பாண்டிக்கோவை பாடல்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 1392 10490 136 211 10837 3582

இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் வே.துரைசாமி அவர்கள் பதிப்பித்த பாண்டிக்கோவை என்ற நூலினின்றும் தெரிவுசெய்யப்பட்டவை. இது ஏப்ரல் 1957-இல் ஸ்டார் பிரசுரம் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலில் 350 பாடல்கள் உள்ளன. ஆனால் இரு பாடல்கள் இரு முறை வந்துள்ளன. (346 = 330) ; (350 = 274) எனவே இத்தொகுப்பில் 348 பாடல்கள் உள்ளன. Project Madurai என்ற இணையதளத்தில் காணப்படும் 325 + 4 பாடல்களும் இத்தொகுப்பில் உள்ளன.

 

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
வாணுதல் என்ற சொல் ஒளிமிகுந்த நெற்றியையுடைய ஒரு பெண்ணைக் குறிக்கும். ஆனால் வாணுதல் என்பதில் வாள், நுதல் என்பன தனித்தனிச் சொற்கள்.
இதனை ஒரு சொல்லாகக் கொண்டால் வாள், நுதல் ஆகிய சொற்களின்  ண்ணிக்கையில் இது சேராது. எனவே இது வாள்_நுதல் என்று கொள்ளப்படும். இப்போது இது வாள்_நுதல் என்று ஒரு சொல்லாகவும், வாள், நுதல் ஆகிய சொற்களின் எண்ணிக்கையிலும் சேர்க்கப்படும். இதற்குரிய பிரிசொற்கள் வாள், நுதல் ஆகிய இரண்டும். எனவே வாள்_நுதல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வாள், நுதல், வாள்_நுதல் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

நுதலே (6)
திரை உறை தெய்வம்-கொல் ஐயம் தரும் இ திரு_நுதலே – பாண்டிக்கோவை:1 2/4
மடமகள் ஆவதை இன்று அறிந்தேன் மதி வாள்_நுதலே – பாண்டிக்கோவை:5 74/4
வருந்திய காரணம் என்னை-கொல்லோ மற்று இவ் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:6 80/4
வரை வளர் மான் நீர் அருவியும் ஆடுதும் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:11 113/4
நறிய பைம் கானம் நையாது நடக்க என் நல்_நுதலே – பாண்டிக்கோவை:16 205/4
நாடன் பகை போல் மெலிகின்றது என் செய்ய நல்_நுதலே – பாண்டிக்கோவை:18 343/4

வாள் (37)
பூ அடி வாள் நெடும் கண் இமைத்தன பூமி தன் மேல் – பாண்டிக்கோவை:1 3/3
குண்டலம் சேர்த்த மதி வாள் முகத்த கொழும் கயல் கண் – பாண்டிக்கோவை:3 33/3
வடி வண்ண வேல் கண்ணினால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 38/4
வடி தடம் கண் இணையால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 41/4
மின்னும் கதிர் ஒளி வாள் முகத்தீர் என் வினா உரைத்தால் – பாண்டிக்கோவை:4 57/3
மடமகள் ஆவதை இன்று அறிந்தேன் மதி வாள்_நுதலே – பாண்டிக்கோவை:5 74/4
வரையாவிடின் மதி வாள்_நுதல் வாடும் வரைவு உரைத்தால் – பாண்டிக்கோவை:5 77/1
மருங்கு அண்ணி வந்த சிலம்பன்-தன் கண்ணும் இவ் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:5 78/3
வந்து ஆடலின் அடி நொந்து-கொல் வாள் நுதல் வாடியதே – பாண்டிக்கோவை:6 79/4
வருந்திய காரணம் என்னை-கொல்லோ மற்று இவ் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:6 80/4
தேர் மன்னு வாள் படை செந்நிலத்து ஓட செரு விளைத்த – பாண்டிக்கோவை:8 84/1
வாள் நெடும் கண்ணும் சிவப்ப செவ் வாயும் விளர்ப்ப வண்டு ஆர் – பாண்டிக்கோவை:8 89/3
வரை வளர் மான் நீர் அருவியும் ஆடுதும் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:11 113/4
வாள் இனத்தால் வென்ற மாறன் திருக்குல மா மதி எம் – பாண்டிக்கோவை:13 151/2
மை ஒன்று வாள் கண் மடந்தை திறத்திட்டு அறம் திரிந்து – பாண்டிக்கோவை:14 181/2
மாலை குடை மன்னன் வாள் நெடுமாறன் வண் கூடலின்-வாய் – பாண்டிக்கோவை:16 192/3
தெளி முத்த வாள் முறுவல் சிறியாள்-தன் சிலம்படியே – பாண்டிக்கோவை:17 211/4
வல்லவன் மாறன் எம் கோன் முனை போல் சுரம் வாள் நுதலாள் – பாண்டிக்கோவை:17 214/2
ஓடு அரி வாள் கண் என் ஆயத்தவருக்கு உரை-மின்களே – பாண்டிக்கோவை:17 226/4
வாள் வாய் உக செற்ற வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:17 248/3
மண் இவர் சீர் மன்னன் வாள் நெடுமாறன் மலயம் என்னும் – பாண்டிக்கோவை:17 261/2
ஆக்கிய வேந்தர் அமர் நாடு அடைய தன் அம் சுடர் வாள்
நோக்கிய கோன் அம் தண் கூடல் அனைய நுடங்கு_இடையே – பாண்டிக்கோவை:18 264/3,4
வாம் மான் நெடும் தேர் வய மன்னர் வாள் முனை ஆர்க்கும் வண்டு ஆர் – பாண்டிக்கோவை:18 269/1
வய வாள் செறித்த எம் கோன் வஞ்சி அன்னாள் தன் மதி முகமே – பாண்டிக்கோவை:18 273/4
இரிந்த வகை கண்ட வாள் மன்னன் தென் நாட்டு இரும் சுருள் போய் – பாண்டிக்கோவை:18 277/2
வரை தங்கு கான் நமர் செல்லுப என்றலும் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:18 290/2
மன் ஏந்திய புகழ் வாள் நெடுமாறன்-தன் மரந்தை அன்ன – பாண்டிக்கோவை:18 291/1
விழித்தார் பட விழிஞக்கடல்கோடி தன் வெண் சுடர் வாள்
கழித்தான் குமரி நல் நீர் கொண்டு எழுந்த கண முகிலே – பாண்டிக்கோவை:18 305/3,4
மஞ்சு ஆர் இரும் பொழில் வல்லத்து வாள் மன்னர் போர் அழித்த – பாண்டிக்கோவை:18 311/1
செஞ்சுடர் வாள் முகத்தாள் முன்னை என்-பால் திரியலனேல் – பாண்டிக்கோவை:18 316/2
சுடர் வாள் படை போல உடைக என் சங்கங்களே – பாண்டிக்கோவை:18 316/4
கொல் ஒன்று வாள் படையான் தமிழ்நாடு அன்ன கோல்_வளையே – பாண்டிக்கோவை:18 319/4
தெளியும் சுடர் ஒளி வாள் மன்னன் செங்கோல் என சிறந்த – பாண்டிக்கோவை:18 321/3
மை ஆர் தடம் கண் மடந்தை வருந்தற்க வாள் முனை மேல் – பாண்டிக்கோவை:18 328/1
வருவர் வயங்கு_இழாய் வாட்டாற்று எதிர்நின்று வாள் மலைந்த – பாண்டிக்கோவை:18 339/1
ஒளி தரு வாள் நுதலாள் நைய இவ்வாறு ஒழுகுவதே – பாண்டிக்கோவை:18 344/4
மான கடும் சிலை மான் தேர் வரோதயன் வாள் முனை போன்று – பாண்டிக்கோவை:18 345/1

வாள்_நுதலே (3)
மடமகள் ஆவதை இன்று அறிந்தேன் மதி வாள்_நுதலே – பாண்டிக்கோவை:5 74/4
வருந்திய காரணம் என்னை-கொல்லோ மற்று இவ் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:6 80/4
வரை வளர் மான் நீர் அருவியும் ஆடுதும் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:11 113/4

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின்,
கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும்
ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

வம்-மின் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், வம்-மின், -மின் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-மின் (14)
தூ உண்டை வண்டினங்காள் வம்-மின் சொல்லு-மின் துன்னி நில்லா – பாண்டிக்கோவை:1 5/1
தூ உண்டை வண்டினங்காள் வம்-மின் சொல்லு-மின் துன்னி நில்லா – பாண்டிக்கோவை:1 5/1
மறையாது உரை-மின் எமக்கு நும் பேரொடு வாழ் பதியே – பாண்டிக்கோவை:5 62/4
கண் இவர் பூம் தண் சிலம்பிடை வாரல்-மின் காப்பு உடைத்தால் – பாண்டிக்கோவை:12 116/3
நில்லாது இயங்கு-மின் காப்பு உடைத்து ஐய இ நீள் புனமே – பாண்டிக்கோவை:12 117/4
காவலராய் நிற்பர் வாரன்-மின் நீர் இ கடி புனத்தே – பாண்டிக்கோவை:12 118/4
கோட்டிய வில்லர் குறவர் நண்ணன்-மின் இ கொய் புனத்தே – பாண்டிக்கோவை:12 128/4
நடை மன்னும் என்று எம்மை நீர் வந்து நண்ணன்-மின் நீர் வள நாட்டிடை – பாண்டிக்கோவை:12 131/1
குழலாள் ஒருத்தி சென்றாளோ உரை-மின் இ குன்றிடத்தே – பாண்டிக்கோவை:17 216/4
பட அரவு அல்குல் உம் பாவைக்கு இரங்கல்-மின் பண்டு கெண்டை – பாண்டிக்கோவை:17 222/2
இ நீர்மையீர் இரங்கல்-மின் நறையாற்று இகல் அரசர்-தம் – பாண்டிக்கோவை:17 223/2
இரும் கடல் போல் துயர் எய்தல்-மின் ஈன்றன என்று முந்நீர் – பாண்டிக்கோவை:17 224/3
கொடி மேல் உரும் அதிர் கூர் இருள் வாரல்-மின் நீர் மகிழும்படி – பாண்டிக்கோவை:17 254/3
மேல் பகல் வம்-மின் வந்தால் விரும்பும் என் பல்_வளையே – பாண்டிக்கோவை:17 254/4

வம்-மின் (2)
தூ உண்டை வண்டினங்காள் வம்-மின் சொல்லு-மின் துன்னி நில்லா – பாண்டிக்கோவை:1 5/1
மேல் பகல் வம்-மின் வந்தால் விரும்பும் என் பல்_வளையே – பாண்டிக்கோவை:17 254/4

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

சாந்தம் (2)
சாந்தம் எம் சாந்தம் விளையாடு இடமும் தளை அவிழும் – பாண்டிக்கோவை:15 184/3
சாந்தம் எம் சாந்தம் விளையாடு இடமும் தளை அவிழும் – பாண்டிக்கோவை:15 184/3