திருக்கோவையாரில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

திருக்கோவையார் – சொற்கள் – எண்ணிக்கை

பாடல்கள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் மொத்தச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
400 11,805 202 141 12,148 5023

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (ஒளி_இழை)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = ஒளி_இழை (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = ஒளி, இழை (2) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 3 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். அணி_இழை, வால்_அறிவன், மதி_நுட்பம், பொருள்_பெண்டிர் போன்றன கூட்டுப்பொருளால் ஒரே சொல் ஆகின்றன. இங்கு, சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும்.
முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, தே மொழி மகளிர் என்ற தொடரில் தே, மொழி ஆகியவை மகளிர் என்ற சொல்லுக்கு அடைமொழிகளாக வருகின்றன. எனவே அவை தனித்தனிச் சொற்களாகக் கொள்ளப்படும். தேமொழி கூறினாள் என்றவிடத்தில் இங்கு தேமொழி என்பது அன்மொழித்தொகை ஆகி ஒரே சொல் ஆகிறது. எனவே இச் சொல் தே_மொழி எனக்கொள்ளப்படுகிறது. இங்கு தே, மொழி, தே_மொழி ஆகிய மூன்று சொற்களாக இது கணக்கிடப்படும். தே_மொழி என்பது தனிச் சொல்லாகவும், தே, மொழி ஆகியவை பிரிசொற்களாகவும் கணக்கிடப்படும்.
எனவே தே_மொழி என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், தே, மொழி, தே_மொழி என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

தே (4)
தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர் – திருக்கோ:90/1
சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே – திருக்கோ:100/4
தே மாம் பொழில் தில்லை சிற்றம்பலத்து விண்ணோர் வணங்க – திருக்கோ:263/1
சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே – திருக்கோ:268/4

தே_மொழியே (2)
சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே – திருக்கோ:100/4
சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே – திருக்கோ:268/4

மொழியே (6)
படிச்சந்தமும் இதுவே இவளே அ பணி_மொழியே – திருக்கோ:32/4
சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே – திருக்கோ:100/4
துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே – திருக்கோ:112/4
சோதிடம் கொண்டு இது எம்மை கெடுவித்தது தூ_மொழியே – திருக்கோ:138/4
சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே – திருக்கோ:268/4
பல்லாண்டு அடியேன் அடி வலம்கொள்வன் பணி_மொழியே – திருக்கோ:387/4

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது.
கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்வை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின்
போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும்,
ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்தொறும் என்ற சொல் நாள்-தொறும் எனக் குறிக்கப்படுகிறது. இதில், நாள்-தொறும் என்பது தனிச்சொல்லாகவும்,
-தொறும் என்பது கட்டுருபனாகவும் கணக்கிடப்பட்டும்.
நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

தொடரடைவு உருவாக்கத்தில் சில வழக்காறுகள் பின்பற்றப்பட்டுள்ளன.

1. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் பாடலின் எண் கொடுக்கப்படும்.
அதற்கடுத்த / என்ற கோட்டை அடுத்து அச் சொல் இடம்பெறும் வரி எண் கொடுக்கப்படும்.

எ.காட்டு

ஒழிவீர் (1)
ஊர் என்ன என்னவும் வாய் திறவீர் ஒழிவீர் பழியேல் – திருக்கோ:56/3

இந்த அடி காணப்படும் பாடல் எண் 56. அந்த எண்ணைச் சொடுக்கினால் முழுப்பாடலையும் காணலாம். அதில் இந்த அடியின் எண் 3.
இது பாடலில் இந்த அடி காணப்படும் அடியின் எண்.

2. வழக்காறு-2

ஒரு சொல் ஒரு வரியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த வரியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி வரியில் இருந்தால் அடுத்த வரி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

ஒழுக (1)
பதி உடையான் பரங்குன்றினில் பாய் புனல் யாம் ஒழுக
கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின் – திருக்கோ:292/2,3

2-ஆம் அடியின் இறுதியில் ‘ஒழுக’ என்ற சொல் வந்துள்ளதால், பொருள் முடிபுக்காக, அடுத்த அடியும் கொடுக்கப்பட்டுள்ளது.

3. வழக்காறு-3

ஒரு அடியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

கடல் (13)
வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின் – திருக்கோ:6/1
வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின் – திருக்கோ:6/1
சிந்தாமணி தெள் கடல் அமிர்தம் தில்லையான் அருளால் – திருக்கோ:12/1
வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் யான் மறவேன் – திருக்கோ:46/2
————- —————— ———————– ———————————-
கடல் என்ற சொல் 6-ஆவது பாடல் முதல் அடியில் இரண்டு முறை வந்திருப்பதால் அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது.