காவடிச் சிந்து நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 695 3538 2 31 3571 2553

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, பொன்னைப்போன்றவனே என்ற பொருள்படும் பொன்னனானே என்பதில் பொன், அனானே என்பன தனித்தனிச் சொற்கள்.
ஆனால் பொன்னனானே என்பது ஒரே சொல்லாய் பொன்னைப்போன்றவனே என்பதைக் குறிக்கும். இது பொன்_அனானே என்று கொள்ளப்படும். இதற்குரிய பிரிசொற்கள் பொன், அனானே ஆகிய இரண்டும். எனவே பொன்_அனானே என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் பொன், அனானே, பொன்_அனானே ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

அனானே (1)
நாவினூடு இனிதா விளைந்திடு தேனே பொன்_அனானே – காவடி: 8 4/6

பொன் (7)
பொன் அடியை இன்னல் அற உன்னுதல்செய்வாமே – காவடி: 2 1/4
உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக – காவடி:4 3/3
பொன் உலவு சென்னிகுள நல் நகர் அண்ணாமலை-தன் – காவடி:5 1/1
நாவினூடு இனிதா விளைந்திடு தேனே பொன்_அனானே – காவடி:8 4/6
வளையாத பொன் பறம்பு – காவடி:15 4/5
அமுத சுவை தரும் முத்தமிழ் களபத்தொடு கமழ் பொன் புய – காவடி:21 1/8
தொங்கல்களும் சங்கினமும் பொன் கலையும் சிந்தினள் உன் – காவடி:24 2/4

பொன்_அனானே (1)
நாவினூடு இனிதா விளைந்திடு தேனே பொன்_அனானே – காவடி:8 4/6

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

வீதி-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், வீதி-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-தொறும் (4)
வீதி-தொறும் ஆதி மறை வேதம் சிவ வேதியர்கள் ஓது சாமகீதம் அதை – காவடி:3 2/1
முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும் – காவடி:3 4/2
கந்தரம்-தொறும் கிடந்து கந்தரம் பயந்து ஒதுங்க – காவடி:5 3/5
மீறி பாயும்-தொறும் சீறி சாயும் தென்னம்பாளையுடன் தாழை – காவடி:6 2/2

வீதி-தொறும் (1)
வீதி-தொறும் ஆதி மறை வேதம் சிவ வேதியர்கள் ஓது சாமகீதம் அதை – காவடி:3 2/1

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

களிகூர்ந்தான் (1)
ஏரும் பார்த்தே களிகூர்ந்தான்
பங்கயாசனம் மேல் உறை நான்குக – காவடி:17 2/8,9

சல்லி (1)
எங்கு பார்த்தாலும் இல்லை சல்லி – காவடி:19 3/12

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

சூழ் (3)
கன்னல் சூழ் பழனம் புடை சூழ் கழுகாசலம்-தனில் – காவடி:18 1/1
கன்னல் சூழ் பழனம் புடை சூழ் கழுகாசலம்-தனில் – காவடி:18 1/1
பாளை வாய் கமுகில் வந்து ஊர் வாளை பாய் வயல் சூழ் செந்தூர் – காவடி:20 1/1