பாயிரம்


@1 பாயிரம்
**சிறப்புப் பாயிரம்
**எழுத்து அதிகாரம்

#1
எண்ணும் பெயரும் முறையும் இயன்றதன் பின்
நண்ணிவரு மாத்திரையும் நல் பிறப்பும் கண்ணா
வடிவும் புணர்ச்சியும் ஆய ஓர் ஏழும்
கடி அமரும் கூந்தலாய் காண்.
**சொல் அதிகாரம்

#2
தொல்காப்பியக் கடலில் சொல் தீபச் சுற்று அளக்கப்
பல்கால் கொண்டு ஓடும் படகு என்ப பல் கோட்டுக்
கோ மிகாமல் புலனை வெல்லும் குணவீர
நேமிநாதத்தின் நெறி.
** கடவுள் வாழ்த்து

#3
பூவின் மேல் வந்து அருளும் புங்கவன்-தன் பொன்_பாதம்
நாவினால் நாளும் நவின்று ஏத்தி மேவும் முடிபு
எல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தைச்
சொல்லால் உரைப்பன் தொகுத்து
** அவையடக்கம்

#4
உண்ண முடியாத ஓத நீர் வான் வாய்ப்பட்டு
எண்ண அமுது ஆனது இல்லையோ மண்ணின் மேல்
நல்லாரைச் சேர்தலால் நான் சொன்ன புன்சொல்லும்
எல்லோரும் கைக்கொள்வர் ஈங்கு
*