மணிமேகலையில் உள்ள சொற்களின் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

எண் அடிகள் சொற்கள் பிரி
சொற்கள்
கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம்

4856

23755

862

365

24982

7940

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = மயிர்_குறை_கருவி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மயிர், குறை, கருவி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், ஆ_கோள் போன்றன. சொல்லின் பகுதிகள்
அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
சே_இழை என்ற சொல்லுக்குரிய பிரிசொற்கள் சே,_இழை ஆகிய இரண்டும். எனவே சே_இழை என்ற சொல்லுக்குரிய
நிகழ்விடங்கள் இழை சே, சே_இழை மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

இழை (68)
ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி 0/47
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே – மணி 0/67
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி 0/79
ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி – மணி 0/83
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி 2/14
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி 2/49
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய் – மணி 2/58
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 3/26
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி 3/80
அணி இழை நல்லாய் யானும் போவல் என்று – மணி 3/83
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி 4/83
————————————————————–

சே (8)
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி 9/50
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி 10/49
சிறந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி 10/89
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி 11/75
செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண் – மணி 21/27
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி 22/56
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் – மணி 22/177
பங்கய சே அடி விளக்கி பான்மையின் – மணி 28/115

சே_இழை (4)
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி 9/50
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி 10/49
சிறந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி 10/89
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி 22/56

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின்,
கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும்
ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

பிறவி-தோறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், பிறவி-தோறும், -தோறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும். பிறவி என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது.

-தோறும் (3)
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி 12/103
ஊர்ஊர்-தோறும் உண்போர் வினாஅய் – மணி 14/66
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி 28/27

பிறவி-தோறும் (1)
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி 12/103

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் காதையின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தக்
காதையில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண் கொடுக்கப்படும். காதையின் பெயர்கள் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள் அதே அடியில் முடிவடைந்தாலோ
அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

தோன்றல் (4)
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி 22/26
சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல்/உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ – மணி 27/72,73
காரண காரிய உருக்களில் தோன்றல்/பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் – மணி 30/97,98
தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும் – மணி 30/155
சில இடங்களில் ஓர் அடியில் உள்ள ஒரு சொல்லின் தொடர்ச்சி அதன் முந்தைய அடியில் இருப்பின்
முந்தைய அடியும் கொடுக்கப்படும்.
வியாவிருத்தி (10)
.. வைதன்மிய திட்டாந்த/ஆபாசமும் ஐ வகைய/சாத்தியா வியாவிருத்தி/சாதனா வியாவிருத்தி/ உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம்
/விபரீத வெதிரேகம் என்ன – மணி 29/334-336-339
————————————————————

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

மண் (15)
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி 3/127
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி 6/59
———————————————————
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி 23/17
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி 23/17
———————————————————