மூவருலா நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

மூவருலா நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 2256 11626 124 60 11810 5862

விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
வாணுதல் என்ற சொல் வாள் நுதல் என்று பிரிக்கப்படும் ஆனால் இது ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்ணைக் குறிக்கும் எனவே வாணுதல் என்பதில் வாள், நுதல் என்பன தனித்தனிச் சொற்கள். எனவே, இதனை வாணுதல் என்று கொண்டால், வாள், நுதல் ஆகிய சொற்களின் எண்ணிக்கையில் இது சேராது. இது ஒரே சொல்லாகவும் இருக்க வேண்டும். எனவே இது வாள்_நுதல் என்று கொள்ளப்படும் இதற்குரிய பிரிசொற்கள் வாள், நுதல் ஆகிய இரண்டும். எனவே வாள்_நுதல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வாள், நுதல், வாள்_நுதல் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

நுதல் (5)
இந்து நுதல் வெயர்ப்ப எங்கணும் கண் பரப்பி – மூவருலா:1 97/1
வாள்_நுதல் வீழா மதி மயங்கா சேண் உலாம் – மூவருலா:1 279/2
இன்னம் அபயம் புக்கு எய்திடீர் நல் நுதல் – மூவருலா:2 297/2
வாங்கும் புது மது வாள்_நுதல் கொப்புளிப்ப – மூவருலா:3 206/1
ஆணை பெருமாள் அகப்பட வாள்_நுதல் – மூவருலா:3 269/2

வாள் (16)
வரவிட்ட தென்றல் அடி வருட வாள் கண் – மூவருலா:1 37/1
மருங்கில் திரு உடை வாள் வாய்ப்ப பொருந்திய – மூவருலா:1 49/2
வாள் படை கொட்ப மற மன்னவர் நெருங்க – மூவருலா:1 67/1
மன்றல் மலயத்து வாள் அருவி தோய்ந்து அன்றே – மூவருலா:1 255/1
வாள்_நுதல் வீழா மதி மயங்கா சேண் உலாம் – மூவருலா:1 279/2
வெவ் வாள் நுதலும் வெயர் அரும்ப இவ்வாறு – மூவருலா:1 320/2
வன் பல்லவம் துகைத்த வாள் தானை இன்று இந்த – மூவருலா:2 379/1
வாங்கும் திரு கொற்ற வாள் ஒன்றின் வாய் வாய்ப்ப – மூவருலா:3 13/1
தீட்டும் கொடிப்புலியாய் சேவிப்ப வாள் தானை – மூவருலா:3 51/2
வழிவிட்ட வாள் காண வாரீர் ஒழிய – மூவருலா:3 85/2
பதி எறிந்த கொற்ற வாள் பாரீர் உதியர் – மூவருலா:3 86/2
மங்கை பருவத்து வாள்_நுதலும் பொங்கு ஒலி நீர் – மூவருலா:3 199/2
வாங்கும் புது மது வாள்_நுதல் கொப்புளிப்ப – மூவருலா:3 206/1
வாள் அகை மௌலி இரண்டும் இரு கோட்டு – மூவருலா:3 239/1
ஆணை பெருமாள் அகப்பட வாள்_நுதல் – மூவருலா:3 269/2
ஏந்து சுடர் வடி வாள் ஈராதோ பாந்தள் மேல் – மூவருலா:3 312/2

வாள்_நுதல் (3)
வாள்_நுதல் வீழா மதி மயங்கா சேண் உலாம் – மூவருலா:1 279/2
வாங்கும் புது மது வாள்_நுதல் கொப்புளிப்ப – மூவருலா:3 206/1
ஆணை பெருமாள் அகப்பட வாள்_நுதல் – மூவருலா:3 269/2

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

திரை-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், திரை-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-தொறும் (7)
திரை-தொறும் தோன்றும் திரு குழாம் போன்றும் – மூவருலா:1 96/1
வரை-தொறும் சேர் மயில்கள் போன்றும் விரைவினராய் – மூவருலா:1 96/2
தாக்கும் பறை என்றே சாற்றினாள் சேக்கை-தொறும் – மூவருலா:1 282/2
தொழும்-தொறும் மன்னர் சொரிய எழுந்து உள – மூவருலா:2 99/2
சாலை-தொறும் திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார் – மூவருலா:2 101/1
சூளிகை மாடம்-தொறும் துறுவார் நீளும் – மூவருலா:2 103/2
கனக்கும் அனீகக்களம்-தொறும் கைக்கொண்டு – மூவருலா:3 247/1

திரை-தொறும் (1)
திரை-தொறும் தோன்றும் திரு குழாம் போன்றும் – மூவருலா:1 96/1

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

தென்னர் (5)
தென்னர் திறையளந்த முத்தில் சில பூண்டு – மூவருலா:1 36/1
தென்னர் மலை ஆர சேறு அணிந்து தென்னர் – மூவருலா:1 36/2
தென்னர் மலை ஆர சேறு அணிந்து தென்னர் – மூவருலா:1 36/2
தென்னர் முதலானோர் சேவிப்ப முன்னர் – மூவருலா:2 91/2
தென்னர் வலம்புரியும் சேரலர் சாமரையும் – மூவருலா:3 238/1