குமரேச சதகம் நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 812 6822 24 79 6925 3670

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
அடர்ந்த குழல் என்ற பொருள்படும் மொய்குழல் என்பதில் மொய், குழல் என்பன தனித்தனிச் சொற்கள். ஆனால் மொய்குழல் என்பது அன்மொழித்தொகையாய் அடர்ந்த குழலையுடைய மங்கையைக் குறிக்கும். இது மொய்_குழல் என்று கொள்ளப்படும் இதற்குரிய பிரிசொற்கள் மொய், குழல் ஆகிய இரண்டும். எனவே மொய்_குழல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் மொய், குழல், மொய்_குழல் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

குழலுடன் (1)
மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம் – குமரேச:21/3

மொய் (1)
மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம் – குமரேச:21/3

மொய்_குழலுடன் (1)
மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம் – குமரேச:21/3

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-தொறும் (2)
நாள்-தொறும் விரோதமிடு கொண்டோன் கொடுத்துளோன் ராகு கேதுக்கள் எனலாம் – குமரேச:44/6
நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள் – குமரேச:102/7

நாள்-தொறும் (2)
நாள்-தொறும் விரோதமிடு கொண்டோன் கொடுத்துளோன் ராகு கேதுக்கள் எனலாம் – குமரேச:44/6
நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள் – குமரேச:102/7

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

ஓடம் (3)
ஏந்தல் காணா நாடு கரைகள் காணா ஓடம் இன்சொல் காணா விருந்து – குமரேச: 31/2
ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச: 75/1
ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச: 75/1