கில்கள் உயர்ந்துநிற்கும் பாலைவழி;
அன்ன ஆரிடையானும்அப்படிப்பட்ட அரிய வழியிலும்
தண்மை செய்த இ தகையோள் பண்பேகுளிர்ச்சியை ஊட்டுகின்றன இந்த அழகுள்ளவளின் அருமையான குணநலன்கள்.
# 328# 328
நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய்நுண்ணிதான மழைத்துளிகள் வீழ்ந்ததால் நறிய மலர்கள் உதிர்ந்து பரவி,
தண்ணிய ஆயினும் வெய்ய மன்றகுளிர்ச்சியாக இருந்தாலும் வெம்மையாகவே இருக்கிறது –
மடவரல் இன் துணை ஒழியகள்ளங்கபடமற்ற இனிய துணையை விட்டுவிட்டுப்
கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கேபாலைத்தன்மை முதிர்ந்த மரக்கூட்டங்களைக் கொண்ட இந்தப் பாலைக் காட்டினைக் கடந்து செல்பவனுக்கு –
  
# 329# 329
ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலைமனிதர்கள் நடமாட்டமற்ற பாழ்பட்டுப்போன அகன்ற இடத்தையுடைய,
வெம் முனை அரும் சுரம் நீந்தி நம்மொடுகொடுஞ்செயல்கள் நடைபெறும் இடமாகிய கடுமையான பாலைவழியைக் கடந்து, நம்மோடு
மறுதருவது-கொல் தானே செறி தொடிமறுப்புத்தந்து மீண்டும் சென்றுவிடுமோ, அதுவாக? – செறிவான வளையல்கள்
கழிந்து உகு நிலைய ஆககழன்று விழும் நிலையினையுடையவாக,
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சேவீட்டில் தனியே இருப்பவள் பற்றிக்கொண்ட என் உறுதி கொண்ட நெஞ்சம் –
# 330# 330
வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்திபொசுக்குகின்ற புழுதிக்காடாகிய வெயில் காயும் இந்தப் பாலைவழியைக் கடந்து
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவேவந்தோமாயினும், கைவிடுக, இனிமேலும் பயணம்செய்வதை;
அழுத கண்ணள் ஆய் நலம் சிதையஅழுத கண்களையுடையவளாக, தன் அழகிய நலம் சிதைந்துபோக,
கதிர் தெறு வெம் சுரம் நினைக்கும்ஞாயிற்றுக் கதிர்கள் சுட்டெரிக்கும் இந்தக் கொடிய பாலை நிலத்தையே நினைத்துக்கொண்டிருக்கும் –
அவிர் கோல் ஆய்_தொடி உள்ளத்து படரேஒளிர்வும் திரட்சியும் கொண்ட அழகிய வளையணிந்தவளின் உள்ளத்தின் எண்ணங்கள் –
  
# 34 தலைவி இரங்கு பத்து# 34 தலைவி இரங்கு பத்து
# 331# 331
அம்ம வாழி தோழி அவிழ் இணர்தோழியே! கேட்பாயாக! மலர்ந்த பூங்கொத்துகளையுடைய
கரும் கால் மராஅத்து வைகு சினை வான் பூகரிய அடிமரத்தையுடைய மரா மரத்தின் நிலையான கிளையில் உள்ள வெண்மையான பூக்கள்
அரும் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ளஅரிய பாலைவழியில் செல்வோர், தாம் விட்டுப்பிரிந்தவர்களை நினைத்துப் பார்க்கும்படியாக,
இனிய கமழும் வெற்பின்இனிமையாக மணம்பரப்பும் மலையிலும்,
இன்னாது என்ப அவர் சென்ற ஆறேதுன்பம் தருவது என்பார்கள் அவர் சென்ற வழி.
# 332# 332
அம்ம வாழி தோழி என்னதூஉம்தோழியே! கேட்பாயாக! சிறிதுகூட
அறன் இல மன்ற தாமே விறல் மிசைஅறப்பண்பு இல்லாதன, உறுதியாக, அவை – சிறந்த உச்சிகளைக் கொண்ட
குன்று கெழு கானத்த பண்பு இல் மா கணம்குன்றுகள் பொருந்திய காட்டிலுள்ள பண்பு இல்லாத விலங்கினங்கள் –
கொடிதே காதலி பிரிதல்“கொடியது, உம் காதலியை விட்டுப் பிரிந்து செல்வது,
செல்லல் ஐய என்னாது அவ்வேசெல்லவேண்டாம் ஐயனே!” என்று கூறமாட்டா, அங்கு.
  
# 333# 333
அம்ம வாழி தோழி யாவதும்தோழியே! கேட்பாயாக! சிறிதளவும்
வல்லா-கொல்லோ தாமே அவணஆற்றாதனவாகிவிட்டனவோ, அவை? – அங்குள்ள
கல் உடை நன் நாட்டு புள் இன பெரும் தோடுகற்பாறைகளையுடைய நல்லநாட்டைச் சேர்ந்த பறவையினத்தின் பெருங்கூட்டம்,
யாஅம் துணை புணர்ந்து உறைதும்“நாங்கள் என் துணையைச் சேர்ந்து வாழ்கிறோம்,
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வேஎவ்வாறு நீர் பிரிந்து வாழ்கிறீர்” என்று கேட்கமாட்டா, அங்கு.
# 334# 334
அம்ம வாழி தோழி சிறியிலைதோழியே! கேட்பாயாக! சிறிய இலைகளைக் கொண்ட
நெல்லி நீடிய கல் காய் கடத்து இடைநெல்லி மரங்கள் உயர வளர்ந்திருக்கும் பாறைகள் சுடுகின்ற பாலைவழியிடையே,
பேதை நெஞ்சம் பின் செல சென்றோர்பேதையாகிய எனது நெஞ்சம் பின்தொடர்ந்து செல்ல, செல்கின்றவர்
கல்லினும் வலியர் மன்றபாறையினும் இறுகிய மனம்படைத்தவர், உறுதியாக,
பல் இதழ் உண்கண் அழ பிரிந்தோரேபல இதழ்களையுடைய மலர் போன்ற மையுண்ட கண்கள் அழும்படி பிரிந்து சென்றோர்.
  
# 335# 335
அம்ம வாழி தோழி நம்-வயின்தோழியே! கேட்பாயாக! நம்மிடம் –
நெய்த்தோர் அன்ன செவிய எருவைஇரத்தம் போலச் சிவந்த செவியை உடைய கழுகுகள்
கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும்மலையின் பக்கவாட்டுப் பகுதியில் கடுமையான முடைநாற்றத்தைக் கொண்ட பிணங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்
காடு நனி கடிய என்ப – காட்டுப்பகுதி மிகவும் கடுமைகொண்டது என்பார்கள் –
நீடி இவண் வருநர் சென்ற ஆறேநீண்ட நாள் கழித்து இங்கு வருபவர் சென்ற வழியான –
# 336# 336
அம்ம வாழி தோழி நம்-வயின்தோழியே! கேட்பாயாக! நம்மைவிட்டுப்
பிரியலர் போல புணர்ந்தோர் மன்றபிரிந்து செல்லாதவர் போல நம்மைச் சேர்ந்திருந்தவர்தான்
நின்றது இல் பொருள்_பிணி முற்றியநிலையில்லாத பொருள் மேல் ஆசை முற்றியதால்
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரேகொடும் வெயில் மிகுந்துள்ள பாலைவழியைக் கடந்து சென்றோர்.
  
# 337# 337
அம்ம வாழி தோழி நம்-வயின்தோழியே! கேட்பாயாக! நம்மிடத்தில்
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும்மெய்யோடு மெய் சேரும்படி விரும்பிக் கைகளினால் தழுவிக்கொண்ட அணைப்பைக் காட்டிலும்
இனிய மன்ற தாமேஇன்பத்தைத் தருவன ஆமோ,
பனி இரும் குன்றம் சென்றோர்க்கு பொருளேகண்டால் நடுக்கந்தரும் பெரிய குன்றுகளைக் கடந்து சென்றவர்க்கு, அவர் நாடும் பொருள்.
# 338# 338
அம்ம வாழி தோழி சாரல்தோழியே! கேட்பாயாக! மலைச் சரிவில்
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்இலைகளே இல்லாமல் பூவாக மலர்ந்த உயர்ந்த நிலையைக் கொண்ட இலவமரம்
மலை உறு தீயில் சுர முதல் தோன்றும்மலையில் தீப்பிடித்தாற்போன்று வழியின் தொடக்கத்திலேயே தோன்றும்
பிரிவு அரும் காலையும் பிரிதல்பிரிவதற்கு அரிதாகிய இளவேனில் காலத்திலும் நம்மைப் பிரிந்து செல்வதாகிய
அரிது வல்லுநர் நம் காதலோரேஅரிதான செயலைச் செய்தலில் வல்லவர் நம் காதலர்.
  
# 339# 339
அம்ம வாழி தோழி சிறியிலைதோழியே! கேட்பாயாக! சிறிய இலைகளையும்
குறும் சினை வேம்பின் நறும் பழம் உணீஇயகுட்டையான கிளைகளையும் கொண்ட வேம்பின் நறிய பழத்தை உண்பதற்காக,
வாவல் உகக்கும் மாலையும்வௌவால் பறக்க முனைந்து உயர எழும் மாலைக்காலமும்
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடேஇல்லை போலும் தோழியே! அவர் சென்ற நாட்டில்.
# 340# 340
அம்ம வாழி தோழி காதலர்தோழியே! கேட்பாயாக! காதலர்
உள்ளார்-கொல் நாம் மருள்_உற்றனம்-கொல்நினைத்துப் பார்க்கவில்லையோ? நாம்தான் அவர் வரும் காலம் என்று தடுமாறுகிறோமோ?
விட்டு சென்றனர் நம்மேவிட்டுவிட்டுப் பிரிந்துசென்றார் நம்மை,
தட்டை தீயின் ஊர் அலர் எழவேதட்டைக் குச்சிகளில் பற்றிக்கொண்ட தீயினைப் போன்று ஊரில் பழிச்சொற்கள் உண்டாகுமாறு.
  
# 35 இளவேனி பத்து# 35 இளவேனி பத்து
# 341# 341
அவரோ வாரார் தான் வந்தன்றேஅவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
குயில் பெடை இன் குரல் அகவகுயிலின் பேடையானது இனிய குரலில் தன் துணையைக் கூவியழைக்க,
அயிர் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதேகரிய நிறங்கொண்ட குறுமணல் காற்று வீசுவதால் வளைவு வளைவாக மடங்கித் தோன்றும் இளவேனில் பருவம் –
# 342# 342
அவரோ வாரார் தான் வந்தன்றேஅவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
சுரும்பு களித்து ஆலும் இரும் சினைவண்டினங்கள் களிப்புடன் பாடிக்கொண்டு சுற்றித்திரிகின்ற, பெரிய கிளைகளையும்
கரும் கால் நுணவம் கமழும் பொழுதேகரிய அடிப்பகுதியையும் கொண்ட நுணா மரங்கள் நறுமணத்தைப் பரப்புகின்ற இனிய பருவம் –
  
# 343# 343
அவரோ வாரார் தான் வந்தன்றேஅவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
திணி நிலை கோங்கம் பயந்தஉறுதியாக நிற்கும் கோங்க மரம் தோற்றுவித்த
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதேஅழகு மிக்க கொழுத்த மொட்டுகள் மலர்கின்ற பொழுது –
# 344# 344
அவரோ வாரார் தான் வந்தன்றேஅவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
நறும் பூ குரவம் பயந்தநறுமணமிக்க பூக்களைக் கொண்ட குரவமரம் உண்டாக்கிய
செய்யா பாவை கொய்யும் பொழுதேகையினால் செய்யப்படாத பாவையைப் போன்ற மலர்களைக் கொய்யும் காலம் –
  
# 345# 345
அவரோ வாரார் தான் வந்தன்றேஅவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
புது பூ அதிரல் தாஅய்புதிய பூக்களைக் கொண்ட காட்டுமல்லிகை பூக்களை உதிர்த்து,
கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதேகூந்தலைப் போன்று நெளிநெளியாக இருக்கும் கருமணலுக்கு அழகுசேர்க்கும் அழகான வேனிற்பொழுது –
# 346# 346
அவரோ வாரார் தான் வந்தன்றேஅவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
அம் சினை பாதிரி அலர்ந்து எனஅழகிய கிளைகளையுடைய பாதிரி மரம் பூத்துக்குலுங்க,
செம் கண் இரும் குயில் அறையும் பொழுதேசிவந்த கண்களையுடைய கரிய குயில்கள் இளவேனிலின் வரவை அறிவிக்கும்வண்ணம் கூவுகின்ற பொழுது –
  
# 347# 347
அவரோ வாரார் தான் வந்தன்றேஅவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
எழில் தகை இள முலை பொலியஅழகும் நலமும் சேர்ந்த என்னுடைய இளம் முலைகள் பொலிவுபெறும்படியாக
பொரி பூ புன்கின் முறி திமிர் பொழுதேபொரியைப் போன்ற பூக்களைக் கொண்ட புன்கமரத்தின் இளந்தளிர்களை அரைத்துப் பூசிக்கொள்ளும் பொழுது –
# 348# 348
அவரோ வாரார் தான் வந்தன்றேஅவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
வலம் சுரி மராஅம் வேய்ந்து நம்வலமாகச் சுழித்திருக்கும் மராமரத்துப் பூக்களை மேற்பகுதியில் பரப்பிக்கொண்டு, நம்முடைய
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதேமணங்கமழ்கின்ற குளிர்ந்த பொழில் மலர்ந்து காட்சியளிக்கும் நேரம் –
  
# 349# 349
அவரோ வாரார் தான் வந்தன்றேஅவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
பொரி கால் மா சினை புதையபொரிந்துபோன அடிப்பகுதியைக் கொண்ட மாமரத்துக் கிளைகள் மறைந்துபோகும்படி
எரி கால் இளம் தளிர் ஈனும் பொழுதேநெருப்பைக் கக்குவதுபோன்ற இளம் தளிர்கள் முளைக்கும் இளவேனிற்பொழுது –
# 350# 350
அவரோ வாரார் தான் வந்தன்றேஅவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
வேம்பின் ஒண் பூ உறைப்பவேம்பின் ஒளிவிடும் பூக்கள் உதிர்ந்து விழ,
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதேதேன் ததும்பும் சொற்களால் அவர் வருவேன் என்று தெளிவித்த பொழுது –
  

Related posts