நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

நாலாயிரத் திவ்விய பிரபந்தம் – சொற்கள் – எண்ணிக்கை

எண் ஆயிரம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. முதல் ஆயிரம் 947 3908 26699 467 415 27581 9819
2. இரண்டாம் ஆயிரம் 1134 4554 34894 543 444 35881 9310
3. மூன்றாம் ஆயிரம் 817 3335 19380 267 201 19848 7438
4. நான்காம் ஆயிரம் 1102 4408 28493 554 413 29460 9106
மொத்தம் 4000 16205 109466 1831 1473 112770 23618

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (அம்_சில்_ஓதி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = அம்_சில்_ஓதி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = அம், சில், ஓதி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். அணி_இழை, மதி_நுட்பம், பொருள்_பெண்டிர் போன்றன கூட்டுப்பொருளால் ஒரே சொல் ஆகின்றன. இங்கு, சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும்.
முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, தே மொழி மகளிர் என்ற தொடரில் தே, மொழி ஆகியவை மகளிர் என்ற சொல்லுக்கு அடைமொழிகளாக வருகின்றன. எனவே அவை தனித்தனிச் சொற்களாகக்
கொள்ளப்படும். தேமொழி கூறினாள் என்றவிடத்தில் இங்கு தேமொழி என்பது அன்மொழித்தொகை ஆகி ஒரே சொல் ஆகிறது.
எனவே இச் சொல் தே_மொழி எனக்கொள்ளப்படுகிறது. இங்கு தே, மொழி, தே_மொழி ஆகிய மூன்று சொற்களாக இது கணக்கிடப்படும். தே_மொழி என்பது தனிச் சொல்லாகவும், தே, மொழி ஆகியவை பிரிசொற்களாகவும் கணக்கிடப்படும்.
எனவே தே_மொழி என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், தே, மொழி, தே_மொழி என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது.
கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்வை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்தொறும் என்ற சொல் நாள்-தொறும் எனக் குறிக்கப்படுகிறது. இதில், நாள்-தொறும் என்பது தனிச்சொல்லாகவும், -தொறும் என்பது கட்டுருபனாகவும் கணக்கிடப்பட்டும்.
நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் காண்டத்தின் பெயர் குறுகிய அளவில் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தக் காண்டத்தில் அச் சொல் இடம்பெறும் காதையின் எண் கொடுக்கப்படும். அடுத்து அக் காதையில் அச் சொல் இடம்பெறும் அடி எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல்,
ஒரு காதையின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.