பாடல் 10. நெய்தல் திணை பாடியவர் – அம்மூவனார்

துறை – இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது மரபு மூலம் – உரிதினின் பெயர்தல் வேண்டும் வான்கடற் பரப்பிற் றூவற் கெதிரிய மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப் புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப 5 நெய்த லுண்கண் பைதல கலுழப் பிரித லெண்ணினை யாயி னன்று மரிதுதுற் றனையாற் பெரும வுரிதினின் கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடு குரூஉத்திரைப் புணரி யடைதரு மெக்கர்ப் 10 பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் மோட்டுமண லடைகரைக் கோட்டுமீன் கொண்டி, மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளங்கெழு தொண்டி யன்னவிவள் நலனே சொற்பிரிப்பு மூலம் வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய, மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த, முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச்…

Read More

பாடல் 9. பாலைத் திணை பாடியவர் – கல்லாடனார்

துறை – வினை முற்றி மீண்ட, தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது மரபு மூலம் – துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவு கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த வப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ 5 றிழுதி னன்ன தீம்புழற் றுய்வா யுழுதுகாண் டுளைய வாகி யார்கழலற் பாலி வானிற் காலொடு பாறித் துப்பி னன்ன செங்கோட் டியவி னெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கு 10 மத்த நண்ணிய வங்குடிச் சீறூர்க் கொடுநுண் ணோதி மகளி ரோக்கிய தொடிமா ணுலக்கைத் தூண்டுரற் பாணி நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங் குன்றுபின் னொழியப் போகி யுரந்துரந்து 15 ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவி னெம்மினும் விரைந்துவல் லெய்திப் பண்மா ணோங்கிய நல்லி…

Read More

பாடல் 8. குறிஞ்சித் திணை பாடியவர் – பெருங்குன்றூர்க் கிழார்

துறை – தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. மரபு மூலம் – பானாள் கங்குலும் அரிய அல்ல ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த குறும்பி வல்சிப் பெருங்கை யேற்றை தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின் பாம்புமதன் அழியும் பானாட் கங்குலும் 5 அரிய அல்லமன் இகுளை பெரிய கேழல் அட்ட பேழ்வா யேற்றை பலாவமல் அடுக்கம் புலவ ஈர்க்கும் கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு வாழை யோங்கிய தாழ்கண் அசும்பில் 10 படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலிய பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் விண்டோய் விடரகத் தியம்பும் அவர்நாட் டெண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது மின்னுவிடச் சிறிய ஒதுங்கிய மென்மெலத் 15 துளிதலைத் தலைஇய 1மணியே ரைம்பால் சிறுபுறம் புதைய வாாக் குரல்பிழியூஉ நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம் அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே…

Read More

பாடல் 7. பாலைத் திணை பாடியவர் – கயமனார்

துறை – மகட் போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று நவ்விப் பிணாக் கண்டு சொல்லியது. மரபு மூலம் முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின தலைமுடி சான்ற தண்தழை யுடையை அலமரல் ஆயமொ டியாங்கணும் படாஅல் மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய 5. காப்பும் பூண்டிசின் கடையும் போகலை பேதை அல்லை மேதையங் குறுமகள் பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவித் தன்சிதை வறிதல் அஞ்சி இன்சிலை 10. ஏறுடை இனத்த நாறுயிர் நவ்வி வலைகாண் பிணையிற் போகி ஈங்கோர் தொலைவில் வெள்வேல் விடலையொ டென்மகள் இச்சுரம் படர்தந் தோளே ஆயிடை அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப் 15. பிற்படு பூசலின் வழிவழி யோடி மெய்த்தலைப் படுதல் செல்லேன் இத்தலை நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி ஒலிக்குழைச் செயலை…

Read More

பாடல் 6. மருதத் திணை பாடியவர் – பரணர்

துறை – பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. மரபு மூலம் : “வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்” அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை யரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை யிழையணி பணைத்தோ ளையை தந்தை மழைவளந் தரூஉ மாவண் டித்தற் 5 பிண்ட நெல்லி னுறந்தை யாங்கட் கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங் குழைமா ணெள்ளிழை நீவெய் யோளொடு வேழ வெண்புணை தழீஇப் பூழியர் கயநாடு யானையின் முகனமர்ந் தாஅங் 10 கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய நெருந லாடினை புனலே யின்றுவந் தாக வனமுலை யரும்பிய சுணங்கின் மாசிற் கற்பிற் புதல்வன் றாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் 15 முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத் தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி வாளை மேய்ந்த வள்ளெயிற்று…

Read More

பாடல் 5. பாலைத் திணை பாடியவர் – பாலை பாடிய பெருங்கடுங்கோ

துறை – பொருள்வயின் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. மரபு மூலம் : பாவை மாய்த்த பனி நீர் நோக்கம் அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள் விளிநிலை கொள்ளா டமியண் மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதற் கூரெயிறு தோன்ற 5 வறிதகத் தெழுந்த வாயன் முறுவலட் கண்ணிய துணரா வளவை யொண்ணுதல் வினைதலைப் படுதற் செல்லா நினைவுடன் முளிந்த வோமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி 10 மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப வுதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப் பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கு நிறைநிலை யதர 15 பரன்முரம் பாகிய பயமிற் கான மிறப்ப வெண்ணுதி ராயி னறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி யன்ன…

Read More

அகநானூறு-4

பாடல் 4. முல்லைத் திணை பாடியவர் – குறுங்குடி மருதனார் துறை – தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. மரபு மூலம் – கவின் பெறு கானம் முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ விரும்புதிரித் தன்ன மாவிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப 5 மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானங் குறங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப் 10 பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேர னுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடற் கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது 15 நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவி ழலரி னாறு மாய்தொடி யரிவைநின் மாணலம்…

Read More

அகநானூறு-3

பாடல் 3. பாலைத் திணை பாடியவர் – எயினந்தை மகனார் இளங்கீரனார் துறை – தலைவன் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. {முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப் போய்ப், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.} மரபு மூலம்- “வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா” இருங்கழி முதலை மேஎந்தோ லன்ன கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினைக் கடியுடை நனந்தலை யீன்றிளைப் பட்ட கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇய 5 மான்றுவேட் டெழுந்த செஞ்செவி யெருவை வான்றோய் சிமைய விறல்வரைக் கவாஅன் றுளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி யொண்செங் குருதி யுவறியுண் டருந்துபு புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை…

Read More

அகநானூறு-2

பாடல் 2. குறிஞ்சித் திணை பாடியவர் – கபிலர் துறை – பகல்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாவியது மரபு மூலம்- “குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய ” கோழிலை வாழைக் கோண்முதிர் பெருங்குலை யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையொ டூழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேற 5 லறியா துண்ட கடுவ னயலது கறிவளர் சாந்த மேறல் செல்லாது நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங் குறியா வின்ப மெளிதி னின்மலைப் பல்வேறு விலங்கு மெய்து நாட 10 குறித்த வின்ப நினக்கெவ னரிய வெறுத்த வேஎர் வேய்புரை பணைத்தோ ணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட் டிவளு மினைய ளாயின் றந்தை யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக் 15 கங்குல் வருதலு முரியை பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் விரிந்தன நெடுவெண்…

Read More

அகநானூறு – 1

1. பாலைத் திணை பாடியவர் – மாமூலனார் துறை – பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது #0 மரபு மூலம்- “ ‘பிரியலம்’ என்ற சொல் தாம் மறந்தனர்கொல்லோ” வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழ லுருவக் குதிரை மழவ ரோட்டிய முருக னற்போர் நெடுவே ளாவி யறுகோட்டி யானைப் பொதினி யாங்கட் 5 சிறுகா ரோடற் பயினொடு சேர்த்திய கற்போற் பிரியல மென்ற சொல்தா மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த வேய்மருட் பணைத்தோ ணெகிழச் சேய்நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக 10 வழற்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலி னிழற்றேய்ந் துலறிய மரத்த வறைகாய் பறுநீர்ப் பைஞ்சுனை யாமறப் புலர்தலி னுகுநெற் பொரியும் வெம்மைய யாவரும் வழங்குந ரின்மையின் வௌவுநர் மடியச் 15 சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை நாரின் முருங்கை நவிரல் வான்பூச் சூரலங்…

Read More