நீதி நூல்கள் தொகுப்பு – சொற்கள் – எண்ணிக்கை

நூல் ஆசிரியர் பாக்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள்
1. ஆத்திசூடி ஔவையார் 1+109 111 265 2 1 268
2. கொன்றை வேந்தன் ஔவையார் 1+91 93 384 4 2 390
3. மூதுரை-வாக்குண்டாம் ஔவையார் 1+30 124 558 0 2 560
4. நல்வழி ஔவையார் 1+40 164 764 2 3 769
5. வெற்றிவேற்கை அதிவீரராமபாண்டியர் 3+82 138 616 0 3 619
6. உலகநீதி உலகநாதர் 1+13 106 468 0 9 477
7. நீதிநெறி விளக்கம் ஸ்ரீகுமரகுருபரர் 1+101 408 1921 16 12 1949
8. அறநெறிச்சாரம் முனைப்பாடியார் 226 906 4226 32 50 4308
9. நீதிநூல் முனிசீப் வேதநாயகம் பிள்ளை 2+600 2415 16196 204 239 16639
10. நன்னெறி சிவப்பிரகாசர் 1+40 162 818 26 11 855
11. நீதிசூடாமணி-இரங்கேச வெண்பா பிறசைச் சாந்தக்கவிராயர் 3+133 544 2539 38 29 2606
12. முதுமொழி வெண்பா சோமேசர் 1+133 536 2602 40 34 2676
13. விவேகசிதாமணி 1+135 544 3618 18 66 3702
14. ஆத்திசூடி வெண்பா இளம்பாரதியார் 1+108 436 2200 8 18 2226
15. நீதிவெண்பா 1+100 404 2037 20 32 2089
16. நன்மதி வெண்பா சீனிவாசய்யங்கார் 109 436 2291 26 25 2342
17. அருங்கலச்செப்பு 1+181 364 1422 50 11 1483
18. முதுமொழிமேல்வைப்பு வெள்ளையம்பலவாணர் 2+196 792 3832 72 54 3958
19. புதிய ஆத்திசூடி மகாகவி பாரதியார் 1+110 120 298 0 0 298
20. இளையார் ஆத்திசூடி பாவேந்தர் பாரதிதாசன் 1+88 90 224 0 1 225
21. திருகுறட் குமரேச வெண்பா ஜெகவீரபாண்டியனார் 2+1330 5328 25880 170 279 26329
மொத்தம் 26+ 14221 73159 728 881 74768

மொத்தம் தனிச்சொற்கள் – 23755

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மாது_ஓர்_பாகன்)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = மாது_ஓர்_பாகன் (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மாது, ஓர், பாகன் (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

விளக்கம்

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். வயங்கு_இழை, ஆய்_இழை, கண்_நுதல், கார்_வண்ணன் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, ஆயிழை என்பது ஆய் இழை என்று பிரிக்கப்பட்டு ஆராய்ந்த அணிகலன் என்பதைக் குறிக்கும்.
ஆனால் இது அன்மொழித்தொகையாக ஆராய்ந்த இழைகளை அணிந்த பெண்ணைக் குறிக்கும். இதனை ஆயிழை என்று கொண்டால் இதிலுள்ள ஆய், இழை என்ற சொற்கள் கணக்கில் கொள்ளப்படா. எனவே இது ஆய்_இழை என்று கொள்ளப்படும். இப்போது இது ஆய்_இழை, ஆய், இழை என்று மூன்றனிலும் கணக்கிடப்படும்.
இந்தச் சொல்லுக்குரிய பிரிசொற்கள் ஆய், இழை ஆகிய இரண்டுமே.

எனவே ஆய்_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், ஆய், இழை ஆய்_இழை என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

ஆய் (15)

ஆய் வட்டம் நில்லாது உடம்பு – அறநெறிச்சாரம்:1 225/4
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/3
அலகு வாள் விழி ஆய்_இழை நல் நுதல் – விவேகசிந்தாமணி:1 108/1
அன்று என்று நன்மதியே ஆய் – நன்மதிவெண்பா:1 23/4
அளவு_இல் திருவிற்கு உயிர் ஓர் ஆய்_இழை பேரூர்க்கு – நன்மதிவெண்பா:1 82/1
வாரும் என நன்மதியே ஆய் – நன்மதிவெண்பா:1 82/4
ஆய்_தொடியார் கண்_நுதல்-பால் அன்பின் உமிழ்தலுமே – முதுமொழிமேல்வைப்பு:1 80/1
ஆரூரிற்கு என்று அமைந்த ஆய்_இழையை தேரும் – முதுமொழிமேல்வைப்பு:1 160/2
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – முதுமொழிமேல்வைப்பு:1 160/3
வள்ளல் உயர் ஆய் செல்வம் மாறாமல் ஏன் வளர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/1
மோசியரை ஆய் முதலோர் முற்றும் தெளிந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/1
சென்ற இடம் எல்லாம் சிறந்து ஏனோ செல்வ ஆய்
/குன்றாது வென்றான் குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/1,2
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார் – திருக்குறள்குமரேசவெண்பா:92 911/1
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/3
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/3

ஆய்_இழை (4)

வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/3
அலகு வாள் விழி ஆய்_இழை நல் நுதல் – விவேகசிந்தாமணி:1 108/1
அளவு_இல் திருவிற்கு உயிர் ஓர் ஆய்_இழை பேரூர்க்கு – நன்மதிவெண்பா:1 82/1
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/3

இழை (12)

ஓர் இழை அறுத்திடல் எளிது ஒன்றாகவே – நீதிநூல்:11 108/1
சேர் இழை பல உற திரித்த தாம்பினை – நீதிநூல்:11 108/2
சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால் – நீதிநூல்:12 111/4
எழில் உளேம் என செருக்குறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம் – நீதிநூல்:29 317/1
நேர்_இழை நம்முடன் இறப்பன் என முன்னம் உரைசெய்தாள் நிருபன் நம்மை – நீதிநூல்:44 475/1
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/3
அலகு வாள் விழி ஆய்_இழை நல் நுதல் – விவேகசிந்தாமணி:1 108/1
அளவு_இல் திருவிற்கு உயிர் ஓர் ஆய்_இழை பேரூர்க்கு – நன்மதிவெண்பா:1 82/1
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/3
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:112 1114/4
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/3
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப – திருக்குறள்குமரேசவெண்பா:133 1329/3

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தொறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது.
நாள்-தொறும், அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

-தொறும் (18)
நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4
நாய் என கோகு என ஆக்கும் நாள்-தொறும்
/ஆயினை மகளை இல் ஆக்கும் தான் கொண்ட – நீதிநூல்:19 230/2,3
மதமொடு நாள்-தொறும் மகிழ்வர் மேலவர் – நீதிநூல்:39 403/2
உதவியை உனும்-தொறும் உளம் களிப்பரே – நீதிநூல்:39 403/4
நாம் அறியாது உயிர்ப்பு கணம்-தொறும் நடக்க மெய்யுள் – நீதிநூல்:47 553/1
கற்பினார் கணவர்-தம்மை காண்-தொறும் களித்தல் போலும் – நீதிநூல்:47 569/1
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/3
வீடு-தொறும் கூற்றுவனாமே – நீதிவெண்பா:1 32/4
வீடு-தொறும் சென்று விலை ஆம் மது இருந்த – நீதிவெண்பா:1 85/3
சீர் இலா கண்கள்-தொறும் தீயதாய் பாரில் – நன்மதிவெண்பா:1 17/2
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – முதுமொழிமேல்வைப்பு:1 90/3
நாள்-தொறும் நாடு கெடும் – முதுமொழிமேல்வைப்பு:1 90/4
நூல் பயில் நாள்-தொறும் – இளையார்-ஆத்திசூடி:1 56/1
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/3
நாள்-தொறும் நாடு கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/4
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/3
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
/பண்புடையாளர் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/3,4
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/3

நாள்-தொறும் (8)
நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4
நாய் என கோகு என ஆக்கும் நாள்-தொறும் /ஆயினை மகளை இல் ஆக்கும் தான் கொண்ட – நீதிநூல்:19 230/2,3
மதமொடு நாள்-தொறும் மகிழ்வர் மேலவர் – நீதிநூல்:39 403/2
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – முதுமொழிமேல்வைப்பு:1 90/3
நாள்-தொறும் நாடு கெடும் – முதுமொழிமேல்வைப்பு:1 90/4
நூல் பயில் நாள்-தொறும் – இளையார்-ஆத்திசூடி:1 56/1
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/3
நாள்-தொறும் நாடு கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:56 553/4

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் நூலின் பெயரும் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பகுதியின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பகுதியில் அச் சொல் இடம்பெறும் நூற்பாவின் எண்ணும், அந் நூற்பாவில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள் அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

அந்த (11)
பாவிகாள் அந்த பணம் – நல்வழி:1 22/4
உலகம் ஓர் உடம்பாய் அந்த உடம்பு எலாம் வாயாய் நித்தம் – நீதிநூல்:3 23/3
அந்த நல் நாளினில் இல்லவட்கு அன்பொடு அளித்தனன் யான் பொது – நீதிநூல்:12 131/2
அந்த நாள் நடந்திலாத யான் அகன்ற நெடு வழி – நீதிநூல்:12 132/1
கனம் மின் போல் ஒழியும் அந்த புவி வாழ்வு நிலை என்ன கருதி கோடி – நீதிநூல்:40 409/3
தன் நிலைமை தப்பாதான் அந்த /மனுநெறி தேர் புன்னைவன நாதா பூமியினில் – ஆத்திசூடிவெண்பா:1 3/2,3
சீலம்_இல்லான் ஏதேனும் செப்பிடினும் தான் அந்த /காலம் இடம் அறிந்து கட்டுரைத்தே ஏலவே – நீதிவெண்பா:1 34/1,2
சந்தனத்தை சார் வேய் தழல் பற்ற அந்த வனம்-தானும் – நீதிவெண்பா:1 99/2
கடையில் விலைகூறி அந்த காரிகையை விற்றுவிடல் – நன்மதிவெண்பா:1 25/3
அந்த சுணங்கன் குணம் கெடுமோ – நன்மதிவெண்பா:1 26/3
அந்த மொழி தவறாது ஆற்றும் அரிச்சந்திரன் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 48/2

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

அக்காள் (2)
ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று – நீதிநூல்:12 136/3
ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று – நீதிநூல்:12 136/3