முக்கூடற் பள்ளு நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 676 5589 8 26 5623 3667

விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2


1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, நஞ்சைப்போன்றவர் என்ற பொருள்படும் நஞ்சனார் என்பதில் நஞ்சு, அனார் என்பன தனித்தனிச் சொற்கள். ஆனால் நஞ்சனார் என்பது ஒரே சொல்லாய் நஞ்சைப்போன்றவர் என்பதைக் குறிக்கும். இது நஞ்சு_அனார் என்று கொள்ளப்படும் இதற்குரிய பிரிசொற்கள் நஞ்சு, அனார் ஆகிய இரண்டும். எனவே நஞ்சு_அனார் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் நஞ்சு, அனார், நஞ்சு_அனார் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

அனார் (2)
குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:0 18/2
கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார் – முக்-பள்ளு:0 129/1

நஞ்சு (1)
கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார் – முக்-பள்ளு:0 129/1

நஞ்சு_அனார் (1)
கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார் – முக்-பள்ளு:0 129/1

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

வீதி-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், வீதி-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-தொறும் (2)
சறுக்கும்-தொறும் குதிப்பும் சுறுக்கும் தலையசைப்பும் தடி சுற்றி ஏப்பமிட்டே அடிவைப்பதும் – முக்-பள்ளு:0 10/3
வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:0 83/2

வீதி-தொறும் (1)
வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:0 83/2

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

ஊரே (5)
செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும் செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே
நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால் நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்டேன் நான் – முக்-பள்ளு:0 14/1,2
அண்டர்நாயகர் செண்டலங்காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:0 19/4
வங்க வாரிதி வெம் கடு உண்ட மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:0 20/4
ஆதிநாதர் அனாதி ஒருத்தர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:0 23/4
மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:0 24/4

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

வாரணம் (2)
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:0 46/4
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:0 46/4