பெரியபுராணத்தில் உள்ள சொற்கள் எண்ணிக்கை

பெரியபுராணம் சொற்கள் – எண்ணிக்கை

எண் சருக்கம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
0. பாயிரம் 10 40 210 10 4 224 196
1. திருமலைச் சருக்கம் 339 1356 8930 277 123 9330 4270
2. தில்லைவாழ் அந்தணர் சருக்கம 201 804 5380 115 84 5579 2801
3. இலை மலிந்த சருக்கம் 422 1688 11838 287 181 12306 5205
4. மும்மையால் உலகாண்ட சருக்கம் 298 1192 8803 205 109 9117 4290
5. திருநின்ற சருக்கம் 633 2532 17430 417 28 18136 6562
6. வம்பறா வரிவண்டு சருக்கம் 1737 6948 49048 1086 874 51008 12104
7. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் 303 1212 8673 163 168 9004 3855
8. பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம் 116 464 3037 57 47 3141 1833
9. கறைக்கண்டன் சருக்கம் 41 164 1087 16 22 1125 800
10. கடல் சூழ்ந்த சருக்கம் 51 204 1418 20 27 1465 1012
11. பத்தராய்ப் பணிவார் சருக்கம 24 96 718 10 12 740 595
12. மன்னிய நீர்ச் சருக்கம் 58 232 1640 41 39 1720 1149
13. வெள்ளானைச் சருக்கம் 53 212 1637 46 38 1721 1134
மொத்தம் 4286 17144 119849 2750 2017 124616 22827

0. பாயிரம்

எண் அதிகாரம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. பாயிரம் 10 40 210 10 4 224 196
மொத்தம் 10 40 210 10 4 224 196

1. திருமலைச் சருக்கம்

எண் அதிகாரம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. திருமலைச் சிறப்பு 40 160 836 43 11 890 658
2. திருநாட்டுச் சிறப்பு 35 140 886 20 15 921 678
3. திருநகர்ச் சிறப்பு 50 200 1284 32 18 1334 916
4. திருக்கூட்டச் சிறப்பு 11 44 196 15 1 212 199
5. தடுத்தாட்கொண்ட புராணம் 203 812 5728 167 78 5973 3013
மொத்தம் 339 1356 8930 277 123 9330 4270

2. தில்லைவாழ் அந்தணர் சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. தில்லைவாழ் அந்தணர் புராணம் 10 40 267 10 2 279 240
2. திருநீலகண்ட நாயனார் புராணம் 44 176 1139 24 29 1192 814
3. இயற்பகை நாயனார் புராணம் 36 144 1073 28 25 1126 820
4. இளையான்குடிமாற நாயனார் புராணம் 27 108 670 14 7 691 549
5. மெய்ப்பொருள் நாயனார் புராணம் 24 96 645 15 9 669 527
6. விறன்மிண்ட நாயனார் புராணம் 11 44 340 0 5 345 288
7. அமர்நீதி நாயனார் புராணம் 49 196 1246 24 7 1277 826
மொத்தம் 201 804 5380 115 84 5579 2801

3. இலைமலிந்த சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. எறிபத்த நாயனார் புராணம் 57 228 1548 33 26 1607 1095
2. ஏனாதிநாத நாயனார் புராணம் 42 168 1099 12 13 1124 791
3. கண்ணப்ப நாயனார் புராணம் 186 744 5447 112 97 5656 2887
4. குங்கிலியக் கலய நாயனார் புராணம் 35 140 955 36 18 1009 734
5. மானக்கஞ்சாறத் தொண்ட நாயனார் புராணம் 37 148 1047 40 13 1100 781
6. அரிவாள்தாய நாயனார் புராணம் 23 92 554 18 5 577 451
7. ஆனாய நாயனார் புராணம் 42 168 1188 36 9 1233 866
மொத்தம் 422 1688 11838 287 181 12306 5205

4. மும்மையால் உலகாண்ட சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. மூர்த்தி நாயனார் புராணம் 49 196 1241 12 15 1268 923
2. முருக நாயனார் புராணம் 14 56 420 11 6 437 364
3. உருத்திர பசுபதி நாயனார் புராணம் 10 40 234 15 4 253 224
4. திருநாளைப்போவார் நாயனார் புராணம் 37 148 1041 22 8 1071 785
5. திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் 128 512 4062 119 47 4228 2367
6. சண்டேசுர நாயனார் புராணம் 60 240 1805 26 29 1860 1315
மொத்தம் 298 1192 8803 205 109 9117 4290

5. திருநின்ற சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் 429 1716 12032 278 178 12488 5025
2. குலச்சிறை நாயனார் புராணம் 11 44 199 12 2 213 193
3. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் 11 44 307 11 5 323 295
4. காரைக்காலம்மையார் புராணம் 66 264 1818 58 47 1923 1229
5. அப்பூதி அடிகள் புராணம் 45 180 1219 30 24 1273 886
6. திருநீலநக்க நாயனார் புராணம் 38 152 891 20 14 925 703
7. நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் 33 132 964 8 19 991 716
மொத்தம் 633 2532 17430 417 289 18136 6562

6. வம்பறா வரிவண்டு சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. திருஞானசம்பந்த நாயனார் புராணம் 1256 5024 35455 846 623 36924 9790
2. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 409 1636 11569 214 216 11999 4462
3. திருமூல நாயனார் புராணம் 28 112 759 6 13 778 598
4. தண்டியடிகள் நாயனார் புராணம் 26 104 774 14 14 802 592
5. மூர்க்க நாயனார் புராணம் 12 48 346 4 8 358 293
6. சோமாசிமாற நாயனார் புராணம் 6 24 145 2 0 147 139
மொத்தம் 1737 6948 49048 1086 874 51008 12104

7. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. சாக்கிய நாயனார் புராணம் 18 72 474 10 13 497 401
2. சிறப்புலி நாயனார் புராணம் 6 24 167 4 5 176 154
3. சிறுத்தொண்ட நாயனார் புராணம் 88 352 2525 54 57 2636 1576
4. கழறிற்று அறிவார் நாயனார் புராணம் 175 700 5010 85 82 5177 2456
5. கணநாத நாயனார் புராணம் 7 28 219 8 3 230 198
6. கூற்றுவ நாயனார் புராணம் 9 36 278 2 8 288 254
மொத்தம் 303 1212 8673 163 168 9004 3855

8. பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. பொய்யடிமை இல்லாத புலவர் புராணம் 3 12 82 0 3 85 78
2. புகழ்ச்சோழ நாயனார் புராணம் 41 164 1041 31 7 1079 773
3. நரசிங்க முனையரைய நாயனார் புராணம் 9 36 243 0 5 248 221
4. அதிபத்த நாயனார் புராணம் 20 80 529 4 9 542 421
5. கலிக்கம்ப நாயனார் புராணம் 10 40 295 4 10 309 253
6. கலிய நாயனார் புராணம் 17 68 470 14 10 494 395
5. சத்தி நாயனார் புராணம் 7 28 135 0 1 136 127
6. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் 9 36 242 4 2 248 217
மொத்தம் 116 464 3037 57 47 3141 1833

9. கறைக்கண்டன் சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. கணம்புல்ல நாயனார் புராணம் 9 36 247 6 3 256 205
2. காரி நாயனார் புராணம் 5 20 131 2 5 138 128
3. நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம் 10 40 278 6 5 289 251
4. வாயிலார் நாயனார் புராணம் 10 40 217 0 7 224 190
5. முனையடுவார் நாயனார் புராணம் 7 28 214 2 2 218 200
மொத்தம் 41 164 1087 16 22 1125 800

10. கடல்சூழ்ந்த சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. கழற்சிங்க நாயனார் புராணம் 13 52 362 8 7 377 313
2. கிடங்கழி நாயனார் புராணம் 11 44 300 4 3 307 260
3. செருத்துணை நாயனார் புராணம் 7 28 215 0 3 218 186
4. புகழ்த்துணை நாயனார் புராணம் 7 28 191 6 3 200 181
5. கோட்புலி நாயனார் புராணம் 13 52 350 2 11 363 305
மொத்தம் 51 204 1418 20 27 1465 1012

11. பத்தராய்ப் பணிவார் சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. பத்தராய்ப் பணிவார் புராணம் 8 32 190 6 2 198 176
2. பரமனைப் பாடுவார் புராணம் 2 8 45 0 1 46 44
3. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் 1 4 25 0 1 26 25
4. திருவாரூர்ப் பிறந்தார் புராணம் 2 8 47 0 1 48 45
5. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் 3 12 81 2 1 84 81
6. முழுநீறு பூசிய முனிவர் புராணம் 6 24 246 2 5 253 223
7. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் 2 8 84 0 1 85 83
மொத்தம் 24 96 718 10 12 740 595

12. மன்னிய நீர்ச் சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. பூசலார் நாயனார் புராணம் 18 72 490 12 11 513 395
2. மங்கையர்க்கரசியார் புராணம் 3 12 125 6 0 131 119
3. நேசநாயனார் புராணம் 5 20 136 6 2 144 128
4. கோச்செங்கண் சோழ நாயனார் புராணம் 18 72 521 8 19 548 438
5. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் 12 48 315 7 4 326 267
6. சடைய நாயனார் புராணம் 1 4 27 2 1 30 29
7. இசைஞானியார் புராணம் 1 4 26 0 2 28 28
மொத்தம் 58 232 1640 41 39 1720 1149

13. வெள்ளானைச் சருக்கம்

எண் புராணம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. வெள்ளானைச் சருக்கம் 53 212 1637 46 38 1721 1134
மொத்தம் 53 212 1637 46 38 1721 1134

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மாது_ஓர்_பாகன்)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = மாது_ஓர்_பாகன் (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மாது, ஓர், பாகன் (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, குல_கொடி, துன்_அரும், ஆ_கோள் போன்றன.
சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே
கணக்கிடப்படும். காட்டாக, சே_இழை என்ற அன்மொழித்தொகைச் சொல்லுக்குரிய பிரிசொற்கள் சே, இழை ஆகிய இரண்டுமே.
எனவே சே_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், இழை, சே, சே_இழை என்ற மூன்று சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

இழை (12)
ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற – 1.திருமலை:5 185/3
இழை அணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன – 2.தில்லை:2 23/1
நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால் – 4.மும்மை:5 5/2
சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் – 6.வம்பறா:1 52/1,2
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி – 6.வம்பறா:1 321/1
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது – 6.வம்பறா:1 1100/1
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
இழை என மாசுணம் அணிந்த இறையானை பாடினார் – 6.வம்பறா:2 280/3
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4
நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து – 13.வெள்ளானை:1 42/3

சே (18)
சென்றவர் முனியை காணார் சே_இழை-தன்னை கண்டார் – 2.தில்லை:3 31/1
சே உயர் கொடியார்-தம்மை சென்று முன் வணங்கி பாடி – 5.திருநின்ற:1 172/2
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/3
சே உகைத்தவர் ஆட்கொண்ட திருநாவுக்கரசர் செய்ய – 5.திருநின்ற:5 36/3
சே ஆண்ட கொடியவர்-தம் சிரபுரத்து சிறுவருக்கு – 6.வம்பறா:1 54/3
சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீத – 6.வம்பறா:1 521/2
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
திரு மடம் சார சென்று சே அரி கண்ணினார் முன் – 6.வம்பறா:1 726/1
சே உயர் கொடியினார்-தம் திரு உள்ளம் அறிவேன் என்று – 6.வம்பறா:1 736/3
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் – 6.வம்பறா:2 92/4
சே ஆரும் கொடியாரை திரு மூலட்டானத்துள் – 6.வம்பறா:2 125/2
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார் – 6.வம்பறா:2 139/3
சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் – 6.வம்பறா:2 255/1
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4
சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து – 6.வம்பறா:2 374/2
வென்று உயர் சே மேல் வீதிவிடங்கப்பெருமாள் தம் – 6.வம்பறா:2 374/3
சே வீற்றிருந்தார் திருவஞ்சை களமும் நிலவி சேரர் குல – 7.வார்கொண்ட:4 1/3
சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே – 11.பத்தராய்:7 1/4

சே_இழை (1)
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. கொல், மன், மின், கண்(ஏழன் உருபு)
போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள்
இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

என்-கொலோ என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், என்-கொலோ, -கொலோ என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

என்-கொலோ (4)
நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி – 1.திருமலை:5 66/2
இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற – 2.தில்லை:5 12/2
இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4

-கொலோ (6)
நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி – 1.திருமலை:5 66/2
இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற – 2.தில்லை:5 12/2
இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4
மீளி வெம் மறவர் செய்தார் உளர்-கொலோ விலங்கின் சாதி – 3.இலை:3 172/2
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த – 4.மும்மை:5 66/3
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் சருக்கத்தின் எண்ணும் ( 1 – 13) அச் சருக்கத்தின் சுருக்கப்பெயரும் (1.திருமலை, 4.மும்மை, 6.வம்பறா, ) கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் புராணத்தின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் புராணத்தில்
அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்ணும், அப் பாடலில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள்
அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

அகன்ற (6)
அ நிலையில் மிக புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன் – 5.திருநின்ற:1 33/1,2

அகன்ற என்ற சொல் அடி இறுதியில் வந்துள்ளதால், அடுத்த அடியும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு
அணி (238)
——————- ——————- ————————
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
——————- ——————- ————————