கலிங்கத்துப்பரணியில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

கலிங்கத்துப்பரணி – சொற்கள் – எண்ணிக்கை

பாடல்கள் சொற்கள் பிரி
சொற்கள்
கட்டு
ருபன்கள்
மொத்தச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
596 10,588 18 221 10,827 5261

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (ஒளி_இழை)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = ஒளி_இழை (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = ஒளி, இழை (2) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 3 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். அணி_இழை, வால்_அறிவன், மதி_நுட்பம், பொருள்_பெண்டிர் போன்றன
கூட்டுப்பொருளால் ஒரே சொல் ஆகின்றன. இங்கு, சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும்.
முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, நேர் இழை மகளிர் என்ற தொடரில் நேர், இழை ஆகியவை மகளிர் என்ற சொல்லுக்கு அடைமொழிகளாக வருகின்றன. எனவே அவை தனித்தனிச் சொற்களாகக்
கொள்ளப்படும். நேரிழை கூறினாள் என்றவிடத்தில் இங்கு நேரிழை என்பது அன்மொழித்தொகை ஆகி ஒரே சொல் ஆகிறது.
எனவே இச் சொல் நேர்_இழை எனக்கொள்ளப்படுகிறது. இங்கு நேர், இழை, நேர்_இழை ஆகிய மூன்று சொற்களாக இது கணக்கிடப்படும். நேர்_இழை என்பது தனிச் சொல்லாகவும், நேர், இழை ஆகியவை பிரிசொற்களாகவும் கணக்கிடப்படும்.
எனவே நேர்_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நேர், இழை, நேர்_இழை என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

இழை (1)
அ நேர்_இழை அலகை கணம் அவை கண்டிட மொழியும் – கலிங்:474/2

நேர் (6)
நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் – கலிங்:181/2
நேர் செறுத்தவர்க்கு அரிது நிற்பிடம் நெடு விசும்பு அலால் இடமும் இல்லையே – கலிங்:348/2
நேர் முனையில் தொடுத்த பகழிகள் நேர் வளைவில் சுழற்றும் அளவினில் – கலிங்:436/1
நேர் முனையில் தொடுத்த பகழிகள் நேர் வளைவில் சுழற்றும் அளவினில் – கலிங்:436/1
அ நேர்_இழை அலகை கணம் அவை கண்டிட மொழியும் – கலிங்:474/2
யானை படை சூரர் நேர் ஆன போழ்து அற்று எழுந்து ஆடுகின்றார் தலை – கலிங்:491/1

நேர்_இழை (1)
அ நேர்_இழை அலகை கணம் அவை கண்டிட மொழியும் – கலிங்:474/2

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது.
கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்வை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின்
போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும்,
ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்தொறும் என்ற சொல் நாள்-தொறும் எனக் குறிக்கப்படுகிறது. இதில், நாள்-தொறும் என்பது தனிச்சொல்லாகவும்,
-தொறும் என்பது கட்டுருபனாகவும் கணக்கிடப்பட்டும்.
நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

தொடரடைவு உருவாக்கத்தில் சில வழக்காறுகள் பின்பற்றப்பட்டுள்ளன.

1. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் பாடலின் எண் கொடுக்கப்படும்.
அதற்கடுத்த / என்ற கோட்டை அடுத்து அச் சொல் இடம்பெறும் வரி எண் கொடுக்கப்படும்.

எ.காட்டு

நேய (1)
நேய கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியை கிளி உரைப்ப – கலிங்:67/1

இந்த அடி காணப்படும் பாடல் எண் 67. அந்த எண்ணைச் சொடுக்கினால் முழுப்பாடலையும் காணலாம். அதில் இந்த அடியின் எண் 1.
இது பாடலில் இந்த அடி காணப்படும் அடியின் எண்.

2. வழக்காறு-2

ஒரு சொல் ஒரு வரியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த வரியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல்,
ஒரு பாடலின் இறுதி வரியில் இருந்தால் அடுத்த வரி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

நேரெதிர்த்து (1)

துவர் நிற களிற்று உதியர் ஏவலின் சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து
அவர் நிணத்தொடு அ குருதி நீர் குழைத்து அவர் கரும் தலை சுவர் அடுக்கியே – கலிங்:99/1,2

முதல் அடியின் இறுதியில் ‘நேரெதிர்த்து’ என்ற சொல் வந்துள்ளதால், பொருள் முடிபுக்காக, அடுத்த அடியும் கொடுக்கப்பட்டுள்ளது.

3. வழக்காறு-3

ஒரு அடியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

நேர் (6)

நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் – கலிங்:181/2
நேர் செறுத்தவர்க்கு அரிது நிற்பிடம் நெடு விசும்பு அலால் இடமும் இல்லையே – கலிங்:348/2
நேர் முனையில் தொடுத்த பகழிகள் நேர் வளைவில் சுழற்றும் அளவினில் – கலிங்:436/1
நேர் முனையில் தொடுத்த பகழிகள் நேர் வளைவில் சுழற்றும் அளவினில் – கலிங்:436/1
அ நேர்_இழை அலகை கணம் அவை கண்டிட மொழியும் – கலிங்:474/2
யானை படை சூரர் நேர் ஆன போழ்து அற்று எழுந்து ஆடுகின்றார் தலை – கலிங்:491/1

436-ஆவது பாடலில் நேர் என்ற சொல் இரண்டு முறை வந்திருப்பதால், அந்த அடி இரண்டுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது.