கல்லாடம் நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

கல்லாடம் நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 3390 17588 154 108 17850 6987

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, திருந்திழை என்ற சொல் திருந்து, இழை என்று பிரிக்கப்பட்டு, அன்மொழித்தொகையாக, திருத்தமான நகைகளை அணிந்த பெண்ணைக் குறிக்கும் எனவே திருந்திழை என்பதில் திருந்து, இழை என்பன தனித்தனிச் சொற்கள். ஆனால் திருந்திழை என்பது ஒரே சொல்லாய் ஒரு பெண்ணைக் குறிக்கும். எனவே, இது திருந்து_இழை என்று கொள்ளப்படும். இதற்குரிய பிரிசொற்கள் திருந்து, இழை ஆகிய இரண்டும். எனவே திருந்து_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் திருந்து, இழை, திருந்து_இழை ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

இழை (4)
மாண் இழை மகளிர் வயின் வைகுதலால் – கல்லாடம்:2 37/8
எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்து_இழை – கல்லாடம்:2 66/11
சேயோன் பரங்குன்று இழை என செறித்து – கல்லாடம்:2 92/6
மொய் இழை பூத்த கவின் மலர்_கொடியே – கல்லாடம்:2 94/41

திருந்து (2)
முருந்து நிரைத்த திருந்து பல் தோன்றாது – கல்லாடம்:2 5/24
எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்து_இழை – கல்லாடம்:2 66/11

திருந்து_இழை (1)
எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்து_இழை
நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன் – கல்லாடம்:2 66/11,12

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

உள்ளுதோறு என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், உள்ளு-தோறு, -தோறு என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

உள்ளு-தோறு (3)
உள்ளு-தோறு உள்ளு-தோறு உணா அமுது உறைக்கும் – கல்லாடம்:2 81/27
உள்ளு-தோறு உள்ளு-தோறு உணா அமுது உறைக்கும் – கல்லாடம்:2 81/27
கொள்ளிவாய் குணங்கு உள்ளு-தோறு இவரிய – கல்லாடம்:2 97/11

-தோறு (3)
உள்ளு-தோறு உள்ளு-தோறு உணா அமுது உறைக்கும் – கல்லாடம்:2 81/27
உள்ளு-தோறு உள்ளு-தோறு உணா அமுது உறைக்கும் – கல்லாடம்:2 81/27
கொள்ளிவாய் குணங்கு உள்ளு-தோறு இவரிய – கல்லாடம்:2 97/11

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

உள்ளு-தோறு (3)
உள்ளு-தோறு உள்ளு-தோறு உணா அமுது உறைக்கும் – கல்லாடம்:2 81/27
உள்ளு-தோறு உள்ளு-தோறு உணா அமுது உறைக்கும் – கல்லாடம்:2 81/27
கொள்ளிவாய் குணங்கு உள்ளு-தோறு இவரிய – கல்லாடம்:2 97/11