திருவாசகத்தில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

திருவாசகத்தில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

இத் தொடரடைவு எஸ்.ராஜம் அவர்களால் வெளியிடப்பட்ட திருவாசகம் நூலில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. பாடல் எண்களும் அடிகளும் அந்நூலில் உள்ளவாறே உள்ளன. இருப்பினும் இத் தொடரடைவுக்குரிய சொற்பிரிப்பு நெற்களின்படியும் சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன

அதிகாரங்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 51 3438 21798 776 442 23016 8090

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
அஞ்சு_எழுத்து என்ற சொல்லுக்குரிய பிரிசொற்கள் அஞ்சு, எழுத்து ஆகிய இரண்டும். எனவே அஞ்சு_எழுத்து என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் அஞ்சு, அஞ்சு_எழுத்து, எழுத்து ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

அஞ்சு (5)
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் – திருவா:4/19
இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை – திருவா:5 27/3
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணி மலர் தாள் – திருவா:6 11/1
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு_எழுத்தும் என் ஏழைமை-அதனாலே – திருவா:26 6/1
இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1

அஞ்சு_எழுத்து (1)
இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1

எழுத்து (1)
இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின்,
கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும்
ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

என்று-கொல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், என்று-கொல், -கொல் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும். என்று என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது.

என்று-கொல் (1)
காலமே உனை என்று-கொல் காண்பதே – திருவா:5 43/4

-கொல் (4)
தம்தம் மனத்தன பேச எஞ்ஞான்று-கொல் சாவதுவே – திருவா:5 3/4
காலமே உனை என்று-கொல் காண்பதே – திருவா:5 43/4
தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள் என்-கொல் என்று – திருவா:6 8/1
தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம்-கொல்
வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே – திருவா:32 4/3,4

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.