தீ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

தீ (1)

தீ முகத்தில் பறிகொடுத்த திருமுடிக்கா ஒரு முடியை – குற்-குறவஞ்சி:2 401/1

மேல்

தீக்கொழுந்து (1)

திங்கள்கொழுந்தையும் தீக்கொழுந்து ஆக்கிக்கொண்டேனே – குற்-குறவஞ்சி:2 74/2

மேல்

தீட்டி (4)

சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3
பொன் அணி திலதம் தீட்டி பூ மலர் மாலை சூட்டி – குற்-குறவஞ்சி:2 28/3
வங்கார பூஷணம் பூட்டி திலதம் தீட்டி மாரனை கண்ணாலே மருட்டி – குற்-குறவஞ்சி:2 29/1
ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள் – குற்-குறவஞ்சி:2 330/2

மேல்

தீண்டுவார் (1)

முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் வந்து நின்று – குற்-குறவஞ்சி:2 106/1

மேல்

தீம் (2)

வேரிலே பழம் பழுத்து தூரிலே சுளை வெடித்து வெடித்த தீம் தேன் – குற்-குறவஞ்சி:2 81/1
தூங்க காண்பது மாம்பழ கொத்து சுழல காண்பது தீம் தயிர் மத்து – குற்-குறவஞ்சி:2 161/2

மேல்

தீர்க்கிலார் (1)

சின்னத்துரை-தன் சாபம் தீர்க்கிலார்
ஏவரும் புகழ் திருக்குற்றாலர் தாம் சகல பேர்க்கும் – குற்-குறவஞ்சி:2 85/2,3

மேல்

தீர்த்த (1)

தீர்த்த விசேடமும் தலத்தின் சிறந்த விசேடமும் உரைத்தாய் திருக்குற்றால – குற்-குறவஞ்சி:2 180/1

மேல்

தீர்த்தத்தார் (1)

தெள் நீர் வட அருவி தீர்த்தத்தார் செஞ்சடை மேல் – குற்-குறவஞ்சி:2 109/1

மேல்

தீர்த்ததாலே (1)

கொலை களவு கள் காமம் குருத்துரோகம் கொடிய பஞ்சபாதகமும் தீர்த்ததாலே
நிலவு_அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவர் அது நினைக்க வேண்டி – குற்-குறவஞ்சி:1 8/2,3

மேல்

தீர்த்தவர் (2)

தேவர்துரை-தன் சாபம் தீர்த்தவர் வன்ன மாங்குயில் – குற்-குறவஞ்சி:2 85/1
செட்டிக்கு இரங்கி வினை தீர்த்தவர் குற்றாலர் வெற்பில் – குற்-குறவஞ்சி:2 286/1

மேல்

தீர்த்துக்கொள்வேனே (1)

எவ்வாறு தீர்த்துக்கொள்வேனே
செவ் வாய் கரும்பை அநுராக வஞ்சியை – குற்-குறவஞ்சி:2 325/2,3

மேல்

தீர (1)

தீர கனிய மயக்கி முயக்கியே சிங்கார மோகனம் சிங்கி கொண்டாள் அந்த – குற்-குறவஞ்சி:2 329/4

மேல்

தீரா (1)

சீராடி கூடி விளையாடி இப்படி தீரா மயல் தந்த தீராமைக்காரியை – குற்-குறவஞ்சி:2 331/3

மேல்

தீராமைக்காரியை (1)

சீராடி கூடி விளையாடி இப்படி தீரா மயல் தந்த தீராமைக்காரியை
காராடும்கண்டர் தென் ஆரியநாட்டு உறை காரிய பூவையை ஆரிய பாவையை – குற்-குறவஞ்சி:2 331/3,4

மேல்