சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களின் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களின் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

காண்டம் அடிகள் சொற்கள் பிரி
சொற்கள்
கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
புகார் 1657 8621 395 96 9112 4156
மதுரை 2077 10531 407 185 11123 4803
வஞ்சி 1501 7590 332 142 8064 3463
மொத்தம்

5235

26742

1134

423

28299

8930

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = மயிர்_குறை_கருவி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மயிர், குறை, கருவி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், ஆ_கோள் போன்றன.
சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே
கணக்கிடப்படும். காட்டாக, சே_இழை என்ற அன்மொழித்தொகைச் சொல்லுக்குரிய பிரிசொற்கள் சே, இழை ஆகிய இரண்டுமே.
எனவே சே_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், இழை, சே, சே_இழை என்ற மூன்று சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

இழை (17)
———— ———————– ———————— ——————
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் – புகார் 9/73
————————– —————- ——————–
சிலம்பின் வென்ற சே இழை நங்கை – மது 22/135
அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை-தன் – மது 23/15
நேர் இழை நல்லாய் நகை ஆம் மலை_நாடன் – வஞ்சி 24/71
சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – வஞ்சி 25/72
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – வஞ்சி 27/73
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – வஞ்சி 29/104
—————————– —————————–
என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை – வஞ்சி 30/104

சே (11)
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – புகார் 9/73
செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – மது 12/79
சிலம்பின் வென்ற சே இழை நங்கை – மது 22/135
சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – வஞ்சி 25/72
செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும் – வஞ்சி 25/108
திரு மலர் தாமரை சே அடி பணியும் – வஞ்சி 26/29
—————————— —————- ———————–
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – வஞ்சி 27/73
சே_இழையை காண்டும் என்று – வஞ்சி 29/56
செம்மொழி மாதவர் சே இழை நங்கை – வஞ்சி 30/32

சே_இழை (3)
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – புகார் 9/73
சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – வஞ்சி 25/72
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – வஞ்சி 27/73

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. கொல், மன், மின், கண்(ஏழன் உருபு)
போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள்
இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

எறி-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், எறி-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எறி-தொறும் (1)
எறி-தொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான் – மது 16/197

-தொறும் (5)
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – புகார் 6/81
செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப – புகார் 7/164
மாட மறுகின் மனை-தொறும் மறுகி – மது 15/61
எறி-தொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான் – மது 16/197
வேள்வியும் விழாவும் நாள்-தொறும் வகுத்து – வஞ்சி 28/232

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் அதிகாரம் (புகார். மது (மதுரை), வஞ்சி) கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் காதையின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தக் காதையில்
அச் சொல் இடம்பெறும் அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள்
அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

இழைப்ப (6)
மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப/அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – மது 18/36,37

இழைப்ப என்ற சொல் அடி இறுதியில் வந்துள்ளதால், அடுத்த அடியும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே – மது 20/38

இங்கு வாயிலோயே என்ற சொல் அடி இறுதிக்கண் வந்தும், அத்துடன் பொருள் முடிந்துவிட்டதால்
அடுத்த அடி கொடுக்கப்படவில்லை.
சில இடங்களில் ஓர் அடியில் உள்ள ஒரு சொல்லின் தொடர்ச்சி அதன் முந்தைய அடியில் இருப்பின்
முந்தைய அடியும் கொடுக்கப்படும்.

அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து/இறை முறை பிழைத்தோன் வாயிலோயே – மது 20/37,38

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

வாயிலோயே (3)
வாயிலோயே வாயிலோயே – மது 20/36
வாயிலோயே வாயிலோயே – மது 20/36,37
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து/இறை முறை பிழைத்தோன் வாயிலோயே – மது 20/37,38