பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்.

எண் பாடல் அடிகள் சொற்கள் தனிச்சொற்கள்
1. நாலடியார் 1600 7884 4035
2. நான்மணிக்கடிகை 430 2064 1297
3. இன்னா நாற்பது 164 833 486
4. இனியவை நாற்பது 165 832 517
5. கார் நாற்பது 164 863 596
6. களவழி நாற்பது 190 1036 559
7. ஐந்திணை ஐம்பது 272 1399 969
8. ஐந்திணை எழுபது 204 1087 793
9. திணைமொழி 50 616 3460 1912
10. திணைமாலை 150 200 1059 728
11. திருக்குறள் 2660 11661 4728
12. திரிகடுகம் 428 2061 1316
13. ஆசாரக்கோவை 360 1668 1105
14. பழமொழி 1616 7713 4103
15. சிறுபஞ்சமூலம் 412 2139 1429
16. முதுமொழிக்காஞ்சி 110 498 275
17. ஏலாதி 328 1682 1111
18. கைந்நிலை 224 1110 759
மொத்தம்

 

10143

 

49049

 

14663

1. சொற்கள் :- words between spaces

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது.
அகற்சிக்கண்ணும், உற்றனகொல், முடியும்மன், பொலிமின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இவை.
இவை ஒட்டிய சொற்கள் முழுச்சொற்களாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், இந்த ஒட்டுச்சொற்களுக்குரிய தனித்த தொடரடைவுகள் பெறப்பட்டுள்ளன.

எ.காட்டு
நாள்தொறும் என்ற சொல்லில் தொறும் என்பது ஒரு கட்டுருபனாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

-தொறும் (5)
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும் – குறள் 56:3
நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு – குறள் 79:3
களிதொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
வெளிப்படும்தோறும் இனிது – குறள் 115:5

இவ்வகைச் சொற்களின் பயன்பாடு சொல்லாய்வுகளுக்குப் பயன்படலாம் என்பதால்,
வேறொரு தனி கணிநிரல் மூலமாக இவற்றுக்கான தொடரடைவுகள் பெறப்பட்டுள்ளன.

3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள்
கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி
முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் பாடல் பெயர் கொடுக்கப்படும். அதனை
அடுத்து பத்துப்பாட்டு நூலாயின் அச் சொல் இடம்பெறும் அடி எண் கொடுக்கப்படும். எட்டுத்தொகை நூலாயின்
பாடல் எண், அதனை அடுத்து அடியின் எண் கொடுக்கப்படும்.

<b<>4. வழக்காறு-2<=”” b=””>
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள்
அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.</b<>

எ.காட்டு
கடலுள் (8)
ஒள் அரிதாரம் பிறக்கும் பெரும் கடலுள்
பல் விலைய முத்தம் பிறக்கும் அறிவார் யார் – நான்மணி 4/2,3
கால் ஆசோடு அற்ற கழல் கால் இரும் கடலுள்
நீல சுறா பிறழ்வ போன்ற புனல் நாடன் – கள40 9/2,3
நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும் – கள40 18/1
இரும் கடல் மூழ்குவார் தங்கை இரும் கடலுள்
முத்து அன்ன வெண் முறுவல் கண்டு உருகி நைவார்க்கே – திணை150:2 33/2,3
பாய முழங்கி படு கடலுள் நீர் முகந்து – திணை50:3 27/2
ஆசை கடலுள் ஆழ்வார் – திரி 81/4
கடலுள் துலாம் பண்ணினார் – பழ 255/4
நாவாய் வழங்கு நளி திரை தண் கடலுள்
ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறா குப்பை – கைந்:5 49/1,2

சில இடங்களில் ஓர் அடியில் உள்ள ஒரு சொல்லின் தொடர்ச்சி அதன் முந்தைய அடியில் இருப்பின்
முந்தைய அடியும் கொடுக்கப்படும்.

5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

பொருள் (190)
——————————————————————-
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் – குறள்:36 1/1
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் – குறள்:36 1/1
எ பொருள் எ தன்மைத்துஆயினும் அ பொருள் – குறள்:36 5/1
எ பொருள் எ தன்மைத்துஆயினும் அ பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு – குறள்:36 5/1,2
மெய் பொருள் காண்பது அறிவு – குறள்:36 5/2