சீவக சிந்தாமணியில் உள்ள சொற்களின் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

எண் இலம்பகம் அடிகள் சொற்கள் பிரி
சொற்கள்
கட்டுரு
பன்கள்
அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
0. கடவுள் வாழ்த்து,பதிகம் 116 754 13 3 770 575
1. நாமகள் இலம்பகம் 1516 9881 50 66 9997 4599
2. கோவிந்தையார் இலம்பகம் 336 2257 4 25 2286 1467
3. காந்தருவதத்
தையார் இலம்பகம்
1402 9584 23 97 9704 4427
4. குணமாலையார் இலம்பகம் 1260 7961 18 104 8083 3990
5. பதுமையார் இலம்பகம் 984 6193 18 74 6285 3357
6. கேமசரியார் இலம்பகம் 580 3679 8 41 3728 2254
7. கனகமாலையார் இலம்பகம் 1328 8858 16 96 8970 4371
8. விமலையார் இலம்பகம் 424 2677 0 42 2719 1778
9. சுரமஞ்சரியார் இலம்பகம் 428 2934 8 34 2976 1809
10. மண்மகள் இலம்பகம் 900 6351 5 34 6390 3101
11. பூமகள் இலம்பகம் 204 1447 4 11 1462 963
12. இலக்கணையார் இலம்பகம் 884 5935 6 39 5980 2961
13. முக்தி இலம்பகம் 2192 14715 12 121 14848 5803
மொத்தம் 12554 83226 185 787 84198 18454


விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = அம்_சில்_ஓதி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = அம், சில், ஓதி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

விளக்கம்

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், ஆ_கோள் போன்றன.
சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே
கணக்கிடப்படும். காட்டாக, ஆய்_இழை என்ற அன்மொழித்தொகைச் சொல்லுக்குரிய பிரிசொற்கள் ஆய், இழை ஆகிய இரண்டுமே.
எனவே ஆய்_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், ஆய், ஆய்_இழை, இழை என்ற மூன்று சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

ஆய் (73)
ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன் – சிந்தா:1 55/1
ஆய் செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே – சிந்தா:1 55/4
———– ——————– —————– —————–
அஞ்சி நடுங்கினள் ஆய்_இழை ஆயிடை – சிந்தா:1 219/3
———– ——————– —————– —————–

ஆய்_இழை (5)
அஞ்சி நடுங்கினள் ஆய்_இழை ஆயிடை – சிந்தா:1 219/3
அம் பொன் கொம்பின் ஆய்_இழை ஐவர் நலன் ஓம்ப – சிந்தா:1 363/1
துண்ணென் நெஞ்சினளாய் துடித்து ஆய்_இழை
கண்ணின் நீர் முலை பாய கலங்கினாள் – சிந்தா:3 760/2,3
அண்ணல் அம் குமரன் தன்னொடு ஆய்_இழை ஆடினாளே – சிந்தா:7 1689/4
ஐயனை யாம் அவண் எய்துவம் ஆய்_இழை
நொய்தின் உரை பொருள் உண்டு எனின் நொய்து என – சிந்தா:7 1767/1,2

இழை (51)
இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை – சிந்தா:1 118/3
இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார் – சிந்தா:1 127/1
———— ———————– ———————— ——————
அஞ்சி நடுங்கினள் ஆய்_இழை ஆயிடை – சிந்தா:1 219/3
————————– —————- ——————–

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. கொல், மன், மின், கண்(ஏழன் உருபு)
போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள்
இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

நாள்-தொறும் (2)
நாடி ஆயிரம் நாள்-தொறும் நங்கைமார்க்கு – சிந்தா:12 2577/2
ஆடல் இன் சுவை அமர்ந்து நாள்-தொறும்
பாடல் மெய்ந்நிறீஇ பருகி பண் சுவைத்து – சிந்தா:13 2687/1,2

-தொறும் (15)
உள்ளம் இல்லவர்க்கு ஊர்-தொறும் உய்த்து உராய் – சிந்தா:1 36/3
எழில் பொலி மணியினாலும் கடை-தொறும் இயற்றினாரே – சிந்தா:1 115/4
எங்கும் எங்கும் இடம்-தொறும் உண்மையால் – சிந்தா:1 139/2
————— ————— ————— —————
நாடி ஆயிரம் நாள்-தொறும் நங்கைமார்க்கு – சிந்தா:12 2577/2
————— ————— ————— —————

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் இலம்பக எண் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடல் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பாடலில்
அச் சொல் இடம்பெறும் அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள்
அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

ஓம்பு-மின் (2)
துஞ்சல் ஓம்பு-மின் என்னவும் துஞ்சினீர் – சிந்தா:5 1373/2
வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்பு-மின்
கரும்பு என திரண்ட தோள் கால வேல் கணீர் – சிந்தா:13 2935/3,4

ஓம்பு-மின் என்ற சொல் அடி இறுதியில் வந்துள்ளதால், அடுத்த அடியும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

பெயர் (13)
—————– ——————- ————————–
அ நாட்டு அ ஊர் அ பெயர் அல்லா பெயர் சொன்னான் – சிந்தா:7 1637/3
அ நாட்டு அ ஊர் அ பெயர் அல்லா பெயர் சொன்னான் – சிந்தா:7 1637/3
—————– ——————- ————————–