திருமந்திரத்தில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

திருமந்திரம் – சொற்கள் – எண்ணிக்கை

எண் தந்திரம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. பாயிரம் 112 448 2144 44 29 2217 1345
1. முதல் 224 896 4342 10 67 4419 2583
2. இரண்டாம் 212 848 4072 24 31 4127 2388
3. மூன்றாம் 335 1340 6366 10 31 6407 3314
4. நான்காம் 535 2140 10203 22 71 10296 4445
5. ஐந்தாம். 154 616 2923 8 34 2965 1803
6. ஆறாம் 131 524 2533 8 23 2564 1611
7. ஏழாம் 418 1672 8061 36 68 8165 4060
8. எட்டாம் 527 2108 9924 8 78 10010 4697
9. ஒன்பதாம் 399 1596 7657 28 49 7734 3229
  மொத்தம் 3047 12188 58225 198 481 58904 17166

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = மயிர்_குறை_கருவி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மயிர், குறை, கருவி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். அணி_இழை, வால்_அறிவன், மதி_நுட்பம், பொருள்_பெண்டிர் போன்றன கூட்டுப்பொருளால் ஒரே சொல் ஆகின்றன. இங்கு, சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும்.
முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, தே மொழி மகளிர் என்ற தொடரில் தே, மொழி ஆகியவை மகளிர் என்ற சொல்லுக்கு அடைமொழிகளாக வருகின்றன. எனவே அவை தனித்தனிச் சொற்களாகக் கொள்ளப்படும். தேமொழி கூறினாள் என்றவிடத்தில் இங்கு தேமொழி என்பது அன்மொழித்தொகை ஆகி ஒரே சொல் ஆகிறது.
எனவே இச் சொல் தே_மொழி எனக்கொள்ளப்படுகிறது. இங்கு தே, மொழி, தே_மொழி ஆகிய மூன்று சொற்களாக இது கணக்கிடப்படும். தே_மொழி என்பது தனிச் சொல்லாகவும், தே, மொழி ஆகியவை பிரிசொற்களாகவும் கணக்கிடப்படும். எனவே தே_மொழி என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், தே, மொழி, தே_மொழி என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது.
கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்வை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்தொறும் என்ற சொல் நாள்-தொறும் எனக் குறிக்கப்படுகிறது. இதில், நாள்-தொறும் என்பது தனிச்சொல்லாகவும், -தொறும் என்பது கட்டுருபனாகவும் கணக்கிடப்பட்டும்.
நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் பாடலின் எண் கொடுக்கப்படும்.
அதற்கடுத்த / என்ற கோட்டை அடுத்து அச் சொல் இடம்பெறும் அடி எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல்,
ஒரு பாடலின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே – திருமந்:209/3,4

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை – திருமந்:209/3
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை – திருமந்:209/3
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே – திருமந்:209/3,4
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே – திருமந்:209/4