வை – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


வைக்கும் (1)

பேராசை வைக்கும் பிராயமோ நேராதார் – நந்திக்-:2 62/2

மேல்

வைத்த (2)

விலங்கல் வைத்த மின் நோக்கின் மேலும் உண்டோ வினையேற்கே – நந்திக்-:2 32/4
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம் – நந்திக்-:2 55/1

மேல்

வைத்து (1)

ஆட்டாதே வைத்து என்னை ஆயிரமும் செய்தீரே – நந்திக்-:2 46/4

மேல்

வைத்தே (1)

நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பளே வஞ்சி நெஞ்சு உலர்ந்தே – நந்திக்-:2 96/4

மேல்

வைதிடற்கு (1)

அடற்கு ஊடு சாவே அமையாது அவர் வைதிடற்கு
ஊறுவேனுக்கு ஏது ஆவி உண்டோ – நந்திக்-:2 73/3,4

மேல்

வைப்பார்க்கு (1)

பங்கில் வைப்பார்க்கு இல்லை பவம் – நந்திக்-:1 4/4

மேல்

வையத்தார்க்கே (1)

மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே – நந்திக்-:2 53/4

மேல்

வையம் (2)

வடக்கு உடையான் நந்தி மானோதயன் இந்த வையம் எல்லாம் – நந்திக்-:2 65/2
தையல் உறவு தவிர்ந்தோமே வையம்
மணக்கும் பெரும் புகழான் மானபரன் நந்தி – நந்திக்-:2 108/2,3

மேல்

வையம்-தன்னில் (1)

வளவு கண்டான் நந்தி மானோதயன் வையம்-தன்னில் மகிழ் – நந்திக்-:2 48/2

மேல்