தமிழ்விடு தூது நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 536 2990 44 29 3063 2110

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2


1. பிரிசொற்கள்


பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, சொல்லேருழவர் என்ற புலவரைக் குறிக்கும். ஆனால் இது சொல், ஏர், உழவர் ஆகிய மூன்று சொற்களைக் கொண்டது. எனவே சொல்லேருழவர் என்பதில் சொல், ஏர், உழவர் என்பன தனித்தனிச் சொற்கள். ஆனால் சொல்லேருழவர் என்பது ஒரே சொல்லாய் புலவரைக் குறிக்கும். இது சொல்_ஏர்_உழவர் என்று கொள்ளப்படும் இதற்குரிய பிரிசொற்கள் சொல், ஏர், உழவர் ஆகிய மூன்றும். எனவே சொல்லேருழவர் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் சொல், ஏர், உழவர் சொல்_ஏர்_உழவர் ஆகிய நான்கு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

உழவர் (2)
தோயாத செந்தமிழே சொல்_ஏர்_உழவர் அகம் – தமிழ்-தூது:1 18/1
சொல்_ஏர்_உழவர் தொகுத்து ஈண்டி நல்ல நெறி – தமிழ்-தூது:1 64/2

ஏர் (4)
ஏர் கொண்ட சங்கத்து இருந்தோரும் போர் கொண்டு – தமிழ்-தூது:1 1/2
தோயாத செந்தமிழே சொல்_ஏர்_உழவர் அகம் – தமிழ்-தூது:1 18/1
சொல்_ஏர்_உழவர் தொகுத்து ஈண்டி நல்ல நெறி – தமிழ்-தூது:1 64/2
வெண்பா என்று ஓதுவது மெய்தானோ பண்பு ஏர் – தமிழ்-தூது:1 80/2

சொல் (16)
தொல்காப்பியம் மொழிந்த தொல் முனியும் மல்கா சொல் – தமிழ்-தூது:1 9/2
பொய் அடிமை இல்லா புலவர் என்று நாவலர் சொல்
மெய் அடிமை சங்கத்து மேலோரும் ஐயடிகள் – தமிழ்-தூது:1 13/1,2
காடவரும் செம் சொல் கழறிற்றறிவாரும் – தமிழ்-தூது:1 14/1
எல்லாரும் நீயாய் இருந்தமையால் சொல் ஆரும் – தமிழ்-தூது:1 15/2
தோயாத செந்தமிழே சொல்_ஏர்_உழவர் அகம் – தமிழ்-தூது:1 18/1
தீயாது சொல் விளையும் செய்யுளே வீயாது – தமிழ்-தூது:1 18/2
செய்யுள் சொல் நான்கும் உயர் செந்தமிழ் சொல் ஓர் நான்கும் – தமிழ்-தூது:1 28/1
செய்யுள் சொல் நான்கும் உயர் செந்தமிழ் சொல் ஓர் நான்கும் – தமிழ்-தூது:1 28/1
சொல் அரசே உன்னுடைய தோழரோ தொல் உலகில் – தமிழ்-தூது:1 43/2
ஆங்கு அவை சொல் வாதவூராளி சொல்லும் ஓங்கும் அவன் – தமிழ்-தூது:1 50/2
அன்புறு பொன்வண்ணத்தந்தாதியும் முன்பு அவர் சொல் – தமிழ்-தூது:1 54/2
சொல்_ஏர்_உழவர் தொகுத்து ஈண்டி நல்ல நெறி – தமிழ்-தூது:1 64/2
சொல் தமிழ் பாடுக என சொன்னமையால் சொற்படியே – தமிழ்-தூது:3 149/2
செய்தான் என்று என் சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு – தமிழ்-தூது:3 168/1
எள்ளிடுவார் சொல் பொருள் கேட்டு இன்புறார் நாய் போல – தமிழ்-தூது:4 185/1
காதில் புகன்ற கனி வாயும் தீது_இல் சொல் – தமிழ்-தூது:6 226/2

சொல்_ஏர்_உழவர் (2)
தோயாத செந்தமிழே சொல்_ஏர்_உழவர் அகம் – தமிழ்-தூது:1 18/1
சொல்_ஏர்_உழவர் தொகுத்து ஈண்டி நல்ல நெறி – தமிழ்-தூது:1 64/2

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும். அன்னத்தை என்பது அன்னம்தனை என்று குறிப்பிடும்போது,இங்கு தனை என்பது கட்டுருபன். எனவெ இது அன்னம்-தனைஎன்று கொள்ளப்படும்.

எ.காட்டு

அன்னம்-தனை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், அன்னம்-தனை, -தனை என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

அன்னம்-தனை (1)
அன்னம்-தனை விடுப்பேன் அன்னம்தான் அங்கு அவரை – தமிழ்-தூது:2 107/1

-தனை (4)
அன்னம்-தனை விடுப்பேன் அன்னம்தான் அங்கு அவரை – தமிழ்-தூது:2 107/1
தாழ்ந்து நீள் சத்தம்-தனை கற்றார் உள்ளம் போல் – தமிழ்-தூது:5 200/1
மானம்-தனை வகுத்த வானவனும் தேன் அங்கு – தமிழ்-தூது:5 211/2
மங்கை-தனை கோட்டிகொளல் வல்லமையோ கங்கை எலாம் – தமிழ்-தூது:8 256/2

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

அடிக்கு (3)
பொன் அடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ என் அரசே – தமிழ்-தூது:1 79/2
நேர் அடிக்கு வேறே நிலன் உண்டோ ஓர் அடிக்கு ஓர் – தமிழ்-தூது:1 99/2
நேர் அடிக்கு வேறே நிலன் உண்டோ ஓர் அடிக்கு ஓர் – தமிழ்-தூது:1 99/2