செ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்க 1
செக்கர் 2
செக 3
செகங்கள் 1
செகத்து 1
செகத்தை 2
செகம் 1
செங்கமல 1
செங்கரும்பே 1
செங்காயேனும் 1
செங்கோல் 2
செஞ்செவே 3
செடியும் 1
செத்த 2
செந்தமிழின் 1
செந்தாமரையாம் 1
செந்நாய் 1
செந்நீர் 1
செப்பாய் 6
செப்பி 1
செப்பியதும் 1
செப்பினும் 1
செப்பு 6
செப்புகின்ற 1
செப்புவது 2
செப்புவதும் 1
செபம் 1
செம் 19
செம்_சடையான் 1
செம்பு 1
செம்பொன் 8
செம்மை 1
செம்மையருக்கு 1
செய் 16
செய்குவனே 1
செய்குவேன் 2
செய்குவோம் 1
செய்கேன் 3
செய்கை 4
செய்கையும் 1
செய்கையே 2
செய்கையொடும் 1
செய்கோ 1
செய்த 5
செய்தது 3
செய்தல் 1
செய்தனையே 1
செய்தாண்டி 2
செய்தாய் 1
செய்தாலும் 2
செய்திட 1
செய்திடவும் 1
செய்திருக்கும் 1
செய்து 6
செய்தேன் 1
செய்ய 5
செய்யல் 1
செய்யவோ 1
செய்யாய் 1
செய்யும் 9
செய்வது 4
செய்வதே 2
செய்வர் 1
செய்வாய் 1
செய்வார் 1
செய்வாரோ 1
செய்வான் 2
செய்வான்-தனை 1
செய்வேன் 17
செய்வேனே 1
செய 2
செயம் 1
செயல் 23
செயல்-தானும் 1
செயலா 2
செயலாக 1
செயலாம் 1
செயலாய் 1
செயலால் 1
செயலாலே 1
செயலில் 1
செயலும் 2
செயலே 2
செயலோ 1
செயற்கையான 1
செயினும் 1
செயும் 3
செயுமாறு 1
செயுமோ 1
செயேன் 1
செல்ல 4
செல்லல் 1
செல்லாதடா 1
செல்லாதவர்க்கு 1
செல்லாது 1
செல்லாதே 2
செல்லாமல் 1
செல்லாமை 2
செல்லும் 6
செல்லும்படிக்கு 1
செல்லுமோ 4
செல்லுவேன் 1
செல்வ 2
செல்வது 1
செல்வம் 2
செல்வமும் 1
செல்வமே 5
செல்வர்-தம் 1
செல்வி 1
செல 1
செலச்செல 1
செலவே 1
செலாது 1
செலுத்தினார் 1
செலுதல் 1
செலுமோ 3
செவ் 2
செவ்விடமே 1
செவ்விதின் 1
செவ்விது 1
செவி 3
செவிக்கே 1
செவிடர்க்கும் 1
செவியாகவே 1
செவியில் 1
செழும் 4
செற்ற 1
செறி 3
செறிந்தால் 1
செறிந்திடவே 1
செறிந்து 1
செறியா 1
செறியும் 2
செறிவான 1
செறிவே 1
சென்ம 2
சென்மத்து 1
சென்மம் 2
சென்மமும் 1
சென்மித்த 1
சென்ற 2
சென்றசென்ற 1
சென்றிடவே 1
சென்று 4
சென்றே 1
சென்னி 4
சென்னி-அது 1
சென்னியனை 1
சென்னியில் 2
சென்னியின் 1
செனனம் 1
செனித்த 1

செக்க (1)

சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
மேல்


செக்கர் (2)

கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/4
செக்கர் அணி மேனியனே செப்பு – தாயு:28 506/4
மேல்


செக (3)

செக மாயையான அரும் கோடை நீங்கும் திறம் இலையே – தாயு:27 408/4
தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் – தாயு:40 592/2
சித்தி நெறி கேட்ட(ல் செக மயக்கம் சன்மம்_அற – தாயு:43 902/1
மேல்


செகங்கள் (1)

செகங்கள் எங்கும் திரிந்து நல் மோனத்தை – தாயு:18 237/3
மேல்


செகத்து (1)

தினமே செலச்செல வாழ்நாளும் நீங்க செகத்து இருள் சொற்பனமே – தாயு:27 437/1
மேல்


செகத்தை (2)

திரை இல்லா கடல் போல சலனம் தீர்ந்து தெளிந்து உருகும் பொன் போல செகத்தை எல்லாம் – தாயு:16 183/1
செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம் – தாயு:40 593/1
மேல்


செகம் (1)

சிந்தை நீ தேறாய் செகம் அனைத்தும் வந்த தொடர்ப்பாடு – தாயு:28 521/2
மேல்


செங்கமல (1)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
மேல்


செங்கரும்பே (1)

தேவர் எலாம் தொழ சிவந்த செம் தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக – தாயு:42 619/1
மேல்


செங்காயேனும் (1)

கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
மேல்


செங்கோல் (2)

பத்தர் சித்தர் வாழி பரிபக்குவர்கள் வாழி செங்கோல்
வைத்தவர்கள் வாழி குரு வாழி பராபரமே – தாயு:43 1017/1,2
கட்டும் நமன் செங்கோல் கடா அடிக்கும் கோலாக – தாயு:45 1185/1
மேல்


செஞ்செவே (3)

செஞ்செவே நின்ற சிற்சுக_வாரியே – தாயு:18 210/4
செஞ்செவே எம்மை தெரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1172/2
பாச நிகளங்கள் எல்லாம் பஞ்சாக செஞ்செவே
ஈச எனை வா என்று இரங்கினால் ஆகாதோ – தாயு:47 1364/1,2
மேல்


செடியும் (1)

குன்றும் செடியும் குறுகுமோ ஐயாவே – தாயு:28 494/3
மேல்


செத்த (2)

நித்திரையில் செத்த பிணம் நேரும் உடற்கு இச்சைவையா – தாயு:43 832/1
செத்த பிழைப்பு ஆனது எங்கள் செய்கை பராபரமே – தாயு:43 948/2
மேல்


செந்தமிழின் (1)

அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
மேல்


செந்தாமரையாம் (1)

தனையும் தெளிந்து உன்னை சார்ந்தோர்கள் உள்ள செந்தாமரையாம்
மனையும் பொன் மன்றமும் நின்று ஆடும் சோதி மணி விளக்கே – தாயு:27 439/3,4
மேல்


செந்நாய் (1)

காக்கை நரி செந்நாய் கழுகு ஒருநாள் கூடி உண்டு – தாயு:45 1118/1
மேல்


செந்நீர் (1)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
மேல்


செப்பாய் (6)

சிந்தை-தான் தெளிந்து எ வணம் உய் வணம் செப்பாய் – தாயு:25 371/4
தீனனாய் அகம் வாடவோ என் செய்வேன் செப்பாய் – தாயு:25 381/4
தீராயோ வாய் திறந்து செப்பாய் பராபரமே – தாயு:43 663/2
சித்து அன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே – தாயு:43 708/2
சிந்தைசெய வந்த திறம் செப்பாய் பராபரமே – தாயு:43 812/2
தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே – தாயு:43 882/2
மேல்


செப்பி (1)

சேரும்படி இறைக்கு செப்பி வா பைங்கிளியே – தாயு:44 1028/2
மேல்


செப்பியதும் (1)

செப்பியதும் அல்லால் என் சென்னி-அது தொட்டனையே – தாயு:51 1393/2
மேல்


செப்பினும் (1)

சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
மேல்


செப்பு (6)

சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் – தாயு:14 139/4
செப்பு அரிய சமய நெறி எல்லாம் தந்தம் தெய்வமே தெய்வம் எனும் செயற்கையான – தாயு:14 140/1
செக்கர் அணி மேனியனே செப்பு – தாயு:28 506/4
செப்பு அரிய தண் கருணை சிற்சுகனார் பூரணத்தில் – தாயு:45 1276/1
மேல்


செப்புகின்ற (1)

சிவம் ஆதி நான்முகக்கோ அந்த மா மறை செப்புகின்ற
நவமாய் இலங்கிய ஒன்றே இரண்டு_அற்ற நன்மை பெறாது – தாயு:27 410/1,2
மேல்


செப்புவது (2)

செப்புவது அல்லால் வேறு என் செய்வேன் பராபரமே – தாயு:43 660/2
செப்புவது எல்லாம் செபம் நான் சிந்திப்பது எல்லாம் நின் – தாயு:43 754/1
மேல்


செப்புவதும் (1)

செப்புவதும் உன் நிலையின் சீர் காண் பராபரமே – தாயு:43 917/2
மேல்


செபம் (1)

செப்புவது எல்லாம் செபம் நான் சிந்திப்பது எல்லாம் நின் – தாயு:43 754/1
மேல்


செம் (19)

செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
எண் தோள் முக்கண் செம் மேனி எந்தாய் நினக்கே எவ்வாறு – தாயு:20 290/3
நாட்டம் மூன்று உடைய செம் நிற மணியே நடுவுறு நாயக விளக்கே – தாயு:24 360/1
வெள்ள செம் பாத புணையே அல்லால் கதி வேறு இல்லையே – தாயு:27 441/4
பிள்ளை மதி செம்_சடையான் பேசா பெருமையினான் – தாயு:28 504/1
திங்கள் அணி செம் சடையாய் சே உடையாய் மங்கை ஒரு – தாயு:28 507/2
பால் உடையாய் செம் கண் பணியாய் என் சென்னியின் மேல் – தாயு:28 507/3
முகம் எலாம் கணீர் முத்து அரும்பிட செம் கை முகிழ்ப்ப – தாயு:32 558/1
தேவர் எலாம் தொழ சிவந்த செம் தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக – தாயு:42 619/1
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
உற்று நினைக்கில் துயரம் உள்ளுள்ளே செம் தீயாய் – தாயு:43 693/1
தேடாத தேட்டினரே செம் கை துலாக்கோல் போல் – தாயு:43 869/1
செம் பயிரை நாடி திகைத்தேன் நான் பைங்கிளியே – தாயு:44 1065/2
செம் சரண சேவடியை சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1092/2
கொள் செம் கையர் தாள் வாரம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1108/2
செம் கிருமி ஆதி செனித்த சென்ம பூமியினை – தாயு:45 1119/1
செம் கதிரின் முன் மதியம் தேசு அடங்கி நின்றிடல் போல் – தாயு:45 1274/1
மேல்


செம்_சடையான் (1)

பிள்ளை மதி செம்_சடையான் பேசா பெருமையினான் – தாயு:28 504/1
மேல்


செம்பு (1)

கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
மேல்


செம்பொன் (8)

திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
வைத்த ஐய அருள் செம்பொன் சோதியே – தாயு:18 203/4
செம்பொன் மேனி செழும் சுடரே முழு – தாயு:18 204/1
ஆழ்த்தும் முக்கண் அருள் செம்பொன் சோதியே – தாயு:18 214/4
அன்று நால்வருக்கும் ஒளி நெறி காட்டும் அன்பு உடை சோதியே செம்பொன்
மன்றுள் முக்கண்ணும் காளகண்டமுமாய் வயங்கிய வானமே என்னுள் – தாயு:22 310/1,2
தே எனும் மெளனி செம்பொன் சேவடி சிந்தைசெய்வாம் – தாயு:24 336/4
மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம் – தாயு:41 603/1
மேல்


செம்மை (1)

செம்மை அறிவால் அறிந்து தேகாதிக்குள் இசைந்த – தாயு:45 1170/1
மேல்


செம்மையருக்கு (1)

செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே – தாயு:43 784/2
மேல்


செய் (16)

சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
அரும்ப செய் எனது அன்னை ஒப்பாம் மனே – தாயு:18 217/4
உம்பர்-பால் ஏவல் செய் என்று உணர்த்தினை ஓகோ வானோர் – தாயு:21 292/2
சேது மேவிய ராம_நாயகன்-தனை சிந்தை செய் மட நெஞ்சே – தாயு:24 332/4
மண்டலத்தின் மிசை ஒருவன் செய் வித்தை அகோ எனவும் வாரணாதி – தாயு:26 390/1
எழுந்து ஆதரவு செய் எம்பெருமான் என்று இறைஞ்சி விண்ணோர் – தாயு:27 407/3
இடம்பெறு வீடும் மின்னார் செய் சகமும் இரு_நிதியும் – தாயு:27 417/1
வாய் உண்டு வாழ்த்த மவுனம் செய் போது மவுன அருள் – தாயு:27 421/1
ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண்டு அவர் செய் இந்த்ரசாலம் – தாயு:27 435/1
தென்புலத்தாரோடு இருந்து செய் பூசை கொண்டருளே – தாயு:29 550/4
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/2
நான் காண பாவனை செய் நாட்டம் பராபரமே – தாயு:43 735/2
அறியா நான் செய் வினையை ஐயா நீ கூட்டும் – தாயு:43 798/1
மேல்


செய்குவனே (1)

தெளியேன் தெளிந்தவரை போற்றிடேன் என்ன செய்குவனே – தாயு:27 446/4
மேல்


செய்குவேன் (2)

பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன்
மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/2,3
தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன்
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/2,3
மேல்


செய்குவோம் (1)

இனமே துணை என்று இருந்தோம் நமன் வரின் என் செய்குவோம்
மனமே நம் போல உண்டோ சுத்த மூடர் இ வையகத்தே – தாயு:27 437/3,4
மேல்


செய்கேன் (3)

என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
பாவியேன் இனி என் செய்கேன் பரமனே பணிந்து உன் பாதம் – தாயு:22 303/1
போதியா வண்ணம் கைவிடல் முறையோ புன்மையேன் என் செய்கேன் மனமோ – தாயு:22 305/3
மேல்


செய்கை (4)

தீனன் செய்கை திரு_அருள் செய்கையே – தாயு:18 251/4
தேடுவதும் நின் அடியார் செய்கை பராபரமே – தாயு:43 776/2
சீலம் மிகு ஞானியர்-தம் செய்கை பராபரமே – தாயு:43 778/2
செத்த பிழைப்பு ஆனது எங்கள் செய்கை பராபரமே – தாயு:43 948/2
மேல்


செய்கையும் (1)

செய்யும் செய்கையும் சிந்திக்கும் சிந்தையும் – தாயு:18 205/1
மேல்


செய்கையே (2)

தீனன் செய்கை திரு_அருள் செய்கையே – தாயு:18 251/4
தீது_அற்ற காயமும் அ செய்கையே போதமாய் – தாயு:28 486/2
மேல்


செய்கையொடும் (1)

சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
மேல்


செய்கோ (1)

இகம் எலாம் தவம் இழைக்கின்றார் என் செய்கோ ஏழை – தாயு:32 558/3
மேல்


செய்த (5)

தம்பிரானே நீ செய்த தயவுக்கும் கைம்மாறு உண்டோ – தாயு:21 292/3
பொருந்தும் நாள் நல்ல புண்ணியம் செய்த நாள் பொருந்தாது – தாயு:25 375/2
சின்னஞ்சிறியார்கள் செய்த மணல் சோற்றை ஒக்கும் – தாயு:43 822/1
செய்த இன்ப வானே பராபரமே – தாயு:43 876/2
பாச பந்தம் செய்த துன்பம் பாராமல் எம் இறைவர் – தாயு:44 1062/1
மேல்


செய்தது (3)

இகம் எலாம் எனை பிறந்திட செய்தது ஏன் எந்தாய் – தாயு:25 385/4
உடையாய் உடையபடி அன்றி யான் செய்தது ஒன்று இலையே – தாயு:27 455/4
புண்ணாக செய்தது இனி போதும் பராபரமே – தாயு:43 670/2
மேல்


செய்தல் (1)

பேயினும் கடையன் ஆகி பிதற்றுதல் செய்தல் நன்றோ – தாயு:36 577/2
மேல்


செய்தனையே (1)

இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ – தாயு:42 634/2
மேல்


செய்தாண்டி (2)

மடக்கிக்கொண்டான் என்னை தன்னுள் சற்றும் வாய் பேசா வண்ணம் மரபும் செய்தாண்டி – தாயு:54 1425/2
உடலும் புளகிதமாக எனது உள்ளம் உருக உபாயம் செய்தாண்டி – தாயு:54 1427/2
மேல்


செய்தாய் (1)

செல்லும்படிக்கு அருள் நீ செய்தாய் பராபரமே – தாயு:43 865/2
மேல்


செய்தாலும் (2)

காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
ஏதேது செய்தாலும் என் பணி போய் நின் பணியாம் – தாயு:45 1235/1
மேல்


செய்திட (1)

பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
மேல்


செய்திடவும் (1)

சித்தா எனக்கு உன் அருள் செய்திடவும் காண்பேனோ – தாயு:46 1344/2
மேல்


செய்திருக்கும் (1)

ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
மேல்


செய்து (6)

எண்ணாதபடிக்கு இரங்கி தானாக செய்து அருளும் இறையே உன்றன் – தாயு:3 22/3
ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
தவம்செயும்படி தயவு செய்து அருள்வதே தருமம் – தாயு:25 388/2
தன்னை அறிந்தவர்-தம்மை தான் ஆக செய்து அருளும் சமத்தை லோகம் – தாயு:26 394/1
எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து
புல்லாயினும் ஒரு பச்சிலையாயினும் போட்டு இறைஞ்சி – தாயு:27 431/1,2
பஞ்ச_சுத்தி செய்து நின்னை பாவித்து பூசைசெய்தால் – தாயு:43 789/1
மேல்


செய்தேன் (1)

படி மிசை மெளனி ஆகி நீ ஆள பாக்கியம் என் செய்தேன் பரனே – தாயு:19 278/4
மேல்


செய்ய (5)

தேன் முகம் பிலிற்றும் பைந்தாள் செய்ய பங்கயத்தின் மேவும் – தாயு:15 165/1
உனக்கு நான் அடி_தொண்டு ஆகி உன் அடிக்கு அன்பு செய்ய
எனக்கு நீ தோற்றி அஞ்சேல் என்னும் நாள் எந்த நாளோ – தாயு:21 296/1,2
திருந்து சீர் அடி தாமரைக்கு அன்பு-தான் செய்ய
பொருந்தும் நாள் நல்ல புண்ணியம் செய்த நாள் பொருந்தாது – தாயு:25 375/1,2
அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் – தாயு:43 790/1
பாவம் என்றால் ஏதும் பயம் இன்றி செய்ய இந்த – தாயு:43 986/1
மேல்


செய்யல் (1)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
மேல்


செய்யவோ (1)

யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ
மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/2,3
மேல்


செய்யாய் (1)

தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே – தாயு:43 700/2
மேல்


செய்யும் (9)

தாராளமா கருணை பொழிய செய்யும் சாதகம் என்னே கருதி சாற்றும் என்பேன் – தாயு:14 157/4
செய்யும் செய்கையும் சிந்திக்கும் சிந்தையும் – தாயு:18 205/1
மோனமே முதலே முத்தி நல் வித்தே முடிவு_இலா இன்பமே செய்யும்
தானமே தவமே நின்னை நான் நினைந்தேன் தமியனேன் தனை மறப்பதற்கே – தாயு:22 307/3,4
செய்யும் பணியும் கைகூடும் சிந்தை துயரும் தீர்ந்திடுமே – தாயு:23 317/4
செய்யும் தவம் சற்றும் இல்லாத நான் உன் திரு_அடிக்கே – தாயு:27 403/1
கள்ளத்தை செய்யும் வினையால் வருந்த கணக்கும் உண்டோ – தாயு:27 440/2
என்ன செய்யும் கைம்மாறு உளதோ சுத்த ஏழையனே – தாயு:27 458/4
மகத்துவமா பிரமாண்டமாக செய்யும் வல்லவா நீ நினைத்தவாறே எல்லாம் – தாயு:40 593/2
ஏழைக்குறும்பு செய்யும் ஏந்து_இழையார் மோகம் எனும் – தாயு:45 1139/1
மேல்


செய்வது (4)

துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
பாங்கு பெற செய்வது உன் மேல் பாரம் பராபரமே – தாயு:43 954/2
நல் நெறியை கண்டு உரிமை நாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1260/2
எவ்வுயிரும் என்று பணி யாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1312/2
மேல்


செய்வதே (2)

நம்பி வா எனின் நான் என்-கொல் செய்வதே – தாயு:18 204/4
என்று நீ எனக்கு இன் அருள் செய்வதே – தாயு:18 260/4
மேல்


செய்வர் (1)

தானம் தவம் தருமம் சந்ததமும் செய்வர் சிவ – தாயு:43 793/1
மேல்


செய்வாய் (1)

தாக்கவும் செய்வாய் அன்றோ சச்சிதானந்த வாழ்வே – தாயு:35 570/4
மேல்


செய்வார் (1)

தேடும் பொழுது என்ன செய்வார் பரானந்த சிற்சுடரே – தாயு:27 456/4
மேல்


செய்வாரோ (1)

சீரை பார்த்தால் கருணை செய்வாரோ பைங்கிளியே – தாயு:44 1033/2
மேல்


செய்வான் (2)

குறைவு_இலா வணம் நிறைந்து கோது_இலா நடனம் செய்வான்
இறையவன் எனலாம் யார்க்கும் இதய சம்மதம் ஈது அல்லால் – தாயு:15 169/3,4
துக்க_வெள்ளத்தில் ஆழ்கின்றேன் என் செய்வான் துணிந்தேன் – தாயு:25 387/4
மேல்


செய்வான்-தனை (1)

அற்று இருந்திட தொழில் செய்வான்-தனை நிகர் ஆனேன் – தாயு:25 389/4
மேல்


செய்வேன் (17)

தீய கொலை சமயத்தும் செல்ல சிந்தை தெளிந்திடவும் சமாதானம் செய்வேன் வாழ்வான் – தாயு:14 156/2
பொய்யன் என்று எனை புறம் விடின் என் செய்வேன் புகலாய் – தாயு:25 372/4
தேடினேன் வெறும் தீமையே என் இனி செய்வேன் – தாயு:25 379/4
தீனனாய் அகம் வாடவோ என் செய்வேன் செப்பாய் – தாயு:25 381/4
எளியன் ஆக்கினை என் செய்வேன் என் செய்வேன் எல்லா – தாயு:25 383/3
எளியன் ஆக்கினை என் செய்வேன் என் செய்வேன் எல்லா – தாயு:25 383/3
எல்லாம் பிழைத்தனர் அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன்
கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குரு மணியே – தாயு:27 422/3,4
கல்லாத மூடன் இனி என் செய்வேன் சக காரணமாம் – தாயு:27 424/3
சித்தம் தெளியாது என் செய்வேன் பராபரமே – தாயு:43 657/2
தேறாது என் செய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 658/2
தேகம் விழுந்திடின் என் செய்வேன் பராபரமே – தாயு:43 659/2
செப்புவது அல்லால் வேறு என் செய்வேன் பராபரமே – தாயு:43 660/2
செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே – தாயு:43 784/2
தேற்றப்படாது இனி என் செய்வேன் பராபரமே – தாயு:43 802/2
சிந்தை மயங்காதோ என் செய்வேன் பராபரமே – தாயு:43 834/2
தேடி ஓய்கின்றேன் என் செய்வேன் பராபரமே – தாயு:43 840/2
சித்தம் இரங்கிலை என் செய்வேன் பராபரமே – தாயு:43 915/2
மேல்


செய்வேனே (1)

உள்ளம் பரந்தால் உடையாய் என் செய்வேனே – தாயு:51 1398/2
மேல்


செய (2)

செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
பூசை செய ஆசை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1310/2
மேல்


செயம் (1)

செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
மேல்


செயல் (23)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம் – தாயு:19 279/1
என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம் – தாயு:19 279/1
புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம் – தாயு:19 279/2
பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/3
எனக்கு என செயல் வேறு இலை யாவும் இங்கு ஒரு நின்றனக்கு – தாயு:25 362/1
எல்லாம் சிவன் செயல் என்று அறிந்தால் அவன் இன் அருளே – தாயு:27 445/1
பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் – தாயு:42 632/1
யார்க்கும் செயல் இலையே ஐயா பராபரமே – தாயு:43 752/2
சித்தம் மவுனம் செயல் வாக்கு எலாம் மவுனம் – தாயு:43 911/1
சிந்தையும் என் போல செயல் அற்று அடங்கிவிட்டால் – தாயு:43 960/1
எல்லாம் நினது செயல் என்று எண்ணும் எண்ணமும் நீ – தாயு:43 970/1
சித்தர் ஒன்றும் சேரா செயல் அறிவது எந்நாளோ – தாயு:45 1250/2
நின் செயல் என்று உன்னும் நினைவு வர காண்பேனோ – தாயு:46 1330/2
வரவும் செயல் அழிந்து உள் இருமலும் ஆகி – தாயு:56 1452/51
மேல்


செயல்-தானும் (1)

தேக செயல்-தானும் சிந்தையுடனே குழையில் – தாயு:28 510/1
மேல்


செயலா (2)

புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம் – தாயு:19 279/2
வந்தது எல்லாம் நின் செயலா வாழ்வேன் பராபரமே – தாயு:43 960/2
மேல்


செயலாக (1)

செயலாக முடித்திடல் வேண்டும் சச்சிதானந்த சற்குருவே – தாயு:19 279/4
மேல்


செயலாம் (1)

உளவு அறிந்து எலாம் நின் செயலாம் என உணர்ந்தோர்க்கு – தாயு:25 363/1
மேல்


செயலாய் (1)

நின் செயலாய் நில்லா நினைவு ஏன் பராபரமே – தாயு:43 922/2
மேல்


செயலால் (1)

தன் செயலால் ஒன்றும் இலை தான் என்றால் நான் பாவி – தாயு:43 922/1
மேல்


செயலாலே (1)

சிவன் செயலாலே யாதும் வரும் என தேறேன் நாளும் – தாயு:22 302/1
மேல்


செயலில் (1)

தேட்டம் ஒன்று அற அருள் செயலில் நிற்றியேல் – தாயு:24 324/3
மேல்


செயலும் (2)

ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
சித்த நினைவும் செயும் செயலும் நீ என வாழ் – தாயு:43 652/1
மேல்


செயலே (2)

எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
பார்க்கின் அண்ட பிண்ட பரப்பு அனைத்தும் நின் செயலே
யார்க்கும் செயல் இலையே ஐயா பராபரமே – தாயு:43 752/1,2
மேல்


செயலோ (1)

என் அரசே கேட்டிலையோ என் செயலோ ஏதும் இலை – தாயு:51 1389/1
மேல்


செயற்கையான (1)

செப்பு அரிய சமய நெறி எல்லாம் தந்தம் தெய்வமே தெய்வம் எனும் செயற்கையான
அ பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி – தாயு:14 140/1,2
மேல்


செயினும் (1)

என் செயினும் என் பெறினும் என் இறைவா ஏழையன் யான் – தாயு:46 1330/1
மேல்


செயும் (3)

ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
சித்த நினைவும் செயும் செயலும் நீ என வாழ் – தாயு:43 652/1
போற்றேன் என்றாலும் என்னை புந்தி செயும் வேதனைக்கு இங்கு – தாயு:45 1241/1
மேல்


செயுமாறு (1)

சுழலும் பொழுது இரங்கி அருள் செயுமாறு
கூறு அரிய சக மாயை அறவே – தாயு:56 1452/20,21
மேல்


செயுமோ (1)

ஈடு செயுமோ முடிவில் எந்தாய் பராபரமே – தாயு:43 867/2
மேல்


செயேன் (1)

நில்லேன் நல் யோக நெறியும் செயேன் அருள் நீதி ஒன்றும் – தாயு:27 431/3
மேல்


செல்ல (4)

கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
தீய கொலை சமயத்தும் செல்ல சிந்தை தெளிந்திடவும் சமாதானம் செய்வேன் வாழ்வான் – தாயு:14 156/2
செல்ல வேறு ஒரு திக்கு அறியேன் எலாம் – தாயு:18 207/3
மேல்


செல்லல் (1)

சிறுமை கெட பெருமையின் நின் சென்ம தேயத்தினில் நீ செல்லல் வேண்டும் – தாயு:26 398/4
மேல்


செல்லாதடா (1)

செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
மேல்


செல்லாதவர்க்கு (1)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
மேல்


செல்லாது (1)

செல்லாது என் சிந்தை நடுவே கிடந்து திகைத்து விம்மி – தாயு:27 429/3
மேல்


செல்லாதே (2)

செல்லுமோ செல்லாதே செல்லும் இடம் இன்பம் அலால் – தாயு:28 473/3
பாசத்துள் செல்லாதே பல்காலும் பாழ் நெஞ்சே – தாயு:29 543/4
மேல்


செல்லாமல் (1)

செல்லாமல் நல் நெறியில் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1154/2
மேல்


செல்லாமை (2)

செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
செல்லாமை நல்லோர் திறம் காண் பராபரமே – தாயு:43 828/2
மேல்


செல்லும் (6)

காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது – தாயு:24 342/1
செல்லும் பொழுது அல்லவோ செல்லுவேன் அந்த சிற்சுகத்தே – தாயு:27 444/4
செல்லுமோ செல்லாதே செல்லும் இடம் இன்பம் அலால் – தாயு:28 473/3
சென்றசென்ற திக்கு அனைத்தும் செல்லும் பராபரமே – தாயு:43 775/2
சேதம் உறின் யாது பின்னே செல்லும் பராபரமே – தாயு:43 817/2
எத்தனை நாள் செல்லும் இயம்பாய் பராபரமே – தாயு:43 905/2
மேல்


செல்லும்படிக்கு (1)

செல்லும்படிக்கு அருள் நீ செய்தாய் பராபரமே – தாயு:43 865/2
மேல்


செல்லுமோ (4)

தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/2,3
காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
எத்தனை நாள் செல்லுமோ மனமே கண்டு இறைஞ்சுதற்கே – தாயு:27 404/4
செல்லுமோ செல்லாதே செல்லும் இடம் இன்பம் அலால் – தாயு:28 473/3
மேல்


செல்லுவேன் (1)

செல்லும் பொழுது அல்லவோ செல்லுவேன் அந்த சிற்சுகத்தே – தாயு:27 444/4
மேல்


செல்வ (2)

சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
ஒட்டுடன் பற்று இன்றி உலகை துறந்த செல்வ
பட்டினத்தார் பத்ரகிரி பண்பு உணர்வது எந்நாளோ – தாயு:45 1111/1,2
மேல்


செல்வது (1)

செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
மேல்


செல்வம் (2)

தெரிவு அரிய பூரணமாய் காரணம் கற்பனை கடந்த செல்வம் ஆகி – தாயு:3 21/2
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
மேல்


செல்வமும் (1)

நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
மேல்


செல்வமே (5)

செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/4
சின்மய பொருளே பழம் செல்வமே
புன் மலத்து புழு அன்ன பாவியேன் – தாயு:18 231/2,3
தேன் என ருசித்து உள் அன்பரை கலந்த செல்வமே சிற்பர சிவமே – தாயு:22 311/4
பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே
நாடுகின்ற ஞான மன்றில் ஆடுகின்ற அழகனே – தாயு:53 1416/1,2
மேல்


செல்வர்-தம் (1)

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
மேல்


செல்வி (1)

திரு_அருள் தெய்வ செல்வி மலை_மகள் – தாயு:18 241/1
மேல்


செல (1)

மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
மேல்


செலச்செல (1)

தினமே செலச்செல வாழ்நாளும் நீங்க செகத்து இருள் சொற்பனமே – தாயு:27 437/1
மேல்


செலவே (1)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
மேல்


செலாது (1)

எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
மேல்


செலுத்தினார் (1)

சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
மேல்


செலுதல் (1)

அனமும் செலுதல் இன்றி விழியும் சுடர்கள் இன்று – தாயு:56 1452/52
மேல்


செலுமோ (3)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ
சொந்தமாய் ஆண்ட நீ அறியார்கள் போலவே துன்பத்தில் ஆழ்த்தல் முறையோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 87/3,4
நல் போத இன்பு வர நாள் செலுமோ பைங்கிளியே – தாயு:44 1049/2
மேல்


செவ் (2)

முருந்து இள நகையார் பார முலை முகம் தழுவி செவ் வாய் – தாயு:36 572/1
செவ் அறிவை நாடி மிக சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1256/2
மேல்


செவ்விடமே (1)

செவ்விடமே நீயும் செனனம் அற்று வாழியவே – தாயு:29 552/4
மேல்


செவ்விதின் (1)

செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
மேல்


செவ்விது (1)

கிடக்கினும் செவ்விது இருக்கினும் நல் அருள் கேள்வியிலே – தாயு:27 412/2
மேல்


செவி (3)

கோனே எனும் சொல் நினது செவி கொள்ளாது என்னோ கூறாயே – தாயு:20 287/4
சொல் ஏற பாழ்த்த துளை செவி கொண்டு அல் ஏறு – தாயு:28 474/2
ஒலி நன்று என மகிழ்ந்து செவி கொள நாசி – தாயு:56 1452/39
மேல்


செவிக்கே (1)

மூவர் சொலும் தமிழ் கேட்கும் திரு_செவிக்கே மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோ-தான் – தாயு:42 619/2
மேல்


செவிடர்க்கும் (1)

வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
மேல்


செவியாகவே (1)

சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
மேல்


செவியில் (1)

மாறாத துன்பம் எல்லாம் வந்து உரைத்தால் நின் செவியில்
ஏறாத ஆறு ஏது இயம்பாய் பராபரமே – தாயு:43 899/1,2
மேல்


செழும் (4)

தெருள் ஆகி கருதும் அன்பர் மிடி தீர பருக வந்த செழும் தேன் ஆகி – தாயு:3 20/2
மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
தேன் ஆகி பால் ஆகி கனியாய் கன்னல் செழும் பாகாய் கற்கண்டாய் திகழ்ந்த ஒன்றே – தாயு:16 179/4
செம்பொன் மேனி செழும் சுடரே முழு – தாயு:18 204/1
மேல்


செற்ற (1)

அடையார் புரம் செற்ற தேவே நின் பொன் அடிக்கு அன்பு சற்றும் – தாயு:27 455/1
மேல்


செறி (3)

இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
பொறியில் செறி ஐம்_புல கனியை புந்தி கவரால் புகுந்து இழுத்து – தாயு:24 334/1
மேல்


செறிந்தால் (1)

செறியும் தெய்வமும் பலபல ஆகவும் செறிந்தால்
அறியும் தன்மை இங்கு ஆர் உனை அறிவினால் அறிந்தோர் – தாயு:25 367/2,3
மேல்


செறிந்திடவே (1)

மறிந்த மனம் அற்ற மவுனம் செறிந்திடவே
நாட்டினான் ஆனந்த நாட்டில் குடி வாழ்க்கை – தாயு:28 535/2,3
மேல்


செறிந்து (1)

தீது எலாம் ஒன்று ஆம் வன்மை செறிந்து இருள் படலம் போர்த்த – தாயு:36 573/1
மேல்


செறியா (1)

செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை – தாயு:23 315/3
மேல்


செறியும் (2)

செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை – தாயு:23 315/3
செறியும் தெய்வமும் பலபல ஆகவும் செறிந்தால் – தாயு:25 367/2
மேல்


செறிவான (1)

செறிவான அறியாமை எல்லாம் நீங்க சிற்சுகம் பெற்றிடுக பந்தம் தீர்க என்றே – தாயு:14 150/4
மேல்


செறிவே (1)

செறிவே அறிவே சிவமே பராபரமே – தாயு:43 974/2
மேல்


சென்ம (2)

சிறுமை கெட பெருமையின் நின் சென்ம தேயத்தினில் நீ செல்லல் வேண்டும் – தாயு:26 398/4
செம் கிருமி ஆதி செனித்த சென்ம பூமியினை – தாயு:45 1119/1
மேல்


சென்மத்து (1)

சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
மேல்


சென்மம் (2)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
சென்மம் ஏது எனை தீண்ட கடவதோ – தாயு:18 242/2
மேல்


சென்மமும் (1)

சித்தமும் வாக்கும் தேகமும் நினவே சென்மமும் இனி எனால் ஆற்றா – தாயு:24 358/3
மேல்


சென்மித்த (1)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
மேல்


சென்ற (2)

எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
சென்ற இடம் எல்லாம் திரு_அருளே தாரகமாய் – தாயு:43 944/1
மேல்


சென்றசென்ற (1)

சென்றசென்ற திக்கு அனைத்தும் செல்லும் பராபரமே – தாயு:43 775/2
மேல்


சென்றிடவே (1)

சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
மேல்


சென்று (4)

திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
இன்ப நிட்டை எய்தாமல் யாதெனினும் சென்று மனம் – தாயு:43 949/1
மெய் கூடு சென்று விளம்பி வா பைங்கிளியே – தாயு:44 1066/2
சென்று சென்றே அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகி – தாயு:45 1264/1
மேல்


சென்றே (1)

சென்று சென்றே அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகி – தாயு:45 1264/1
மேல்


சென்னி (4)

தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் – தாயு:8 70/2
பொதியும் சென்னி புனிதரின் பொன் அடி – தாயு:18 264/2
வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ – தாயு:41 598/2
மால் வைத்த சிந்தை மயக்கு_அற என் சென்னி மிசை – தாயு:43 966/1
மேல்


சென்னி-அது (1)

செப்பியதும் அல்லால் என் சென்னி-அது தொட்டனையே – தாயு:51 1393/2
மேல்


சென்னியனை (1)

திரையும் திரையும் நதி சென்னியனை நாவால் – தாயு:28 471/3
மேல்


சென்னியில் (2)

அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/2
மேல்


சென்னியின் (1)

பால் உடையாய் செம் கண் பணியாய் என் சென்னியின் மேல் – தாயு:28 507/3
மேல்


செனனம் (1)

செவ்விடமே நீயும் செனனம் அற்று வாழியவே – தாயு:29 552/4
மேல்


செனித்த (1)

செம் கிருமி ஆதி செனித்த சென்ம பூமியினை – தாயு:45 1119/1

மேல்