கே – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேசவன் 1
கேட்க 7
கேட்கப்படும் 1
கேட்கில் 4
கேட்கிலாத 1
கேட்கின்றேன் 2
கேட்கும் 5
கேட்குமா 1
கேட்ட 4
கேட்டருளி 1
கேட்டல் 5
கேட்டலால் 1
கேட்டலும் 1
கேட்டலுமே 2
கேட்டவர் 2
கேட்டவன் 1
கேட்டாய் 1
கேட்டார் 6
கேட்டாரும் 2
கேட்டாள் 3
கேட்டான் 2
கேட்டான்தான் 1
கேட்டானை 2
கேட்டியாகில் 1
கேட்டியேல் 2
கேட்டிராகில் 1
கேட்டிரேல் 1
கேட்டிலேன் 1
கேட்டு 65
கேட்டும் 4
கேட்டேன் 1
கேட்டொழிந்தேன் 1
கேட்ப 2
கேட்பதன் 1
கேட்பது 1
கேட்பவர் 1
கேட்பவர்-தம் 1
கேட்பவர்க்கும் 1
கேட்பவரும் 1
கேட்பார் 5
கேட்பார்க்கும் 1
கேட்பாருமாய் 1
கேட்பான் 1
கேட்பானை 1
கேட்பித்தாற்கு 1
கேட்பித்து 1
கேட்பிப்பாரும் 1
கேட்பு 1
கேடிலி 2
கேடிலியை 12
கேடினர் 1
கேடு 48
கேடும் 6
கேடே 1
கேண்-மின் 12
கேண்-மின்கள் 3
கேண்-மின்களோ 2
கேண்-மினேகளோ 1
கேண்-மினோ 2
கேண்மை 1
கேண்மையார் 1
கேண்மையால் 1
கேண்மையாளொடும் 1
கேண்மையை 1
கேண 1
கேதகை 4
கேதகைகள் 1
கேதகையும் 1
கேதத்தினை 1
கேதாரத்தார் 1
கேதாரத்தும் 1
கேதாரத்தை 2
கேதாரம் 12
கேதாரமே 10
கேதி 1
கேதிசரம் 1
கேதீச்சுரத்தானே 9
கேதீச்சுரத்தானை 1
கேதீச்சுரத்து 3
கேதீச்சுரம் 8
கேதுகின்றேன் 1
கேரவல் 1
கேழ் 2
கேழல் 25
கேழலின் 1
கேழலை 1
கேள் 8
கேள்வன் 6
கேள்வனும் 3
கேள்வனை 1
கேள்வி 13
கேள்வியர் 3
கேள்வியை 1
கேளா 7
கேளாது 4
கேளாதே 6
கேளாய் 2
கேளார் 2
கேளீர் 10
கேளு-மின் 1
கேளேன்-மின் 1

கேசவன் (1)

கேழல் அது ஆகி கிளறிய கேசவன் காண்பு அரிதாய் – தேவா-அப்:1024/1
மேல்


கேட்க (7)

மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல் அறத்தை – தேவா-சம்:515/2
ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி – தேவா-சம்:2009/1
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2593/4
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/4
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர் – தேவா-சுந்:900/1
மேல்


கேட்கப்படும் (1)

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை – தேவா-சம்:3063/2
மேல்


கேட்கில் (4)

உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும் – தேவா-அப்:793/2
சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் – தேவா-அப்:823/1
பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என் – தேவா-அப்:2068/1
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில்
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/3,4
மேல்


கேட்கிலாத (1)

பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம் – தேவா-சம்:2756/2
மேல்


கேட்கின்றேன் (2)

விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின் – தேவா-சம்:3204/1
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன்
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/1,2
மேல்


கேட்கும் (5)

பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை – தேவா-அப்:1247/1
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1483/2
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை – தேவா-அப்:1915/3
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர் – தேவா-சுந்:899/3
மேல்


கேட்குமா (1)

கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டியாகில் – தேவா-அப்:231/1
மேல்


கேட்ட (4)

குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3308/3
துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட
அட்டமாமூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும் – தேவா-அப்:763/2,3
அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்தும் – தேவா-சுந்:61/3
மேல்


கேட்டருளி (1)

போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:858/3,4
மேல்


கேட்டல் (5)

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த – தேவா-சம்:2/3
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே – தேவா-சம்:1142/4
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் – தேவா-சம்:1270/3
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2282/3
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும் – தேவா-சுந்:228/3
மேல்


கேட்டலால் (1)

பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால்
கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே – தேவா-சம்:2696/3,4
மேல்


கேட்டலும் (1)

இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும்
வரத்தினான் மயிலாடுதுறை தொழும் – தேவா-அப்:1466/2,3
மேல்


கேட்டலுமே (2)

நம்பி இங்கே இருந்தீரே என்று நான் கேட்டலுமே
உம்பர் தனி துணை எனக்கு உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:905/3,4
உன்னதமாய் கேட்டலுமே உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:906/4
மேல்


கேட்டவர் (2)

விடுத்து அருள்செய்து இசை கேட்டவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2896/2
கன்னலின் கீதம் பாட கேட்டவர் காஞ்சி-தன்னுள் – தேவா-அப்:433/3
மேல்


கேட்டவன் (1)

இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம் – தேவா-அப்:1557/3
மேல்


கேட்டாய் (1)

பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
மேல்


கேட்டார் (6)

யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/3
தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவா-சம்:2249/4
கந்திருவங்கள் கேட்டார் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:313/4
தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:323/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
மருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:532/4
மேல்


கேட்டாரும் (2)

கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/3
கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி – தேவா-சம்:1906/2,3
மேல்


கேட்டாள் (3)

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – தேவா-அப்:2343/1
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – தேவா-அப்:2343/1,2
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – தேவா-அப்:2343/2
மேல்


கேட்டான் (2)

கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே – தேவா-அப்:1294/4
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
மேல்


கேட்டான்தான் (1)

மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/4
மேல்


கேட்டானை (2)

இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
மேல்


கேட்டியாகில் (1)

கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டியாகில்
நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே – தேவா-அப்:231/1,2
மேல்


கேட்டியேல் (2)

விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:359/2
மேல்


கேட்டிராகில் (1)

கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில்
நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டல் ஆமே – தேவா-சம்:3377/3,4
மேல்


கேட்டிரேல் (1)

பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கை – தேவா-அப்:1973/2,3
மேல்


கேட்டிலேன் (1)

கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டியாகில் – தேவா-அப்:231/1
மேல்


கேட்டு (65)

தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:481/3,4
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:487/3,4
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே – தேவா-சம்:522/2
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள் – தேவா-சம்:774/2
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் – தேவா-சம்:783/3
அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே – தேவா-சம்:924/2
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரி குயில்கள் – தேவா-சம்:1161/2
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/3,4
பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு
விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/3,4
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1527/4
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்-மின் – தேவா-சம்:1588/2
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்-மின் – தேவா-சம்:1621/2
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/3
உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார் – தேவா-சம்:2055/2
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு
அண்ணலாய் அருள்செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2503/3,4
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/2
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை – தேவா-சம்:2626/3
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4
பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய் – தேவா-சம்:2706/3
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/3
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை – தேவா-சம்:2792/3
அருத்தனை திறம் அடியர்-பால் மிக கேட்டு உகந்த வினா உரை – தேவா-சம்:3210/2
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3
பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின் – தேவா-சம்:4146/2
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:5/3
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு
உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/1,2
துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு
காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் – தேவா-அப்:49/1,2
இடகிலேன் அமணர்கள்-தம் அறவுரை கேட்டு அலமந்தேன் – தேவா-அப்:124/2
சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு – தேவா-அப்:270/1
கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:283/4
கீதராய் கீதம் கேட்டு கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:330/1
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/4
பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் – தேவா-அப்:678/3
இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா – தேவா-அப்:801/2
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/2
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு
இரக்கம் ஆகி அருள்புரி ஈசனை – தேவா-அப்:1699/1,2
அடுத்தலும் அவன் இன்னிசை கேட்டு அருள் – தேவா-அப்:1710/3
கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது – தேவா-அப்:1900/2
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன் கழல் – தேவா-அப்:1950/3
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/3,4
மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/3
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/1,2
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/2,3
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு
சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:49/1,2
அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே – தேவா-சுந்:403/4
குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த – தேவா-சுந்:568/3
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/2
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/2,3
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/3
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/2
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/2,3
செம் சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:891/4
மேல்


கேட்டும் (4)

அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே – தேவா-சம்:193/2
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4
வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையை கேட்டும்
நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் – தேவா-சுந்:610/1,2
மேல்


கேட்டேன் (1)

கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன் – தேவா-சுந்:210/2
மேல்


கேட்டொழிந்தேன் (1)

கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:210/2,3
மேல்


கேட்ப (2)

பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே – தேவா-சம்:1908/3,4
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
மேல்


கேட்பதன் (1)

உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் – தேவா-சம்:2521/2
மேல்


கேட்பது (1)

கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன் – தேவா-சுந்:210/2
மேல்


கேட்பவர் (1)

உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் – தேவா-சம்:4130/3
மேல்


கேட்பவர்-தம் (1)

காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே – தேவா-சுந்:177/4
மேல்


கேட்பவர்க்கும் (1)

சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே – தேவா-சம்:2735/4
மேல்


கேட்பவரும் (1)

ஆரூரன் அரும் தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும்
சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/3,4
மேல்


கேட்பார் (5)

இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார்
தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே – தேவா-சம்:2244/3,4
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார்
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/2,3
பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:426/2,3
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2436/4
பாடும் அடியார் கேட்பார் மேல் பாவம் ஆன பறையுமே – தேவா-சுந்:549/4
மேல்


கேட்பார்க்கும் (1)

சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே – தேவா-சம்:2080/4
மேல்


கேட்பாருமாய் (1)

கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
மேல்


கேட்பான் (1)

கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா – தேவா-சம்:3375/2
மேல்


கேட்பானை (1)

கேட்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2759/4
மேல்


கேட்பித்தாற்கு (1)

மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண் – தேவா-அப்:2583/2
மேல்


கேட்பித்து (1)

இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு – தேவா-சம்:2894/3
மேல்


கேட்பிப்பாரும் (1)

கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா – தேவா-சம்:491/3
மேல்


கேட்பு (1)

பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1
மேல்


கேடிலி (2)

மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2
கெந்தத்தன் காண் கெடில வீரட்டன் காண் கேடிலி காண் கெடுப்பார் மற்று இல்லாதான் காண் – தேவா-அப்:2575/2
மேல்


கேடிலியை (12)

கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு – தேவா-அப்:2626/3
கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2756/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2757/4
கிளைவானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2758/4
கேட்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2759/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2760/4
கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2761/4
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2762/4
கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2763/4
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2764/4
கிறிப்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2765/4
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/3
மேல்


கேடினர் (1)

நெறியா உணரா நிலை கேடினர் நித்தல் – தேவா-சம்:358/2
மேல்


கேடு (48)

கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடு இலா – தேவா-சம்:482/1
கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா – தேவா-சம்:491/3
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின் – தேவா-சம்:567/3
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:634/1
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/3
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த – தேவா-சம்:899/3
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல் – தேவா-சம்:1138/1
தோற்று அவன் கேடு அவன் துணை முலையாள் – தேவா-சம்:1186/1
கெடுத்தானை கேடு இலா செம்மை உடையானை – தேவா-சம்:1641/2
கெழியார் இமையோரொடு கேடு இலரே – தேவா-சம்:1698/4
தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில் – தேவா-சம்:1925/2
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/4
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப – தேவா-சம்:2328/1
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் – தேவா-சம்:2433/2
கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும் – தேவா-சம்:2555/1
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே – தேவா-சம்:2628/4
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா – தேவா-சம்:2889/1
கிறிபடும் உடையினன் கேடு இல் கொள்கையன் – தேவா-சம்:3014/3
கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா – தேவா-சம்:3250/1
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3
கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ – தேவா-சம்:3677/2
பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று – தேவா-அப்:407/3
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா – தேவா-அப்:971/1
கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே – தேவா-அப்:1112/4
கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது – தேவா-அப்:1640/1
கேளு-மின் இளமை அது கேடு வந்து – தேவா-அப்:1774/1
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/2
கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2756/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2757/4
கிளைவானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2758/4
கேட்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2759/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2760/4
கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2761/4
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2762/4
கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2763/4
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2764/4
கிறிப்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2765/4
கெடுவிப்பாய் அல்லாதார் கேடு இலா பொன் அடிக்கே – தேவா-சுந்:297/3
மேல்


கேடும் (6)

அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார் – தேவா-சம்:186/1
கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடு இலா – தேவா-சம்:482/1
வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம் – தேவா-சம்:2889/3
கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில் – தேவா-சம்:3377/3
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும்
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4105/3,4
மேல்


கேடே (1)

கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே – தேவா-சம்:381/4
மேல்


கேண்-மின் (12)

பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1991/2,3
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின்
விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2646/2,3
உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை – தேவா-அப்:1300/1
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர் – தேவா-அப்:1667/2
சாற்றி சொல்லுவன் கேண்-மின் தரணியீர் – தேவா-அப்:1676/1
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர் – தேவா-அப்:1764/1
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர – தேவா-அப்:1767/2
பார்உளீர் இது கேண்-மின் பரு வரை – தேவா-அப்:1769/1
வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள் – தேவா-அப்:1788/1
இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய – தேவா-அப்:1981/1
மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி – தேவா-அப்:1982/1
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
மேல்


கேண்-மின்கள் (3)

இருந்து சொல்லுவன் கேண்-மின்கள் ஏழைகாள் – தேவா-அப்:1675/1
நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும் – தேவா-அப்:1768/1
பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்து அல்லாதவர்கட்கே – தேவா-சுந்:456/3,4
மேல்


கேண்-மின்களோ (2)

செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள – தேவா-அப்:84/1
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து – தேவா-அப்:1009/2,3
மேல்


கேண்-மினேகளோ (1)

எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
மேல்


கேண்-மினோ (2)

குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே – தேவா-அப்:1469/2,3
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/2,3
மேல்


கேண்மை (1)

கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம் – தேவா-சம்:3275/3
மேல்


கேண்மையார் (1)

சொல்லார் கேண்மையார் சுடர் பொன் கழல் ஏத்த – தேவா-சம்:875/2
மேல்


கேண்மையால் (1)

கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
மேல்


கேண்மையாளொடும் (1)

கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி – தேவா-சம்:2041/3
மேல்


கேண்மையை (1)

கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே – தேவா-சம்:2947/4
மேல்


கேண (1)

கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறள் ஆமை – தேவா-சம்:1113/1
மேல்


கேதகை (4)

கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி – தேவா-சம்:2793/3
கந்தம் ஆர் கேதகை சந்தன காடு சூழ் கதலி மாடே – தேவா-சம்:3759/1
துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து – தேவா-சம்:3789/3
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1
மேல்


கேதகைகள் (1)

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் – தேவா-சம்:3563/3
மேல்


கேதகையும் (1)

பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
மேல்


கேதத்தினை (1)

கேதத்தினை இல்லார் சிவகெதியை பெறுவாரே – தேவா-சம்:96/4
மேல்


கேதாரத்தார் (1)

கேதிசரம் மேவினார் கேதாரத்தார் கெடில வட அதிகைவீரட்டத்தார் – தேவா-அப்:2595/2
மேல்


கேதாரத்தும் (1)

மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் வில்வீச்சுரம் வெற்றியூரும் – தேவா-அப்:2793/2,3
மேல்


கேதாரத்தை (2)

ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் – தேவா-சம்:2713/2,3
தேவன் திரு கேதாரத்தை ஊரன் உரைசெய்த – தேவா-சுந்:801/3
மேல்


கேதாரம் (12)

வரை ஆர் அருவி சூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மா மேருவும் – தேவா-அப்:2152/3
கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு – தேவா-அப்:2626/3
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா – தேவா-அப்:2805/1
கீழ் மேல் உற நின்றான் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:792/4
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:793/4
செம் பொன் பொடி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:794/4
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:795/4
கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே – தேவா-சுந்:796/4
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே – தேவா-சுந்:797/4
கிண்ணென்று இசை முரலும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:798/4
கிளைக்க மணி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:799/4
கெதி பேறுசெய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே – தேவா-சுந்:800/4
மேல்


கேதாரமே (10)

கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/4
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4
கெந்தம் நாற கிளரும் சடை எந்தை கேதாரமே – தேவா-சம்:2705/4
கிள்ளை ஏனல் கதிர் கொணர்ந்து வாய் பெய்யும் கேதாரமே – தேவா-சம்:2706/4
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே – தேவா-சம்:2707/4
கீறி நாளும் முசு கிளையொடு உண்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2708/4
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே – தேவா-சம்:2709/4
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/4
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே – தேவா-சம்:2711/4
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே – தேவா-சம்:2712/4
மேல்


கேதி (1)

கேதி வண்டு அறையும் திரு கோளிலி – தேவா-அப்:1649/3
மேல்


கேதிசரம் (1)

கேதிசரம் மேவினார் கேதாரத்தார் கெடில வட அதிகைவீரட்டத்தார் – தேவா-அப்:2595/2
மேல்


கேதீச்சுரத்தானே (9)

செத்தார் எலும்பு அணிவான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:812/4
திடமா உறைகின்றான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:813/4
செம் கண் அரவு அசைத்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:814/4
தெரியும் மறை வல்லான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:815/4
தெங்கு அம் பொழில் சூழ்ந்த திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:816/4
செய்ய சடைமுடியான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:817/4
ஏனத்து எயிறு அணிந்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:818/4
சிட்டன் நமை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:819/4
தேவன் எனை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:820/4
மேல்


கேதீச்சுரத்தானை (1)

சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை
மறை ஆர் புகழ் ஊரன் அடித்தொண்டன் உரைசெய்த – தேவா-சுந்:821/2,3
மேல்


கேதீச்சுரத்து (3)

உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே – தேவா-சம்:2634/4
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/4
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை அணி காழி – தேவா-சம்:2637/2
மேல்


கேதீச்சுரம் (8)

கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ கடுவினை அடையாவே – தேவா-சம்:2627/4
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே – தேவா-சம்:2628/4
அண்ணல் நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2629/4
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி – தேவா-சம்:2630/3
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே – தேவா-சம்:2632/4
தொண்டர் நாள்-தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சுரம் அதுதானே – தேவா-சம்:2633/4
அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே – தேவா-சம்:2636/4
மேல்


கேதுகின்றேன் (1)

கெடுவது இ மனிதர் வாழ்க்கை காண்-தொறும் கேதுகின்றேன்
முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும் – தேவா-அப்:498/2,3
மேல்


கேரவல் (1)

கொல்லி குளிர் அறைப்பள்ளி கேரவல் வீரட்டம் கோகரணம் கோடிகாவும் – தேவா-அப்:2786/2
மேல்


கேழ் (2)

கெடுத்தானே கேழ் கிளரும் திரு காறாயில் – தேவா-சம்:1630/3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3
மேல்


கேழல் (25)

ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா – தேவா-சம்:491/3
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின் – தேவா-சம்:567/3
ஆடு அரவத்து அழகு ஆமை அணி கேழல் கொம்பு ஆர்த்த – தேவா-சம்:668/1
பின்னு சடைகள் தாழ கேழல் எயிறு பிறழ போய் – தேவா-சம்:803/1
கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறள் ஆமை – தேவா-சம்:1113/1
பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு – தேவா-சம்:1391/1
மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் – தேவா-சம்:1491/3
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி – தேவா-சம்:2393/3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே – தேவா-சம்:2632/4
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே – தேவா-சம்:2707/4
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னமாய் – தேவா-சம்:2798/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/3
பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள – தேவா-அப்:12/1
கேழல் வெண் கெம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே – தேவா-அப்:493/1
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா – தேவா-அப்:971/1
கேழல் அது ஆகி கிளறிய கேசவன் காண்பு அரிதாய் – தேவா-அப்:1024/1
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/1,2
முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா – தேவா-அப்:3026/1
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய் – தேவா-சுந்:1003/1
மேல்


கேழலின் (1)

தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
மேல்


கேழலை (1)

வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
மேல்


கேள் (8)

மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மா பெருந்தேவி கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/1,2
சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள்
திரி சிராப்பள்ளி என்றலும் தீவினை – தேவா-அப்:1912/2,3
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
மேல்


கேள்வன் (6)

உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன்
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/2,3
ஆகத்து உமை_கேள்வன் அரவ சடை தாழ – தேவா-சம்:930/1
ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் – தேவா-சம்:2206/3
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/4
வரையின்மடமகள்_கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம் – தேவா-சுந்:740/3
மேல்


கேள்வனும் (3)

உடை உடையானும் மை ஆர்ந்த ஒண் கண் உமை_கேள்வனும் – தேவா-சம்:2878/2
மு அழல் நான்மறை ஐந்தும் ஆய முனி கேள்வனும்
கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள் – தேவா-சம்:2884/2,3
பூமேலானும் பூமகள்_கேள்வனும் – தேவா-அப்:1548/1
மேல்


கேள்வனை (1)

குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
மேல்


கேள்வி (13)

நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:44/3
நல்ல கேள்வி ஞானசம்பந்தன் – தேவா-சம்:282/1
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:554/2
கீதத்து இசையோடும் கேள்வி கிடையோடும் – தேவா-சம்:883/3
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:1523/2
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/3
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்பந்தன – தேவா-சம்:2549/3
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:2735/2
பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால் – தேவா-சம்:3360/2
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3878/3
கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன் – தேவா-சம்:4130/2
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
மேல்


கேள்வியர் (3)

நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய – தேவா-சம்:58/1
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா – தேவா-சம்:2889/1
கீதத்தின் பொலிந்த ஓசை கேள்வியர் வேள்வியாளர் – தேவா-அப்:619/3
மேல்


கேள்வியை (1)

வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/3
மேல்


கேளா (7)

கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/4
கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/4
கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே – தேவா-சம்:2239/4
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4110/2
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:240/4
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
மேல்


கேளாது (4)

இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள் – தேவா-சம்:676/2
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ – தேவா-சம்:1253/2
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:983/2
கையன்மார் உரை கேளாது எழு-மினோ – தேவா-அப்:1873/2
மேல்


கேளாதே (6)

முட்டை கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:873/2,3
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர் – தேவா-சம்:1403/2
திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின் – தேவா-சம்:1915/3
புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள் – தேவா-சம்:1969/2
பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/2,3
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே
தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3899/2,3
மேல்


கேளாய் (2)

கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/3
நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
மேல்


கேளார் (2)

யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள்தாம் – தேவா-சம்:2717/3
கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் – தேவா-அப்:355/3
மேல்


கேளீர் (10)

அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:740/4
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:741/4
எல்லை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:742/4
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:743/4
ஆதி இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:744/4
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:745/4
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:746/4
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:747/4
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:748/4
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:749/4
மேல்


கேளு-மின் (1)

கேளு-மின் இளமை அது கேடு வந்து – தேவா-அப்:1774/1
மேல்


கேளேன்-மின் (1)

எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/2,3

மேல்