புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

இத் தொடரடைவு https://www.projectmadurai.org/ என்ற இணையதளத்தில் புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்களின் வைப்புமுறையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது.
நூற்பா, கொளு, வெண்பா ஆகியவற்றின் எண்களும் அந்நூலில் உள்ளவாறே உள்ளன. பெரும்பாலும் அந்நூலில் உள்ளவாறே சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இத் தொடரடைவுக்குரிய சொற்பிரிப்பு நெறிகளின்படியும் சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன

படலங்கள் நூற்
பாக்கள்
சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 12 18 11571 268 67 11906 5023

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன.
சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, ஆய்_இழை என்ற அன்மொழித்தொகைக்குரிய பிரிசொற்கள் ஆய், இழை ஆகிய இரண்டும்.
எனவே ஆய்_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் ஆய், இழை, ஆய்_இழை ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

ஆய் (10)
பாழாய் பரிய விளிவது-கொல் யாழ் ஆய்
புடை தேன் இமிர் கண்ணி பூம் கண் புதல்வர் – புபொவெபாமா:3 17/2,3
ஆய் கழலான் கட்டூர் அகத்து – புபொவெபாமா:3 37/4
ஐயவி சிந்தி நறை புகைத்து ஆய் மலர் தூய் – புபொவெபாமா:4 39/1
ஆய்_இழை சேறலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 54/2
இ மூவுலகில் இருள் கடியும் ஆய் கதிர் போல் – புபொவெபாமா:8 27/1
அரி பாய் உண்கண் ஆய்_இழை புணர்ந்தோன் – புபொவெபாமா:13 14/1
அழி படர் எவ்வம் கூர ஆய்_இழை – புபொவெபாமா:14 12/1
அம் மென் கிளவி கிளி பயில ஆய்_இழை – புபொவெபாமா:14 13/1
அம் சொல் பெரும் பணை தோள் ஆய் இழையாய் தாம் நொடியும் – புபொவெபாமா:17 23/1
அறியேன் அடி உறை ஆய்_இழையால் பெற்றேன் – புபொவெபாமா:17 33/3

ஆய்_இழை (4)
ஆய்_இழை சேறலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 54/2
அரி பாய் உண்கண் ஆய்_இழை புணர்ந்தோன் – புபொவெபாமா:13 14/1
அழி படர் எவ்வம் கூர ஆய்_இழை
பழி தீர் நல் நலம் பாராட்டின்று – புபொவெபாமா:14 12/1,2
அம் மென் கிளவி கிளி பயில ஆய்_இழை
கொம்மை வரி முலை கோங்கு அரும்ப இ மலை – புபொவெபாமா:14 13/1,2

இழை (14)
ஆய்_இழை சேறலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 54/2
ஏத்த இழை அணிந்து இன்னே வருதியால் – புபொவெபாமா:9 62/3
இமையா நாட்டத்து இலங்கு இழை மகளிர் – புபொவெபாமா:9 95/1
புனை இழை இழந்த பின் புலம்பொடு வைகி – புபொவெபாமா:11 6/1
செறுநர் நாண சே இழை அரிவை – புபொவெபாமா:13 8/1
அரி பாய் உண்கண் ஆய்_இழை புணர்ந்தோன் – புபொவெபாமா:13 14/1
அழி படர் எவ்வம் கூர ஆய்_இழை – புபொவெபாமா:14 12/1
அம் மென் கிளவி கிளி பயில ஆய்_இழை – புபொவெபாமா:14 13/1
உணரா எவ்வம் பெருக ஒளி_இழை – புபொவெபாமா:14 16/1
அணி_இழை மெலிவின் ஆற்றல் கூறின்று – புபொவெபாமா:15 10/2
புனை இழை இழந்த பூசல் – புபொவெபாமா:15 23/3
ஓங்கிய வேலான் பணியவும் ஒள்_இழை – புபொவெபாமா:16 17/1
சே இழை அரிவை செல்க என விடுத்தன்று – புபொவெபாமா:16 38/2
இலங்கு_இழை எவ்வம் நலிய கலங்கி – புபொவெபாமா:16 39/2

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

கல்-கொலோ என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், கல்-கொலோ, -கொலோ என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும். என்று என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது.

கல்-கொலோ (1)
கல்-கொலோ சோர்ந்தில எம் கண் – புபொவெபாமா:2 21/4

-கொலோ (3)
கல்-கொலோ சோர்ந்தில எம் கண் – புபொவெபாமா:2 21/4
வாள் அமரின் முன் விலக்கி வான் படர்வார் யார்-கொலோ
கேள்_அலார் நீக்கிய கிண்கிணி கால் காளை – புபொவெபாமா:10 15/1,2
எண்ணியது என்-கொலோ ஈங்கு – புபொவெபாமா:17 23/4

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள்
கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி
முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண்
கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

கலங்கி (3)
கதிர் ஓடை வெல் களிறு பாய கலங்கி
உதிரா மதிலும் உள-கொல் அதிருமால் – புபொவெபாமா:6 9/1,2
கடை நின்று காமம் நலிய கலங்கி
இடைநின்ற ஊர் அலர் தூற்ற புடை நின்ற – புபொவெபாமா:15 3/1,2
இலங்கு_இழை எவ்வம் நலிய கலங்கி
குறியுள் வருந்தாமை குன்று சூழ் சோலை – புபொவெபாமா:16 39/2,3

(அடி இறுதி)

கடும்பு (1)
கலங்கும் அளித்து என் கடும்பு – புபொவெபாமா:9 51/4

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

ஆய்ந்து (13)
ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினை – புபொவெபாமா:1 17/3
ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினை – புபொவெபாமா:1 17/3
ஒள் வாள் மலைந்தார்க்கும் ஒற்று ஆய்ந்து உரைத்தாற்கும் – புபொவெபாமா:1 31/1
கிளை ஆய்ந்து பண்ணிய கேள்வி யாழ்ப்பாணும் – புபொவெபாமா:7 37/1
வளையா வயவரும் பின்னர் கொளை ஆய்ந்து
அசை விளங்கும் பாடலொடு ஆட வருமே – புபொவெபாமா:7 37/2,3
அளியும் என்று இவை ஆய்ந்து உரைத்தன்று – புபொவெபாமா:9 2/2
ஒன்றில் இரண்டு ஆய்ந்து மூன்று அடக்கி நான்கினால் – புபொவெபாமா:9 74/1
ஆய பெருமை அவிர் சடையோர் ஆய்ந்து உணர்ந்த – புபொவெபாமா:12 7/1
வள்வு ஆய்ந்து பண்ணுக திண் தேர் வடி கண்ணாள் – புபொவெபாமா:17 7/1
காய்ந்தும் வாய் கொண்டும் கடும் சொல் ஆர் ஆய்ந்து
நிறம் கண்டு வித்தகர் நேர்விட்ட கோழி – புபொவெபாமா:18 7/2,3
புலவரால் ஆய்ந்து அமைத்த பூழ் – புபொவெபாமா:18 10/4
அளக திரு நுதலாள் ஆய்ந்து புழகத்து – புபொவெபாமா:18 17/2
அ நரம்பும் அ சுவையும் ஆய்ந்து – புபொவெபாமா:18 19/4