மிகைப் பாடல்கள், யுத்த காண்டம்-4 – கம்பராமாயணம்

@32. வேல் ஏற்ற படலம்

#1
அரக்கர் சேனை ஓராயிர வெள்ளத்தை அமரில்
துரக்க மானுடர்தம்மை என்று ஒருபுடை துரந்து
வெரு கொள் வானர சேனைமேல் தான் செல்வான் விரும்பி
இருக்கும் தேரொடும் இராவணன் கதுமென எழுந்தான் 2-1
@33. வானரர் களம் காண் படலம்

#1
என்று உரைத்து உயர் வான் பிறப்பு எய்திய
வென்றி வெம் சின வேழங்கள் தம்மொடும்
துன்று வாசி தொகைகளும் கேண்ம் எனா
நின்ற வீடணன் தானும் நிகழ்த்துவான் 25-1
@34. இராவணன் களம் காண் படலம்

#1
அலக்கண் எய்தி அமரர் அழிந்திட
உலக்க வானர வீரரை ஓட்டி அவ்
இலக்குவன் தனை வீட்டி இராவணன்
துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே

#2
முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப ஆவி
பெற்று இயல் பெற்றி பெற்றாலென்ன வாள் அரக்கர் யாக்கை
சிற்றியல் குறும் கால் ஓரி குரல் கொளை இசையா பல் பேய்
கற்று இயல் பாணி கொட்ட களி நடம் பயில கண்டான் 21-1
@35. இராவணன் தேர் ஏறு படலம்

#1
ஏழ்-இரு நூறு கோடி எனும் படை தலைவரோடும்
ஆழியின் வளைந்த சேனை ஐ-இருநூறு வெள்ளம்
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும் அரக்கர் வேந்தன்
வாள் அமர் முடிப்பென் இன்றே என மணி தவிசு நீத்தான் 2-1

#2
உரை செயற்கு அரும் தவத்தினுக்கு உவந்து உமை கேள்வன்
அருள உற்றது அங்கு அவன் மழு குலிசமோடு ஆழி
முரிய மற்றவை முனை மடித்து ஒன்றினும் முடியா
விரவு வச்சிர கவசத்தை மேற்பட புனைந்தான் 4-1

#3
அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை
கண்டு போய் வரும் காட்சியின் கண்ணுதற் பரமன்
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து இனிது அளிக்க
கொண்ட வானக தேரது குதிரையை குறிக்கின் 18-1

#4
ஐம் முகம் பயின்று இரட்டி அங்கு அடல் புயன் நால்-ஐம்
தும் ஐம் நான்கு எனும் கரத்தொடும் உமையவள் ஒழிய
இம்மை இவ் உரு இயைந்து எழில் கயிலையோடு ஈசன்
வெம்மை ஆடு அமர்க்கு எழுந்தென தேர்மிசை விரைந்தான் 27-1
@36. இராமன் தேர் ஏறு படலம்

#1
இ தகையன் ஆகி இகல் செய்து இவனை இன்னே
கொத்து முடி கொய்வென் என நின்று எதிர் குறிப்ப
தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என வானில்
சித்தர்கள் முனி தலைவர் சிந்தை மகிழ்வுற்றார் 4-1
@37. இராவணன் வதைப் படலம்

#1
புரந்தரன் பகைவன் ஆவி போக்கிய புனிதன் வென்றி
சுரந்தருள் அனுமன் நீலன் அங்கதன் சுக்கிரீவன்
உரம் தரு வீரர் ஆதி கவி படை தலைவருள்ளார்
பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர் திரியலுற்றார் 5-1

#2
வரம் படைத்து உயர்ந்த வன் போர் வய படை தலைவரோடு
நிரம்பிய வெள்ள சேனை நிரு தரும் களிறும் தேரும்
மரம் படர் கானில் தீப்போல் வள்ளல் தன் பகழி மாரி
பொரும்படி உடல்கள் சிந்தி பொன்றினர் எவரும் அம்மா 17-1

#3
பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் போக
தங்கிய பிணத்தின் குப்பை தடுத்தது சமரபூமி
எங்கணும் கவந்தம் ஆட எய்தி அங்கு அரக்கிமார்கள்
தங்கள் தம் கணவர் பற்றி தம் உடல் தாங்கள் நீத்தார் 17-2

#4
எழும் படை வெள்ளம் எல்லாம் இரண்டு ஒரு கடிகை தன்னில் ஆங்கு
களம் பட கமலக்கண்ணன் கடும் கனல் பகழி மாரி
வளம் பட சிலையில் கோலி பொழிந்து அவை மடித்தான் கண்டு
உளம் கனல் கொளுந்த தேரின் உருத்து எதிர் அரக்கன் வந்தான் 17-3

#5
மூஉலகு அடங்கலும் மூடும் அண்டமேல்
தாவினன் தேரொடும் அரக்கன் தாவியே
கூவினன் அங்கு அறைகூவ கொண்டலும்
மேவினன் அரக்கனை விடாது பற்றியே 71-1

#6
அண்டம் ஓராயிர கோடி எங்கணும்
மண்டினர் செரு தொழில் மலைதல் விட்டிலர்
அண்டர்கள் கலங்கினர் அரக்கராயுளோர்
உண்டு இனி கரு என ஓதற்கு இல்லையால் 71-2

#7
உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது
இமையவர் அடல் வலி பருகியது எளிமையின் 89-1

#8
மயன் படைக்கலம் அழிந்தது கண்டு இகல் மறவோன்
சயம் படைத்தது நன்று இவன் செருக்கினை தடுக்க
பயன் படைத்துள தண்ட மா படைகள் உண்டு அதனால்
நயம் படைப்பென் என்று ஒரு கதை நாதன்மேல் எறிந்தான் 104-1

#9
அன்ன மா கதை விசையொடு வருதலும் அமலன்
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான்
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய
சின்னமாக்கினன் அது கண்டு அங்கு அரக்கனும் சினந்தான் 106-1

#10
ஆயது ஆக்கிய செய்கை கண்டு அரக்கனும் சினந்தே
தீயின் மா படை செலுத்த அ படையினின் செறுத்தான்
தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட அரக்கன்
ஏய அ படை ஏவி அங்கு அமலனும் இறுத்தான் 108-1

#11
இரவிதன் படை ஏவினன் அரக்கன் மற்று அமலன்
சுருதி அன்ன திண் படைகொடு காத்தனன் மதியின்
விரவு வெம் படை வெய்யவன் விடுத்தலும் வீரன்
உரவு திங்களின் படைகொண்டு அங்கு அதனையும் ஒறுத்தான் 108-2

#12
வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் மறைந்தான்
நேர் உதிக்க அ படை கொண்டு நிமலனும் நீக்க
தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி
பேருவிப்பென் மற்று இவன் உயிர் எனும் உளம் பிடித்தான் 108-3

#13
முக்கணான் படை முதலிய தேவர்தம் படைகள்
ஒக்க வாரி அங்கு அரக்கனும் ஊழ் முறை துரப்ப
புக்கி அண்ணலை வலங்கொண்டு போனதும் பொடிபட்டு
உக்கி ஓடினதும் அன்றி ஒன்று செய்துளதோ 108-4

#14
இ திறம்பட மாயையின் படை வகுத்து எழுந்து அங்கு
எ திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி
சித்திரம் பெற அடங்கிய கவி பெரும் சேனை
மொய்த்து மூடியது அண்டங்கள் முழுவதும் மாய 119-1

#15
அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து உலைய
கொண்ட காலம் ஈதோ என குலைகுலைந்து அமரர்
துண்ட வான் பிறை சூடியை தொழ அவன் துயரம்
கண்டு இராகவன் கடிந்திடும் கலங்கலீர் என்றான் 119-2

#16
மாயையின் படை தொலைந்திட வகுப்பொடும் எழுந்த
தீய வெவ் வினை செய்கைகள் யாவையும் சிதைந்தே
போயது எங்கணும் இருள் அற ஒளித்தது அ பொழுதில்
காயும் வெம் சினத்து அரக்கனும் கண்டு உளம் கறுத்தான் 124-1

#17
நெற்றி விழியான்-அயன் நிறைந்த மறையாளர்
மற்றை அமரர் புவியில் வானவர்கள் ஈர்-ஐந்து
உற்ற தலை தானவன் விடும் கொடிய சூலம்
இற்று ஒழிய ஆன்று அழியுமோ என-இசைத்தான் 131-1

#18
வேதம் ஒரு நாலும் உள வேள்விகளும் வெவ்வேறு
ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும்
நீதியொடு கால்குலைய நீசன் விடு சூலம்
ஈது அழியும் என்று இதயம் எண்ணினன் இராமன் 131-2

#19
எவ் வகை உரகமும் இரியல் போயின
நொவ்வியல் உற்றன நொடிப்பது என் இனி
அவ் வயின் அரன் அணி அடல் அராவுமே
கவ்வையின் உழந்தன சிறையின் காற்றினே 144-1

#20
பிறை தலை பகழியால் பின்னும் ஓர் தலை
அறுத்தனன் முளைத்தது அங்கு அதுவும் ஆர்த்து உடன்
மறுத்து இரு தலைதனை மாற்ற வள்ளலும்
குறைத்திலன் எனும்படி முளைத்த குன்றுபோல் 151-1

#21
ஆயிர பதின் மடங்கு அரக்கன் மா தலை
தீமுக பகழியால் சினந்து இராகவன்
ஓய்வு அற துணிக்கவும் உடன் முளைத்ததால்
தீயவன் தவ பெரும் செயலின் வன்மையால் 151-2

#22
அண்ணலும் இடைவிடாது அறுத்து வீழ்த்தலால்
மண்ணொடு வானகம் மருவும் எண் திசை
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை
நண்ணியது அமரரும் நடுக்கம் எய்தினார் 152-1

#23
இ திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின்
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால்
அ திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன்-
மு திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான் 153-1

#24
தொடுத்த ஆழியின் தோமரம் தூள்பட
விடுத்த வீரன் அவ் வெய்யவன் மா தலை
அடுத்து மீளவும் நின்று அறுத்தான் உயிர்
முடித்திலன் விளையாடலை முன்னியே 160-1

#25
ஆனபோது அங்கு அரக்கன் அ தேரொடும்
வான மீது எழ மாதலி தூண்டிட
ஞான நாயகன் தேரும் எழுந்துற
போனது அண்டப்புறத்து அமர் கோலினார் 164-1

#26
அஞ்சல் இன்றி அமர் களத்து ஆரியன்
வெம் சினத்தொடு வேல் அரக்கன் பொர
எஞ்ச ஏழு திவசம் இரா பகல்
விஞ்சு போர் செயும் வேலையில் வீரனும் 183-1

#27
ஆய கண்டு அங்கு அமலன் விடும் சரம்
சாயகங்களை நூறி தலைத்தொகை
போய் அகன்றிட செய்தலும் போக்கிலா
தீயவன் சினந்து இம் மொழி செப்புவான் 183-2

#28
துறக்கும் என்பதை எண்ணி சிர தொகை
அறுக்குமுன் முளைத்து உய்குவது அன்றியே
மறுக்கும் என்று மன கொளல் மா நிலத்து
இறக்கும் மானுடர் போன்று என் உயிரும் நீ 183-3

#29
ஈது அரக்கன் புகல இராமனும்
தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து
ஓது உரைக்கு எதிருற்று என் பகழி இ
போது உரைக்கும் என கொடு பொங்கினான் 183-4

#30
மாறுபட தேவர்களை ஏவல்கொளும் வாள் அரக்கன் மடிய அன்னான்
ஏறி வரு பொன் தடம் தேர் பாகனும் பொன்றிட பண்டு அங்கு இமையா மு கண்
ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின் ஏகியதால்-இடையே கூடி
தேறுதல் செய்து உழல் போதில் தீவினை மாய்த்திட போம் நல் வினையேபோல 200-1
@38. மண்டோ தரி புலம்புறு படலம்

#1
வான் கயிலை ஈசன் அயன் வானவர் கோன் முதல் அமரர் வாழ்த்தி ஏத்த
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து வைகிய நீ தாய் சொல் தாங்கி
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து உன்
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட உளம் நாணினையோ உயிரும் உண்டோ 5-1

#2
அரு வினை வந்து எய்தியபோது ஆர் அரசே உன் தன்
திருவினை நீ பெறுவதற்கு திருநாமங்களை பரவ
ஒருபது வாய் உள வணங்க ஒண் முடி பத்து உள இறைஞ்ச
இருபது கை உள இலங்கை என்னாக வீந்தாயே 7-1

#3
அரு வினை வந்தெய்திய போழ்து ஆர் தடுப்பார் ஆர் அதனை அறிவார் வீட்டின்
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமை சிந்தித்து ஏத்த
ஒருபது நா உள வணங்க ஒண் முடிகள் பத்து உளவே இறைஞ்ச மேரு
இருபது கை உள இலங்கை என்னாக உயிரோடும் இழந்திட்டாயே 7-2

#4
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள் என்று
உன்னி உரைத்தேன் உரை கேளாது உத்தமனே
பின்னை இராமன் சரத்தால் பிளப்புண்ட
உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ 28-1

#5
ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்
ஓராதே கொண்டு அகன்றாய் உத்தமனார் தேவிதனை
பாராயோ நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம் 28-2

#6
இந்தனத்து அகில் சந்தனம் இட்டு மேல்
அந்த மானத்து அழகுற தான் அமைத்து
எந்த ஓசையும் கீழுற ஆர்த்து இடை
முந்து சங்கு ஒலி எங்கும் முழங்கிட 31-1

#7
கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து
உற்ற ஈம வீதியின் உடம்படீஇ
சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர
மற்ற வீரன் விதியின் வழங்கினான் 31-2

#8
இனைய வீரன் இளவலை நோக்கி நீ
புனையும் நன் முடி சூட்டுதி போய் எனா
அனைய வீரன் அடியின் இறைஞ்சவே
அனையனோடும் அனுமனை சார்க எனா 34-1

#9
@39 வீடணன் முடி சூட்டு படலம்
மாருதி செல மங்கலம் யாவையும்
மாருதி பெயர்கொண்டு உடன் வந்தனன்
வீர விற் கை இளவல் அவ் வீடணன்
வீரபட்டம் என நுதல் வீக்கினான் 4-1

#10
செய்த மா மணி மண்டபத்தே செழும்
துய்ய நல் மணி பீடமும் தோற்றுவித்து
எய்து வானவ .. கம்மி 5-1

#11
மேவி நாரதனே முதல் வேதியர்
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில்
கூவி ஓம விதிமுறை கொண்டிட
தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே 5-2

#12
பொய்யினுக்கு ஒரு
————
உய் திறத்தினுக்கே உவந்து உம்பர்கள்
கையினின் கலச புனல் ஆட்டினார் 5-3

#13
வேத ஓசை விழா ஒலி மேலிட
நாத துந்துமி எங்கும் நடித்திட
வேத பாரகர் ஆசி விளம்பிட
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட 6-1

#14
வீர மா முடி சூடிய வீடணன்
வீர ராகவன் தாள் இணை மேவிட
ஆர மார்பொடு அழுந்திட புல்லினான்
ஆரினானும் அறிவரும் ஆதியான் 10-1

#15
ஆதி நாளில் அருள் முடி நின்னது என்று
ஓதினேன் அவை உற்றுளது உத்தம
வேத பாரகம் வேறுளர் யாவரும்
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய் 11-1

#16
வஞ்சக கொடியான் முனம் வவ்விட
பஞ்சர கிளி என்ன பதைப்பவள்
நெஞ்சினில் துயர் நீக்கியது என்று நீ
அஞ்சனை புதல்வா அருள்வாய் என்றான் 13-1

@40. பிராட்டி திருவடி தொழுத படலம்

#1
மங்கை சோபனம் மா மயில் சோபனம்
பங்கயத்து உறை பாவையே சோபனம்
அங்கு அவ் ஆவி அரக்கனை ஆரிய
சிங்கம் இன்று சிதைத்தது சோபனம் 3-1

#2
வல்லி சோபனம் மாதரே சோபனம்
சொல்லின் நல்ல நல் தோகையே சோபனம்
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய
வல்லியங்கள் வதைத்தது சோபனம் 3-2

#3
அன்னை சோபனம் ஆயிழை சோபனம்
மின்னின் நுண் இடை மெல்லியல் சோபனம்
அன்ன ஆளி அரக்கனை ஆரிய
மன்னன் இன்று வதைத்தது சோபனம் 3-3

#4
நாறு பூம் குழல் நாயகி சோபனம்
நாறு பூம் குழல் நாரியே சோபனம்
ஆறு வாளி அரக்கனை ஆரிய
ஏறும் இன்றும் எரித்தது சோபனம் 3-4

#5
சொன்ன சோபனம் தோகை செவி புக
அன்னம் உன்னி அனுமனை நோக்கியே
அன்ன போரில் அறிந்துளது ஐய நீ
இன்னம் இன்னம் இயம்புதியால் என்றாள் 3-5

#6
சென்றவன் தன்னை நோக்கி திருவினாள் எங்கே என்ன
மன்றல் அம் கோதையாளும் வந்தனள் மானம்தன்னில்
என்றனன் என்னலோடும் ஈண்டு நீ கொணர்க என்ன
நன்று என வணங்கி போந்து நால்வரை கொணர்க என்றான் 33-1

#7
காத்திரம் மிகுத்தோர் நால்வர் கஞ்சுகி போர்வையாளர்
வேத்திர கையோர் ஈண்டீ விரைவுடன் வெள்ளம் தன்னை
பாத்திட பரந்த சேனை பாறிட பரமன் சீறி
ஆர்த்த பேர் ஒலி என் என்ன அரிகள் ஆர்ப்பவாம் என்றார் 33-2

#8
என்ற போது இராமன் ஐய வீடணா என்ன கொள்கை
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம் அன்றி
துன்றிய குழலினார் தம் சுயம்வர வாஞ்சை சூழும்
வென்றி சேர் களத்தும் வீர விழுமியது அன்று வேலோய் 33-3

#9
அற்புதன் இனைய கூற ஐய வீடணனும் எய்தி
செப்பு இள முலையாள் தன்பால் செப்பவும் திருவனாளும்
அம்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த அண்ணல்
ஒப்பினை கண்ணின் கண்டே உளம் நினைந்து இனைய சொன்னாள் 33-4

#10
அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால்
பழிபடும் என்பரால் பாருளோர் எலாம்
விழுமியது அன்று நீ மீண்டது இவ் இடம்
கழிபடும் என்றனன் கமலக்கண்ணனே 54-1

#11
கண்ணுடை நாயகன் கழிப்பென் என்றபின்
மண்ணிடை தோன்றிய மாது சொல்லுவாள்
எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான்
விண்ணிடை அடைவதே விழுமிது என்றனள் 54-2

#12
பொங்கிய சிந்தையல் பொருமி விம்முவாள்
சங்கையென் என்ற சொல் தரிக்கிலாமையால்
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே
அங்கியின் வீழலே அழகிதாம் அரோ 54-3

#13
அஞ்சினென் அஞ்சினென் ஐய அஞ்சினென்
பஞ்சு இவர் மெல்லடி பதுமத்தாள்தன்மேல்
விஞ்சிய கோபத்தால் விளையும் ஈது எலாம்
தஞ்சமோ மறை முதல் தலைவ ஈது என்றான் 73-1

#14
கற்பு எனும் கனல் சுட கலங்கி பாவகன்
சொல் பொழி துதியினன் தொழுத கையினன்
வில் பொலி கரத்து ஒரு வேத நாயகா
அற்புதனே உனக்கு அபயம் யான் என்றான் 75-1

#15
இன்னும் என் ஐய கேள் இசைப்பென் மெய் உனக்கு
அன்னவை மன கொள கருதும் ஆகையால்
முன்னை வானவர் துயர் முடிக்குறும் பொருட்டு
அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள் 82-1

#16
யான் புரி மாயையின் சனகி என்று உணர்ந்-
தான் கவர் அரக்கன் அம் மாயை என் சுடர்
கான் புக கரந்தது இ கமல நாயகி
தான் புரி தவத்து உனை தழுவ உற்றுளாள் 82-2

#17
ஐயன் அம் மொழியினை அருளும் வேலையில்
மை அறு மன்னுயிர் தொகைகள் வாய் திறந்து
ஒய்யென ஒலித்ததால் உவகை மீக்கொள
துய்ய வானவர் துதித்து இனைய சொல்லுவார் 84-1

#18
மிகுத்த மூன்றரை கோடியில் மெய் அரை கோடி
உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள எம்
அகத்தின் நோய் அறுத்து அரும் துயர் களைந்து எமக்கு அழியா
சுகத்தை நல்கிய சுருதி நாயக என தொழுதார் 84-2

#19
திரு குவால் மலி செல்வத்து செருக்குவேம் திறத்து
தருக்கு மாய்வுற தானவர் அரக்கர் வெம் சமரில்
இரிக்க மாழ்கி நொந்து உனை புகல் யாம் புக இயையா
கருக்குளாய் வந்து தோற்றுதி ஈங்கு இது கடனோ 96-1

#20
என்ற வாசகம் எறுழ் வலி தோளினான் இயம்ப
மன்றல் தாங்கிய மலரவன் வாசவற் கூவி
துன்று தாரினோன் சுரருடன் துருவினை துடர
சென்று மற்று அவன்-தருக என வணங்கினன் சென்றான் 101-1

#21
எனக்கும் எண்வகை முனிவர்க்கும் இமையவர் உலகம்-
தனக்கும் மற்று இவள் தாய் என மன கொள தகுதி
மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள் மலராள்
புனம் துழாய் முடி புரவலன் நீ நிறை புகழோய் 110-1
@41. மீட்சிப் படலம்

#1
வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம்
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்
எங்குளார் எனும் இடம் உளது அதன்மிசை ஏறி
பொங்கு மா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் 1-1

#2
வாங்கினான் இரு நிதியொடு தனதனில் வள்ளால்
ஓங்குமால் வெள்ளம் ஏழு பஃது ஏறினும் ஒல்காது
ஈங்கு உளார் எலாம் இவருவது இவரின் நீ இனிது
பூம் குலா நகர் புகுதி இம் ஞான்று என புகன்றான் 1-2

#3
மங்கலா நிதி வட திசை வானவன் மானம்
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்
எங்கு உளார் எனும் இடம் உளது இதன்மிசை ஏறி
பொங்கு மா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் 1-3

#4
வாங்கினான் அளகேசனை துரந்து இந்த மானம்
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும் உரவோய்
ஆங்கு இடம் பினும் உடையதாம் அதுதனில் ஏறி
பூம் குலா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் 1-4

#5
வாங்கினான் அது மா நிதியோடு அவன் மானம்
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால் இன்னும்
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது அதனை நீ ஏறி
பூம் குலா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் 1-5

#6
என்று தேரினை வீடணன் எய்தியது என்றான்
நன்றுதான் என நாயகன் ஏறினன் அவரோடு
அன்றுதான் இளம் கோவொடும் அ கவி வெள்ளம்
ஒன்றுதான் என இரு திசை இருந்தும் ஒக்கும் 1-6

#7
ஏறினன் விமானம் தன்னில் இராமனும் இளைய கோவும்
மாறு இலா சனகியோடு வள நகர் இலங்கை வேந்தும்
கூறிய அனுமன் சாம்பன் குமரன் வெம் கவி வந்து ஏற
மாறிலோர் நிலத்து நின்றார் வயந்தனார் கொத்தில் உள்ளார் 1-7

#8
மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி
ஏறும் நீர் தேரில் என்ன கருணன் வந்து எதிர்த்தபோது
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட அரக்கன் சீறி
நீறு எழ பிசைந்தே இட்டான் நெற்றியில் என்ன சொன்னார் 1-8

#9
என்ற வாசகம் கேட்டலும் வானரர் இறங்கி
நின்ற போதினில் இராகவன் தேரின்நின்று இழிந்தான்
பொன்றுமா வர காரணம் என் என புழுங்கா
துன்று தார் புயத்து இலக்குவ பொறி என சொன்னான் 1-9

#10
வரிசிலை இராமன் ஓலை மறம் புரி மறலி காண்க
எரிகொளும் இலங்கை போரில் இன் உயிர் துறந்து போந்த
குரிசிலை வயந்தன் தன்னை தேடியே கொணர்க அன்றேல்
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்று எழுதிவிட்டான் 1-10

#11
அ கணத்து அருகு நின்ற அனுமன் கை திருமுகத்தை
தக்கவன் நீட்ட வாங்கி தன் தலைமிசையில் சூடி
இக்கணம் வருவென் வாழி இராம என்று இரு தோள் கொட்டி
மிக்க மா மடங்கல் போல விண்ணிடை விசைத்து பாய்ந்தான் 1-11

#12
மண்டி புக்கனன் மறலிதன் பெரும் பதம் நரகில்
தண்டிப்புண்டு அறுப்புண்டு எரிப்புண்டவர்தம்மை
கண்டு மாருதி கண் புதைத்து அரி அரி என்ன
மிண்டி ஏறினர் நரகிடை வீழ்ந்தவர் எல்லாம் 1-12

#13
துளங்கி அந்தகன் வந்து அடி தொழுதலும் தோலா
வளம் கொள் மாருதி வசந்தனை காட்டு என அவனும்
உளம் கலங்கி உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள்
விளங்கு கீர்த்தியாய் தேடு விண்ணவர் புரத்து என்றான் 1-13

#14
சொன்ன கூற்றுவன் தன்னை தன் வாலிடை துவக்கி
பொன்னின் கற்பக பதியிடை கொண்டு போய் புகலும்
முன்னை வந்து கண்டு இந்திரன் முனிவு எனோ என்ன
மன்ன ஏகுவென் வயந்தனை காட்டுதி என்றான் 1-14

#15
வல் அரக்கரை மடித்து எமை எடுத்த மாருதியே
இல்லை இங்கு அயன் உலகிடை அறிதி என்று இசைப்ப
சொல்லும் அங்கு அவன் தன்னையும் வாலிடை துவக்கி
பல் உயிர் திறம் படைத்தவன் உலகிடை பாய்ந்தான் 1-15

#16
சிந்தை தூயவன் செல உளம் துளங்கு நான்முகனும்
வந்த காரியம் எது என வயந்தனை பார்த்து
சுந்தர தடந்தோள் வில்லி நின்றனன் அவன் தான்
உந்தன் நீள் பதத்துளான் எனின் காட்டு என உணர்த்தும் 1-16

#17
என்னுடை பெரும் பதத்தின் மேலாகிய எந்தை-
தன்னுடை பெரும் சோதியின் கீழதாய் தழைத்த
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான் விறலோய்
அன்னவன் தனை கொணருதி ஆங்கு அணைந்து என்றான் 1-17

#18
என்ற நான்முகன் தன்னையும் இந்திரன் யமனோடு
ஒன்ற வால்கொடு துவக்கினன் ஒரு குதிகொண்டான்
மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின் பதத்தில்
சென்று கண்டு கொண்டு இழிந்தனன் திசைமுகன் பதியில் 1-18

#19
மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க
குலவு வாசவன் யமனை விட்டு இரு நிலம் குறுகி
இலகு இல் வீரன் தன் அடி இணை அவனொடும் வணங்கி
சலமும் தீர்த்தனன் படையையும் ஏற்றினன் தேர்மேல் 1-19

#20
ஏறினான் இராமன் தேர்மேல் எழில் மலர் மாதினோடும்
ஏறினான் இளைய கோவும் இராக்கதர் வேந்தனோடும்
ஏறினான் அனுமன் சாம்பன் இடபனே முதலோர் ஏற
மாறினார் நிலத்து நின்றார் வசந்த கோத்திரத்திலுள்ளார் 1-20

#21
ஏறினன் இளைய கோவும் இரவி சேய் சாம்பன் நீலன்
ஏறினன் வாலி மைந்தன் என்றனர் பலரும் ஏற
சீறிய கும்பகன்னன் சினத்திடை சிதைந்து பட்ட
மாறிலா வசந்தன் சேனை நின்றது மாறி மண்மேல் 1-21

#22
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும் மயிலும்
கண்டு கைதொழ வானர கடலும் மற்று யாரும்
எண் தவாத பொன் மானமீது இருந்திடும் இயற்கை
அண்டர் நாதனும் வானமும் அமரரும் ஆமால் 1-22

#23
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ள படை அவர்தம்மை
வாரும் தேரின்மேல் என கும்பகர்ணன் வந்து ஏன்ற
போரில் எம் படை தலைவனோ பொன்றினன் அவனை
நீர் எழ பிசைந்து இட்டனன் நெற்றியில் என்றார் 1-23

#24
ஆழி வெள்ளம் ஓர் எழுபதும் அனுமனே முதலாம்
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படை தலைவரை இராமன்
சூழ நோக்கினன் சுக்கிரீவன் தனை பாரா
வாழி மா படை அனைத்தும் வந்தன கொலோ என்றான் 1-24

#25
இரவி கான்முளை இறங்கி வந்து இராமனை இறைஞ்சி
சுருதியாய் ஒரு பேர் அரு சொல்லுவ தொடர்ந்து
வருவதான இ சேனையில் வசந்தன் என்று உரைக்கும்
ஒருவன் வந்திலன் கண்டருளுதி என உரைத்தான் 1-25

#26
கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன்
இசைந்த போரின் வந்து எய்தலும் இவன் தனை எடுத்து
தசைந்த தோல் மயிர் எலும்பு இவைதமை தெரியாமல்
பிசைந்து மோந்து உடற் பூசினன் பெரு நுதற்கு அணிந்தே 1-26

#27
இசைந்த சீராமன் ஓலை இலங்கையில் பூசல் தன்னில்
வசந்தனை கண்டதில்லை மதித்தவாறு அழகிது அம்மா
வசந்தனை கொண்டுதானும் வருக எனோ வாராகினாகில்
நமன் குலம் களைவென் என்றான் -நாளை வா என்ற வீரன் 1-27

#28
செல்வனே இன்னம் கேளாய் யான் தெரி பாச கையால்
அல் எனும் அரக்கர் தம்மை வம்மின் என்று அழைத்து மெள்ள
நல் இருட் பரவை மேனி நாரணன் தமரை கண்டால்
செல்லவே போமின் என்று விடுக்குவென் செவியில் செப்பி 1-32

#29
மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து மாதே
செய்யளாகிய திரு என பொலிந்து இனிது இருத்தி
கைகளால் மிக புல்கியே கண்கள் நீர் ததும்ப
பொய் இலா மன திரிசடை விடை என போனாள் 5-1

#30
என்ற காலையில் எழுந்தவன் இயற்கையை நோக்கி
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்
சென்று சேனையை நாடினன் திரிந்து வந்து எய்தி
வென்றி வீரரில் வசந்தனை கண்டிலர் வெறுத்தார் 16-3

#31
என்னும் காலையில் இராமனும் யமபடர் யாரும்
மன்னும் தொல் புரம் நோக்கியே மணி நகை முறுவல்
உன்னின் அன்றி யான் தேவருக்கு உதவி செய்து என்னா
பொன்னின் வார் சிலை எடுத்தனன் பொறுத்தனன் பொரவே 16-5

#32
எண் திசாமுகம் இரிந்து உக யமபுரம் குலைய
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற அழியா
புண்டரீகத்து புராதனன் முதலிய புலவோர்
தொண்டை வாய் உலர்ந்து அலமர தொடு வில் நாண் எறிந்தான் 16-6

#33
பாக வான் பிறையாம் என பலர் நின்று துதிப்ப
வாகை கொண்ட வெம் சிலையின் வளைவுற வாங்கி
மேக சாலங்கள் குலைவுற வெயிற் கதிர் மாட்சி
சோகம் எய்தி மெய் துளங்கிட சுடு சரம் துரந்தான் 16-7

#34
வல்லை மாதிரம் மறைந்திட வானவர் மயங்க
எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த
தொல்லை நான்மறை துளங்கிட சுடு சரம் துரந்தான் 16-8

#35
வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க
மின் புலம் கொளும் உரும் என்ன வீக்கிய வில்லை
தன் பொலம் கையில் தாங்கியே தொடுத்த அ சரங்கள்
தென் புலன் தனை நிறைத்தது செறிந்தன சேணில் 16-9

#36
தருமராசனும் காலனும் யமபடர் தாமும்
உருமு வீழ்ந்தென சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து
மரும தாரையில் பட்டது ஓர் வடி கணை வாங்கி
நிருமியா இது இராகவன் சரம் என நினைந்தார் 16-10

#37
கெட்டது இன்று இனி தென்புலம் கேடு வந்து எய்தி
பட்டனம் இனி பிழைப்பு இலம் என்பது ஓர் பயத்தால்
முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப
சிட்டர் தம் தனி தேவனை வணங்கினர் சென்றார் 16-11

#38
சிறந்த நின் கருணை அல்லால் செய் தவம் பிறிது இலார்மேல்
புறம் தரு முனிவு சால போதுமோ புத்தேள் நின்னை
மறந்திருந்து உய்வது உண்டோ மலர்மிசை அயனை தந்த
அறம் தரு சிந்தை ஐய அபயம் நின் அபயம் என்றார் 16-12

#39
ஐயனே எமை ஆளுடை அண்டர் நாயகனே
மெய்யனே என சரணில் வந்து யாவரும் வீழ்ந்தார்
பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள் என போர் மூண்டு
எய்ய நேரிலா சிலையினை மடக்கினன் இராமன் 16-13

#40
வந்து அடைந்து உனக்கு அபயம் என்று அடியினில் வணங்கி
எம் தனி பிழை பொறுத்தி என்று இயம்பினிர் இதனால்
உம்தம்மேல் சலம் தவிர்ந்தனென் யூக நாயகன் தான்
தந்த சேனையில் வசந்தன் வந்திலன் தருக என்றான் 16-14

#41
தன் தனி சரண் வணங்கலும் இராகவன் சாற்றும்
என் தனி பிழை பொறுத்தி என்று இயம்பினை அதனால்
உன் தன் மேல் சலம் தவிர்ந்தனம் யூகநாயகன் தான்
தந்த சேனையின் வசந்தன் வந்திலன் தருக என்றான் 16-15

#42
அண்ணல் ஆரியன் தருதி என்று அருளலும் அவர் போய்
விண் எலாம் புகுந்து ஓடியே வசந்தனை விரைவில்
கண்ணின் நாடி நல் உயிரினை காண்கிலாது இருந்தார்
திண்ணன் யாக்கை எங்கே என சாம்புவன் செப்பும் 16-16

#43
அன்னதே என அவன் உயிர்க்கு அமரர்தம் பதிக்கே
முன்னது ஓர் உடல் கொண்டு இவண் தருக என மொழிய
சொன்ன வாய்மை கேட்டு அனுமனும் துணைவரை பாரா
பொன்னின் பாதுகம் பணிந்தனென் விடை என போனான் 16-20

#44
அன்னது ஆதலின் அமரர் அ நகரிடை ஆங்கண்
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட முந்த
சொன்ன வாயுவை தரிசிக்க வசந்தனும் தோன்றி
பொன்னின் பாதுகம் புனைந்தனன் தருமனும் போனான் 16-29

#45
அன்ன காலையில் புட்பக விமானம் ஆங்கு அடைய
முன் இராகவன் சானகி இலக்குவன் முதலா
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா
உன்னி ஏறலும் உச்சியில் சொருகு பூ போன்ற 16-30

#46
என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்
நன்றுதான் என நாயகன் ஏறினன் திருவோடு
அன்றுதான் இளங்கோவொடும் அ கவி வெள்ளம்
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும் 17-1

#47
ஆய கண்டு அமலன் உள்ளம் மகிழ்ந்தனன் அனுமன் தன்பால்
நேயம் மூண்டு அது தான் நிற்க நெடியவன் சரணம் சூடி
மேயினன் தமர்களோடு வசந்தனும் விண்மீதாக
போயினது இராமன் சொல்லின் புட்பக விமானம் அம்மா 17-2

#48
தேனுடை அலங்கல் மௌலி செம் கதிர் செல்வன் சேயும்
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும் வென்றி
தானையும் பிறரும் மற்றை படை பெரும் தலைவர்தாமும்
மானுட வடிவம் கொண்டார் வள்ளல் தன் வாய்மைதன்னால் 19-1

#49
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்
ஒன்றும் நல் சீதையோடும் உம்பரும் பிறரும் காண
வென்று உயர் சேனையொடும் இராமனும் விரைவின் எய்தி
தென் திசை இலங்கை ஆதி தேவிக்கு தெரிய காட்டும் 20-1

#50
வென்றி சேர் கவியின் வெள்ள கடல் முகந்து எழுந்து விண்மேல்
சென்றது விமானம் செல்ல திசையோடு தேசம் ஆதி
என்றவை அனைத்தும் தோன்ற இராமனும் இனிது தேறி
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்கு தெரிக்கலுற்றான் 20-2

#51
மன்னு பொற் கொடிகள் ஆட மாட மாளிகையின் ஆங்கு
துன்னு பைம் பொழில்கள் சுற்ற தோரணம் துவன்றி வானோர்
பொன்னகர் ஒக்கும் என்று புகழ்தலின் புலவராலும்
பன்ன அரும் இலங்கை மூதூர் பவளவாய் மயிலே பாராய் 20-3

#52
வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகை கனி வாய் வல்லி
எதிர் பொர வந்த விண்ணோர்-இறைவனை சிறையில் வைத்த
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு செல்ல
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய் 20-4

#53
வென்றி வேல் கரும் கண் மானே என்னொடும் இகலி வெய்ய
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய்
கன்றிய அரக்கன் சேனை காவலன் தன்னை நீலன்
கொன்று உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் 20-5

#54
மறத்திறல் வாலி மைந்தன் வச்சிரத்து எயிற்றோன் தன்னை
செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய்
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி
வெறுத்து எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் 20-6

#55
கரும் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய்
மருங்கு அடர் களப கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி
இரும் கட முகத்த யானை இவுளி தேர் காலாள் துஞ்சி
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னை பாராய் 20-7

#56
கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர் தோன்ற
அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலைய தாக்கி
சுடர் முடி பறித்த அ நாள் அன்னவன் தொல்லை வெம் போர்
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையை பாராய் 20-8

#57
பூ கமழ் குழலினாய் நின் பொருட்டு யான் புகலா நின்றேன்
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று
ஆக்கிய இதனை வெய்ய பாதகம் அனைத்தும் வந்து
நோக்கிய பொழுதே நூறும் சேதுவை நீயும் நோக்காய் 20-9

#58
இலங்கையை வலம் செய்து ஏக என நினைந்திடுமுன் மானம்
வலம் கிளர் கீழை வாயில் வர பிரகத்தன் நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண் என நமன் தன் வாயில்
கலந்திட ஈங்கு கண்டாய் சுபாரிசற் சுட்டது என்றான் 20-10

#59
குட திசை வாயில் ஏக குன்று அரிந்தவனை வென்ற
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது என் முன்
வட திசை வாயில் மேவ இராவணன் மவுலி பத்தும்
உடலமும் இழந்தது இங்கு என்று உணர்த்தி வேறு உரைக்கலுற்றான் 20-11

#60
நன்னுதல் நின்னை நீங்கி நாள் பல கழிந்த பின்றை
மன்னவன் இரவி மைந்தன் வான் துணையாக நட்ட
பின்னை மாருதி வந்து உன்னை பேதறுத்து உனது பெற்றி
சொன்னபின் வானரேசர் தொகுத்தது இ சேது கண்டாய் 20-12

#61
மற்று இதன் தூய்மை எண்ணின் மலர் அயன் தனக்கும் எட்டா
பொன் தொடி தெரிவை யான் என் புகழுகேன் கேட்டி அன்பால்
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார் 20-13

#62
ஆவினை குரவரோடும் அருமறை முனிவர்தம்மை
பாவையர் குழுவை இன் சொல் பாலரை பயந்து தம் இல்
மேவின அவரை செற்றோர் விரி கடல் சேது வந்து
தோய்வரேல் அவர்கள் கண்டாய் சுரர் தொழும் சுரர்கள் ஆவார் 22-1

#63
மரக்கலம் இயங்கவேண்டி வரி சிலை குதையால் கீறி
தருக்கிய இடத்து பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே 22-2

#64
ஆங்கு அது காட்ட கண்ட ஆயிழை கமலம் அன்ன
பூம் கழற் புயல்போல் மேனி புனித என் பொருட்டால் செய்த
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு என இரதம் ஆங்கே
பாங்குற நிறுவி நின்று இங்கு இவை இவை பகரலுற்றான் 23-1

#65
அந்தணர்தம்மை கொன்றோர் அரும் தவர்க்கு இடுக்கண் செய்தோர்
செம் தழல் வேள்வி செற்றோர் தீ மனை இடுவோர் தம்பால்
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர் பெற்ற
தந்தையை தாயை பேணா தறுகணர் பசுவை செற்றோர் 23-2

#66
குருக்களை இகழ்வோர் கொண்ட குலமகள் ஒழிய தங்கள்
செருக்கினால் கணிகைமாரை சேர்பவர் உயிர் கொல் தீம்பர்
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர் ஊன்கள் தின்று
பெருக்கிய உடலர் பொய்ம்மை பிதற்றுவோர் பீடை செய்வோர் 23-3

#67
வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்
மை அறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள்
கை உள முதல்கள் தம்மை கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார்
துய் அன சொற்கள் சொல்வோர் சோம்பரை சுளித்து கொல்வோர் 23-4

#68
ஊரது முனிய வாழ்வோர் உண்ணும்போது உண்ண வந்தோர்க்கு
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர் அமணே சென்று
நீரினுள் இழிவோர் பாவ நெறிகளில் முயல்வோர் சான்றோர்
தாரமது அணைவோர் மூத்தோர் தமை இகழ் அறிவிலாதோர் 23-5

#69
கண்டிலாது ஒன்று கண்டோ ம் என்று கைக்கூலி கொள்வோர்
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர்
மிண்டுகள் சபையில் சொல்வோர் மென்மையால் ஒருவன் சோற்றை
உண்டிருந்து அவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் 23-6

#70
பின்னை வா தருவென் என்று பேசி தட்டுவிக்கும் பேதை
கன்னியை கலக்கும் புல்லோர் காதலால் கள்ளுண் மாந்தர்
துன்னிய கலை வல்லோரை களிந்து உரைத்து இகழ்வோர் சுற்றம்
இன்னலுற்றிட தாம் வாழ்வோர் எளியரை இன்னல் செய்வோர் 23-7

#71
ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர்
நாண் துறந்து உழல்வோர் நட்பானவரை வஞ்சிப்போர் நன்மை
வேண்டிடாது இகழ்ந்து தீமை செய்பவர் விருந்தை நீப்போர்
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர் 23-8

#72
கயிற்றிலா கண்டத்தாரை காதலித்து அணைவோர் தங்கள்
வயிற்றிட கருவை தாமே வதைப்பவர் மாற்றார்தம்மை
செயிர்க்குவது அன்றி சேர்ந்த மாந்தரின் உயிரை செற்றோர்
மயிர் குருள் ஒழிய பெற்றம் வெளவு வோர் வாய்மை இல்லோர் 23-9

#73
கொண்டவன் தன்னை பேணா குலமகள் கோயிலுள்ளே
பெண்டிரை சேர்வோர் தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை
உண்டலே தருமம் என்போர் உடைப்பொருள் உலோபர் ஊரை
தண்டமே இடுவோர் மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர் 23-10

#74
தேவதானங்கள் மாற்றி தேவர்கள் தனங்கள் வௌவும்
பாவ காரியர்கள் நெஞ்சில் பரிவிலாதவர்கள் வந்து
கா எனா அபயம் என்று கழல் அடைந்தோரை விட்டோர்
பூவைமார் தம்மை கொல்லும் புல்லர் பொய் சான்று போவோர் 23-11

#75
முறையது மயக்கி வாழ்வோர் மூங்கை அந்தகர்க்கு தீயோர்
மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர்
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர் காட்டில் வாழும்
பறவைகள் மிருகம் பற்றி பஞ்சரத்து அடைக்கும் பாவர் 23-12

#76
கார் கன வரை சேர் கானில் கடும் குழி கல்லும் கட்டர்
நீர் கரை அதனில் ஒட்டி நெடும் கலை முயல் மான் கொல்வோர்
ஊர் கெழு கூவல் வீழ்ந்த உயிர் பசு எடாது போவோர்
வார் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள் 23-13

#77
வழி அடித்து உண்போர் கேட்டால் வழி சொல்லாதவர்கள் வைப்பை
பொழி இருள் களவு காண்போர் பொய் சொல்லி பண்டம் விற்போர்
அழிவு இலா வாய்மை கொன்றோர் அடைந்தது
தெரிசிக்க தீர்க என்றான் 23-14

#78
ஆதியர் மூவர்க்கு அ நாள் அரு மறை அறைந்த அந்த
நீதியாம் புராணம் தன்னை இகழ்பவர் நிறைய கேளார்
பாதியில் விட்டு வைப்போர் படித்தவர் பிரியப்படுத்தார்
போதம் இலாதார் மற்ற சமயம் பொல்லாதது என்பார் 23-15

#79
என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம்
ஒன்றிலர் நன்றிதன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர்
துன்றிய வினைகள் எல்லாம் சுடர் கண்ட இருளே போல
தென் திசை வந்து சேது தரிசிக்க தீரும் என்றான் 23-16

#80
ஆங்கது கேட்டு அருந்ததியே அனையாளும் அவதியுடன்
தீங்கு அணுகும் செய்ம் நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள்
தாங்க அரும் பாவங்களையும் எனக்காக தவிர்க்க என
நீங்கிடுக அதுவும் என்றான்-நிலமடந்தை பொறை தீர்த்தான் 23-17

#81
பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும்
சீர் எழுவு திரு அணையை தெரிசிக்க தீர்க என
கார் எழுவு திரு மேனி கண்ணன் நினைப்பின் படியே
ஈர்-எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் எழுதினரால் 23-18

#82
பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்ச மா பாதகமும்
சீர் மேவும் திரு அணையை தெரிசிக்க தீர்க எனா
கார் மேவும் திரு மேனி காகுத்தன் கட்டுரைத்து
வார் மேவும் முலை சனகி மாதோடும் வழிக்கொண்டான் 23-19

#83
என்பன பலவும் அந்த ஏந்திழைக்கு இருந்து கூறி
தன் பெரும் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும்
பொன் பொரு விமானம் தன் மேல் போகின்றபோது மிக்க
இன்புடை இராமன் வேலைக்கு இ புறத்து இழிந்து என் செய்வான் 23-20

#84
முன் பெல அரக்கன் தன்னை முனி கொலை தொடர கண்டு ஆங்கு
அன்பினால் அரி பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி
துன்பமே தொடரும் பொல்லா சூழ் கொலை தொலையாது என்று ஆங்கு
இன்புறும் இராமன் வேலைக்கு இ புறத்து இழிந்து நின்றான் 23-21

#85
திருவணை உயர் பதம் செப்பி மீண்டபின்
அருகு அணை திருமகட்கு ஆங்கு மற்று உள
தரு அணை திரள் புய சனக வல்லிக்கு ஆம்
கரு வரை முகில் நிற வண்ணன் காட்டுவான் 23-22

#86
கப்பை எனும் கன்னியையும் கந்தனார் தாதையையும்
அப்பொழுதே திருவணைக்கு காவலராய் அங்கு இருத்தி
செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி
ஒப்பு அரியாள் தன்னுடனே உயர் சேனை கடலுடனே 23-23

#87
வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே
வாய்ந்த சாய்கையும் வந்தது வானவர் வணங்க
ஏந்து தோள் புயத்து இராமனும் இலக்குவன் தானும்
வாய்ந்த சீதையும் மானமும் வானர வேந்தும் 23-24

#88
பாய்ந்த வேலையின் கரையிடை பரமன் அங்கு உறவே
சாய்ந்த சாய்கையும் வந்து அணுகாது அயல் கிடக்க
ஏந்து திண் புயத்து இராமனும் இளையவன் தானும்
வாய்ந்த சீதையும் சேனையும் மற்றுள பேரும் 23-25

#89
நின்ற போதினில் நிகர் இலா அகத்தியன் முதலோர்
குன்றுபோல் புயத்து இராகவன் தனை வந்து குறுக
நன்று நின் வரவு என்னவே நாதனும் வணங்கி
வென்றி வேந்தனும் வேதியர் தம்மொடு வியந்து 23-26

#90
சேதுவின் கரை சேர்ந்த அ திறல் புனை இராமன்
ஏது இ தலம் என குறு முனிவனை கேட்ப
வாத ராசனும் வாசுகிதானும் முன் மலைந்த
போது தந்தது இ பொன் நகர் என்று அவன் புகன்றான் 23-27

#91
புகன்றவன் தனை பூம் கழல் இராகவன் சாய்கை
அகன்ற காரணம் குறு முனி உரைசெய அவனும்
பகர்ந்த தேவரும் பாற்கடல் பள்ளியான் பரமன்
புகுந்தது இவ் வழி பூவில் வந்தவனும் மற்று யாரும் 23-28

#92
இருப்பது இ தலம் ஆகையால் இராவணன் சாய்கை
அருத்தி இன்றியே அகன்றது என்று அருள் முனி அறைய
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி
கருத்து மற்று இனி உரை என குறுமுனி கழறும் 23-29

#93
இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து
உன் தன் மா நகர் எய்தினால் சாய்கை போம் உரவோய்
அந்த நீதியே செய்தும் என்று அனுமனை அழைத்திட்டு
எம் தம் நாதனை இமைப்பினில் கொடு வருக என்றான் 23-30

#94
அந்த வேலை முனிவன் அளி தெருள்
இந்த மா நிலத்து யாவரும் இன்புற
கந்த மேவிய கங்கையில் ஓர் சிலை
தந்து காண் என மாருதி தாவினான் 23-31

#95
போதி என்று அவற் போக்கிய இராமனும் இந்த
மாது சீதையும் மைந்தனாம் இலக்குவன் தானும்
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி
ஆதி நாதனும் இருந்தனன் அமரர்கள் வியப்ப 23-32

#96
ஆன போதினில் ஐயன் மனத்துளே
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார்
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன்
மோனமாகி இருந்தனன் மூவரான் 23-33

#97
காலம் சென்றது என கருதி கையால்
கோலமான மணலினை கூட்டியே
ஆலம் உண்ட தே இவர் ஆம் என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே 23-34

#98
முகுத்தம் ஆனதே என முனி மொழிதலும் இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே வெண் மணல் கூப்பி
அகத்தினில் புறம் பூசித்தே அடி மலர் இறைஞ்சி
செகுத்த தோளுடை தம்பியும் சீதையும் தானும் 23-35

#99
ஒத்த பூசனை செய்யவும் அமைதியின் உள்ள
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி
சித்தம் வாழ்தர நின்றனன் தேவர்கள் துதிப்ப 23-36

#100
நின்ற போதினில் நிறங்களும் படலமும் கொண்டு
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து
நன்று செய்தனை என்ன போய் நாதனை பிடுங்கி
வென்றி வால் அற்று மேதினி வீழ்ந்தனன் வீரன் 23-37

#101
ஆய வேலையில் கங்கையின் அரும் சிலை வாங்கி
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான் தோன்றா
சீயமாய் மலி அண்ணல் முன் திரு சிலை வைத்து
நேயமோடு இரு தாள் பணிந்து அங்கு அவன் நின்றான் 23-37-1

#102
நின்ற காலையில் அமலன் அங்கு அனுமனை நோக்கி
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து நம் பூசை
சென்றது ஆதலின் திரு சிலை தாழ்த்தது இ புளின
குன்றினால் சிவன் தன்னுரு குறித்தனென் கோடி 23-37-2

#103
என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட இறைஞ்சி
முன்னி மாருதி மொழிந்தனன் மூவுலகு உடையோய்
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடை பிழையாது
அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை எனவே 23-37-3

#104
ஈர்த்தனன் வாலினாலே இராகவன் பூசை கொள்ளும்
கூந்தனை அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி
வார்த்த பேர் உருவம் கொள்ள வால் விசைத்து அனுமன் அந்த
மூர்த்தி என்று உணரான் நெஞ்சம் மூச்சு அற தளர்ந்து வீழ்ந்தான் 23-37-4

#105
மனுபரன் அனுமன் தன்னை வரவழைத்து ஈசன் வன்மை-
தனை உரைத்து இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி
முனம் அதை ஏத்தி பின் இம் மூர்த்தியை ஏத்தும் என்ன
அனைவரும் அமரர்தாமும் அம் முறை ஏத்தி நின்றார் 23-37-5

#106
விழுந்தவன்தனை வெம் திறல் இராகவன் நோக்கி
அழுந்து சிந்தையாய் அறிவு இலாது அதனை என் செய்தாய்
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி என்று உரைப்ப
எழுந்து போய் அவன் இறைவனை அருச்சனை செய்தான் 23-38

#107
அவ் இடத்து அனுமன் தந்த கங்கைமேல்
வவ்விடப்படும் வந்திடுமான் சிலை
இவ் இடத்தினில் யாவரும் ஏத்து எனா
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான் 23-39

#108
எம்தன் நாதன் இவன் என்று இறைமகன்
தந்த நாமம் சராசரம் சார்ந்த போது
இந்திரன் பிரமா முதல் எய்தினார்
வந்து வானவர் யாவரும் வாழ்த்தினார் 23-40

#109
இ தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார்
நத்து உலாய கை நாரணன் நான்முகன்
பித்தன் மூவரும் ஏத்த பெறுக எனா 23-41

#110
என்று இராகவன் ஈசன் பெருமையின்
நன்றிதன்னை நவில அடங்குமோ
சென்று சென்று செய செய போற்றி என்று
அன்று இராச குமாரன் அறைகுவான் 23-42

#111
பூசனை தொழில் முடிந்தபின் பூம் கழல் இராமன்
தேவ தச்சனை அழைத்து நீள் திரை கடல் கிடந்த
காவல் மா மலை கொணர்ந்து நீ கண்ணுதல் கோயில்
பூவில் வந்தவன் சொல்வழி சமை என புகன்றான் 23-43

#112
நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே
இந்த மா மலை இரும் என யாவையும் நல்கி
விந்தை தங்கிய தோளினீர் வேந்தனை பூசித்து
இந்த மா நகர் இரும் என இராமனும் அகன்றான் 23-44

#113
போன காலையில் பூம் கழல் இராகவன் பின்னே
சேனை தான் வர தேவர்கள் யாவரும் வணங்கி
மேல் நிலத்தவர் சென்றிட விடை கொடுத்தருளி
தானும் சீதையும் தம்பியும் சேதுவை சார்ந்தார் 23-45

#114
தேர் ஏறி மா நாகம் சென்னிமிசை சென்று ஏற
கார் ஏறு கண்ணபிரான் காவலன் கமழ் துளப
தார் ஏறு தடம் தோளான் தனி வயிர குனி சிலை கை
போர் ஏறு பொலிவுடனே வட திசையில் போயினனால் 23-46

#115
சேர்ந்து சேதுவின் தென் கரை கடந்து வந்து எய்தி
கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகி
போந்து வானர புதுமையும் சனகிக்கு புகன்று
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன் திறலோன் 23-47

#116
வரையலுற்றான் மலர் கரத்து இருந்த வன் சிலையால்
திரையில் உற்றிட மரக்கல தொகுதிகள் செல்ல
விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே
உரை செய்து உற்றனன் சனகிக்கு பின்னும் அங்கு உரவோன் 23-48

#117
நின்னை மீட்பதே நினைந்து சில் நெறி எலாம் நீந்தி
என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப
சொன்ன வேற் படை அரக்கரை குறைத்த இ சேனை
மன்னனால் பெற்ற வலி இது வென்றியும் அதனால் 23-49

#118
தேய்ந்த மா மதி போலும் சிலைநுதல்
வாய்ந்த வானர வாரணம் மாருதி
ஆய்ந்த மா மணி ஆழியை அன்றுதான்
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால் 24-1

#119
மாருதி நின்னை நாடி வருபவன் ஏறி பாய
பாரிடை குளித்து நின்ற பவள மால் வரையை பாராய்
போரிடை பொலன் கொள் பொன் தார் புரவிகள் போக்கு இற்று என்ன
நீரிடை தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய் 24-2

#120
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய
வேரி அம் கமலை செப்பும் விரிந்த கிட்கிந்தை உள்ளார்
சீரிய அயோத்தி சேர திருவுளம் செய்தி என்ன
கார் நிற அண்ணல் மானம் காசினி குறுக என்றான் 26-1

#121
என்றவன் சேயை நோக்கி இசைந்து கிட்கிந்தை உள்ளார்
நன்று நம் பதியை காண நாயக அழைத்தி என்ன
சென்று அவன் சாம்பன் தன்னை திசை எட்டும் திரிய சாற்றி
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு என்றான் 27-1

#122
என்றபோது எழுந்து சாம்பன் இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு
ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான் ஓத கேட்டே
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்றென்ன
மன்றல் அம் குழலினார்கள் துவன்றினர் மகிழ்ச்சி கூட 27-2

#123
சந்திர மானம் தன்மேல் தாரகை சூழ்ந்தது என்ன
இந்திரன் மகனார் தார தாரையும் ருமையும் கூடி
வந்தனர் வந்து மொய்த்தார் வானர மடந்தைமார்கள்
இந்திரை கொழுநன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி நின்றார் 29-1

#124
நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழ கடைந்தபோது அங்கு
ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே
தன்னுடன் பிறந்த முத்து மாலையை தரையில் தோன்றி
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள் விரைவில் தாரை 29-2

#125
தாரையை சீதை புல்கி தாமரை கன்ணன் அம்பால்
பாரை விட்டு அகன்றான் வாலி பார் உளோர்க்கு அவதி உண்டோ
சீரிது மலரோன் செய்கை தெரியுமோ தெரியாது அன்றே
ஆர் இது தெரியகிற்பார் காலத்தின் அளவை அம்மா 29-3

#126
என்றிட தாரை நிற்க எரி கதிர் கடகம் ஒன்று
மின் திரிந்தனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன் ஈந்தது
அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது அன்று
சென்று அடி இணையில் இட்டே இறைஞ்சியே ருமையும் நின்றாள் 29-4

#127
நின்றவள் தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்கு சூழ
தன் திரு கைகளாலே தழுவினள் என்ன கண்ணால்
ஒன்று அல பலவும் கூற உணர்ந்து உளம் உவகை உற்றே 29-5

#128
கடி கமழ் குழலினாளே கார்காலம் யாங்கள் வைகும்
வடிவுடை சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய்
அடு திறல் பரிதி மைந்தன் நகர் அதன் அழகு பாராய்
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய் 30-1

#129
கனி வளர் பவள செவ் வாய் கனம் குழை நின்னை காணா
துனி வளர் துன்பம் நீங்க தோழமை நாங்கள் கொண்ட
பனி வளர் இருளை மாற்றும் பகல்வன் சேயும் யாமும்
நனி வளர் நட்பு கொண்ட நலம் தரு நாகம் நோக்காய் 30-2

#130
மாழை ஒண் கண்ணாய் உன்னை பிரிந்து யான் வருந்தும் நாளில்
தாழ்வு இலா துயரம் நீங்க தாமரை உந்தியான் கை
ஆழி அம் ஆற்றலானை அனுமனை அரக்கர் அஞ்சும்
பாழியான் தன்னை கண்ட பம்பையாறு அதனை பாராய் 30-3

#131
பொய் வித்தி வஞ்சம் காத்து புலை விளைத்து அறத்தை தின்றோன்
கை வித்தும் சாத்தினான் அ கடல் பெரும் படையை எல்லாம்
நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து நம்மை
உய்வித்த வீரன் தன்னை கண்ட இடம் உது கண்டாயே 30-4

#132
சவரியது இருக்கைதானும் கவந்தனை தடிந்த கானும்
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும்
சவையுறு சுருட்டன் மைந்தன் சரவங்கள் முதலோர் காதல்
கவை அறு முனிவர் தங்கள் இடங்களும் கருதி நோக்காய் 30-5

#133
விரை கமழ் ஓதி மாதே விராதன் வந்து எதிர்ந்து போர் செய்
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை அதனை நோக்காய்
சரதம் நான் அரசு வேண்டேன் தட முடி சூடுக என்று
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனை பாராய் 30-6

#134
வளை பயில் தளிர் கை மாதே வரு புனல் பெருக கண்டு
துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி யான் துயரம் இன்றி
விளை தரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப வெல் போர்
இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனை பாராய் 30-7

#135
பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை பாராய்
கயல் பொரு கங்கை யாறும் குகன் உறை நகரும் காணாய்
அயன் முதல் அமரர் போற்ற அனந்தன்மேல் ஆதிமூலம்
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியை தொழுது நோக்காய் 30-8

#136
என்று உரைத்து இளவலோடு சனகியும் இரவிசேயும்
வென்றி வீடணனும் சேனை வெள்ளமும் விளங்கி தோன்ற
பொன் திகழ் புட்பக தேர் பூதலத்து இழிய ஏவி
இன் துணை பரத்துவாசன் இட வகை இழிந்தான் அன்றே 30-9

#137
என்று மன்னவன் பற்பல புதுமையும் யாவும்
மன்றல் அம் குழல் சனகிக்கு காட்டினன் மகிழ்ந்து
குன்று துன்றிய நெறி பயில் குட திசை செவ்வே
சென்று கங்கையின் திரு நதி தென் கரை சேர்ந்தான் 35-1

#138
ஆர்த்து விண்ணவர் ஆடினர் ஆடக தேரும்
பேர்த்த போகினில் நிலமிசை அணுகுற பெரியோர்க்கு
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான் 35-2

#139
மான மானம் மீப்போனது வட திசை வருவது
ஆன காலையில் அறிவனும் ஆயிழை அறிய
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார் 35-3

#140
பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை
ஆகும் ஈது என அறநெறி வழுவுறா அலங்கல்
மேக வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி
தாகம் நீங்கினர் அவ் இடை தேவரும் சார்ந்தார் 35-4

#141
இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி
வெறி துழாய் முடி வேத மெய் பொருளினை வியவா
புறத்ததாம் உயிர் பெற்றனம் என அகம் பொங்க
திறத்து இராமன்பால் திருமுனி அவனும் வந்துற்றான் 35-5

#142
வந்த மா முனிவோர்களை வணங்கும் முன் அவர்கள்
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும் நீக்கி
செந்து நாளை அ திருநகர் அடைக என செப்பி
உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார் 39-1

#143
தகும் அரும் தவங்கள் ஈட்டி தசமுகத்து அரக்கன் பெற்ற
யுகம் அரை கோடிகாறு ஏவல் செய்து உழலும் தேவர்
சுகம் உற சிலை கை கொண்ட தொல் மறை அமல யார்க்கும்
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி உண்டோ 41-1

#144
இந்த வாசகம் இயம்பினன் பின்னரும் இசைப்பான்
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருந்தமும் போக்கி
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க என்று
அந்தம் இல் பரத்துவன் சொல அவ் இடத்து அடைந்தான் 42-1

#145
அடைந்த மா முனி தலைவனை அருச்சனை செய்து
மிடைந்த சேனை அம் பெரும் கடல் சூழ் தர மேல் நாள்
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி வானவர்கள்
படிந்து போற்றிட இருந்தென பரிவுடன் இருந்தான் 42-2

#146
இருந்த போது இராமன் தன்னை இருடியும் இயம்பும் எந்தாய்
பெரும் திறல் இலங்கை தன்னை எங்ஙனம் பெரியோய் நீயே
வருந்தினை குரங்கு கொண்டு மாய வல் அரக்கன் தன்னை
திருந்த அ போரில் வென்று மீண்டவா செப்புக என்றான் 42-3

#147
இராகவன் அவனை நோக்கி இறந்த வாள் அரக்கர் எல்லாம்
அராவின் மாருதியும் மேன்மை வீடணன் தானும் ஆங்கே
குராவரும் சேனை எல்லாம் கொன்றிட கொற்றம் கொண்டு
விராவியே மீண்டது என்று மீளவும் பகரலுற்றான் 42-4

#148
தந்திரம் உற்ற சேனை தரைப்பட மறுப்படாமல்
அந்தரம் உற்றபோது அங்கு அரு மருந்து அனுமன் தந்தான்
மந்திர வித்தே எம்பி வரி சிலை வளைத்த போரில்
இந்திரசித்தும் பட்டான் இலங்கையும் அழிந்தது அன்றே 42-5

#149
கறங்கு கால் செல்லா வெய்ய கதிரவன் ஒளியும் காணா
மறம் புகா நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர் தேரும் காலை
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அ பதியும் ஐயா 42-6

#150
மற கண் வெம் சினத்தின் வன்கண் வஞ்சக அரக்கர் யாரும்
இறக்க மற்று இறந்தது எல்லாம் எம்பிதன் ஈட்டின் எந்தாய்
பிறப்பு மேல் உளதோ சூழ்ந்த பெரும் திசை பேரின் பேரா
துறக்கத்தோ யாதோ பெற்றார் அறிந்தருள் சுருதி நூலோய் 42-7

#151
என்ற வாசகம் இரும் தவன் கேட்டு இகல் இராமன்
தன் துணை பெரும் தம்பியை தழுவி நீ தக்கோய்
வென்று மீண்டிலை ஆயின அவ் விண்ணவர் முனிவர்
பொன்றுமாறு அன்றி ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ 42-8

#152
மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு மறையோன்
பாதம் முந்துற வணங்கி மா முனிவனை பாரா
ஏதும் யான் செய்தது இல்லை அவ் இலங்கைமேல் வெகுண்டு
வேத நாயகன் புருவத்தை நெரித்தனன் விளிந்தார் 42-9

#153
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென் அது அ
துன்று தார் புனை மாருதி பெரும் புய துணையால்
வென்றி கொண்டனம் யாங்கள் மேல் விளம்புவது எவனோ
என்று இயம்பினன் இருடிக்கும் இளவலும் இயைந்தே 42-10

#154
அனுமன் என்பவன் வாள்முகம் நோக்கினன் அவனும்
புனித மாதவன் தனை தொழா புண்ணிய பொருளாம்
தனு வலம் கொண்ட தாமரை கண்ணவன் தனயன்
எனும் அது என்கொலோ யாவர்க்கும் தந்தை நீ என்றான் 42-11

#155
அங்கு அவன் சொல அனுமனும் உரைசெய்வான் அருண
பங்கயந்தனில் சீதையாம் பராபரையாட்டி
சங்கரன் அயன் தன்னையும் தரணி ஈர்-ஏழும்
தங்கு பொன் வயிற்று அன்னைதன் தன்மையை நிகழ்த்தும் 42-12

#156
இராகவன் பெரும் குலத்தையும் இ பெரும் செல்வ
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும் தந்து என்
பராபரத்தினை பங்கயத்து அமுது என பணிந்தாள்
புராதனர்க்கு அரசே என மாருதி புகன்றான் 42-13

#157
அன்ன வாசகம் கேட்டலும் அந்தணர் கோவும்
என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது யாம் என்று
ஒன்றும் வாசகம் உரைத்திலன் உள் அன்பு குளிர
அன்னை வாசவன் திருவினை தந்தது என்று அறைந்தான் 42-14

#158
பண் குலாவிய சுக்கிரீவன்தனை பாரா
கண்குலா மனம் களித்தவன் கழல்மிசை பணிந்து
மண்குலாம் புகழ் வீடணன் நீலனே முதலாம்
எண்கின் வேந்தனும் அழித்தனர் இலங்கையை என்றான் 42-15

#159
என்று அவன் இயம்ப கேட்டு அங்கு இருந்த மா தவனும் இந்த
வென்றிஅம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மேவி
குன்று என வருக என்று கூறலும் இமையோர் நாட்டில்
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து ஆங்கு வந்தார் 42-16

#160
பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண்
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து இழிந்தார்
ஆன மெய்ப்படை தம்முடை போகத்துள் அழுந்த
ஆன கற்பினாளுடன் எழுந்து இராமனும் அறைவான் 42-17

#161
முனிவன் வாள் முகம் நோக்கி மெய் முழுது உணர் முனியே
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால்
நினையவும் உரை நிரப்பவும் அரிது இனி நீதி
புனித உண்டி எம்முடன் என புரவலன் புகன்றான் 42-18

#162
என்ற வாசகம் கேட்டலும் இரும் தவத்து எவரும்
நன்று நாயகன் கருணை என்று உவகையின் நவில
துன்று தாரவன் பாதுகம் தொழுது அரும் தொல்லோய்
ஒன்று கேள் என உவகையின் மாருதி உரைக்கும் 42-19

#163
செய்த மா தவம் உடைமையின் நினக்கு அன்பு சிறந்து
பொய் இல் சாதனம் பூண்டனன் புண்டரீக கண்
ஐய நின் பெரும் கருணைதான் அடியனேற்கு அமையும்
உய்யுமாறு இதின் வேறு உளதோ என்று மொழிந்தான் 42-20

#164
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய ஆண்டு
இருந்தபோது தன் திருவுளத்து இராகவன் நினைந்தான்
பொருந்த மா முடி புனைக என பொருந்துறான் போத
வருந்து தம்பிக்கு வருவென் யான் என்பதோர் வாக்கை 42-21

#165
சித்திரகூடம் தீர்ந்து தென் திசை தீமை தீர்த்திட்டு
இ திசை அடைந்து எம் இல்லின் இறுத்தன்மை இறுதியாக
வித்தக மறந்திலேன் யான் விருந்தினையாகி எம்மோடு
இ திறம் இருத்தி என்றான் மறைகளின் இறுதி கண்டான் 42-22

#166
சுரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி
சரத வானவர்கள் துன்பம் தணித்து உலகங்கள் தாங்கும்
மரகத மேனி செம் கண் வள்ளலே வழுவா நீதி
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென் கேட்டி என்றான் 42-23

#167
வெயர்த்த மேனியன் விழி பொழி மழையன் மூவினையை
செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்து உழந்து அழிவான்
அயிர்த்து நோக்கினும் தென் திசை அன்றி வேறு அறியான்
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான் 42-24

#168
இந்தியம் களைந்து இரும் கனி காய் நுகர்ந்து இவுளி
பந்தி வந்த புல் பாயலான் பழம் பதி புகாது
நந்தியம்பதி இருந்தனன் பரதன் – நின் நாமம்
அந்தியும் பகல் அதனினும் மறப்பிலன் ஆகி 42-25

#169
முனிவன் இம் மொழி கூறலும் முது மறை பெருமான் –
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும்
மனம் நெகிழ்ந்து இரு கண்கள் நீர் வார அங்கு அமலன்
நினைவின் முந்துறும் மாருதிக்கு இனையன நிகழ்த்தும் 42-26

#170
என்று உரைத்து அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீல
குன்று உரைத்தனைய தோளும் குல வரை குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலி தலை பத்தும் இறுத்த வீர
நின் தனை பிரிந்தது உண்டே யான் என நிகழ்த்தினானால் 42-27

#171
மின்னை ஏய் உமையினானும் விரை மலர் தவிசினானும்
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய்
உன்னையே வணங்கி உன் தன் அருள் சுமந்து உயர்ந்தேன் மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை என்றான் 42-28

#172
அவ் உரை புகல கேட்ட அறிவனும் அருளின் நோக்கி
வெவ் அரம் பொருத வேலோய் விளம்புகேன் கேட்டி வேண்டிற்று
எவ் வரம் எனினும் தந்தேன் இயம்புதி எனலும் ஐயன்
கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க 42-29

#173
அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று கிழங்கொடு கனி காய் துன்றி
விரி புனல் செழும் தேன் மிக்கு விளங்குக என்று இயம்புக என்றான்
புரியும் மா தவனும் அஃதே ஆக என புகன்றிட்டானால் 42-30

#174
அருந்தவன் ஐய நின்னோடு அனிக வெம் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென் என்னா விளங்கும் மு தீயின் நாப்பண்
புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து புறப்படும் அளவில் போகம்
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே 42-31

#175
அன்று அவர் தம்மை நோக்கி அந்த மாதவனும் இந்த
வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மற்றும்
குன்றினில் அருளும் என்று கூறலும் வான நாட்டுள்
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து ஒருங்கு வந்தார் 42-32

#176
அரைசரே ஆதியாக அடியவர் அந்தமாக
கரைசெயல் அரிய போகம் துய்க்குமா கண்டு இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி அறு சுவை அமைக்கும் வேலை
விரை செறி கமல கண்ணன் அனுமனை விளித்து சொன்னான் 42-33

#177
மாருதி விடைகொண்டு ஏக வரதனும் மறையோன் பாதம்
ஆர் அருளோடு நீட வணங்கினான் அவனும் ஆசி
சீரிது கூறி சேறி என்றலும் மானம் சேர்ந்து
போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து போனான் 44-1

#178
மான் நேர் விழியாளுடனே வனம் முன்
போனான் ஒரு நாள் வரும் நாள் இலதோ
தேனே அமுதே தெளிவே தெளிவின்
ஊனே உயிரே உலகு ஆளுடையாய் 44-2

#179
அம் பவள செவ்வாய் அணி கடக சேவகன்
வம்பு அவிழும் சோலை கோசல நாடுடை வள்ளல்
எம் பெருமான் என்னை இழி குணத்து நாயேனை
தம்பி என உரைத்த தாசரதி தோன்றானோ 44-3

#180
வாழி மலை திண் தோள் சனகன் தன் மா மயிலை
ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை
தாழ்வு இல் பெரும் குணத்தாள்தான் உன் கொழுந்தி நீ
தோழன் என உரைத்த தோன்றலார் தோன்றாரோ 44-4

#181
துங்க வில் கர தோளினார் சொன்ன நாள்
இங்கு வந்திலர் யான் இறப்பேன் எனா
மங்கைமாரும் படையும் வன் சுற்றமும்
அங்கு நீர் கங்கை அம்பியில் ஏற்றினான் 44-5

#182
வேத நாதனும் வில்லியும் விரை மலர் திருவும்
ஏது செய்யினும் என் உயிர் முடிப்பென் என்று எண்ணி
ஓத நீரிடை ஓடம் அது உடைத்து உயிர் விடுவான்
காதலாருடன் கங்கையின் நடுவுற சென்றான் 44-6

#183
கண்ணும் தோளும் வலம் துடிக்கும் கரை
வண்ண புள்ளும் வலியும் வலத்திலே
எண்ணும் காலையிலே எழில் மாருதி
அண்ணல் வந்தனன் என்று உரையாடினான் 44-7

#184
உள்ள வான் கிளை ஏற்றி உயர் குகன்
வெள்ள கங்கையின் ஆக்கி விரைந்து அவண்
உள்ளும் நெற்றி உடைப்பளவில் புகும்
வள்ளலார் விடும் மாருதி தோன்றினான் 44-8

#185
ஓங்கு வாலினை ஓட்டி அவ் ஓடங்கள்
தீங்கு உறாவகை சுற்றி திருகி நீர்
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான் அவை
தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால் 44-9

#186
கை ஆர் வெய்ய சிலை கருணாகரற்கு காதலுடை தோழ-
மை ஆர் சிருங்கவேபுரம் உடையாய் மிகு கோசலை களிறு
மை ஆர் நிறத்தான் வந்தொழிந்தான் மிதிலை வல்லி அவளுடனே
ஐயா வந்தான் தம்பியொடும் அடியேம் உய்ய வந்தானே 44-10

#187
ஆர் உனை உரை என அனுமன் கூறுவான்
சீரிய வாயுவின் தோன்றல் சீரியோய்
குருடை இராமற்கு தூதன் என்று எனது
ஏருடை தலையின் மேல் எழுதப்பட்டுளேன் 44-11

#188
பரதனை தீயையும் விலக்கி பாருடை
வரதனை இராமனை மாறி காண்பது
சரதமே இனி இறை தாழ்க்க ஒணாது என
கரதலத்து ஆழியும் காட்டி போயினான் 44-12

#189
பரத்துவன் வருதலும் பரிந்து இராமனும்
கரத்துணை குவித்தனன் இளைய காளையோடு
எரி திற முனியும் ஆசிகள் இயம்பிட
விருப்பொடும் இடவகை இனிது மேயினான் 84-1

#190
நின்றவன் இவ் வயின் நெடியவன் தனை
சென்று இறை பொழுதினில் கொணர்வென் சென்று எனா
பொன் திணி பொலம் கழல் வணங்கி போயினான்
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான் 102-1

#191
ஆய காலையில் ஐயனை கொண்டு தன்
தூய காவின் உறைவு இடம் துன்னினான்
மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா
தீயின் ஆகுதி செம் கையின் ஓக்கினான் 102-2

#192
பான நெய்யொடு நானமும் சாந்தமும் பலவும்
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் கருப்பூரம்
தேன் அளாவிய முக்கனி காயொடு தேன் பால்
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார் 102-3

#193
கங்கை தரு கழலாற்கும் இளவலுக்கும் காரிகைக்கும்
துங்க முடி வீடணற்கும் சுக்கிரிவ பெருமாற்கும்
தங்கு பெரும் சேனைக்கும் தனித்தனியே பொன் கலந்தால்
அங்கு அடைவின் மண்டலம் இட்டு அணி விளங்க நிறைத்தனரால் 102-4

#194
வெள்ளை நறும் போனகமும் மிகு பருப்பும் பொரி கறியும்
தள்ள அரிய முக்கனியும் சருக்கரையும் நறு நெய்யும்
எள்ள அரிய பலவிதத்து கறியமுதும் இமையவர்தம்
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை படைத்தனரால் 102-5

#195
நீர் உலவி நீர் குடித்து நினைந்திருந்து ஆகுதி பண்ணி
கார் உலவு மேனியனும் காரிகையும் இளம் கோவும்
தேர் இரவி திருமகனும் தென் இலங்கை பெருமானும்
போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர் பொலிவால் 102-6

#196
அ கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி அ
திக்குறு மானத்தை செவ்வன் எய்தி அ
சக்கரத்து அண்ணலை தாழ்ந்து முன் நின்றான்
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான் 102-7

#197
உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அ
பொருப்பு அவிர் தோளனை பொருந்தி நாயினேன்
திருப்பொலி மார்ப நின் வரவு செப்பினேன்
இருப்பன ஆயின உலகம் யாவையும் 102-8

#198
தீவினை யாம் பல செய்ய தீர்வு இலா
வீவினை முறை முறை விளைவ மெய்ம்மையாய்
நீ அவை துடைத்து நின்று அழிக்க நேர்ந்தனை
ஆயினும் அன்பினால் யாம் செய் மா தவம் 102-9

#199
என்று உரைத்து அனுமனை இறுக புல்லினான்
ஒன்று உரைத்து இறுப்பது என் உனக்கும் எந்தைக்கும்
இன் துணை தம்பிக்கும் யாய்க்கும் என்றனன் –
குன்று இணைத்தன உயர் குவவு தோளினான் 102-10

#200
இரவி காதலன் இலங்கையர் கோன் இவர் உதவி
அரசின் ஆசையது என்னலாம் அனுமனே என்பால்
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு
தருவது ஒன்று இலை உடன் உணும் தரமது அல்லால் 102-11

#201
கொற்றவன் உடன் உண்ணுமோ-கோது இல் மாதவனே
வெற்றி வீரனே என அஞ்சி நின்றனன் விமலன்
மற்ற போனகம் ஒரு கை வாய் வைத்தபின் வாரா
பற்றி அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான் 102-12

#202
பரிகலத்து அமுது ஏந்தியே பந்திகள் தோறும்
இரவி காதலற்கு அங்கதற்கு இலங்கையர் வேந்தற்கு
உரிய வீரர்கட்கு அளித்து தான் அவர்கள் ஓபாதி
வரிசையால் உண்ண மா முனி விருந்தும் உண்டனரால் 102-13

#203
பரிகலத்து ஒவ்வோர் பிடிகொடு பந்திகள் தோறும்
இரவி புத்திரற்கு இலங்கையர் வேந்துக்கும் உதவி
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி பின் அவனும்
வரிசையின் கொண்டு மா முனி விருந்தும் உண்டனனால் 102-13-1

#204
அன்ன காலையில் போனகம் அமரர் பொற்கலத்தே
முன்னம் போல் படைத்து திருமுன்பு வைத்தனரால்
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும் பசி தீரா
மன்னன் மா முனி விருந்தும் உண்டு அகம் மகிழ்ந்தனனால் 102-14

#205
பான நல் அமுதுடன் கருப்பூரமும் பலவும்
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி முன் நிற்ப
தான மெய் படை தம்முடை போகத்துள் தந்த
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான் 102-15

#206
அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர்-
வண்ணனே முதல் வானர கடல் எலாம் வாய் பெய்து
உண்ணும் வாசகம் கேட்டு இமையோர் முனிவோரும்
மண்ணும் நாகரும் யாவரும் அருந்துயர் மறந்தார் 102-16

#207
மான வேந்தரும் வள்ளலும் மலர் கரம் விளக்கி
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி
ஞான மா முனி பெருமையை புகழ்ந்து நாயகனும்
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து 102-17

#208
ஆர் இருள் அகலும் காலை அமலனும் மறையோன் பாதம்
ஆர்வமோடு எழுந்து சென்று வணங்கலும் அவனும் ஆசி
சீரிது கூறி சேறி என்றலும் தேர்மேல் கொண்டு
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து சென்றான் 102-18

#209
விருந்தும் உண்டு மா முனிவனை விடைகொண்டு தேர்மேல்
அருந்ததி கற்பினாளொடும் படையொடும் அமைந்தான்
வருந்து கோசல நாடுடன் அயோத்தியும் வாழ
பரிந்து இராமனும் ஏகினன் பரதனை காண்பான் 102-19

#210
இராவணன் வேட்டம் போய் மீண்டு எம்பிரான் அயோத்தி எய்தி
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன வெய்யவன் உதயம் செய்தான் 102-20

#211
இளவலை அண்ணலுக்கு எதிர் கொண்ம் என்று நம்
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை
கிளையொடும் ஏகு என கிளத்தி எங்கணும்
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய் என்றான் 102-21

#212
தோரணம் நட்டு மேல் துகில் பொதிந்து நல்
பூரண பொற் குடம் பொலிய வைத்து நீள்
வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழா
சீர் அணி அணிக என செப்புவாய் என்றான் 102-22

#213
பரத்துவன் உறைவிடத்து அளவும் பைம் பொன் நீள்
சிர தொகை மதில் புறத்து இறுதி சேர்தர
வர தகு தரள மென் பந்தர் வைத்து வான்
புரத்தையும் புதுக்குமா புகறி போய் என்றான் 102-23

#214
என்றலும் அவன் அடி இறைஞ்சி எய்தி அ
குன்று உறழ் வரி சிலை குவவு தோளினான்
நன்று உணர் கேள்வியன் நவை இல் செய்கையன்
தன் துணை சுமந்திரற்கு அறிய சாற்றினான் 102-24

#215
அவ் உரை கேட்டலும் அறிவின் வேலையான்
கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான்
வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று அறை பறை எற்றுக என்றிட 102-25

#216
வானையும் திசையும் கடந்த வான் புகழ்
கோனை இன்று எதிர்கொள்வான் கோல மா நகர்
தானையும் அரசரும் எழுகதான் எனா
யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார் 102-26

#217
முரசு ஒலி கேட்டலும் முழங்கு மா நகர்
அரசரும் மாந்தரும் அந்தணாளரும்
கரை செயல் அரியது ஓர் உவகை கைதர
திரை செறி கடல் என எழுந்து சென்றவால் 102-27

#218
அனகனை எதிர்கொள்க என்று அறைந்த பேரி நல்
கனகம் நல் கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய
வனை கடி பேரியும் ஒத்த ஆம் அரோ 102-28

#219
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும் ஏனை வேந்தரும்
செறி நகர் மாந்தரும் தெரிவைமார்களும்
உறுபொருள் எதிர்ந்தென உவந்து போயினார் 102-29

#220
அன்னையர் மூவரும் அமரர் போற்றிட
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்
தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர
மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா 102-30

#221
திருவடி இரண்டுமே செம் பொன் மௌவியா
இரு புறம் சாமரை இரட்ட ஏழ் கடல்
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ
பொரு அரு வெண்குடை நிழற்ற போயினான் 102-31

#222
எல்லவன் மறைந்தனன் – என்னை ஆளுடை
வில்லியை எதிர் கொள பரதன் மீ செல்வான்
அல்லி அம் கமலமே அனைய தாள்களில்
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே 102-32

#223
அவ் வழி மாருதி அம் கை பற்றிய
செவ் வழி உள்ளத்தான் திருவின் நாயகன்
எவ் வழி உறைந்தது அ செயல் எலாம் விரித்து
இவ் வழி எமக்கு நீ இயம்புவாய் என்றான் 102-33

#224
என்றலும் மாருதி வணங்கி எம்பிரான்
மன்றல் அம் தொடையினாய் அயோத்தி மா நகர்
நின்றதும் மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும் நாயினேன் செப்பல் வேண்டுமோ 102-34

#225
சித்திரகூடத்தை தீர்ந்த பின் சிரம்
பத்து உடையவனுடன் விளைந்த பண்பு எலாம்
இ தலை அடைந்ததும் இறுதி ஆய போர்
வித்தக தூதனும் விரிக்கும் சிந்தையான் 102-35

#226
குன்று உறழ் வரி சிலை குரிசில் எம்பிரான்
தென் திசை சித்திரகூடம் தீர்ந்தபின்
வன் திறல் விராதனை மடித்து மா தவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான் 102-36

#227
ஆங்கு உறை தபோதனர் அரக்கர்க்கு ஆற்றலேம்
நீங்கினம் தவத்துறை நீதியோய் என
நீங்கு செய்பவர்களை செகுத்தல் திண்ணம் நீர்
வாங்குமின் மன துயர் வாய்மையால் என்றான் 102-37

#228
ஆறு நால் ஆண்டு அவண் வைகி அ புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலா தமிழ் முனி வனத்தை நண்ணினான்
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர 102-38

#229
குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடம் கணான் தனை எதிர் தழுவி சாபமும்
கடும் கணை புட்டிலும் கவசம் தானும் அ
திடம் படு சுரிகையும் சேர ஈந்தனன் 102-39

#230
அ புறத்து எருவையின் அரசை கண்ணுறா
துப்பு உற சிவந்த வாய் தோகை தன்னுடன்
மெய் புகழ் தம்பியும் வீரன்தானும் போய்
மை பொழில் உறு பஞ்சவடியின் வைகினார் 102-40

#231
பல் பகல் இறந்த பின்றை பாதக அரக்கி தோன்றி
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி இளைய வீரன்
அல்கிய திருவை தேற்றி அவளுடை செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான் மறித்து அவள் கரற்கு சொன்னாள் 102-41

#232
கரனொடு திரிசிராவும் கடிய தூடணனும் காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார் எழுந்து வெம் சேனையோடும்
விரவினர் ஐயன் செம் கை வில்லினை நோக்கும் முன்பு ஓர்
எரி தவழ் பஞ்சின் உக்கார் அரக்கியும் இலங்கை புக்காள் 102-42

#233
இருபது தட கையான் மாட்டு இசைத்தலும் எழுந்து பொங்கி
ஒருபது திசையும் உட்க வஞ்சக உழை ஒன்று ஏவி
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு
திருவினை நிலத்தொடு ஏந்தி தென் திசை இலங்கை புக்கான் 102-43

#234
போகின்ற காலை ஏற்ற சடாயுவை பொருது வீட்டி
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறை அதனில் வைத்தான்
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன்-கொன்று இளவலோடு
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையை பரிவின் கண்டான் 102-44

#235
அன்னவன் தனக்கு வேண்டும் அரும் கடன் முறையின் ஆற்றி
நன்னுதல் தன்னை தேடி தென் திசை நடக்கும் ஐயன்
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான் 102-45

#236
ஆங்கு அவள் தனது சொல்லால் அருக்கன் மா மகனை அண்மி
பாங்குற நட்டு வாலி பருவரல் கெடுப்பல் என்னா
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு
ஆங்கு அவன் தனக்கு செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் 102-46

#237
கால மா மாரி நீங்க கயவனோடு இடபன் காந்து
நீலன் மா மயிந்தன் சாம்பன் சதவலி பனசன் நீடு
வாலி மா மைந்தன் என்று இவ் வானர தலைவரோடு
கூல வான் சேனை சூழ அடைந்தனன் எங்கள் கோமான் 102-47

#238
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி அருக்கன் மைந்தன்
தழுவிய திசைகள் தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீள போக்கினன் திருவை நாடி 102-48

#239
தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும் வாலி சேயும்
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ நாயேன்
குன்றிடை இலங்கை புக்கு திருவினை குறித்து மீண்ட
பின்றை வந்து அளக்கர் வேலை பெரும் படை இறுத்தது அன்றே 102-49

#240
அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன் அலங்கல் தோளான்
செறி புயந்து அரக்கன் தம்பி திருவினை விடுதி அன்றேல்
இறுதி உற்றன நின் வாணாள் என அவன் உரைப்ப சீறி
கறுவுற பெயர்ந்து போந்து கருணையான் சரணம் பூண்டான் 102-50

#241
ஆங்கு அவற்கு அவயம் நல்கி அரசொடு முடியும் ஈந்து
பாங்கினால் வருணன் தன்னை அழைத்திட பதைப்பு இலாது
தாங்கினன் சிறிது போது தாமரை நயனம் சேப்ப
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே 102-51

#242
மற்று அவன் அவயம் என்ன மலர் சரண் அடைந்த வேலை
வெற்றி வானரர்கள் பொங்கி வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி மொய் ஒளி இலங்கை புக்கு
பற்றினர் சுற்றி ஆர்த்தார் வானவர் பயங்கள் தீர்ந்தார் 102-52

#243
மலையினை எடுத்த தோளும் மதமலை திளைத்த மார்பும்
தலை ஒரு பத்தும் சிந்தி தம்பிதன் தோளும் தாளும்
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் நிலத்து வீழ
சிலையினை வளைவித்து ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்ந்தான் 102-53

#244
இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்க அரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து அன்று
உலக்குநர் குழுக்கள் தோறும் உடற் குறை ஆடல் கண்டார் 102-54

#245
தேவரும் முனிவர்தாமும் சித்தரும் தெரிவைமாரும்
மூவகை உலகுளோரும் முறை முறை தொழுது மொய்ப்ப
பூவைபோல் நிறத்தினானும் வீடண புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி மாண்டோ ர்க்கு இயற்றுதி கடன்கள் என்றான் 102-55

#246
ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் முதலோர்க்கு எல்லாம்
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன் அவனுக்கு இன்னே
சூடுக மௌலி என்ன சுந்தர இராமன் தம்பி
மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து விட்டான் 102-56

#247
நான்முகன் விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற
ஊன்முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியை சீறி
தேன் முகம் மலரும் தாரான் அரி சொல சீற்றம் தீர்ந்தான் 102-57

#248
மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்கோன் விமானத்தை எய்த
ஐயனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ
கையினால் பொருந்த புல்லி கண்ணின் நீர் கலசம் ஆட்டி
செய்யவட்கு அருள்க என்றான் திருவின் நாயகனும் கொண்டான் 102-58

#249
என்னை நன் கருணைதன்னால் ஈன்று எடுத்து இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல் ஆக என அருளின் ஈந்து
மன்னவன் போய பின்றை வானரம் வாழ்வு கூர
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கி போனார் 102-59

#250
வெள்ளம் ஓர் ஏழு பத்தும் விலங்க அரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும் ஒற்றை ஆழி
வள்ளல் தன் மகனும் உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் –
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன் இலங்கை வேந்தன் 102-60

#251
ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து காதல்
சூரியன் மகனும் தொல்லை துணைவரும் இலங்கை வேந்தும்
பேர் இயல் படையும் சூழ பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறி பரத்துவன் இருக்கை சேர்ந்தான் 102-61

#252
அன்பினால் என்னை நின்பால் ஆழியும் காட்டி ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி என்று துரந்தனன் தோன்றல் என்று
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் – முது நீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன் 102-62

#253
காலின் மா மதலை சொல்ல பரதனும் கண்ணீர் சோர
வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட
நீல மா முகில் பின் போனான் ஒருவன் நான் நின்று நைவேன்
போலுமால் இவைகள் கேட்பேன் புகழ் உடைத்து அடிமை மன்னோ 102-63

#254
என்று அவன் இரங்கி ஏங்கி இரு கணும் அருவி சோர
வன் திறல் அனுமன் செம் கை வல கையால் பற்றி காலின்
சென்றனன் இருளினூடு செறி புனல் கங்கை சேர்ந்தான்
குன்றினை வலஞ்செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர் 102-64

#255
இராவணன் வேட்டம் போய் மீண்டு எம்பிரான் அயோத்தி எய்தி
தராதல மகளும் பூவின் தையலும் மகிழ சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன வெய்யவன் உதயம் செய்தான் 102-65

#256
காலை வந்து இறுத்த பின்னர் கடன் முறை கமல கண்ணன்
கோல நீள் கழல்கள் ஏத்தி குரக்கினத்து அரசை நோக்கி
சாலவும் கலைகள் வல்லோய் தவறு உண்டு போலும் வாய்மை
மூலமே உணரின் உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ 102-66

#257
எழுபது வெள்ளம் சேனை வானரர் இலங்கை வேந்தன்
முழு முதல் சேனை வெள்ளம் கணக்கு இல மொய்த்த என்றால்
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ
விழுமிது எம்பிரான் வந்தான் என்று உரைத்தது வீர என்றான் 102-67

#258
ஓசனை இரண்டு உண்டு அன்றே பரத்துவன் உறையும் சோலை
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ முரற்றல் இன்றி
பேசியது அமையும் நம் கோன் எங்கு உளன் பெரும என்றான் 102-68

#259
பரதன் அஃது உரைத்தலோடும் பணிந்து மாருதியும் சீர் சால்
விரத மா தவத்து மிக்கோய் விண்ணவர் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால் மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தி துயின்றது தானை எல்லாம் 102-69

#260
வானவர் கொடுக்க வந்த வரத்தினால் மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்து
கானகம் பொலிதலாலே கவி குலம் அவற்றை மாந்தி
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும் நீ துயரல் எந்தாய் 102-70

#261
இனி ஒரு கணத்தின் எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டு
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான் இப்பால்
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன் வண்ண
குனி சிலை குரிசில் செய்தது இற்று என குணிக்கலுற்றாம் 102-71

#262
அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப ஐயன்
கரும் தடம் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும்
விருந்து இனிது அருந்தி நின்ற வேலையின் வேலை போலும்
பெரும் தடம் தானையோடும் கிராதர் கோன் பெயர்ந்து வந்தான் 102-72

#263
தொழுதனன் மனமும் கண்ணும் துளங்கினன் சூழ ஓடி
அழுதனன் கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான்
தழுவினன் எடுத்து மார்பில் தம்பியை தழுவுமாபோல்
வழு இலா வலியர் அன்றோ மக்களும் மனையும் என்றான் 102-73

#264
அருள் உனது உளது நாயேற்கு அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர் நின்னை நீங்கா புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ வாழ்வு மன்னோ 102-74

#265
ஆயன பிறவும் பன்னி அழுங்குவான் தன்னை ஐய
நீ இவை உரைப்பது என்னே பரதனின் நீ வேறு உண்டோ
போய் இனிது இருத்தி என்ன புளிஞர் கோன் இளவல் பொன் தாள்
மேயினன் வணங்கி அன்னை விரை மலர் தாளின் வீழ்ந்தான் 102-75

#266
தொழுது நின்றவனை நோக்கி துணைவர்கள் தமையும் நோக்கி
முழ்து உணர் கேள்வி மேலோன் மொழிகுவான் முழு நீர் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன் தாயினும் உயிர்க்கு நல்லான்
வழுவு இலா எயினர் வேந்தன் குகன் எனும் வள்ளல் என்பான் 102-76

#267
அண்ணல் அஃது உரைத்தலோடும் அரி குலத்து அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிது உற தழுவி நட்டார்
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன் இரவி என்பான் 102-77

#268
அலங்கல் அம் தொடையினானும் அந்தியின் கடன்கள் ஆற்றி
பொலம் குழை மயிலினோடு துயிலுற புணரி போலும்
இலங்கிய சேனை சூழ இளவலும் எயினர் கோனும்
கலங்கலர் காத்து நின்றார் கதிரவன் உதயம் செய்தான் 102-78

#269
கதிரவன் உதிப்ப காலை கடன் கழித்து இளவலோடும்
அதிர் பொலன் கழலினான் அவ் அரும் தவன் தன்னை ஏத்தி
விதி தரு விமானம் மேவி விளங்கிழையோடும் கொற்றம்
முதிர் தரு துணைவரோடும் முனி மனம் தொடர போனான் 102-79

#270
தாவி வான் படர்ந்து மானம் தடையிலாது ஏகும் வேலை
தீவிய கன்னி ஆகி செருக்கிய காம செவ்வி
ஓவியம் உயிர் பெற்றென்ன உம்பர்கோன் நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே 102-80

#271
பொன் மதில் கிடக்கை சூழ பொலிவுடை நகரம் தோன்ற
நன் மதி கிழவர்தம்மை நோக்கிய ஞான மூர்த்தி
சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று
என்னலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார் 102-81

#272
தோன்றலும் சுமந்திரன் தொழுத கையினன்
ஈன்று காத்து அழித்து அவை இயற்றும் அவ் உரு
மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல்
சான்றினை பரதற்கு சுட்டி சாற்றுவான் 103-1

#273
கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப முன்பு தாம்
பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன் மானவன்-தொழுதல் உன்னியே
விட்டனன் மாருதி கரத்தை மேன்மையான் 107-1

#274
அப்பொழுது அவ் வயின் அடந்துளோர்களை
தப்பு அற காண்பென் என்று ஐயன் தன் மனத்து
ஒப்பு அற எண்ணும் முன் உம்பர் நாடு வந்து
இ புறத்து இழிந்தென இழிந்த மானமும் 110-1

#275
அவ் வயின் அயோத்தி வைகும் சனமொடும் அக்குரோணி
தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும் தாயரோடும்
இவ் வயின் அடைந்துளோரை காண்பென் என்று இராமன் உன்ன
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது விமானம் தானும் 110-2

#276
எவ் வயின் உயிர்கட்கும் இராமன் ஏறிய
செவ்விய புட்பகம் நிலத்தை சேர்தலும்
அவ் அவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் 110-3

#277
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி அருளின் வேலை-
தனை இனிது அளித்த தாயர் மூவரும் தம்பிமாரும்
புனையும் நூல் முனிவன் தானும் பொன் அணி விமானத்து ஏற
வனை கழல் குரிசில் முந்தி மாதவன் தாளில் வீழ்ந்தான் 115-1

#278
எடுத்தனன் முனிவன் மற்று அவ் இராமனை ஆசி கூறி
அடுத்துள துன்பம் நீங்க அணைத்து அணைத்து அன்பு கூர்ந்து
விடுத்துழி இளைய வீரன் வேதியன் தாளில் வீழ
வடித்த நூல் முனியும் ஏந்தி வாழ்த்தினான் ஆசி கூறி 115-2

#279
கைகான் தனயை முந்த கால் உற பணிந்து மற்றை
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செம் கண்
ஐயனை அவர்கள் தாமும் அன்புற தழுவி தம் தம்
செய்ய தாமரை கணீரால் மஞ்சன தொழிலும் செய்தார் 115-3

#280
அன்னமும் முன்னர் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்
தன் நிகர் இலாத வென்றி தம்பியும் தாயர்தங்கள்
பொன் அடி தலத்தில் வீழ தாயரும் பொருந்த புல்லி
மன்னவற்கு இளவல் நீயே வாழி என்று ஆசி சொன்னார் 115-4

#281
நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின் மலன்
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி எய்தினான் 118-1

#282
ஊடுறு கமல கண்ணீர் திசைதொறும் சிதறி ஓட
தாள்தொடு தட கை ஆர தழுவினன் -தனிமை நீங்கி
காடு உறைந்து உலைந்த மெய்யோ கையறு கவலை கூர
நாடு மறைந்து உலைந்த மெய்யோ நைந்தது என்று உலகம் நைய 118-2

#283
மூவர்க்கும் இளைய வள்ளல் முடிமிசை முகிழ்த்த கையன்
தேவர்க்கும் தேவன் தாளும் செறி கழல் இளவல் தாளும்
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான் எடுத்தனர் பொருந்த புல்லி
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடி தலத்து வீழ்ந்தான் 118-3

#284
ஆயிடை குகனும் வந்து ஆங்கு ஆண்டவன் அடியில் வீழ
நாயகன் உவந்து புல்லி நண்ணி என் பின்பு வந்த
தூயனே கிளையினோடும் சுகம் இருந்தனையோ என்று
வாயிடை மொழிந்தான்-மற்றை மறைகளும் காணா அண்ணல் 119-1

#285
குரக்கினத்து அரசை சேயை குமுதனை சாம்பன் தன்னை
செருக்கிளர் நீலன் தன்னை மற்றும் அ திறத்தினோரை
அரக்கருக்கு அரசை வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி
மரு கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன் நின்றான் 119-2

#286
மந்திர சுற்றத்துள்ளார் தம்மொடும் வயங்கு தானை
தந்திர தலைவரோடும் தமரொடும் தரணி ஆளும்
சிந்துர களிறு போல்வார் எவரொடும் சேனையோடும்
சுந்தர தடந்தோள் வெற்றி சுமந்திரன் தோன்றினானால் 119-3

#287
அழுகையும் உவகைதானும் தனித்தனி அமர் செய்து ஏற
தொழுதனன் எழுந்து விம்மி சுமந்திரன் நிற்றலோடும்
தழுவினன் இராமன் மற்றை தம்பியும் அனைய நீரான்
வழு இனி உளது அன்று இந்த மா நில கிழத்திக்கு என்றான் 119-4

#288
வேறு வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி
கூறிய குழுவினோரும் குழுமி அங்கு இராமன் பாதம்
ஊறிய உவகை தூண்ட தொழுதனர் உவந்த பின்பு
தேறிய கமல கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான் 119-5

#289
ஏறுக சேனை எல்லாம் விமான மீது என்று தன்போல்
மாறு இலா வீரன் கூற வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே 119-6

#290
உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா
கரை செயல் அரிய வேத குறுமுனி கையும் ஒவ்வா
விரை செறி அலங்கள் மாலை புட்பக விமானம் என்று என்று
உரை செய்து வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார் 119-7

#291
அசனியின் குழுவும் ஆழி ஏழும் ஒத்து ஆர்த்ததென்ன
விசையுறு முரசும் வேதத்து ஓதையும் விளி கொள் சங்கும்
இசையுறு குரலும் ஏத்தின் அரவமும் எழுந்து பொங்கி
திசை உற சென்று வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த 119-8

#292
நம்பியும் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி
வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென் என்று விம்மும்
கொம்பு இயல் மருங்குல் தெய்வ கோசலை குளிர் பொன் பாதம்
தம்பியரோடும் தாழ்ந்தான் தாமரை கண்ணீர் தாழ 119-9

#293
மூன்று என நின்ற தன்மை குணங்களின் உயிர்கட்கு எல்லாம்
சான்று என நின்ற மான சிறுவனை தலைப்பட்டாட்கு
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ
ஈன்ற போது ஒத்தது அன்றே எதிர்ந்த போது ஒத்த தன்மை 119-10

#294
இணை மலர் தாளின் வீழ்ந்த இலக்குவன் தன்னை ஏந்தி
பணை முலை பாலும் கண்ணீர் தாரையும் பாய நின்றாள்
பிணை என தகைய நோக்கின் சீதையை பேடை அன்ன
துணையினை உலகில் கற்பின் பெரும் கதி துறையை கண்டாள் 119-11

#295
நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி விம்மி
பால் முலை சோர நின்ற பல் பெரும் தவத்தினாளை
கால் முதல் தொழுது தங்கள் கட்டு இரும் பாவம் விட்டார்
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம் 119-12

#296
அவ் வயின் விமானம் தாவி அந்தரத்து அயோத்தி நோக்கி
செவ்வையின் படரல் உற்ற செகதல மடந்தையோடும்
இவ் உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான்
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையை கடுக்கும் அன்றே 119-13

#297
வளம் கெழு கயிலை ஈசன் மலர் அயன் மறைகள் நான்கும்
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து உயர் வெளி பாழ் மேலாய்
விளங்குறும் நேமி புத்தேள் மேவும் மா அயோத்தி கண்டார் 119-14

#298
விளங்கிய புட்பகம் நிலத்தின் மீது உற
தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட
களங்கணி அனைய அ கண்ணன் மாதொடும்
விளங்கினன் நகரிடை விளைவு கூரவே 119-15

#299
புகுந்தனர் நகரிடை-பொங்கும் ஓசையின்
மிகுந்துள கவி பெரும் கடலும் மேதகு
மகம் பயில் முனிவனும் மற்று உளோர்களும்
அகம் தனில் அரும் களிப்பு எழுந்து துள்ளவே 119-16

#300
நம்பியும் வசிட்டன் கூற நந்தியம்பதியில் சென்று
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மாதோடு
இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர்
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பம் செய்தார் 119-17

#301
உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும்
மயிர் வினை செய்வித்து ஆங்கே மாசு அற மண்ணில் தாழும்
செயிர் அறு கடில கற்றை திரள் அற களைந்து நீக்கி
குயில் புரை மொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் கொண்டார் 119-18
@42. திருமுடி சூட்டு படலம்

#1
நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ
சுருதி ஒத்தனைய வெள்ளை துரகத குலங்கள் பூண்டு
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணி தேரின் ஆனான் 1-1

#2
வீடண குரிசில் மற்றை வெம் கதிர் சிறுவன் வெற்றி
கோடு அணை குன்றம் ஏறி கொண்டல் தேர் மருங்கு செல்ல
தோடு அணை மவுலி செங்கண் வாலிசேய் தூசி செல்ல
சேடனை பொருவும் வீர மாருதி பின்பு சென்றான் 2-1

#3
அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி மானுட செவ்வி வீரம்
பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் 2-2

#4
எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர்
பட்டம் வைத்து அமைந்த நெற்றி பகட்டினர் பைம் பொன் தேரர்
வட்ட வெண்குடையர் வீசு சாமரை மருங்கர் வானை
தொட்ட வெம் சோதி மோலி சென்னியர் தொழுது சூழ்ந்தார் 2-3

#5
எழு வகை முனிவரோடும் எண் திசை திசைகாப்பாளர்
குழுவினர் திசைகள்தோறும் குழாம் கொண்டு களித்து கூடி
தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில் துன்னி
வழுவல் இல் மலர்கள் சிந்தி மானிடம் சுருங்க சார்ந்தார் 2-4

#6
வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து
ஊனம் இல் பிடியும் ஒண் தார் புரவியும் பிறவும் ஊர்ந்து
மீன் இனம் மதியை சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற
பூ நிற விமானம் தன்மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள் 2-5

#7
ஆயது நிகழ செம் கண் இராமனும் அயோத்தி நண்ணி
தாயரை வணங்கி தங்கள் இறையொடு முனியை தாழ்ந்து
நாயக கோயில் எய்தி நானில கிழத்தியோடும்
சேயொளி கமலத்தாளும் திரு நடம் செய்ய கண்டான் 3-1

#8
உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன் தானே
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும்
தம்பியர் தாமும் மற்றும் தாபதர் சங்கத்தோடும்
அம் புவிதன்னில் மேலாம் அயோத்தியில் அமர்ந்தான் அம்மா 3-2

#9
இருபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஏற்ற
திரு ஒத்த சிறப்பர் ஆகி மானிட செவ்வி வீரர்
உருவ தோள் ஒளிரும் பூணர் உச்சி வெண் குடையர் பச்சை
மரு ஒத்த அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் 6-1

#10
ஆயது ஓர் அளவில் ஐயன் பரதனை அருளின் நோக்கி
தூய வீடணற்கும் மற்றை சூரியன் மகற்கும் தொல்லை
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும் பிறர்க்கும் நம் தம்
நாயக கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி என்றான் 10-1

#11
என்றலும் இறைஞ்சி மற்றை துணைவர்கள் யாவரோடும்
சென்றனன் எழுந்து மாடம் பல ஒரீஇ உலகில் தெய்வ
பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் மேரு
குன்று என விளங்கி தோன்றும் நாயக கோயில் புக்கான் 10-2

#12
வயிரம் மாணிக்கம் நீலம் மரகதம் முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற செழும் சுடர் கற்றை சுற்ற
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட
மயர்வு அறு மனத்து வீரர் இமைப்பிலர் மயங்கி நின்றார் 10-3

#13
விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர் பரதன் தன்னை வினவினர் அவர்க்கு காதல்
புண்டரீகத்துள் வைகும் புராதன கன்னல் தோளான்
கொண்ட நல் தவம்தன்னாலே உவந்து முன் கொடுத்தது என்றான் 10-4

#14
பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மை
இங்கு இது மலராள் வைகும் மாடம் என்று இசைத்த போதில்
எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ என்று கூறி
செம் கைகள் கூப்பி வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார் 10-5

#15
இருந்தனர் அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி
பரிந்தனன் இரவி மைந்தன் பரதனை வணங்கி தூயோய்
கருந்தடம் கண்ணினாற்கு காப்பு நாண் அணியும் நல் நாள்
தெரிந்திடாது இருத்தல் என்னோ என்றலும் அண்ணல் செப்பும் 10-6

#16
ஏழ் கடல் அதனில் தோயம் இரு நதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து என்ன
ஆழி ஒன்று உடையோன் மைந்தன் அனுமனை கடிதின் நோக்க
சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன் காலின் தோன்றல் 10-7

#17
கோமுனியோடு மற்றை மறையவர் கொணர்க என்னா
ஏவினன் தேர் வலான் சென்று இசைத்தலும் உலகம் ஈன்ற
பூமகன் தந்த அந்த புனித மா தவன் வந்து எய்த
யாவரும் எழுந்து போற்றி இணை அடி தொழுது நின்றார் 10-8

#18
அரியணை பரதன் ஈய அதன்கண் ஆண்டு இருந்த அந்த
பெரியவன் அவனை நோக்கி பெரு நில கிழத்தியோடும்
உரிய மா மலராளோடும் உவந்து இனிது ஊழி காலம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை என்றான் 10-9

#19
கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம்
அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து மொய்த்தார்
குயில் மொழி சீதை கொண்கன் நிலமகள் தன்னை கொள்ளும்
இயல்புடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த 12-1

#20
வேறு இனி உரைப்பது என்னோ வியன் தரு குலங்கள் ஆதி
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண
தேரு தம் உருவு நீத்து மானிட உருவில் சேர்ந்து ஆங்கு
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே 12-2

#21
அவ் வயின் முனிவனோடும் பரதனும் அரியின் சேயும்
செவ்வியின் நிருதர்கோனும் சாம்பனும் வாலி சேயும்
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும் எழுந்து சென்று ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலை தொழுது சொன்னார் 12-3

#22
நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல்நாள்
காளை நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக என்று
வேளையே பொடியதாக விழிக்கும்நீள் நுதலின் வெண் பூம்
பூளையே சூடுவானை பொருவும் மா முனிவன் போனான் 12-4

#23
தேவர் கம்மியன் தான் செய்த செழு மணி மாட கோடி
யாவரும் புகுந்து மொய்த்தார் எழுந்த மங்கலத்தின் ஓசை
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி கொண்டார் 13-1

#24
எரி மணி குடங்கள் பல் நூற்று யானைமேல் வரிசைக்கு ஆன்ற
விரி மதி குடையின் நீழல் வேந்தர்கள் பலரும் ஏந்தி
புரை மணி காளம் ஆர்ப்ப பல்லியம் துவைப்ப பொங்கும்
சரயுவின் புனலும் தந்தார் சங்கு இனம் முரல மன்னோ 14-1

#25
மாணிக்க பலகை தைத்து வயிர திண் கால்கள் சேர்த்தி
ஆணிப்பொன் சுற்றி முற்றி அழகுற சமைத்த பீடம்
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர் அதனின் மீது
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ 14-2

#26
அந்தணர் வணிகர் வேளாண் மரபினோர் ஆலி நாட்டு
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர்
உய்ந்தனம் அடியம் என்னும் உவகையின் உவரி நாண
வந்தனர் இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள் 14-3

#27
மங்கல கீதம் பாட மறை ஒலி முழங்க வல் வாய்
சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை ஒலிப்ப தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பூ மழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து அபிடேகம் செய்தார் 14-4

#28
மா தவர் மறைவலாளர் மந்திர கிழவர் மற்றும்
மூதறிவாளர் உள்ள சான்றவர் முதல் நீராட்ட
சோதியான் மகனும் மற்றை துணைவரும் அனுமன் தானும்
தீது இலா இலங்கை வேந்தும் பின் அபிடேகம் செய்தார் 14-5

#29
அம் கண் வான் உலகம் தாய அடி மலர் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான் கண்ணுதல் ஒருவன் இ நாள்
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர்
எங்கண் ஏற்று அன்னோன் வாழும் என்றனர் புலவர் எல்லாம் 14-6

#30
மரகத சயிலம் செம் தாமரை மலர் காடு பூத்து
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து செய்ய
இரு குழை தொடரும் வேற் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப
பெருகிய செவ்வி கண்டார் பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார் 14-7

#31
வான் உறு முகுர்த்தம் வந்தது என்று மா மறைகள் நான்கும்
தான் உரு கொண்டு போற்ற சலம் தவிர்ந்து அமரர் ஏத்தி
தேன் உறு மலர்கள் சிந்தி திசைமுகம் பரவ தெய்வ
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த 15-1

#32
இப்படி தழுவி மாதர் இருவரும் இரண்டு பாலும்
செப்புறல் அரிய இன்ப செல்வத்துள் செலுத்தும் நாளில்
கப்புடை சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன் காதல்
வைப்புடை வளாகம் தன்னில் மன்னுயிர் வாழ்த்த வந்தான் 19-1

#33
மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல்
முறை செயும் அரசர் திங்கள் மும் மழை வாழி மெய்ம்மை
இறையவன் இராமன் வாழி இ கதை கேட்போர் வாழி
அறை புகழ் சடையன் வாழி அரும் புகழ் அனுமன் வாழி 20-1

#34
பூமகட்கு அணி அது என்ன பொலி பசும் பூரி சேர்த்தி
மா மணி தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்
கோமணி சிவிகைமீதே கொண்டலும் மின்னும் போல
தாமரை கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான் 20-2

#35
விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க
எரி கதிர் கடவுள்தன்னை இனமணி மகுடம் ஏய்ப்ப
கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர் காடு பூத்து ஓர்
அரியணை பொலிந்தது என்ன இருந்தனன் அயோத்தி வேந்தன் 20-3

#36
மரகத சயிலமீது வாள் நிலா பாய்வது என்ன
இரு குழை இடறும் வேற் கண் இளமுலை இழை நலார்தம்
கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற
உரகரும் நரரும் வானத்து உம்பரும் பரவி ஏத்த 20-4

#37
உலகம் ஈர்-ஏழும் தன்ன ஒளி நிலா பரப்ப வானில்
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து எளிதின் தேய
கலக வாள் நிருதர் கோனை கட்டழித்திட்ட கீர்த்தி
இலகி மேல் நிவந்தது என்ன எழு தனிக்குடை நின்று ஏய 20-5

#38
மங்கல கீதம் பாட மறையவர் ஆசி கூற
சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை துவைப்ப தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பொரு கயல் கரும் கண் செவ் வாய்
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில மாதோ 20-6

#39
திரை கடல் கதிரும் நாண செழு மணி மகுட கோடி
கரை தெரிவு இலாத சோதி கதிர் ஒளி பரப்ப நாளும்
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து மன்னர்
பரசியே வணங்கும் தோறும் பதயுகம் சேப்ப மன்னோ 20-7

#40
மந்திர கிழவர் சுற்ற மறையவர் வழுத்தி ஏத்த
தந்திர தலைவர் போற்ற தம்பியர் மருங்கு சூழ
சிந்துர பவள செவ் வாய் தெரிவையர் பலாண்டு கூற
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்தகாலை 20-8

#41
கெவனொடு கெவாக்கன் தூம்பன் கேசரி கெந்தமாதன்
தவன் உறு சரபன் சாம்பன் சுடேணன் சம்பாதி நீலன்
நவை அறு பனசன் தாரன் கெசன் நளன் சமீரன் நண்பாம்
இவன் அரிலோமன் மின்போல் எயிற்றினன் இடபன் என்பான் 20-9

#42
விரதன் வீமாக்கன் வேகதரிசியே விந்தன் வெற்றி
கரமுடை சதுக்கன் சோதிமுகன் தெதிமுகன் கயந்தன்
அரன் விறல் கொடிய கோபன் இடும்பனோடு அரம்பன் ஆண்மை
தெரிவரு வசந்தன் கொற்ற துன்முகன் தீர்க்க பாதன் 20-10

#43
மயிந்தன் மா துமிந்தன் கும்பன் அங்கதன் அனுமன் மாறு இல்
சயம் தரு குமுத கண்ணன் சதவலி குமுதன் தண் தார்
நயம் தெரி ததிமுகன் கோசமுகன் முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்தி ஏழு கோடியாம் வீரரோடும் 20-11

#44
ஏனையர் பிறரும் சுற்ற எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கி சூழ
தேன் இமிர் அலங்கல் பைம் தார் வீடண குரிசில் செய்ய
மான வாள் அரக்கரோடு வந்து அடி வணங்கி சூழ்ந்தான் 20-12

#45
வெற்றி வெம் சேனையோடும் வெறி பொறி புலியின் வெவ் வால்
சுற்றுற தொடுத்து வீக்கும் அரையினன் சுழலும் கண்ணன்
கல் திரள் வயிர திண் தோள் கடும் திறல் மடங்கல் அன்னான்
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் தொழுது சூழ்ந்தான் 20-13

#46
வள்ளலும் அவர்கள் தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல்
உள்ளுற பிணித்த செய்கை ஒளி முக கமலம் காட்டி
அள்ளுற தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து இனிதின் நோக்கி
எள்ளல் இலாத மொய்ம்பீர் ஈண்டு இனிது இருத்திர் என்றான் 20-14

#47
நல் நெறி அறிவு சான்றோர் நான்மறை கிழவர் மற்றை
சொல் நெறி அறிவு நீரார் தோம் அறு புலமை செல்வர்
பல் நெறிதோறும் தோன்றும் பருணிதர் பண்பின் கேளிர்
மன்னவர்க்கு அரசன் பாங்கர் மரபினால் சுற்றமன்னோ 20-15

#48
தேம் படு படப்பை மூதூர் திருவொடும் அயோத்தி சேர்ந்த
பாம்பு-அணை அமலன் தன்னை பழிச்சொடும் வணக்கம் பேணி
வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்
ஏம்பல் உற்று இருந்தார் நொய்தின் இரு மதி இறந்தது அன்றே 20-16

#49
நெருக்கிய அமரர் எல்லாம் நெடும் கடற் கிடை நின்று ஏத்த
பொருக்கென அயோத்தி எய்தி மற்று அவர் பொருமல் தீர
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர வரி வில் கொண்ட
திரு கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம் 20-17

#50
மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும் பொன்னும்
நிறைவளம் பெருகு பூவும் சுரபியும் நிறைந்து மேல் மேல்
குறை இது என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அற கொடுத்து பின்னர்
அறை கழல் அரசர் தம்மை வருக என அருள வந்தார் 20-18

#51
ஐயனும் அவர்கள் தம்மை அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி
வையகம் சிவிகை தொங்கல் மா மணி மகுடம் பொன் பூண்
கொய் உளை புரவி திண் தேர் குஞ்சரம் ஆடை இன்ன
மெய் உற கொடுத்த பின்னர் கொடுத்தனன் விடையும் மன்னோ 20-19

#52
சம்பரன் தன்னை வென்ற தயரதன் ஈந்த காலத்து
உம்பர் தம் பெருமான் ஈந்த ஒளி மணி கடகத்தோடும்
கொம்புடை மலையும் தேரும் குரகத குழுவும் தூசும்-
அம்பரம் தன்னை நீத்தான்-அலரி காதலனுக்கு ஈந்தான் 20-20

#53
அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும் அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம் அழகுற திருத்துமாபோல்
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்தனை ஈந்தான்
அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார் 20-21

#54
பின்னரும் அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும்
மன்னும் நுண் தூசும் மாவும் மதமலை அரசும் ஈயா
உன்னை நீ அன்றி இந்த உலகினில் ஒப்பு இலாதாய்
மன்னுக கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி என்றான் 20-22

#55
மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய் பொருந்துற புல்லுக என்றான் 20-23

#56
என்றலும் வணங்கி நாணி வாய் புதைத்து இலங்கு தானை
முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி
பொன் திணி வயிர பைம் பூண் ஆரமும் புனை மென் தூசும்
வன் திறல் கயமும் மாவும் வழங்கினன் வயங்கு சீரான் 20-24

#57
பூ மலர் தவிசை நீத்து பொன் மதில் மீதிலை பூத்த
தேமொழி திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க
பா மறை கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கை கொண்டு
ஏமுற கொடுத்தாள் அந்நாள் இடர் அறிந்து உதவினாற்கே 20-25

#58
சந்திரற்கு உவமை சான்ற தாரகை குழுவை வென்ற
இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தொடு
கந்து அடு களிறு வாசி தூசு அணிகலன்கள் மற்றும்
உந்தினன் எண்கின் வேந்தற்கு-உலகம் முந்து உதவினானே 20-26

#59
நவ மணி காழும் முத்தும் மாலையும் நலம் கொள் தூசும்
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும் ஒண் தார்
கவன வெ பரியும் வேக கதமலைக்கு அரசும் காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு ஈந்தான் 20-27

#60
பத வலி சதங்கை பைம் தார் பாய் பரி பணை திண் கோட்டு
மதவலி சைலம் பொன் பூண் மா மணிக்கோவை மற்றும்
உதவலின் தகைவ அன்றி இல்லன உள்ள எல்லாம்
சதவலிதனக்கு தந்தான்-சதுமுக தவனை தந்தான் 20-28

#61
பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை இதனுக்கு ஈது
கோ சரி இலது என்று எண்ணும் ஒளி மணி பூணும் தூசும்
மூசு அரிக்கு உவமை மும்மை மும் மத களிறும் மாவும்
கேசரிதனக்கு தந்தான்-கிளர் மணி முழவு தோளான் 20-29

#62
வளன் அணி கலனும் தூசும் மா மத களிரும் மாவும்
நளனொடு குமுதன் தாரன் நவை அறு பனசன் மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான்-
களன் அமர் கமல வேலி கோசல காவலோனே 20-30

#63
அவ் வகை அறு பத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எவ் வகை திறனும் நல்கி இனியன பிறவும் கூறி
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழ கொடுத்தனன் கடை கண் நோக்கம் 20-31

#64
மின்னை ஏர் மௌலி செம் கண் வீடண புலவர் கோமான்-
தன்னையே இனிது நோக்கி சராசரம் சூழ்ந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் உளரேல் ஐய
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று என்றான் 20-32

#65
என்று உரைத்து அமரர் ஈந்த எரி மணி கடகத்தொடு
வன் திறல் களிறும் தேரும் வாசியும் மணி பொன் பூணும்
பொன் திணி தூசும் வாச கலவையும் புது மென் சாந்தும்
நன்று உற அவனுக்கு ஈந்தான்-நாகணை துயிலை தீர்ந்தான் 20-33

#66
சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி
மருங்கு இனி உரைப்பது என்னோ மறு அறு துணைவற்கு என்னா
கரும் கைம் மா களிறும் மாவும் கனகமும் தூசும் பூணும்
ஒருங்குற உதவி பின்னர் உதவினன் விடையும் மன்னோ 20-34

#67
அனுமனை வாவி சேயை சாம்பனை அருக்கன் தந்த
கனை கழல் காலினானை கருணை அம் கடலும் நோக்கி
நினைவதற்கு அரிது நும்மை பிரிக என்றல் நீவிர் வைப்பும்
எனது அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும் என்றான் 20-35

#68
இலங்கை வேந்தற்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்தருளலோடும்
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர் நலன் உறும் நெஞ்சர் பின்னர்
கலங்கலர் ஏவல் செய்தல் கடன் என கருதி சூழ்ந்தார் 20-36

#69
பரதனை இளைய கோவை சத்துருக்கனனை பண்பு ஆர்
விரத மா தவனை தாயர் மூவரை மிதிலை பொன்னை
வரதனை வலம்கொண்டு ஏத்தி வணங்கினர் விடையும் கொண்டே
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியை சார்ந்தார் 20-37

#70
குகனை தன் பதியின் உய்த்து குன்றினை வலம் செய் தேரோன்
மகனை தன் புரத்தில் விட்டு வாள் எயிற்று அரக்கர் சூழ
ககனத்தின் மிசையே ஏகி கனை கடல் இலங்கை புக்கான்-
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் சென்று அன்றே 20-38

#71
ஐயனும் அவரை நீக்கி அருள் செறி துணைவரோடும்
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல
செய்ய மா மகளும் மற்ற செகதல மகளும் சற்றும்
நையுமாறு இன்றி காத்தான் நானில பொறைகள் தீர்த்தே 20-39

#72
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்ந்திடுக நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க
தேன் வழங்கு அமுத மாலை தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க எங்கும் 21-1

#73
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல்
சிறுமையே நோக்கார் தங்கள் பெருமையே சிந்தை செய்யும்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி 21-2

#74
வாழிய சீர் இராமன் வாழிய சீதை கோமான்
வாழிய கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்
வாழிய வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி 21-3

#75
இராவணன் தன்னை வீட்டி இராமனாய் வந்து தோன்றி
தராதலம் முழுதும் காத்து தம்பியும் தானும் ஆக
பராபரம் ஆகி நின்ற பண்பினை பகருவார்கள்
நராபதி ஆகி பின்னும் நமனையும் வெல்லுவாரே 21-4
*