குசேலோபாக்கியானம் நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 3106 22584 344 232 23160 9832

விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

 

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
மென்மையான இயல் என்ற பொருள்படும் மெல்லியல் என்பதில் மெல், இயல் என்பன தனித்தனிச் சொற்கள். ஆனால் மெல்லியல் என்பது சில வேளையில் ஒரே சொல்லாய் மென்மையான இயல்பினையுடைய பெண் என்பதைக் குறிக்கும். இது மெல்_இயல் என்று கொள்ளப்படும் . இதற்குரிய பிரிசொற்கள் மெல், இயல் ஆகிய இரண்டும். எனவே மெல்_இயல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் மெல், இயல், மெல்_இயல் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

இயல் (19)
பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/3
ஏர் வளர் இயல் முற்று உணர்ந்த நல் புலவர் இன்பு உளம்கொண்டிட மாதோ – குசேலோ:0 21/4
அந்த மெல்_இயல் பாகம்செய்து அதிதிக்கு ஓர் பாகம் வைத்து – குசேலோ:1 68/2
மெல்_இயல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல் – குசேலோ:1 99/4
பூ இயல் மக்கள் உடம்பு பொங்கு வெயர் நீர் காலும் – குசேலோ:1 185/4
ஆவும் ஆன் இயல் பார்ப்பீரும் ஆடு அமை தோளினீரும் – குசேலோ:2 280/1
இமைத்த மூ வகை பஞ்சு இயல் மயிர் அன தூவி – குசேலோ:2 370/3
மெல் இயல் கவின் ஒருத்தி கை பற்றுபு வீச – குசேலோ:2 373/2
நல் இயல் படு வீணையின் நரப்பு ஒலி எழுப்ப – குசேலோ:2 373/4
பூ இயல் படம் ஆங்காங்கு பொலிவது காணும்-தோறும் – குசேலோ:2 397/3
கோ இயல் கண்ணன் என்று உள் கொண்டு பின் தெளிவன் அம்மா – குசேலோ:2 397/4
எத்திக்கும் புகழும் நினக்கு இயல் மணம் நன்கு ஆயிற்றே – குசேலோ:2 424/4
வில் பிறங்கிய வாள் நுதல் மெல் இயல் பொற்பினுக்கு ஒரு பொற்பு எனும் தன்மையாள் – குசேலோ:2 492/3,4
எழு வெம் கதி உளை பொங்கிய இயல் தங்கிய பரியும் – குசேலோ:2 526/2
நல் இயல் மங்கலங்கள் நான்மறையவர்கள் பாட – குசேலோ:3 570/3
பொங்கு இயல் கற்பினுக்கு என்னா பொருக்கென தன் மகிழ்நன் உரம் – குசேலோ:3 610/3
மல்லல் அம் புவனம் புகழ் வசுதேவன் மயில் இயல் தேவகி பிறருக்கு – குசேலோ:3 675/1
ஏவு இயல் சாப திரிதராட்டிரன்-பால் இலகும் அ குரூரனை போக்கி – குசேலோ:3 689/2
மா இயல் தானை சராசந்தன் ஓட மண்டு அமர் பதினெழு முறை செய்து – குசேலோ:3 689/3

மெல் (13)

ஏ உலாம் இரு விழி இபத்தின் மெல் நடை – குசேலோ:1 14/1
மெத்திய பற்பல் கிழி துணி இயைத்து மெல் இழை சரட்டினால் பொல்லம்பொத்திய – குசேலோ:1 56/1
அந்த மெல்_இயல் பாகம்செய்து அதிதிக்கு ஓர் பாகம் வைத்து – குசேலோ:1 68/2
மெல்_இயல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல் – குசேலோ:1 99/4
மெல் நடை கரிய வாள் கண் விரை கரும் தாழ் குழாலே – குசேலோ:1 117/4
வியக்கும் அரும் கற்புடையாரும் விரும்பும் மேன்மை மெல்_இயலே – குசேலோ:1 131/4
இயலும் ஐந்தில் புற்புதம் ஒக்கும் ஏழின் மெல் ஊன் ஆம் – குசேலோ:1 134/2
ஒவ்வ மெல் வளி தண்ணென்ன வருட ஓர் புன்னை நீழல் – குசேலோ:2 216/3
செய்ய கால் பரியங்கம் மெல் அணையொடு செறிந்த – குசேலோ:2 354/3
உரக மெல் உரி பரல் என குழையும் வெள் ஒளி பட்டு – குசேலோ:2 371/1
மெல் இயல் கவின் ஒருத்தி கை பற்றுபு வீச – குசேலோ:2 373/2
மழை முகில் குழல் ஒருத்தி மெல் விரை புகை வயக்க – குசேலோ:2 376/4
வில் பிறங்கிய வாள் நுதல் மெல் இயல் – குசேலோ:2 492/3

மெல்_இயல் (2)
அந்த மெல்_இயல் பாகம்செய்து அதிதிக்கு ஓர் பாகம் வைத்து – குசேலோ:1 68/2
மெல்_இயல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல் – குசேலோ:1 99/4

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-தொறும் (16)
அஞ்சிடாது எதிர்த்தலின் அவற்றை நாள்-தொறும்
வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணி – குசேலோ:1 19/2,3
நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம் – குசேலோ:1 31/3
கடக்க அரும் தீமை நாள்-தொறும் விளைக்கும் கயவர்கள் தொடர்ச்சியும் தன்னை – குசேலோ:1 50/3
பொற்றாமரையில் குடியிருக்கும் பூவை வருடும்-தொறும் சேக்கும் – குசேலோ:2 203/2
சிற்றிடை வலைச்சிமார்கள் தெருத்-தொறும் கூறி விற்கும் – குசேலோ:2 213/1
நாகு வண்டு ஒலிப்ப படும் கட செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும் – குசேலோ:2 228/1
போதரும் இடங்கள்-தொறும் நெருக்குறலால் பொன் வரை அனைய தோள் மைந்தர் – குசேலோ:2 234/1
ஆஆ இ மறையோனை காண்-தொறும் உள்ளகத்து உவகை அரும்பாநின்றது – குசேலோ:2 329/1
தூய பாற்கடல் சங்கம் நாள்-தொறும் தன்-பால் துறந்த – குசேலோ:2 353/3
கண்ணன் ஆவயின் வரும்-தொறும் களி மயில் கூட்டம் – குசேலோ:2 356/1
திரு_அனார் அடிப்படும்-தொறும் உறுத்தும் அ செல்லல் – குசேலோ:2 365/3
துன்று சிற்றிலை பாதவத்து ஊர்-தொறும்
சென்றும் தெய்ய திகைத்து நின்றேம் அன்றே – குசேலோ:2 448/3,4
நீள் சுடர் தொடரும் அமைந்த சூடகமும் நிரை விரல்-தொறும் எழு கதிரை – குசேலோ:3 619/3
அரதன வகையின் மற்று உள குவையும் அறை-தொறும் கிடப்பன கண்டான் – குசேலோ:3 624/4
நிகர்_இல் உண்மை அறிந்திடுதல் நீளும்-தொறும் அவ் அனுபவம் அற்று – குசேலோ:3 649/3
நைபடும் உள்ளத்தேனாய் நாள்-தொறும் கழிதல் நன்றோ – குசேலோ:3 733/4

நாள்-தொறும் (6)
அஞ்சிடாது எதிர்த்தலின் அவற்றை நாள்-தொறும்
வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணி – குசேலோ:1 19/2,3
நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம் – குசேலோ:1 31/3
கடக்க அரும் தீமை நாள்-தொறும் விளைக்கும் கயவர்கள் தொடர்ச்சியும் தன்னை – குசேலோ:1 50/3
நாகு வண்டு ஒலிப்ப படும் கட செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும் – குசேலோ:2 228/1
தூய பாற்கடல் சங்கம் நாள்-தொறும் தன்-பால் துறந்த – குசேலோ:2 353/3
நைபடும் உள்ளத்தேனாய் நாள்-தொறும் கழிதல் நன்றோ – குசேலோ:3 733/4

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

இழிவு (3)
இல் எலாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு எந்தஞான்றும் – குசேலோ:1 66/4
இல் எலாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு எந்தஞான்றும் – குசேலோ:1 66/4
மானம் அற்று இழிவு பூண்டு வள மனை கடை-தோறு எய்தி – குசேலோ:1 144/1