தஞ்சைவாணன் கோவை நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 1700 12197 334 147 12678 5173

விளக்கம்

 

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2


1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, புனையிழை என்ற சொல் புனை இழை என்று பிரிக்கப்படும் ஆனால் இது புனைந்த இழையை அணிந்த பெண்ணைக் குறிக்கும்எனவே ப்னையிழை என்பதில் புனை, இழை என்பன தனித்தனிச் சொற்கள். ஆனால் புனையிழை என்பது ஒரே சொல்லாய் ஒரு பெண்ணைக் குறிக்கும். இது புனை_இழை என்று கொள்ளப்படும் இதற்குரிய பிரிசொற்கள்புனை, இழை ஆகிய இரண்டும். எனவே புனை_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் புனை, இழை, புனை_இழை
ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

இழை (9)
இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய் – தஞ்-வா-கோவை:1 8 50/2
முலை கால்கொள கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண் – தஞ்-வா-கோவை:1 8 53/3
நீ வேறு உரைக்கின்றது என் குற மாது எங்கள் நேர் இழை ஓர் – தஞ்-வா-கோவை:1 10 82/1
உம் நாட்டு அரிவையர் ஆடிடம் சாந்தம் ஒளி இழை பூ – தஞ்-வா-கோவை:1 13 167/3
மின் ஊர் புனை இழை மின்_அனையாள் உய்ய வேலின் வெம் போர் – தஞ்-வா-கோவை:1 13 188/2
இழை விளையாடும் இள முலை சாயற்கு இடைந்த மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 16 238/1
இழை போல் இடையாள் முலைவிலைக்கு ஆவன யாவையும் கொண்டு – தஞ்-வா-கோவை:1 18 260/3
அண்ணலை ஆய்_இழை_பாகன் என்று அஞ்சினம் அஞ்சனம் தோய் – தஞ்-வா-கோவை:2 20 302/2
போது அலர்ந்து அல்லை முனியும் மெல் ஓதி புனை_இழை தன் – தஞ்-வா-கோவை:2 23 352/1

புனை (18)
புயலாம் எனிம் புயல் போது கொள்ளாது இ புனை இழையார் – தஞ்-வா-கோவை:1 6 31/3
புனை ஆழி அங்கை புயல் வளர் பாற்கடல் பூங்கொடி வாழ் – தஞ்-வா-கோவை:1 8 39/1
உலம் புனை தோளும் நின் உள்ளமும் வாடி உருகிநின்று – தஞ்-வா-கோவை:1 8 40/3
வார் ஏய் கழல் புனை வாணன் தென்மாறை வரை உறைவீர் – தஞ்-வா-கோவை:1 9 75/2
பூந்தழை யாது மலை மலர் யாது புனை இழையும் – தஞ்-வா-கோவை:1 13 166/1
வகை ஆர் தொடை புனை வாணன் தென்மாறையின் மௌவல் அன்ன – தஞ்-வா-கோவை:1 13 184/3
மின் ஊர் புனை இழை மின்_அனையாள் உய்ய வேலின் வெம் போர் – தஞ்-வா-கோவை:1 13 188/2
வாச தமிழ் புனை தோள்_உடையான் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 14 191/3
வம்பு ஆர் கழல் புனை வாணன் தென்மாறை வளரும் வஞ்சி – தஞ்-வா-கோவை:1 15 212/3
புரவி புனை நெடும் தேர் அண்ணலே நின் பொருட்டு அணங்கை – தஞ்-வா-கோவை:2 19 286/3
நலம் புனை ஆயமும் நீயும் நற்றாயொடு நானும் நல் பொன் – தஞ்-வா-கோவை:2 22 323/1
ஒரு மகளே என்று உனை அயிர்த்தேன் புனை ஓவியம் போல் – தஞ்-வா-கோவை:2 22 343/2
புனை அலர் ஏதிலர் காதலர் தாயர் பொறாமையில் போய் – தஞ்-வா-கோவை:2 23 351/1
போது அலர்ந்து அல்லை முனியும் மெல் ஓதி புனை_இழை தன் – தஞ்-வா-கோவை:2 23 352/1
தாம் கனம் ஆற தலம் புனை வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 27 369/3
புனை அலங்காரம் நம் கற்பியல் போற்றியும் போற்று அரும் சீர் – தஞ்-வா-கோவை:3 28 381/1
திருவின் புனை நறும் தார் வரை மார்பர் திருமுன் நின்றே – தஞ்-வா-கோவை:3 28 386/4
மஞ்சை புனை மதில் மாறை வரோதயன் வாணர் பிரான் – தஞ்-வா-கோவை:3 33 420/1

புனை_இழை (1)
போது அலர்ந்து அல்லை முனியும் மெல் ஓதி புனை_இழை தன் – தஞ்-வா-கோவை:2 23 352/1

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-தொறும் (12)
தேரும்-தொறும் இனிதாம் தமிழ் போன்று இவள் செங்கனி வாய் – தஞ்-வா-கோவை:1 8 59/3
ஆரும்-தொறும் இனிதாய் அமிழ்தாம் எனது ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 8 59/4
தரை ஊர்-தொறும் பெண்ணை மா மடல் ஊர்வர் தவிர்ந்து இன்னும் – தஞ்-வா-கோவை:1 10 102/3
கையும் தழையும் முன் காண்-தொறும் காண்-தொறும் கட்டுரைத்த – தஞ்-வா-கோவை:1 10 124/1
கையும் தழையும் முன் காண்-தொறும் காண்-தொறும் கட்டுரைத்த – தஞ்-வா-கோவை:1 10 124/1
ஆராத இன்ப இடம்-தொறும் நீங்கிய ஆயம் என்-பால் – தஞ்-வா-கோவை:1 11 144/1
புயலேறு எதிர்-தொறும் பொங்கு உளை மீதெழ போதகம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 169/1
கோள்மா குமிறும் கொடும் குரல் கேள்-தொறும் கூர் கணையால் – தஞ்-வா-கோவை:2 22 338/2
எனவே நடக்கின்றதால் அன்னை நாள்-தொறும் இல்லறமே – தஞ்-வா-கோவை:3 27 373/4
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3
திண் போதகம்-தொறும் தீட்டிய வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 398/3

நாள்-தொறும் (3)
எனவே நடக்கின்றதால் அன்னை நாள்-தொறும் இல்லறமே – தஞ்-வா-கோவை:3 27 373/4
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

நாள்-தொறும் (3)
எனவே நடக்கின்றதால் அன்னை நாள்-தொறும் இல்லறமே – தஞ்-வா-கோவை:3 27 373/4
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3