தூ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 10
தூக்கம்-அது 1
தூக்கி 1
தூக்கும் 1
தூங்கவைத்தவர் 1
தூங்காத 1
தூங்காமல் 3
தூங்கி 2
தூங்கிநிற்கும் 1
தூங்கின் 1
தூங்கும் 1
தூசு 1
தூண்டாமல் 1
தூண்டி 1
தூண்டுவார் 1
தூண்டுவேன் 1
தூது 3
தூப 1
தூய 5
தூயதான 1
தூயர்க்கு 1
தூயோய் 1
தூர்ந்து 1
தூரம் 3
தூரமுமாய் 1
தூரமே 1
தூவி 2
தூவியும் 1
தூவியே 1
தூள் 1

தூ (10)

சோதியை மா தூ வெளியை மனது அவிழ நிறைவான துரிய வாழ்வை – தாயு:3 18/3
தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
உன்னை நாடுவன் உன் அருள் தூ வெளி-தன்னை – தாயு:18 194/3
தோய்க்கும் ஆனந்த தூ வெளி வெள்ளமே – தாயு:18 235/4
கள்ளமே துரக்கும் தூ வெளி பரப்பே கரு என கிடந்த பாழ் மாய – தாயு:19 275/3
சித்தினை மா தூ வெளியை தன்மயமாம் ஆனந்த தெய்வம்-தன்னை – தாயு:26 396/4
சொல் இறந்து மாண்டவர் போல் தூ மௌன பூமியில் நான் – தாயு:28 527/3
சோதியாய் இருள் பிழம்பை சூறையாடும் தூ வெளியே எனை தொடர்ந்துதொடர்ந்து எந்நாளும் – தாயு:42 628/1
துரியம் கடந்த ஒன்றே தூ வெளியாய் நின்ற – தாயு:46 1317/1
சோதியே நந்தா சுக வடிவே தூ வெளியே – தாயு:47 1359/1
மேல்


தூக்கம்-அது (1)

தூங்காத தூக்கம்-அது தூக்கும் பராபரமே – தாயு:43 709/2
மேல்


தூக்கி (1)

தூக்கி வைக்கும் தாளை தொழுதிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1085/2
மேல்


தூக்கும் (1)

தூங்காத தூக்கம்-அது தூக்கும் பராபரமே – தாயு:43 709/2
மேல்


தூங்கவைத்தவர் (1)

சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
மேல்


தூங்காத (1)

தூங்காத தூக்கம்-அது தூக்கும் பராபரமே – தாயு:43 709/2
மேல்


தூங்காமல் (3)

தூங்காமல் தூங்கின் அல்லாதே எனக்கு சுகமும் உண்டோ – தாயு:27 409/2
தூங்கி விழித்து என்ன பலன் தூங்காமல் தூங்கிநிற்கும் – தாயு:44 1054/1
தூங்காமல் தூங்கி சுக பெருமான் நின் நிறைவில் – தாயு:46 1324/1
மேல்


தூங்கி (2)

தூங்கி விழித்து என்ன பலன் தூங்காமல் தூங்கிநிற்கும் – தாயு:44 1054/1
தூங்காமல் தூங்கி சுக பெருமான் நின் நிறைவில் – தாயு:46 1324/1
மேல்


தூங்கிநிற்கும் (1)

தூங்கி விழித்து என்ன பலன் தூங்காமல் தூங்கிநிற்கும்
பாங்கு கண்டால் அன்றோ பலன் காண்பேன் பைங்கிளியே – தாயு:44 1054/1,2
மேல்


தூங்கின் (1)

தூங்காமல் தூங்கின் அல்லாதே எனக்கு சுகமும் உண்டோ – தாயு:27 409/2
மேல்


தூங்கும் (1)

தூங்கும் மதன் சோம்பை துடைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1132/2
மேல்


தூசு (1)

தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
மேல்


தூண்டாமல் (1)

தூண்டாமல் தூண்டி துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1297/2
மேல்


தூண்டி (1)

தூண்டாமல் தூண்டி துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1297/2
மேல்


தூண்டுவார் (1)

தூண்டுவார் அற்ற சோதி பிரான் நின்-பால் – தாயு:18 258/2
மேல்


தூண்டுவேன் (1)

தூண்டுவேன் அன்றி தொண்டன் என் சொல்வதே – தாயு:18 208/4
மேல்


தூது (3)

வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் – தாயு:14 159/3
துன்று மன கவலை கெட புலை நாயேனை தொழும்புகொள சீகாழி_துரையே தூது
சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/3,4
பித்தர் இறை என்று அறிந்து பேதை-பால் தூது அனுப்புவித்த – தாயு:45 1109/1
மேல்


தூப (1)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
மேல்


தூய (5)

பெரு நிலமாய தூய பேர்_ஒளி பிழம்பாய் நின்றும் – தாயு:21 294/2
துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்கு தூய நல் அருள் தரின் இன்னம் – தாயு:22 308/3
தூய அருள் பற்றா தொடர்வார் பராபரமே – தாயு:43 781/2
தூய பனி திங்கள் சுடுவது என பித்தேற்றும் – தாயு:45 1138/1
தூய அறிவான சுக ரூப சோதி-தன்பால் – தாயு:45 1277/1
மேல்


தூயதான (1)

தூயதான துரிய அறிவு எனும் – தாயு:18 236/1
மேல்


தூயர்க்கு (1)

துன்_மார்க்க மாதர் மயக்கம் மன தூயர்க்கு பற்றாது சொன்னேன் சனகன்-தன் – தாயு:54 1449/1
மேல்


தூயோய் (1)

தோய்ந்த பேர்கட்கும் தோன்றிலா தோன்றலாம் தூயோய் – தாயு:25 386/4
மேல்


தூர்ந்து (1)

மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான – தாயு:24 322/2
மேல்


தூரம் (3)

பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
வேண்டு விருப்பொடு வெறுப்பு சமீபம் தூரம் விலகல் அணுகுதல் முதலாம் விவகாரங்கள் – தாயு:14 144/3
மேல்


தூரமுமாய் (1)

சுத்தமுமாய் தூரமுமாய் சமீபமுமாய் துரிய நிறை சுடராய் எல்லாம் – தாயு:3 14/2
மேல்


தூரமே (1)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
மேல்


தூவி (2)

அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி
தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ – தாயு:9 86/1,2
மேல்


தூவியும் (1)

சொல்லால் துதித்தும் நல் பச்சிலை தூவியும் தொண்டர் இனம் – தாயு:27 422/2
மேல்


தூவியே (1)

கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே
பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/2,3
மேல்


தூள் (1)

தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1

மேல்