12. பாடல் 111 – மென்தோள் நெகிழ்த்த செல்லல்

இல்லோர் பெருநகை முல்லையின் அம்மாவுக்குக் கோபம்கோபமாக வந்தது. காலைவேளையிலே சுறுசுறுப்பாக அங்குமிங்கும் திரிந்துகொண்டு எல்லாரிடமும் கலகலப்பாக இருக்கும் முல்லை சில நாள்களாகவே சுணங்கிப்போய் இருந்தாள். எந்நேரமும் முகம் வாட்டமுற்றே இருந்தது. “ஏன்டீ எதையோ பறிகொடுத்தவ கணக்கா இப்படி ‘ஓ’ன்னு இருக்க? என்ன ஆச்சு ஒனக்கு? வாயத் தொறந்து சொல்லேன்டீ” என்று பேச்சியம்மாள் – முல்லையின் தாய் – அவளைத் தோண்டித் துருவிக் கேட்டுக்கொண்டே இருந்தாள். “எனக்கு ஒண்ணுமில்ல. நான் நல்லாத்தானே இருக்கேன்” என்று முல்லை திரும்பத் திரும்பச் சொன்னாலும் அவள் மேலுக்குத்தான் சொல்கிறாள் – எதையோ மறைக்கிறாள் – என்று அந்தத் தாய் ஐயுற்றாள். ஒருவாரம் ஓடிவிட்டது. முல்லை இப்போது ரொம்பவும் மெலிந்து தெரிந்தாள். எப்போதும் ‘பளபள’-வென்றிருக்கும் அவளது நெற்றி வெளிறிப்போய்க் கிடந்தது. கைகளில் எப்போதும் ஏற்றிவிட்ட வளையல்கள் இறங்காமல் இறுக்கமாக இருக்கும். இப்போதோ வளையல்கள் கழன்று…

Read More

2. நகர்வுகள்

உயிர்கள் அல்லது பொருள்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு இடம்பெயர்வதையே நகர்வு (movement) என்கிறோம். இங்கு இவர்தல், இரிதல், ஊர்தல், இயலுதல் என்ற நான்குவிதமான நகர்வுகளைப் பற்றிக் காண்போம். 1. இவர்தல் இவர்தல் என்பதற்குப் பலவிதமான விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. To rise on high, ascend; உயர்தல். விசும்பிவர்ந் தமரன் சென்றான் (சீவக. 959). To go, proceed; செல்லுதல். இருவிசும் பிவர்தலுற்று (சீவக. 959). To move about, pass to and fro; உலாவுதல். இரைதேர்ந்திவருங் கொடுந்தாண் முதலையொடு (மலைபடு. 90). To spread, as a creeper; பரத்தல். தூவற்கலித்த விவர்நனை வளர்கொடி (மலைபடு. 514.) To spring, leap, rush out; பாய்தல். குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்கு (கலித். 86, 32). எனவே, ‘இவர்’ என்பதற்கு, மேலே…

Read More

3. குறைத்தல்கள்

ஒரு வெள்ளரிக்காயை நன்றாகக் கழுவி ஒரு பலகையில் நீளவாக்கில் வைத்து ஓர் ஓரத்திலிருந்து கத்தியால் வெட்டிக்கொண்டே வருகிறீர்கள். இப்பொழுது காயின் நீளம் குறைந்துகொண்டே வரும் இல்லையா? இது ஒருவகைக் குறைத்தல் அல்லது குறைதல். ஓர் ஊரில் ஒரு குறிப்பிட்ட இனத்தார் நிறையப்பேர் இருக்கிறார்கள். நாளாக ஆக அவர்களுக்கு வருமானம் இல்லை. ஒவ்வொரு குடும்பமாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். ஊரில் அவர்களின் தொகை குறைந்துகொண்டே வரும் இல்லையா? இது இன்னொரு வகைக் குறைதல். ஓர் அருவி பெரும் வெள்ளப்பெருக்குடன் ஆர்ப்பரித்து விழுகிறது. நீர்வரத்து குறையக் குறைய அருவிநீரின் அளவும் குறைந்துகொண்டே வரும் இல்லையா? இதுவும் வேறோர் வகைக் குறைதல். இவை மூன்றுமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைதல்கள்தான். ஆனால் இலக்கியங்கள் இவற்றை வேறுபடுத்திக்காட்டுகின்றன. முதலாவது அகைதல், அடுத்தது அருகுதல். கடைசியானது நிழத்துதல். சங்க இலக்கியவழி இவற்றை ஆய்வோம். 1. அகைதல் /…

Read More

4. அஞ்சுதல்

அச்சம் அல்லது அஞ்சுதல் என்பதற்கு உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம். 4.1 அச்சம் நீதிமன்றத்தில் உங்கள் சார்பாக ஒரு வழக்கு நடக்கிறது. அன்றைக்குத் தீர்ப்பு நாள். தீர்ப்பு எவ்வாறு இருக்குமோ, நடுவுநிலையான தீர்ப்பாக இல்லாமற்போய்விடுமோ என்ற உணர்வு உங்களுக்குள் தோன்றுமல்லவா! அதுதான் அச்சம். பாண்டியன் நெடுஞ்செழியனின் அவைக்கு இவ்வாறு வருவோரின் இத்தகைய உணர்வுகளை நீக்கி, தராசு முள்ளைப் போன்ற நடுவுநிலையுடன் பாண்டியனின் அறங்கூறவையம் இருக்கிறது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் கூறுகிறார்:- அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி செற்றமும் உவகையும் செய்யாது காத்து ஞெமன்கோல் அன்ன செம்மைத்தாகி சிறந்த கொள்கை அறங்கூறவையமும் – மதுரைக்காஞ்சி 489-492 தலைவி ஒருத்தி காதல்கொள்கிறாள். இது தோழிக்கும் தெரியும். காதல் ஏக்கத்தால் தலைவி நோய்வாய்ப்படுகிறாள். இதைக் கண்ட செவிலி…

Read More

5. உண்ணுதல் அல்லது உட்கொள்ளுதல்

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சாப்பிடு, சாப்பாடு போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. ஆனால் அவற்றில் ஏதேனும் ஒரு திட அல்லது திரவப் பொருளை உட்கொள்ளுதலுக்குப் பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1. உண்ணுதலும் தின்னுதலும் ( உண் versus தின் ) முதலில் தின் என்ற சொல்லைப் பார்ப்போம். மனிதர் அல்லாத வேறு உயிருள்ள உயிரற்ற பொருள்களும் தின்பதாகப் பாடல்கள் கூறுகின்றன. எனவே அவற்றில்தான் இதன் உண்மைப் பொருள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 1.அ. உயிரற்ற பொருள்கள் தின்னல் ஒரு சன்னமான இரும்புக் கம்பியை எடுத்து அதன் ஒரு முனையை அரத்தால் சுற்றிச் சுற்றித் தேய்த்து ஊசியை உருவாக்குகிறார்கள். இதனை அரம் தின் ஊசி என்கிறது ஒரு அகநானூற்றுப் பாடல். அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன – அகம் 199/8 பெரிய அளவில் தயிர்…

Read More

6. உண்ணும் விதங்கள்

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சாப்பிடு, சாப்பாடு போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. ஆனால் அவற்றில் ஏதேனும் ஒரு திட அல்லது திரவப் பொருளை உட்கொள்ளுதலுக்குப் பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை இலக்கிய எடுத்துக்காட்டுகளுடன் இங்கு ஆய்வோம். 1. அருந்து இன்றைக்கு அருந்து, குடி, பருகு, மண்டு, மாந்து என்ற இந்த ஐந்து சொற்களுமே நீர்மப் (திரவப்) பொருளை உட்கொள்ளுதலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் அருந்து என்பது சில நேரங்களில் திடப்பொருளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கும் எழுத்து நடையில் ‘உணவருந்திச் செல்லுங்கள்’ என்று எழுதப்படுவதைக் காண்கிறோம். நாம் ஒரு பொருளை உண்கிறோம். சிறிது நேரங்கழித்து முடித்துக்கொள்கிறோம். அதற்குக் கீழ்க்கண்டவற்றுள் எதாவது ஒரு காரணம் இருக்கக்கூடும். 1. நமது வயிறு நிறைந்திருக்கலாம். 2. வயிறு நிறையாமலிருந்தாலும், மனநிறைவு ஏற்பட்டிருக்கலாம் – சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது திகட்டிப்போயிருக்கலாம். 3. நாம் உண்ணும் பொருள்…

Read More

11. பாடல் 87 – மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்

கொடியர் அல்லர் வாசலில் உள்ள திண்ணையில் முல்லையின் தாயும், வளர்ப்புத்தாய் முத்தம்மாவும் அமர்ந்துகொண்டு பாடுபேசிக்கொண்டிருந்தனர். உள் நடையில் அமர்ந்துகொண்டு பூக்கட்டிக்கொண்டிருந்த முல்லை ஆர்வமின்றி அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள். “தெரியுமா சங்கதி, இன்னிக்கி ஒரு களவாணிப்பயல கையுங்களவுமாப் பிடிச்சுப்புட்டாங்களாம்” என்றாள் முத்தம்மா. “அது யாரு? யார் வீட்டுல போயிக் களவாண்டானாம்?” என்று கேட்டாள் பேச்சித்தாய். “யாரோ வெளியூர்க்காரனாம். ஒரு தோட்டத்துல சோளக் கதுர கசக்கிக்கிட்டு இருந்திருக்கான். கையில ஒரு சாக்குவேற வச்சிருந்திருக்கான். காவக்காரன் கண்டு கையப் புடிச்சிருக்கான். இவன் கைய ஒதறிவிட்டுட்டு ஓட்டம்புடிச்சுட்டான். அப்புறம் வெரட்டிப் புடிச்சிருக்காங்க” “அப்புறம் என்ன பண்ணுணாங்களாம்?” “சாவடிக்குக் கொண்டாந்திருக்காங்க. ஊர்ப்பெரியவக கூடி விசாரிச்சுருக்காக. கேட்டா நான் ஒண்ணுமே பண்ணல’ங்கிறானாம்.” “ஒண்ணுமே பண்ணாதவன் அப்புறம் ஏன் காவக்காரனப் பாத்துட்டு ஓடுனானாம்?” “சும்மா அவசரத்துக்கு தோட்டத்துப் பக்கம் ஒதுங்கப்போனேன். காவக்காரன் சத்தம்போட்டதும் ஓடிட்டேன். இவங்கதான் வெரட்டுனாங்க’ங்கிறானாம்”…

Read More

10. பாடல் 85 – யாரினும் இனியன்

யாரினும் இனியன் வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. உள்ளே முல்லையுடன் பேசிக்கொண்டிருந்த பொன்னி திரும்பி வாசல்பக்கம் பார்த்தாள். “யாரா இருக்கும்?” மெதுவாகக் கேட்டுக்கொண்டாள் அவள். “போய்த் தொறந்து பாத்தாத்தான தெரியும். யாராயிருந்தாலும் சரி, ‘அது’ன்னா போயிட்டு அப்புறம் வரச்சொல்லு. இங்க இன்னும் அடுப்புப் பத்தவைக்கவே இல்லை”. ‘அது’ என்று முல்லை குறிப்பிட்டது தன் கணவனை. காதலித்துத் திருமணம் செய்துகொண்டவன்தான். திருமணம் ஆகிப் பல மாதங்களுக்கு முல்லையை நன்றாகவே கவனித்துக்கொண்டும் இருந்தான். முன்னோர் சேர்த்துவைத்துவிட்டுப்போன நிலங்களிலிருந்து அவ்வப்போது வருவாய் வந்துகொண்டிருந்தது. சோற்றுக்குப் பஞ்சம் இல்லை. ஏதோ கிடைத்த வேலையைச் செய்வான். இருப்பினும் குடும்பப் பொறுப்பு வேண்டாமா? முல்லைதான் வரவுசெலவுக் கணக்குகளைப் பார்த்துக்கொள்வாள். வெளிவிவகாரங்களைப் பார்த்துக்கொள்ள பொன்னி உதவுவாள். இதற்கிடையில் முல்லை கருவுற்றாள். அவன் ரொம்பவே விலகிச் செல்ல ஆரம்பித்தான். எந்த நேரத்தில் கணவனின் அன்பும் பாசமும் கவனிப்பும்…

Read More

9. பாடல் 58 – இடிக்கும் கேளிர்

கை இல் ஊமன் ஊருக்கு வெளியிலுள்ள கோயில் மரத்தடியில் வழக்கமாகக் கூடும் இளவட்டங்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களின் தலைவன் மட்டும் இன்னும் வரவில்லை. அவனைத் தவிர எல்லாரும் வந்த பின்னர் பேச்சு அவனைப் பற்றித் தொடங்கியது. “ஏன்டா, அவன இன்னுங் காணோம்” “வருவான்டா, ஆனா அவன ரொம்ப நாளாவே தெருப்பக்கங்கூடப் பாக்கமுடியல. என்னன்னு தெரியல. டே நீ போயி அவன் வீட்ல பாத்துட்டு வர்ரயா?” என்று அவர்களுக்குள் வயதிற் சிறிய ஒருவனை ஏவிவிட்டார்கள். அவனும் தலைவனின் வீட்டுக்குப் போனான். அங்கே அவன் அம்மா இருந்தாள். “வாப்பா, வந்து அவனப் பாரு. எப்படியாவது அவன இழுத்துட்டு வெளிய கூட்டிட்டுப் போப்பா” என்று புலம்பினாள் தலைவனின் அம்மா. பார்த்தவன் திடுக்கிட்டான். முகம் தொங்கிப்போயிருந்தது. ஆடைகள் கசங்கிப்போய் அழுக்கேறி இருந்தன. முடலை யாக்கை என்று அவர்கள் தட்டித் தட்டிப்…

Read More

8. பாடல் 54 – யானே ஈண்டையேனே

மீனெறி தூண்டில் முல்லையின் வீட்டுக்குள் பொன்னி நுழைந்தபோது வீட்டில் வேறு யாருமே இல்லை. முல்லை மட்டும் நடையில் ஒரு தூணில் சாய்ந்தவண்ணம் உட்கார்ந்திருந்தாள். “ஏன்டீ, வீட்ல வேற யாரயுங் காணோம்?” என்று கேட்டாள் பொன்னி. “அப்பா வெளியில போயிருக்காரு. அம்மாவும் முத்தம்மாவும் மூணாவது வீட்ல முனியம்மா பிள்ள பெத்திருக்கா’ல்ல அதப் பாக்கப் போயிருக்காங்க” முல்லையின் அருகில் சென்று அமர்ந்தாள் பொன்னி. “அப்புறம் நீ எப்படி இருக்க?” என்று பொன்னி கேட்டாள். “நான் எங்கடி இங்க இருக்கேன்? என் ஒடம்புதான் இங்க இருக்கு. என் உசுரு, சிந்தன, நன்மை, தீமை எல்லாமே அவருகிட்டப் போயிருச்சுடீ. இது எத்தன நாளக்கிடீ. ஒண்ணு, மொறப்படி பொண்ணுகேட்டு வரணும். இல்லன்’னா வாடீ பாத்துக்கறென்’னு சொல்லணும்.” “ஆனா அண்ணந்தான் பிடிகொடுக்கமாட்டேங்குறாரே” “என்ன பண்ணுறது? நேத்து அப்பா ஏதோ தூரத்துச் சொந்தத்துல ஒரு மாப்பிள்ள இருக்கு’ன்னு…

Read More