அகநானூறு-கடவுள் வாழ்த்து

0. கடவுள் வாழ்த்து பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார். #0 மரபு மூலம் கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பி னஃதே மையில் நுண்ஞாண் நுதல திமையா நாட்டம் இகலட்டுக் 5 கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே வூர்ந்த தேறே சேர்ந்தோ ளுமையே செவ்வா னன்ன மேனி யவ்வா னிலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற் 10 றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய 15 யாழ்கெழு மணிமிடற் றந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே. #0 சொற்பிரிப்பு மூலம் கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர் தாரன் மாலையன் மலைந்த…

Read More