தேம்பாவணியில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

தேம்பாவணியில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

படலங்கள் பாடல்கள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்சொற்கள்
36 3615 105010 814 943 106767 19911

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
அஞ்சு_எழுத்து என்ற சொல்லுக்குரிய பிரிசொற்கள் அஞ்சு, எழுத்து ஆகிய இரண்டும். எனவே ஆய்_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் ஆய், ஆய்-இழை, இழை ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

ஆய் (179)
அல்லது இல்லை அரும் தவம் ஆய் திரு – தேம்பா:1 78/1
ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன் – தேம்பா:2 2/1
——————– ———————- ———————- ———————
————— ———————— ——————- ———————–
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/3
அளி செயும் என் கற்பு இனிதாய் அளிப்பதற்கு அன்றோ மணம் ஆய்
களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது அறிகிலன் யான் – தேம்பா:6 21/3,4

ஆய்_இழை (1)
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/3

இழை (8)
இழை இறா அழகு இளம் புள் பாடும்-ஆல் – தேம்பா:1 23/4
இழை தலை அரிதினில் இழைத்த வெண் சுதை – தேம்பா:2 16/2
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/3
இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள் – தேம்பா:9 91/1
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை
பக படு குறி கையில் எழுக தீய் திரள் பயப்படு சமர் களம் இரிய ஓச்சினான் – தேம்பா:15 74/3,4
என் இ சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும் இழை கொடு அகத்து அணி கவசம் நூக்கியும் – தேம்பா:15 78/1
இழை இடை குளித்த தம் இளவல் ஏந்தினர் – தேம்பா:20 8/1
இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும் அங்கிலிய தீவு இறைவர் ஈட்டம் – தேம்பா:32 85/2

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

திசை-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், திசை-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். என்று என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது.

திசை-தொறும் (2)
சீர் புறம் கொடு திசை-தொறும் இருள் அற மின்னி – தேம்பா:1 2/2
நோக்கிய நோக்கம் திசை-தொறும் தீக்க நூக்க_அரும் செருக்கொடு நோக்கி – தேம்பா:14 45/1

-தொறும் (44)
புள் உலாம் விசும்பு-இடை-தொறும் பொரும் படை பொருவ – தேம்பா:1 1/1
சீர் புறம் கொடு திசை-தொறும் இருள் அற மின்னி – தேம்பா:1 2/2
————– ———————- ——————— ——————–
————– ————— ———————– ————————-
நோக்கிய நோக்கம் திசை-தொறும் தீக்க நூக்க_அரும் செருக்கொடு நோக்கி – தேம்பா:14 45/1
மடி முகத்து அழிந்த ஞாலம் வயின்-தொறும் நீத்த வாரி – தேம்பா:14 113/4

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.