ஐங்குறுநூறு 201-250

  
குறிஞ்சி      கபிலர்குறிஞ்சி      கபிலர்
  
# 21 அன்னாய் வாழி பத்து# 21 அன்னாய் வாழி பத்து
# 201# 201
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐஅன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என் தலைவன்
தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயினதானும் அணிந்துகொண்டான், எனக்கும் தழையுடை ஆயின;
பொன் வீ மணி அரும்பினவேபொன்னைப் போன்ற பூக்களையும், மணி போன்ற அரும்புகளையும் கொண்டன,
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வேஎன்ன மரமோ? அவர் வாழும் மலைச் சாரலான அவ்விடத்தில் உள்ளன.
# 202# 202
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர்அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள
பார்ப்பன குறு_மக போல தாமும்பார்ப்பனச் சிறுவர்களைப் போன்று, தாமும்
குடுமி தலைய மன்றகுடுமி பொருந்திய தலையினையுடையதாய் இருக்கின்றதே!
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவேநெடுமலை நாட்டவனான தலைவன் ஓட்டி வந்த குதிரை.
  
# 203# 203
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைஅன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் தோட்டத்திலுள்ள
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டுதேனைக் கலந்த பாலைக்காட்டிலும் இனிமையானது அவர் நாட்டிலுள்ள
உவலை கூவல் கீழஇலைதழைகள் கிடக்கும் கிணற்றின் அடியிலுள்ள
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரேவிலங்குகள் உண்டு எஞ்சிய கலங்கல் தண்ணீர்.
# 204# 204
அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்-கொல்அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! அது எப்படியோ?
வரை அர_மகளிரின் நிரையுடன் குழீஇமலையில் வாழும் தெய்வமகளிரைப் போலக் கூட்டமாகக் கூடிக்கொண்டு
பெயர்வு_உழி பெயர்வு_உழி தவிராது நோக்கிபோகுமிடமெல்லாம் தவறாமல் என்னைப் பார்த்து,
நல்லள் நல்லள் என்பநல்லவள், நல்லவள் என்று கூறுகிறார்கள்;
தீயேன் தில்ல மலை கிழவோர்க்கேதீயவளாயிருக்கின்றேனே அந்த மலைநாட்டிற்கு உரிமையுடையவனுக்கு.
  
# 205# 205
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழிஅன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என்னுடைய தோழி
நனி நாண் உடையள் நின்னும் அஞ்சும்மிகவும் நாணம் உடையவள், உனக்கும் அஞ்சுவாள்;
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்ஒலிக்கின்ற வெள்ளிய அருவிகளையுடைய உயர்ந்த மலை நாடனின்
மலர்ந்த மார்பின் பாயல்அகன்ற மார்பையே படுக்கையாகக் கொண்டு
துஞ்சிய வெய்யள் நோகோ யானேதூங்குவதில் நாட்டங்கொண்டுள்ளாள், வருந்துகிறேன் நான்.
# 206# 206
அன்னாய் வாழி வேண்டு அன்னை உவ காண்அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! இதோ பார்!
மாரி குன்றத்து காப்பாள் அன்னன்மாரிக் காலத்துக் குன்றினைக் காப்பவன் போன்றவனான,
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்மழைத் தூறலில் நனைந்த மாலை போன்ற ஒளிவிடும் வாளையும்,
பாசி சூழ்ந்த பெரும் கழல்பாசி சுற்றிலும் படிந்த பெரிய கழலினையும்,
தண் பனி வைகிய வரி கச்சினனேகுளிர்ந்த நீர் தங்கிய மடிப்புள்ள கச்சினையும் உடையவனான இவனை -.
  
# 207# 207
அன்னாய் வாழி வேண்டு அன்னை நன்றும்அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நன்றாக
உணங்கல-கொல்லோ நின் தினையே உவ காண்உலர்ந்துவிடவில்லையே உன் தினை! இதோ பார்!
நிணம் பொதி வழுக்கில் தோன்றும்நிணத்தைப் பொதிந்துவைத்து மூடியுள்ள மெல்லிய ஏடைப் போல் தெரிகிறது,
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றேமேகங்களை உச்சியில் கொண்டுள்ளன, அவரின் மணிபோன்ற நெடிய குன்று –
# 208# 208
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! கானவர்கள்
கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கைகிழங்கிற்காகத் தோண்டிய ஆழமான குழி நிறைய, வேங்கை மரத்தின்
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டுபொன்னிற மிக்க புதிய மலர்கள் பரவிக்கிடக்கும் அவருடைய நாட்டின்
மணி நிற மால் வரை மறை-தொறு இவள்நீலமணி போன்ற நிறமுள்ள பெரிய மலை, மாலையில் மறையும்போதெல்லாம் இவளின்
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியேசிறப்பித்துச் சொல்லக்கூடிய மலரைப் போன்ற நீண்ட கண்களில் நிரம்பின கண்ணீர்.
  
# 209# 209
அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்றுஅன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நீதான்
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்நான் அவரை மறக்கவேண்டும் என்று வேண்டினாய்; ஆனால்,
கொண்டல் அவரை பூவின் அன்னகீழ்க்காற்றால் மலர்கின்ற அவரையின் பூவைப் போன்ற
வெண் தலை மா மழை சூடிவெண்ணிறமான உச்சியைக் கொண்ட கரிய மேகங்களைச் சூடிக்கொண்டு
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றேஎன் கண்முன்னே காட்சியளிக்கும் இடைவிடாது, அவரின் நீலமணி போன்ற நெடிய குன்றம்.
# 210# 210
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைஅன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் பின் தோட்டத்திலுள்ள
புலவு சேர் துறுகல் ஏறி அவர் நாட்டுபுலால் நாற்றம் சேர்ந்துள்ள குத்துக்கல்லில் ஏறி, அவருடைய நாட்டின்
பூ கெழு குன்றம் நோக்கி நின்றுபூக்கள் பொருந்திய குன்றத்தை நோக்கி நின்று,
மணி புரை வயங்கு இழை நிலைபெறநீல மணிபோன்று ஒளிரும் அணிகலன்கள் அணிந்த இவள் நிலைபெற்றிருந்தால்,
தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயேதணிந்துபோவதற்கும் வழியுள்ளது, அவளைப் பீடித்த நோய் 
  
# 22 அன்னாய் பத்து# 22 அன்னாய் பத்து
# 211# 211
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்னநெய்யுடன் கலந்து பிசைந்த உழுந்தின் மாவைக் கம்பியாக நூற்றால் போன்ற
வயலை அம் சிலம்பின் தலையதுவயலைக் கொடிகள் விளங்கும் அழகிய மலைச் சாரலின் உச்சியில் உள்ள
செயலை அம் பகை தழை வாடும் அன்னாய்அசோகின் அழகிய நிறம் மாறுபட்ட தழையுடை வாடிப்போகிறது, அன்னையே!
# 212# 212
சாந்த மரத்த பூழில் எழு புகைசந்தனமரக் காட்டிலுள்ள அகில் கட்டைகளை எரிக்கும்போது எழுகின்ற புகை
கூட்டு விரை கமழும் நாடன்சந்தனமும், அகிலும் கலந்த மணம் கமழும் நாட்டைச் சேர்ந்தவனாகிய
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய்அறவாளனுக்கு ஏன் நாம் விலகிப்போகவேண்டும்? அன்னையே!
  
# 213# 213
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்தநறிய வடுக்களையுடைய மாமரத்திலிருந்து காம்பு அற்றுப்போய் உதிர்ந்த
ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர்பசுமையான குளிர்ந்த பெரிய வடுக்களைப் பாலைநிலத்துக் குறவர்கள்
உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல்மழையோடு விழும் ஆலங்கட்டியைப் பொறுக்குவது போல் சேர்த்து அள்ளும் மலைச்சாரலையுடைய,
மீமிசை நன் நாட்டவர் வரின்மிக உயர்ந்த நல்ல நாட்டவரான நம் காதலர் மணம் பேசி வந்தால்
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய்நான் உயிர்வாழ்தல் கூடும் அன்னையே!
# 214# 214
சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம்மலைச் சாரலிலுள்ள பலாவின் கொழுத்த கொத்தான நறும் பழம்
இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில்பெரிய மலையின் பிளவுகளில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததாக, மலையில்
பெரும் தேன் இறாஅல் சிதறும் நாடன்பெரிய தேன்கூடி சிதறிப்போகும் நாட்டினைச் சேர்ந்தவன்
பேர் அமர் மழை கண் கலிழ தன்பெரிய அமைதிநிறைந்த குளிர்ந்த கண்கள் கலங்க, தன்
சீர் உடை நன் நாட்டு செல்லும் அன்னாய்சிறப்புடைய நல்ல நாட்டுக்குச் செல்வான், அன்னையே!
  
# 215# 215
கட்டளை அன்ன மணி நிற தும்பிபொன்னுரைக்கும் கட்டளைக் கல் போன்ற வரிகளையுடைய நீல மணியின் நிறங்கொண்ட தும்பி
இட்டிய குயின்ற துறை வயின் செலீஇயர்ஒடுங்கியவாகக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள நீர்த்துறை வழியே சென்று,
தட்டை தண்ணுமை பின்னர் இயவர்தட்டையும் தண்ணுமையுமாகிய தோல் கருவிகளின் பின்னே இசைவாணர்கள்
தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும்இனிமையுடைய குழல் ஆம்பலைப் போல, இனிமையாக இசைக்கும்
புதல் மலர் மாலையும் பிரிவோர்புதர்களில் மலர்கள் மலர்கின்ற மாலைப் பொழுதிலும் பிரிந்து செல்பவர்
இதனினும் கொடிய செய்குவர் அன்னாய்இதைக் காட்டிலும் கொடியவற்றைச் செய்வார் அன்னையே!
# 216# 216
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றைகுறிய முன்னங்கால்களைக் கொண்ட பெரிய புலியின் வேட்டையாடுவதில் வல்ல ஆணானது,
நெடும் புதல் கானத்து மட பிடி ஈன்றநெடிய புதர்களைக் கொண்ட காட்டினில், இளமையான பெண்யானை ஈன்ற
நடுங்கு நடை குழவி கொளீஇய பலவின்நடுங்குகின்ற நடையைக் கொண்ட கன்றினைப் பிடிக்கும்பொருட்டு, பலாமரத்தின்
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்குபழங்கள் தொங்குகின்ற கொழுத்த நிழலில் ஒளிந்துநிற்கும் நாட்டினைச் சேர்ந்தவனுக்காகக்
கொய்திடு தளிரின் வாடி நின்கொய்யப்பட்ட தளிரைப் போல வாட்டமுற்று, உன்
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய்மேனி மாறுபட்டுப்போவது எதனாலோ? அன்னையே!
  
# 217# 217
பெரு வரை வேங்கை பொன் மருள் நறு வீபெரிய மலையிலுள்ள வேங்கை மரத்தின் பொன்னைப் போன்ற நறிய பூக்களை
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும்மானினத்தின் பெரிய சுற்றம் மேய்ந்து பசியாரும்
கானக நாடன் வரவும் இவள்கானத்தை உள்ளிட்ட நாட்டினைச் சேர்ந்தவன் வந்துவிட்ட பின்னரும், இவளின்
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய்மேனி பசந்துநிற்பது எதனாலோ? அன்னையே!
# 218# 218
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்நுண்ணிதான அழகினைப் பெற்ற புருவத்தையுடைய கண்ணும் துடிக்கும்;
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம்மயிர் ஒழுகும் முன்கையிலுள்ள வளைகளும் செறிவுற்றிருக்கும்;
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலிகளிற்றைக் கொல்வதில் தவறிவிட்ட சினம் மிகுந்து எழுந்துவரும் புலி
எழுதரு மழையின் குழுமும்எழுகின்ற மேகத்தைப் போல உரத்து முழங்கும்
பெரும் கல் நாடன் வரும்-கொல் அன்னாய்பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவன் வருவானோ? அன்னையே!
  
# 219# 219
கரும் கால் வேங்கை மா தகட்டு ஒள் வீகரிய அடிமரத்தையுடைய வேங்கை மரத்தின் பெரிய புறவிதழ்களையுடைய ஒளிரும் பூக்கள்
இரும் கல் வியல் அறை வரிப்ப தாஅம்பெரிய மலையின் அகன்ற பாறையில் கோலமிட்டதாய்ப் பரவிக்கிடக்கும்
நன் மலை நாடன் பிரிந்து எனநல்ல மலைநாட்டைச் சேர்ந்தவன் பிரிந்து சென்றான் என்றவுடன்
ஒண் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய்ஒளிவிடும் நெற்றி பச்ந்துபோவது எதற்காக? அன்னையே!
# 220# 220
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவிஅசைவாடும் மேகங்கள் பொழிந்த நீருள்ள அகன்ற இடத்தையுடைய அருவி
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன்அசையும் மூங்கில்கள் உள்ள மலைச் சரிவிடுக்கில் விழுகின்ற நாட்டைச் சேர்ந்தவனின்
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்புபெரிய மலை போன்ற மேன்மையும், வலிமையும் கொண்ட அகன்ற மார்பினைத்
முயங்காது கழிந்த நாள் இவள்தழுவாமல் கழிந்த நாளில், இவளின்
மயங்கு இதழ் மழை கண் கலிழும் அன்னாய்இணையொத்த மலரிதழ் போன்ற குளிர்ச்சியான கண்களில் கண்ணீர் வடியும் அன்னையே!
  
# 23 அம்ம வாழி பத்து# 23 அம்ம வாழி பத்து
# 221# 221
அம்ம வாழி தோழி காதலர்தோழியே கேள்! என் காதலர்
பாவை அன்ன என் ஆய் கவின் தொலையகொல்லிப்பாவை போன்ற என் சிறந்த அழகு கெட்டுப்போகவும்,
நன் மா மேனி பசப்பநல்ல மாநிற மேனியில் பசலை படரவும்,
செல்வல் என்ப தம் மலை கெழு நாடேபிரிந்து செல்வேன் என்கிறார் தம்முடைய மலைகள் பொருந்திய நாட்டுக்கு.
# 222# 222
அம்ம வாழி தோழி நம் ஊர்தோழியே கேள்! நம் ஊருக்கு
நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன்அடுத்தடுத்து வந்து நம்மோடு தங்கும் நறிய குளிர்ந்த மார்பினையுடையவன்
இன் இனி வாரா மாறு-கொல்இப்போதெல்லாம் வருவதில்லையாதலாலோ என்னவோ
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவேசிலவாய் ஒழுங்குபட்ட கூந்தலையுடைய என் நெற்றியில் பசலை பாய்ந்தது.
  
# 223# 223
அம்ம வாழி தோழி நம் மலைதோழியே கேள்! நம் மலையில்
வரை ஆம் இழிய கோடல் நீடஉச்சியிலிருந்து நீர் வழிந்துவர, செங்காந்தள் வளர்ந்து நிற்க,
காதலர் பிரிந்தோர் கையற நலியும்காதலரைப் பிரிந்தவர்கள் செயலற்று வாடிவருந்தும்
தண் பனி வடந்தை அச்சிரம்குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தையும்
முந்து வந்தனர் நம் காதலோரேமுந்திக்கொண்டு வந்துவிட்டார் நம் காதலர்.
# 224# 224
அம்ம வாழி தோழி நம் மலைதோழியே கேள்! நம்மூர் மலையான
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில்நீல மணியின் நிறம் கொண்ட பெரிய மலைக்குப் பக்கத்து மலையில் உள்ள
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்தெளிந்த நீரை உடைய அருவியில் நம்மோடு நீராடுதல்
எளிய-மன்னால் அவர்க்கு இனிஎளிதாக இருந்தது அவருக்கு, இனியே
அரிய ஆகுதல் மருண்டனென் யானேஅதுவும் அரிதாகுப்போகும் என்று மனம்தடுமாறுகிறேன் நான்.
  
# 225# 225
அம்ம வாழி தோழி பைம் சுனைதோழியே கேள்! புதிய நீர்கொண்ட சுனையில் உள்ள
பாசடை நிவந்த பனி மலர் குவளைபச்சையான் இலைகளுக்கூடே உயர்ந்து நிற்கும் குளிர்ந்த மலராகிய குவளையின்
உள்ளகம் கமழும் கூந்தல் மெல் இயல்உள்ளிடத்தின் மணம் கமழும் கூந்தலைக்கொண்ட மென்மையான இயல்பினையுடையவளின்
ஏர் திகழ் ஒண்_நுதல் பசத்தல்அழகு திகழும் ஒளிவிடும் நெற்றி பசந்துபோதலை
ஓரார்-கொல் நம் காதலோரேநினைத்துப்பார்க்கமாட்டாரோ நம் காதலர்.
# 226# 226
அம்ம வாழி தோழி நம் மலைதோழியே கேள்! நம் மலையிலுள்ள
நறும் தண் சிலம்பின் நாறு குலை காந்தள்நறுமணமும், குளிர்ச்சியும் உள்ள மலைச் சரிவில் பூத்த மணமுள்ள பூங்கொத்துக்களைக் கொண்ட காந்தள் மலரில்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி நின்தேனை உண்ணும் வண்டைப் போல, பிரிந்து சென்று, வற்றிப்போய், உன்
வன்பு உடை விறல் கவின் கொண்டவலிமையுடைய, பிறர் அழகை வெற்றிகொள்ளும் அழகினைக் கவர்ந்து கொண்ட
அன்பு இலாளன் வந்தனன் இனியேஅன்பில்லாதவன் வந்திருக்கிறான் இப்போது.
  
# 227# 227
அம்ம வாழி தோழி நாளும்தோழியே கேள்! ஒவ்வொரு நாளும்
நன் நுதல் பசப்பவும் நறும் தோள் நெகிழவும்உன் நல்ல நெற்றி பசந்துபோகவும், நறிய தோள்கள் மெலிவடையவும்,
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறிபொறுக்கமாட்டேன் நான் என்று நாம் ஏற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு,
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீநம்மை பிரிந்து வாழ்ந்தவர் அவர் உறுதியாக – நீ
விட்டனையோ அவர் உற்ற சூளேதள்ளிவிட்டாயோ அவர் கூறிய பொய்யான சூளுரைகளை.
# 228# 228
அம்ம வாழி தோழி நம் ஊர்தோழியே கேள்! நம் ஊரின்
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்நிரலாக விளங்கும் அருவிகளையுடைய நெடிய மலைநாட்டுக்குரியவன்
இரந்து குறை உறாஅன் பெயரின்உன்னைப் பெண்வேண்டி வந்து அது கிடைக்கப்பெறாமல் திரும்பிச் சென்றால்
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையேஎன்ன ஆகுமோ நம் இனிய உயிரின் நிலை?
  
# 229# 229
அம்ம வாழி தோழி நாம் அழதோழியே கேள்! நாம் அழும்படியாகப்
பல் நாள் பிரிந்த அறன் இலாளன்பல நாள் நம்மைப் பிரிந்திருந்த அந்த அறங்கெட்டவன்
வந்தனனோ மற்று இரவில்வந்திருக்கிறான் பார், இரவில் –
பொன் போல் விறல் கவின் கொள்ளும் நின் நுதலேபொன்னைப் போன்ற வெற்றிசிறந்த அழகைக் கொண்டிருக்கிறது உன் நெற்றி.
# 230# 230
அம்ம வாழி தோழி நம்மொடுதோழியே கேள்! நம்மோடு
சிறுதினை காவலன் ஆகி பெரிது நின்சிறுதினைக்குக் காவற்காரன் ஆகி, மிகவும் உன்
மென் தோள் நெகிழவும் திரு நுதல் பசப்பவும்மென்மையான தோள்கள் மெலிவடையவும், அழகிய நெற்றி பசந்துபோகவும்
பொன் போல் விறல் கவின் தொலைத்தபொன்னைப் போன்ற வெற்றிசிறந்த உன் அழகைக் காணாமற்போக்கிய
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனேகுன்றினையுடைய நாடனுக்கே உன்னைக் கொடுப்பர், நல்மணம் முடித்து.
  
# 24 தெய்யோ பத்து# 24 தெய்யோ பத்து
# 231# 231
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்பஎப்படி உன்னால்முடிகிறத? உயர்ந்த மலைகளுக்குரியவனே!
இரும் பல் கூந்தல் திருந்து இழை அரிவைகரிய, பலவான கூந்தலும், திருத்தமான அணிகலன்களும் உடைய இந்தப் பெண்
திதலை மாமை தேயதன் அழகுத்தேமல் படர்ந்த மாநிற மேனிய மெலிந்துவாடவும்,
பசலை பாய பிரிவு தெய்யோபசலை பாயவும் இவளைப் பிரிந்துசெல்வதற்கு – 
# 232# 232
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்கமலரும் நிலையிலுள்ள பூக்கள் நிறைந்த கூந்தலையுடையவளின் தகுதிவாய்ந்த அழகு குன்றிப்போக
ஏதிலாளனை நீ பிரிந்ததற்கேஅன்னியன் போன்ற நீ பிரிந்து சென்றதற்காக,
அழல் அவிர் மணி பூண் நனையநெருப்பைப் போல் ஒளிரும் செம்மணி பதித்த மார்புப் பூண் நனையுமாறு
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோநீரை உகுத்தனை நிறுத்தாமல், என் கண்கள்.
  
# 233# 233
வருவை அல்லை வாடை நனி கொடிதேவிரைந்து மீண்டும் வருகின்றாயும் இல்லை; வாடையும் மிகக் கொடிதாக இருக்கிறது.
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றிஅரிய மலையின் பக்கங்களில் அழகுபெற்ற மணிகளைத் தேய்த்து இழுத்துக்கொண்டுபோய்
ஒல்லென இழிதரும் அருவி நின்ஒல்லென்ற ஓசையுடன் கீழிறங்கும் அருவியையுடைய உனது
கல் உடை நாட்டு செல்லல் தெய்யோபாறைகளையுடைய மலைநாட்டுக்குச் செல்லவேண்டாம் –
# 234# 234
மின் அவிர் வயங்கு இழை ஞெகிழ சாஅய்மின்னலைப் போல் பளிச்சிட்டு ஒளிரும் அணிகலன்கள் நெகிழ்வடையுமாறு மெலிந்து
நன் நுதல் பசத்தல் ஆவது துன்னிநல்ல நெற்றி பசந்துபோவது (எதனால்?), மிகவும் நெருக்கமாகக்
கனவில் காணும் இவளேகனவில் காணும் இவள்
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோநனவில் காணப்பெறாள், உனது மார்பினை – (அதனால்)
  
# 235# 235
கையற வீழ்ந்த மை இல் வானமொடுசெயலற்றுப்போக மழை பெய்த பின்னர் மேகங்கள் முற்றிலும் இல்லாமற்போகும் வானத்தைப் போல
அரிது காதலர் பொழுதே அதனால்அரிதானது காதலரோடு சேர்ந்திருக்கும் நேரமும் – அதனால்
தெரி இழை தெளிர்ப்ப முயங்கிஆய்ந்தெடுத்த அணிகலன்கள் குலுங்க அவரைத் தழுவிக்கொண்டு
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோபிரியமாட்டேன் என்று சொல்வோமோ? அல்லது கூடப்புறப்படுவோமோ?
# 236# 236
அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்றுஎம் அன்னையும் அறிந்துவிட்டாள்; ஊரெல்லாம் பேச்சாகிவிட்டது;
நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும்நல்ல மனையில் இருக்கும் நெடிய இல்லத்தில் தனிமைத்துயரத்தை நுகர ஏதுவாகிற்று
இன்னா வாடையும் மலையும்கொடிய வாடைக்காற்றும் வருத்துகின்றது.
நும் ஊர் செல்கம் எழுகமோ தெய்யோஉமது ஊருக்குச் செல்வோம், புறப்படுங்கள்!
  
# 237# 237
காமம் கடவ உள்ளம் இனைப்பநான் உன்மீது கொண்ட காதல் தூண்டிவிட, உள்ளமோ மிகவும் வருந்த,
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின்நான் வந்து உம்மைக் காண்பதற்குச் சரியான நேரம் வந்தால்,
ஓங்கி தோன்றும் உயர் வரைக்குஓங்கி மேலெழுந்து தோன்றும் உயரமான மலைக்கு
யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோஎந்தப்பக்கமாய் இருக்கிறது உனது ஊர்?
# 238# 238
வார் கோட்டு வய தகர் வாராது மாறினும்நீண்ட கொம்பினையுடைய வலிமையான ஆட்டுக்கிடா தன்னிடம் வராமல் மனம் மாறியிருந்தாலும்
குரு மயிர் புருவை நசையின் அல்கும்நல்ல நிறமுள்ள மயிரையுடைய பெண் ஆடானது ஆசையுடன் எதிர்பார்த்துத் தங்கியிருக்கும்
மாஅல் அருவி தண் பெரும் சிலம்பபெரிய அருவிகளைக் கொண்ட குளிர்ந்த பெரிய மலைச் சரிவைச் சேர்ந்தவனே!
நீ இவண் வரூஉம்_காலைநீ இங்கு வரும்போதுதான்
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோதானும் சேர்ந்து வரும் இவளின் பெண்மை நலன்.
  
# 239# 239
சுரும்பு உண களித்த புகர் முக வேழம்வண்டுகள் உண்ணுமாறு மதநீர் பெருகிய புள்ளிகளையுடைய முகத்தைக் கொண்ட யானை,
இரும் பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின்கரிய சொரசொரப்பான குத்துக்கல்லைத் தன் பெண்யானை என்று தழுவிக்கொள்ளும் உன்
குன்று கெழு நன் நாட்டு சென்ற பின்றைகுன்றுகள் பொருந்திய நல்ல நாட்டுக்குச் சென்ற பின்னால்
நேர் இறை பணை தோள் ஞெகிழஅழகாக இறங்குகின்ற பருத்த தோள்கள் மெலிவடையும்படி
வாராய் ஆயின் வாழேம் தெய்யோநீ வாராமற் போனால் நான் வாழமாட்டேன்.
# 240# 240
அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோநான் ஒன்றும் அறியாதவள் இல்லை, அறிந்திருக்கிறேன்!
பொறி வரி சிறைய வண்டு_இனம் மொய்ப்பபுள்ளிகளும் கோடுகளும் கொண்ட சிறகுகளையுடைய வண்டினம் மொய்க்கும்படியாகச்
சாந்தம் நாறும் நறியோள்சந்தனம் மணக்கும் இனிய வாசனையுடையவளின்
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோகூந்தலின் மணம் மணக்கும் உன் மார்பினை –
  
# 25 வெறிப்பத்து# 25 வெறிப்பத்து
# 241# 241
நம் உறு துயரம் நோக்கி அன்னைநாம் படும் பாட்டைப் பார்த்து, அன்னை
வேலன் தந்தாள் ஆயின் அ வேலன்வெறியாடும் வேலனை அழைத்து வந்தால், அந்த வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மைநறுமணம் கமழும் நாட்டினையுடைவனோடு நாம் கொண்டுள்ள நட்பை
அறியுமோ தில்ல செறி எயிற்றோயேஅறிந்து சொல்வானோ? செறிவான பற்களைக் கொண்டவளே!
# 242# 242
அறியாமையின் வெறி என மயங்கிஅறியாமையினால், தீயசக்தி தாக்கியதாகத் தவறாக எண்ணி
அன்னையும் அரும் துயர் உழந்தனள் அதனால்அன்னையும் நீக்குதற்கரிய துயரத்தில் ஆழ்ந்தாள்; அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ்இனியும் அவள் அறியாதபடி இதை விட்டுவிடுதல் கொடியது; வரிசையான இதழ்களைக் கொண்ட
ஆய் மலர் உண்கண் பசப்பஅழகிய மலர் போன்ற மையுண்ட கண்கள் பசந்துபோகுமாறு
சேய் மலை நாடன் செய்த நோயேதொலைவிலுள்ள மலைநாட்டினன் செய்த இந்த நோயை –
  
# 243# 243
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணிமிளகுக் கொடிகள் வளர்ந்திருக்கும் மலைச் சரிவிலிருக்கும் கடவுளைத் தொழுது
அறியா வேலன் வெறி என கூறும்உண்மையை அறியாத வேலன் இதனைத் தீயசக்தியின் தாக்கம் என்று கூறுவான்;
அது மனம் கொள்குவை அனை இவள்அதனையே உண்மையென்று உன் மனத்தில் கொள்கிறாய் அன்னையே! இவளின்
புது மலர் மழை கண் புலம்பிய நோய்க்கேபுத்தம் புதிய மலர் போன்ற குளிர்ந்த கண்கள் தனிமைத் துயரால் கொண்ட நோயினைப் பார்த்து –
# 244# 244
அம்ம வாழி தோழி பன் மலர்தோழியே கேள்! பலவான மலர்கள் உள்ள
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகைநறிய குளிர்ந்த சோலைகள் உள்ள நாட்டினைச் சேர்ந்த தலைவனின்
குன்றம் பாடான் ஆயின்குன்றத்தை வாழ்த்திப் பாடவில்லை என்றால்
என் பயம் செய்யுமோ வேலற்கு அ வெறியேஎன்ன பயனைச் செய்யுமோ, வேலனுக்கு அந்த வெறியாட்டு?
  
# 245# 245
பொய்யா மரபின் ஊர் முது வேலன்பொய் உரைக்காத மரபினையுடைய நம் ஊரின் வயதான வேலன்
கழங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கிகழங்கினைப் போட்டுப்பார்த்து, நோய்தணிவதற்காக நேர்ந்த பொருளைப் படைத்து,
முருகு என மொழியும் ஆயின்நோய்க்குக் காரணம் முருகனே என்று சொல்வானானால்,
கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கேஉரித்தாகுமோ அது இவளுக்கு இந்நோய் வருவதற்குக் காரணமானவனுக்கும் –
# 246# 246
வெறி செறித்தனனே வேலன் கறியவெறியாட்டத்துக்கு ஆயத்தமானான் வேலன், மிளகுக் கொடி படர்ந்த
கல் முகை வய புலி கழங்கு மெய்ப்படூஉமலையின் குகையில் வசிக்கும் வலிமிகுந்த புலி, கழங்குகளைக் கண்ணாகக் கொண்டு,
புன் புலம் வித்திய புனவர் புணர்த்தபுன்செய் நிலமாகிய கொல்லையில் தினையை விதைத்த குறவர் செய்த
மெய்ம்மை அன்ன பெண்_பால் புணர்ந்துஉண்மையானதுபோல் தோன்றிய பெண்புலிப் பொம்மையைப் புணர்ந்து
மன்றில் பையுள் தீரும்அக் கொல்லையின் நடுவில் தன் காமப்பிணி தீரப் படுத்திருக்கும்
குன்ற நாடன் உறீஇய நோயேமலைநாட்டையுடைய தலைவன் நமக்குச் செய்த நோயின் காரணமாக –
  
# 247# 247
அன்னை தந்தது ஆகுவது அறிவென்அன்னையானவள் வெறியாடும் வேலனை அழைத்து வந்ததுதான் இங்கு நிகழ்கிறது என்பதனை அறிவேன்,
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கிஅழகிய நம் வீட்டின் எல்லையில், நோய்தணிவதற்காக நேர்ந்த பொருளைப் படைத்து,
முருகு என மொழியும் ஆயின்வேலன் முருகனால் இது நிகழ்ந்தது என்று கூறுவானாயின்,
அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவேஅரிய மலைக்குரிய நாட்டினனின் பெயரும் அதுவோ?
# 248# 248
பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றிபுதுமணல் பரப்பிய முற்றத்தில் வெறியாட்டுக்களத்தை அழகு பெற நிறுவி,
மலை வான் கொண்ட சினைஇய வேலன்மலையையும் வானத்தையும் வெற்றிகொண்ட சினமிகுந்த முருகனின் வேலைக் கையில் கொண்டவன்
கழங்கினான் அறிகுவது என்றால்கழங்குகளைப் போட்டுப் பார்த்து தெரிந்துகொள்வது என்றால்,
நன்றால் அம்ம நின்ற இவள் நலனேநன்றாயிருக்கிறது இவளிடம் நிலைபெற்ற கற்பு.
  
# 249# 249
பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்குபுதிதாய் மணல் பரப்பிய வீட்டோரத்தில், கழங்குகளைப் போட்டுப்பார்த்து, அன்னையிடம்
முருகு என மொழியும் வேலன் மற்று அவன்இது முருகனால் உண்டானது என்று சொல்கிறான் வேலன், அவன்
வாழிய இலங்கும் அருவிவாழ்க! ஒளிருகின்ற அருவியையுடைய
சூர் மலை நாடனை அறியாதோனேஅச்சமிகுந்த மலை நாட்டினனை அவன் அறியமாட்டான்.
# 250# 250
பொய் படுபு அறியா கழங்கே மெய்யேபொய்கூறுதலை அறியாத கழங்குகளே! உண்மையே!
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம்நீலமணி போன்ற மலையைப் புகலிடமாகக் கொண்ட இள மயில்கள் ஆடிக்கொண்டிருக்கும் நம்
மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன்விரிந்த வள்ளிக்கிழங்குகள் உள்ள அழகிய கானத்திற்கு உரியவன்,
ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள்ஆண்தகைமை உள்ள வெற்றி சிறக்கும் முருகவேள் அல்லன் – இவளின்
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே      பூண் விளங்கும் இளமையான முலைகளை நோயுறச் செய்தவன்.
  

Related posts