மதுரைக் கலம்பகம் நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரி
சொற்கள்
கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 542 4225 30 30 4285 2634

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
திருந்திழை என்ற சொல் திருந்து இழை என்று பிரிக்கப்படும் ஆனால் இது திருத்தமான இழையை அணிந்த பெண்ணைக் குறிக்கும் எனவே திருந்திழை என்பதில் திருந்து, இழை என்பன தனித்தனிச் சொற்கள். ஆனால் திருந்திழை என்பது ஒரே சொல்லாய் ஒரு பெண்ணைக் குறிக்கும். இது திருந்து_இழை என்று கொள்ளப்படும் இதற்குரிய பிரிசொற்கள் திருந்து, இழை ஆகிய இரண்டும். எனவே திருந்து_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் திருந்து, இழை, திருந்து_இழை ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

இழையும் (1)
தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும் – மதுரைக்கலம்பகம்:2 1/4

திருந்து (2)
தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும் – மதுரைக்கலம்பகம்:2 1/4
திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/4

திருந்து_இழையும் (1)
தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும்
மனை கிழவன் திருமார்பும் மணி குறங்கும் வறிது எய்த – மதுரைக்கலம்பகம்:2 1/4,5

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

மனை-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், மனை-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-தொறும் (3)
கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1
மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1
மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2

மனை-தொறும் (1)
மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எழுதுவை (4)
நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3
நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3
நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3
இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/4