தாயுமானவர் பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

தாயுமானவர் பாடல்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

இத் தொடரடைவு திரு தி.சம்பந்த முதலியார் அவர்களால் பதிப்பிக்கப்பட்ட தாயுமானசுவாமிகள் பாடல் என்ற நூலில்
கொடுக்கப்பட்டுள்ள பாடல்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது.
பாடல் எண்களும் அடிகளும் அந்நூலில் உள்ளவாறே உள்ளன.
பெரும்பாலும் அந்நூலில் உள்ள பதவுரையில் உள்ளவாறே சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இத் தொடரடைவுக்குரிய சொற்பிரிப்பு நெறிகளின்படியும் சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன

பதிகங்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
மொத்தம் 56 4168 31643 1304 341 33288 11378

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள்
அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
கல்_நெஞ்சமே என்ற சொல்லுக்குரிய பிரிசொற்கள் கல், நெஞ்சமே ஆகிய இரண்டும். எனவே கல்_நெஞ்சமே என்ற சொல்லுக்குரிய
நிகழ்விடங்கள் கல், நெஞ்சமே, கல்_நெஞ்சமே ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

கல்_நெஞ்சமே (1)
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4

கல் (35)
————- ——————– ———————–
காரண மூலம் கல்_ஆல் அடிக்கே உண்டு காணப்பெற்றால் – தாயு:27 425/2
சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே – தாயு:27 430/4
கோலம் படைத்து கல்_ஆல் அடி கீழ் வைகும் கோவுக்கு அன்பாம் – தாயு:27 435/3
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
கரையும் கரையும் மன கல் – தாயு:28 471/4
கல் ஏறும் சில் ஏறும் கட்டி ஏறும் போல – தாயு:28 474/1
கல்லும் உருகாதோ கல்_நெஞ்சே பொல்லாத – தாயு:28 499/2
—————————————- ——————–

நெஞ்சமே (7)
நினைக்கவோ அறியாது என்றன் நெஞ்சமே – தாயு:18 209/4
ஆட்டுவான் இறை என அறிந்து நெஞ்சமே
தேட்டம் ஒன்று அற அருள் செயலில் நிற்றியேல் – தாயு:24 324/2,3
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
கள்ளம் பொருந்தும் மட நெஞ்சமே கொடும் காலர் வந்தால் – தாயு:27 441/1
பொல்லா மயக்கத்தில் ஆழ்ந்து ஆவது என்ன புகல் நெஞ்சமே – தாயு:27 445/4
நெஞ்சமே என் போல நீ அழுந்த வாராயோ – தாயு:29 546/4
நீதனை கலந்து நிற்க நெஞ்சமே நீ வா என்றால் – தாயு:36 574/2

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

காண்பேன்-கொல்லோ என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், காண்பேன்-கொல்லோ, -கொல்லோ என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும். என்று என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது.

காண்பேன்-கொல்லோ (1)
கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2

-கொல்லோ (1)
கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

முத்திக்கான (2)
மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான
நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ – தாயு:24 322/2,3
முத்தி நீ முத்திக்கான முதலும் நீ முதன்மையான – தாயு:36 576/3

(அடி இறுதி)
முக்காலும் (1)
காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

மெளனம் (3)
வாய்க்கும் கைக்கும் மெளனம் மெளனம் என்று – தாயு:18 235/1
வாய்க்கும் கைக்கும் மெளனம் மெளனம் என்று – தாயு:18 235/1
பேசா மௌனம் பெருமான் படைத்ததுவே – தாயு:51 1394/2