கட்டுருபன்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

-கொல்லோ (1)

தேற்ற நீ அறிவாய்-கொல்லோ திரிகூடமலையில் சிங்கா – குற்-குறவஞ்சி:2 341/2

மேல்

-தமக்கு (2)

மன்னவர்-தமக்கு வலதுகை நோக்கி – குற்-குறவஞ்சி:2 115/35
அருள் இலஞ்சி வேலர்-தமக்கு ஒரு பெண்ணை கொடுத்தோம் – குற்-குறவஞ்சி:2 151/1

மேல்

-தமக்கும் (1)

காமனார்-தமக்கும் இவர் மாமனார் அம்மே – குற்-குறவஞ்சி:2 188/2

மேல்

-தன் (11)

தேவர்துரை-தன் சாபம் தீர்த்தவர் வன்ன மாங்குயில் – குற்-குறவஞ்சி:2 85/1
சின்னத்துரை-தன் சாபம் தீர்க்கிலார் – குற்-குறவஞ்சி:2 85/2
கன்னங்கரிய குழல் காம வஞ்சி-தன் மார்பில் – குற்-குறவஞ்சி:2 122/2
கட்டழகி-தன் அழகு என் கண் அளவுகொள்ளாதே – குற்-குறவஞ்சி:2 275/4
வந்தனை சேர் சங்குமுத்து-தன் மைத்துனன் மன்னன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 282/4
ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை அன்பன் திருமலைக்கொழுந்து-தன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/1
நாறும் பூ குற்றாலச்சங்கு-தன் கட்டளை நங்கள் ஒல்லார் அரி நரபாலன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/2
வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர் கிருஷ்ணன் வணிகேசன் – குற்-குறவஞ்சி:2 284/3
பேறுடை பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளை சீரான பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 284/4
மட்டு ஆர் குழலி-தன் சாயலை காட்டும் மயூரமே அவள் மா மலர் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே – குற்-குறவஞ்சி:2 309/2
சேயிழை-தன் பொருட்டாலே பஞ்சாட்சரம் செபித்த மன்னவன் பாவம் போனால் போல – குற்-குறவஞ்சி:2 314/4

மேல்

-தனக்கு (1)

சிங்கம் எலாம் ஒத்த துடி சிங்கா உன் சிங்கி-தனக்கு
அங்கம் எலாம் சொல்லி அடையாளம் சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 332/3,4

மேல்

-தனில் (5)

பாகம்-தனில் ஒரு பெண் பச்சைக்கிளி போல் வைத்து – குற்-குறவஞ்சி:2 50/3
மலை-தனில் பொன் வஞ்சி குறவஞ்சி அபரஞ்சி கொஞ்சி வருகின்றாளே – குற்-குறவஞ்சி:2 116/4
வல்லி என ஒரு கொல்லிமலை-தனில் வல்லி அவளினும் மெல்லி இவள் என – குற்-குறவஞ்சி:2 119/2
மன்று-தனில் தெய்வமுரசு என்றும் மேல் முழங்கும் – குற்-குறவஞ்சி:2 176/1
தலை-தனில் பிறையார் பலவினில் உறைவார் தகையினை வணங்கார் சிகை-தனை பிடித்தே – குற்-குறவஞ்சி:2 256/1

மேல்

-தனிலிருந்து (1)

கொப்பழகு குழை மடந்தை பள்ளியறை-தனிலிருந்து
கோயில் புகும் ஏகாந்த சமயம் சகியே – குற்-குறவஞ்சி:2 107/1,2

மேல்

-தனை (14)

பெற்ற தாய்தந்தை-தனை உற்று நீ கேட்கில் – குற்-குறவஞ்சி:2 182/1
பெண்கொடுத்த மலையரசன்-தனை கேட்கவேணும் – குற்-குறவஞ்சி:2 182/2
மன்றல் வரும் சேனை-தனை கண்டு பயந்தால் இந்த – குற்-குறவஞ்சி:2 231/1
தலை-தனில் பிறையார் பலவினில் உறைவார் தகையினை வணங்கார் சிகை-தனை பிடித்தே – குற்-குறவஞ்சி:2 256/1
அரியலூர் சீரங்கம் திருவானைக்கா அடங்கலும் போய் சிங்கி-தனை தேடி சிங்கன் – குற்-குறவஞ்சி:2 320/3
செல்வர் உறை சிவசயிலம் பாவநாசம் திரிகூட சிங்கி-தனை தேடுவானே – குற்-குறவஞ்சி:2 321/4
குற்றால தலத்தின் முன்னே தவத்தால் வந்து கூடினான் சிங்கி-தனை தேடினானே – குற்-குறவஞ்சி:2 326/4
காட்டுவிக்கும் முன் மோக கண் மாய சிங்கி-தனை
கூட்டுவிக்கும் பேர்களுக்கு கூலி என்ன சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 338/3,4
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/4
கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4
வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாண சிங்கி-தனை கண்டு சிங்கன் – குற்-குறவஞ்சி:2 348/3
திண்டாடி நின்ற சிங்கன் சீராடும் சிங்கி-தனை
கண்டாடி துள்ளாடி கள் ஆடும் தும்பியை போல் – குற்-குறவஞ்சி:2 354/2,3
சேலை உடை-தனை சற்றே நெகிழ்க்கவா சிங்கி சும்மா – குற்-குறவஞ்சி:2 388/1
மாமன் எனவே பகரும் வள்ளல்-தனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 402/2

மேல்

-தனையும் (1)

மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன் – குற்-குறவஞ்சி:2 180/2

மேல்

-தன்னில் (7)

வரு சங்க வீதி-தன்னில் வசந்த பூங்கோதை காலில் – குற்-குறவஞ்சி:2 48/1
செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது – குற்-குறவஞ்சி:2 76/3
நல் நகர் குற்றாலம்-தன்னில் எங்கும் நாட்டும் எண்ணூற்றெண்பத்தேழு ஆண்டு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 196/1
நல் நகர் குற்றாலம்-தன்னில் எங்கும் நாட்டும் எண்ணூற்றெண்பத்தேழு ஆண்டு-தன்னில்
பன்னக மா முனி போற்ற தமிழ் பாண்டியனார் முதல் சிற்றொடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/1,2
சேவகர் திருக்குற்றாலர் திருவிளையாட்டம்-தன்னில்
பாவகமாக நூவன் பறவை போல் பறவை கூவ – குற்-குறவஞ்சி:2 263/2,3
நல் தாலம்-தன்னில் உள்ளோர் யாவரேனும் நல் நகர தலத்தில் வந்து பெறுவார் பேறு – குற்-குறவஞ்சி:2 326/1
கங்காளர் திரிகூட கர்த்தர் திரு நாடு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 343/1

மேல்

-தன்னை (4)

வந்த குறவஞ்சி-தன்னை வசந்தவல்லி கண்டு மனம் மகிழ்ச்சி கொண்டு – குற்-குறவஞ்சி:2 128/2
அம் நலார் மொழி-தன்னை பழித்தது என்று ஆடவர் மண்ணில் மூடும் கரும்பு – குற்-குறவஞ்சி:2 157/1
என்னும் ஒரு குறவஞ்சி-தன்னை அழைத்தே அவட்கு – குற்-குறவஞ்சி:2 248/1
கொங்கண சிங்கி-தன்னை கூட்டிவா காட்டுவேனே – குற்-குறவஞ்சி:2 319/4

மேல்

-தாம் (1)

மன்னர்-தாம் இவள் மேல் மயல் சொல்லிவிட்டதோ – குற்-குறவஞ்சி:2 223/27

மேல்

-தான் (4)

பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ – குற்-குறவஞ்சி:2 54/4
நித்திரை-தான் ஒரு சத்துரு ஆச்சுதே மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/2
கன்னி-தான் ஒருவர் மேல் காமித்த குறியோ – குற்-குறவஞ்சி:2 223/28
பின்னையும்-தான் உனக்காக சொல்லுவேன் அம்மே அவன் – குற்-குறவஞ்சி:2 240/1

மேல்

-தானோ (1)

முனி பரவும் இனியானோ வேத முழுப்பலவின் கனி-தானோ
கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ – குற்-குறவஞ்சி:2 54/1,2

மேல்

-தொறும் (4)

வாசல்-தொறும் காத்திருக்கும் கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 100/2
காடு-தொறும் ஓடி வரையாடு குதி பாயும் – குற்-குறவஞ்சி:2 139/1
வான் இரவி முழைகள்-தொறும் நுழையும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 143/2
வாவி-தொறும் நின்று சிங்கன் வேட்டையாடி வட அருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால் – குற்-குறவஞ்சி:2 303/3

மேல்

-தொறும்தொறும் (1)

பண்டை நரர் இவர் தேவர் இவர் என பகுத்து நிறுவிய வேளை-தொறும்தொறும்
மண்டலீகரை நந்தி பிரம்படி மகுட கோடியில் புடைக்கவே – குற்-குறவஞ்சி:2 7/3,4

மேல்

-தோறும் (4)

வேடுவர்கள் தினை விதைக்க சாடு புனம்-தோறும்
விந்தை அகில் குங்குமமும் சந்தனமும் நாறும் – குற்-குறவஞ்சி:2 138/1,2
மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன் – குற்-குறவஞ்சி:2 180/2
வேளை-தோறும் புகுந்து திருவிளையாட்டம் கண்ணி குத்தி வேட்டையாடி – குற்-குறவஞ்சி:2 253/2
சுற்றாத ஊர்-தோறும் சுற்றவேண்டா புலவீர் – குற்-குறவஞ்சி:2 397/1

மேல்

-பால் (1)

நிசம் தரும் திருக்குற்றால நிரந்தரமூர்த்தி உன்-பால்
இசைந்திட கருமம் ஏதோ இசைய நீ இசைத்திடாயே – குற்-குறவஞ்சி:2 82/3,4

மேல்