கட்டுரை ஆசிரியர்: முனைவர்.ப.பாண்டியராஜா இத்தலைப்பின் கீழ் ஏழு கட்டுரைகள் உள்ளன: 1. அசைவுகள் 2. நகர்வுகள் 3. குறைத்தல்கள் 4. அஞ்சுதல் 5. உண்ணுதல் 6. உண்ணும் விதங்கள் 7. உணவு வகைகள்
Read MoreCategory: கட்டுரைகள்
பாடல் 3. பாலைத் திணை பாடியவர் – எயினந்தை மகனார் இளங்கீரனார்
துறை – தலைவன் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. {முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப் போய்ப், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.} மரபு மூலம்- “வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா” இருங்கழி முதலை மேஎந்தோ லன்ன கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினைக் கடியுடை நனந்தலை யீன்றிளைப் பட்ட கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇய 5 மான்றுவேட் டெழுந்த செஞ்செவி யெருவை வான்றோய் சிமைய விறல்வரைக் கவாஅன் றுளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி யொண்செங் குருதி யுவறியுண் டருந்துபு புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை 10 கொள்ளை மாந்தரி னானாது கவரும் புல்லிலை மராஅத்த வகன்சே ணத்தங்…
Read More1. அசைவுகள்
சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. (எ.டு) நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83 நீண்ட தாளினையுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த … சிறு குழை துயல்வரும் காதின் ———– – பெரும் 161 தாளுருவி அசையும் காதினையும் — இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330 நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய (திமில்) இடபமும், இந்த மூன்று இடங்களிலும் மூன்றுவிதமான அசைவுகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிற்கு வெவ்வேறு சொற்களும் கையாளப்பட்டுள்ளன. எனினும், அவை மூன்றனுக்கும் உரைகளில் ஒரே பொருள்தான் கொடுக்கப்படுகிறது. சங்க காலத்தில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்பட்ட…
Read More2. நகர்வுகள்
உயிர்கள் அல்லது பொருள்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு இடம்பெயர்வதையே நகர்வு (movement) என்கிறோம். இங்கு இவர்தல், இரிதல், ஊர்தல், இயலுதல் என்ற நான்குவிதமான நகர்வுகளைப் பற்றிக் காண்போம். 1. இவர்தல் இவர்தல் என்பதற்குப் பலவிதமான விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. To rise on high, ascend; உயர்தல். விசும்பிவர்ந் தமரன் சென்றான் (சீவக. 959). To go, proceed; செல்லுதல். இருவிசும் பிவர்தலுற்று (சீவக. 959). To move about, pass to and fro; உலாவுதல். இரைதேர்ந்திவருங் கொடுந்தாண் முதலையொடு (மலைபடு. 90). To spread, as a creeper; பரத்தல். தூவற்கலித்த விவர்நனை வளர்கொடி (மலைபடு. 514.) To spring, leap, rush out; பாய்தல். குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்கு (கலித். 86, 32). எனவே, ‘இவர்’ என்பதற்கு, மேலே…
Read More3. குறைத்தல்கள்
ஒரு வெள்ளரிக்காயை நன்றாகக் கழுவி ஒரு பலகையில் நீளவாக்கில் வைத்து ஓர் ஓரத்திலிருந்து கத்தியால் வெட்டிக்கொண்டே வருகிறீர்கள். இப்பொழுது காயின் நீளம் குறைந்துகொண்டே வரும் இல்லையா? இது ஒருவகைக் குறைத்தல் அல்லது குறைதல். ஓர் ஊரில் ஒரு குறிப்பிட்ட இனத்தார் நிறையப்பேர் இருக்கிறார்கள். நாளாக ஆக அவர்களுக்கு வருமானம் இல்லை. ஒவ்வொரு குடும்பமாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். ஊரில் அவர்களின் தொகை குறைந்துகொண்டே வரும் இல்லையா? இது இன்னொரு வகைக் குறைதல். ஓர் அருவி பெரும் வெள்ளப்பெருக்குடன் ஆர்ப்பரித்து விழுகிறது. நீர்வரத்து குறையக் குறைய அருவிநீரின் அளவும் குறைந்துகொண்டே வரும் இல்லையா? இதுவும் வேறோர் வகைக் குறைதல். இவை மூன்றுமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைதல்கள்தான். ஆனால் இலக்கியங்கள் இவற்றை வேறுபடுத்திக்காட்டுகின்றன. முதலாவது அகைதல், அடுத்தது அருகுதல். கடைசியானது நிழத்துதல். சங்க இலக்கியவழி இவற்றை ஆய்வோம். 1. அகைதல் /…
Read More4. அஞ்சுதல்
அச்சம் அல்லது அஞ்சுதல் என்பதற்கு உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம். 4.1 அச்சம் நீதிமன்றத்தில் உங்கள் சார்பாக ஒரு வழக்கு நடக்கிறது. அன்றைக்குத் தீர்ப்பு நாள். தீர்ப்பு எவ்வாறு இருக்குமோ, நடுவுநிலையான தீர்ப்பாக இல்லாமற்போய்விடுமோ என்ற உணர்வு உங்களுக்குள் தோன்றுமல்லவா! அதுதான் அச்சம். பாண்டியன் நெடுஞ்செழியனின் அவைக்கு இவ்வாறு வருவோரின் இத்தகைய உணர்வுகளை நீக்கி, தராசு முள்ளைப் போன்ற நடுவுநிலையுடன் பாண்டியனின் அறங்கூறவையம் இருக்கிறது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் கூறுகிறார்:- அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி செற்றமும் உவகையும் செய்யாது காத்து ஞெமன்கோல் அன்ன செம்மைத்தாகி சிறந்த கொள்கை அறங்கூறவையமும் – மதுரைக்காஞ்சி 489-492 தலைவி ஒருத்தி காதல்கொள்கிறாள். இது தோழிக்கும் தெரியும். காதல் ஏக்கத்தால் தலைவி நோய்வாய்ப்படுகிறாள். இதைக் கண்ட செவிலி…
Read More5. உண்ணுதல் அல்லது உட்கொள்ளுதல்
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சாப்பிடு, சாப்பாடு போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. ஆனால் அவற்றில் ஏதேனும் ஒரு திட அல்லது திரவப் பொருளை உட்கொள்ளுதலுக்குப் பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1. உண்ணுதலும் தின்னுதலும் ( உண் versus தின் ) முதலில் தின் என்ற சொல்லைப் பார்ப்போம். மனிதர் அல்லாத வேறு உயிருள்ள உயிரற்ற பொருள்களும் தின்பதாகப் பாடல்கள் கூறுகின்றன. எனவே அவற்றில்தான் இதன் உண்மைப் பொருள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 1.அ. உயிரற்ற பொருள்கள் தின்னல் ஒரு சன்னமான இரும்புக் கம்பியை எடுத்து அதன் ஒரு முனையை அரத்தால் சுற்றிச் சுற்றித் தேய்த்து ஊசியை உருவாக்குகிறார்கள். இதனை அரம் தின் ஊசி என்கிறது ஒரு அகநானூற்றுப் பாடல். அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன – அகம் 199/8 பெரிய அளவில் தயிர்…
Read More6. உண்ணும் விதங்கள்
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சாப்பிடு, சாப்பாடு போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. ஆனால் அவற்றில் ஏதேனும் ஒரு திட அல்லது திரவப் பொருளை உட்கொள்ளுதலுக்குப் பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை இலக்கிய எடுத்துக்காட்டுகளுடன் இங்கு ஆய்வோம். 1. அருந்து இன்றைக்கு அருந்து, குடி, பருகு, மண்டு, மாந்து என்ற இந்த ஐந்து சொற்களுமே நீர்மப் (திரவப்) பொருளை உட்கொள்ளுதலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் அருந்து என்பது சில நேரங்களில் திடப்பொருளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கும் எழுத்து நடையில் ‘உணவருந்திச் செல்லுங்கள்’ என்று எழுதப்படுவதைக் காண்கிறோம். நாம் ஒரு பொருளை உண்கிறோம். சிறிது நேரங்கழித்து முடித்துக்கொள்கிறோம். அதற்குக் கீழ்க்கண்டவற்றுள் எதாவது ஒரு காரணம் இருக்கக்கூடும். 1. நமது வயிறு நிறைந்திருக்கலாம். 2. வயிறு நிறையாமலிருந்தாலும், மனநிறைவு ஏற்பட்டிருக்கலாம் – சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது திகட்டிப்போயிருக்கலாம். 3. நாம் உண்ணும் பொருள்…
Read More3. பாடல் 21 – வண்டுபடத் ததைந்த
புதுப் பூங்கொன்றை முன்னுரை: பொருள்தேடிவரச் சென்ற தலைவன் கார்காலத்தில் திரும்புவேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். கார்காலம் வந்துவிட்டது. காட்டில் கொன்றை மரங்கள் நிறையப் பூக்க ஆரம்பித்துவிட்டன – ஆனால் தலைவன் வரவில்லை. எனவே, தலைவன் தன் வாக்குத் தவறிவிட்டான் என்று ஆகிவிடுமே என்பதற்காகத் தலைவி கார்காலமே தொடங்கவில்லை என்கிறாள். அதற்கு அவள் நான்கு காரணங்களைச் சொல்கிறாள். ஒரு காரணம் தன் தலைவன் பொய்யுரைக்கமாட்டான் என்பது. மற்ற மூன்று காரணங்களைப் பாடலுக்குள் நுண்மையாகப் பொதித்துவைத்திருக்கிறார் புலவர். பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இப் பாடலில் அந்த மூன்று நுண்மைகளை நுழைத்து வைத்திருக்கும் புலவரின் பேரறிவு வியக்கத்தக்கது. பொழுது விடியும் நேரம். வழக்கமாக பொன்னி எழுந்து வீடு வாசல் பெருக்கி, வாசலில் சாணம் தெளிப்பாள். அன்றென்னவோ முல்லை வெகு சீக்கிரத்தில் எழுந்துவிட்டாள். எல்லாவேலைகளையும் முடித்ததுமல்லாமல் குளித்து வேறு உடையும் மாற்றிக்கொண்டாள். பூக்காரி…
Read More2. பாடல் 18 – வேரல் வேலி
வேர்ப்பலா பொழுதுசாயும் நேரம். முல்லைக்கு இருப்புக்கொள்ளவில்லை. இன்றைக்கு அவளின் ‘அவர்’ வருகிற நாள். மாலையில் பூப்பறிக்கப் போகிற சாக்கில் ஊருக்கு வெளியே உள்ள நந்தவனத்தில் முல்லை அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு. முல்லை காலையிலேயே பொன்னிக்குச் சொல்லிவிட்டிருந்தாள் – மாலையில் வீட்டுக்கு வரும்படி. பொன்னி வரச் சற்றுத் தாமதமானதால்தான் முல்லைக்கு வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. குட்டிபோட்ட பூனைபோல் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டும் அடிக்கடி வாசலில் இறங்கி தெருக்கோடிவரை பார்த்துக்கொண்டுமிருந்தாள். வீட்டில் அவரவர் தத்தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபடியால் முல்லையின் தவிப்பை அவர்கள் கவனிக்கவில்லை. பொன்னி வந்துவிட்டாள். “ஏண்டீ இவ்வளவு நேரம்?” என்று தணிந்த குரலில் அவளைக் கடிந்தபடியே, வீட்டுக்குள் எட்டிப்பார்த்து, “அம்மா, பொன்னி வந்துட்டா, நானும் அவளும் நந்தவனம் வரைக்கும் போயிட்டு வந்துர்ரோம்” என்று உரக்கக் குரல்கொடுத்தாள் முல்லை. அவள் ஏற்கனவே தன் அம்மாவிடம் மாலையில் பொன்னியுடன் பூப்பறிக்க வெளியில் செல்வதாகச் சொல்லியிருந்தாள்.…
Read More