ஐங்குறுநூறு 251-300

  
# 26 குன்ற குறவன் பத்து# 26 குன்ற குறவன் பத்து
# 251# 251
குன்ற குறவன் ஆர்ப்பின் எழிலிகுன்றத்தின் குறவர்கள் கொண்டாடினால், மேகங்கள்
நுண் பல் அழி துளி பொழியும் நாடநுண்ணிய பலவான மிகுந்த துளிகளைப் பெய்யும் நாட்டினனே!
நெடு வரை படப்பை நும் ஊர்நெடிய மலையிடத்துள்ள தோட்டங்களையுடைய உமது ஊரிலிருந்து
கடு வரல் அருவி காணினும் அழுமேவேகமாக வரும் அருவிநீரைக் கண்டாலும் இவள் அழுகின்றாள்.
# 252# 252
குன்ற குறவன் புல் வேய் குரம்பைகுன்றத்தின் குறவர்களின் புல் வேய்ந்த குடிசையினை,
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்தோட்டத்தின் நடுவில் அசைவாடும் இளமையான வெண்மேகங்கள் மறைக்கும் நாட்டினன்
புரையோன் வாழி தோழி விரை பெயல்உயர்ந்தவன், வாழ்க, தோழியே! வீசியடிக்கும் மழையையும்
அரும் பனி அளைஇய கூதிர்பொறுத்தற்கரிய குளிரையும் கலந்து, கூதிர்காலத்தின்
பெரும் தண் வாடையின் முந்து வந்தனனேபெரிதான குளிர்ந்த வாடைக் காற்று வருவதற்கு முன்னர் திரும்பி வந்துவிட்டான்.
  
# 253# 253
குன்ற குறவன் சாந்த நறும் புகைகுன்றத்துக் குறவன் எழுப்பும் சந்தனக்கட்டைகளின் நறிய புகை
தேம் கமழ் சிலம்பின் வரை_அகம் கமழும்தேன் மணம் கமழ்கின்ற மலைச் சரிவின் பக்க இடங்களிலெல்லாம் மணம்பரப்பும்
கானக நாடன் வரையின்கானக நாடன் மணம்பேச வந்தால்தான்
மன்றலும் உடையள்-கொல் தோழி யாயேதிருமணத்தைப் பற்றி யோசிப்பாள் போலும், தோழியே! எமது தாய்!
# 254# 254
குன்ற குறவன் ஆரம் அறுத்து எனகுன்றத்தின் குறவன் சந்தனமரத்தை அறுத்ததினால்
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்அதன் நறுமணம் நாடெல்லாம் சூழ்ந்து காந்தள் மலர்களின் மணத்தோடு சேர்ந்து மணக்கும் –
வண்டு இமிர் சுடர் நுதல் குறு_மகள்வண்டுகள் ஒலிக்கும் ஒளியுடைய நெற்றியையுடையவளே!
கொண்டனர் செல்வர் தம் குன்று கெழு நாட்டேகூட்டிக்கொண்டு செல்வார்  – தம் குன்றுகளைப் பொருந்திய நாட்டுக்கு.
  
# 255# 255
குன்ற குறவன் காதல் மட_மகள்குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகள்,
வரை அர_மகளிர் புரையும் சாயலள்மலையிலிருக்கும் தெய்வ மகளிரைப் போன்ற சாயலையுடையவள்,
ஐயள் அரும்பிய முலையள்மென்மையானவள், அரும்பிவரும் முலைகளைக் கொண்டவள்,
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கேசிவந்த வாயினை உடையவள், மார்பினில் அழகுத்தேமலைக் கொண்டவள்.
# 256# 256
குன்ற குறவன் காதல் மட_மகள்குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகள்,
வண்டு படு கூந்தல் தண் தழை கொடிச்சிவண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடையவள், குளிர்ச்சியான தழையுடையை அணிந்திருக்கும் குறிஞ்சிப்பெண்,
வளையள் முளை வாள் எயிற்றள்வளைகளை அணிந்திருப்பவள், முளையைப்போன்ற கூர்மையான பற்களைக் கொண்டவள்,
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளேஇளையவள் என்றாலும் கண்டாரைப் பெரிதும் வருத்துபவள்.
  
# 257# 257
குன்ற குறவன் கடவுள் பேணிகுன்றத்துக் குறவன், கடவுளை வழிபட்டு
இரந்தனன் பெற்ற எல் வளை குறு_மகள்இரந்து வேண்டிப் பெற்ற ஒளிவிடும் வளையல்களைக் கொண்ட சிறுமகள்,
ஆய் அரி நெடும் கண் கலிழஅழகிய செவ்வரிகளையுடைய நீண்ட கண்கள் கலங்கி நீர்விட,
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடேமிகவும் தொலைவிலுள்ளதே நீ பிரிந்து செல்லும் நாடு.
# 258# 258
குன்ற குறவன் காதல் மட_மகள்குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகள்,
அணி மயில் அன்ன அசை நடை கொடிச்சியைஅழகான மயில் போன்ற அசைவாடும் நடையையுடைய குறிஞ்சிப் பெண்ணை,
பெரு வரை நாடன் வரையும் ஆயின்பெரிய மலையைச் சேர்ந்தவன் மணம்பேச வருவானாயின்
கொடுத்தனெம் ஆயினோம் நன்றேஅவனுக்குக் கொடுத்துவிடுதலே நன்றாகும்,
இன்னும் ஆனாது நன்_நுதல் துயரேஇன்னும் குறையவில்லை நல்ல நெற்றியையுடையவளின் பிரிவுத் துயரம்.
  
# 259# 259
குன்ற குறவன் காதல் மட_மகள்குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகள்
மன்ற வேங்கை மலர் சில கொண்டுஊர்ப்பொதுவில் உள்ள வேங்கை மரத்தின் மலர்களில் சிலவற்றைக் கொண்டு
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்திமலையில் வாழும் கடவுளான தங்களின் குலதெய்வத்தை வாழ்த்தி,
தேம் பலி செய்த ஈர் நறும் கையள்இனிய பலியுணவைப் படைத்த ஈரமுள்ள நறிய கையினையுடையவள்,
மலர்ந்த காந்தள் நாறிமலர்ந்த காந்தளைப் போல மணம்வீசி,
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளேகலங்கி அழும் கண்களையுடையவள் என்னைப் பெரிதும் வருத்தியவள்.
# 260# 260
குன்ற குறவன் காதல் மட_மகள்குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய இளமையான மகளான
மென் தோள் கொடிச்சியை பெறற்கு அரிது தில்லமென்மையான தோள்களைக் கொண்ட அந்தக் குறிஞ்சிப்பெண்ணை இனிப் பெறுவது மிகவும் அரியது,
பைம் புற படு கிளி ஒப்பலர்பச்சையான முதுகினையுடைய, தினைக்கதிரில் வீழும் கிளிகளை இனி விரட்டமாட்டார்;
புன்_புல மயக்கத்து விளைந்தன தினையேபுன்செய்ப் பகுதியாகப் பதப்படுத்திய நிலத்தில் விளைந்துநிற்கின்றன தினைப்பயிர்கள்.
  
# 27 கேழ பத்து# 27 கேழ பத்து
# 261# 261
மென் தினை மேய்ந்த தறுகண் பன்றிமென்மையான தினைப் பயிரை மேய்ந்த எதற்கும் அஞ்சாத காட்டுப்பன்றி
வன் கல் அடுக்கத்து துஞ்சும் நாடன்வன்மையான பாறைகள் கொண்ட மலைச்சரிவின் இடுக்கில் உறங்கும் நாட்டினன்
எந்தை அறிதல் அஞ்சி-கொல்எம் தந்தை தெரிந்துகொள்வானோ என்று அஞ்சியோ என்னமோ,
அதுவே மன்ற வாராமையேஅதுவாகத்தான் இருக்கவேண்டும், வராமல் நின்றுபோனதற்குக் காரணம்.
# 262# 262
சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றிசிறுதினைப் பயிரை மேய்ந்த எதற்கும் அஞ்சாத காட்டுப்பன்றி
துறுகல் அடுக்கத்து துணையொடு வதியும்குத்துக்கல்லையுடைய மலைச்சரிவின் இடுக்கில் தன் துணையோடு படுத்திருக்கும்
இலங்கு மலை நாடன் வரூஉம்ஒளிரும் மலை நாட்டினன் மணம்பேச வருவதுதான்
மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பேஎன் நோய்க்கு மருந்தாகும் என்பதனை அறியுமோ தோழி! அவனது காதல்?
  
# 263# 263
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்நல்ல பொன்னைப் போன்று நிறமுள்ள இளமை தீர்ந்து முற்றிய தினைக் கதிரைப்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்பொன் உரைக்கும் கல்லைப் போன்று கருமைநிறங்கொண்ட காட்டுப்பன்றி வயிறு நிரம்ப உண்ணும்
குன்று கெழு நாடன் தானும்குன்றுகளைச் சேர்ந்த நாட்டுக்குரியவனும்
வந்தனன் வந்தன்று தோழி என் நலனேவந்துவிட்டான், வந்துவிட்டது தோழி! எனைவிட்டுப் பிரிந்துசென்ற என் அழகு.
# 264# 264
இளம் பிறை அன்ன கோட்ட கேழல்இளம்பிறையைப் போன்ற கொம்பினையுடைய காட்டுப்பன்றி
களங்கனி அன்ன பெண்_பால் புணரும்களங்கனியைப் போன்ற தன் பெண்பன்றியினைப் புணர்ந்திருக்கும்
அயம் திகழ் சிலம்ப கண்டிகும்சுனைகள் திகழும் மலைச்சரிவினைச் சேர்ந்தவனே! காண்பாயாக!
பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணேபசந்துபோயிருக்கின்றன நீ விரும்பியவளின் கண்கள்.
  
# 265# 265
புலி கொல் பெண்_பால் பூ வரி குருளைபுலியால் கொல்லப்பட்ட பெண் பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும்வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்
குன்று கெழு நாடன் மறந்தனன்குன்றினைச் சேர்ந்த நாட்டினன் மறந்துவிட்டான்,
பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனேபொன்னைப் போல் போற்றற்குரிய தன் புதல்வனோடு என்னையும் நீங்கிச் சென்றுவிட்டான்.
# 266# 266
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தலொடுசிறிய கண்களைக் கொண்ட பன்றியின் மிகுந்த சினத்தையுடைய ஆணானது
குறு கை இரும் புலி பொரூஉம் நாடகுட்டையான முன்னங்கால்களையுடைய பெரிய புலியுடன் போரிடும் நாட்டுக்குரியவனே!
நனி நாண் உடைமையம் மன்றமிகுந்த நாணவுணர்ச்சி உடையவர்கள் நாங்கள் உறுதியாக,
பனி பயந்தன நீ நயந்தோள் கண்ணேஅதனால் வெளியிற் சொல்ல முடியாமல் கண்ணீரை விடுகின்றன நீ விரும்பியவளின் கண்கள்.
  
# 267# 267
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்சிறிய கண்களைக் கொண்ட பன்றியின் மிகுந்த சினத்தையுடைய ஆணானது
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றிகுத்துக்கல்லையுடைய மலைச்சரிவின் இடுக்கில் வில்லுடன் காவல்காப்போரை ஏமாற்றி,
ஐவனம் கவரும் குன்ற நாடன்ஐவன நெல்லைக் கவர்ந்து உண்ணும் குன்றங்களுள்ள நாட்டினன்
வண்டு படு கூந்தலை பேணிவண்டுகள் மொய்க்கும் கூந்தலை அன்புடன் தடவிக்கொடுத்துப்
பண்பு இல சொல்லும் தேறுதல் செத்தேபண்பற்ற பல சொற்களைச் சொல்வான், நீ அதை நம்புவாய் என்று எண்ணி –
# 268# 268
தாஅய் இழந்த தழு வரி குருளையொடுதாயை இழந்த, நெருக்கமான வரிகளைத் தன் மேனியில் கொண்ட குட்டியுடன்
வள மலை சிறுதினை உணீஇய கானவர்வளமையான மலையில் சிறுதினையை உண்டுவிட்டு, குறவர்களின்
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும்மலையில் ஓங்கியெழும் உயர்ந்த உச்சியில் காட்டுப்பன்றி உறங்கும்
நன் மலை நாடன் பிரிதல்நல்ல மலநாடன் பிரிந்து செல்வது
என் பயக்கும்மோ நம் விட்டு துறந்தேஎன்ன பயனைத் தருமோ? நம்மைத் தனியே விட்டுவிட்டுத் துறந்து –
  
# 269# 269
கேழல் உழுது என கிளர்ந்த எருவைகிழங்குகளை எடுக்கக் காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிட அதில் செழித்து வளர்ந்த கோரைப்புல்
விளைந்த செறுவில் தோன்றும் நாடன்நன்றாக விளைந்த நெல்வயலைப் போலத் தோன்றும் நாட்டினையுடையவன்,
வாராது அவண் உறை நீடின் நேர் வளைதிரும்பி வராமல் அங்கேயே தங்கியிருப்பதை நீட்டித்தால், செம்மையான வளைகளை அணிந்த
இணை_ஈர்_ஓதி நீ அழஇரு பிரிவுகளையுடைய வழவழப்பான கூந்தலையுடையவளே! நீ அழும்படி
துணை நனி இழக்குவென் மடமையானேஉனக்குத் துணையாக இருப்பதை மிகவும் நான் இழப்பேன், உங்களைச் சேர்த்துவைத்த என் மடத்தனத்தால்-
# 270# 270
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில்கிழங்குகளை எடுக்கக் காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிடும் மலைச் சரிவில்
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்முதல் விளைச்சலைக் குறவர்கள் கொய்துகொண்டு செல்லும்
புல்லென் குன்றத்து புலம்பு கொள் நெடு வரைபுன்மையான குன்றிலுள்ள தனிமையுற்றுக் கிடக்கும் நெடிய மலைப்பகுதியைக்
காணினும் கலிழும் நோய் செத்துகண்டாலும் கண்கலங்கி நீர் உகுக்கும் நோயினையுடையவளாவாய் என்று எண்ணி
தாம் வந்தனர் நம் காதலோரேதாமே வந்துவிட்டார் நம் காதலர்.
  
# 28 குரக்கு பத்து# 28 குரக்கு பத்து
# 271# 271
அவரை அருந்த மந்தி பகர்வர்அவரையை நிறையத் தின்ற குரங்கு, பொருள்களின் விலைகூறி விற்பவரின்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்பையைப் போன்று தோன்றும் நாட்டினையுடையவன் பெண்கேட்டு வந்தால்
பல் பசு பெண்டிரும் பெறுகுவன்பல பசுக்களையும், பெண்டிரையும் பெறக்கூடிய தகுதியையுடையவன்,
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கேநீண்ட காலமாக உறவுவைத்திருந்தவன் என்ற முறையில் நீர் கேட்பதைத் தருவான் இவளுக்காக.
# 272# 272
கரு விரல் மந்தி கல்லா வன் பறழ்கரிய விரலையுடைய குரங்கின், இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளாத வலிய குட்டி,
அரு வரை தீம் தேன் எடுப்பி அயலதுஏறுதற்கரிய மலையில் இனிய தேனை எடுத்து (தேனீக்கள் கொட்டியதால்), அருகிலிருக்கும்
உரு கெழு நெடும் சினை பாயும் நாடன்அச்சம் பொருந்திய நீண்ட மரக்கிளைக்குத் தாவும் நாட்டினையுடையவன்
இரவின் வருதல் அறியான்இரவு நேரத்தில் வருவதை அறியமாட்டான்,
வரும்_வரும் என்ப தோழி யாயேஆனால் பேச்சுவாக்கில் “வரும் வரும்” என்கிறாள் தோழி! நம் தாய்.
  
# 273# 273
அத்த செயலை துப்பு உறழ் ஒண் தளிர்நெடுவழியில் உள்ள அசோகின் பவளம் போன்ற ஒளிவிடும் தளிரைப்
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும்புல்லிய தலையைக் கொண்ட குரங்கின் வலிய குட்டி நிறையத் தின்னும்
நன் மலை நாட நீ செலின்நல்ல மலையைச் சேர்ந்தவனே! நீ பிரிந்து சென்றால்
நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மேஉன்னையே விரும்பி இருக்கும் இவள் என்னைக்காட்டிலும் கலங்கிக் கண்ணீர்விடுவாள்.
# 274# 274
மந்தி கணவன் கல்லா கடுவன்மந்தியின் கணவனான, ஒன்றையும் கற்றுக்கொள்ளாத ஆண்குரங்கு
ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன்ஒளிரும் நிறத்தையுடைய வலிமையான புலி உறுமுவதால் வேகமாகத் தன் பெண்குரங்கையும் கூட்டிக்கொண்டு
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்குன்றில் உள்ள உயரமான சரிவின் இடுக்கத்தைச் சென்றடையும் நாட்டையுடையவன்
சென்றனன் வாழி தோழி என்பிரிந்து சென்றான், வாழ்க தோழியே! என்
மென் தோள் கவினும் பாயலும் கொண்டேமென்மையான தோள்களின் அழகையும், கண்களின் உறக்கத்தையும் தன்னுடன் எடுத்துக்கொண்டு –
  
# 275# 275
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறைபிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும்
மாரி மொக்குள் புடைக்கும் நாடமழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!
யாம் நின் நயந்தனம் எனினும் எம்நான் உன்னை விரும்புகிறேன், எனினும், எனது
ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினேஅழகிய பெண்மை நலம் வாடிப்போகுமோ, நீயும் என்மீது அன்புசெலுத்தினால்?
# 276# 276
மந்தி காதலன் முறி மேய் கடுவன்பெண்குரங்கின் காதலனான, இளந்தளிர்களை மேயும் ஆண்குரங்கு
தண் கமழ் நறை கொடி கொண்டு வியல் அறைகுளிர்ச்சியுள்ள மணங்கமழும் நறைக்கொடியினைக் கொண்டு அகன்ற பாறையில் படிந்திருக்கும்
பொங்கல் இள மழை புடைக்கும் நாடபொங்கிவரும் நுரை போன்ற வெண்மையான மேகத்தினை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோநீ விரும்பவில்லையெனினும், இவளை மணந்துகொண்டு கூட்டிச் செல்,
கல் முகை வேங்கை மலரும்பாறைகளின் வெடிப்புகளில் வளர்ந்திருக்கும் வேங்கை மரம் பூவிடும்
நன் மலை நாடன் பெண்டு என படுத்தேநல்ல மலைக்கு உரியவனின் மனைவி என்று சொல்லப்படும் வகையில்.
  
# 277# 277
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல்குறவரின் வீட்டு முற்றத்தில் இருக்கும் விலங்குகள் தம் முதுகைத் தேய்த்துக்கொள்ளும் குத்துக்கல்லில்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்எதனையும் கற்றுக்கொள்ளாத பெண்குரங்கு தன் ஆண்குரங்கோடு குதித்து விளையாடும்
குன்ற நாட நின் மொழிவல் என்றும்குன்றத்தைச் சேர்ந்த நாட்டவனே! உனக்கு ஒன்று கூறுவேன். எப்பொழுதும்
பயப்ப நீத்தல் என் இவள்பசந்துபோகும்படி பிரிந்துசெல்லுதல் என்னத்துக்காகவோ? இவளின்
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணேகுளத்தில் வளரும் குவளை மலர் போன்ற ஒன்றோடொன்று எதிர்நிற்கும் கண்கள் –
# 278# 278
சிலம்பின் வெதிரத்து கண்விடு கழை கோல்மலைச் சரிவிலிருக்கும் மூங்கிலின், கணுக்கள் விட்டுக் கழையாக வளர்ந்திருக்கும் கோலின் மேல்
குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சிகுரங்கின் வலிய குட்டித் தாவியதாக, குளத்தில்
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்மீனுக்காக எறியப்படும் தூண்டிலைப் போல, அந்த மூங்கிற்கழை வளைந்து நிமிரும் நாட்டினைச் சேர்ந்தவன்
உற்றோர் மறவா நோய் தந்துஅனுபவிப்போர் மறக்கமாட்டாத நோயினைத் தந்து,
கண்டோர் தண்டா நலம் கொண்டனனேகாணுவோர் கண்டது போதுமென்று கண்களை விலக்கிக்கொள்ளாத அழகினைக் கவர்ந்துகொண்டான்.
  
# 279# 279
கல் இவர் இற்றி புல்லுவன ஏறிவேரினால் பாறையைப் பற்றிக்கொண்டு உயரும் இத்தி மரத்தில் கையில் கிடைப்பதைப் பிடித்துக்கொண்டு ஏறி
குளவி மேய்ந்த மந்தி துணையோடுகாட்டு மல்லிகையை மேய்ந்த பெண்குரங்கு தன் துணைவனோடு
வரை மிசை உகளும் நாட நீ வரின்மலை மேல் குதித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே! நீ எம் ஊருக்கு வந்தால்,
கல் அகத்தது எம் ஊரேபாறைகளுக்கு நடுவே உள்ளது எம்முடைய ஊர்;
அம்பல் சேரி அலர் ஆங்கட்டேசும்மாவே கிசுகிசுக்கும் சேரியில் பலரறியப் பழிசுமத்தும் இடமும் அங்கு உண்டு.
# 280# 280
கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்புகரிய விரலையுடைய குரங்கின், இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளாத வலிய குட்டி,
இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி சிறு கோல்பெரிய மூங்கிலின் பச்சையான கழையில் ஏறி நீலாவுக்கு நேரே ஆடுவது, சிறிய கோலால்
மதி புடைப்பது போல தோன்றும் நாடநிலவினை அடிப்பது போலத் தோன்றும் நாட்டைச் சேர்ந்தவனே!
வரைந்தனை நீ என கேட்டு யான்இவளை மணந்துகொண்டாய் நீ எனக் கேட்டு, நான்
உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கேமுன்பேயே சொல்லிவிட்டேன் அல்லவா! அதனை எனது தாய்க்கு.
  
# 29 கிள்ளை பத்து# 29 கிள்ளை பத்து
# 281# 281
வெள்ள வரம்பின் ஊழி போகியும்பல கோடிக்கணக்கான ஊழிக்காலம் சென்றாலும்
கிள்ளை வாழிய பலவே ஒள் இழைகிளியே நீ வாழ்க பல்லாண்டு! ஒளிரும் அணிகலன்களை அணிந்த,
இரும் பல் கூந்தல் கொடிச்சிகரிய பலவான கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்
பெரும் தோள் காவல் காட்டிய அவ்வேதன் பெரிய தோள்களால் காக்கும் காவலுக்குக் காரணமானாய்!
# 282# 282
சாரல் புறத்த பெரும் குரல் சிறுதினைமலைச் சாரலை அடுத்த பெரிய கதிர்களைக் கொண்ட சிறுதினையைக் காத்துப்
பேர் அமர் மழை கண் கொடிச்சி கடியவும்பெரிய செழுமையான குளிர்ந்த கண்களையுடைய குறிஞ்சிப்பெண் விரட்டிவிடவும்,
சோலை சிறு கிளி உன்னு நாடசோலையிலுள்ள சிறிய கிளி விடாமல் கதிரைக் கொத்தித்தின்னும் நாடனே!
ஆர் இருள் பெருகின வாரல்மிகவும் அதிகமான இருள் பெருகிவருவதால், வரவேண்டாம்,
கோட்டு_மா வழங்கும் காட்டக நெறியேகொம்புகளையுடைய யானைகள் நடமாடும் காட்டுக்குள்ளான வழியில் –
  
# 283# 283
வன்கண் கானவன் மென் சொல் மட_மகள்கொடும் சொற்களைக் கொண்ட குறவனின் மென்மையான சொற்களைக் கொண்ட இளைய மகள்,
புன்_புல மயக்கத்து உழுத ஏனல்புன்செய்ப் பகுதியாகப் பதப்படுத்திய நிலத்தில் உழுத தினைப் புனத்தில்
பைம் புற சிறு கிளி கடியும் நாடபச்சையான முதுகினையுடைய சிறிய கிளிகளை விரட்டும் நாட்டினனே!
பெரிய கூறி நீப்பினும்பெற்றோர் வாய்மையுடைய உறுதிமொழிகள் பலவற்றைக் கூறி விலக்கினாலும்,
பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவேகாதலரின் பொய்மொழிகளான வலையில் விழும் பெண்கள் மிகவும் அதிகமானோர்.
# 284# 284
அளிய தாமே செ வாய் பைம் கிளிஇரங்கத்தக்கனவாம், சிவந்த வாயினையுடைய பசிய கிளிகள்!
குன்ற குறவர் கொய் தினை பைம் கால்குன்றத்தின் குறவர்கள் கொய்துவிட்ட தினைப் பயிரின் பசிய தண்டுகளையுடைய
இருவி நீள் புனம் கண்டும்கதிரறுத்த வெறும் தட்டைகள் நீண்டிருக்கும் புனத்தைக் கண்டபின்னரும்
பிரிதல் தேற்றா பேர் அன்பினவேஅப் புனத்தைவிட்டுப் பிரிந்துசெல்லத் துணியாத பெரிய அன்பினை உடையவை.
  
# 285# 285
பின் இரும் கூந்தல் நன் நுதல் குற_மகள்பின்னப்பெற்ற கரிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய குறமகள்
மென் தினை நுவணை உண்டு தட்டையின்மென்மையான் தினையின் மாவினை உண்டபடியே தட்டை என்னும் கருவியை ஓங்கி முழக்கி,
ஐவன சிறு கிளி கடியும் நாடஐவன நெல் கதிரை உண்ணும் சிறிய கிளிகளை விரட்டிவிடும் நாட்டினனே!
வீங்கு வளை நெகிழ பிரிதல்செறிவுற்ற வளைகள் நெகிழ்ந்துபோகும்படியாகப் பிரிந்து செல்லுதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தேஎப்படி உன்னால் முடிகிறது, இங்கு இவளைத் துறந்து –
# 286# 286
சிறுதினை கொய்த இருவை வெண் கால்சிறுதினையைக் கொய்து விட்டுப்போன கதிரறுத்த தாளின் வெள்ளிய அடிப்பகுதியில்
காய்த்த அவரை படு கிளி கடியும்காய்த்த அவரையில் வந்து படியும் கிளிகளை ஓட்டும்
யாணர் ஆகிய நன் மலை நாடன்தொடர்ந்த புதுவரவினையுடைய நல்ல மலை நாட்டினன்
புகர் இன்று நயந்தனன் போலும்ஏதோ குற்றம் செய்ய இன்று விரும்பினான் போலும்!
கவரும் தோழி என் மாமை கவினேமாறுபட்டுத் தோன்றுகிறது தோழி! என் மாநிற மேனியழகு!
  
# 287# 287
நெடு வரை மிசையது குறும் கால் வருடைநீண்ட மலையின் உச்சியில் உள்ளது குட்டையான கால்களையுடைய வரையாட்டைப் பார்த்து,
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாடதினைக் கதிரில் வந்து வீழும் கிளிகள் வெருளும் நாட்டினனே!
வல்லை மன்ற பொய்த்தல்வல்லவனாய் இருக்கிறாய், உறுதியாக நீ, பொய் பேசுவதில்,
வல்லாய் மன்ற நீ அல்லது செயலேவல்லவன் அல்லவனாயும் இருக்கிறாய், உறுதியாக, நீ நல்லது அல்லாததைச் செய்வதில்.
# 288# 288
நன்றே செய்த உதவி நன்று தெரிந்துநன்றாகச் செய்த உதவியை, நன்றாக உணர்ந்து
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர்நாம் என்ன கைம்மாறு செய்யலாம் நெஞ்சே! அழகிய
மெல் இயல் கொடிச்சி காப்பமென்மையான இயல்பினைக் கொண்ட இந்தக் குறிஞ்சிப்பெண் காவல்காக்க,
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியேபல கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தின் மேல் பரவித்திரியும் இக் கிளிகள் –
  
# 289# 289
கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்துஇந்தக் குறிஞ்சி பெண்ணின் இனிய குரலைக் கிளியின் குரலாக எண்ணி, மலைச் சரிவிலிருக்கும்
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி எனபசிய கதிர்களையுடைய தினைப்புனத்தில் வந்து படர்கின்றன கிளிகள் என்று
காவலும் கடியுநர் போல்வர்காவலையும் நிறுத்திவிடுவார்கள் போலிருக்கிறது,
மால் வரை நாட வரைந்தனை கொண்மோபெரிய மலைகளின் நாட்டவனே! சீக்கிரம் மணந்துகொண்டு செல்வாயாக.
# 290# 290
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனிஅறத்தைப் புரியும் செங்கோல் ஆட்சியையுடைய மன்னனைக் காட்டிலும், தாம் மிகவும்
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கியசிறந்தன போலும் இந்தக் கிளிகள், சுடர்விடும்
பூ கமழ் கூந்தல் கொடிச்சிபூக்கள் மணக்கும் கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்ணால்
நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமேகனிவுடன் பார்க்கவும் படும், அவளால் கடிந்து ஓட்டவும் படுமே!
  
# 30 மஞ்ஞை பத்து# 30 மஞ்ஞை பத்து
# 291# 291
மயில்கள் ஆல குடிஞை இரட்டும்மயில்கள் களிப்புடன் ஆட, பேராந்தைகள் இரட்டை இரட்டையாய்க் குரல் எழுப்பும்
துறுகல் அடுக்கத்ததுவே பணை தோள்குத்துக்கல்லை உடைய மலைச்சரிவின் இடுக்கத்தில் உள்ளதுவே, பருத்த தோள்களையும்,
ஆய் தழை நுடங்கும் அல்குல்அழகிய தழையுடை அசைவாடும் அல்குலையும் கொண்ட
காதலி உறையும் நனி நல் ஊரேஎன் காதலி வாழும் மிகவும் நல்ல ஊர்.
# 292# 292
மயில்கள் ஆல பெரும் தேன் இமிரமயில்கள் களித்தாட, கூட்டமான வண்டினங்கள் ஒலிக்க,
தண் மழை தழீஇய மா மலை நாடகுளிர்ந்த மேகங்கள் சூழ்ந்த பெரிய மலை நாட்டினனே!
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்துஉமக்கு இவள் சிறந்தவள் என்பதைக் காட்டிலும் எனக்கு அவள் சிறந்தவள், நீ மிகவும் விரும்பி
நன் மனை அரும் கடி அயரநம் நல்ல வீட்டில் சிறப்பான மணவிழா நடைபெற
எம் நலம் சிறப்ப யாம் இனி பெற்றோளேஎன்னுடைய நலமும் சிறக்க, நான் இப்போது பெற்ற இளையவள்.
  
# 293# 293
சிலம்பு கமழ் காந்தள் நறும் குலை அன்னமலைச் சரிவில் கமழ்கின்ற காந்தளின் நறிய பூங்கொத்தினைப் போன்ற
நலம் பெறு கையின் என் கண்புதைத்தோயேஅழகினைக் கொண்ட கையால் என் கண்களைப் பொத்துகின்றவளே!
பாயல் இன் துணை ஆகிய பணை தோள்என் படுக்கைக்கு இனிய துணையாகிய பருத்த தோள்களையும்,
தோகை மாட்சிய மடந்தைமயில் போன்ற மாட்சிமையையும் கொண்ட பெண்
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரேஉன்னை அன்றி வேறு உள்ளார்களோ என் நெஞ்சில் அமர்ந்தவர்கள்?
# 294# 294
எரி மருள் வேங்கை இருந்த தோகைதீச்சுடர் போன்ற வேங்கை மலர்களிடையே இருந்த மயிலானது
இழை அணி மடந்தையின் தோன்றும் நாடஅணிகலன்கள் அணிந்த பெண்ணைப் போலத் தோன்றும் நாட்டினனே!
இனிது செய்தனையால் நுந்தை வாழியர்இனியது செய்தாய்! உன் தந்தை வாழ்வாராக!
நன் மனை வதுவை அயர இவள்நல்ல வீட்டில் மணவிழா நடைபெற, இவளின்
பின் இரும் கூந்தல் மலர் அணிந்தோயேபின்னலிட்ட கரிய கூந்தலில் பூச் சூடிவிட்டாய்!
  
# 295# 295
வருவது-கொல்லோ தானே வாராதுதிரும்பி வருமோ அதுவாக? வராமல்
அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோஅங்கேயே தங்குவதை விரும்பியதால் நிலையாக இருந்துவிடுமோ?
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞைதினைப்புனத்தார் கொளுத்திய நெருப்புக்கு அஞ்சிப் புகலிடம் தேடியோடும் மயில்,
இருவி இருந்த குருவி வருந்து_உறகதிர் அறுத்த மொட்டைத் தாளின் மீது இருந்த குருவி வருந்தும்படியாக,
பந்து ஆடு மகளிரின் படர்தரும்பந்தாடும் மகளிரைப் போன்று குதித்துக் குதித்துச் செல்லும்
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சேகுன்றுகளைச் சேர்ந்த நாட்டினனோடு சென்ற என் நெஞ்சம் –
# 296# 296
கொடிச்சி காக்கும் பெரும் குரல் ஏனல்குறிஞ்சிப் பெண் காக்கும் பெரிய கதிர்களைக் கொண்ட தினையை
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாடமலைகளில் வாழும் மயில் கவர்ந்துசெல்லும் நாட்டினனே!
நடுநாள் கங்குலும் வருதிநடுயாமத்தில் நள்ளிருளில் வருகின்றாய்,
கடு மா தாக்கின் அறியேன் யானேகொடிய விலங்குகள் தாக்கினால் என்ன நேருமோ? அறியேன் நான்.
  
# 297# 297
விரிந்த வேங்கை பெரும் சினை தோகைமலர்ந்த வேங்கை மரத்தின் பெரிய கிளையில் இருக்கும் ஆண்மயில்
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடபூ கொய்யும் மகளிரைப் போல் தோன்றும் நாட்டினனே!
பிரியினும் பிரிவது அன்றேநீ பிரிந்து சென்றாலும் அவளைவிட்டுப் பிரிவதில்லை,
நின்னொடு மேய மடந்தை நட்பேஉன்னோடு விரும்பிக்கொண்ட அந்த மடந்தையின் நட்பு.
# 298# 298
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும்மலர்ந்த வேங்கை மரத்தின் பெரிய கிளையில் இருக்கும் ஆண்மயில்
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சிபூ கொய்யும் மகளிரைப் போல் தோன்றும் நாட்டினனே!
தான் எம் அருளாள் ஆயினும்நீ பிரிந்து சென்றாலும் அவளைவிட்டுப் பிரிவதில்லை,
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமேஉன்னோடு விரும்பிக்கொண்ட அந்த மடந்தையின் நட்பு.
  
# 299# 299
குன்ற நாடன் குன்றத்து கவாஅன்குன்றுகளையுடைய நாட்டினனின் குன்றிலுள்ள மலையுச்சிச் சரிவில் உள்ள
பைம் சுனை பூத்த பகு வாய் குவளையும்புதிய நீரைக் கொண்ட சுனையில் பூத்த திறந்த வாயையுடைய குவளையும்,
அம் சில் ஓதி அசை நடை கொடிச்சிஅழகிய சிலவான கூந்தலையுடைய அசைகின்ற நடையையுடைய குறிஞ்சிப்பெண்ணின்
கண் போல் மலர்தலும் அரிது இவள்கண்ணைப் போல் மலர்வது அரியது, இவளின்
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதேமேனியைப் போன்ற சாயலைக் கொள்வது மயிலுக்கும் அரியது.
# 300# 300
கொடிச்சி கூந்தல் போல தோகைஇந்தக் குறிஞ்சிப் பெண்ணின் கூந்தலைப் போல, ஆண்மயில்
அம் சிறை விரிக்கும் பெரும் கல் வெற்பன்தன் அழகிய சிறகுகளை விரிக்கும் பெரிய பாறைகளைக் கொண்ட மலைநாட்டினன்
வந்தனன் எதிர்ந்தனர் கொடையேவந்தானாக, அவனுக்கு எதிர்கொண்டு சென்றனர் மகள்கொடைக்காக,
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே அழகிய இனிய பேச்சினை உடையவளே! பொலிவுற்று விளங்குக உன்னுடை பெண்மைச் சிறப்பு.
  

Related posts